‘முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் (1892-1947) யாழ் நூலின் தோற்றமும் அதன் பின் புலமும்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

மனித மொழி வளரமுதலே இசை என்பது ஆதிகால மனிதனின் உணர்வுகளை ஈர்த்திருக்க இயற்கையும் அவன் வாழ்ந்த சூழ்நிலையும் உதவியாக இருந்திருக்கும். மனித குலத்தின் தொன்மையைத் தேடும்போது அவர்களின் மொழி.இசை.இயல்.நாடக வளர்ச்சியும் தெரிய வரும்.

அதாவது இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதர்கள்.இயற்கையின்; அத்தனை செயற்பாடுகளிலும் தெய்வீகமும்,மனித வாழ்வுக்குத் தேவையான பன்முக உணர்வூட்டும் சக்திகளும் இருப்பதை உணர்ந்திருப்பார்கள்.உதாரணமாக, உலகம் புகழும் விபுலானந்த அடிகள் பிறந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீன்களும் இசைபாடும் என்ற விடயம் பலரும் அறிந்ததே.

இயற்கையின் அத்தனை செயல்களிலும் ஏதோ ஒரு ராக,தாளமிருப்பதை நாங்கள் அவதானிப்போம். சாதாரண மழைத்துளிகளின் ஓசையில் நளினமும்,ஒழுங்கான தாள நடையுமிருக்கும்.அது புல் பூண்டு,மரம் செடிகளின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இன்றியமையாததுபோல்.ஒருத்தரின் வாய்வழி இசையையோ அல்லது வாத்தியங்களின் இசையையோ கேட்கும் மனிதனுக்கும் அவனையறியாத ஒரு இனிமையுணர்வு அவனுள் தவழும். ‘துன்பம் சேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்ற பாரதி தாசன் பாட்டு இதற்கு உதாரணம்.

எனது தந்தையாருக்குப் பிடித்த எம்.எஸ் சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் என்ற பாட்டில் ‘காற்றினிலே வரும் கீதம், கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்.
கல்லும் கனியும் கீதம்.
பட்ட மரமும் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கிடும் கீதம்.
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம்.
நெஞ்சினிலே,நெஞ்சின் இன்பக் கனலை எழுப்பி நினைவையழிக்கும் கீதம்’
என்ற வரிகளில் எத்தனை உண்மைகள் இசையால் தெளிகின்றன என்று தெரியும்.
இளம் குழந்தை தாலாட்டில் மயங்குவதும் இசையாற்தான், நச்சுப் பாம்பும் நகர முடியாது மயங்குவதும் மகுடி இசையிற்தான்.

அப்படியான இசையை மேன்படுத்த
பல விதமான இசைக் கருவிகளையும் அகில உலகத்திலிருக்கும் அத்தனை மனிதர்களும் பல்லாயிரம் வருடங்களாகப் பாவித்திருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றில் மிகப் பழமையானதான கருவியாக,ஷசுரமண்டலம் அல்லது ‘தந்திக் கருவி’ எனப்படும் ‘யாழ்’என்ற அற்புதக் கருவியை கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்னரே.மொசப்பட்டேமியா,எகிப்திய,ஆசிய நாடுகளில் பாவித்தது பற்றிய தொல்லியல் ஆய்வுகள் உள்ளன. யாழின் தொன்மை தமிழனின் நாகரிக வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது.அந்தத் தகவல்களை சுவாமி விபுலானந்த அடிகளாரும் தனது ‘யாழ் நூலில்’பதிவிட்டிருக்கிறார்.

இசை உணர்வு என்பது ஒரு மனிதனின் சூழ்நிலையுடனும் வாழ்வியல் மரபுகளுடனும் இணைந்து வளருவதாகும். முத்தமிழ் வித்தகர் வாழ்ந்த காலத்தில் தமிழர் வாழ்க்கையில்,தமிழரின் இசையுணர்வு,நாடக உணர்வு,இலக்கிய நோக்குகள் என்பவற்றில் பல மாற்றங்கள் நடந்தன.அதிபெரும் அண்ணலான விபுலானந்த அடிகள், ஒரு துறவி. சமுகநலவாதி,ஆய்வாளர்,கல்வியாளார்,ஒரு கலைஞன், மொழி பெயர்ப்பாளர்,சொற்பொழிவாளர் என்பதற்கப்பால்,நாடகக்கலையை ஆராய்ந்து எழுதிய, ‘மதங்க சூளாமணியும்,மிக முக்கியமாக,தமிழ் இசையைத் துதித்து எழுதிய’யாழ் நூல்;’ பதிவும், தமிழுலகம் வாழும்வரை ஒரு மேம்பட்ட இலக்கிய அண்ணலாக அவரை முன்னணியில் வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அவரின் இசை ஆர்வம் ‘யாழ்’ என்ற தமிழரின் ஆதிகால இசைக்கருவியை ஆய்வதன் மூலம், தமிழரின் இசை சார்ந்த பாரம்பரியத்தின் விடயங்களைத் தேடப் பலரை ஊக்குவிக்கிறார் என்பது அக்கட்டுரைக்குத் தடயங்கள் தேடும்போது எனக்குள் வந்த உணர்வாகும்.

அவர் பிறந்த கிழக்கிலங்கையில் மனிதர்கள் மட்டுமல்ல நீரில் குதித்து விளையாடும் மீனும் பாடும்.அதனால் அவர் தான் பிறந்த மண்ணைத் மீன்;பாடும் தேனாடு என்று கொண்டாடினார்.
வுpபலாந்த அடிகளாhர் தனது இளமையிலேயெ இசையை இரசிக்க அவர் பிறந்த சூழ்நிலை மிகவும் உந்துதலாக இருந்திருக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. பல்வித இசைகளைத் துதித்து மகிழ்வது அவர் பிறந்த மீன்பாடும் தேனாடு.

அவர் வாழ்ந்த காலத்தில்,கிழக்கிலங்கை மிகவும் இறுக்கமான கலாச்சாரப் பண்பாடுகளைபு; பேணிப்பாதுகாத்துக் கொண்டிருந்தது.இசை இயல் நாடகம் சங்ககாலத்தில் இருந்ததுபோல் தமிழ்ப் பகுதிகளில் பரந்து வளர்ந்து கொண்டிருந்தன.

அக்கால கட்டத்தில், சினிமாவின் இரசனை ஆதிக்கம் முற்று முழுதாகக் கிழக்கிலங்கை மக்களைப் பாதிக்கவில்லை. வட இலங்கையில் இந்திய தமிழ்; சினிமாவின் வருகை 1935ம் ஆண்டாக இருக்கலாம். ஆனால், கிழக்கில் சினிமாவின் வருகை 1940ம் ஆண்டுகளின் முன் பகுதியிற்தான் ஓரளவு உள் நுழையத் தொடங்கியிருக்வேண்டும். அதிலும் ‘மீரா’ படத்தில் (1944) சுப்புலட்சுமியின் ‘காற்றினிலே வரும்கீதம் என்ற பாட்டு எங்கள் வீட்டு றெக்கோர்ட் பிளேயரில் ஆரம்பித்ததை ஊர் மக்கள் கூடியிருந்து, வாயில் கைவைத்து,வியந்து ரசித்ததை எங்களுக்குச் சொன்னார்கள்.

அக்காலத்தில், கிழக்கிலங்கையில் பாரம்பரிய கூத்து,நாடகங்கள் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தன.இவை அத்தனையும் இதிகாச,புராணக்கதைகளை மையப் படுத்தியவை.அதைத் தாண்டி சாதாரணமக்களால் இயற்றப் பட்ட,கிழக்கிலங்கைக் கிராமியப் பாடல்கள் தனித்துவமானது. தமிழிசைகளான பக்திப் பாடல்கள் தேவார திருவாசகம்,திருப்புராணம்,திருப் புகழ் என்று தொடர்ந்து குழந்தைகளுக்கு மிகவும் இளவயதிலேயே சொல்லிக் கொடுக்கப் படும். திருவாசகம்,திருவெம்பாவை என்பன மிகவும் பக்தியுடன் பாடப்பட்ட காலமது.
விபுலானந்த அடிகளாரும் தனது சிறுவயதில் சைவசமயம் சார்ந்த பல நூல்களைப் படித்திருப்பார்;.

கிழக்கிலங்கையில்,சித்திரைப் பண்டிகை அமரிமிதமாகக் கொண்டாடப் படும்போது வயது வித்தியாசமின்றிப் பெண்கள் ஊஞ்சல் ஆடி பாட்டுப்பாடி மகிழ்வார்கள். சித்திரைப் பண்டிகை,சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவைப்போல் மிகச் சிறப்பாகக் கொண்டாப்படும்.நாட்டுப் பாடல்கள் தாராளமாக எங்கும் ஒலித்த காலமது.

‘உன்னுங்கடி தோழியரே ஒரு பொன்னூஞ்சல் ஆடிடுவோம்,
தெந்தென தெகுதென தெகிதென தெனானா
தென்னா தெனா தெந்தன தெந்தனானா,
குரும்பைக்குலை குரும்பைக்குலை குலுக்கி முடியாதோ,பொழுதேறப் பொழுதேறப் பூசைமுடியாதோ’ (தில்லை-பக்-217-218).என்று நகைச் சுவையாகப் பாடிக் கொண்டு ஊஞ்சல் ஆடுவார்கள்.

ஆதிகால மனிதன் இயற்கையையும் அதன் பின்னர் தங்களுக்கு வழிகாட்டிய முன்னோரையும் நல்லவர்களையும் மதித்து வணங்கினான். அந்த வணக்கத்தில் ஆடல் பாடல்கள் தங்கள் குழுசார்ந்த தொனியில், முறையில்,அறிவில் நீட்சி பெற்றது. அவைதான் இன்றும் குல தெய்வ வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுகளுடன் தொடர்கின்றன. அவை, சாதி,இனம்,வர்க்கம் கடந்த பெரு தெய்வபாட்டு முறைகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை.இன்றும், கிழக்கிலங்கை,குல தெய்வ வழிபாடு,சிறுதெய்வ வழிபாடு,பெண் தெய்வ வழிபாடுகள் தனித்துவமான இசைகளை உள்ளடக்கியது.பெரு தெய்வ வழிபாட்டிலிருக்கும் எந்த இனைக்கருவியும் அங்கிருக்காது.

கண்ணகி வழிபாடு கிழக்கிலங்கையில் மிகப் பிசித்தி பெற்றது.கண்ணகி குளித்தில் பாட்டின் இனமையில் மயங்காதோர் இருப்பாரோ தெரியாது. அந்த வழிபாட்டு நிகழ்வில் ‘உடுக்கை அல்லது உடுக்கு’ என்ற இசைக்கருவியை அடித்துப் பாடுவார்கள்.

‘தட்டான் பொடியாகத் தார்வேந்தன் நீராகச்
சுட்டெரித்துப் போட்டதொரு தோகாய் குளிர்ந்தருள்வாய்,
எல்லை படும்பழிக்கு எண்ணவொண்ணாப் பழிவாங்கி
சொல்லரிய மாமதுரை சுட்டாய் குளிர்ந்தருள்வாய்
மதுராபுரித் தெய்வம் வாய்மாற்றம் தான்கேட்டுச்
சதுரா வேகம் தணிந்தாய் குளிர்ந்தருள்வாய்’
(தில்லை-பக்.164) என்ற வரிகளின் ராகம் தாளத்தில் மெய்மறப்பார் கோடி கோடி.

கிழக்குப் பகுதியில் ஒலிக்கும் சாதாரண கிராமியக் கவிகள் வேறெந்த தமிழ்ப் பகுதிகளிலும் காணாதொன்று.இசை என்பது விபுலானந்த அடிகள்; பிறந்த பூமியின் தெய்வீகச் சொத்து.
இவற்றைப் பல இடங்களில் எனது ‘தில்லையாற்றங்கரை’ என்ற நாவலிற் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு இளம் பெண் பருவம் வந்ததும் முதலாம் நீராட்டு விழாவுக்கு அவளுக்கு முறை மைத்துனன் கமுகம்பாளை வெட்டிக் குடத்தில் வைக்கும் வைபவம் மிக முக்கியமானது. அந்தக் கட்டத்தில் அந்தப் பக்கம் வந்த. ‘முறைப் பையனைப் பார்த்து ஒரு வயது போனவர்,

‘கோயிலடிப் பக்கத்தில் குரவை வெடிச்சத்தம் போட்டு,
மதினி சமைந்ததென்று மச்சாள்மார் கூவுகினம்’ என்று கிண்டலாகப் பாடுகிறார்;.(தில்லை-இரண்டாம் பதிப்பு1998.மணிமேகலை வெளியீடு-பக்12).

மழைகாலத்தில் தனது காதலனை நினைத்து ஒரு பெண்கவி பாடுகிறாள்.
‘இந்த மழைக்கும் இனிவாற கூதலுக்கும்,
சொந்தப் புரு~ன் எண்டா சுணங்குவாரோ உம்மாரியில்’ என்ற தாபக்குரல் ஒலிக்கும்.இப்படியானது கிராமியக்கவிதைத் தொனி.

மார்கழி மழைக்காலத்தில்,திருவெம்பாவையின் இனிய ஒலி சிறு மழைத்துளிகளின் ஒலியையும் தாண்டி காலையில் அயர்ந்து தூங்கும்; முதியோரையும் இளம் சிறாரையும் பக்தியாலும் தேனிசைப் பக்திப் பாடல்களாலும்; மதிமயங்கச் செய்யும்.

இப்படியான ஆழமான,உண்மையான மனித உணர்வுகளைத் தங்கள் கவித்துவத்தில் உணர்த்துபவர்கள் கிழக்கிலங்கை மக்கள். அதிகாலையில்,மாட்டு வண்டியில் வயலுக்குச் சொல்லும் விவசாயிகளின்,அற்புதமான இனிய புல்லாங்குழலிசையில்,
எழும்பிக் கடவுள் வணக்கத்தை ஆரம்பித்த கிராமத்துப் பெண்கள் நாங்கள்.

அந்தச் சூழ்நிலையில்; திளைத்து வளர்ந்த விபுலானந்த அடிகளார் இசையை இரசித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.முக்கியமாக, ஏன் அவர் ‘தனது இசை ஆர்வத்தைக் காட்ட யாழ் நூல் (தந்தி இசைக்கருவி) எழுதினார் என்பதைப் பார்க்கும்போது அது ஒரு இசை சார்ந்த நூல் மட்டுமல்ல ஆனால் மிகவும் ஆழமாக எழுதப் பட்ட ‘தமிழின்; தொன்மையான இசைக்கருவிச் சரித்திரம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அத்துடன்,அந்த நூல் அவர் வாழ்ந்த கால கட்டத்தில் தமிழர்களின் சாதனையில் தோன்றிய தங்கள் பூர்வீகத் தேடலின் பின்னணியையும்; கொண்டது என்பது புரியும.;
அவர் தனது மேடைப் பேச்சுகளிலும் எழுத்துக்களிலும்;,தமிழர் தொன்மைi, தமிழர் சரித்திரம்,தமிழரின் பாரம்பரிய இசையும் கருவிகளும்,போன்றவை முக்கிய விடயங்களாகும். இவரின் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அந்தக் காலத்தில் வெளிவந்திருக்கின்றன.

இவரின் பல மொழி தெரிந்த வித்தகத்தால்,’யாழ்’ நூலின் தொன்மை தேடிப் பல நூல்களைத் தேடிப் படிக்க ஆர்வம் வந்திருக்குவேண்டும். இளமையிலேயே மிகவும் கெட்டிக்கார மாணவனாக உருப்பெற்றிருக்கிறார்.உதாரணமாக 1892ம் ஆண்டு பிறந்த
அடிகளார் அவரது 14 வயதில், செயின்ட் மைக்கல் கல்லூரியில் பயிலும்போது, 1906ம் ஆண்டே பிரித்தானிய பேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக யூனியர் பரீட்சை எழுதியிருக்கிறார்.
1915ல் கொழும்பில் ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்றார். அங்கு அந்தக்காலத்தில் பிரித்தானிய கல்வி முறைப்படி பெரிதளவு ஆய்வுகள் பற்றிய அறிவு கிடைத்திருக்கும். 1919ல் லண்டன் பி.எஸ்ஸி பௌதிகப் பாடத்தில் சித்தியடைகிறார்.

அடிகளார் யாழ்பாணம் சென்ற கால கட்டத்தில்,யாழ்ப்பாணத்தில,சனாதனக் கோட்பாடுகள் வலிமை பெற்றிருந்தததால் சமஸ்கிருதம் கட்டாயம் ஒரு பாடமாக இருந்திருக்கும் அடிகளார்.தமிழ் சிங்களம்,ஆங்கிலம்,சமஸ்கிருதம்,இலத்தின்,கிரேக்கம்,வங்காளம்,பாளி, அராபிக் என்று பல மொழிகளைப் படித்திருக்கிறார். இவற்றின் மூலம் அறிவு தேடல் எத்தனை முக்கியமானதாக இவருக்கு இருந்திருக்கிறது என்பதைக்காணலாம்.

வெறும் அதிபராக இருந்துகொண்டு மக்களுக்கு உதவ முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அடிகளார் சமய ரீதியாகக் கிடைக்கும் வாய்ப்புகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவி செய்ய சமயத் துறவியானாரா என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் விவேகானந்தரும்; ஒரு சமயத் துறவியாக இருந்து கொண்டுதான் மக்களுக்குப் பல உதவிகளைச்செய்தார்.

இவரின் மிக நீண்டகால ஆய்வின் பிரதிபலிப்பாக வெளிவந்த ‘யாழ்’நூல் என்ற அரும் பெரும் அறிவு நூலைக் கையிலெடுத்தால் முத்தமிழ் வித்தகர் எத்தனை விடாமுயற்சிiயாக அவரின் ஆய்வைத் தொடர்ந்திருக்கிறார் என்பது தௌ;ளத் தெரியும்.

யாழ் என்ற இசைக்கருவி கி.மு. 3000 ஆண்டுகளாக, ஆசிய, மத்தியதரைக்கடல் நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் பாவனையிலிருந்திருக்கிறது. இளங்கோ அடிகள் தந்த சிலப்பதிகாரத்தில் யாழ்பற்றிக் கணிசமான குறிப்புகள் உள்ளன.கண்ணகியைப் பாடும் சிலப்பதிகாரத்தின் சரித்திரத்தைக் கிழக்கிலங்கையில் அவர் பிறந்த நாளிலிருந்தே எத்தனையோ விதத்தில் அடிகளார் கேட்டிருப்பார்.அதற்குச் சான்று இன்றும் நடைபெறும் குளித்தில் பாடல்களாகும்.

அவர்,இசை பற்றி எழுத முதல், தமிழரின் இயல் இசை,நாடகம் பற்றிய தேடல் அவரை சேக்ஸ்பியரின் நாடகங்களில் ஆர்வம் கொள்ள வைத்திருக்கவேண்டும். மேற்கத்திய உலகின் பண்பாடுகள், வாழ்க்கைமுறை, வர்க்கப் பிரிவுகள் என்பனவற்றை சேக்ஸ்பியர் நாடகங்கள் துல்லியமாகச் சொல்கின்றன. ஆனால் இந்தியாவிலிருக்கும் மனிதமற்ற சாதியமைப்புக்கும் மேற்கத்திய வர்க்க அமைப்புக்கும் எத்தனையோ வேறுபாடுண்டு. மேற்கத்திய வாழ்வில்,ஒரு கூலிக்காரன் தனது முயற்சியால் பணத்தால் உயர்ந்தால் அவன் பிரபுவாக மாறலாம். இந்திய கலாச்சாரத்தில் அவன் பிறந்த குடும்பம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.அவன் ஒரு நாளும் முன்னேறமுடியாது.

இந்திய சமய நீதி மனிதனை மிருகத்தைவிடக் கேவலமாக நடத்துகிறது.அதை வலுப் படுத்த கலை கலாச்சாரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. புராண,இதிகாச கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் யதார்த்தமற்ற,மனித வாழ்வைத் தொடாத உலகத்திற்குப் பார்வையாளரைக் கொண்டு செல்கிறது.

சேக்ஸ்பியர் கால கட்டத்திற்கு முன் இங்கிலாந்து நாடக உலகும் அப்படித்தானிருந்தது. கத்தோலிக்க சமயம் சார்ந்த கருத்துக்களைப் பரப்பும் நாடகங்களே பிரித்தானியாவிலும் இருந்தன. மேற்குலக கலை,கலாச்சார,சமய,விஞ்ஞானம் சார்ந்த புதிய பார்வையும்,தேடல்களும், செயற்பாடுகளும் 15ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் ஆரம்பித்தன.ஆனால் அவை இங்கிலாந்தைச் சென்றடையக் காலமெடுத்தது.

பண ஆசையும் பதவி மோகும் கொண்ட சமய தலைவர்களால்,கத்தோலிக்க சமயத்தின் கோரக் கரங்களுக்குள், கடவுள் பற்றிய பற்றிய கருத்துக்கள் அகப்பட்டு மக்களை முட்டாள்களாக வைத்திருப்பதை எதிர்த்து ஜேர்மனியில் மார்ட்டின் லூதர் (1483-1546) காலத்தில் போராடி புரட்டஸ்டண்ட் சமயத்தை ஜேர்மனியில் உருவாக்கினார். படித்தவர்கள் மட்டும் படிக்கும் விதத்தில லத்தின் மொழியிலிருந்த,கிறிஸ்தவ புனித நூலான ‘பைபிள்’அவரால் சாதாரண மக்களும் படிக்கும் விதத்தில் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது.

தனிமனிதனின் ஆசாபாசமும் வாழ்க்கையும் கத்தோலிக்க சமயக் கோட்பாட்டுக்களால் தடுக்கப் படுவதை எதிர்த்து,பிரித்தானியர் அரசர் எட்டாவது ஹென்றி(1491-1547) இங்கிலாந்திருந்த கத்தோலிக்க மதத்தை 1534 ‘அங்கிலிக்கன்’ சமயம் என்று மாற்றினார்.அதற்கு அவரே தலைவரானார்.
அவர் ஆரம்பித்த மாற்றங்களின் நீட்சியாக, 1611ம் ஆண்டு ஜேம்ஸ் அரசரால் புனித பைபிள் சாதாரண மக்களுக்காக ஆங்கிலத்தில்’ஜேம்ஸ் பைபிள்’என்ற பெயரில் மொழி பெயர்க்கப் பட்டது.

ஐரோப்பிய மக்கள் பழைய கொள்கைளை அகற்றிப் புதிய விதத்தில் கலை.கலாச்சார விஞ்ஞான அறிவை உணரத் தொடங்கினர்.
இத்தாலிய அறிஞர் கலிலியோ ( 1564-1642) என்பவர், பூமி தட்டையானது அல்ல சூரியனைச் சுற்றிப் பூமி நகர்கிறது என்ற உண்மையைக் கண்டு பிடித்தார்.
இத்தாலிய லியனார்டோ டாவின்சி (1452-1519) விஞ்ஞானி,ஓவியன்,சிற்பக்கலைஞன் என்று பன்முகத் துறையில் பல மாற்றங்களைச் செய்தார். ஐரோப்பாவில் சமயம் மட்டுமல்லாது விஞ்ஞான ரீதியான, கலை சார்ந்த மாற்றங்களும் பழமையிலிருந்து புதிய பார்வையில் வளர ஆரம்பித்தன.

ஆனால் இங்கிலாந்தில், அரசகுடும்பத்தினர் ஐரோப்பிய கலைஞர்களையே வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை இரசித்தனர். இங்கிலாந்தில்,தோமஸ்ஹைட், கிறிஸ்தோபர் மார்லோ என்பவர்கள் சேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் நாடகங்களை எழுதினாலும் சேக்ஸ்பியர் மாதிரி, ஆழமான, சிந்தனையைத் தூண்டும் விதத்திலோ,மக்களுக்கு இரசிக்கத் தக்க விதத்திலோ அமையவில்லை.

இன்று உலகம் புகழும் நாடக சக்கரவர்த்தியான சேக்ஸ்பியர்தான் அவரின் முதல் நாடகத்தை அன்றைய இங்கிலாந்தின் பேரரசியான முதலாவது எலிசபெத் மகாராணிக்கு(1535-1601) முன் (1599) நடித்துக் காட்டினார்.அதைத் தொடர்ந்து பொது வெளியல் பொது மக்களுக்கான நாடகங்களை நடத்தினார்.

தனது 38 நாடகங்களை மூன்று முக்கிய விடயங்களாக, சரித்திரம், துயர்கதைகள், நகைச்சுவை என்று எழுதினார்.

அவரின் முக்கிய நோக்கம் நாடகம் பார்ப்பது ஒரு பொழுது போக்கான விடயமாக மட்டுமல்லாமல் பல விடயங்களை மக்களுச் சொல்லவும் அவர்களைச் சிந்திக்கப் பண்ணவுமானதாகவிருந்தன. அத்துடன் வர்க்க பேதமின்றி மக்களை ஒன்றிணைப்பதாகவுமிருந்தன.

ஆனால் இந்தியா இலங்கையில் அன்றிருந்த நாடகங்கள் வெறும் பொழுது போக்குக்காகப் பழைய புராண இதிகாச விடயங்களை மேடையேற்றவதாகவிருந்தாலும் அவை பெரும்பாலும் பழைய கொள்கைகளைப் பரப்புவதாகவேயிருந்தன.

கலைகளும் பெரும்பாலும் மக்களை ஒரு மந்தைக் கூட்டமாக வைத்திருக்கும் ஆயதமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் பம்மல் சம்பந்த முதலியார் சமுகம் சார்ந்த நாடகங்களையும்,சங்சரதாஸ் சுவாமிகள் புராணம் இதிகாசங்கள் சார்ந்த நாடகங்களையும் மேடையேற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘தமிழ் ட்ராமா இன் கொலனியல் மட்ராஸ்’ என்ற கட்டுரையை எழுதிய கத்தரின் ஹான்ஸன் (11.10.2020) என்பவர் சொல்லும்போது, ‘தமிழ் இசை நாடகம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,20; நூற்றாண்; முற்பகுதியிலும் பொழுதுபோக்கின் செழிப்பான வடிவமாக மாறியது. இந்த ஆரம்பகாலத்தில்,பம்பாயிலிருந்து,பார்ஸி நாடக நிறுவனங்கள் மெட்ராசுக்கு அடிக்கடி வந்து,பல தரப்பட்ட பார்வையாளர்கள் முன் உருது மொழிக் காடசிகளை அரங்கேற்றின. தமிழ் நாடகத்திற்கும் பார்ஸி நாடகத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பின் பாரம்பரியம் பல மட்டங்களில் காணப்படுகின்றன. பெயரிடல்,கதைவகைகள்,பாடல் வகைகள்,ஆர்கெஸ்ட்ரா,குழு அமைப்பு,புரோசீனிய மேடையின் பயன்பாடு என்பன இருந்தன.
நாடகம் பொது மக்களை உருவாக்கும் செயல் முறையைக் காட்டுகிறது. ஆற்காடு நவாப்களைச் சுற்றி உருதுமொழி பேசும் முஸ்லீம்களின் சமூகம்,பாடப்படாத ஒரு ஒரு பிரிவின் ஆதரவை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.சென்னை முகமதிய இசைக்கம்பனி என்ற உள்ளூர்க்குழுவுக்கு கர்நாடகத்தின் பேகத்தின் அனுசரணை,இறக்குமதி செய்யப் பட்ட கலையைப் பரப்பவும்,அதை பரந்த சுற்றோட்ட வலையமைப்புக்குக் கொண்டு செல்லவும் உதவியது’ என்கிறார்.
வுpபுலானந்த அடிகளார் 1922ம் ஆண்டு காலத்தில் மட்ராஸ் சென்றபோது இருந்த நாடக உலகை இந்தப் பதிவு படம் படித்துக் காட்டுகிறது.
இலங்கையில்,சொர்ணலிங்கம் அவர்கள் பம்பல் சம்பந்தின் நாடகங்களைத் தழுவிய நாடகங்களை இலங்கையில் ஆரம்பித்தார்.
அதைத் தவிர பாரம்பரிய கூத்துக்கள் தென்மோடி வடமோடி என்ற இரு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருந்தன.

அடிகளாரின் கால கட்டத்தில்,20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில்,இலங்கையில், பிராமணியம் முன்னெடுத்த மகாபாரம்,இராமயணம் என்பன பெரும்பாலான படித்த தமிழர் பலரின் வீடுகளில் ஒலித்தன. அவற்றை அடிப்படையாகக் கொண்ட பாண்டவர் கதைகள் பல விதத்தில் கூத்துப் பாட்டுகளாக,கதாப் பிரசங்கங்களாக வானோங்கிய காலகட்டமது.
அதே கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களுக்குக் கோயிலில் நுழைய அனுமதியில்லை.

அடிகளார்,மானிப்பாயில் இந்துக் கல்லூரி அதிபராக வேலை செய்த கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த சாதிக் கொடுமையை நேரே கண்டிருப்பார். இரண்டாம் உலக யுத்தத்தின்பின் பிரித்தானிய அரசு தங்கள் காலனித்துவ நாடுகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

1922ம் ஆண்டு அவரது துறவிக் கல்விக்கா இந்தியா செல்ல முதலே,இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வர்க்க சாதி பேதங்களும் அதனால் ஒட்டுமொத்த மக்களும் ஒரு சமத்துவமான சமுதாயத்தில் வாழவில்லை என்பதை அடிகள் புரிந்திருப்பார். அவரின் ஆங்கில அறிவும் சமத்துவமான சமுதாயத்திற்கான ஏக்கமும் மக்கள் முன்னேற்றத்திற்கான பிரமாண்டமான சக்தி கல்வி என்பதை விவேகானந்தர் மூலம் புரிந்துகொண்ட அடிகளார் துறவியாக முடிவெடுக்கிறார்.

அதே நேரம் சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருந்த கலைத் துறையிலும் அவர் பார்வை பதிந்ததில் ஆச்சரியமில்லை. அத்துடன் அக்காலத்தில் சேக்ஸ்பியரின் நாடகங்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட உலகில் பல பாகங்களிலும் மேடையேறிக் கொண்டிருந்தன.

சிந்தாந்தம் தத்துவம் என்ற பெயரில் மக்கள் பிரிவுகளை இறுக்கமாக வைத்திருக்க உதவுபவை. ஆனால் சேக்ஸ்பியரின் நாடகங்கள், கற்பனை. சரித்திரம்,என்பவற்றை உள்ளடக்கியது. மக்களின் யதார்த்த உலகை மூன்று விதமாகப் பிரதிபலித்தவை.

என்பவற்றை சேக்ஸ்பியரின் 38 நாடகங்கள,
சரித்திரம்,நகைச்சுவை,துயர நிகழ்வுகள்,என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன. அவை பெரும்பாலான மக்களின் மன நிலையை, அவர்கள் வாழும் சமூகத்தின் யாதர்த்த நிலைகளைப் பின்னணியாகக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் மக்களின்;, வணக்கமுறை. வாழ்வியல், சமூகக் கோட்பாடுகள்,சமயக் கருத்துக்களுடன் இணைந்த படைப்புக்கள். ஒடுக்கப் பட்ட மக்களை அதில் இணைத்துக் கொள்ளவில்லை.

இந்தியா மட்டுமல்லாது, இலங்கையிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பம், இலங்கையில் ஆறுமுக நாவலர் சனாதனக் கருத்துக்களை மிகவும் வேகமாகப் பரப்பினார். சாதி மத வேறுபாடுகள் தலைவிரித்தாடின. அன்னியரால் இலங்கையர்களுக்கு அறிமுகம் செய்யப் பட்ட கல்வி,ஒடுக்கப் பட்ட மக்களுக்கு மறுக்கப் பட்டது. 1847ல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒடுக்கப் பட்ட மக்கள் சேர்த்துக் கொள்வதை எதிர்த்த நாவலர் இந்துப் பாடசாலையை அமைத்தார்;.

20ம் நூற்றாண்டில்,யாழ்ப்பாணத்திலிருந்து பாலின,சாதி சமய பேதம்,இந்தியாவை விடக் கொடுமையாகவிருந்தது.

19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிருந்து பிரித்தானிய பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராடினார்கள்.அதன் பயனால் முதலாம் உலகம் முடிந்தபின் படித்த பெண்களுக்கு 50 விகித வாக்குரிமை படித்த ஆண்களுக்கு 50 விகித வாக்குரிமை என்று பிரித்தானிய அரசு அமுல் படுத்தியது.அந்தத் திட்டத்தைத் தனது காலனித்துவ நாடுகளுக்குகு; கொண்டு சென்றபோது யாழ்ப்பாணத்தில் பிரச்சினை வந்தது.

1918ம் ஆண்டு,தமிழர்கள் பெரும்பாலான அரச உத்தியோகத்திருந்தார்கள்.படித்த பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல், சிறுபான்மையான(25 விகிதம்) தமிழருக்கு 50 விகிதமும் பெரும்பான்மையான (75 விகிதம்) சிங்களவர்களுக்கு 50 விகித வாக்குரிமையும் தரச்சொல்லி யாழ்ப்பாண வெள்ளாள சாதித்; தமிழர்; கேட்டார்கள். பெரும்பான்மையான சிங்களவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாம் யுத்தம் ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து உலகில் பல மாற்றங்கள் நடக்கின்றன. 1917ல் இர~;யாவில் மன்னராட்சி துர்க்கியெறியப் பட்டு உழைக்கும் மக்களின் ஆட்சி ஆரம்பித்தது. 1918ல் இங்கிலாந்தில் (படித்த)பெண’களுக்கு 50 விகித வாக்குரிமை ஆரம்பித்தது. 1922ல் பிரித்தானியாவுக்க எதிராகப் பல நூற்றாண்டுகள் போராடிய ஐரி~; மக்கள் விடுதலை பெறுகிறார்கள்.அங்கு அவர்களின் பாரம்பரிய புனித சின்னமான யாழ்க்கொடி தேசியக் கொடியாக வானளாவப் பறக்கிறது.

இந்த மாற்றங்கள் எதுவும் சனாதனக் கொள்கை கொண்டவர்களின் கண்களில் படவில்லை;.சமயத்தை முன்வைத்து சாதிக் கொடுமையை முன்னெடுத்திக் கொண்டிருந்தார்கள். தமிழர்களின் தொன்மையான இசை,கலை நாடகங்கள் பார்ப்பன சாயம் பூசப் பட்டவையாக வளர்ந்து கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் தமிழசை மறைந்து கொண்டிருந்தது. சமஸ்கிருதம் சார்ந்த பாடல்கள், சங்கீதங்கள்,பிரபலப் படுத்தப்பட்டன.

அடிகளார்,இந்தியாவுக்குச் சென்ற காலத்தில் (1922-25) அங்கு,சாதி மதமற்ற விதத்தில் மக்களுக்குப் பணிகள் செய்ய ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப் பட்டிருந்தது. படிப்பில் இட ஒதுக்கீடும்,பெண்களுக்கு வாக்குரிமை 1921ம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருந்தது.திருமதி முத்துலட்சமி பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார். அத்துடன் தேவதாசி முறையை மாற்றிக் காட்டினார்.ஆனாலும் இந்திய சனத் தொகையில் 3 விகிதமான பிராமணர்கள் 70 விகிதமான அரச பதவிகளிலிருந்தார்கள்.

இந்தியாவில் பிராமணர்களும் இலங்கையில் யாழ்ப்பாணத்து வெள்ளார்களும் படிப்பையும் அரச உத்தியோகத்தையும், செல்வாக்கையம் வைத்திருந்தார்கள். சமயரீதியான சாதி முறை அவர்களுக்கு உதவியது. அவர்கள் சொல்வதற்குப் பாமர மக்கள் அடிபணிய வேண்டியிருந்தது.

ஆறுமுகநாவலர் 18ம் நூற்றாண்டில் உண்டாக்கிய சாதி வெறியின் கொடுமையான எதிரொலியை,20ம் நூற்றாண்டில் 1927ல் மகாத்மா காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தபோது கண்டார். 1918ம் ஆண்டு 50;:50 வாக்குரிமை கேட்ட தமிழ்த் தலைவர்கள்,அதைத் தொடர்ந்து, 1927ம் ஆண்டு,பிரித்தானிய டொனமூர் கமிஸனின் முன்னால், ‘பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது’ என்ற கூவுகிறார்கள். காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்த கால கட்டமான 27.11. 1927ல் இந்த நெருக்கடிகள் தொடர்கின்றன. காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தபோது அவரை வரவேற்கும் பணியில் விபுலானந்த அடிகளார் இருந்ததாகக் கூறப் படுகிறது. காந்தியடிகள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களைப் பார்வையிடுகிறார்.யாழ்ப்பாணத்தில் நடந்த சாதி மத பாகுபாடுகள் காந்தியை வருத்தின என்பதற்கு அவர் அங்கு பேசிய சொற்பொழிவுகள் சாட்சியாக இருக்கிறது. அமைதியம் சமத்துவமும் கேட்டு முத்தி பெற்ற புத்தர் பூமியிலா இது நடக்கிறது? என்று வருந்தியிருக்கிறார்.

1929ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்; கூடாது என்ற உயர்சாதியினரால் சங்காலை என்ற இடத்தில் சாதிக்கலவரம் நடக்கிறது. இவற்றைத் தடுக்க,மக்களின் சமுத்துவம் சார்ந்த கருத்துக்களைப் பரப்ப பெரிதாக எந்த நிகழ்வுகளும் நடந்ததான சரித்திரம் இல்லை.

சென்னையில் சங்கரதாஸ் அவர்களின் நாடகக் கொம்பனி சமயம் சார்ந்த நாடகங்களையும் பம்மல் சம்பத் முதலியார் அவர்களின் நாடகக் கொம்பனி யதார்தத்த ரீதியான சமுகநாடகங்களையும் நடத்தினார்கள். 16-17ம் நூற்றாண்டில் சேக்ஸ்பியரின் நாடகங்களில் பெண்பாத்திரங்களாக இளம் ஆண்கள் நடித்ததுபோல், 20ம் நூற்றாண்டில் இந்திய நாடகங்களில் பெண்பாத்திரங்களை ஆண்களே நடித்தார்கள்.
1911ம் ஆண்டு இராஜலட்சுமி என்ற பெண் தமிழகத்தில் முதற்தரம் நாடகமேடை யேறியதான தகவல்களுள்ளன.

சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அடிகளார் சேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றி மதங்க சூளாமணி நூல் எழுத் எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சமுதாயம் சாதிபேதமற்ற எதிர்காலத்தை உருவாக்க சேக்ஸ்பியர் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற ஒரு நாடக சக்கரவர்த்தியைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியிருக்கலாம்.

இவர் 1943ம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில்,’
‘பழமையும் புதுமையும்,துவைதமும் அத்வைதமும்,
பௌதீக விஞ்ஞானமும் மெய்ஞானக் காட்சியும்,
மேற்றிசை அறிவும்,கீழ்த்திசைச் சமயமும்,
மனமொடுங்கிய தியான நிலையும்,மனபதைக்குத் தொண்டு புரிதலும்,
சமரசப் படவேண்டிய காலமிது’ என்று எழுதியிருக்கிறார். இதுதான், 1927ல் வெளியிட்ட ‘மதங்க சூளாமணியின்’ எழுதப் படாத முன்னுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சேக்ஸ்பியரின் நாடகங்களில் அடிகளார் சொல்லிய மேற்குறிப்பிட் வரிகளின் புரிதல் இருப்பதை அந்த நாடகங்கள் பார்ப்பவர்கள் அறிவார்கள்.

சேக்ஸ்பியரின் நாடகத்தில்,சாதாரண மக்களுக்கும் புரியத் தக்கதாக 1700 பதிய ஆங்கில வார்த்தைகள் உள்ளன. அவரின் நாடகம் உலகத்திலுள்ள பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. அரசர்கள்,பொதுமக்கள் என்று பல பாத்திரங்கள் உள்ளனர் 17ம் நாற்றாண்டிலேயே ஒரு கறுப்பு நிற மனிதனைத் தனது நாடக கதாநாயக பாத்திரமாக்கியுள்ளார். தனது நாடகத்தின் மூலம் பல்வித பேதங்களைக் கடந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க முனைகிறார்;,மனித சிந்தனையைச் சீராக்கத் தன் நாடகத்தை ஒரு கருவியாகப் பாவித்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் படித்த அடிகளார்,அவரின் மனதில் எழுந்த பல்வித சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள ‘மதங்க சூளாமணியை’1927ம் ஆண்டு வெளியிடுகிறார். யாழ் நூலை 1947ம் ஆண்டுதான் வெளியிடுகிறார்.ஏன் சேக்ஸ்பியரில் ஆர்வம் கொண்டார்? அவரின் பெயரையே ‘செகசிற்பியர் ‘என்று மாற்றினார்? செகசிற்பியரின் 12 நாடகங்களை ஆய்வு செய்தார்? ‘மதங்க சூளாமணி;’ அதாவது’நாடகத்தின் விற்பனன்’என்ற பெயரிட்டார் என்பதற்கு, அவர் இந்தியா போவதற்கும். சுவாமியாகிய பின் நாடகக்கலையை ஆய்வு செய்யக்; காரணமாகவிருந்த சூழ்நிலையை பல கண்ணோட்டங்களில் பதிவு செய்துகொண்டே போகலாம்.

விபுலாந்த சுவாமிகள்,1892ல் காரைதீவில் பிறந்தவர். 1947ம் ஆண்டு ஆடிமாதம் 19ம் திகதி இறந்தார். அதாவது இந்திய சுதந்திரம் வந்து 7 மாதங்களுக்குப் பின் இறைவனடி சேர்கிறார். அதற்கு முன் அவரின் அற்புத படைப்பான யாழ் நூலை, ஆனி மாதத்தில் வெளியிடுகிறார்.தனது உயிர் பிரியமுதல் எப்படியும் யாழ்நூலை வெளியிட அவர் படாதபாடு பட்டிருப்பார் என்பதன் உண்மையை தமிழராகிய நாங்கள் மறக்க முடியாது.

சுவாமிகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் அவர் சுவாமி விகோனந்தர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போன்றோரின் கருத்துக்களில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்ற விபரம் தரப் பட்டிருக்கிறது. சுவாமி விவோகானந்தர், துறவியாகிச் சமுக மாற்றங்களைச் செய்தததைப் போலவே,பாரதி ஒரு கவிஞனாகவிருந்து ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடியதுபோல் சுவாமி விபுலானந்தரும் துறவியாகிப் பல மனி மேம்பாட்டுச் சாதனைகசை; செய்தார்.

சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த முற்போக்கு சிந்தனையாளர்களிடம்,’ஈசோரெரிஸ்ம் (நுளழவநசiஉiஅ) அதாவது,மறைபொருள்வாதம் என்ற கருத்துப் பரவிக் கொண்டிருந்தது.அந்தக் கருத்துக்கள் பல சமயங்களும் பல விதமாகச் சொல்லப் படும் கருத்துக்களுடன் சம்பந்தப்பட்டது போலிருந்தாலும் வித்தியாசமானவை. அதாவது. ஒரு இந்துத் துறவி இந்து சமயம் சார்ந்தோ அல்லது,இந்து மக்களுக்கு மட்டும்தான் உதவவேண்டும் என்ற கோட்பாட்டக்கு அப்பாற்பட்டது. இராம கிரு~;ண மிஸனின் தத்துவம்,’ சாதி மத பாலியல் பேதமற்ற விதத்தில் மக்களின் வாழ்வை மேன்படுத்த அவர்களுக்குக் கல்வி கொடுத்து உதவுவதாகும்(மறைபொருள்வாதம்) என்பதாகும்.

விவேகானந்ர், பாரதி, விபுலானந்தர் போன்ற மகான்கள் அக்கால கட்டத்தில்,அகில உலகத்திலும் நடந்து கொண்டிருந்த, அரசியல், சமுக, ஜனநாயக,சமய.கலை கலாச்சார மாற்றங்களின் நன்மை தீமைகளைப் புரிந்து கொண்டவர்கள். அதனால் அந்த மாற்றங்களின் நல்ல கருத்துக்கள் மூலம் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கனின் வாழ்க்கையில் பல மாறற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

அடிகளாரின்; எழுத்துக்களையும் மக்களுக்கும் இலக்கியத்திற்கும் அவர் செய்த பணிகளைப் பார்க்கும்போது, அக்கால கட்டங்களில் நடந்த அரசியல் மாற்றங்கள் அவரின் சேவையை மேன்படுத்த உதவியிருக்கின்றன என்பது தெரிகிறது.

‘ஒன்றே உலகம் ஒருவனே கடவுள்’ என்பதில் மிகவும் இறுக்கமான பார்வையை சுவாமி விவேகானந்தர்; வைத்திருந்தார். தனது மதத்திறகு அப்பாற் பட்ட நிவேதிதா அம்மையாரைப் பெண்களின் கல்வியை முன்னேற்ற இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.

வுpபுலானந்த அடிகளாரின் மனம் கவர்ந்த கவிஞர் பாரதியின் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’,
‘ பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் படைக்கவந்தோம்’,
போன்ற கருத்துக்களை உள்வாங்கி அதன் பிரகாரம் பிற்காலத்தில் மக்களின் மேன்மைக்கு உழைத்தவர். பாரதியை மிகவும் ஆழமாக உள்வாங்கியவர். பாரதி; பழமையை முற்று முழுதாக எடுத்தெறியவில்லை,ஆனால் அதிலிருக்கும் மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் விடயங்களைச் சாடித்தீர்த்தார் என்பதை நன்கறிந்த விபுலானந்தர் சாதி மத,இன பேதமின்றியசமூகத் தொண்டைப் பலவழிகளிலும் செய்தார்.

இலங்கையில், முக்கியமாகச் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப் பட்ட அத்தனை பாடசாலைகளிலும் (38) பாரதி விழா அதி பிரமாதமாகக் கொண்டாடப் பட்ட காலமது.பாரதி பாடல்களுக்குக் கும்மியடித்த பெண்கள் நாங்கள்,பாரதியின் பாடல்களை உவமானம் காட்டி பேச்சு போட்டியில் பரிசெடுத்தவள் நான் ;.மகாபாரதக் கதையை நாடகமாக்கி’அசோகவனத்தில் சீதை’ என்ற நாடகத்தில் ‘அனுமானாக நடித்துப் பரிசு பெற்றவள் நான். இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், எனது ஊரை விட்டு வெளியேறும் வரை,வாழும் சூழ்நிலை காரணமாக நான் மிக பழைய பண்பாடுகளுடன் ஒட்டியிருந்தாலும் விபுலானந்தரின் பாரதி சார்ந்த விடயங்கள் எனது சிந்தனையை மாற்ற உதவின். இவற்றுக்குக் காரணம் விபுலானந்த அடிகள் பாடசாலைகளில் முன்னெடுத்த இயல் இசை நாடக வளர்ச்சியின் நீட்சியாகும்.

வுpபுலானந்த அடிகள் 1929ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்ழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகச் சேர்கிறார். ஆனால் அதற்கு முன்னரே அவரின் சமுதாயக்
கண்ணோட்டம்,சேவைகளும் பரந்து விரிந்து விட்டன.

அதற்குக் காரணம், இலங்கையிலும் இந்தியாவிலும் நடந்த பிரமாண்டமான அரசியல் மாற்றங்களாகும்.இந்தியாவில், சமயம் சார்ந்த பிற்போக்குத் தனமான நாடக, கலை நிகழ்ச்சிகளுக்க எதிரான பதிலடியாக,’மதங்க சூளாமணி’யை வெளியிடுகிறார் இந்தியாவில் இருக்கும்போது சாதி மதத்திற்கு எதிராகப் பாடிய பாரதியை ‘மகாகவி’ என்று போற்றியதுபோல், மனித வாழ்க்கையின் யதார்த்தமும், அவர்களைத் தொடரும் சரித்திரமும் சார்ந்த நாடகங்களை எழுதிய சேக்ஸ்பியரை’நாடக சக்கரவர்த்தி’என்ற தரத்தில் உயர்த்திப்; போற்றுகிறார்.இந்தியாவில் தொடரும் மனித மேம்பாட்டுக்கு உதவாத கருத்துக்களைக் கொண்ட பெரும்பாலான பிற்போக்கு கள்ளமும் கபடமுமான நாடகங்களைச் சாடுகிறார்.

வுpபுலாநந்தர்,அவரது துறவித் தகமையுடன் இலங்கை திரும்பிப் பல பாடசாலைகளை அமைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில(1925-1933);.இலங்கைத் தமிழர் அரசியலில் பல முரண்பாடுகள் ஆரம்பிக்கின்றன.வெள்ளாளருக்கு மட்டும் முதலிடம் வேண்டும் என்ற கொள்கையை மறைத்துக்கொண்டு’தமிழர்களுக்குப் பிரச்சினை’என்ற கோ~ம் ஒலிக்கத் தொடங்கியது.
ஆனால்,அக்கால கட்டத்தில் விபுலானந்த அடிகளார்,தமிழரின் சிந்தனையை உலுப்பி,அவர்களின் தொன்மையின் சிறப்பை சாதாரண தமிழ்மக்கள் புரிந்து கொள்ள முழுக்க முழுக்க இசை இயல்நாடகத்தில் தனது ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

மட்டக்களப்பு சைவ குடும்பத்தில் பிறந்து. கிறிஸ்தவர்கள கல்லூரியில் மேற்படிப்பு படித்த விபுலானந்த அடிகளும் ;’யாதும் ஊரே யாரும் கேளிர்,’ என்ற அடிப்படையில்; தங்களின் துறைசார்ந்தவற்றிற்கு அப்பால் சென்று மக்களின் சிந்தனையை அறிவு ரீதியாகச் செயற்பட, மதங்க சூளாமணியை எழுதினார்.ஏனெ;றால் 20ம் நூற்றாண்டில் இந்திய இலங்கை மக்களிடையே இருந்தவை பெரும்பாலும் சரித்திர அடையாளமற்ற, யதார்த்திலிருந்து வேறுபட்ட கலைவடிவங்களில்;; இருந்தன.

அதன் எதிரொலியாக அவரின,;’மதங்க சூழாமணி’ என்ற சேக்ஸ்பியர் என்ற நாடக மாமேதையின் நாடகங்கள் பற்றிய ஒப்பியல் சார்ந்த பல விடயங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளவும் அவர் எழுதிய பதிவின் கருத்தாளத்தைப் புரிந்து கொள்ளவும் எழுதப் பட்டது.

16-17ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஏற்பட்ட, சமய. சுமூக சிந்தனைகளின் பிரதிபலிப்பின் சிலவற்றை சேக்ஸ்பியர் நாடகங்கள் வெளிப் படுத்தின.
அந்த மாதிரியான விழிப்புணர்ச்சியைத் தூண்டும் நாடகங்கள் தமிழுலகில் அடிகளார் வாழ்ந்த 21ம் நூற்றாண்டின் ஆரம்ப மத்தியகாலங்களில் அவ்வளவாகப் பிரபலப் படவில்லை. அடிகளாரின் இயல் இசை நாடகம் பற்றிய தேடல்களில் மிக மிக முக்கியமானது அவரது பதிவான ‘யாழ்’ நூலாகும். இந்தப் பதிவு,’யாழ்’ என்ற பண்டைத்தமினின் இசைக்கருவி மூலம்,தமிழரின் பல்விதத் தொன்மைகளை ஆயும் ஒரு பதிவாகும்.

தமிழரின் சங்க இலக்கியங்களில் யாழ் பற்றிய குறிப்புகள் உள்ளன. தொல்காப்பியம், அகநானூறு,புறநாநுர்று,நற்றிணை,பெரும்பாணாற்றுப் படை,பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில்,யாழ் வாசிப்பைப் பற்றியும் பல்வகை யாழ்களைப் பற்றியும் யாழின் உறுப்பமைதியைப் பற்றியும் குறிப்புகள் பல இருக்கின்றன என்று பதிவுகள் இருக்கின்றன.சிந்து வெளி நாகரிகத்தில் யாழ் இருந்ததைத் தொல்காப்பியர்,’நரம்பின் மறை’என்று குறிப்பிட்டதாகப் பதிவொன்றுண்டு. சீவகசிந்தாமணியிலம் யாழ் பற்றிய குறிப்புண்டு.

முத்தமிழ் வித்தகர்,விபுலானந்த அடிகளாரின் மனம் கவர்ந்த சிலப்பதிகாரத்தில்,மாதவி தனது அரங்கேற்றத்தின்போது, தோழி எடுத்தக் கொடுத்த யாழில்.பண்ணல்,பரிவட்டணை,ஆராய்தல்,தைவரல்,செலவு,விளையாட்டு,சையூழ்,குறும்போக்கு, ஆகிய எட்டு விதங்களில் யாழ் இசை எழுப்பிப் பார்த்தாள்.
வார்தல்,அடித்தல்,உந்தல்,உறழ்தல். உருட்டல், தெருட்டல்.அள்ளல்,பட்டடை. என்றெல்லாம் இசைநூல்கள் வகுத்த முறைப்படி யாழ்நூலை வாசித்து மகிழ்ந்தாள் என்று சொல்லப் படுகின்றன.

விபுலானந்த அடிகளார் 1947ம் ஆண்டு கரந்தை தமிழச் சங்கத்தில் ‘யாழ்நூல்’ வெளியிட்டு விழாவில் பேசும்போது,’எந்த நூலை வாசித்தாலும் தேனாகத் தித்திக்கவில்லை சிலப்பதிகாரமே தேனாகத் தித்தித்தது’ என்று கூறியதாகத் தகவலிருக்கிறது. யாழ் பற்றிய இத்தனை பழம் பெரும் தகவல்கள் உள்ளன.சில பதிவுகள் யாழின் தொன்மை 15.000 வருட வரலாறு கொண்டதாகவும் சொல்லப் படுகிறது.

வில்லின் முறுக்கேற்றிக் கட்டப்பட்ட நாணிலிருந்து, அம்பு செல்லும்போது தோன்றிய இசையே யாழின் உருவாகத்திற்குக் காரணம். இந்த வில், ‘வில் யாழாக’ மலர்ந்தது. யாளி என்ற ஒரு பூர்வீக மிருகத்தின் தலையைப் போல இருந்ததால் ‘யாழ்’ என்ற பெயரைப் பெற்றது.

பேரியாழ் 21 நரம்பு
மகரயாழ்-17
சகோடயாழ்,16
செங்கோட்டியாழ் 7
இவற்றையும் விட நாரத யாழ்.தும்புரு யாழ்,கீசக யாழ்,
சீரியாழ்,மருத்துவ யாழ் ,ஆதியாழ் எனப் பல இருந்ததாகப் பழைய நூல்கள் சொல்கின்றன.

அடிகளாரின் யாழ் நூலில்,வில் யாழ், சீறியாழ்,செங்கோட்டியாழ்,பேரியாழ்,மகரவேல்க் கொடி யாழ்,சகோட யாழ்,மகர யாழ்-காமன் கொடியாழ்,மகரயாழ்-வர்ண ஊர்தியாழ் என்று பல வகைகள் சொல்லப் படுகின்றன. வீpணையின் வரவு யாழை அழித்தது என்ன சொல்லப் படுகிறது.

தற்காலங்களில் வீணை வாத்தியம் தமிழரின் புராதான வாத்தியமாகக் கருதப் படுகிறது என்பது திரிபு படுத்தப்பட்ட தகவலாகவிருக்கலாம். இராமயணத்தில் இராவணனின் கொடியில் வீணையிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ வேறு நாடுகளிலோ வீணை ஆதிகாலத்தில் பாவனையிலிருந்ததாக எந்த தொல்லியல் ஆவணமும் இல்லை. இராமாயணம் என்ற கதையே ‘ஹோமர்’; என்ற கிரேக்க நாடகாசிரியா,கி.மு.7ம் அல்லது 8ம் நூற்றூண்டில் எழுதிய ‘இலியாட்’ என்பதின் திரிபுதான் என்பதை கிரேக்கத்தில் பாண்டித்தியம் பெற்ற விபுலானந்தா வித்தகர் தெரிந்திருப்பார்.

கி,மு.326ல் அலெக்ஸாண்டர் இந்தியா வந்த பின்தான் பிரமாண்டமான திரிபுகளைப் பார்ப்பனர் தங்கள் வேதங்கள்’ என்று பதிவிடத் தொடங்கினர். கி.மு 6ம் நூற்றாண்டில் இந்தியாவெங்கும் மட்டுமல்லாது தென்னாசியாசியவெங்கும் புத்தமதம் பரவி வளர்ந்து கொண்டிருந்தது.
புத்த மதம் சார்ந்த நல்ல கருத்துக்களைப் புகட்ட,கி.மு.5ம் நூற்றாண்டில், உலகத்திலேயெ மிகவும் புராதானமான நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் மாணத்தில்,பாட்னா நகருக்கு 55 மைல் தூரத்தில் உருவாக்கப் பட்டது. இதில்,உலகத்தில் பல பகுதிகளிலுமிருந்து,அதாவது, சீனா, கிரேக்கம்,பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து பத்தாயிரம் மாணவர்களுக்கு மேலான தொகையில் ஆண்களும் பெண்களும் பன் முகக் கல்வியும் கற்றிருக்கிறார்கள் என்பதற்கு அக்காலத்தில் அங்கு மாணவராகவிருந்து சீன மாணவர் ஒருவரின் பதிவுகள் சான்றாக இருப்பதாகக் கூறப் படுகிறது.

இந்த அகில உலகப் பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் குப்தர் அரச பரம்பரைக்கால கட்டத்தில் (சாக்ரட்ரியா அல்லது குமாரகுப்தா) (கி.மு.415-55). இது 1193ல் சில பகுதிகள் கட்டப் பட்டன. சில பகுதிகள் மவுரிய பேரரசரான அசோக அரசரால்(கி.மு.273-232) கட்டப் பட்டதாம். பௌத்தத்தில் பெண்கள் சமமாக நடத்தப் பட்டார்கள,படித்தார்கள் பிக்குணியாக வாழ்ந்தார்கள்.மக்களிடம் மதிப்பு பெற்றார்கள்
இதன் பிரதிபலிப்போ என்னவோ கி.மு 2ம் நூற்ண்டில் மனுதர்ம சாஸ்திரம் எழுதப் பட்டு,’பெண் என்பவள் ஒரு ஆணக்காக வாழ்ந்து முடிக்க வேண்டியவள்’ என்ற சித்தாந்தம் பரவலாக்கப் பட்டது. அன்றிலிருந்து பெண்களின் அடிமைநிலை மாறவில்லை.

சமத்துவத்தைப் பரப்பும் பௌத்த மதத்தை அழிக்க, பார்ப்பனர்களுக்குப் புதிய கடவுள்கள் தேவைப் பட்டிருக்கலாம். அவற்றைக் கிரேக்க பழைய கதைகளிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்.உதாரணமாக, கிரேக்கர்களுக்கு பன்னிரண்டு முக்கிய கடவுளர் உள்ளனர். அவர்களின் முக்கிய கடவுளரான ‘ஜீயஸ்’; என்வருக்கும், இந்தியக் கடவுளான சிவனுக்கும் ஒற்றுமையுண்டு. கிரேக்க காதற் தெய்வமான ‘அபராயிட்ரிஸ்’; என்ற தெய்வத்திற்கும் எங்கள் ‘ரதி’க்கும் ஒற்றுமையுண்டு. எஜிப்த்தை வெற்றி கொண்ட அலெக்ஸாண்டர்,எஜிப்திய மரபின்படி அவர்களின் அரசன்; ‘கடவுள்’ என மதிக்கப் படுவான் என்பதால்.அலெக்ஸாண்டா தன்னை கடவுளாக வணங்கச் சொல்லிக் கட்டளையிட்டார்.மத்திய தரைக்கடற்; பகுதியில் ‘ஸ்கந்தர்’ என்றழைக்கப்பட்டார்

அதன் நீட்சியே இந்தியாவில் பஞ்சாப் பிரதேசத்தை (கி.மு 326) அலெக்ஸாண்டவெற்றி கொண்டபின்,’ஸ்கந்தா’ வழிபாடு வந்தது. தமிழ்க் கடவுள் முருகன்,’ஸ்கந்தா’வாக்கப்பட்டார்;.வடநாட்டில் வழிபடும் ‘ஸ்கந்தா’ பிரம்மசாரி.தென்னாட்டில் குறவள்ளிக்குப் போட்டியாக முருகனுக்கு தெய்வானையைப் புகுத்திவிட்டார்கள்.இலங்கையில் ஆதிகாலத் தமிழர் வணக்கமுறையில் முருகவழிபாடு.வட இலங்கையிலிருந்த கதிர்காமம் வரை ‘வேல்’ வழிபாடாகத்தான் தொடர்கிறது.

அதுபோலவே தமிழரின் ‘யாழ் இசைக்கருவியை, தொல்காப்பியர்,’ நரம்பின் மறை’ என்று உயர்த்தி எழுதிய கருவியைப் பார்ப்பனர்கள்; திரிபு படுத்தி வீணையாக்கியதைப் பார்த்த முத்தமிழ் வித்தகர் தமிழனின் இசைத் தொன்மை மட்டுமல்லாது எத்தனை வித யாழ்களை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதை மிக விளக்கமாகத் தனது யாழ் நூலில் ஆவணப் படுத்தியிருக்கிறார். தௌ;ளத் தெளிவாக கணிதக்குறிப்பு, பிஸிக்ஸ் குறிப்புகளுடன் மிக மேன்மையாகப்; பதிவிட்டுத் தமிழனின் மிகச் சிறந்த தொழில் நுட்பத்தை உலகத்திற்குப் பறை சாற்றுகிறார்.

பண்டைக்காலத்தில் (யாழ்நூல் பக் 74) ‘யாழின்’ உபயோகம் பற்றி அடிகளார்; சொல்லும்போது ‘எஜிப்து,பாரசீகம்,சுமேரியா,கிரட்,இத்தாலி.ஐபீரியா,ஸ்பெயின் போன்ற பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.யாழின் பாவனையிருந்திருக்கிறது’ என்பதை விளக்குகிறார்.

அத்துடன் தொடர்ந்து, ‘இலங்கை மன்னனான இராவணன் வகுத்த நரம்புக் கருவி,அவ்வகைய கருவிகளுக்குள்ளே பலவற்றாலும் முதன்மை பெற்றதென துணிதற்கிடமுண்டு.’தலமுத லூழியிற் றானவர் தருக்கறப்,புலமக ளாளர் புரிநரம் பாயிரம்,வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ் எனப் பெருங்கதையுனுட் கூறப்பட்ட கருவியினை ஆதியாழ் எனக் கொள்ளும் அறிவுடையோர் தானவர் கையிருந்த யாழ் தாம் கொள்ளும் ‘ஆதியாழு’க்குக் காலத்தால் முற்பட்டதென்பதை மறந்து விட்டனர் போலும்’ என்று குமுறிப் பதிவிடுகிறார் அடிகளார்.

வீணையின் பாவனை கிபி.4ம் நூற்றாண்டில பின்,தமிழ் நாட்டில் ஆரம்பித்திருக்கலாம். ஏனென்றால்,வடஇந்திய மன்னர் ‘ சமுதகுப்தா’ எனபவர் வீணை வாசித்த தகவலும் அவரின் ஆட்சியில் வீணை பதித்த தங்க நாணயமும் வெளியிட்டிருந்த சரித்திரமும் உள்ளது.

சிவன் வீணைவாசித்தார், நாரதர் வீணைவாசித்தார்,சரஸ்வதி வீணையுடன் இருக்கிறார் என்பதெல்லாம் இடையில் புனையப் பட்டவை. எந்த விதமான தொல்லியல் சான்றும் கிடையாது.சமய வழியாகவரும் பற்பல கற்பனைக் கதைகளாகவிருக்கலாம்.நரம்பு இசைக் கருவிகள் ஆதிகாலத்திலிருந்து பற்பல நாடுகளில் பற்பலவிதமாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில்,கி.பி.10;ம் நூற்றாண்டில் ருத்ர வீணை,கின்னாரி,கச்சபி,பின்னர் சித்தார்,சுhரோட்,சரஸ்வதி வீணை, போன்றவை பிரபலம் ஆயின.

தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியே யாழ் என்ற பெருமையை உடையவர்கள் நாங்கள். அதைப் பறைசாற்றும் இன்னொரு சான்று இலங்கையில் தமிழர் தலைநகர் யாழ்ப்;பாணம் என்பதாகும்;! ‘யாழ்’என்ற மகிமையுடைய இசைக் கருவியின் தெய்வீக மகிமை கண்டு அதைப் பாவித்த பாவணன் பெயரில் ஈழத்தில் தமிழர் தலைநகர் பெயரிடப் பட்டிருக்கிறதென்றால் அதன் ஆழமான கருத்தும், பெருமையும் வேறு எந்த இனத்திற்கும் கிடையாது.அத்தனைதூரம்’ யாழ்’ இசைக் கருவியைப் புனிதமாக மட்டுமல்லாமல் தங்களின் தொன்மையான அடையாளமாவும் சரித்திரத்தில் பதித்திருக்கிறார்கள் தமிழர்கள். ‘யாழ்ப்’பாணத்தில் பதவி வகித்த காலத்தில் அடிகளார் இதை நினைத்துப் பூரித்திருப்பார் என்றும் கற்பனை செய்து கொள்ளலாம்.

யாழ் இசைக் கருவி தமிழர்களின் கலாச்சாரத்தோடு மட்டுமல்லாது பல பழைய கலாச்சாரங்களிலும் இசைக்கருவிகளில் மிகப் பழமையானது யாழ் என்பது ஆய்வுகளிற் தெரிகிறது.தமிழரின் ஆதிகால இசைக் கருவிகளாக, உடுக்கு,முரசு,யாழ் புல்லாங்குழல்;,தாரை,தம்பட்டை,மத்தளம் போன்றவை இருந்தன.திருவள்ளுவர்காலத்தில் யாழ் தமிழரின் பாவனையிருந்தது என்பதற்கு அவர் சொல்லியிருக்கும்,’
‘குழலினிது,யாழினிது என்பதர் மக்கள் மழலைச் சொல் கோளாதவர்’-என்ற குரல் ஆவணமாகவிருக்கிறது.

‘யாழ்’ இசைக்கருவி தமிழர்கள் மூலம்தான்,பாரசீகம், எஜ்pப்த், சுமெரியா போன்ற பற்பல நாடுகளுக்குப் பரவியதாக ‘யாழ்’ நூலில் அடிகளார் குறிப்பிட்டதை மேலே பதிவிட்டிருக்கிறேன். இது உண்மையாகவிருக்கலாம் ஏனென்றால், தமிழகம் கி.மு 10ம் நூற்றாண்டு காலத்திலேயே மத்திய தரைக்கடல் நாடுகளில் வாணிபம் செய்திருக்கிறார்கள்.
அதற்கும் பழைய காலமான தொல்காலத்தில் யூத மக்கள் மாமிசம் உண்ணாதவர்களாக மாறுவதற்கும், ஒரு நாள் என்றாலும் விரதம் இருப்பதற்கும் தமிழர்கள் காரணிகளாக இருந்தார்கள் என்பதற்கு பழைய விவிலியத்தில் பதிவுகள் உண்டாம்.
யூத அரசன் சொலமன் காலத்தில் தமிழகத்திலிருந்து தங்கமும் சந்தனமும் அங்க அவனுடைய மாளிகை கட்டுவதற்காகசக் கொண்டு செல்லப் பட்டது என்று ஆவணங்கள் உள்ளன.

காலக்கிரமத்தில் யாழ் என்னும் ‘ஹார்ப்’ வாத்தியம் தொழில் நுட்பத்தால் பன்முகத் தன்மை பெற்றது. உலகெங்கும் பரவியது. இன்று தென்னாபிரிக்க வரை’கிட்டார்’ போன்ற வகைகளாகப் பிரபலமாகவிருக்கிறது. தமிழில்,’யாழிலிருந்து நீட்சியான நரம்புக் கருவிகள்,யாழ்,வீணை, தம்பூரா,பிடில்,வயலின்,சித்தார் எனப் பலவாகும்.

இங்கிலாந்துக்கு அருகிலுள்ள ஐரிஸ்நாட்டின் தேசியக் கொடி ‘யாழ்க் கொடியாகும்.இவர்களின் கலாச்சாரம் உலகத்தில் மிகப் பழமையான செல்டிக் கராச்சாரத்தில் பின்னிப் பிணைந்தது. உரோமர் இங்கிலாந்துக்கு வந்தபோது(கி.மு55), இங்கிலாந்து செல்டிக் கலாச்சரா,வணக்கமுறைகள் நடைமுறையிலிருந்தன.

விபுலானந்த அடிகளார் ‘மதங்க சூளாமணி’ என்று போற்றிய எழுதிய இங்கிலாந்து நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் நாடகங்களில் குழல் வாத்தியமான’பைப்’என்ற (யாழ், போன்ற) வாத்தியங்களின் உபயோகம் இருந்திருக்கிறது. அவரின் ‘மிட்சமர் நைட் ட்றீம்ஸ் நாடகத்தில் ‘ஹார்ப்’ வாத்தியம் (யாழ்) பாவிக்கப் பட்டிருக்கிறது.

1922 காலகட்டத்தில் தமிழிசை இயக்கம் வேகம் பெற்ற காலம் ( மவுனகுரு) 1907ல் கர்ணாமிர்தசாகரத் திரட்டு 1917ல் கர்ணாமிர்த சாகரம் என்ற நூலையும் ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்டார்.
1942ம் ஆண்டிலிருந்து,அடிகளார் முழுக்க முழுக்க இசையில் ஈடுபட்டார்.

வங்கியம் 1942
,சங்கீதபாரிஜாதம்,1942,
நட்டபாடைப் பண்ணின் எட்டுக் கட்டளைகள்,1942,
பாரிஜாதவீணை-1944
நீரரமகளின் இன்னிசைப்பாடல்,
பண்ணும் திறனும்,
குழலும் யாழும்,
எண்ணும் இசையும்,
பாலைத்திரிபு,
சருதிவீணை,
இயலிசை நாடகம் போன்ற அவரது கட்டுரைகள் இசைபற்றிச் சிந்தித்தமைக்குஉதாரணங்களாகும்.

-இசையை அறிய,இசை அறிவு,கணித அறிவு,தமிழ் அறிவு.என்ற மூன்றும் தேவை.
-யாழ்நூல் சங்கஇலக்கியங்களையும்,சிலப்பதிகாரத்தையும்,தேவாரங்களையும்.ஆதாரமாகக்கொண்டு,தமிழரின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக இனம் காண முயல்கிறார்.
-பாயிரவியல்,யாழுறுப்பியல்,பாலைத்திரிபியல்,பண்ணியல்,தேவாரவில்,ஒழிபியல்.சேர்க்கை என்ற பகுதிகளாக இன்னூல் வகுக்கப் பட்டுள்ளது.

வில்யாழ்,பேரியாழ்,மகரயாழ்,சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ்,சகோடயாழ், என்ற பல வகைகளச் சொல்கிறார்.

இசை நரம்பகளின் சிற்றெல்லை, பேரெல்லை, என்பன கூறப்படுகின்றன.

‘யாழ்’நூல் நூல் எழுத்துப் பணியை பதினான்கு வருடங்கள்(1933-1947) இடைவிடாத ஆய்வுகளுடன் தொடந்திருக்கிறார்.இப்பணி ஆரம்பிப்பதற்கான காரணத்தைப் பின் வருமாறு சொல்கிறார்.

‘1936ம் ஆண்டு, மாசித்திங்களில் பழந்தமிழரின்,இசை சிற்பம்,கலையறிவு என்னும் பொருள் பற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் ஆறு விரிவுரை செய்தேன்.அவ்விரிவுரைகள் பல்கலைக் கழகத்துப் பட்டி மன்றத்திலே (செனேட் ஹவுஸ்) ஆங்கில மொழியில் நிகழ்ந்;தன. பிற மொழியாளர்களும் பலர் வந்து கேட்டார்கள்.எல்லா விரிவுரைகளும் இந்து என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தன. அவற்றைக் கண்ட அறிஞர் பலர் ஆங்கிலத்திலே நூலுருவாக்கித்தரச் சொல்லிக் கேட்டார்கள்.ஈழ நாட்டிலே ஸ்ரீஇராம கிரு~;ண சங்கத்துப் பாடசாலைகள் பதினேழினை நடாத்தும் பொறுப்பு என்முழு நேரத்தையும் பற்றினமையினாலே, இசையாராய்ச்சி ஓரளவுக்குத் தடைப்பட்டு நின்றது.

புpன்பு,திருமடத்துப் பெரியார்கள் இமயமலைச் சாரலிலுள்ள அத்துவைத ஆச்சிரமத்திற்குச் சென்று’புpரபுத்த பாரதா’ என்னும் ஆங்கில மாத வெளியீட்டினுக்கு ஆசிரியராகவிருக்கும்படி பணித்தார்கள். துமிழ்த் தொண்டு செய்தற்கு வேண்டிய வசதி இமயத்திலேற்பட்டது.மலைமகளாகிய எம்பெருமாட்டியின் திருவருளினாலே இசையாராய்ச்சியும் ஒருவாறு நிறைவேறியது.வெளியிடும் காலமும் வந்து கூடியது.

எனது பிரிய நண்பரும் கோனூர் சமிந்தாரும் ஆகிய திருவாளர்.பெ.ராம.ராம. சிதம்பரம் செட்டியார் அவர்கள் இந்நூல் சிறந்த முறையில் வெளிவருவதற்கான எல்லாஞ்செய்தார்கள்.திருக்கொள்ளம்பூத்துர்த் திருப்பணிசெல்வராகிய கந்தையாரைப்போல அறிவும், ஒழுக்கமும், அறம் வளர்க்கும் சிந்தையும் வாய்க்கப்பெற்ற இத்தமிழ் அன்பர் சௌந்தரநாயகி சமேதவில்வனநாதருடைய திருவருளினாலே எல்லா நலன்களும் எய்தப் பெற்று நீடுழிவாழ்வாராக’ ( யாழ் நூல் பக் 78)சித்திரபானு ஆண்டு ஆனித்திங்கள்: விபுலானந்தர்.’

முத்தமிழ் வித்தகர் என்ற உலகுக்கு அறியப் பட்ட, விபுலானந்த அடிகளார்pன் இசை ஆர்வம், நாடகப் பணி,சமூக சிந்தனை போன்ற பல அம்சங்கள்தான் அவரின் யாழ் நூல் என்ற நூலை ஒரு மிக மிக முக்கியமான நூலாகத் தமிழருக்கு எழுதுவதற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். தனது அரும்பெரும் ஆய்வு நூலான’ யாழ் நூலை’ ஏன் எழுதினார் என்ற எனது கேள்விக்குப் பதில் தேடியபோது கிடைத்த தகவல்கள் இங்கு பதிவாகியிருக்கின்றன..

முத்தமிழ் வித்தகர் ‘யாழ்’நூலை எழுதியதற்கு, இசையில் உள்ள ஆர்வம் மட்டுமல்ல, தமிழரின் தொன்மையையும் நாகரீக மேன்மையையும் உலகத்துக்கு எடுத்தியம்புவதும்,தமிழனை விழிக்கப் பண்ணுவதும் காரணங்களாகவிருக்கலாம் என்பதற்கு அவர் யாழ் நூலில் எழுதியிருக்கும் அற்புத விளக்கங்கள் சான்று பகர்கின்றன.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a comment