போர் முரசுகொட்டும்; ஆண்கள் நடுவில் சமாதான தேவதையாகும் ஜேர்மன் அதிபர் ஆங்கிளா மேக்கல்.

Image result for Mrs Angela merkel

இராஜேஸ்லரி பாலசுப்பிரமணியம்.15.02.15.
நேற்;றிரவு பன்னிரண்டு மணியிலிந்து, கடந்த பத்துமாதங்களாகக் கிழக்கு உக்ரேய்ன் பகுதியில் நடந்து கொண்டிருந்த போர்,ஜேர்மன் அதிபர் திருமதி ஆங்கிளா மேக்கலின் இடைவிடாத முயற்சியால் நிறுத்தப் பட்டிருக்கிறது.

உக்ரேயினின் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பாலும் இரஷ்ய மொழியைப்பேசும் மக்கள்,தங்களுக்கு, ஐரோப்பிய இணையத்துக்குள் நுழையத் துடிக்கும் உக்ரேயினின் ஆடசியிலிருந்து,இரஷ்ய மொழிக்கு முன்னுரிமை கொடுத்த சுயஉரிமையான ஆட்சி கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இவர்களை அடக்க உக்ரேய்ன் அரசும் பல கடுமையான போரை முன்னெடுக்கிறது. உக்ரேயினுக்கு ஐரோப்பிய இணையத்தில் ஒன்று சேர இருக்கும் ஆர்வத்தைக் காட்டி நேட்டோ நாடுகளிடம் இராணுவ உதவி கேட்கிறது.இந்தப் போரில் கடந்த சித்திரை மாதத்திலிருந்து 5300 மேலான பொது மக்கள் இரு பக்கச் சார்பிலும் இறந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான கிழக்கு உக்ரேய்ன் மக்கள் இரஷ்யாவில் அகதிகளாகப் போயிருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கவீனமாகியிருக்கிறார்கள். பலகோடி பெறுமதியான உடமைகள் அழிந்துபோயிருக்கின்றன.

கிழக்கு உக்ரேய்ன் போராளிகளுக்கு இரஷ்யா ஆயதமும்,இராணுவ உதவிகளும் செய்து போருக்குத் தூண்டிவிடுவதாக உக்ரேய்ன் குற்றம் சாட்டி.இந்தப்போரில் உக்ரேய்ன் வெற்றியடைய நேட்டோ நாடுகளின் இராணுவ உதவியைக்கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

இதற்குச் சம்மதித்த அமெரிக்கா, உக்ரேயினுக்கு நேட்டோ படைகளை(அமெரிக்கர் தலைமையில்?) அனுப்ப கடந்த சிலவாரங்களாக ஆயத்தம் செய்தது. பிற நாடுகளுக்குப் படைகளை அனுப்பி நாசங்கள் உண்டாவதைப் பொருட்படுத்தாத பல அமெரிக்க கொங்கிரஸ் அங்கத்தவர்களும் உக்ரேயினுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஓபாமாவை நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.

நேட்டோ என்ற பெயரில் அமெரிக்கா,உக்ரேயுனுக்குள் நுழைவதை விரும்பாத ஐரோப்பிய அரசியற் தலைவர்களான ஜேர்மன் ஆங்கிளா மேக்கலும் பிரன்சிய அதிபர் ஹொலண்டெயும் கடந்த சில நாட்களாக, இரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினுடனும்,உக்ரேய்ன அதிபர்,பெட்ரோ பிரஷெங்கோவுடனும் புதன்கிழமை தொடங்கி(11.02.15) இடைவிடாத 16 மணித்தியாலம் பேச்சுவார்த்தை நடத்தி, மிகப் பிரயத்தனம் செய்து உக்ரெயின் அரசுக்கும் கிழக்கு உக்ரெய்ன் போராளிகளுக்குமிடையில் நடந்த போரை நிறுத்தியிருக்கிறார்கள்.இதில் மிகவும் பலமான நிபந்தனைகள் போரிட்ட இருசாராருக்கும் போடப்பட்டிருக்கின்றன. நேற்றிரவு சரியாக பன்னிரண்டு மணிக்குத்துப்பாக்கி வேட்டுக்கள் சட்டென்று நின்றாலும், அதைத் தொடர்ந்த சில மணி நேரங்களில் ஆங்காங்கோ பல குண்டு வெடிப்புகளின் சப்தங்கள் கேட்டதாக பி.பி.சி. செய்திகள் சொல்கின்றன்.

இந்தப் போர்நிறுத்தம் முழுமையடையாவிட்டால் போரிட்டும் கொள்ளும் இருபகுதிகளையும் தவிர ஒட்டு மொத்த ஐரோப்பா மட்டுமல்ல, உலகமே ஒரு பாரிய யுத்தத்தின் கோரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை யுணர்ந்த ஜேர்மன் அதிபர் ஆங்கிளா மேக்கல் தன்னால் முடிந்தவரையும் சமாதானத்துக்ககாப் போராடுகிறார்.
அமெரிக்கா எப்பாடு பட்டும்,இரஷ்யாவின் வாசலாகவிருக்கும் உக்ரேய்னுக்குள் தனது அதிகாரத்தை,நேட்டொ மூலம் ஆட்கொள்ளப் பல காரணிகள் உண்டு.

உக்ரெய்ன் நாட்டின் பூர்வீக வரலாறு கிட்டத்தட்ட 30.000 ஆண்டுகளைக் கொண்டது என்று அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழைய தொல்பொருள் பொருட்கள்; சாட்சி சொல்கின்றன. உக்ரேய்ன் நாட்டைச்சுற்றி, ஜேர்மன், லுத்துவெனியா,போலாந்து,இரஷ்யா போன்ற நாடுகள் இருக்கின்றன. இவை காலத்துக்காலம் உக்ரேய்னை ஆக்கிரமித்து ஆண்ட சரித்திரங்களும் உள்ளன.

பல கால கட்டஙகளில் பல தரப்பட்ட சரித்திரத்தைக் கொண்ட புராதன நாடான உக்ரேய்ன் கடந்த பல நூற்றாண்டுகளாக இரஷ்யாவின் ஒருபகுதியாகவிருந்தது. 1917ம் ஆண்டு இரஷ்ய மன்னரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து,இரஷ்ய புரட்சி கால கட்டத்தில்,உக்ரேய்ன் ஒரு சுயேட்சை நாடாக உருவெடுத்தது. அந்த ஆட்சி இரஷ்ய சர்வாதிகாரி என மேற்கு நாடுகளால் வர்ணிக்கப் பட்ட ஸ்டாலினால் முறியடிக்கப்பட்டு,உக்ரேய்னனின் பெரும்பகுதி இரஷ்ய ஆதிக்கத்துக்குள் இழுக்கப் பட்டது. மூன்றில் ஒன்று பகுதி உக்ரேய்ன் போலாந்துடன் இணைக்கப் பட்டது.

கம்யுனிசத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த உக்ரேய்ன் மக்களுக்குப் பாடம் புகட்ட ஸ்டாலின,1932ம் ஆண்டில்; எடுத்த அநியாயமான நடவடிக்கைகளால் கிட்டத்தட்ட 7 கோடி உக்ரேய்ன மக்கள் பட்டினியால் இறந்தார்கள். ஸ்டாலினுக்கு எதிராக எழுதிய,பேசிய பெரும் பாலான உக்ரேய்ன் புத்திஜீவகள் 1937ல் படுகொலை செய்யப் பட்டார்கள்.

1941ம் ஆண்டு ஹிட்லர் உக்ரேய்னை அடிமைப்படுத்தி 41-44வரையான கால கட்டத்தில் கிட்டத்தட்ட 5கோடி உக்ரேய்ன் மக்களின் மரணத்திற்குக் காரணமானான். ஓன்றரைக் கோடி யூத மக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டார்கள்.ஹிட்லரின் கொடுமையான ஆக்கிரமிம்பால் கிட்டத்தட்ட இருபது கோடி இரஷ்ய மக்கள் இறந்தார்கள்.

ஹிட்லரை முறியடித்ததும், ஹிட்லரின் பிடியிலிருந்து இரஷ்யா மீட்டெடுத்து,உக்ரேய்ன உட்படபல கிழக்கு ஐரொப்பிய நாடுகள்-; இரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு வந்தன.நாஷிகளிடமிருந்து தப்ப அவர்களுடன் சேர்ந்த 200.000 உக்ரேயினரை ஸ்டாலின் கிறிமியாப் பகுதிக்கு நாடுகடத்தினான்.
இன்னுமொருதரம் இரஷ்யா எந்த நாட்டாலும் ஆக்கிரமிக்கப் படக்கூடாது என்ற அத்திவாரத்தில் இரஷ்யா பல நாடுகளைத் தன் நாட்டுப் பாதுகாப்பு எல்லைகளாக ஆக்கிமித்தது.

இரஷ்யாவின் ஆதிக்கத்தைக் கண்டு கிலி பிடித்த மேற்கரசுகள், இரஷ்யாவின் எல்லயதிகாரத்தை ஒரு ‘இயந்தித் திரையாக’ வர்ணித்து, இரஷ்யாவிடமிருந்து மேற்கரசுகளைக் காப்பாற்ற 1948ம் ஆண்டு,துருக்கியுட்படப் பன்னிரண்டு மேற்கு நாடுகள் சேர்ந்த,’நேட்டோ’ மூலம் ஒன்று சேர்ந்தது.

ஹிட்லருடனான போர் முடிந்ததும்,ஸ்டாலின் பழையபடி மேற்கு உக்ரேயினை இரஷ்யாவுடன் இணைந்தான். இரஷ்ய மொழிபேசும் கிறிமியா இரஷ்யாவிடம் போனது. இரஷ்யத் தலைவராக வந்த குருஷேவ்,இரஷ்ய மொழிபேசும் கிறிமியாப் பகுதியை,உக்ரேயினுக்குத் தானமாக 1954ல் வழங்கினான்.

1990ல் இரஷ்யா உடைபட்டதும்,இரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த பல நாடுகள் பிரிந்ததுபோல் உக்ரேயினும் பிரிந்தது. தனது தனித்துவத்தை முன்னெடுக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தன. கத்தோலிக்க மதத்தைக் கடைப்பிடிக்கும் உக்ரேய்ன் 2001ம் ஆண்டு போப் ஆண்டவர் ஜோன் பாலை வரவழைத்துத் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாகக் காட்டியது. 2002ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் முயற்சியை முன்னெடுத்தது.

அதன்பின் பல தரப்பட்ட அரசியல் மாற்றங்களும், அரசியற் தலைவர்களும் உக்ரேய்ன் அரசியலில் வந்து போகிறார்கள்.2007ம் ஆண்டு இரஷ்யா சார்பான தலைவர் உக்ரேய்னின் பதவிக்கு வந்தார்.அதைத் தொடர்ந்துநடந்த மாற்றத்தில்(புரட்சி?) மேற்குலகு ஆதரவு கொடுக்கும் தலைவர் பதவிக்கு வந்தார். உக்ரேய்ன் அரசியலில் ‘றைட் செக்டர் என்ற வலதுசாரிகள் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.இவர்கள் யூதர்களுக்கு, இரஷ்யர்களுக்க,இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையத்துடிப்பவர்கள.அமெரிக்காவின் வரவை ஆதரிப்பவர்கள்.

கடந்த வருடம், ஒரு காலத்தில் இரஷ்யாவால் உக்ரேய்னுக்குத் தானமாகக் கொடுக்கப் பட்ட ,இரஷ்ய மொழிNபுசும் கிறிமியாப் பகுதியை இரஷ்யா மீண்டும் ஒருதரம் தன்னுடையதாக்கிக்கொண்டது.
இதனால் இரஷ்யாமீது கோபப்பட்ட மேற்குலகு(அமெரிக்கா), இரஷ்யாவுக்குப் பாரதூரமான பொருளாதாரத் தடைகளைப்போட்டது. இப்படிப் பலவற்றைத் தங்களுக்குப் பிடிக்காத தலைவர்களக்குப் போட்டு,அவர்களை அந்த நாட்டு மக்களால் வெறுக்கப்பண்ணி தூக்கி எறிவது மேற்கு நாடுகளின் தந்திரங்களில் ஒன்றாகும்.

இரஷ்யாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, மக்களுக்கான பொதுசேவைகள் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கின்றன.லஞ்ச ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.இந்தக்காரணங்களால் மக்களை அதிருப்திப் படுத்தி,இரஷ்யாவிலும் தங்களுக்குப்பிடித்த ஒரு தலைவரைக் கொண்டுவர மேற்கு நாடுகள் கங்கணம் கட்டி,புட்டினை வெளியேற்ற முயற்சிக்கின்றன. விலாடிமிர் புட்டினுக்கு கிழக்கு உக்ரேய்னினல்,அங்கு போராடும் பிரிவினைவாதிகள் வெற்றியடைவது இன்றயமையாத விடயமாகவிருக்கிறது.

இரஷ்யாவின் அனுசரணையுடன் போராடும் கிழக்கு உக்ரேய்ன் போராளிகளை அடக்க (புட்டினுக்குப்பாடம் படிப்பிக்க),உக்ரேய்னுக்கு நேட்டோ இராணுவஉதவி வழங்க முயற்சித்ததை,ஜேர்மன் அதிபர் முற்று முழுதாக எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. நேட்டோவின் இராணுவ முற்றுகை ஜேர்மனிக்குள்ளாற்hன் கொண்டு நடத்தப் படவேண்டும்.
ஜேர்மன் நாட்டிலிருந்து ஒரு மாபெரும் போர் தொடங்கப்படுவதை ஆங்கிளா விரும்பவில்லை.

இராணுவ பலத்தில் நேட்டோ நாடுகளுடன் இரஷ்யா கடைசிவரைக்கம் ஈடுநிற்க முடியாது. உலகத்திலேயே அதிகபணத்தை இராணுவத்திற்குச் செலவளிக்கும் நாடு அமெரிக்காவாகும்.

அமெரிக்காவின்,ஒருவருட இராணுவ செலவு: 612.500.000.000 கோடி டொலர்ஸாகும்.
ஜேர்மனி………………………………………………………………45.000.000.000 கோடி
பிரான்ஸ்………………………………………………………………43.000.000.000. கோடி

இவர்களுடன் இன்னும் பல நேட்டோ நாடுகள்-(ஐரோப்பிய ஒன்றிய) சேர்ந்தால், இரஷ்யாவின் ஒரு வருட இராணுவ செலவான 76.000.000.000.கோடிகளை விட எத்தனையோ மடங்காகவரும். ஆனாலும் அமெரிக்கா மாதிரியே இரஷ்யாவம் அணுஆயுத பலம் கொண்ட நாடாகும்.

ஓரு இராணுவப்போர் இரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் (நேட்டோ) இடையில் நடந்தால் அதில் பெரும்பாலும் அழியப்போவது ஐரோப்பிய (வெள்ளையின) மக்களாகும். மிக அழிவுகளைத் தந்த முதலாம் இரண்டாம் உலக யுத்தங்காளல்ப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அழிந்தார்கள்
பாரிய நஷ்டம் ஜேர்மன் மக்களால் அனுபவிக்கப் பட்டது.

ஐரோப்பாவின் பெரும் பகுதி இரஷ்ய கலாச்சாரத்தோடு இணைந்தது. உக்ரேய்னின் மொழியுடன,கலாச்சாரத்துடன்; இரஷ்ய மொழியும் கலாச்சாரமும் பின்னிப் பிpணைந்தது. கடந்த பல்நூறு ஆண்டுகளாகப் பல விதத்திலும்,இரஷ்யாவுடன் இணைந்தவர்கள். அமெரிக்காவால் இதைப்புரிந்து கொள்வது இலகுவல்ல. நேட்டோ—; இரஷ்யா போர் வெடித்தால் இருபக்கத்திலுமுள்ள பல்லின மக்களுடன் பல்லாயிரம் இரஷ்ய மொழிபேசும் மக்களும் அழியவாய்ப்புண்டு.

மேற்கு ஜேர்மனி ஹம்பேர்க் நகரில் 1954ம் ஆண்டு, ஒரு இடதுசாரியான ஆங்கில ஆசிரியரின் மகளாகப் பிறந்த ஆங்கிளா மேக்கல் சிறு குழந்தையாக இருந்த காலத்திலிருந்து,இரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர் இரஷ்ய மொழியிலுள்ள புலமைக்காகப் பரிசு பெற்றவர். இரஷ்ய அதிபர் புட்டினு;ன் இரஷ்யாவில் தர்க்கம் செய்யும் தகமையுள்ள ஆளுமையான பெண்.சிறுவயதில், அரசியல்pல் அக்கறையில்லாமல் தனது படிப்பில் ஆர்வமாகவிருந்து, குவாண்டம் கெமிஸ்ட்ரியில் கலாநிதி பட்டம் பெற்று ஒரு விஞ்ஞானியாகக் கடமையாற்றியவர்.

1988ல் பேர்லின் சுவர் தகர்க்கப் பட்டு,அதன்பின் ஜேர்மனி ஒன்றாய் இணைந்தபோது அரசியலில் நுழைந்தவர். 1990ம் ஆண்டுகளில் ஜேர்மன் சான்சலாராகவிருந்த கோல் அவர்களால் அரசியலுக்குக் கொண்டு வரப் பட்டவர். ஓருகால கட்டத்தின் பின் தன்னை அரசியலுக்குக் கொண்டுவந்தவருக்கு எதிராகச் செயற் பட்டு வெற்றி பெற்றவர்.

2005ம் ஆண்டு,ஜேர்மனியின் முதலாவது சான்சிலராகத் தெரிவு செய்யப்பட்ட தொடக்கம் ஜேர்மனியின் தலைவியாகவிருக்கிறார்.அரசியலில்,தனது எதிரிகளை ஒழித்துக்கட்ட மிகவும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொள்பவர் என்று பெயர் பெற்றவர்.
அரசியல் சித்தாந்தந்தங்களிலுள்ள,’மக்கவெலியன்’ வழியிற் செயலாற்றி, தான் தேர்ந்தெடுத்த வழியில் வெற்றி காணுபவர் என்று பெயர் எடுத்தவர் ஆங்கிளா மேக்கல்.

இன்னும் கொஞ்ச காலத்தில், பதவியிலிருந்து விலகும், ஓபாமா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஆங்கிளா எடுத்த முடிவுகள் உலகம் பரந்த அரசியல் அவதானிகளை மெச்ச வைத்திருக்கிறது. இரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு போர் மூண்டால் அப்பாவிகளான கோடிக்கணக்கான மக்கள் அழிவதை, ஒட்டு மொத்த உலகமே தாங்க முடியாத பல கொடுமைகளை அனுபவிப்பதை ஆங்கிளா மேக்கல் ஒரு சமாதான தேவதையாகக் கடமையாற்றித் தடுத்திருக்கிறார். அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள்.

பல நாடுகளில்,பலவிதமான போராட்டங்களும் அழிவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களையாளும் அரசியல் சக்திகளில் பெண்களின் பங்கு மிகக்குறைவாகவேயுள்ளது. அதிகாரமுள்ள பெண்களாலும்,மக்களுக்குத் தேவையான பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியாதிருக்கிறது. அப்படியான ஆணாதிக்கம் உலகெங்கும் பரந்தாளும்போது, தனது நாட்டின் நன்மைக்காக மட்டுமல்ல,ஐரோப்பிய மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்கும், அமெரிக்காவை எதிர்த்து நின்ற ஆங்கிளா மேக்கலின் துணிவு பாராட்டப்படவேண்டியது.

இவரை,பிரித்தானிய முதற் பெண்மணியாகவிருந்த,மார்க்கிரட் தச்சருடன் ஒப்பிடுவோரும் உண்டு. அமெரிக்காவுடன் கைகோர்த்துப் பல விடயங்களை முன்னெடுத்து தச்சருக்கும மேக்கலுக்கும் பல வித்தியாசங்களுள்ளன. அவற்றில் ஒன்று,அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து நேட்டோப் படைகள்,இரஷ்யாவைத் தாக்குவதை ஆதரிக்காததும் ஒன்றாகும்.

அமெரிக்காவுக்கும் ,இரஷ்யாவுக்குமிடையில், உக்ரேயனைச் சாட்டாக வைத்துப் போர் மூளாமல் அவர் முன்னெடுத்த செயல்கள் வெற்றி பெற்றால் ஆங்கிளா மேக்கல் நோபல் பரிசு பெறுவது நிச்சயம்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s