மன அமைதியும் நித்திரையும்.

ஓரு மனிதன் தனது வாழ்க்கையின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை நித்திரையில் செலவிடுகிறான்.நித்திரை என்பது இயற்கைச் செயல்பாடு.உழைத்த உடம்மைச் சீர் செய்ய நடக்கும் இயற்கையின் தொடர்ச்சி.மனித வாழ்க்கையில், மூச்சு.நீர்.உணவு என்பன எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு நேரத்தில் நித்திரை செய்வது எங்கள் மன அமைதிக்கும்,நோயற்ற வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும்.

அழ்ந்த தூக்கம் என்பது உளத்தை ஒருமுகப்படுத்திய நிலையாகும்.அந்த அற்புதத்தை இயற்கை தொடர்கிறது.அதன் ஆரம்பம் மனித வளர்ச்சியின் மிக மிக முக்கியமான பகுதியாகும்.

வளரும் குழந்தை தாயின் மடியில் உலகத்தை மறக்கிறது. ஆழ்ந்து உறங்குகிறது.எதிர்காலத்திற்கான அத்தனை பரிமாணங்களையும் மூளை உற்பத்திசெய்ய அந்த நிலை மனிதனால் விளக்க முடியாத மாற்றங்களைந் செய்கிறது.

நிம்மதியான ஆழ்ந்த நித்திரையின் அற்புத பலன்களாக எங்களது,எண்ணங்களின் தெளிவு,சிறந்த சிந்தனையின் உந்துததலால் காத்திரமான செயற்பாடுகள்,எங்களைப் பற்றி ஆயந்தறியும் பக்குவம்,எங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துதல் அதாவது தியான நிலைக்குச் சமமான தூய உயர்நிலை என்பவற்றைக் காலக் கிரமத்தில் அடையலாம்.

நிம்மதியான நித்திரையின்மையால்,ஞாபக மறதி,மன அழுத்தம்,இருதய வருத்தங்கள்,டையாபெட்டிஸ்.எடைகூடுதல்,கான்சர்.இனவிருத்திச் செயற்பாடுகளிற் குறைகள் போன்ற வருத்தங்கள் வரவழியுண்டு. கிரகிக்கும் தன்மையும். விடயங்களைச் சீர்படுத்திப் பார்க்கும் ஆற்றலும் வலிவிழக்கும்.(அனலிட்டல் அப்றோச்).உணர்ச்சி வசப்படுவது கூடும்.

நித்திரை செய்யும் நேரத்திலும் எங்கள் மூளை இடைவிடாது வேலை செய்து உடம்பின் அத்தனை கலங்களுடனும் தொடர்பாகவிருக்கும். ஆழ்ந்த நித்திரையின்போது மூளையிலிருக்கும் கலங்கள் தொடக்கம் உடலின் மிக முக்கிய பகுதி;களான இருதயம்.நுரையீரல்கள்.எதிர்ப்புச்சக்தியைக் கவனிக்கும் எதிர்ப்பு சக்திகள் (இம்முயின் ஸிஸ்ஸ்டம்).உணவு செமிபாட்டு வலையம்,மன உணர்வுகளை(மூட்) போன்ற பல விடயங்களைப் பழுது பார்க்கின்றன.

எங்கள் நித்திரையின்போது மூளைக்கலங்களின் வேலையில் மூளையில் தேங்கி நிற்கும் வேண்டப்படாதவை சுத்தம் செய்யப் படுகின்றன.உதாரணமாக ஆத்திரத்துடன் எரிந்து விழுந்து கொண்டிருந்தவர் நல்ல நித்தரையின்பின் அமைதியாகச் செயற்படுவதை அவதானிக்கலாம்.

மிகவும் அதிக பணம் வாங்கி ஒரு மனிதனின் மனப் பிரச்சினைகளக்கு வழி சொல்லும் வைத்தியரை விட ஆழ்ந்த நித்திரை ஒரு மனிதனின் கோபதாபங்களை மட்டுப் படுத்தும். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘ஸ்லிப் ஒன் இற்’அல்லது ‘ஸ்லிப் இற் ஓவ்’என்று சொல்வதாகும்.

அளவான,அமைதியான நித்திரை மூளைக்கு மிகவும் அவசியம்.எங்கள் நாளாந்த வாழ்க்கையில் எங்கள் மூளை, சிந்தனை, நினைவாற்றல்,உணர்ச்சி, தொடுதல்,இயக்கத் திறன்கள்,பார்வை, சுவாசம்,வெப்பநிலை,பசி,மற்றும் நமது உடலை ஒழுங்கு படுத்தும் ஒவ்வொரு செயல் முறையையும் கட்டுப் படுத்துகிறது.

எங்கள் மூளையின் முக்கிய சுரப்பியான் ஹைப்போதலமஸில் உள்ள கலங்கள் (ஓரு கச்சான் விதையளவானது) எங்களிள் நித்திரைக்கு முக்கியமான (கொன்ட்ரோலரான) வேலையைச் செய்கிறது.
மூளையின் அடிப்பாகத்திலிருக்கும் ப்ரயின் ஸ்ரெம் நித்திரையையும் விழிப்பையும் செயற்படுத்துகிறது.
மூளையின் இருக்கும்; பினியல் சுரப்பிகள் மெலரோனின் என்ற இயக்கு நீரால் நித்திரைக்கு உதவுகிறது. பிPனியல் சுரப்பியை மூன்றாம் கண் என்று சொல்வதுண்டு. உறங்காமல் வேலை செய்யும் அற்புதம்.இது ஒரு நெல் அளவானது. நித்திரைக்குத் தேவையான மெலடோனின் என்ற ஹோர்மனைச் சுரந்து உதவுகிறது.

(நாஸனல் ஸ்லீப் பவுண்டேசன்).
-பிறந்த குழந்தை-0-3மாதம -;14-17 மணித்தியாலங்கள்
-குழந்தை 4-12 மாதம். 12-16 மணித்தியாலங்கள்;.(ஒரேயடியான நித்திரையல்ல.பாலுக்கு எழும்பி அழுவார்கள்.
-1-2 வயது. 11.12.மணித்தியாலங்கள்ம்.
-குழந்தை.3-4.வயது- 10.13 மணித்தியாலங்கள்
-பாடசாலைப் பருவம்,6-12வயது- 9-12 மணித்தியாலங்கள்
-வளரும் பருவம்,13-18 வயது -8.10 மணித்தியாலங்கள்
-வளந்தவர்கள்.18-60 வயது. 7 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட நேரம்.
-61-64 வயதுடைNhர். 7-.9 மணித்தியாலங்கள்;.
-65 வயதுக்கு மேற்பட்டோர். 7-8 மணித்தியாலங்கள்.

எங்களின் மூளை 60 விகிதம் கொழுப்பாலும்,மிகுதி 40 விகிதம் நீர்;,புரதம் என்பவைகளால் நிறைந்த 3 இறத்தல் எடையுள்ள ஒரு அற்புதக் கருவியாகும்.இதில் இரத்தக் குழாய்கள்,நியுரோன்ஸ்,கிளியல் கலங்கள் உள்ளிட்ட நரம்புகள் உள்ளன.

ஓவ்வொரு பகுதியும் தங்களின் குறிப்பிட்ட வேலையைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. (க்ரேய்.வைட் மற்றர்ஸ்)

மூளை, உடலின் அத்தனை பாகத்திலுமுள்ள பல (கெமிகல்) வேதியலுக்குரிய-இயைபியலுக்குரியதும் மினசார (எலக்ட்ரிக்கல்) சைகளை(சிக்னல்ஸ்) தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டும் பெற்றுக்கொண்டுமிருக்கிறது.அவற்றிலிருந்து உடலின் சுக நிலையை அறிகிறது.உதாரணமாக எங்களின் களைப்பு நிலை,மனக்கலக்க நிலை போன்றவை.

சாதாரண மனிதனின்; எடையின் 2 விகித எடையைக்கொண்ட மூளை,ஒவ்வொரு இதயத் துடிப்பின்போதும் பாய்ந்துகொண்டிருக்கும் 20 விகிதமான குருதியை மூளைக்கு அனுப்புகிறது.; இதில் கணிசமான அளவு பீனியல் கிலாண்டசுக்குப் போகிறது.பீனியல சுரப்பி, சேக்கேடியன் றிதம் என்ற வித்தில் உங்கள் விழிப்பு தூக்க நிலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்.

மூளையின் முன்பக்கம்: ஒரு மனிதனின் (பேர்சனாலிட்டி) அடையாளத்தை உருவகப் படுத்துகிறது. சட்டதிட்டங்கள்.பேச்சு போன்ற பல விடயங்களுடன் இணைந்தது.;

பெரிய பகுதியான செரிப்ரம் எனப்படும் மூளையின் முன்பகுதி (க்ரேய் மட்டர் செரிப்ரல் கோர்ட்டெக்ஸ்),அதன்மத்தியிலுள்ள வைட் மட்டர் என்பதும் சேர்ந்து சூடு.பேச்சு,மனச்சாட்சியான ஜட்ஜ்மென்ட்,சிந்தனை,காரணங்கள்,பிரச்சினை தீர்ப்பது,மன உணர்வுகள் -இமோஷன்ஸ், அத்துடன் கல்வியறிவு போன்றவற்றைக் கவனிக்கிறது.அத்துடன் பார்வை,கேள்வி ஙானம்,தொடுதல்.போன்றவையும் அடங்கும்.

மூளையின் செரிப்ரத்தை மூடியிருக்கும் செரிப்ரல் கோர்ட்டெக்ஸ்.,இடது பக்கம் உடலின் வலது பக்கத்தையும் வலது பக்கம் உடலின் இடது பக்கத்தையும் கொன்ட்ரோல் பண்ணுகின்றன.

பிட்யுட்டரி சுரப்பி: மாஸ்டர் சுரப்பி என்றழைக்கப்படும். இது எங்கள் உடல் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும்.இனவிருத்திக்குமானஇதைரோயிட்ஸ்,அட்ரனல்ஸ்,பெண்ணின் கருப்பை, ஆணின் விதைகள் போன்ன பல ஹோர்மோன்ஸ்களுக்குப் பொறுப்பாகவீpருக்கிறது.

ஹைப்போதலமஸ்சுரப்பி: இது பிட்டயுட்டரி சுரப்பிக்கு மேலிருக்கிறது.கெமிகல் செய்திகளுக்குப் பொறுப்பானது. உடல் சூட்டை றெகுலெட் பண்ணுகிறது. முக்கியமாக நித்திரைக்கு ஒத்திசைக்கிறது.(வெளியில் இருக்கும் அதிக சூட்டால்; நித்திரை வராது).பசி,தாகம். போன்றவற்குப் பொறப்பாகவிருக்கிறது. ஏதொ ஒரு வித்தில் உணர்வுகள்,ஞாபகங்களுடன் இணைந்திரக்கிறது.

பினியல் சுரப்பி:மெலனினைச் சுரக்கிறது.இரவு பகல் போன்ற உணர்வுகளுக்குக் காரணியாக இருக்கிறது.’சேக்கார்டியன் றிதம்’; என்ற ‘நித்திரையும் விழிப்புக்குமான’இயற்கையின் தாள லயத்திற்குப் பொறுப்பாகவிருக்கிறது.

பெரிய பகுதியான செரிப்ரம் எனப்படும் மூளையின் முன்பகுதி (க்ரேய் மட்டர் செரிப்ரல் கோர்ட்டெக்ஸ்),அதன்மத்தியிலுள்ள வைட் மட்டர் என்பதும் சேர்ந்து சூடு.பேச்சு,மனச்சாட்சியான ஜட்ஜ்மென்ட்,சிந்தனை,காரணங்கள்,பிரச்சினை தீர்ப்பது,மன உணர்வுகள் -இமோஷன்ஸ், அத்துடன் கல்வியறிவு போன்றவற்றைக் கவனிக்கிறது.அத்துடன் பார்வை,கேள்வி ஞானம்,தொடுதல்.போன்றவையும் அடங்கும்.

எங்களின் உடலுக்குத் தேவையான இரத்தோட்டத்தில் 15-20 (அல்லது 20-25விகிதம்) விகிதமான இரத்தோட்டத்தில் கோடிக்கணக்கான மூளைக் கலங்களை இயக்கி எங்களின் உடல் உள நலத்தைப் பாதுகாக்கிறது.எங்களின் மூச்சிலுள்ள பிராணவாய்வில் 20 விகிதம் மூளைக்கலங்களுக்குப் பாவிக்கப் படுகிறது. அதிக சிந்தனையிலிருக்கும்போது 50 விகித பிராணவாயுவையும் உடல் சக்தியையம் மூளை பாவித்து முடிப்பதாகச் சொல்லப் படுகிறது.
மூளைக்குப் பிராணவாய்வு போகாவிட்டால் 4-6 நிமிடங்களில் மரணமேற்படும்.
எனவே சுத்தமான,அளவான,மூச்செடுப்பதன் அவசியம் அமைதியான நித்திரைக்கும் எங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பது தெரியும்.

மிருகங்களும் மனிதர்களைப்போலவே தங்களுக்குத் தேவையான அளவு நித்திரை செய்யும் தங்கள் வாழ்க்கையை நீருடன் இணைத்துக் கொண்ட மீனும் தூங்கும்.நீந்திக்கொண்டும் அல்லது,ஒரு.பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கிக் கொண்டும தூங்கும்.;.
உலகத்தில்; நிறையப்பேர்கள்; இரவு வேலை செய்கிறான்.இவர்கள் வைத்திய செவை, பாதுகாப்பு சேவை,வாகனப் போக்குவரத்து. தொழில்சார் உற்பத்தி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களை வி வித்தியாசமான முறைகளைக் கொண்டிருப்பதால் அதுசார்ந்த பிரச்சினைகள முகம் கொடுத்து பெரும்பாலோனோர் வாழ எத்தனிக்கிறார்கள்.

தூங்கமுடியாத காரணங்கள்: இன்று உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் நித்திரையின் விகிதம் பழைய காலத்தை விட வித்தியாசமானது. நவீன காலத்தின் வாழ்க்கை முறை மனித குலத்தின் பல பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொண்டு வருகின்றன.கிட்டத்தட்ட 70 கோடி அமெரிக்கர்கள் சரியான நித்திரையின்றித் தவிக்கிறார்களாம்.

நித்திரையின்மைக்கு எத்தனையோ உடல்,உளம்,வாழ்க்கை நிலைசார்ந்த காரணங்கள் உள்ளன.
கவலைகள் பல தரப்பட்டவை.
குழப்பமான சிந்தனைகள்.வசதியற்ற சூழ்நிலை.படுக்கை.சத்தங்கள்.குளிர்,சூடு,வாழ்க்கை முறை அடிக்கடி பிரயாணம்.இரவு வேலை,நீண்டநேர வேலை,மதுபானம் அருந்துதல்.காப்பி போன்ற உற்சாக பானங்களை அருந்துதல்.அடிக்கடி எழுப்புதல்;(உதாரணம் இளம் தாய்கள்,வயது போன முதியவர்கள்).குறட்டை விடுதல்,நோய் நொடிகள்,மனநிலை சீரற்ற நிலை,ஏதோ ஒரு காரணத்தால் வந்த காயங்கள்.
நித்திரைக்கு உதவி செய்யும் சுரப்பிகளின் குறைந்த வேலைப்பாடு.

-சரியான நித்திரையில்லாவிட்டால்:தனி மனிதனுக்கு மட்டுமல்லால்,அவனின் குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த மனித இனமே துயர்படும். உதாரணமாக.ஒரு தகப்பனுக்குச் சரியான நித்திரையில்லாவிட்டால் அவனின் வேலை பாதிக்கும்.அவன் செய்யும் வேலையில் கவனம் செலுத்த விட்டால்,உதாரணமாக ஒரு பஸ் ட்ரைவர் சரியான கவனக்; கட்டுப்பாட்டுடன் தனது வேலையைச் செய்யாவிட்டால் விபத்து வரலாம்.ஒரு சத்திர சிகிச்சை வைத்தியர் கவனக் குறைவால் தனது நோயாளிக்குச் சரியான சிகிச்சை கொடுக்க முடியாமற் போகும்.மாணவர்களின் படிப்பு சரிவராமல் எதிர்காலம் பாதிக்கப் படும்.

-எடை கூடும்
-உற்சாக உள நலத்தின் முழு வெளிப்பாடும் குறையத் தொடங்கும
-எங்கள் சுரப்பிகளின் உற்பத்தியில் பிரச்சினை வரும்.( உதாரணம் சுரப்பிகளின் அதி தலைமைத்துவமான பிட்டியுட்டரி கிலாண்ட்ஸ் பிரச்சினை இனவிருத்திச் சுரப்பிகளிற் தாக்கம்);.
-எதிர்ப்புச் சக்தி பிரச்சினையாகும்.
-கிரகிக்கும் தன்மையில் தளர்ச்சி காணுப்படும்.

நல்ல அமைதியான,ஆழமான தூக்கநிலை பல நன்மைகளை எங்கள் உள உடல் நலம்சார்ந்த நிலைக்கு உதவுகின்றது.

  • வளரும் குழந்தைகளின் கிரகிக்கும் தன்மைகூடி; படிப்பில் திறமைகாட்டுவார்கள்.
    -பிரச்சினைகளின் தாக்கம் குறையும் ( ஸ்லிப் இற் ஓவ்)
    -சமுக உறவாடல்களில் திறமையும் வெற்றியும் கிடைக்கும் (சோசியல் இன்றக்ஸன்)
    -நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

நித்திரை செய்ய ஆரம்பிக்கம்போது, முதலாவது கட்டமாக:ஆழ்ந்த நித்தரைக்குச்; செல்லாத கட்டம்..எங்கள்,இருதயத் துடிப்பு.மூச்சு,கண்இமைகளின் அசைவு என்பன குறையத் தொடங்கும்.மூளைக் கலங்களும் பகல் நேரத்திலிருந்து இரவு வேலையை ஆரம்பிக்கும்.

இரண்டாவது கட்டமாக; இருதயத் துடிப்பு ,மூச்சு என்பனவற்றுடன் தசைகளும் தளரத் தொடங்கும்(றிலாக்ஸ).உடம்பின் சூடு தணியத் தொடங்கும்.இமைகள் மூடிவிடும்.மூளையலைகள் அமைதியாகத் தொடங்கும்.
மூன்றாம் கட்டமாக: ஆழந்த நித்திரைக்குள் சென்று விடுவோம்.நித்திரை ஆரம்பித்த முதற்கட்ட இரவுப் பகுதி நிண்ட நித்திரையில் ஆழ்த்தும். எழும்பமுடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
4ம்; கட்டம் ஆர்.இ.,எம்.(றப்பிட் ஐ மூவ்மென்ட்) நித்திரை மிகவம் ஆழமானது. கனவுகள் வரும் கட்டம்.இவை, ஒரு மனிதனின்,கற்பனைகள்,எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,இலக்குகள். இழப்புகள், ஏக்கங்கள் என்பனவற்றைப் பிரதிபலிப்பதாகவிருக்கலாம். மறைத்து வைத்திருக்கும் துயர.சம்பவங்களின் எதிnhரலியாகவிருக்கலாம்.அல்லது தவிர்க்கமுடியாத சிக்கலுக்குள் அகப் பட்டுக் கொண்ட ஒரு தர்மசங்கட நிலையைப் பிரதிபலிப்பதாகவிருக்கலாம்.

மனிதர்களை மிகவும் துன்பப் படுத்திய அல்லது புரிந்து கொள்ள முடியாத, அல்லது புரிந்து கொள்ளத் தயங்கிய சில விடயங்கள் மனிதனின் அடிமட்ட உணர்வில் புதைந்து கிடந்து கனவாகச் சிலவேளை வருவதாகச் சிலர் சொல்வார்கள்.

கனவுகள்எங்கள் கலாச்சார சிந்தனையமைப்பில் மிகவும் முக்கியமானதாகக் கணிக்கப் படுகிறது. மனிதன் தன்னை மறந்து உறங்கும்போது அவனின் கனவுகள் ‘ஏதோ ஒரு கடவுள் அல்லது முன்னோரின் மறைமுகக் குறிப்பாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.( உதாரணமாக,கடவுள் கனவில் வந்து கோயில் கட்டச் சொன்னார்)

இப்படி எத்தனையோ பல உதாரணங்களைச் சொல்லாம்.ஆனால் கனவுகள் மதுவெறியில் அயர்ந்து தூங்குபவர்களக்கு வராது. இயற்கையான ஆழ்தூக்கத்தில் மனிதனின் அடிமனம் பல விடயங்களை. எடுத்தச் சொல்லிச் சென்று நகர்கிறது. பெரும்பாலான கனவுகள் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது ஞாபகமிருக்காது.ஒரு மனிதன் நல்ல ஆர்.இ. எம் நிலையிலிருக்கும்போது நான்கு கனவுகளைக் காணலாம் ஆனால் ஞாபகத்தில் இருப்பது ஒன்றிரண்டே.

எண்பது வயது வரை வாழும் மனிதன் தனது மூன்றில் ஒரு பங்கு வருடங்களை அதாவது- 26.6 வருடங்களை நித்திரையில் செலவிடுகிறான். இதில் எத்தனையோ மணித்தியாலங்கள் கனவாக முடிகிறது. ஆகக்குறைந்தது ஆறு வருடங்களென்றாலும் ஒரு மனிதன் கனவில் தோய்ந்தெழுகிறான் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கனவுகள் மனிதனின் அடிமனத்தில் ஆழ்ந்து கிடக்கும் பல தரப்பட்ட அடுக்ககளின் பிரதி பலிப்பாகும்.இங்கு பல ‘தரப்பட்ட அடுக்குகள்’ என்று குறிப்பிடுவது,ஒரு மனிதனின் சிந்தனையின் மிகவும் நுண்ணியமான பரிமாணங்களையே குறிப்பிடுகிறது.

அடிமனத்தின் அபிலாசைகள், சார்பாக சித்தர்கள் தொடங்கி,சித்த வைத்தியர்கள், மேற்கத்திய மனநல மேதாவிகள் பலர் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள்.அவற்றை விஞ்ஞான,சமய,சமூக நிலைக் கண்ணோட்டங்களில் ஆய்வு செய்து விவாதிப்பதும், விளக்கம் தருவதும் தொடர்ந்து நடக்கும் விடயமாகும்.

ஆனால் நான் இங்கு மன நல வைத்தியத் துறையில் மேன்மையிலிருந்த சிக்மண்ட் ப்ரோயிட் அவர்களின் மிகவும் பிரபலமான குறிப்பைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இட்,ஈகோ,சுப்பர் ஈகோ என்று மனித வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் மனித உணர்வுகளை வகைப் படுத்துகிறார்.

இட் (வெளி மனம்) என்று அவர் சொல்லும்போது ஒவ்வொரு பிறவியின் அடிப்படைத் தேடல்களைக் குறிபிடுகிறார்,அதாவது அன்பு. உணவு,பாதுகாப்பு போன்ற மிகவும் அடிப்படையான விடயங்கள். ஆன் கொண்டிசனல் ஆசைகள்.( உதாரணம் தாயன்பு) .இவை,ஒரு மனிதனின் வாழ்வின் ஆரம்பத்தில் சரியாகக் கிடைக்காவிட்டால் அவன் வளர்ச்சியில் பல பிரச்சினைகள் உண்டாகும் என்று சொல்லப் படுகிறது.

ஈகோ என்பது,அவன் வாழும் சூழ்நிலையின் நிமித்தம் அவனின் எதிர்பார்ப்பு (உள்மன தேடல்கள்),தன்னை பலப்படுத்திக் கொள்ள,ஆழ்ந்த சிந்தனையுள்ளவனாக்க தியானத்தைத் தேடுவதும் இதில் அடங்கும்.

அடுத்தது சுப்பர் ஈகோ:அடிமனச் செயற்பாடுகள். ஒருகாலத்தில் அடிமனத்தில் தெரிந்தொ தெரியாமலோ அடைந்து கிடந்தவற்றின் வெளிப் பாட்டால் அதிமிகச் செயற்பாட்டில் இறங்குவது. மனித இனத்தின் பாரம்பரியங்களால் சேகரிக்கப் பட்ட பல நினைவுகளின்,அதாவது. சமய,கலாச்சார, அறம்சார்ந்த நம்பிக்கைகளின் திறைசேரி என்று சொல்லலாம்.

ஈகோவும் சப்பர் ஈகோவும் ஒரு மனிதனின் செயற்பாடுகளை சரி பிழைபார்க்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலை பற்பல விதங்களில் ஒவ்வொர வினாடியும் ஒவ்வொரு வித்தியாசமான நிலையை முகம் கொடுத்து முடிவெடுக்கும் நிலையையுண்டாக்ககிறது.

இப்படியான பல பிரச்சினைகளை அடிமனத்தில் புதைத்து வைத்திருப்பவர்களுக்கு அமைதியான நித்திரை வராது. ஆதனால் அதற்கு நிவர்த்தி தேடிப் பல வித வழிகளை நாடுவார்கள். யோகாசனம், நீண்ட நடைப் பயணம் அல்லது தியான முறைகளை நாடுவார்கள்.

நிம்மதியும் அமைதியையம் தரும் அடுத்த நாள் விடிவும் விழிப்பும், சீரான சிந்தனைகளும் எங்களின் ‘நல்ல நித்திரை’யில் தங்கியிருக்கிறது.இந்த நித்திரைச் செயற்பாட்டை ‘சேக்கடியன் றிதம்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இதை மனதில் வைத்துக் கொண்டு எங்களின் நித்திரையின் ஆழத்தை நிர்ணயிக்கலாம்.-
-எங்கள் வாழ்க்கையில் இன்று வெளியிலிருந்து கொட்டப்படும் தேவையற்ற விடயங்களைத் தவிர்த்துக் கொண்டால் எத்தனையோ மாற்றங்கள் வரும்.

கலாச்சாரங்களும் நித்திரையும்
-ஸ்பானிஸ்சியாஸ்ரா,.ஸ்பெயின் நாட்டில் மதியநேரம் அதிக சூடு காரணமாக வெளியிற் செல்லாமல்,நித்திரைக்குச் சென்று பின்னேரம் வேலைக்கப் போவார்கள்.
-பிராமண சுபமுகூர்தம்,அதிகாலை 3-6க்கும் இடைப் பட்ட காலத்தைப் புனித நேரமாகக் கருதுவார்கள்.
-கிராமப் பெண்கள் சூரியன் விழிக்கமுதல் வழித்துக் கொள்ள வேண்டும். ஆதிகாலத்தில் விவசாயம் மன்னிலையில் இருந்ததால் வயலுக்குச் செல்லும் கணவனுக்குச சாப்பாடு செய்து கொடுக்க எழும்பியிருக்க வேண்டும்.
-சமயக் கோட்பாடுகள் தொழுகை, கிறிஸ்தவம், சைவம்.(சிவராத்திரி- பழம் தமிழர்கள் உலகமெல்லாம் பரப்பிய மாமிசமுண்ணாமை, மது உண்ணாமை,ஒரு நாள் அமைதி) போன்ற சமய வணக்க, பிரார்த்தனை வேலைகளில் நித்திரை தட்டுப் படத்தப்படும்
-சித்தர்கள்.மனக் கட்டுப் பாட்டன் குறைய நேரம் நித்திரை செய்வார்கள்.
-விளையாட்டு வீரர்கள். கூட நேரம் வேலை செய்து உடல் பலத்தையும் சிந்தனை வளத்தையும் மேம் படுத்துவார்கள்
-நடிகர்கள்.கண்டபடி படப்படிப்பு என்று கஷ்டப்பட்டுப் பணம் எழைப்பார்கள்.

எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான அளவான நித்திரை தேவை என்பதை மனதில் கொள்ளவும்

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a comment