-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: July 2015
‘ஓரு சரித்திரம் சரிகிறது’
கனடா,’தாயகம்’ பிரசுரம் 11.2.1994. அந்த ஆச்சிக்குக் கிட்டத்தட்ட எண்பது வயதிருக்கலாம்.அல்லது அதற்குக் கூடவும் இருக்கலாம்.அவள் தனது பேரக் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லும்போது தனது பழைய கால அனுபவங்களையும் சேர்த்துக் கதையாகச் சொல்வாள்.அப்படி அவள் சொல்லும் அவளின் அனுபவரீதியான கதைகளுக்கு எத்தனை வயது என்று பார்த்தால்,அவi எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளாக இருக்கும். 1917ம் ஆண்டு … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘மிஸ்டர் டெய்லர் அன்ட் மிஸஸ் குமார்’
‘இந்தியா டுடேய்’ பிரசுரம்- பங்குனிமாதக் குளிர் காற்று காதைத்துளைத்துக் கொண்டு உடலின் இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது கம்பளிக் கையுறைகளை போட்டுக்கொண்டாள்.கம்பளி மவ்ளரால் காதை மறைத்துச் சுற்றிக் கொண்டாள்.கால்களுக்குக் கம்பளிக் காலுறைகளைப் போட்டுக்கொண்டாள். தள்ளுவண்டியில் அமர்ந்து, தன் பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் திருமதி குமாரின் பேத்தியான அனுஷா. மூன்று வயதான … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘ஏழையின் பாதை’
சிந்தாமணி பிரிசுரம். இலங்கை 1971.; ஊதல் காற்று உடம்பைத் துளைத்தெடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு போர்வையை-அது வீட்டில் படுக்கும்போதும், வெளியில் போகும்போதும் பாவிக்கும் ஒரே போர்வையை மூடிக்கொண்டு முருகன் நடந்தான். கிரவலும் களியும் கலந்த ரோட்டில் விரைவாக நடப்பது சிரமமாகவிருந்தது. தூறிக்கொண்டிருப்பது சாதாரண தூறல்தான்.எனினும்,நேற்றுவரை பெய்தது பெருமழை. அதனால் பாதையெல்லாம் சதக் சதக் என்றிருக்கிறது. அவசர … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
மனித உரிமைகள்’
லண்டன் ‘பனிமலர்’; பிரசுரம்- 1991 டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.. உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய வைத்திய விளக்கங்களை அந்த டாக்டர் அமைதியாகச் சொல்வதை ஒரளவு கிரகித்துக்கொண்ட அவனது தந்தையின் கண்கள் நீர்க்குளமாவை அவன் அவதானிக்கிறான்.அவனது இதயம் வெடிக்கும்போல் வேதனை அழுத்துகிறது. ஓன்றாகப் பிறந்த நான் படும்பாடு … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘ஓரு முற்போக்குவாதி காதலிக்கிறான்’
லண்டன் 1995: டெலிபோன் மணியடிக்கிறது. நித்தியா நேரத்தைப் பார்த்தாள். இரவு பத்து மணியைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. அது ‘அவனாகத்தான’ இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். ‘குட் நைட் சொல்ல எடுத்தன்’ என்று அன்பு வழியச் சொல்வான். அவள் டெலிபோனை எடுக்காமற் படுத்திருந்தாள். டெலிபோன் ஆறுதரம் அடித்தபின் ஆன்ஸர் மெசினுக்குப்போகும். அவன்- குமார்-ஒருகாலத்தில் அவளது அன்புக்கும் காதலுக்கும் உரித்தாகவிருந்தவன்,இன்று … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment