இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- லண்டன். ஐப்பசி 2014
ஓரு சமூகத்தின் பண்பாட்டுப் பரிமாணங்களை முன்னெடுக்கும் இசை, இயல், நாடகங்கள்,சமூகக் கோட்பாடுகளை வளர்க்கும் சமூகச் சடங்குகள்;,அவர்கள் வாழும் காலகட்டத்தின் அரசியல்,சரித்திர மாற்றங்கள் என்பன அந்தச் சமூகத்தில் வாழும் கலைஞர்களாலும்,எழுத்தாளர்களாலும் படைக்கப்படுகின்றன. அவை சாகா வரம் பெற்ற சரித்திரத் தடயங்களாகின்றன.
ஓரு சமூகத்தைச்சேர்ந்த மக்கள் புகலிடம் செல்லப் பல காரணிகள் உள்ளன. மனித சரித்திரத்தின் பண்டைய காலத்திலிருந்து, தாங்கள் பிறந்தவிடத்தை விட்டப் புகலிடம் தேட,இயற்கை அனர்த்தங்கள், அரசியல் மாற்றங்கள், இனங்களுக்குள்ளான பிணக்குகள்,சமயப் பிணக்ககள்,தங்கள் சொந்த வாழ்க்கையை மேன்படுத்த எடுக்கும் பொருளாதார, கல்வி மேம்பாடு நோக்கங்கள் என்பன காரணிகளாக அமைகின்றன.
மனித குலம் ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணமித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் இடங்களை விட்டு உலகின் பல பகுpகளுக்கும் இடம் பெயர மேற்கூறப்பட்ட சிலவும் காரணிகளாக அமைந்தன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இலங்கைத் தமிழர்கள் பல கால கட்டங்களில் பல காரணங்களால் இந்தியாவின் பல பகுதிகளிலுமிருந்து வந்து இலங்கைக்கு வந்து குடியேறினார்கள். ஆதிகாலத்திலிருந்தே இந்தியாவுடன் கல்வி,கலாச்சார வியாபாரத் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அவர்கள் வந்தபோது தங்களின் கலைகலாச்சார விழுமியங்கிளைப் பாதுகாக்கப் பல படைப்புக்களைப் படைத்தார்கள். கோயில்களை நிர்மாணித்தார்கள். அவர்களுடன் பிணைந்திருந்த பல தரப்பட்ட சமய சமூகக் கோட்பாடுகள் இன்றும் நிலை பெற்றிருக்கின்றன.
உதாரணமாக,இலங்கையின் கிழக்குப்பகுதித் தமிழ் மக்களின் சரித்திரம் கி.மு. 261 லிருந்து ஆரம்பிக்கிறது. இந்தியாவில் அசோக மன்னனுக்கும் கலிங்கராஜனுக்கும் நடந்த போரில் கலிங்க மன்னன் தோல்வி கண்டபோது, கலிங்க மன்னின் விசுவாசிகள் 150.000; அசோக மன்னனால் தென்னாசியாவின் பல நாடுகளுக்கும் நாடு கடத்தப் பட்டார்கள். அசோகன் ஆரியன். கலிங்க மன்னன் திராவிடன்,சிவனை வணங்கியவன். கலிங்க பரம்பரையில் முக்கியமான மக்கள்அசோகனால் நாடு கடத்தப் பட்டார்கள. அவர்களின் பாரம்பரியம் இன்னும் மலேயா,பாலி, இந்தோனேசியத் தீவுகளில் ‘கலிங்க’ மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இலங்கையின் அன்றைய மன்னன் இலங்கையில் பத்த சமயம் வரக் காரணமாயிருந்த தேவநம்பியதீசனாகும் அவனின் தந்தையார் முத்துசிவன் அசோகனின நண்பனாவான்.; அசோகன் தன்னால் நாடுகடத்தப்பட்ட ஆயிரக் கணக்கான கலிங்க மக்களை அகதிகளாக ஏற்கும்படி தேவநம்பியதீசனைக் கேட்டுக்கொண்டதாகவும், அவன் அந்த அகதிகளை கிழக்குப் பகுதியிற் குடியேற்றினான் என்றும் சரித்திரம் சொல்கிறது. அவர்கள் சைவ சமயத்திராவிடர்கள்;. இலங்கையில் அப்போது சைவ சமயம் பெரிதாக வளர்ந்திருந்தது. அந்தக்காலகட்டத்தில் அமைக்கப் பட்ட கோயில்கள் இன்றும் கிழக்கின் பல பகுதிகளான தாண்டவன்வெளி, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் புகழுடன் திகழ்கின்றன. இவை புத்த சமயம் இலங்கைக்கு வரமுதல் கட்டப்பட்டவை
அவர்கள் இன்றும் இலங்கையின் கிழக்குப் பகுதியில் கலிங்கராஜன்குடி மக்கள் என்றே அழைக்கப்புடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறைகளும் (தாய்வழி மரபு) கலாச்சார, பண்பாடுகளும் இலங்கையின் வடக்கில் நடைமுறைக் கலாச்சாரத்துக்கு வேறுபட்டவை. உதாரணமாக கிழக்கில் வாழும் கலிங்கராஜன்குடி மக்கள்; மட்டுமல்லாது மற்றைய குடி மக்களினதும் பழக்க வழக்கங்கள், மூலிகை வைத்திதியப் பண்பாடுகள், மந்திர தந்திரங்களிலுள்ள நம்பிக்கை, சமயல் முறைகள் என்பன வடக்குத் தமிழரின் பண்பாடுகளிலிருந்து வேறுப்டடவை. இதற்குக் காரணங்கள், கிழக்pலங்கை பண்டை தொட்டுப் பல தமிழ் சிற்றரர்களால் ஆளப்பட்டது.; 1564க்குப் பின் கண்டிய மன்னரின் ஆடசிக்குள்ளானதும், கண்டிய மன்னர்கள் தமிழ் நாடு மட்டுமல்லாது கேரள நாட்டிலும் பெண் எடுத்ததும் அதனால் வந்த கலாச்சார மாற்றங்களும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பழைய காலத்தில் வடக்கில் புத்த சமயம் வளர்ந்ததுபோல் கிழக்கிலங்கையில் ஒரு நாளும் புத்தசமயம் காலடி எடுத்து வைக்கவில்லை. சைவசமயத்தில் மக்களுக்கிருக்கும் மதிப்பு இன்றும் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.
புலம் பெயர் மக்களின், வாழ்க்கை எப்படி மாறுபறுகின்றது என்பதற்கு இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆபிரிக்காவிலிரந்து அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கறுப்பு இன மக்களால் இன்று பலராலும் விரும்பப்படும் யாஸ் இசை வளர்ந்தத என்பது இன்னுமொரு உதாரணமாகும்.
இலங்கைத் தமிழரின் புலம் பெயர்வுக்கு 1940-50 ஆண்டுக்கால கட்டங்களில் ஆங்கிக்கல்வி முக்கியமானதாகவிருந்தது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும் ஆங்கிலம் படித்த மேல் மட்டத்தினரில் ஒரு பகுதியினர் இங்கிலாந்துக்கு வந்தார்கள். ஆனால் 1956ல் பண்டாரநாயக்கா அரசு சிங்கள மட்டும் சட்டத்தைக் கொண்டவந்ததால் ஆங்கிலம் மட்டும் தெரிந்த கொழும்பு வாசிகளான பல தமிழர்கள் லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள்.
1940-50 ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களில் (புலம் பெயர்) இலக்கியம் என்று படைத்தவர் அழகு சுப்பிரமணியமாகும். இவர் ஆங்கித்தில் மட்டுமே சிறு கதைகளை எழுதினார் அதனால் தமிழர்களிடையே தெரியப்படாதவராக இருக்கிறார். எனது லண்டன் வாழ்க்கை 1970ம் தொடங்கியது. அப்போது, லண்டனில் தமிழில் யாரும் எழுதிக் கொண்டிருக்கவில்லை.
லுண்டனுக்கு வரமுதல்,யாழ்ப்பாணத்தில் மாணவியாக இருந்தபோது. மல்லிகை. வசந்தம்,வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். எனது எழுத்துக்கள், பெண்ணிய, சமுதாய நோக்குகளுடனிருந்ததால் முற்போக்குவாதிகள் எனது எழுத்தை வரவேற்றார்கள்.
உதாரணமாக,’சித்திரத்தில் பெண்ணெழுதி’-வசந்தம்1965;, (பெண்ணியம்)
-‘ஏழையின்பாதை; -சிந்தாமணி 1970 (சமுதாயப்பார்வை), போன்ற சிலவாகும்.
லண்டனுக்கு வந்ததும் பழைய கால சிந்தனைகளும் மனிதர்களும் பல்லபண்டுகளுக்கு நினைவோடு ஒடடி நிற்கும். அப்போது இலங்கைப் பத்திரிகைகள், ஆங்கில நாட்டில் எனது அனுபவங்களை இலக்கிய உருவில் வெளியிட்டார்கள்.
‘மாமி;’ வீரகேசரி, ‘நண்பன்'(வீரகேசரி 1971),’ஒற்றைப்படகு’ சிந்தாமணி 1974,’இக்கரைக்கு அக்கரை பச்சை’ வீரகேசரி 1976, ‘வாழ்வில் சில நடிகர்கள்’சிந்தாமணி 1980 போன்றவை.
நாங்கள் லண்டனுக்கு வரும்போதிருந்த தமிழர்களிற் பலர் ஆங்கிலத்தில் படித்தவர்கள். 1962ல் திருமதி பண்டாரநாயக்கா அமுல் படுத்திய சிங்களம் மட்டும் சட்டங்களால் பல நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் தமிழுக்கும் சைவ சமயம் லண்டனில் வளரக் காரணமாகக் காரணமாயிருந்த திருவாளர் சபாபதிப் பிள்ளை அவரின் மகன் சதானந்தம் அவர்களையும் புலம் பெயர் தமிழர்கள் என்றும் மறக்கக் கூடாது.
1970ம் ஆண்டின் முற்பகுதியில் திரு சபாபதிப் பிள்ளை அவர்கள் சைவக்கோயில் படைக்கும் பணியைத் தொடங்கினார். அதுவரைக்கும் அன்று வாழ்ந்த தமிழர்கள் ஒரு பொது மண்டபத்தில், அவரால் கொண்டு வந்து வைத்திருக்கும் கடவுள் சிலைகளை வைத்து வணங்குவோம்.
70ம் ஆண்டின் முற்பகுதியில் திரு சபாபதியின் மகன் சதானந்தம் அவர்கள் லண்டனில் முதல் முதலாகத் தொடங்கிய தமிழ்ப் பத்திரிகையான ‘ லண்டன முரசை’த் தொடங்கினார். சதானந்தன் ஊடகவாதியல்ல, லண்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தவர்,தமிழ் ஆர்வம் கொண்டவர். அதனால் ஆரம்பகாலத்தில் ‘லண்டன் முரசு பத்திரிகையில் இலக்கியப் படைப்புக்கள் வெளிவரவில்லை. அன்றைய கால கட்டத்தில் தமிழில் எழுதக்கூடிய யாரும் லண்டனில் இருக்கவில்லை. 70ம் ஆண்டின் நடுப்பகுதியல், அவரைச் சந்தித்தபோது. ‘லண்டன் முரசுக்கு’ எழுதும்படி வேண்டிக்கொண்டார்.
மேற்கு நாட்டுக்குப் படிக்கவரும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்கள் பெரிய சீதனத்தில் கல்யாணம்பேசுவது வழக்கமாகவிருந்தது. தனிமனித ஆசாபாசங்களுக்கு முன்னிடம் கொடுக்காமல் பணத்துக்காகத் திருமண ஒப்பத்தங்கள் செய்வது, அப்படித் திருமணமானவர்களின் வாழ்க்கையில் சந்தோசத்தைக் கொடுத்ததில்லை என்பதைப் பலரின் திருமணவாழ்க்கைiயின்மூலம் கண்டு கொண்டதால், அந்த விடயம் பற்றி ‘ ஒருவன் விலைப்படுகிறான் ‘ என்ற பெயரில் ஒரு சிறு கதையை எழுதினேன்.
அந்தக்கதை முற்போக்கானவர்களால் பெரிதும் மதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து’ உலகமெல்லாம் வியாபபரிகள்;’ என்ற பெயரில் எனது முதலாவது தொடர்கதை லண்டன் முரசில் வெளி வந்தது. இலங்கையில் நடைபெறும் இனத் துவேசத்தால் பாதிக்கப் பட்டு லண்டன வந்த மாணவர்களையும் அவர்களின் உணர்வுகளைத் தங்களின் அரசியல் இலாபத்துக்குப் பாவிக்கும் சந்தர்ப்பவாதத் தலைவர்களையும் அடையாளம் காட்டும் நாவலாக அது இருந்ததால் தமிழ் மாணவர்களிடையே அது பிரபலமாகப்போசப்பட்டது. லண்டனில் ஆரம்பமான முதலாவது அரசியல் குழுவான ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரான திரு இராஜநாயம் அவர்களின் வீட்டில் 1976ம் ஆணடளவில் பல இலக்கியக் கருத்தரங்கங்கள் நடத்தப் பட்டன. இந்திய, இலங்கை எழுத்தாழர்களின் படைப்புக்கள் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இலங்கைத் தமிழ் மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் நடத்தும் கலாச்சார விழாக்களில் இலக்கியம் பற்றிய விவாதங்கள் இல்லாவிட்டாலும்; பல தமிழக்கலைகள், அரசியல் பற்றிய நிகழ்ச்சிகள் தாராளமாகவிருக்கும்.
1977ம் ஆண்டில இலங்கையில் நடந்த கலவரத்தால், மாணவர்களாக மட்டு மல்லாமல்,சிங்களப்பகுதிகளிலும் கொழுப்பிலும் வேலை செய்து பாதிக்கப்பட்ட பல தமிழ் உத்தியோகத்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் பெருவாரியாக லண்டனுக்கு வந்தார்கள். லுண்டன வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் தொடங்கின.
1981ல் தமிழர்களுக்கான ஆங்கில் பத்திரிகையான’ தமிழ ரைம்ஸ்’ தொடங்கப் பட்டது. இலங்கை பற்றிய பல திறமான ஆய்வுக் கட்டுரைகளின் தளமாக இயங்கிய அந்தப் பத்திரிகையில், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எனது சில கட்டுரைகளும் ‘த றவுண்ட் அப்’ சூ மதர்ஸ் ழவ் சிறி லங்கா’ போன்ற சில கதைகளும்; வெளிவந்தன.
அப்போது, இலக்கிய ஆர்வலரான நேமிநாதனும் தனது உத்தியோக நிமித்தமாக பேராசிரியர் சிவசேகரமும் லண்டனிலிருந்தார்கள். அவர்களின் ஆதரவால் இலங்கை மக்களால் மட்டுமன்றி இந்தியப் புத்திஜீகிகளாலும் மிகவும் மதிக்கப்படும் எனது ‘ தில்லையாற்றங்கரையினில்’ நாவல் உருவானது.
1983மு; ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தினால், பெருவாரியான தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தார்கள். மேற்கத்திய நாடுகளில் தமிழ் மக்கள் குடிபுகுந்ததால் தமிழ் கலை கலாச்சார, சமயத் தலங்கள் உருவாகின.
ஓரு சமுதாயத்தின் நாகரிகத்தைப் பிரதிபலிப்பது, அந்தச் சமுதாயத்திலுள்ள எழுத்தாளர்களால் படைக்கப் படும் படைப்பிலக்கியமாகும். ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் ஒரு சில முற்போக்கு வாதிகளால் ஒரு புதிய இலக்கியக் கலாச்சாரம் உருவாகியது. இலங்கை அரசாங்கத்தால் அவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளை எதிர்த்துப் பல இலக்கியங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் உருவாகின. 1985-86 வரையுமான காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் ஆயதக்குழுக்களிடையே நடந்த மோதல்களால் பல தமிழ் இளைஞர்கள் புலம் பெயர்ந்தோடி வந்தார்கள். ஆவர்கள் தங்கள் எதிர்ப்புக்கள், எதிர்பார்பகு;களைப் பிரதிபலித்துப் பல படைப்புக்களைச் செய்தார்கள்.
புலம பெயர் இலக்கியம் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டது. தங்களது சுதந்திர சிந்தனைகளை இலக்கியமாகப் படைத்தார்கள். கனடா தொடக்கம் அவுஸ்திரேலியா வரையுமான பெரும்பாகத்தில் தமிழர்களால் நடத்தப்பட்ட கிட்டத்தட்ட 40க்கு மேலான இலக்கியப் பத்திரிகைகளில் ஏராளமான இளம் எழுத்தாளர்கள் கதைகளையும் கவிதைகளையும் கடடுடரைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதினார்கள்.
ஆரம்ப கால கட்டத்தில் இலங்கை அரசின் இனவாதக் கொடுமைதாங்காமல் பல தரப்பட்ட தமிழ் மக்களும் இந்தியாவில் தஞ்சம் புகந்தார்கள். அவர்களில் இலங்கையில் மிகவும் தெரியப்பட்ட பல சிறுகதை,நாவல் எழுத்தாளர்களும் அடங்குவர். அக்கால கட்டத்தில் இலங்கையில் மிகவும் பிரபலமாகவிருந்த முற்கோக்கு எழுத்தாளர் செ. கணேசலிங்கம்.கவிஞர் ஜெயகாnthaன் போன்றவர்களை,எனது திரைப்படப் பட்டப்படிப்பின் ஆய்வுக்காக 1987ல் இந்தியா சென்றபோது சந்தித்தேன்.
அக்காலத்திலேயே தமிழ்க்குழுக்களிடம் போட்டிகளும் பழிவாங்கல்களும் தொடங்கிவிட்டன. இந்தியாவில் குழுக்களிடைய வன்மம் வளர்ந்தது..அதனால் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுதிய சில எழுத்தாளர்களும் பலி எடுக்கப் பட்டார்கள்.அவர்களில் ஒருத்தர் காவலுர் ஜெகநாதன் என்ற எழுத்தாளராகும்.அவர் சிறுகதைகள், நாவல்கள் என்று பல தரப் பட்ட படைப்புக்கள் மூலம் தமிழ்வாசகர்களிடம் பிரபலமாயிருந்தார். அவரின் படைப்புக்களஇந்தியாவில்,கணையாழி, தினமணிக்கதிர், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது,அமுதசுரபி போன்ற பத்திரிகைகளில் ஒரே சமயத்தில் பிரசுரிக்கப்பட்ட பிரபலத்தைப் பெற்றிருந்தது. அத்துடன் அவரின் தொடர்பும் படைப்புக்களும் இலங்கை வீரகேசரி பத்திரிகையிலும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து ‘மல்லிகை’ பத்திரிகையும் அவரின் படைப்புக்களை வெளியிட்டது.
அக்காலத்தில் தமிழத்தேசியம் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட இலங்கை முற்கோக்கு எழுத்தாளர்களை அங்கிகரிக்கவில்லை. தமிழ்த்தேசியத்தை ஆதரித்து எழுதிய பலர் முன்னிலைப் படுத்தப் பட்டார்கள்.ஆனாலும் காலக்கிரமத்தில் தமிழ்க்குழக்களிடையே தொடங்கிய’ களையெடுப்புக்கள்’ பல அருமையான தமிழ் படைப்பாளிகளைப் பலியெடுத்தன. காவலூர் ஜெகனாதன் ‘இனம் தெரியாத(??) தமிழ்க் குழுவால் கடத்தப்பட்ட நடுக்கடலில் கொலை செய்யப் பட்டதாக வதந்திகள் அடிபட்டன.
புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு சிறுபத்திரிகைகள் மூலம் தளம் கொடுத்த நாடுகளில்முதலடம் வகிப்பது ஜேர்மனியாகும் அங்கு 80ம் ஆண்டின் முற்பகுதியிலிருந்தே பல தரப்பட்ட சிறு பத்திரிகைகளும் வெளியாளின. 1977மு; ஆண்டு கலவரத்தின்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கிடையேயுள்ள புத்திஜீவிகளால் பல சிறு பத்திரிகைகள் ஆரம்பிக்கப் பட்டன.
ஜேர்மனி:
ஜேர்மனியில் அன்று குடிகொண்ட தமிழர்களால, 1980ம் அண்டின் முற்பகுதியில் ; ‘கடலோடிகள்” என்ற அமைப்பினரால்,’எண்ணம்’ என்ற சிறு பத்திரிகையை, அழகலிங்கம்,வாசுதேவன்,சிவராசா போன்றவர்கள்; ஆரம்பித்து நடத்தினார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன. ‘மண் என்ற பத்திரிகை, கலை இலக்கியம் மட்டமல்லாது ஜேர்மனியில் வாழும் அகதிகள்பற்றிய தகவல்களுடன் சிவராசா என்பரால் வெளியிடப்பட்டது.’ கலை விளக்கு’ என்ற சிறு பத்திரிகை,தமிழ்க்கலைகளை, கலாச்சாரத்தை முன்னெடுத்து பாக்கியநாதன் வித்யா பாக்கிய நாதன் தம்பதிகளால் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து,’சிந்தனை; என்ற சிறு பத்திரிகையை பேர்லின் நகரில் தனது குடம்பத்துடன் வாழ்ந்த வாழ்ந்த இடதுசாரியும் இலக்கிய ஆர்வலருமான பரராஜசிங்கம் 1985ல் தொடங்கினார்.
1986ம் ஆண்டில் சினி லோகநாதன் எனபவர்’ அறுவை’ என்ற சிறு பத்திரிகையைத் தொடங்கினார். அந்தக்கால கட்டத்தில்,’யாத்திiர் என்ற பத்திரிகை திருநாவுக்கரசு என்பராலும்,;நம்நாடு; என்ற பத்திரிகை கிருஷ்ணநாதன் என்பவராலும் வெளியிடப்பட்டன.அத்துடன்’ வண்ணாத்திபூச்சி’,என்ற கலை இலக்கியப் பத்திரிகையும், முருகதாஸ் என்பவார் ‘ஏலய்யா’ என்ற ஏடு;ம் வெளிவந்தன.
வ.ச. குவிஞர் ஜெயபாலனின் சகோதரர்களும் உறவினர்களுமான,பாரதிதாசன்,வாணிதாசன்.ரஞ்சினி.ராகவன் என்போரால் ‘புதுமை’ என்ற கலை, இலக்கிய சிறு பத்திரிகை 1988ம் ஆண்டிலிருந்த வரத் தொடங்கியது.எழுத்து வன்மையும் இலக்கிய தாகமும் கொண்ட பார்த்தீpபன் என்ற இளைஞரால்’ தூண்டில்’ என்ற சிறு பத்திரிகை 1987ல் ஆரம்பிக்கப்பட்டது. கலை இலக்கிய பத்திரிகையான தூண்டிலில் பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் கதை கவிதைகளைப்படைத்தார்கள்.
88ம் ஆண்டின் கடைசிப்பகுதியில், புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் சேர்ந்;து கலந்து விவாதிக்கும் களமாக ‘இலக்கிய சந்திப்பு’ தூண்டில் ஆசிரியர் பார்த்தீபன்,பீட்டர் ஜெயரத்தினம் போன்றோரால் ஜேர்மனியில் தொடங்கப்பட்டது. அத்துடன் பெண்களின் படைப்புகள் பற்றிக் கலந்துரையாடவும், விமரிசிக்கவும் ‘ பெண்கள் சந்திப்பு’ களமிட்டது. இந்தக்களங்கள் நல்ல இலக்கியப் படைப்புக்களை அடையாளம் கண்டு வரவேற்கும் தளமாகக் கருதப்பட்டது.
1989ம் ஆண்டு சந்தூஸ் ஜெமினி கங்காதரன் போன்றோரால் ‘ தேனிபத்திரிகை’ ஆரம்பிக்கப்பட்டது.
பெண்களின் சிறு பத்திரிகைகளாக’ நமது குரல்’ என்ற பத்திரிகை 1986ல் தேவிகா கங்காதரனாலும்,’ஊதா’ என்ற பத்திரிகை உமா பரராஜசிங்கம்,நிருபா,ரஞ்சி போன்ற பெண்களால் 1994ல் தொடங்கப்பட்டது.
பாரிஸ்:
ஜேர்மனியின் பல நகரங்களிலும் 1879ம் ஆண்டின் பிற்பகுதி காலகட்டம் தொடங்கி புலம் பெயர்ந்து குடியேறிய இலங்கைத் தமிழ் மக்கள் பல கால கட்டங்களில் பல சிறு பத்திரிகைகளைத் தொடங்கியதுபோல் பாரிஸ் நாட்டிற்குப் புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்குளம் புலம் பெயர் தமிழர் இலக்கியத்தில் 1985ம் ஆண்டீற்குப் பின் ஒரு பெரிய தாக்கத்தையுண்டாக்கிர்கள். இலங்கையில் நடந்த தமிழ்க்குழுப் படுகொலைகளுக்குத் தப்பி ஓடிவந்த பல இளைஞர்கள் 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் பல சிறு பத்திரிகைகளையுண்டாக்கினார்கள். ஈ.பி. ஆர். ஏல். ஏவ், புலட் அமைப்புக்களின் ஆதரவாளர்கள் பலர் இதில் முன்னணியில் நின்றார்கள். ஈ.புp.ஆh.எல்.எவ் வைச் சேர்ந்த மனோகரன் என்பரால் சூஓசை; பத்திரிகை தொடங்கப்பட்டது. புpன்னர்’ அம்மா’ என்ற சிறு பத்திpரிகையைத் தொடங்கினார். புல காலம் கலை, இலக்கியப் படைப்புக்களை தந்த பாரிஸ் பத்திரிகைகளில் ‘ அம்மாவும் ஒன்றாகும்.
அதே காலகட்டத்தில் ‘ தமிழ் முரசு’ சிறு பத்திரிகை, பாரிஸ்வாழ் இடது சாரியும் அரசியல் ஆய்வாளருமான(காலம் சென்ற) உமாகாந்தன் அவர்களால் நடத்தப்பட்டது.;
‘தேடல்’ என்ற பத்திரிகையை, அருந்ததி மாஸ்டர்;,சுகன்,(காலம் சென்ற) கலைச்செல்வன போன்ற புத்தி ஜீவிகள் ஆரம்பித்தனர்.புpன்னர் ‘பள்ளம்’ என்ற சிறு பத்திரிகை சுகன், (காலம் சென்ற) கலைச்செல்வனால் நடத்தப்பட்டது.
‘எக்ஸில்’ என்ற பத்திரிகை பாரிஸலிருந்து, லக்ஷ்மி. விஜி, கற்சுறா, ஞானம் போன்றோரால் தொடங்கப் பட்டது. புpன்னர் அதிலிருந்த பிரிந்த லக்ஷ்மி போன்றோரால் ‘உயிர் நிழல்கள்’ பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டது.
‘கண் என்ற பெண்கள் சஞ்சிகையை லஷ்மி நடத்தினார்.
காவலுர் ஜெகனாதனின் தம்பியான குகநாதன் அவர்களால் 1990ம் நLப்பகுதியில் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டது. ‘ வித்தியாவின் குழந்தை’ போன்ற எனது படைப்புக்கள் அப்பத்திரிகையில் பிரசுரமானது
லண்டன்:
இலங்கையிலிருந்து பத்திரிகையாளராக லண்டனுக்கு புலம் பெயர்ந்த இராஜகோபால், மகாலிங்கசிவம் (மாலி) போன்றேரால் ‘ புதினம்’ பத்திரிகை லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையிலிருந்து பிரிந்து போன மாலி ‘நாழிகை’ என்ற கலை இலக்கிய பத்திரிiயை ஆரம்பித்ததர் 90ம் ஆண்டின் ஆரம்பத்தில் சபேசன் போன்றோரின் ஆர்வத்தால் ‘ பனிமலா’ பத்திரிகை செளிவந்தது.
நோர்வே:
நோர்வே நாட்டிலிருந்து ‘சுவடு’ என்ற பத்திரிகையும்,60ம் ஆண்டின் நடுப் பகுதிகளில் ‘சக்தி’ ‘சுமைகள்’ என்ற சிறு பத்திரிகைகள் வெளிவந்தன. 2005மு; ஆண்டிலிருந்து,தமயந்தி என்பரால்’ உயிர்மை’ என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஹொலணட்:
சார்ள்ஸ், பத்மமனோகரன் போன்றோரால்’ ஆனா ஆவன்னா. ஏன்ற பத்திரிகை நடத்தப்பட்டது.
டென்மார்க்: ‘சஞ்சீவி’ ‘இனி’ என்ற சிறு பத்திரிகைகள் டென்மார்க் நாட்டில் வாழ்ந்த தமிழ் புத்தி ஜீவிகளால் நடத்தப்பட்டது.
அவுஸ்திரேலியா: டாக்டர் நொயல் நடேசன், முருகபூபதி அவர்களுடன் சேர்ந்த பதினைந்து பேர் கொண்ட குழுவுடன் ‘உதயம்’ சிறுபத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. புலம் பெயாந்த நாடுகளிற் தொடங்கப்பட்ட பல சிறு பத்திரிகைகள் முகம் கொண்ட பல எதிர்ப்புக்களைச் சந்தித்தாலும் ‘ உதயம் பத்திரிகை; இன்னும் வெளி வந்து கொண்டிருக்கிறது.
இப்படிப் பத்திரிகைளைத் தொடங்கிய பெரும்பாலோனோர் இளம் எழத்தாளர்கள் என்றாலும் இலங்கையிலிருந்த முற்போக்கு இலக்கிய பாரம்பரியம் இவர்களின் எழுத்துக்களில் பிரதிபலித்தது.
அன்றைய காலகட்டத்தில் எனது பல படைப்புக்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வந்த 75 விகிதமான பத்திரிகைகளில் வெளிவந்தன. அகதிகளாக வந்த பெண்களின் துன்பத்தை விளக்கும் ‘வளர்மதியும் வாஷிங் மெசினும்’, றோஸா லஷ்சம்பெர்க் ஸ்ரா’, அரசியல்வாதிகளின் இரட்டைத்தனத்தை விளக்கும்,’இரவில் வந்தவர்’,’அட்டைப்பட முகங்கள்’, சகோதரப் படுகொலைகளை அடிப்படையாக வைத்து எழுதிய’நேற்றைய நண்பன்’, ஆனா ஆவன்னா’,’ஒரு சரித்திரம் சரிகிறது’ இலங்கை அரசு தமிழருக்குச் செய்த கொடுமைகளை அடிப்படையாக வைத்தெழுதிய’சுற்றி வளைப்பு’ ‘அரைகுறையடிமைகள்’,ஓநாய்கள்’, பெண்ணியம் பற்றி எழுதிய ‘ நாளைக்கு இன்னொருத்தன்’ முதலிரவுக்கு அடுத்த நாள்”இனனும்; சில அரங்கேற்றங்ள்’ போன்ற பிரபலமான எனது சிறுகதைகள் பல புலம் பெயர் நாடுகளிலிருந்து வந்த சிறு பத்திரிகளில் பிரசுரமானவையே.
1990மு; ஆண்டுக்குப் பின், இலங்கையரின் புலம் பெயர்ந்த இலக்கியம், இந்திய இலக்கியத் துறையில் களமிறங்கியது. இலங்கைத் தமிழரின் புலம் பெயர்ந்த இலக்கியம் ஒட்டு மொத்தமான, தமிழ் இலக்கியத் துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. புலம் பெயர் இலக்கித்தில் காணப்பட்ட பன்முகப் பார்வை இந்தியாவின் பல பத்திரிகையாளர்களைக் கவர்ந்தது.
புலம் பெயர் எழுத்தாளர்கள் இந்திய வாசர்களுக்கு அறிமுமானார்கள். எனது படைப்புக்கள் இந்தியாவின் பல தரப்பட்ட பத்திரிகைகளிலும் வெளிவந்தன. பல விருதுகளையும் பெற்றன. ஜேர்மனி கருணாகரமூர்த்தியும், கனடிய முத்துலிங்கமும் லண்டன் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் இந்திய எழுத்தாளர்களால் விரும்பி வாசிக்கப் பட்டார்கள்.. இந்தியா ருடெ’ பத்திரிகையின் விசேட பக்க எழுத்தாளர்களாக முத்துலிங்கமும் நானும் கவுரவிக்கப்பட்டோம்.
லண்டனிலுள்ள தமிழர்களின் தமிழ் இலக்கிய சரித்திரத்தில் முதன் முதலாக எனது நாவல் 1991ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது பல நாவல்களும் வேறு பலரின் படைப்புக்களும் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின.
ஐரொப்பிய நாடுகளில் நடக்கும் .லக்கிய சந்திப்பு பெண்கள் சந்திப்பு சார்பாகப் புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தாங்கிய பல மலர்கள் வெளியிடப்பட்டன.
இலக்கிய சந்திப்பு சார்பாக புலம் பெயர் ஏழத்தாளர்களின் படைப்புக்களைத் தாங்கிய’ இனியும் சூழ் கொள்'(1998) என்ற மலரும் பெண்கள் சந்திப்பு மலராக’ புது உலகம் எமை நோக்கி’ என்ற மலர் 1991லும் வெளியிடப்பட்டது.
90ம் ஆண்டின் முற்பகுதியில். இலங்கை இலக்கிய ஆர்வலரான பத்மனாப ஐயர் லண்டன வந்து சேர்ந்தார். லண்டனில் தமிழ் அகதிகளுக்கான அமைப்பொன்றில் பணி புரிந்த காலகட்டத்தில், அந்த ஸ்தாபனத்தின் பத்திரிகையின் வருடாந்த இதழில் புலம் பெயர்ந்த எழுத்தாழர்கள் பலரின் படைப்புக்களுக்கும் இடம் கொடுத்தார். ‘அகதி’ என்றோரு பத்திரிகையைத் தொடங்கிப் பல இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டார். அவரால்,முதற்தடவையாக,புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய மலர் ‘கிழக்கும் மேற்கும்’90ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘கண்ணில் தெரியுது ஒரு வானம்’ ‘புதிய காலடி; ‘என்று மேலுமிரு புலம் பெயர் எழுத்தாழர்கள் தொகுதிகளையும் வெளியிட்டார்.
அதேபோல் அவஸ்திரேலியாவிலிருக்கும் முருகபூபதியால் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்கள் வெளியிடப்பட்டன. துமிழ் இலக்கிய ஆர்வலர்களால் மட்டமல்லாது,புலம் பெயர்ந்த தமிழரின் படைப்புக்களை பாரிஸ் கலாச்சார ஸ்தாபனம் ஒன்றும் பிரன்ஸ் மொழியில் 2000ம் ஆண்டு தொகுத்து வெளியிட்டது. அதன் பின் நீண்ட நாட்களுக்குப் பின, 2013ல் இலங்கையில் நடந்த ‘இலக்கிய சந்திப்பு’ கூடலில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரின் படைப்புக்களோடு ‘குவர்னிக்கா’ மலர் வந்திருக்கிது. இதில் 60க்கும் மேற்பட்ட இலங்கை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.
80மு; அண்டின் நடுப்புகதியிலிருந்து 90ம் ஆண்டின் நடுப்பகுதிவரை மிகத்திறமையாகச் செயற்பட்ட பலம்பெயர் தமிழர்களின் இலக்கியத் துறை சட்டென்று பல பிரச்சினைகளை முகம்கொடுக்கத் தொடங்கியது.
புலம் பெயர்ந்த நாடுகளில்; நடந்த வன் முறைகளால் புலம் பெயர் இலக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
கனடாவில் ‘தாயகம்’ பத்திரிகை ஆசிரியர் அவரின் கருத்துக்களைத் தாங்க முடியாதவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பாரிஸ் நகரத்தில் இலக்கியவாதியான சபாலிங்கம் கொலை செய்யப்பட்டாh (1994);. பல சிறு பத்திரிகையாளர்கள் பயமுறுத்தப் பட்டார்கள். 1995ம் ஆண்டுக்குப்பின் சிறு பத்திரிகைகளின் வளர்ச்சி படிப்படியாக அழியத் தொடங்கியது. சபாரத்தினத்தின் கொலை பல எழுத்தாளர்களின் மனதில் பீதியை உண்டாக்கியது.
இன்று, தமிழர்களின் படைப்புக்கள் பெரிதாக வளர்வதாகச் சொல்ல முடியாது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலராகமட்டும் குறைந்து விட்டார்கள். அத்துடன் இணையத்தளம் வந்து விட்டதாலும் பல தரப் பட்ட அரசியல் மாற்றங்களாலும்,இன்றைய புலம் பெயர்ந்த தமிழரின் இலக்கிய உலகம் வித்தியாசமாக மாறிவிட்டது.
அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளிற் பிறந்து வளரும் குழந்தைகள், தங்களுக்குப் பரிச்சியமற்ற தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு தூரம் அக்கறை காட்டுவார்கள் என்பதும் கேள்விக்குரிய விடயமாகும்.
ஆனால், புலம் பெயர்ந்த தமிழரின் படைப்புக்களில் இலங்கைத் தமிழர்கள் அக்கறை காட்டுகிறார்கள். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில காணும் பன்முகத் தன்மையை அவர்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
கலிங்க நாட்டிலிருந்து, அரசியல் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்த தமிழர்கள், கிழக்கிலங்கையில் தங்கள் கலாச்சார, சமய விழுமியங்களை பாரம்பரியமாகக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுபோல், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் தங்களின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பார்கள். ஆனால், எதிர்காலத்தில் தமிழ் மொழி மூலம் இலக்கியம் படைப்பார்களா என்பது கேள்விக்குறியான விடயமாகும்.