‘அற்றவைகளால் நிரம்பியவள்’

பிரியா விஜயராகவன்-நாவல்

விமர்சிப்பு:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

பெண்களின் துயர் நிலைகளின் பல கோணங்களை,ஒட்டு மொத்த மனித வாழ்வின் பல தரப்பட்ட அவலங்களை மருத்துவத் துறையிலிருப்பவர்கள் முகம் கொடுக்கும் நிலை தவிர்க்கமுடியாது. பிரியாவின் வசனங்களைப் படிக்கும்போது அந்த துயர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்தக் கணங்கள்,எனது உத்தியோக வாழ்க்கையின் பல மருத்துவத் தளங்களில்; நான் சந்தித்த மனிதர்களை எனது நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது.

பெண்கள் பிறந்து வளர்ந்த அவளின் குடும்பத்தவர்களே அவர்களின் வாழ்வை நாசமாக்குவது, அதற்கான பின்னணியான,சமுதாயக் கட்டுமானங்கள், சமயக் கோட்பாடுகள், ஆண்வர்க்கத்தின் மூர்க்கமான தேவைகள் என்பவற்றை எதிர்த்துப் போராடும் நிலைவரும்போது ஒவ்வொரு பெண்ணும்’ தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற ‘இல்லாமை’ மனநிலையை எதிர் நோக்கிய ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ ஆகிறாள்.

சில மனிதர்களின் வாழ்க்கை மிக மிகக் கொடுமையான துயர்களுடன் தொடர்வது யதார்த்தம்.வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் எதுவுமற்ற, யாருமற்ற ‘இல்லாமையை’ ‘அற்றவைகாளால் நிரம்பியவர்கள்’ என்ற சூழலை ஏதோ ஒரு நேரத்தில் பலர் அனுபவித்திருப்பார்கள்.

அதிலும் மற்றவர்களின் தயவில், பாதுகாப்பில் தங்கி வாழும் பெண்களின் நிலை மிகப் பரிதாபமானது. ஆதரவு தராத குடும்பங்கள், அவளின் அனாதாரவான நிலையைப் பாவித்து அவளைச் சிதைக்க ஓடிவரும் காமவெறிக் கூட்டம்,அதைத் தெரிந்தும் தெரியாததுபோல் கடந்து செல்லும் சமுதாய அமைப்பு என்பதை முகம் கொடுக்கும்போது அவள் தனக்கு உதவி கிடைக்காத’அற்றவைகளால் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.

இக்கதையில்: சேய்செல்;தீவு,மெரிசியஸ்,லண்டன்,இலங்கை,ரஸ்யா,லத்விய,பிலிப்பைன்ஸ்,ஈரான்,சோமாலி,பாகிஸ்தான்,கேரளம் ,சென்னை,சிதம்பரம் என்று பல இ.டங்களிலுள்ள பெண்களின் கதைகள் சொல்லப் படுகின்றன. ஆவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகள்,அவர்களின் வாழ்க்கையின் போராட்டங்கள்,வெற்றிகொள்ள முயலும்போது, அவர்கள் அனுபவிக்கும் தாங்கமுடியாத தடங்கல்கள் விளங்கப் படுத்தப் படுகின்றன.

அத்துடன், இங்கிலாந்தில் டாக்டராக வேலை செய்யும் ஆசையில் இந்தியாவிலிருந்து வந்து,அதனால் பலகாலம் ஈஸ்ட்ஹாமில் தங்கி மிகவும் துயர் படும் இளம் இந்திய டாக்டர்களைப் பற்றிப் பதிவிட்டிருக்கிறார்.அவர்கள் சாப்பாட்டுக்குவழியில்லாமல் கோயில் பிரசாதத்தை எதிர்பார்ப்பதை வேதனையுடன் எழுதியிருக்கிறார்.

பக்.508.’அந்தப் பெண்கள் இருவரும் தாங்களும் மருத்துவர்கள் என்று சொல்லி,சாந்தி,ஜான்ஸி என்று அவரவர் பெயரைச் சொன்னார்கள்.-‘

‘ காசில்லாது,க~;டப்பட்டு,கோவிலிலோ,குருதுவாராவிலோ,இரவுபோடும் அன்னதானத்தை ஒருவேளை சாப்பிட்டு,வேலைதேடும் அவலம் பற்றி தெரிந்தது.’

இந்தப் பெண்களின் துயர்க் கதைகளைத் தாண்டி, அஞ்சனா பாத்திரம் பல ஆண்களின் ‘காதலுக்கு’ உள்ளாகும் பல கட்டங்களைச் சந்திக்கிறாள். ஆனால் அவள் யாரையும் தன்னுடன் இணைய இடம் கொடுக்க முழுக்க முழுக்கத் தயாராக இருக்கவில்லை.அவற்றைப் பற்றிய அஞ்சனாவின் விளக்கங்கள்,தன்னை நேசிக்க யாருமற்ற ஏழைப் பெண்களை விட வித்தியாசமானது.

இந்தப் பதிவின் மூலம் அவர் தனது,இந்தியா, செய்n~ல்ஸ், இங்கிலாந்து நாட்டு அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பிரியாவின் நாவல் எதைப் பற்றியது என்ன மாதிரியான விடயங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைக்கும் திரு சாம்ராஜ் பின்;கண்டவாறு சொல்கிறார்.;(13.2.2019).

‘சூரியன் எரியத் தொடங்கி நான்கரை கோடி ஆண்டுகளாகி விட்டன.அது எரிந்தடங்க இன்னும் ஐந்தரை கோடி ஆண்டுகளாகும் என்று அறிவியல் சொல்கிறது.அதற்கப்பாலும் அணையாத நெருபபொன்று உண்டு,அது பெண்களின் மனதில் கனலும் nருப்பே’பக்8

‘உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது.எல்லாத் தொழில் நுட்பங்களும் உள்னங்கையில்.ஆனால்,ஆயிரமாயிரம்,ஆண்டுகளர்க வன்புணர்வின்வழி யோனியில் வழிந்து கொண்டிருக்கும் குருதியை எந்தத் தொழில் நுட்பத்தாலும்,நிறுத்த முடியவில்லை.வழியும் அந்தக் குருதியே இந்த நாவல்’. பக்9

‘தமிழ் இலக்கியத்தில் பெண்ணெழுத்துக்கள் அதிக தூரம் பயணிப்பதில்லை’பக்9.

‘இந்நாவலில் அஞ்சனா அலைகிறாள்.புதிய புதிய நிலப் பரப்புகளும் துயரங்களும் நமக்கு முன்னால் நிகழ்கின்றன.அதுவே இந்த நாவலை வழக்கமான நாவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.’பக்.10

‘இந்நாவலில் புழங்கும் பெண்கள் அடிபடுகிறார்கள்.அல்லல் படுகிறார்கள்.வன்புணர்வு செய்யப் படுகிறார்கள்.அகதிகளாக சொந்த நாட்டிலிலிருந்தும் துரத்தப்படுகிறார்கள்.அத்தனை துயரங்களுக்கும் மத்தியிலும் சிரிக்கிறார்கள்.அன்பாய் இருக்கிறார்கள்.குழந்தை பெறுகிறார்கள்.குடிக்கிறார்கள்.தூர தேசத்திலிருக்கம் பெற்றோருக்கு பணம் அனுப்புகிறார்கள்.குழந்தைகளை வளர்க்கிறார்கள்.எல்லாம் இழந்தபிறகும் எழுந்து நிற்கிறார்கள்.அவர்களின் கருணையினாலேயே இந்த உலகம் சுழல்கிறது என்று நம்புகிறவன் நான்.அந்தக் கருணையற்றுப் போனால் இந்த உலகமே அழிந்துபோகும்.நிச்சயம் அழிந்து போகும்’ பக்11. திரு சாம்ராஜ்.

பிரியாவின் எழுத்தின் ஆழத்தையுணர்ந்த சொற்கள் இவை.

‘ ஏன் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன்’ என்பதை பிரியாவின் வாய்மொழியாகப் பின்வரும் வார்த்தைகள் வினக்குகின்றன.

;மனதை உருக்கும் மனிதர்களும் நிகழ்வுகளும் குவிந்துகொண்டே போகையில், எனக்குள்ளும் வளர்ந்து நிற்கும் விலை மதிப்பில்லாத ஏதுமற்ற உணர்வுகளை வேறு எந்த வார்த்தைகளால் வெளிக் கொணரமுடியும்’அற்றவைகளால் நிரம்பியவளைத் தவிர?’ பக் 14.

பெண்களின் துயர் நிலைகளின் பல கோணங்களை,ஒட்டு மொத்த மனித வாழ்வின் பல தரப்பட்ட அவலங்களை மருத்துவத் துறையிலிருப்பவர்கள் முகம் கொடுக்கும் நிலை தவிர்க்கமுடியாது. பிரியாவின் வசனங்களைப் படிக்கும்போது அந்த துயரான சந்தர்பங்களில். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்தக் கணங்கள்,எனது உத்தியோக வாழ்க்கையின் பல மருத்துவத் தளங்களில்; நான் சந்தித்த மனிதர்களை எனது நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது.

பெண்கள் பிறந்து வளர்ந்த அவளின் குடும்பத்தவர்களே அவர்களின் வாழ்வை நாசமாக்குவது, அதற்கான பின்னணியான,சமுதாயக் கட்டுமானங்கள், சமயக் கோட்பாடுகள், ஆண்வர்க்கத்தின் மூர்க்கமான தேவைகள் என்பவற்றை எதிர்த்துப் போராடும் நிலைவரும்போது ஒவ்வொரு பெண்ணும்’ தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற ‘இல்லாமை’ மனநிலையை எதிர் நோக்கிய ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ ஆகிறாள்.

சில மனிதர்களின் வாழ்க்கை மிக மிகக் கொடுமையான துயர்களுடன் தொடர்வது யதார்த்தம்.வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் எதுவுமற்ற, யாருமற்ற ‘இல்லாமையை’ ‘அற்றவைகாளால் நிரம்பியவர்கள்’ என்ற சூழலை ஏதோ ஒரு நேரத்தில் பலர் அனுபவித்திருப்பார்கள்.

அதிலும் மற்றவர்களின் தயவில், பாதுகாப்பில் தங்கி வாழும் பெண்களின் நிலை மிகப் பரிதாபமானது. ஆதரவு தராத குடும்பங்கள், அவளின் அனாதாரவான நிலையைப் பாவித்து அவளைச் சிதைக்க ஓடிவரும் காமவெறிக் கூட்டம்,அதைத் தெரிந்தும் தெரியாததுபோல் கடந்து செல்லும் சமுதாய அமைப்பு என்பதை முகம் கொடுக்கும்போது அவள் தனக்கு உதவி கிடைக்காத’அற்றவைகளால் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.

இக்கதையில் பல நிகழ்வகளை அஞ்சனா என்ற கதாநாயகியாக ஆசிரியர் நேர்மையாகப் பதிவிட்டிருக்கிறார். பல இ.டங்களிலுள்ள பெண்களின் கதைகள் சொல்லப் படுகின்றன. அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகள்,அவர்களின் வாழ்க்கையின் போராட்டங்கள்,வெற்றிகொள்ள முயலும்போது, அவர்கள் அனுபவிக்கும் தாங்கமுடியாத தடங்கல்கள் விளங்கப் படுத்தப் படுகின்றன.

இந்தப் பெண்களின் துயர்க் கதைகளைத் தாண்டி, அஞ்சனா பாத்திரம் பல ஆண்களின் ‘காதலுக்கு’ உள்ளாகும் பல கட்டங்களைச் சந்திக்கிறாள். ஆனால் அவள் யாரையும் தன்னுடன் இணைய இடம் கொடுக்க முழுக்க முழுக்கத் தயாராகஇருக்கவில்லை.அவற்றைப் பற்றிய அஞ்சனாவின் விளக்கங்கள்,தன்னை நேசிக்க யாருமற்ற ஏழைப் பெண்களை விட வித்தியாசமானது.

இந்தப் பதிவின் மூலம் அவர் தனது,இந்தியா, செய்n~ல்ஸ், இங்கிலாந்து நாட்டு அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

700 பக்கங்கள், கொண்ட இப் படைப்பைப் பற்றிய விமர்சனத்தை,15- 20 நிமிடங்களில் சொல்வது என்பது மிகவும் இலகுவானதல்ல என்ற சிந்தனையுடன் .என்னுடைய பலநாட்களைச் செலவளித்துப் படித்தேன்.பெருமபாலானவர்களின் இந்திய இலங்கை நாடுகளிலுள்ள தமிழ் மக்களால் தெரிந்து கொள்ளப் பட்ட மகாபாரதம் பெருந்தேவனார் அவர்ளால் 600 பக்கங்களில் தமிழில் எழுதப் பட்டிருக்கிறது.அதையும் விடக் கூடப் பக்கங்களையுடைய இந்தப் பத்தகத்தை அவசரமாகப் படித்து 15-அல்லது 20 நிமிட விமர்சனத்தை எழுதுவது பெரியதொருசாதனை என்றுதான் நினைக்கிறேன்.

இக்தையின் முக்கிய விடயங்களை மிகவும் கவனமாக இருதடவைகள் படிக்கவேண்டியிருந்தது.ஏனென்றால் இப்படைப்பு பல தளங்களைக் கொண்டது.ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சட்டென்று தாவி விடயங்களை விளக்க முயல்கிறது.

இதை ஒரு நாவல் என்று சொல்வதா என்பதில் எனக்கு ஒரு கேள்வி வந்தது.

நாவல்கள் பலவிதங்களில் உருவாகின்றன்.சரித்திர நாவல்.காதல் கதை, பெண்களின் கதைகள்,இப்படிப் பலவாறானவை.’அற்றவைகளால் நிரம்பியவள்’ படைப்பில் மேற்குறிப்பிட்ட விடயங்களின் சில அம்சங்கள் இருக்கின்றன.

ஆனால் இதை,மேற்குறிப்பிட்ட விடயங்கள் இந்தப் படைப்பில் இருந்தாலும்,என்னைப் பொறுத்தவரையில் ஒரு இளம் பெண்ணின் பிரயாணக் குறிப்பாகத்தான் என்னால் உணரமுடிந்தது. ஏனென்றால் இக்கதை,இளவயது அனுபவங்கள் தொடக்கம்,அவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்பார்த்து ஏங்கிய இங்கிலாந்து வருகை அத்துடன்,இங்கு வந்து புதியவாழ்க்கையயை ஆரம்பிக்கும்வரை தொடர்கிறது.

இக்கதையில் சரித்திர அம்சங்களைப் பார்த்தால், கதாநாயகி அஞ்சனாவின் கொள்ளுப் பாட்டியார் அன்னம்மா மலையாள பூர்வீகத்தைக் கொண்டவர்.,அக்காலத்தில் கிறிஸ்தவர்களாகி வசதியாகம் ஒரு பெரிய குடம்பத்தைச் சேர்ந்த இளத் குழந்தை. அவள் 1880 ஆண்டுகளில் அவரின் 6-7வாது வயதில் 25 வயதான ஒருத்தருருக்குத் திருமணம் செய்து கொடுக்கப் படுகிறார்’. கணவர் வீட்டில் ஏழுவயதுக் குழந்தை,25 வயதுக் கணவனின் தேவைகளால் உடலும் உள்ளமும் சிதைதந்து,தகப்பனைக்கண்டதும் கதறுகிறாள். தகப்பன்; அந்தக் கதறல் தாங்காமல் அவரைத் தோளில் சுமந்து கொண்டு தனது வீட்டுக்கு வருகிறார்.

வாழாவெட்டியான அந்தப் பெண் உற்றார் ஊராரின் வசைகள், ஏளனச் சொற்களுடன் வளர்கிறாள்,வாழ்கிறாள். அவளின் இருபதாவது வயது கால கட்டத்தில்,ஆந்நூற்றாண்டின் இறுதியில் அவர்களின் ஊரில், அவர்களின் மதத்தைச் சாராத,மாந்திரத்தில் ஈடுபட்ட விஜயன் என்ற இளைஞனைக் காதலித்து ஊரைவிட்டு ஒடிப்போய்,அவன் இறந்ததும் இளவயதுப் பெண்குழந்தைகளடன் படாத துயர் பட்டுக்குழந்தைகளை வளர்க்கிறாள்.

அவளின் ஒருமகளான தங்கம்மாவின் பேத்தியார் அஞ்சனா. அங்சனா தனது அருமையான தகப்பனை அவளின் 19வயதில் இழந்தவள். அஞ்சனா,தகப்பன்; கனவாகப் பல தடவை அவள் வாழ்க்கையோடு தொடர்கிறார்.

இந்திய சமுதாயத்திலிருந்தும் படிப்பிலிருந்தும் ஒடுக்கப் பட்ட மக்களுக்குக்கிடைத்த இடஒதுக்கல் வசதியால், ஆதிதிராவிடர்களாகிய அஞ்சனாவின் தாயும் தகப்பனும் வைத்தியர்களாகிறார்கள்.அஞ்சனாவின் சித்தப்பா அரசியல் பிரமுகராக ஒரு பெரும் கட்சித் தலைவராகியார். ஆனாலும் இவர்கள் பல சமயங்களில்’ பறை–வர்கள்’ என்ற வார்த்தைளால் அவமானப் படுத்தப் படுகிறார்கள். அஞ்சனாவின் தாத்தா ஒரு டிக்கட் கலக்டர் அவரையும் ‘பறை–‘ என்று பல தடவை அவமானம் செய்கிறார்கள்.அதனால் அந்தத் தாத்தா குடியால் கெட்டழிகிறார்.அஞ்சனாவின் தந்தை அவர் ஒரு டாக்டராக அந்தச் சமுகத்தில்,பலருக்குத் தெரிந்தவராகவும் தேவையானவராகவும் வாழ்ந்தாலும் தந்தையின் வாழ்க்கையால் மிகவும் துயர் படுகிறார்.

இது இக்கதையின் சரித்திரக் குறிப்புகளாக,இப்படி ஆங்காங்கோ சில தகவல்கள்; உள்ளன. அதாவது சேய்n~ல் என்ற தீவுக்கு 18-19ம் நூற்றாண்டில் அந்நியர்களால் கூலிகளாக அழைக்கப்பட்டுச் சென்று அங்கு பல கொடுமைகளை அனுபவித்த இந்தியத் தமிழர்களின் விடயங்கள் ஆங்காங்கே சொல்லப் படுகின்றன.அத்துடன் ஆபிரிக்காவிலுpருந்து அழைக்கப் பட்ட வந்தவர்கள், சீpனாவிலிருந்து அழைக்கப்பட்டு வந்தவர்கள் போன்றோரின் வாழ்க்கை நிலைகள் பற்றிப் பல தகவல்கள் கிடைக்கின்றன.

காதல் கதையா என்று பார்த்தால் அஞ்சனா என்ற ஆதிதிராவிட மாநிறப் பெண்ணில் பலபேர் மயங்குகிறார்கள்.காதலிக்கச் சொல்லிக் கெஞ்சுகிறார்கள்.இந்தியா தொடக்கம் லண்டன் ஈஸ்ட்ஹாம்வரை ஆண்கள் இவரின் காலடியில் விழத் தயாராகவிருக்கிறார்கள்.

இளமையில் கே~;வர் என்ற மருத்துவ மாணவர்,படிக்க வந்த விடயத்தை விட்டகன்று, குறிப்பிட்ட படிப்பால் மட்டும் அறியமுடியாத உலளைப் பலவழிகளிலும் அறியமுனைகிறார்.வாழ்க்கை அழிந்துகொண்டு போய்க்கொண்டிருந்த காலத்தில் மருத்துவ மாணவியான அஞ்சனாவைச் சந்திக்கிறார்.உறவு மலர்கிறது.ஆனால் அது ‘காதல்’என்ற கட்டமைப்புக் அப்பாற்பட்டது.

ஆதன்பின்,மெடிகல் கல்லூரியில் படிக்கும்போத எஞ்ஞினியரிங் மாணவனான ரங்கராஜன் என்பவன் அஞசனாவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். ‘ நான்உன்னை விரும்புகிறேன், நான் ஒரு ஐய்யங்கார். நீ என்ன சாதி ‘? என்று அவன் கேட் அவள் தான் ஒரு ஆதிதிராவிடர் என்றதும் அவனும் அவர்களின் காதல் தொலைகிறது.

அஞ்சனா ஒரு மருத்துவராகி சேய்n~ல் என்ற ஆபிரிக்கச் சிறுதீவு ஒன்றுக்கு வருகிறாள். போதைப் பொருளால் மனிதர்கள் பலரின் முக்கியமாகப் பெண்கள் பலரின் வாழ்க்கையை அழித்த பெரும் பணமும் செல்வாக்கும் பெற்ற ஜெஃப் என்ற இளைஞன் அஞசனாவை நெருங்குகிறான் அவளின் மறுப்பால் அவளைப்; பகிரங்கமாக இழுத்துப்பிடித்து மேசையில் அழுத்திப் பலருக்கு முன்னால் முத்தமிடுகிறான்.

ஆப்போது,அஞ்சனாவில் கண்போட்டிருக்கும், முற்போக்குவாதியும் முதலாளித்தவத்தை எதிர்க்கும் டேமியன் என்பவன் அவளைத் தேற்றுகிறான். அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலிஇருக்கிறாள். ஆனாலும் அஞ்சனாவையும் நெருங்குகிறான்.

அத்துடன் தனது பணத்தால் இளம் பெண்களை வளைத்தப்படிக்கும் மிகவும் பணக்காரனான ஜேடியும் அவளைத் துரத்துகிறார்.இந்த நாட்டில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் பார்ட்னரை விட்டு இன்னொருத்தருடன்’ குட் டைம்’ தேடுவது குற்றமாகப் பார்க்கப் படுவதில்லை.என்று சொல்லப் படுகிறது.

காலக்கிரமத்தில் அஞ்சனா போதைப் பொருள் பணக்காரனான, ஜெஃபுடன் நெருங்கி,போதைப் பொருளை அவளே அனுபவிக்கும் நிலையில் வருகிறாள்.அப்போது தனது காதலியைப் பிரிந்த டேமியன் அஞசனாவை அணுகுகிறான். இருவரும் லண்டனுக்கு வருகிறார்கள்.

ஹீத்ரோ விமானநிலையத்தில், அரசியல் காரணமாக,அவன்; பிரித்தானிய சட்டத்தால் சேய்n~ல்லுக்குத்திருப்ப அனுப்பப் படுகிறான்.அஞசனாவின் வாழ்க்கை லண்டன ஈஸ்டஹாமில் ஆரம்பிக்கிறது.

இங்கிலாந்தில் டாக்டராகத் தொழில் தொடங்கப் பல விடயங்களை அதாவது பிரிட்டி~; மெடிகல் அசோசியேசன் றெஜிஸ்ரேசன் போன்றவற்றை முடிக்க வேண்டிய காலகட்டத்தில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் ஒரு இரவு விடுதியில் கூலித்தொழில் செய்யும்போது இளம்மாறன் என்பனைச் சந்திக்கிறாள்.இந்த நாவலில் இக்கதைக் கதாநாயகிக்கு வந்துசென்ற பல காதலர்களில் மாறன் கடைசியாகும். அவனும் மற்றவர்களைப்போல் இவளின் காலில் (காதலில்) விழுகிறான் (!).

பக் 673ல்’கோர்னிஸ்ப்ரோ வந்து ஐந்து மாதங்களாகி விட்டன.மாறன் என்னுடையதினங்களில் முக்கிய பங்கு வகித்தான்.அவன்மேல் காதல் பெருகி வளர்ந்தாலும்,வெளியே சொல்லவில்லை’என்கிறாள் அஞ்சனா.

கடைசியாக இவள்,அவனிடம் தனது காதலைச் சொல்ல விளையும்போது அவன் மித்ரா என்ற பெண்ணைக்காதலிப்பதாகச் சொல்கிறான்.

இப்படியே அஞ்சனாவின் காதலுணர்வு பல இடங்களில் பல தரப் பட்ட ஆண்களுடன் தொடர்கிறது.

பக் 615ல் இவர் காதல் என்பதை இப்படி விளக்குகிறார்.’காதல் மூளையில் ஏற்படும் ரசாயனக் கலவை என்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி தலாமஸ்,பினியல் கிலாண்ட் என்ற மூளையின் முக்கிய பகுதிகளில் டோபமின், செரடோனின் எண்ட்ரோபின்ஸ்,

,ஃபெரெமோன்ஸ் போன்ற கெமிக்கல்களின் கலவை சுரப்பதனாற்தான் ஈர்ப்பு ஏற்படுவதாக அறிவு சொல்கிறது.பிறகு காமம் மூளைக்கு,டெஸ்டோடிரோன் ,ஈஸ்ட்ரொஜன் சுரப்பதால் முளைக்கிறது.ஆனால் வாஞ்சை,அன்பு போன்றவற்றை வேசோப்ரசின் ஆக்சிடோசின் போன்றவை சுரப்பதால் சாத்தியப் படுகிறது’ என்று சொல்லிச் சிரித்தேன’என்கிறார்.

பக் 673ல்’கோர்னிஸ்ப்ரோ வந்து ஐந்து மாதங்களாகி விட்டன.மாறன் என்னுடையதினங்களில் முக்கிய பங்கு வகித்தான்.அவன்மேல் காதல் பெருகி வளர்ந்தாலும்,வெளியே சொல்லவில்லை’என்கிறாள் அஞ்சனா. இப்படியே அஞ்சனாவின் காதலுணர்வு பல இடங்களில் பல தரப் பட்டமுரணான சிந்தனையுடன்; தொடர்கிறது.

இக்கதையின் கடைசிக் கட்டத்தில், காதலானக வரும் மாறனிடம்,’அவளும் நீயும் காதலிக்கிறீர்கள் என்றால்,நீயும் நானும் யார்?’ என்று கேட்டேன். கேட்டபின் எனக்கே என் கேள்வி வேடிக்கையாகவிருந்தது.இந்த இரவுவரை மாறனிடம் அவன்மேல் காதல் இருப்பதை நான் ஒத்துக்கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை. என்று அஞ்சனா புத்திஜீத்துவமான விளக்கத்தை வாசகர்களுக்குத் தருகிறார்.(பக்676)

இக்கதையின் ஆரம்பப் பக்கங்களிலிருந்தே பல நாடுகளில்,பல வகைகளில் ஒடுக்கப் படும் பெண்களின் நிலை,இந்திய சமுகத்தில் வேரோடியிருக்கும் சரிதிக்;கொடுமை,மேற்கு நாடுகளிலுள்ள இனவாதம்,முதலாளித்துவம்,போன்ற விடயங்களில் தனது அனுபவங்களைச் சில கதைகளாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய தென்னகக்கிராமம் ஒன்றில் சாதிக் கொடுமையால் பத்துக்கு மேற்பட்டவர்களால் பயங்கரமான பாலியல் வன்முறைக்காளான கண்மணியை ஒரு மருத்துவராகப் பார்வையிடுகிறார்.

சேn~ல் தீவில,மருத்தவராகப் பணிபுரியும்போது ஜெஃப் என்பனால் போதைப் பொருளுக்கு அடிமைப்படுத்தப் பட்டு,ஒரே தரத்தில்; பலபேரால் அழித்துச் சிதைக்கப் பட்ட கிடிஸ்டியானாவையும் அவளின் சகோதரியையும் பற்றிப் பேசுகிறார்.

ஈஸ்ட்ஹாம் வீடொன்றில் பல நாடுகளிலிருந்து வந்த பல தரமான கொடுமைகளுக்குள்ளான பல நாட்டுப் பெண்களைப் பற்றிச் சொல்கிறார்.

அங்கு 14 வயது ஏழையான ர~;சிய நாட்டைச் சேர்ந்த வொல்கா பாலியல்க் கொடுமைக்காரரால் கடத்தப் பட்டுச் சிதைக்கப்படதைத் தெரிந்து கொள்கிறார்.

ஈரானைச் சோந்த ரொக்ஸானா அந்தச் சமூகத்தின் பாரம்பரிய’~ரியச் சட்டத்தினால் 18வயதில் 63 வயது ஆணைத்திருமணம் செய்யும் நிலை விளங்கப்படுத்தப் பட்டிருக்கிறது.

அந்த வீட்டில் எவ் ஜி எம் சிகிச்சையால் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட டி என்ற சோமாலி நாட்டுப் பெண் தனது கதையைச் சொல்கிறாள்.;

இங்;கிலாந்தில் 1985ம் ஆண்டு எவ்ஜி;.எம் கொடுமைக்கெதிரான முதலாவது மகாநாட்டை ஆரம்பித்ததில் எனக்குப் பங்குள்ளது.கிழக்கு லண்டனில், மருத்துவ ரீதியான சில கூட்டங்களை ஆரம்பித்து, இந்தக் கொடிய செயலுக்கு எதிரான விழிப்புணர்வை இந்திய டாக்டர் திருமதி சுப்ரமணியமும் நானும் எங்களால் முடிந்தவரை செய்தோம்.

இந்நாவலில்,இலங்கைத் தமிழ்ப் பெண்களான வான்மதியும் அமிர்தினி என்ற இரு பெண்கள் இலங்கை இராணுவத்தால் பயங்கர பாலியல் வன்முறைக்கான நிகழ்வுகளை அஞ்சனாவுக்குச் சொல்கிறார்கள். இந்தக்கதைகளைக் கேட்கும்போது,’எனக்கு மிக சங்கடமாகிப் போனது.போர்,இன,மதக்கலவரங்கள் நடந்த ஊர்களில். இருந்த மக்கள,;பி.டி. எஸ்.டி. என்ற மன அழுத்த நோயால் பாதிப்படைந்து இருப்பார்கள்’என்று அஞ்சனா சொல்கிறார்.

இந்தப் பகுதியை,பக் 617லிருந்து பக் 636 வரை படிக்கும்போது எனக்குச் சில குழப்பங்கள் வந்தன.

கதாசிரியை உண்மையாகவே ஈஸ்டஹாமில் இலங்கைத் தமிழ்ப் பெண்களுடன் வாழ்ந்திருந்தால் அந்தப் பெண்கள் சொன்னதாக எழுதியிருக்கும் தகவல்களைக் கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் பல கொடுமையான பாலியல் கொடுமைகளைச் சொன்ன தமிழ்ப் பெண்கள் 1987ல் இந்திய இராணுவம் செய்த இந்த உலகமே வெட்கப்படக் கூடிய பாலில் கொடுமைகளை தற்செயலாக மறந்து விட்டார்களா அல்லது மறைத்து விட்டார்களா?

அத்துடன் அவர் எழுதியிருக்கும் இலங்கைத் தமிழ் மொழி ஏன் இப்படி சிதைக்கப் பட்டிருக்கிறது என்பது மர்மசங்கடத்தைத்; தந்தது. இலங்கைத் தமிழர்கள் வாழும் பெரும்பாலான இடங்களான பிராந்திய மொழிரீதியான வேறுபாடுகள் உள்ளன. ஆனால் எவரும் இந்நாவலில் சொல்லப்படும் வார்த்தைகளைப் பிரயோகித்தது கிடையாது.

நான் கிழக்கில் பிறந்து. வடக்கில் இலங்கையின் அத்தனை பகுதித் தமிழ் மாணவிகளுடனும் படித்து, மன்னார்,திருகோணமலை,வவுனியா போன்ற இடங்களில் சிறு சிறு சிறுகாலங்கள் வேலை செய்து,திருமணமானபின் கொழும்பில் வாழ்ந்து,இலங்கையின் அத்தனை பகுதித்தமிழ் மக்களின் தமிழ் நடையையும் புரிந்தவள். ஆனால்,இந்நாவலில் வரும் இலங்கைத் தமிழ்ப்; பெண்கள் பேசும் தமிழ் எனக்குத் தெரியாது..

பக் 618.அமிர்தினி-அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த பெண்.

இந்த பிரபஞசத்தில் தமிழருக்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அண்ணாமலையில் அமையக் காரண கர்த்தாவாக மட்டுமல்ல அங்கு தமிழ்த் துறைத்தலைவர் பதவியை முதற்தரம் வகித்த,முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் பிறந்த புனித பூமியில் தமிழழை உயிராக நினைத்து, வளர்ததுக் கொண்டிருக்கும் மக்கள் வாழுமிடமது. அங்கிருந்து வந்த அமிர்தினி தமிழ் நடையை எப்படிச் சின்னாபின்னப் படுத்திப் பேசுகிறாள் என்பதைப் பின்வருமாறு அஞ்சனா பதிவிடுகிறார்..

– கொப்பியும் பானும் எடத்தாரன்,,

-ஆறுதாலாக கதைக்கட்றீவிங்களா,

பக் 619.-இது நடக்கயில பாட்ருங்கோ, எனக்கு 14 வயதிருக்கும்.

பக் 620.’-எனக்கு நினைவு தெட்ரிஞ்சு இட்ரவு வேளையில் கரண்ட் கட் செஞ்சிடுவாங்கோ’

பக் 621-‘ 46,50 வட்ருசமா பயத்த மட்டுமெ பார்த்து’ என்று ஆரம்பித்து ‘யாரயும் அணூஹ முடியாது’ என்று தொடர்கிறார்.(இவற்றைப் படிக்கும்போது இந்தத் தமிழை உச்சரிக்க முடியாத நிலையில்; புத்தகத்தை வைத்து விட்டு நகர்ந்து போனேன்.

இலங்கைத் தமிழ்ப் பெண்களுக்கான பாலியல் வன்முறை மிகப் பயங்கரமாக நடந்த பிரதேசம். ஆம்பாறை மாவட்டம். ஆனால் அஞ்சனா பாத்திரம் சொல்லுமளவுக்கு இருந்ததா தெரியாது. ஏனென்றால். அங்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடி,ஒரு இராணுவ முகாமையே நகர்த்தக் காரணமாக இருந்தவள் நான்.

அடுத்தது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வான்மதியின் கதை.பக் 626. அதிலும் யாழ்ப்பாணத் தமிழ் படுபாதகமாகக் கொலை செய்யப் பட்டிருக்கிறது. ‘என்னட அப்பாவட ஊர் வவுனியா.அம்மாவட ஊர் ஜாஃனா பக்கத்தில வட்டுக்கோட்ட.. நான் பிட்றந்த 83ம் ஆண்டு83ம் ஆண்டே நாடே பெரும் கலவரபூமியா மாறிட்டு எண்டு அம்மா சொல்லி அழுவினம்.நடு ரோடுல பாருங்கோ 50 பேருக்கும் மேல தார் டரம்ல முக்கி தீ வச்சி கொளுத்திப் போட்டதா எண்டு சொல்லுவினம்.’ மீண்டும் 2000ம் ஆண:டு மிக கடுமையான கலவரம் தொடங்கிப் போட்டாங்கோ’ என்று தொடர்ந்து பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளைச் சொல்கிறாள்.

(-2000ம் ஆண்டில் தமிழர்களுக்க எதிரான பயங்கர கலவரம் யாழ்ப்பாணத்தில் நடந்ததா? 1995ம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை முழுமையாக எடுத்தபோது தமிழ் மக்கள் வெளியேறினார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பி வந்தார்கள். இலங்கையில் ஓரளவு அமைதியான தமிழ்ப் பிரதேசமாக வடக்கு வளர்ந்தது. கல்வி நிலையங்கள், சாதாரண வாழ்வியல் தொடர்ந்தது. இந்த நாவல், இலங்கைத் தமிழர்களைப் பற்றிய விடங்களைத் தாறுமாறகப் பதிவு செய்திருக்கிறது.

ஓட்டு மொத்தமாக இந்த நாவலைப் பற்றிய எனது விமர்சனம், நாவலாசிரியர் இலங்கைத் தமிழ்ப் பெண்களைப் பற்றிய விதத்திலிருந்து பார்த்தால், உலக மட்டத்தில் பெண்களுகெதிராக நடந்த கொடுமையான பல விடயங்களை தனக்குத் ‘தெரிந்த’வித்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால்,இந்நாட்டில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாகப் பெண்கள,; குழந்தைகள் நலத்திற்காகவும் மேம்பாட்டுக்காகவும் பல தளங்களில் வேலை செய்திருக்கிறேன்.மருத்துவத் துறை,லண்டன் பெண்கள் மனித உரிமை அமைப்பு, அகதிகள் ஸ்தாபனத்தலைவி,தமிழ் அகதிகள்; வீடமைப்புத் தலைவி, பெண்கள் காப்பக உத்தியோகத்தர்,போதை மருந்துகள் உபயோகிப்போரின் கவுன்சிலர்.குழந்தை நல அதிகாரி போன்ற தளங்களில் இந்நாவலில் வரும் பெண்கனை விட எத்தனையோ மடங்கு பெண்களின் அனுபவங்களைக் கண்டு அவர்களின் மேம்பாட்டுக்காக வேலைசெய்திரக்கிறேன்.

திரைப்படதத் தயாரிப்பாளராகத்,திருமணத்தில் நடக்கும் பாலியல் கொடுமை பற்றி’ த பிரைவேட் பிளேஸ்’ என்றம் ஆவணப் படத்தை எடுத்திருக்கிறேன்.நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். பெண்களின் விடயங்கள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி ஆவணப் படுத்தியிருக்கிறேன். உலக மகாநாடுகளிலிருந்து பல தரப்பட்ட மகாநாடுகளிற் பேசியிருக்கிறேன.;

அதனால்,பிரியா விஜயராகவன் அவர்கள் அவரின் மருத்துவ அனுபவம் சார்ந்து பெண்கள் விடயங்கள் எப்படிப் பதிவு செய்யப் பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a comment