‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’

‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 30.1.22

அண்ணா நகர் தமிழ்ச்சங்கத்தின் 370வது மெய்நிகர் காணொலிக் கூட்டத்திற்கு,’பிரித்தானியாவில் தமிழர் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்’ என்ற தலைப்பில் என்னை இன்று பேச்சாளராக அழைத்த அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கத்தினருக்கும்,தலைமை தாங்கும் புலவர் திரு.இராமலிங்கனார்,வரவேற்புரை வழங்கிய,செயலாளர்,அரிமா,முனைவர் திரு துரை சுந்தரராயுலு, கூட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு.த.கு.திவாகரன் புரவலர்,நன்றியுரை வழங்கவிருக்கும் சேவைச் செம்மல்,பொருளாளர் திரு கோ.ஞானப்பிரகாசம்,அத்துடன் இங்கு வந்திருக்கும் அத்தனை பேருக்கும், எனது தாழ்மையான வணக்கங்கள்.

இக்கட்டுரை இலங்கைத் தமிழர் எக்கால கட்டத்தில் என்ன காரணங்ளால் பிரித்தானியாவுக்கு வந்தார்கள் என்பதைச் சொல்வதுடன்,அதன் பின்னணியாகப் பிரித்தானியாவுக்கு வந்திறங்கிய பல நாட்டு அகதிகள் பற்றியும், இலங்கைத் தமிழர்கள் பல கால கட்டங்களில் புலம் பெயர்ந்து கொண்ட பல சரித்திர ஆய்வுகளையும் முன்வைக்கிறது.அதனால் இக்கட்டுரையில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த மக்களான தமிழர் மட்டுமன்றி பல நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த வேறுசில குழுக்கள் பற்றிய ஆய்வும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் பின்னணி விளக்கங்கள்; பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும்,வாழ்க்கை மாற்றங்களும் புதிய சூழ்நிலையில் எப்படித் தொடர்கின்றன என்பதைப் பன்முகக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள உதவும் என நினைக்கிறேன்;.

பிரித்தானிய நாட்டுக்கு. அகதிகளாகவும், வேறுபல காரணங்களாலும் மிக நீண்ட கால கட்டங்கள் பல நாடுகளிலிருமிருந்து வரும் மக்களைப் பற்றியும் இக்கட்டுரையில் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

1.பொருளாதார மேம்பாட்டடைப் பெருக்குதல்

2. ஆங்கிலக் கல்வி

3. பாதுகாப்பு

2021ம் ஆண்டு கணிப்பின்படி பிரித்தானியாவில் 6.8 கோடி மக்கள் வாழ்கிறார்கள். சிறுபான்மை மக்களாக 14 விகிதமிருக்கிறார்கள். இருக்கிறார்கள். இந்திய உப கண்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 வீதத்திலிருக்கிறார்கள்.;இலங்கைத் தமிழர்களின் தொகை 200.000-300.000 இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

கிட்டத்தட்ட உலகத்திலுள்ள 195 நாடுகளிலுமிருந்து வந்த மக்கள் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள். 330 மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இவர்கள்.பிரித்தானிய கொமன்வெல்த் நாடுகளாக 54 நாடுகள் பிரித்தானிவுடன் பல்லாண்டுத் தொடர்புடையன.அந்நாடுகளிலிருந்தும் பல காரணங்களாலும் மக்கள் பிரித்தானியாவை நாடுகிறார்கள்

தாங்கள் பிறந்த இடத்தை விட்டுப் பல காரணங்களால் மக்கள் வௌ;வேறு நாடுகளுக்குச் செல்வதும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் ஆதிகாலம் தொட்டு தொடரும் நிகழ்வாகும்.அதுவும் கடந்த நூற்றாண்டில,உலகம் பரந்த அளவில் நடந்த பல அரசியல் மாற்றங்களால் மக்கள் மிகப் பெரிய தொகையில் தங்களின் தாய் மண்ணைப் பிரிவது சகஜமாக நடந்து கொண்டிருக்கிறுது. அவர்கள் தாங்கள் புலம் பெயர்ந்த இடங்களிலும் தங்கள் பாரம்பரிய கலாச்சார, சமய, பண்பாட்டு விழுமியங்களைத் தொடர்ந்து பேணிப் பாதுகாத்து வாழ்கிறார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியத் தமிழர்கள் பிரித்தானியர் காலத்தில் அவர்களின் கூலிகளாக,இலங்கை,தென்னாபிரிக்கா,மலேசியா,பர்மா போன்ற பல இடங்களுக்கம் கொண்டு செல்லப் பட்டார்கள்.

பிரன்ஸ் காலனித்துவ வாதிகளும் இந்தியத் தமிழர்களைத் தங்கள் காலனித்துவ நாடுகளுக்குக் கொண்டு சென்றதும் நடந்திருக்கிறது. கிறிஸ்டோப் கில்மோடோ என்பரால் எழுதப் பட்ட1931ம் ஆண்டுக் கணிப்பின்படி 1.5 மில்லியன் இந்தியத் தமிழர்கள் பிரித்தானியாவின் காலனிகளுக்குக் கொண்டு சொல்லப் பட்டார்கள் என்று சொல்லப் படுகிறது.

சென்ற இடங்களிலிருந்த பல நெருக்கடிகளால் அவர்களின் பூர்வீக வாழ்க்கை முறை புலம் பெயர்ந்த இடங்களில் புதிய பரிமாணங்களை எடுத்தன. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அவர்களைத் தமிழர்களாகத் தங்களை அடையாப் படுத்திக் கொண்டாலும் தமிழ் மொழியின் பாவனை குறைந்து கலாச்சாரம் சார்ந்த திருமண, சமயச் சடங்குகள் மட்டும் அவர்களுடன் தொடர்கிறது.

இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்களிடம் தமிழ்மொழி இன்னும் நிலைத்து நிற்கிறது. அதற்குக் காரணம் தாய் நாடான இந்தியாவுடனிருந்து தொடர்பும், தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையுடன் கலந்த தமிழ் சினிமா கலை கலாச்சாரம் என்பனவும் காரணங்களாகும். அங்கு 240 தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றன.தமிழில்ப் படித்து உத்தியோகம் பெறும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

இலங்கைத் தமிழர்கள்,பிரித்தானியர் காலத்தில் மலேசியாவுக்கு அழைத்துச் சென்ற இந்தியத் தமிழர்களுக்குக் கங்காணிகளாக பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் சென்றிருக்கிறார்கள். ஆந்த இலங்கைத் தமிழர்களின்; தொடர்பும் இன்றும் இலங்கையிலுள்ள உறவினர்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1960 ம் ஆண்டிலிருந்து இலங்கையிலிருந்தும் பல கால காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியா மட்டுமல்லாது.பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.பிரித்தானிய காலனித்தவ நாடுகளான நையீரியா, செம்பாவுவே போன்ற நாடுகளுக்கு 1960ம் ஆண்டுகளிலேயே ஆசிரியர்கள், மருத்துவத்தாதிகளாகச் சென்றிருக்கிறார்கள்.

பிரித்தானியாவுக்கு வந்த பெருவாரியான தமிழர்கள் இலங்கை அரசியல் நிலை காரணமாகப் பல கால கட்டங்களில் பிரித்தானியாவுக்;கு வந்தவர்கள். 1948-62; ஆண்டுவரை நடைமுறையிலிருந்த பிரித்தானிய குடியுரிமைசட்டத்தின்படி, பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலிருந்து அந்தக் குடிமக்கள் யாரும் பிரித்தானியாவில் வந்து குடியேறலாம் என்றிருந்தது. அதன்பின் குறிப்பிட்டவர்கள் மட்டும் வருவதற்கு அதாவது, பிரித்தானியருக்குத் தேவையான வேலைகளைச் செய்யும் தகுதியுள்ளவர்கள் மட்டும் வரலாம் என்ற நிலைப்பாடு வந்தது.

இலங்கையில் அரசியல் நிலைகளில் மாற்றங்களும்,அதைத் தொடர்ந்த தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகளும் வந்து கொண்டிருந்தன. 1956ம் ஆண்டு சிங்கள தேசியநலவாதியான திரு சொலமன் டயஸ் பண்டார நாயக்கா அவர்கள் இலங்கையைச்’ சிங்கள மயமாக்கும் திட்டங்களை ஆரம்பித்தார். இதனால் தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள். அவரின் நிலையிலிருந்து சற்றுத் தணிந்து, தமிழ் மொழிக்கும்உரிமை கொடுப்பது போன்ற விடயங்களை முன்னெடுத்தபோது அதைப் பொறுத்துக் கொள்ளாத சிங்களப் பேரினவாதிகளின் கோபத்திற்கு ஆளாகி, 25.9.1959ம் ஆண்டு சோமராமா தேரோ என்ற புத்த பிக்குவின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

அதைத் தொடர்ந்து அவரின் மனைவியான திருமதி ஸ்ரீமாவோ,1960ம் ஆண்டு உலகின் முதலாவது பெண் பிரதமராக இலங்கையில் பதவியேற்றார். அதைப் பொறுக்காத சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சிலர் அவருக்கெதிரான இராணுவச் சதியை 27.1.1962ம் ஆண்டில் தொடங்கித் தோல்வியுற்றார்கள்.

சிங்கள மக்களைத் திருப்திப் படுத்த 1964ம் ஆண்டு, பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால்’சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வரப் பட்டது.

இதனால் ஆங்கிலம் படித்த பல்லாயிரம் மக்கள் வெளியேறினார்கள்.

உலகத் தரப்பில் ‘ஆங்கிலோ ஆசியன்’ என்ற சொல்லப்படும் ‘பேர்கர்’ என்ற இனத்தைச் சேர்ந்த கலப்பு இன மக்கள் காலனித்துவ காலத்தில் தமிழர்கள் மாதிரியே பெரிய உத்தியோக நிலைகளில இருந்தார்கள்.

;

இவர்கள் 1505-1658; ஆண்டுவரை இலங்கையிலிரந்த போர்த்துக்கேயா,;1658–1776.வரை இலங்கையை ஆண்ட டச்சு, 1776-1948 வரை இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர் போன்றேரின் பாரம்பரியத்தைக் கொண்டவர்களாகும். போர்த்துக்கேயர்இலங்கையை விட்டு வெளியேறும்போது போர்த்துக்கேய பிரஜாவுரிமையற்ற,ஆனால் போர்த்துக்கேய கொலனித்துவத்துடன் பணிபுரிந்த யூத மக்களை சிலோனில் விட்டுச் சென்றார்கள். 1964ம் ஆண்டுக்குப் பின் நடந்த மாற்றங்களினால் பல்லாயிரம் வெள்ளையினம் சார்ந்த மக்கள் அவுஸ்திரேலியாவைத் தங்கள் புகல் நாடாகத் தெரிவுசெய்து சென்றார்கள்.,

.இவர்களின் தாய் மொழி ஆங்கிலம். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சோந்தவர்கள்.இவர்களின் கலாச்சாரம் இலங்கை கலாச்சாரத்துடன் இன்றும் பின்னிப் பிணைந்திருக்கிறது.பொப் இசைப்பாடல்கள். பைலா நடனங்கள் பல தரப்பட்ட ‘கேக’; வகைகள் என்பன போத்துக்கேய-ஆங்கிக் கலாச்சாரங்களுடன் இணைந்தவை.

இலங்கை பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் ஒன்றாகவிருந்ததால் தங்களின் நாட்டில் பிரச்சினை வந்தபோது தங்களுக்குப் பாதுகாப்பான நாடாகத் தங்கள் காலனித்துவ தலைவர்களின் நாடான பிரித்தானியாவுக்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வருகை தர ஆரம்பித்தார்கள்.

பிரித்தானியாவில் தமிழர்களின் வருகைக்கு முன் வந்த அகதிகளைப் பற்றிச் சில குறிப்புகள் சொல்லவேண்டும்.அரசியல் பிரச்சினையால் தமிழர்கள் வந்ததுபோல்,

-17ம் நூற்றாண்டில்,பிரான்ஸ் நாட்டில் நடந்த சமயப் பிரச்சினைகளால் கத்தோலிக்க மதத்தை எதிர்த்த யுஹூனொட் என்று சொல்லப்பட்ட,ப்ராn;ஸ் மொழிபேசும்,கல்வினிஸ்ட்ஸ் இனத்தினர் 600 பேர் 1681ல் வந்தார்கள்.அதைத் தொடாந்து 1687ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40.000-50.000 பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்தார்கள்.

இவர்களில் கலைஞர்கள்,நெய்வாளர்கள்,கைக்கடிகாரம் செய்பவர்கள்,வைத்தியர்கள்,பெரிய வியாபாரிகள்,ஆசிரியர்கள்,இராணுவ வீpரர்கள் போன்றோர் பெருந்தொகையானவர்களாகும்.

படித்த தமிழர்களுக்கு பிரித்தானியாவில் வரவேற்பு இருந்ததுபோல் யுஹூகொனொட் எனப்படுவோரையும் பிரித்தானியா வரவேற்றது.

இக்கால கட்டத்தில் ஆங்கிலேயர் பெருவாரியாக அமெரிக்காவுக்குக் குடியேறியதையும் விளங்கப் படுத்தினாற்தான் ஏன் ஆங்கிலேயர் அன்னியர்கள் அகதிகளாகத் தங்கள் நாட்டில் வந்து குவிய உதவினார்கள் என்பது விளங்கும். ஆங்கிலேயரின் அமெரிக்க குடியெற்றம் 1606 தொடங்கியது. அமெரிக்காவில் வேர்ஜினியா என்ற நகரின் ஜேம்ஸ்டவுன் என்ற இடம்தான் பிரித்தானியரின் முதல் இறங்குதளமாகவிருந்தது.

பெரிய நாடான அமெரிக்காவில் பணம்படைத்தல்தான் பிரித்தானியரின் புலம் பெயர்தலுக்கு முக்கியகாரணமாகவிருந்தது.1619ல் ஆங்கிலேயரின் ‘மேய்பிலாவா’; என்ற கப்பலில் 102,பிரயாணிகள்.30 கப்பல் வேலையாட்களும 66 நாள் மிகவும் கடுமையான சோதனைகள் நிறைந்த பிரயாணத்தைத் தொடங்கினார்கள்.

அதன் பின் அமெரிக்க பூர்வீக குடிகள் அழிக்கப் பட்டு அமெரிக்கரும் ஐரோப்பியரும் ஆளுமை செலுத்தினார்கள்

1770லிருந்து கப்டன் குக் என்பவரின் அவுஸ்திரேலியாவின் ‘பொட்டனி பெய்’ -சிட்னி என்ற இடத்திலிருந்து ஆங்கிலேய காலனித்துவம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து, பிரிட்டனில் குற்றம் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப் பட்டார்கள்.அதன் பின் நாளாவட்டத்தில் விருத்தியடைந்த பிரித்தானிய காலனியாக மாறியது.

பிரான்ஸ் புரட்சி 1789-1793 வரை நடந்த காலத்தில்,அரச குடும்பம்,பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் பிரித்தானியாவுக்குள் தஞ்சம் கேட்டு வந்தார்கள்.

1848;ம் ஆண்டு காலத்தில்,ஐரோப்பா முழுவதும் பல இடங்களில் புரட்சிப் போராட்டங்கள் ஆரம்பமாயின் அதைத் தொடர்ந்து,ஜேர்மனி இத்தாலி,ஆஸ்ட்ரோ -ஹங்கேரியன் பேரரசு போன்ற இடங்களிலிருந்து வசதியுள்ள பல்லாயிரம் மக்கள் ஓடிவந்தார்கள்.

1847-1855 கால கட்டத்தில்,பிரித்தானியாவின் காலனித்தவ நாடாகவிருந்த அயர்லாந்தில் பட்டினிக் கொடுமை தாங்காமல்,300.000 மக்கள் வந்தார்கள்.இவர்கள் ஏழைகள். லண்டன் நகரையண்டிய சேரிகளிலேயே கூலிவேலை செய்து வாழும் நிலை ஏற்பட்டது.

பலகாலமாகவே பல காரணங்களால் யூதமக்கள் பிரித்தானியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

1881ல் இர~;ய ~hர் மன்னர் இரண்டாம் அலெக்~hண்டர் கொலை செய்யப் பட்டார். ஆதைத் தொடாந்து யூமக்களுக்கெதிரான இனவாதம் இர~;யாவில் தலையெடுத்தது. அதனால் கிட்டத்தட்ட 2கோடி யூத மக்கள் பிரித்தானிய காலனித்துவ நாடான அமெரிகர்வுக்கும், பிரித்தானிய லண்டனையண்டிய பகுதிகளில் குடியேறினார்கள்.இர~;யாவிலிருந்து வந்த சிலரை’கலகக்காரர்களாக’மதித்த பிரித்தானியாவிலிருந்த யூதமக்களின் கவுன்சில் திருப்பியனுப்பியது.

இதேகாலகட்டத்தில் 1861 தொடக்கம் 1901 வரை,பிரித்தானியாவிலுள்ள தெற்குக் கடற்கரைப் பிதேசமான கோர்னிஸ் என்ற இடத்திலுள்ள கனிவள சுரங்களில் வேலையிழந்த மிகவும் ஏழ்மையான ஆங்கிலேயர் கிட்டத்தட்ட 250.000 அளவில் அமெரிக்கா சென்றார்கள்.மக்கள் பல காரணங்களால் புலம் பெயரும்போது மிகவும் பணக்கார நாடென்று பெயர் பெற்ற பிரித்தானியாவும் விதி விலக்கல்ல என்பதை விளக்கவே இதைப் பதிவிடுகிறேன்.

1905ம் ஆண்டு,இப்படி வந்து பிரித்தானியாவில் குவிபவர்களைப் பற்றிய சட்ட திட்டங்கள் உருவாக்கப் பட்டன.

1917ம் இர~;யப் புரட்சிக்குப் பின்னர் 1920ம் ஆண்டுவரை இர~;ய உயர்வர்க்கத்தினர் கணிசமான தொகையில் இங்கிலாந்துக்கு அகதிகளாக வந்தார்கள்.

ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் பேரரசு,இரஸ்ய பேரரசு,ஜேர்மன் பேரரசு,துருக்கியஓட்டமான்பேரசு போன்றவற்றின் உருக்குலைவுகளும், முதலாம் உலக யுத்தத்திற்கு வித்திட்டன. பல கோடி மக்கள் அகதிகளாக்கப் பட்டார்கள்.உலக நாடுகள் சேர்ந்த அகதிகள் அமைப்பை அமைத்தனர் (Pகடுநயபரந ழக யேவழைளெ வழ உசநயவந வாந pழளவ ழக ர்iபா ஊழஅஅளைளழைn கழச சுநகரபநநள)

இரண்டாம் உலக யுத்தம் 1939ம் ஆண்டு ஆரம்பித்தது. அதற்கு முதலே யூத மக்களுக்கெதிரான வன்முறை ஜெர்மனியில் ஹிட்லரால் தொடங்கியது. அக்கால கட்டத்தில கிட்டத்தட்ட 100.000 யூதமக்கள் ஹிட்லரின் கொடுமையைத் தாங்காமல் ஐரோப்பாவின் நாடுகளான பெல்ஜியம்,ஹொலண்ட்,ஜேர்மனி போன்றவற்றிலிருந்து வந்தார்கள்.1945ம் ஆண்டில் தொடர்ந்த இரண்டாம் உலகப் போர் காலத்தில் போலாந்திலிருந்து 250.000 மக்களும் பிரித்தானியாவுக்க வந்தார்கள்.

அதன்பின்,ஹிட்லரின் நாஸிஸம்,ஸ்பெயினில் ப்ராங்கோவின் பாஸிஸம் போன்றவற்றின் செயற்பாடுகளும் வளர்ந்தன.இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது.

40.கோடி மக்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தால் அகதிகளானார்கள். ஆகதிகளுக்கான ஒரு பிரிவு ஐக்கிய நாடுகள் சபையில் உண்டாக்கியது.(வுhந ருnவைநன யேவழைளெ சநடநைக யனெ சுநாயடிடைவையவழைn யுனஅinளைவசயவழைn கழச சநகரபநநள (ருNசுசுயு- ழுககiஉந ழக வாந ருnவைநன யேவழைளெ ர்iபா ஊழஅஅளைளழைநெச கழச சுநகரபநநள-ருNர்ஊசு).இதை அமைக்க,பல நூற்றாண்டுகளாக அகதிகளுக்குதவும் பிரித்தானியா முன்னணியில் இருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின்; கொடுமைகளின் எதிரொலியாக பல்லாயிரம் மக்கள் ஐரொப்பிய நாடுகளிலும் பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலிருந்து அகதிகளாக 90.000 வந்தார்கள்;. பிரித்தானியாவில் 265 அகதி முகாம்கள் உருவாக்கப் பட்டன.

அவர்களை அகதிகளாக ஏற்றக்கொள்ளும்; நெறிமுறைகள் தேவையாகியது. உலகின் 26 நாடுகள் ஒன்று சேர்ந்து, யூலை 1951ம் ஆண்டு, பல காரணங்களால் தாங்கள் பிறந்த நாட்டில் வாழப்பயந்து அகதியானவர்கள்’ என்ற கருத்து நிறுவப் பட்டது.அவர்கள் மற்ற நாடுகளில் தஞ்சம் கேட்கலாம் என்ற கட்டுமானம் உருவாக்கப் பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தின்பின் அரசாங்கம் சாராத பல அமைப்புக்கள் அகதிகளுக்குதவ பிரித்தானியாவில் அமைக்கப் பட்டன.இவர்கள் அகதிகளாக வந்த கிட்டத்தட்ட 250 000 பெல்ஜியன் அகதிகளுக்கு உதவினார்கள்.

1956ல் ஹங்கேரி நாடு இவர்களை அடிமைப் படுத்தி வைத்திருந்த இர~;யாவுக்குக்கெதிராகக் கொதித்தெழுந்ததால் 30.000 மக்கள் புடாபெஸ்ட் என்ற அவர்களின் தலைநகரில் கொல்லப் பட்டார்கள்.

1972; ஆண்டு புரட்டாதி மாதம் உகண்டா ஜனாதிபதி,இடி அமின் கொடுமையால்,28.000 இந்தியர்கள் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். வெள்ளையினவாதிகள் இந்தியர்களுக்கு எதிராகப் பல இடங்களில் தங்கள் எதிர்ப்புக்களைக் காட்டினார்கள.

1974ம் ஆண்டு; துருக்கிய நாடு சைப்பிரஸ் என்ற நாட்டைப் பிரித்ததால் பல 10.000 சைபீரிய கிரேக்க மக்கள் பிரித்தானியாவுக்கு வந்தார்கள்.

1974-76 கால கட்டத்தில் தென் அமெரிக்க சிலி நாட்டின் ஜனாதிபதி பினசே அவரின் எதிரிகளான இடதுசாரிகளை வேட்டையாடத் தொடங்கியதால் பலர் அண்டை நாடுகளுக்கு ஓடினார்கள்.அவர்களை அன்றிருந்த கொனசர்வேட்டிவ் கட்சி அரசு பாராதிருந்தது. அதையடுத்து வந்து தொழிற்கட்சி அரசு கிட்டத்தட்ட 3.000 பேரை அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

1979-83 கால கட்டத்தில் வியட்நாம்-அமெரிக்கருக்கிடையே நடந்த போரினால், பல்லாயிரம் அகதிகள் பல்லிடமும் சென்றார்கள். வியட்நாம் பிரித்தானிய காலனித்துவ நாடாக இல்லாவிட்டாலும், பிரித்தானிய கொலனியான ஹொங்ஹொங்கில் தஞ்சமடைந்திருந்த 10.000 அகதிகளை ஏற்றுக் கொண்டது.அக்கால கட்டத்தில் அகதிகளாக வரும் வெளிநாட்டினரை எதிர்க்கும குரல்கள் பிரித்தானிய இனவாதிகளிடமிருந்து வந்தது.

அப்போது,பிரித்தானியாவுக்கு வந்த மூத்த தலைதுறையினரான திரு. அருளம்பலம் சிவானந்தன் என்ற எழுத்தாளர் ஒரு நேர்காணலில் ‘ நீங்கள் ஒரு காலத்தில் எங்கள்நாட்டுக்கு வந்த படியால்,நாங்கள் உங்கள் நாட்டுக்கு இன்று வந்திருக்கிறோம்’என்ற பழமொழியைச் சொல்லிக் கிண்டலடித்தார்.

இலங்கைத் தமிழர்களின் பிரித்தானிய வருகை பிரித்தானியா இலங்கையை ஆண்டு கொண்டிருந்தபோதே ஆரம்பித்தது. பிரித்தானிய காலனித்துவத்தின ;கீழிருந்த பல நாடுகளிலுமுள்ள ஆங்கில மேற்படிப்பை நாடி வாழ்க்கையில் பெரிய நிலையிருந்த குடும்பத்து ஆண்கள் பிரித்தானியாவுக்கு வருவத மிகவும் சாதாராண விடயமாகவிருந்தது.

வெளியிலிருந்து வரும் காலனித்துவ நாட்டசை; சோந்தவர்கள் பற்றிய பிரித்தானிய குடியுரிமைச் சட்டம் 1981ம் ஆண்டு மாறியது. மாணவர்களாவும் உத்தியோகத்தர்களாகவும் வருபவர்களுக்கு அனுமதி கிடைப்பது குறையத் தொடங்கியது. இலங்கைப் பிரச்சினையால் இலங்கைத் தமிழர்களுக்குப் பல பிரச்சினைகள் ஆரம்பித்தன.

83ம் ஆண்டு இனக் கலவரத்தின்பின் இலங்கைத் தமிழ் அகதிகள் பெரிய அளவில் பிரித்தானியாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

அகதிகளாக வந்த தமிழர்களையும்,எங்கள் போன்றவர்களின் போராட்டத்தால் பிரித்தானியா ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எதிர்த்து 1982ம் ஆண்டில் எனது தலைமையில் ‘தமிழ்ப் பெண்கள் மனித உரிமை அமைப்மை’ அமைத்தேன்.அகதிகளாக வந்த தமிழர்களுக்கு எங்கள் அமைப்பின்மூலம் உதவினோம்.1985ல் பிரித்தானியாவில் தமிழ் அகதிக்கான உதவிகள் கிடைக்கும் மாற்றங்கள் வந்தன.

அந்த ஆண்டில் அகதிகளுக்கு உதவ தமிழ் அகதிகள அமைப்பையும் அவர்களுக்கான் வீடமைப்பை அமைப்பையும் அமைத்து மூன்று அமைப்புக்களுக்கும் தலைவியாகவிருந்தேன்.

இன்று பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 200.000-300.000 தொகையளவான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் வாழ்வதாச் சொல்லப் படுகிறது. பெரும்பாலானவர்கள் சைவ சமயத்தைப் பேணுபவர்கள்.சனாதனக் கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர்கள்.ஒரு சிறு பகுதியினர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் பலர் இலங்கையிலேயெ அன்னியர் ஆதிக்க காலத்தில் வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்குச் சமயம் மாறியவர்கள். ஆனால் இன்று புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையில் மதங்கள் மாறுவது நடக்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்த கால கட்டத்தின் பின் 1950-1970 ஆண்டுகளில்; ஆங்கிலம் படித்த இலங்கையர்களான சிங்களவர்களும் தமிழர்களும் பிரித்தானியாவுக்கு வருவது மிகவும் இலகுவான விடயமாகவிருந்தது.

முக்கியமாக பிரித்தானிய சுகாதாரம் அரசு மயப்பட்டதாக,5.7.1948;ம் பின் வைத்திய சேவை மிகவும் விஸ்தரிக்கப் பட்டது.அந்த சேவைக்குத் தேவையான தொகையில் வைத்தியர்கள் இங்கிலாந்தில் இருக்கவில்லை. எனவே இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரம் வைத்தியர்கள் பிரித்தானிய ஐக்கிய நாட்டுக்கு வந்தார்கள்.அவர்கள், பிரித்தானியா ஸ்கொட்லாந்து,வேல்ஸ், வடக்கு அயர்லாந்து போன்ற மானிலங்களில் உள்ள வைத்தியர்களாக பதவி வகித்தார்கள்.

அத்துடன்,ஆசிரியர்கள் வேலைக்கும் இலங்கைத் தமிழர்கள், பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்த ஆபிரிக்க நாடுகளான, நையிரியா, ரொடி~pயா என்றழைக்கப் பட்ட செம்பாவுவே போன்றவைக்குச் சென்றதுபோல் பிரித்தானியாவுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையில் வந்திருந்தார்கள்.அதைத் தொடர்ந்து தாதிமார் பயிற்சிக்கு,இலங்கையில் ஆங்கில் கல்வி கற்ற பல தமிழ்ப் பெண்கள. 60ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து வரத் தொடங்கினார்கள்;.இன்றைய கால கட்டம் மாதிரியே அக்கால கட்டத்திலும் பிரித்தானிய வைத்தியத் துறை வெளிநாட்டவரின் உதவியுடன் இயங்கியது.

இப்படியான பல தகமைகளுடன் .இங்கிலாந்துக்குவந்தவர்களின் உத்தியோக மொழி மட்டுமல்லாமல் பேசுமொழியும் பெரும்பாலும் ஆங்கிலமாகவே இருந்தது.

பிரித்தானியாவின் பல்வேறு இடங்களிலும் பதவி வகித்ததால் ஒரு பெரிய குழுவாகச் சேர்ந்து வாழமுடியவில்லை.

1956ம் ஆண்டுக்குப் பின் இலங்கை அரசியலில் இலங்கையின் தேசிய மொழியாகப் பிரகடனப் படுத்தப் பட்டதால் ஆங்கிலம் படித்த தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள், ஆங்கிலோ-இலங்கையர் போன்றவர்களும் பெருவாரியாக இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

பிரித்தானியாவிலும் வெள்ளையினமற்ற மக்களுக்கெதிரான இனவாதக் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. 20.4.1968ல் இனொக் பவல் என்ற இனவெறி பிடித்த அரசியல்வாதியால்,’வெளி நாட்டவர்களுக்கு எதிராகப் பிரித்தானியாவில் இரத்த ஆறு ஓடப்போகிறது’ என்ற பேச்சு பத்திரிகைகளில் பிரசுரமாயின.

இதனால் பிரித்தானிய மக்களும் வெள்ளையின மக்களின் மிகவும் விருப்பமான அரசியல கட்சியான கொன்சவெர்ட்டிவ் கட்சியை திரு. ஏட்வேர்ட் ஹீத் என்பரின் தலைமையில் ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள்

அக்கால கட்டத்தின் பின் 1970ம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் தொடர் அரசியல் மாற்றங்கள் பெருகின.

இதனால் லண்டனுக்குப் பல தமிழர்கள் குடிபெயர்ந்தார்கள்.

இலங்கைக்குத் திரும்பிப்போவது பற்றிய சந்தேகம்வரத் தொடங்கியதும்,லண்டன தமிழர்கள் தங்கள கலை கலாச்சார விழுமியங்களைப் பிரித்தானியாவில் விதையிட்டார்கள்.

1970ம் ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கு நாடுகளில் முதலாவதாக வந்த தமிழ்ப் பத்திரிகையான’ லண்டன முரசு’ திரு சதானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.இந்தப் பத்திரிகையிற்தான் மேற்குலகத்தில் எழுதப் பட்ட முதலாவது,தமிழ் இலக்கியப் படைப்புகளாக எனது சிறுகதைகள், தொடர் கதைகள் வெளிவரத் தொடங்கின.அதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் மாணவர்களால் பல சிறு பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. ஈழமாணவர்கள் அரசியல் அமைப்பும் தொடங்கப் பட்டது.

70ம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ் மொழியைப் படிப்பிக்கத் தமிழ் பாடசாலை டாக்டர் நித்தியானந்தன்,திரு தாமோதரம்பிள்ளை போன்றவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.

திரு மகரசிங்கம் போன்றர்களால் ‘தமிழ் உரிமை’ (தமிழ் றைட்ஸ்) அமைப்பு உண்டாகியது.

திரு வைரவமூர்த்தி, டாக்டர் நவரெத்தினம்,டாக்டர் சண்முகம் போன்றவர்களால் ‘வளர் தமிழ்’ அமைப்பு உண்டாக்கப்பட்டது.

1981ம் ஆண்டு இலங்கையிலுள்ள மிகவும் பூர்வீக சரித்திரத்தைக் கொண்ட தமிழ் நூலகம் யாழ்ப்பாணத்தில் எரிக்கப் பட்டது. 1982ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தொடந்த கொடுமைகளை எதிர்க்க லண்டன் தமிழ் மகளிர் அமைப்பு அமைக்கப்பட்டு இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைக்குக் குரல் கொடுத்தது.

சுமய வளர்ச்சி-ஹைகேட் முருகன் கோயில்- அதைத் தொடர்ந்து சமயவழிபாடுவிடயங்கள் முன்னெடுக்கப் பட்டன.இதன் சரித்திரம் ஒரு பொது மண்டபத்தில் திருச்செந்தூர் முருக படத்தை வைத்து தமிழ்க் கடவுள் முருகனுக்கு எங்கள் முதல் வணக்கத்தை ஆரம்பித்தோம். அதன் நீட்சியாக வடக்கு லண்டன் ஹைகேட் என்ற இடத்தில் முருகனுக்குக் கோயில் கட்டப் பட்டது. இன்று சிறிதும் பெரிதுமாக 40 கோயில்கள்வரை பிரித்தானியாவில் தமிழர்களின் கோயில்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

கல்வி- பாடசாலைகள்:

முதலாவது தமிழ்ப் பாடசாலை மேற்கு லண்டனில்,திரு.தாமோதரம், டாகடர் நித்தியானந்தன்போன்றோரால் 70ம் ஆண்டின் பிற் பகுதியில் ஆரம்பிக்கப் பட்டது.இன்று பிரித்தானியா முழுதும் பெரிய சிறிய பாடசாலைகளாகக் கிட்டத்தட்ட 140க்கும் மேலான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றன.4 வயது தொடக்கம் 16 வயது வரை பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகிறது.ஆனால் தமிழை பட்டப் படிப்பாகத் தொடர்பவர்கள் தொகை மிகக் குறைவாகும்.

பிரித்தானிய கல்வி கற்பதில் அதி உயர்ந்த படிப்புகளில் இலங்கை மாணவர்கள் இரண்டாம் நிலையிலிருக்கிறார்கள். இலங்கைத் தமிழரின் கல்வி வளர்ச்சி வெள்ளையினத்தவரை ஆச்சரியப்படவைக்கிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினர்; பட்டப்படிப்பை முடித்தவர்கள் டாக்டர்,சட்டத்தரணி.கொம்பியூட்டர் சார்ந்த முன்னிலைப் படிப்புகள், எக்கொனமி சார்ந்த படிப்புகள்,அத்துடன் ஆசிரியர்கள், மருத்துவத் துறைகளான பிசியொ, பார்மசி,நியுட்ரி~ன் போன்றவற்றைச் செய்கிறார்கள்.

பிரித்தானியாவில் பிரமாண்டமான தொகையில் மருத்துவம் சார்ந்த தொழில்களை இலங்கைத் தமிழர்கள் வேலை செய்கிறார்கள்.இந்த அமைப்பு வாழ்க்கை முழுதும் பாதுகாப்பான தொழிலைக் கொடுப்பதால்,இங்கு வேலை செய்வது கடினமானதாகவிருந்தாலும் தமிழர்கள் பலர் இங்கு வேலை செய்வதை விரும்புகிறார்கள்.இதனால் கொரோணா கால கட்டத்தில் பல தமிழ் வைத்தியர்கள், இறந்தது தெரிந்தது.

.

காலச்சார,நடனம்: என்பனவும் இப்பாடசாலைகளிலம் தனிப் பட்டவர்களாலும் பயிற்றப் படுகின்றன. ஒரு வருடத்திற்குக் குறைந்தது, 60 நடன அரங்கேற்றங்கள் என்றூலும் நடைபெறுகின்றன. ஆனால் அக்கலையை வாழ்க்கை முழுதும் தொடர்பவர்கள் சொற்பமானவர்களே இருக்கிறார்கள்.

இலக்கியமும் எழுத்தும்: இந்தியா, இலங்கையைக்கு அப்பால் தமிழ் மொழியைப் போற்றும் நாடாக பிரித்தானியா இருக்கிறது. .இலங்கை,இந்தியாவுக்கு அப்பாலான தமிழ் இலக்கியம் லண்டனில் ஆரம்பிக்கப் பட்டது. புலம் பெயர் தமிழர்களின்; வாழ்க்கையை தாயக மக்கள் விரும்பிப் படித்தார்கள். இதனால் 1981ம் ஆண்டு, எனது ‘ஒரு கோடை விடுமுறை என்ற தமிழ் நாவல் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப் பட்டது. இந்தியத் தமிழர்களுக்கு,இலங்கை இலக்கிய ஆர்வலரான திரு. பத்மனாப ஐயர் அவர்களால் அறிமுகம் செய்யப் பட்டது. 1984ம் ஆண்டு கோவை ஞானி அய்யா என்று பலராலும் மதிக்கப் பட்ட தமிழ் அறிஞர் பழனிசாமி அவர்களின் இலக்கிய விமர்சனத்தில்’ 80களில் தமிழ் இலக்கியத்தின் பெண் ஆளுமைகளில் ஒருத்தராக என்னை அடையாளம் கண்டார்.

லண்டனில்,என்னுடைய’ உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற தமிழ்நாவல் வெளியிடு, 1991ம் ஆண்டுதிருூ ஸ்ரீ கங்காதரன் தலைமையில் பேராசிரியர் சிவசேகரம்,கவிஞர் சேரன்,தமிழ் டைம்ஸ் ஆசிரியர் திரு.இராஜநாயகம்,மற்றும் பல அறிஞர்களின்; விமர்சனங்களுடன் நடைபெற்றது.

1970ம் ஆண்டில் ஆரம்பித்த லண்டன் முரசு பத்திரிகையைத் தொடர்ந்து. புல தமிழ்ப் பத்திரிகைகள் வர ஆரம்பித்தன. இலங்கைத் தமிழ் மாணவர்கள் அமைப்பினரின் பத்திரிகைகள் மாணவர்களிடையே பரவலாகியது. அதைத் தொடர்ந்து,அரசியல்,சமூகநல,சமயம் சார்ந்த பல அமைப்புக்களால் பல சிறு பத்திரிகைகள் வரத் தொடங்கின்.

பி.பி.சி தமிழ்ச் சேவை ஆரம்பத்தில் ஆனந்தி சூரியப் பிரகாசம், சிவபாதசுந்தரம் போன்றவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.அக்கால கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் குரல்கள் உலகம் பரந்து கேட்கப்பட்டன.

1980ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் லண்டன் தமிழர் தகவல் நடுவம் ஆரம்பிக்கப் பட்டது. அதன்மூலம் இலங்கைத் தமிழர் பற்றி பல தரப்பட்ட பத்திரிகைகளும் நூல்களும் வந்தன.அத்துடன அவர்கள் பல தரப்பட்ட ஒன்று கூடல்களையும் நடத்தினார்கள்.

1983ம் ஆண்டுக்குப் பின் பெருவாரியாக அகதிகளாக வந்த தமிழர்களால் பல பத்திரிகைகள் தொடங்கப் பட்டன. புதினம், நாழிகை, அஞ்சல்,அகதி, மீட்சி தமிழன்,தேசம், தமிழ் டைம்ஸ் போன்றவை சிலவாகும். இலங்கைத் தமிழ் அரசியல் சார்ந்த அரசியல் பத்திரிகைகளும் தாராளமாகப் பதிவாகின.

சினிமாவைப் பொறுத்தவரையில்,1986ம் ஆண்டு என்னால் ‘எஸ்கேப் புறம் ஜெனசைட்’ என்ற ஆங்கில டொக்குமென்டரி தமிழர்களின் போராட்ட நிலையை விளங்கப் படுத்த எடுக்கப் பட்டது. அண்மையில் புதியவன் என்பவர் ஒரு குறுப்படம் எடுத்திருக்கிறார். விம்பம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் குறும்படங்கள் லண்டனிற் துரையிடப் படுகின்றன.

அதைத் தவிர லைகா போன்ற லண்டன் தனவந்தர்களால் தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் எடுக்கப் படுகின்றன.

நாடகம்: 1984- இலங்கையில் நாடகக் கலைஞர்களாகப் பிரசித்தி பெற்றிருந்த திரு தாசியஸ், திரு பாலேந்திரா-ஆனந்தராணி தம்பதிகளால் 1980ம ஆண்டின் நடுப் பகுதியிலிருந்து பல நாடகங்கள் அரங்கேறத் தொடங்கின. பல இளைஞர்களும் குழுந்தைகளும் நாடகப் பயிற்சியில் இணைந்தார்கள்.அதில் நீண்டகால நாடக சேவையைச் செய்பவர்களாக பாலேந்திரா-ஆனந்தராணி தம்பதிகளாகும் இவர்களிடம் இதுவரை 250க்கும் மேலான சிறார்கள் இணைந்து பயன் பெற்றிருக்கிறார்கள்.இவர்களிற் பலர் இன்றும் நாடகத்துறையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வானொலி- பி.பி.சி என்ற பிரித்தானிய வானொலியிலன் உலகத் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒன்றாக நடந்து கொண்டிருந்தது.1993ம் ஆண்டு காலகட்டத்தில்; டாக்டர் நித்தியானந்தன் போன்றவர்களால் சன் றைஸ் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப பட்டன.அதைத் தொடர்ந்த பல அமைப்புக்கள் தங்கள் அரசியலைத் தங்கள் வானொலி சேவைகள் மூலம் பிரசாரம் செய்தார்கள்.

டிவி.தீபம் ஆரம்பிக்கப்பட்டது.ஐ.பி.சி.என்ற டி.வி 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இன்று ஆதவன் டிவி போன்ற பல டிவிகள் தமிழர்களின் இரசிப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

வர்த்தகம். தமிழர்களின் பல பெரிய வர்த்தக நிறுவனங்கள் இன்று ஐரொப்பிய நகரங்களை அலங்கரிக்கின்றன. லண்டனும் அதைப் பிரதிபலித்துத் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்கள்.

அரசியல்: பல அரசியல் குழுக்கள் லண்டனில் 1970களிலேயே ஆரம்பிக்கப் பட்டன.அவை பற்றி விரிவாக இன்னொரு தடவை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

வாழ்வியல்:முதியவர்கள் தங்கள் குழந்தைகளோடிருந்தாலும் ஒருகால கட்டத்தில் முதியோர் விடுதிக்குச் செல்லும் நிலை கூடுகிறது.

இளம் தலைமுறையினர் படித்து முடித்த வேலை கிடைத்ததும் தனியாக வாழ்வதை விரும்புகிறார்கள்.

தமிழ் இளம் தலைமுறையினர் சிறிய அளவில் மற்ற இனத்தவர்களைத் திருமணம் செய்கிறார்கள்.

திருமணங்கள் பெரும்பாலும் இளம் வயதினரின் விருப்பப்படியே நடக்கிறது.30 விகித திருமணங்களுடன் தமிழர்களல்லாதவர்களுடன் நடப்பதாகச் சொல்லப் படுகிறது. பெற்றோர்கள் பேசிச் செய்யும் திருமணங்கள் குறைந்துகொண்டு வருகின்றன.

திருமண சடங்குகள் மிகவும் பிரமாண்டமாக நடக்கின்றன. ஆனால் வடக்கத்திய ஆடைகளின் பிரதிபலிப்பு திருமணவரவேற்ப வைபவங்களில் பெரிதாகக் காணப் படுகிறது.

இன்று, இம்மாதம், தமிழ் மரபு மாதமாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ்த் துறையின் தாயிடமான லண்டன் ஸ்கூல’ ஒவ் ஓரியண்டல் ஸ்ரடி என்ற பல்கலைக் கழகத்தில், திருவள்ளுவர் சிலைக்கு முன் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம் நடந்தது. அதே மாதிரி பல தமிழ்ப் பாடசாலைகள், அமைப்புக்கள் தமிழ் மரபு மாதத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இதுவரை இலங்கையிலிருந்து வந்த இலங்கைத் தமிழர்களின் பிரித்தானிய வாழ்க்கையைப் பற்றிய,மருத்துவ மானுடவியலாளராக ஒரு சிறிய பார்வையை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு பெருந்தொகையான அகதிகளாக வந்ததுபோல், இந்த நிமிடமும்,உலகின் பல நாடுகளிலுமிருந்தும் சொல்லவொண்ணாத் துன்பங்களுடன் பல்லாயிரம் அகதிகளாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நாடு,வீடு. உற்றார் உறவினர்களைப் பிரிந்துவந்த துயரத்தைத் தாங்கிக் கொண்டு, பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகளைப் பற்றியும் பதிவிட விரும்புகிறேன்.

ஆபிரிக்க நாடுகள்: பொட்சுவானா,பொக்கீனோ ப்சோ, கேப் வேர்டே,மத்திய ஆபிரிக்கக் குடியரசு,கொங்கொ ஜனநாயகக் குடியரசு,எரிட்ரியா,எத்தியோப்பியா,கானா,கென்யா,லெசோதோ,லைபீரியா,மாலி, நையீரியா, செனகோல்,சொமாலியா,தென்ஆபிரிக்கா,காம்பியா,யுகாண்டா.

மத்திய அமெரிக்கா: கியூபா,டொமினியன் குடியரசு,எல்சல்வடோ,கௌத்தமாலா,ஹெய்ட்டி,ஹொண்டூராஸ்,ஜமேய்க்கா,பனாமா,

மத்தியதரைக்கடற்பகுதி நாடுகள்: எஜிப்து,ஈரான்,ஈராக்,இஸ்ரேல்,ஜோர்டான்,லெபனான்,லிபியா,மொறாக்கோ,கட்டார்,

அரேபியா,சிரியா,ருனிசீயா,ஐக்கிய அராப் எமிரேட்,

தென் அமெரிக்கா:ஆர்ஜென்டினா,பிரேஸில்,சிலி,கொலம்பியா,எக்குவடோர்,வெனிசுவேலா,

ஆசியா அத்துடன் பசிபிக் கடல் நாடுகள்: ஆபுகானிஸ்தான்,ஆர்மேனியா,அவுஸ்திரேலியா,பங்கலதே~;,சீனா,குக் அயர்லாந்து,கிழக்க ரீமோர்,

பிஜி,இந்தியா,இன்தோனேசியா,ஜப்பான்,மைக்ரோனேசியா,மியன்மார்,நேபால்,நியு~Pலண்ட்,வட கொரியா,தைய்வான்,பாகிஸ்தான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,தென் கொரியா,தைவான்,ரஜிகிஸ்தான்,தாய்லாந்து,ரோங்கா,வியட்னாம்.

ஐரோப்பா: அல்பேனியா,ஆஸ்ட்ரியா,பெல்ஜியம், செக் குடியரசு,டென்மார்க்,ப்ன்லாண்ட, பிரான்ஸ்,ஜோர்ஜியா,ஜேர்மனி,கிரேக்கநாடு,ஹங்கேரி,அயர்லாந்து,இத்தாலி,கோசாவோ,நெதர்லாந்து,வட மசடோனியா,நோர்வேய்,போலான்ட்,போர்த்துக்கல்,இர~;யா,ஸ்பெயின்,ஸ்வீடன்.

ஸ்விட்சர்லாந்து,துருக்கி,உக்ரேய்ன்,இங்கிலாந்து,

வட அமெரிக்கா: கனடா,மெக்ஸிக்கோ,அமெரிக்கா

இப்படிப் பல நாடுகளிலிருந்தும் அகதிகளாகவும் அறிவு தேடுபவர்களாகவும்,வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள், கிட்டத்தட்ட 20 நாடுகளில் வாழ்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் அவர்கள் வாழும் நாடுகளின் வாழ்வியல்களோடு பெரும்பாலும் இணைந்து விட்டார்கள். தமிழ் மொழி பேசும் இந்தியத் தமிழர்கள் லண்டனில் வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர்களாற்தான் தமிழின் அடையாளம் பிரித்தானிய மக்களுக்குத் தெரிகிறது. அந்த அளவில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் வாழ்வையும் வளத்தையும் தமிழோடு இணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஏதும் கேள்விகள் இருந்தால் என்னால் முடிந்தவரை பதில் கூற முயற்சிக்கிறேன். ஏனென்னால்,இலங்கைத் தமிழரின் வரலாற்றுடன் மட்டுமல்லாத உலகம் பரந்த நாடுகளிலிருந்த பிரித்தானியாவில் பல காரணங்களால் வந்து குவியும் பன்னாட்டவர் பற்றியும் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன்.

ஏனென்றால் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் இவர்களில் யாரோ ஒருத்தருடன் படிக்கிறார், வேலை செய்கிறார், சினேகிதமாகவிருக்கிறார்,காதல் கொள்கிறார், கலயாணம் செய்கிறார்,பிரித்தானிய வாழ்க்கை மாற்றங்களுக்கு முகம் கொடுக்கம் விதத்தில் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார்.

இதுவரை எனது உரையைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a comment