Monthly Archives: August 2014

‘கற்புடைய விபச்சாரி’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் “நானென்ன லண்டன் மாப்பிள்ளை இல்லையெண்டா அழுதன், நல்ல இடம், லண்டனில் படிக்கிற பெடியன் எண்டெல்லாம் புழுகி, இப்படி என்ரை வாழ்க்கையை அநியாயமாக்கிப் போட்டினம், ஊரில் ஒரு ஏழையைச் செய்துபோட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம்.” டொக்டர் சாந்தி தன் முன்னால் உட்கார்ந்திருக்கும் புவனேஸ்வரியை எடைபோடுகிறார். புவனேஸ், டொக்டர் சாந்தியின் சொந்தக்காரப்பெண் ஒருத்தியின் சிநேகிதி. சொந்தக்காரப்பெண், சாந்திக்கு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பயணிகள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன் 1999 ‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்ரர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸசில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக் கைகொடுத்து அவள் பஸ்சில் ஏற உதவி செய்தாள். அந்த ஆங்கிலேய மூதாட்டி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்,அவளுக்கு எழுபது வயதாகவிருக்கலாம். சுரக்கம் விழுந்த முகத்தோற்றம். மழையோ குளிரோ,வீட்டுக்கு வெளியே போகும்போது,ஆங்கிலேயப் பெண்கள் எந்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

மீண்டும் மீண்டும் மனச்சாட்சியை உறுத்தும் மே பதினெட்டு!

தமிழ் மக்கள் நினைவுகளை சோகத்தில் ஆற்றி கண்ணீரை வரவைக்கும்  ஐந்தாவது மே பதினெட்டும் வந்து போய்விட்டது. ஆனால் இன்றும் எம் கண்களில் நீர் வற்றவில்லை. இன்னும் அழுதபடி பல கேள்விகழுக்கு பதில் தெரியாது தவித்து நிற்கிறோம்! இன்னமும் ஞாபகம் இருக்கிறது! லண்டன் பாராளுமன்ற வளவில் 2009 மே மாதம் நாம் அனைவரும் எந்தவித இயக்க, மத, … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பாதை தவறிய பைத்தியம்’

‘பாதை தவறிய பைத்தியம்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆறு மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடந்து வந்தாள். வைகாசி மாதமென்றபடியால்,ஆற்றில் பெரிய வெள்ளமில்லை.ஆறு ஒடுங்கிய கரைகளில்,உயர்ந்து  வளர்ந்திருந்த நாணல்களுக்கிடையில் பல்நுர்றான கொக்குகள் தங்கள் கழுத்தை வெட்டி வெட்டிக் குனிந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தன. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அசோகனின் வைத்தியசாலை’

நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளி என்ற விதத்தில்,இவரின் நாவல் பற்றிய … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment