Monthly Archives: December 2014

‘நாடகங்கள் தொடரும்’

பாரிஸ்- 1997 இடம்- உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் பெருவீதி.காதலுக்கும்,மனிதனின் நுண்ணிய உணர்வுகளின் பரிணாமத்தை விளக்கவும் மிகவும் சிறந்த தென்ற ஒரு மொழியைத் தனதாக்கிக்கொண்டதுமான நகரமிது.உலகிலுள்ள எந்த மூலையிலுள்ள கலைஞரென்றாலும், தன் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தரிசிக்கவேண்டும் என்று தவிக்கும் தாபத்தைக் கொடுக்கும் கட்டிடக்கலையில்,பெயர் பெற்றது. காதலர்களின் சொர்க்க பூமி என்று … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

நேற்றைய விரோதிகள்- இன்றைய நண்பர்கள்: புதிய உறவுக்குள் நுழையும் அமெரிக்காவும் கியுபாவும்

  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –மார்கழி 2014 அண்மையில்,(17.12.14),அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா விடுத்த அறிக்கையின்படி,கடந்த அரைநூற்றாண்டுகாலமாகப் பரமவிரோதியாகவிருந்த இரு நாடுகள் புதிய நட்புறவைப் பேணப் போவதாக அறிவித்தார். அரசியல சதுராட்டத்தில் நிரந்தர நண்பர்களம் கிடையாது. நிரந்தர விரோதியும் கிடையாது என்பது பலரறிந்த விடயம்.அதிலும் அமெரிக்கா யாருடன் எப்போது உறவு கொள்ளும் எப்போது தங்கள் உறவை அவர்களிடமிருந்து … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘என் வீடும் தாய்மண்ணும்” (சிறு கதை)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 27.03.96 இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின. ‘இது என்வீடு,நான் பிறந்த வீடு,இனிய நினைவுகளுடனும்,உணர்வுகளுடனும் நான் வளர்ந்த வீடு, இந்த வீட்டை விட்டு எப்படிப்போவேன்?’ இப்படி எத்தனையோதரம் தன்னைத்தானே கேட்டுவிட்டாள் இலட்சுமியம்மா. அவளுக்கு இப்போது எழுபது வயதாகிறது. ‘எந்தையும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

தமிழ் மொழியின் எதிர்காலம்

ஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும்; தரகனாக வேலை செய்கிறது. தரகன் என்பவன் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவன். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அவன் ஒரு இனவாதி ? ‘

‘ லண்டன் 1993. ‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு வாங்கியது. செந்தூரனுக்கு கடந்த சில நாட்களாகத் தடிமலும் காய்ச்சலும். லண்டன் சுவாத்தியத்தில்; எப்போது தடிமல்,காய்ச்சல்வரும் என்று சொல்ல தெரியாது. வீட்டுக்கு வரும் அழையாத விருந்தாளிகளாகத் தடிமலும் இருமலும் லண்டனில் வரும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment