The Tamils

கூட்டமொன்று போடுங்கள் காட்டமாகப பேசுங்கள்.

நாட்டமற்ற கருத்துக்களை வெட்கமின்றிக் கொட்டுங்கள்

வீட்டிலெந்த உணவுமின்றி விழி நிறைந்த கண்களுடன்.

வாட்டிவிடும் வறுமையினால் வாடும் தமிழில் வாழுங்கள்.

ஈழம் என்ற பெயரினிலே கோடி சேர்ச்கும் மிருகங்களே

ஏழை கண்ணீர் வாளொக்கும் என்ற மொழி தெரியாதா

காலம் தொடர் வஞ்சகரே நாளைவரும் உங்களுக்கும்

நாலும் இழந்திடுவீர் நன்மை மனம் அருகிவிட்டால்

Posted in Tamil Articles | Leave a comment

கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.’ (‘Women in leadership: Achieving an equal future in a covid-19 world’) – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –

கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.’ (‘Women in leadership: Achieving an equal future in a covid-19 world’) – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 

– – சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. –


முன்னுரை:

‘Women in leadership: Achieving an equal future in a covid-19 world’ கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.’ என்ற தலைப்பு எனது கட்டுரையின்; பொருளாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அகில உலக மாதர் தினவிழா பங்குனி எட்டாம் திகதி தொடங்குகிறது.இவ்வருட மாதர் தினவைபவங்கள்,’கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.’ இந்தக் கருத்துப் பொருள் சார்ந்த தலைப்பை ஐக்கிய நாடுகள்நாடுகள் அறிவித்திருக்கிறது. இன்று பொதுவாழ்வு,உத்தியோகத்துறைறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், இனி,எதிர்வரும் காலத்தில் உலகின் பல பணிகளிலும் தங்களைப் பிணைத்துக் கொண்டு சாதனை படைக்கவிருக்கும்; இளம் பெண் தலைமுறையினரும், ஆண்களுக்குச் சமமானமுறையில் பல துறைகளிலு’சமத்துவம்’ பெறபேண்டும் என்று.ஐ.நா.சபை அழுத்திச் சொல்கிறது. மிகவும் கொடுமையான கோவிட-19 கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்,ஒட்டுமொத்த உலகின், பாதுகாப்பு,கல்வி,சுதந்திரம்,பொருளாதார வளர்ச்சி என்பன, சீருடன் வளர ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொடிய வைரசு எடுத்துக்காட்டியிருக்கிறது. உலகத்தில் பல்வித வேறுபாடுகளால் மக்கள் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டு, முரண்பட்டுக்கொண்டு பல பிரச்சினைகளையுண்டாக்கிப் பிரிந்து வாழும் அத்தனை மனிதர்களும்,இயற்கையின் பார்வையில் ஒன்றுதான் என்பதை இந்தக் கொடிய  கோவிட் 19 வைரஸ்,.சாதி.மத,இன,நிற பேதமின்றித் தாக்கியழித்துக் கொண்டிருப்பதிலிருந்த எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையில்:

1.அகில உலக மாதர் தின வரலாறு,
2.கோவிட் கால கட்டத்திலும் மனித மேன்மைக்கும் உயர்வுக்கும் பாடுபடுவதாக உலக ஊடகங்களால் அங்கிகரிக்கப்பட்ட பெண் ஆளுமைகள்,
3. முக்கியமாக இந்திய நாட்டைச்சேர்ந்த அல்லது இந்திய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் சாதனையாளர்கள்ஒரு சிலரைப் பற்றிக் பற்றிக் குறிப்பிடுகிறேன்.


4.அத்துடன், இனறைய கால கட்டத்தில் தோற்று நோய் தடுப்பூசியான வக்ஸின் தயாரிப்பில் பெண்கள் சாதனை பற்றிய குறிப்புகள்.
5.கடைசியாக இன்றைய இளம் தலைமுறை தங்களையும் மேம்படுத்தி, தங்களைப் போன்ற ஒடுக்கப் பட்ட,அடக்கப் பட்ட,வசசதியற்ற பெண்களை மேம்படுத்த உதவுவது எதிர்காலம் முன்னேற மிகவும் அத்தியாவசியம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இக்கட்டுரையில் அவ்வப்போது ஆங்கிலச் சொற்கள் வருகின்றன.அவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் இணைந்தது என்றபடியால் அவற்றை அப்படியே எழுதியிருக்கிறேன். நேற்று,இக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, அகில உலகிலும்,உலகைப் பயங்கரமாக உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 என்ற தொற்று நோயால், 2.6 கோடி மக்கள்,கோவிட்-19 வைரசினால தாக்கத்தால் இறந்திருக்கிறார்கள்.117 கோடி மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 66.4 கோடி மக்கள் நோயிலிருந்து தப்பியிருக்கிறார்கள். ஓட்டுமொத்த உலகமும்,நோயால் மட்டுமன்றிப் பல துறைகளிலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. பொருளாதாரம் அதலபாதாளத்திறகுப் போய்க் கொண்டிருக்கிறது. வறுமையும்,இல்லாமையும் மனித இனத்தை வாட்டுகிறது.பெரும் பாலான மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதே ஒரு சவாலாக இருக்கிறது.இந்தக் கொடிய கோவிட்-19லிருந்து விடுபட பல்விதத் துறைகளிலும் பெண்களும் ஆண்களும் தற்போது இணைந்து இடைவிடாது பாடுபடுகிறார்கள். நான் வாழும் இங்கிலாந்தில் 124.000 மக்கள் இறந்திருக்கிறார்கள்


காலம் காலமாகப் பல விதத்திலும் ஒடுக்கப் பட்டு .அடக்கப்படு வாழ்ந்த கொண்டிருக்கும் பெண்கள், இந்தக் கொடிய கொவிட்-19 கால கட்டத்தில என்னவென்று,தங்களை எதிர் நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுத்துத் தங்கள் ஆளுமையையும்,சுயமையையும் நிலைநிறுத்தும் சமத்துவ வெற்றியை அடையவேண்டும் என்பதை இக்கட்டுரை ஆயவிருக்கிறது. பெண்களின், போராட்டங்களும், கல்வியின் மேன்மையும், வெற்றிகளும் பற்றிய சில சரித்திரக்குறிப்புக்கள் இக்கட்டுரையில்  பதிவிடப் பட்டிருக்கிறது,அத்துடன், இன்றைய நிகழ்காலகால கட்டத்தில், உலக மட்டத்தில் பரவலாகப் பெருமையாய்ப் பேசப்படும் பெண்களின் சாதிப்புக்கள் சிலவற்றையும் குறிப்பிடுகிறது.

அகில உலக மாதர் தின விழா பற்றிய சிறு சரித்திரக் குறிப்பு:
110;ம் ஆண்டு,அகில உலக மாதர்தினத்தைக் கொண்டாடப் பலதரப்பட்ட.பிரசங்கள்.ஊர்வலங்கள், நாடகங்கள், என்று பல நிகழ்வுகள் வழக்கம்போல் இன்று, மார்ச் எட்டாம் திகதியிலுpருந்து தொடங்குகின்றன .இந்த விழாவுக்கானஆரம்பம் பற்றிய சரித்திரத்தை மிகவும் சுருக்கமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். ஏனென்றால், கோவிட் போன்ற கொடிய தொற்று நோய்கள், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம்,போர்சார்ந்த அல்லது புரட்சி சார்ந்த அரசியல் மாற்றங்கள்,என்பன வரும்போது அதில் முக்கியமாகப் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர்.ஆனாலும், அந்தச் சோதனையான காலகட்டத்தில் தனது குடும்பத்தினதும்;, தான் சார்ந்து வாழும் சமுதாயத்தினதும் நன்மாற்றங்களுக்காகப் போராடுவதிலும்; பெண்களின் பங்கும் கணிசமாகவிருந்திருக்கின்றன என்பதைப் பலசரித்திரங்கள் பதிவிட்டிருக்கின்றன. 19ம் நூற்றாண்டின் கடைசி கால கட்டத்திருந்து உலகில் பல அரசியல்,பொருளாதார, சமூகவியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.அந்த மாற்ங்களில் பெண்களின் பங்;கும் கணிசமாகவிருந்தன. மேற்குலக சரித்திரத்தில், அமெரிக்க சுதந்திரப் போர்,
19-5.1775தொடக்கம்- 3.9.1783,அவர்களை அடக்க நினைத்த பிரித்தானிய பேரருசுக்கெதிராக நடந்தது. பிரான்சிய அரசரின் கொடுமைகளுககெதிராக பொதுமக்களால்,தொடங்கிய புரட்சி,1789 தொடக்கம் 1799 வரை நடந்தது. உலகம் பல விதத்திலும் மாறியது. மக்கள் பல நாடுகளில் பல்வேறு காரணங்களால் குடியேறினார்கள். பொருளாதாரத்துறை பன்முக மாற்றங்களையுண்டாக்கியது. தொழிற்சாலைகள் உருவாகின.பெண்களின் உழைப்பு ஒர நாட்டின் பொரளாதார விருத்திக்கு அத்தியாவசியமான நிலையைக் கண்டது. 1850ம் ஆண்டுகளில்,ஐரோப்பிய, அமெரிக்க பொருளாதார விருத்தியில் அபரிமித மாற்றங்கள் உண்டாகத் தொடங்கின. அமெரிக்கத்,தொழிற்சாலைகள்pல்,தொழிலாளர்களுக்கான உரிமைகள் பற்றிய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.இந்தத் தொழிற்சாலைகயில் பெரும்பாலான தொகையில் பெண்கள் பணிபுரிந்தார்கள். அத்துடன் கறுப்பு மக்களை அடிமையாக நடத்துவதற்கு எதிராகவும் பல குரல்கள்,பிரி;த்தானியாவிலும் அமெரிக்காவிலும் எழுந்தன.இதில் முக்கியமானவர்கள் மனித நேயமுள்ள பல பெண்களாகும்.

அக்கால கட்டத்தில்.கறுப்பு மக்களை அடிமையாக வைத்திருப்பதற்கு எதிரான சட்டம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம்லிங்கன் அவர்களால் முன்னெடுக்கப் பட்டது. அதை எதிர்த்த வெள்ளையினவாதம் நிறைந்த தென்பகுதி அமெரிக்கருக்கும்
மனித நேயம். சமத்துவ சமுதாயம் என்பதில் அக்கறை கொண்ட வடபகுதி அமெரிக்கருக்குமிடையிலான உள்நாட்டுப்போர் 12.4. 1861ல் ஆரம்பித்து 1885ல் முடிவுற்றது.அதைத் தொடர்ந்து.அமெரிக்கரின் சமகவியலில் பல மாற்றங்கள் நடந்தன.போரினால் நிலச் சொந்தக்காரர்களான கணவரையிழந்த பெண்கள், சொத்துள்ள பொருளாதாரநிலை,பொறுப்பான நிர்வாகத்தை ஏற்றக்கொண்டார்கள். இங்கிலாந்தில் அடிமைகளின் விடுதலையை முன்வைத்துப் பெண்களால் எடுக்கப் பட்ட சில செயற்பாடுகள்தான் 1780-1860ம் ஆண்டுகளில் பிரித்தானிய பெண்ணியவாத சிந்தனைக்கு வித்திட்டது என்கிறார்இ; ‘கிலாரா மிட்ஜெலி (1991.’ஜென்ட்டர் அன்ட் ஹிஸ்டோரி ‘பக்1).

ஐரோப்பிய நாடுகளிலும் அரசியல் குழப்பங்கள் தலையிட்டன. இரஸ்ய ஆரசக்கு எதிராக,மக்களை வதைக்கும் அரசியல்,சமுகநிலை காரணங்களை முன்வைத்து, 1917-1922 வரை புரட்சி நடந்து வெற்றி பெற்றது. மேற்குறிப் பிட்ட சரித்திர நிகழ்வுகள் பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பல நாடுகளில் பல விதத்தில் பல மட்டங்களில் மாற்றியமைத்தன. இவை அத்தனையும் பெண்களின் ஈடுபாட்டுடன் முன் எடுக்கப் பட்ட போராட்டங்கள் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.. ஏனென்றால் இந்தப் போராட்ட அனுபவங்கள்தான்,தங்களின் தனித்துவத்தை,விலிமையை, சுதந்திர சிந்தனைiயை விரிவுபடுத்தி, பெண்களின் வரலாற்றை மாற்றிய காரணிகளாக அமைந்தன என்று சொல்லப் படுகிறது.

மேற்கு நாடுகளில் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள், பிரித்தானிய காலனித்து நாடுகளிலும் பிரதி பலித்தன.பெண்களின் வாழ்க்கை மேம்பாடுகளுக்கு மனிதநேயமுள்ளவர்களும், முற்போக்கு சிந்தனையுமுள்ள ஆண்கள் பலர் குரல் கொடுத்தார்கள்.பிரித்தானிய காலனித்துவத்தில் ‘வைரமுடி’ எனப் போற்றப்பட்ட இந்தியாவில்,பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகவிருந்த கொடுமையான பல பழமையான சட்டங்கள் மாற்றப்பட்டன. வில்லியம் கேரே,எல்பின்ஸ்டன் போன்ற ஆங்கிலேய அதிகாரிகள், உடன்கட்டை ஏறுவதின் கொடுமையை விளக்கி அறிக்கை சமர்ப்பித்திருந்தாலும்,அக்கால அரச நிர்வாகம் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதால், ராஜாராம் மோகன்ராஜ் என்பவர் உடன் கட்டை ஏற்றுவதைத் தடைசெய்யக்கோரி பெரும் கிளர்ச்சி செய்தார்.இதன் எதிரொலியாக,1829ம் ஆண்டிலிருந்து உடன்கட்டை ஏற்றுவது சட்டவிரோதமானது. .1795-1804ம் ஆண்டுகால கட்டத்தில் குழந்தைகளைக் கொல்வது தடைசெய்யப் பட்டது.1856ம் ஆண்டு இந்திய விதவைப் பெண்கள் மறுமணச் சட்டம் பிறரப்பிக்கப் பட்டது.

மேற்கு நாடுகளில் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள், பிரித்தானிய காலனித்து நாடுகளிலும் பிரதி பலித்தன.பெண்களின் வாழ்க்கை மேம்பாடுகளுக்கு மனிதநேயமுள்ளவர்களும், முற்போக்கு சிந்தனையுமுள்ள ஆண்கள் பலர் குரல் கொடுத்தார்கள்.பிரித்தானிய காலனித்துவத்தில் ‘வைரமுடி’ எனப் போற்றப்பட்ட இந்தியாவில்,பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகவிருந்த கொடுமையான பல பழமையான சட்டங்கள் மாற்றப்பட்டன. வில்லியம் கேரே,எல்பின்ஸ்டன் போன்ற ஆங்கிலேய அதிகாரிகள், உடன்கட்டை ஏறுவதின் கொடுமையை விளக்கி அறிக்கை சமர்ப்பித்திருந்தாலும்,அக்கால அரச நிர்வாகம் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதால், ராஜாராம் மோகன்ராஜ் என்பவர் உடன் கட்டை ஏற்றுவதைத் தடைசெய்யக்கோரி பெரும் கிளர்ச்சி செய்தார்.இதன் எதிரொலியாக,1829ம் ஆண்டிலிருந்து உடன்கட்டை ஏற்றுவது சட்டவிரோதமானது. .1795-1804ம் ஆண்டுகால கட்டத்தில் குழந்தைகளைக் கொல்வது தடைசெய்யப் பட்டது.1856ம் ஆண்டு இந்திய விதவைப் பெண்கள் மறுமணச் சட்டம் பிறரப்பிக்கப் பட்டது.
பெண்களின் உயர்வுக்குக் கல்வி இன்றியமையாதது. உலகின் பல இடங்களில் கல்வி ஆரம்பமானது. அமெரிக்கவில்,நியுயோர்க் நகர ஜெனிவா மெடிகல் கல்லூரியில்,1849ல் பிரித்தானியாவில் பிறந்து அமெரிக்காவில குடிவாழ்ந்த, எலிசபெத் பளாக்வெல் என்ற பெண்மணி; டாக்டராகப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு,லண்டனில் பெண்களின் மேற்படிப்புக்காக பெட்போர்ட் கல்லூரி திறக்கப்பட்டது. இந்தியாவில் பெண்களுக்காக செக்கண்டரி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1850ம் ஆண்டு தொடக்கம்,அமெரிக்கத் தொழிற்சாலைகளில், பெண்கள்,தங்கள் மேம்பாட்டுக்குப் போரடிய காலத்தில்,இந்தியாவிலும் ‘பெண்களின்’ தனித்துவம் சார்ந்த பல மாற்றங்கள் நடந்தன.1875ல் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தயாநந்த சரஸ்வதி,வடமொழி வல்லுனர் பெண்களுக்கான பள்ளிகளை ஆரம்பித்தார். விவேகானந்தின் சிஸ்யையான நிவேதிதா தேவி 1898ல் இந்திய வந்து,பெண்கள் கல்வியை முன்னெடுத்தார். அதற்கு முதலே,1858ல் பிறந்து-1922ல் பிறந்தவரான அனந்தசாஸ்திரி என்ற பிராமணரானத் தந்தை தன் மனைவிக்கும் அவரின்ன மகள்; ராமாபாயக்கும்;; சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார்.

இந்தியாவில் பெண்ணிய இயக்கத்தில் முன்னணியிலிருந்தவர் மடம் ருஸ்தகாமா என்ற பெண்மணி என்ற பதிவும் இருக்கிறது.இவர், 1907ம் ஆண்டில,ஜேர்மன் நகர்,ஸ்ருட்கார்டில்; நடந்த சோசலிஸ்ட் சர்வதேச மகாநாட்டில் லெனின் என்ற பெரும் தலைவருடன் மேடையேறி,’இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர்த்தித் தூக்கி ‘வந்தேமாதரம்’ என்ற தாரகத்தை வெளியுலகம் தெரியப் பண்ணியவர் என்று,’சமுதாய வளர்ச்சியும் பெண்களும்’ என்ற தலைப்பில்,’மகளிர் இயக்கம்’ என்ற புத்தகத்தில் திரு பாஸா என்பரால் 1976ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

1900ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் பிரித்தானியாவில்,’ பெண்களுக்கும் வாக்குரிமை’ வேண்டும் என்ற குரல் திருமதி .மிலிசென்ட் பவுசெட்.திருமதி எமெலின் பாங்கேஸ்ட போன்றவர்களின் தலைமையில் உரக்கத் தொடங்கியது.வாக்குரிமைக்குப் பல பெண்கள் வீதியிலிறங்கிப் பல்விதப் போராட்டங்களை 1897லிருந்து ஆண்டு காலத்தில் செய்தார்கள். இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தபோது,அக்காலத்தில் பிரிட்டனில் வாழ்ந்த,இந்தியப் பெண்களான திருமதி .பி.எல.;றோய், திருமதி பக்வத் போலா நவுத்,போன்றவர்கள் 17.6.1911ம் ஆண்டு லண்டனில் நடந்த போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக,பிரித்தானிய,பிறிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியையான மி;த்ரா முக்கர்ஜி,என்பரால் 2017ல் பதிவிடப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில்,1902ம் ஆண்டில் திருமதி மேரி ஹரிஸ் ஜோன்ஸ்(1837-1930) என்பவர் தொழிலாளர்களைய ஒன்றிணைத்தவர்களில் முக்கியமானவர் என்று சொல்லப் படுகிறது.தொழிற்சங்கத்தையும் உண்டாக்கினார். அமெரிக்க தொழிற்சாலைகளில் தெரிழிலாளர்கள் விடயங்களில் பல மாற்றங்கள் தொடர்ந்தன. அமெரிக்காவில் உடைத்தொழிற்சாலைகளில் வேலைசெய்த பெண்களுக்கான போராட்டம் 28.2.1909ம் ஆண்டு,வீதிகளில் நடந்தது. இது’ பெண்களின் தேசிய’ நாள் என்று அவர்கள் அதைப் பிரகடனப் படுத்தினார்கள்.

அடுத்த வருடம்,1910ம் ஆண்டு ‘சோசலிஸ்ட் இன்டநாஸனல்’ அமைப்பு, கோபன்ஹேகன் என்ற நகரில் பெண்களின் வாக்குரிமை,மேம்பாட்டு உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து அகில உலக மாதர் தின விழாவைக் கொண்டாடினார்கள்.
1911ல்,ஆஸ்திரிய, டென்மார்க்,ஜேர்மன்,சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அகில உலகப் பெண்கள் தின விழாவை,மார்ச் 19ல் கொண்டாடினார்கள். ஒரு கோடிக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டார்கள்.இவர்களின் கோரிக்கைகள், பெண்களுக்கான வாக்குரிமை,தொழிலாளர்களின் உரிமைகள்,பெண்களுக்கான கல்வி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகவிருந்தன. அதைத் தொடர்ந்து,பல மகாநாடுகள்,பாரிஸ் (பிரான்ஸ் 1945);,புடாபெஸ்ட்(ஹங்கேரி 49), கோபன்ஹேகன்(டென்மார்க,53;), வியன்னா(ஆஸ்ட்ரியா,58),மொஸ்கோ (இரஸ்யா, 63)ஹெல்ஸிங்கி (பின்லாந்து 69) பேர்லின்(மேற்கு ஜேர்மனி 75) போன்ற, பல நாடுகளில் நடந்தன. கடைசியாக,1975ம் ஆண்டு பேர்லின் நகரில் நடந்த அகில உலக மாதர் தின விழாவுக்கு 140 நாடுகளிலிருந்து 2000 பிரதிநிதிகள் வந்திருந்தார்களஇந்தியாவிலிருந்து மட்டும் 145 பிரதிநிதிகள்,இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான திருமதி புரபி முகர்ஜி தலையில் பங்கு பற்றினார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த 140 நாட்டு; பிரதி நிதிகளாலும்.750 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இன, மத, நிற, அரசியல் வேறுபாடற்ற,பெண்களின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளுக்கு இந்த மகாநாடு அத்திவாரமிட்டது.

ஐக்கிய நாடுகள் சபை,1975ம் ஆண்டு, பங்குனி 8ம் திகதி,அகில உலக மாதர் தினம்; கொண்டாடும்’நாளாகப் பிரகடனப் படுத்திக் கொண்டாடியது.அன்று தொடக்கம் பங்குனி எட்டாம் திகதியில்,உலகெங்கும் தொடரும் பெண்களின் போராட்டங்கள்,வெற்றிகள்,
சவால்கள் பற்றிய நூற்றுக்; கணக்கான கூட்டங்கள், பல்லாயிரம் பெண்காளால் உலகெங்கும் முன்னெடுக்கப் படுகிறத.

இவ்வருட அகில உலக மாதர் தினம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி:

2019ம் ஆண்டு,மார்கழி மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்ட கொடிய கோவிட்-19 வைரஸ்,ஒரு குறுகிய காலத்தற்குள் உலகத்தையே தன் பிடிக்கள் அழுத்திக் கொண்டிருக்கிறது.. இதை ஒழித்துக் கட்ட,இந்தக் கொடிய நோயிலிருந்து விடுபட உலகநாடுகளிலுள்ள 87 நாடுகளில் ஆய்வுகள் நடக்கினறன. இதில் 3.5 விதமே பெண்களுக்கக் கொடுக்கப் பட்டிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில 22 நாடுகளில் பெண்கள் ஆட்சி செய்கிறார்கள்.ஆனால் பாராளுமன்றங்களில்,;24.9 விகிதமான பெண்கள மட்டுமே மக்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், பெண்களுக்கான சமத்துவ நிலையையடைய இன்னும் 130 வருடங்கள் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோவிட் கால கட்டத்தில் பெண்கள் பலர்,மக்களுக்கான பணிகளின் பன்முகத் துறைகளான, சகாதாரப்பணிகள், விஞ்ஞானிகள், வைத்தியர்கள் என்று பலவற்றில் ஈடுபடுகிறார்கள்.ஆனால் அவர்களின் ஊதியமோ,அதே வேலை செய்யும் ஆண்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட 11 விகிதம் குறைவாகவேயுள்ளது. இப்படிப் பல விடயங்களை முன்னெடுத்து, ஐக்கிய நாடுகள் சபை ,இவ்வருட அகில உலக பெண்கள் தினமபெண்தலைமைத்துவத்தை முன்னிலப் படுத்துகிறது.எதிர்காலப் பெண்களின் சாதனைகளுக்குப் பெண்களின் தலைமைத்துவம் மிக முக்கியமான விடயமாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

கோவிட்-19 கால கட்டத்திலும் பல பெண் ஆளுமைகள் பல துறைகளில் உலகத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். அவர்களில், ஜேர்மன் நாட்டுத் தலைவி, ஆங்கிலா மேர்கல், ஐரோப்பிய மத்தியவங்கித் தலைவியான,கிறிஸ்டின் லாகார்டஸ்,அமெரிக்க உதவி ஜனாதிபதி கமலா ஹரிஸ், ஐரொப்பிய ஒன்றியத் தலைவி யுறசில்லா வான் டென் லேயன், உலகப் பிரசித்தி பெற்ற தொழிலதிபர் பில் கேட்ஸ் அவர்களின் ஸ்தானத்தின் இணை அமைப்பாளர் மேரி பாரா,அமெரிக்க அரசின் எதிர்க்கட்சித் தலைவியாயிருந்த நான்சி பொலோசி.ஸ்பெயின் நாட்டின் பிரபல வங்கியைச் சேர்ந்த ஆனா பட்ரீசியா போத்,அமெரிக்காவின் பிரபல பைனானஸியல் நிறுவனத்தைச் சேர்ந்த அடிகேயில் ஜோன்ஸன்,அமெரிக்காவின் பிரபல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கெயில் கோஸியாரா போர்ட்ரெக்ஸ் போன்ற பத்து பெண்கள்,தங்கள் பன்முகத் தலைமைத்துத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

கடந்த வருடம் பிரித்தானிய பி.பி.சி. பெண்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் தனித்துவமும், ஆளுமையுடனும், கோவிட்கால கட்டமான 2020ல்,பல நாடுகளைச் சேர்ந்த பல துறைகளில் பணி புரிந்த 100 பெண்களை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள்.
அவர்களில் அதி பெரு திறமை வாயந்த இந்தியப் பெண்களும்,வேறு நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழிப் பெண்களும் அடங்குவர்.

1-மானசி ஜோஸி: இவர் ஒரு உலக பரா பாட்மின்டன் சம்பியன். வலது குறைந்தவர் என்றாலும் தனது திறமையால் இந்த உலகில் இவரது திறதை பிரகாசிக்கிறது.இவர் ஒரு என்ஜினியர்.இவரை,பெண்களை ஊக்குவிக்கும் எதிர்காலத் தலைவிகளில் ஒருத்தியாக, ‘டைம்ஸ்’ பத்திரிகை பதிவிட்டிருக்கிறது. உடல் வலிமை பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் திறமையால் முன்னுக்கு வர இவர் ஒரு கலங்கரை விளக்காகக் கணிக்கப் படுகிறார். இவர்,என்ன சொல்கிறார் என்றால், ‘2020ம் ஆண்டு பெண்களுக்கப் பல விதத்திலும் மிகவும் சோதனையான கால கட்டமாகும். கடைசிவரைக்கும் இந்தச் சோதனைகள் எங்களை வெற்றி கொள்ள நாங்கள் இடம் கொடுக்க முடியாது. விடாப்பிடியாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் திறமையைக்காட்ட முயலுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக.ஒவ்வொரு நாளும்,உங்கள் நேரத்தை உங்களுக்காக சிந்திக்கக்; கொஞ்சம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்’ என்கிறார்.

2.- இசைவாணிஇவர் ஒரு கர்நாடக சந்கீதப் பாடகி.மிகவும் சாதாரண குடும்பத்தில்,சென்னையின் வடக்குப் பகுதியில் பிறந்தவர். ஆண்கள் கோலோச்சிய ஒரு துறையில் தனது திறமையால் முன்னேறி,தன்னைப்போல் இசையில் ஆர்வமுள்ள சாதாரண
பெண்களுக்கு ஊக்கமூட்டும் முன்னோடியாகிறார் என்ற பி.பி.சி எழுதியிருக்கிறது. இவரின் கூற்றுப்படி,’இந்த உலகம் 2020ம் ஆண்டில் மிகவும் மாறிவிட்டது. ஆனால் பெண்களின் வாழ்க்கைக்கான மாற்றம் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.பெண்கள இன்று,தங்களுக்கெதிரான முரண்பாடுகளுக்குச் சவால் கொடுக்க இடமிருக்கிறது.இது எதிர்காலத்தில் விடாப்பிடியாகத் தொடரவெண்டிய விடயம்’ என்கிறார்.

3.- பி.பி.சி.குறிப்பிடும் அடுத்த இந்திய மாது,பில்கிஸ்: இவர் 82 வயதானவர்.,இஸ்லாமிய மக்களின் பிரஜா உரிமைப் போராட்டத்தில்,ஸாஹின்பாஹ் என்ற இடத்தில் அமைதியான போராட்டத்தைத் தொடர்ந்து மக்களின் மதிப்பைப் பெற்றவர் என்று
குறிப்பிடுகிறது. ‘பெண்கள் தங்களுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில்,வீட்டுக்கு வெளியில் வந்து தங்களைப் போராட்டத்துடன் இணைத்துத் தங்கள் வலிமையைக் காட்டவேண்டும் என்பதை நிலை நிறுத்தியவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

4.- றிதிமா பாண்டே: இவர்,சூழ்நிலை சுற்றாடலைப் பாதுகாப்பதில்; ஆர்வமுள்ள பெண்மணி.ஒன்பது வயதிலேயே,சுற்றாடல் சூழ்நிலை மாசுபடுதலை அரச நிர்வாகம் கவனிக்கவில்லை என்று மனு எழுதியவர்.2019ம் ஆண்டு,இவரைப்போல இன்னும்
பதினைந்துபேரைச் சேர்த்துக்கொண்டு, சுற்றாடல் சூழ்நிலையை மாசுபடுத்தும் 5 நாடுகளுக்கெதிராக, ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு அனுப்பியவர். இவர் தற்போது அகில உலக ரீதியில் பெரும் மகாநாடுகளில் கலந்து கொண்டு எதிர்கால சந்ததியினர்,
தங்களின் வாழ்வை நாசமாக்கும் மாசுபடும் சூழ்நிலைகள் பற்றிய விளக்கங்களைக் கொடுக்கிறார்.’ எங்கள் எதிர்காலத்தை,மாசுபடும் சூழலிலிருந்தது பாதுகாக்க,இளம்தலைமுறை,ஒன்றாகச் சேர்ந்து,மிகவம் நெருக்கடியான இந்த நேரத்தில் போராடி, அதன்
வெற்றியை நிலைநாட்ட வேண்டும். ஓன்றைச் செய்து வெற்றிபெற வேண்டும் என்ற பெண்கள் உறுதியுடன் நினைத்தால் யாரும் அவர்களைத் தடுக்க முடியாது’ என்கிறார்.

-கோவிட்-19 தொற்று பரவியதைத் தடுக்கத் தடுப்பூசியைத் தேடிய ஆய்வு செய்ததலில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டவர்கள்,விஞ்ஞான ஆய்வுத் தம்பதிகளான. துருக்கிய நாட்டைப் பூர்வீகமாகக கொண்ட ஜேர்மன் டாக்டர்,உகுவர் ஸாஹின்
அவர்களும் அவரின் மனைவியாகிய உஸ்லம் ட்றெச்சி,அத்துடன் ஆஸ்ட்ரியன் ஒன்கோலோஜிஸ்ட் கிறிஸதோபர் ஹியுபர் என்பருமாகும்.இவர்கள் கோவிட்-19 வைரசுக்கெதிரான பையோ என் டெக்-பை~ர் வக்சினைக் கண்டுபித்தார்கள்இது கோவிட் 19க்கு
எதிராக 95 விகிதம் எதிர்ப்பு வேலையைச் செயயும் என்று சொல்லப் படுகிறது. இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்த ஆய்வு பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றுகிறது. பெண்களும் இணைந்த சமத்துவமான தலைமைத்துவத்தின் சாதனை
என்பதற்கு இந்த பிரமாண்டமான கண்டுபிடிப்பு ஒரு உதாரணம்.

லண்டன் கார்டியன் பத்திரிகையின் தகவலின்படி-ஓக்ஸ்போர்ட் வக்சின் ஆஸ்ட்ரானிக்கா என்ற தொற்று நோய்த் தடுப்பு வக்சினை உருவாக்கியவர் பேராசிரியர் ஸாரா கில்போர்ட் என்று ப.pபி.சி.23.11.2020ல் பதிவிட்டது. தனது மேற்படிப்பின் உதவியுடன அஸ்ட்ரா னிக்கா வக்ஸினை உருவாக்கிய இந்தப் பெண்மணி அவரின் தனித்துவத்தால் ஆளுமையான ஆண்காளாலாலும்,பொது மக்களாலும். உலகம் பரந்த விதத்தில் மதிக்கப் படுகிறார். இவர் மூன்று குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்றெடுத்தவர்.குழந்தைகளைக் கணவர் கவனித்துக்கொள்கிறார்.மிகவும் கவனமாகத் தன் ஆய்வில் ஈடுபடுபவர்.கடினமான உழைப்பாளி என்று பெயர் எடுத்தவர்.இவருடன் சேர்ந்து வேலை செய்தவரும் ஒரு பேராசிரிய பெண்மனியாகும் அவர் பெயர்.பேராசிரியர் தெரேசா லாம்மே எனபதாகும்.இவர்களுடன் பேராசிரியர் ஆட்ரியன் ஹில் அவர்களும் இணைந்து செயற்பட்டார்கள. கோவிட்19 வைரசின் நோய்பரப்பும் தன்மையை 70 விகிதம் அஸ்ட்ரா n~னிக்கா வக்ஸின். கோவிட் 19 வைரசை கிட்டத்தட்ட 62 விகிதம் செயலிழக்கப் பண்ணும் என்று சொல்லப் படுகிறது.இந்த வக்ஸின் தயாரிப்பின் பல்வேறு ஆய்வுகளில்; பல திறமைகள் உள்ள விஞ்ஞானிகள் பங்கு பற்றினார்கள்

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட மஹேஸ் ராமசாமி. இவர் இலங்கையைப் புஸ்ரீர்வீகமாகக் கொண்டவர். துந்தை ஒரு தமிழன் மாய் சிங்களப் பெண்மணி.இவர் பன்மக விஞ்ஞான திறமையானவார்.ஆஸ்ட்ரோனிக்கா என்ற இந்த வக்சின் ஆய்வில் இவர் தலைமைத்துவம் வகித்தார்.வக்ஸனைப் பொது மக்களுக்கக் கொடுக்கமுதல்,நடத்தும் பரிசோதனையை முன்னின்று செய்தார். மஹேஸ் ராமசாமி அவர்கள்,உலகின் பிரசித்தமான பல்கலைக்கழகமான கேம்பிறிட்ஜில் பட்டம் பெற்றவர்.

விண்வெளி ஆராய்ச்சியும் பெண்களின் தலைமைத்துவ மகத்துவமும்:

– விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சிவப்புக்கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய்ககு; பேர்சிவரென்ஸ் றோவர் என்பதைத் தரை இறக்கும் பிரமாண்டமான செயற்பாட்டின் பின்னணியிலிருந்த ஏழு பெண் ஆளமைகளில்,சுவாதி மோகன்,வந்தனா வர்மா
என்ற இரு பெண்கள்; இந்தியநாட்டில் பிறந்தவர்கள்.அமெரிக்கா சென்று தங்கள் கல்வித் திறமையாலும், பாலின வேறுபாடற்ற, சமத்துவப் பண்பாட்டை முன்னேடுக்கும் உலகின் மிகவும் பிரமாண்டமான விண் வெளி ஆய்வு நிறவனமான நாசாவில்
மிகவும் உயர் நிலைகளில் இவர்கள் இருப்பது இந்தியர்கள் அத்தனைபேரும் பெருமைப்படும் விடயங்களாகும்.

1.-.கதரின் ;ஸ்ராக் மோகன்,-டிப்பியுட்டி றிசேர்ச் சயன்ஸ்ரிஸ்ட். செவ்வாய்க் கிரகத்தின் தரையமைப்பு. குனறுகள், கற்களாலான அமைப்புக்கள் பற்றிய ஆய்வில் இவர் திறமை வெளிப்படுத்தப்படுகிறது. செவ்வாய்க் கிரகத்தில் பேர்சிவரன்ஸ் றோவர்
இறங்குவதற்கான பல பன்முகத் தன்மையான ஆய்வுகளை மேற் கொண்டவர்.2012ம் ஆண்டிலிருந்து நாசாவின் சயன்டிஸ்ட்ஸ் குழுவில் அங்கத்தவாராகவிருக்கிறார்.

2-ஸ்வாதி மோகன், இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களுரில் பிறந்தவர் தாய் தந்தையருடன் தனது ஒரு வயதில் அமெரிக்கா சென்றவர்.நவிக்கேசன் அன்ட் கொன்றோலுக்குப் பொறுப்பாகவிருந்து, பெர்சிவரன்ஸ் றோவரைச் செவ்வாய்க் கிரகத்தில் இறக்கியவர். இந்த பிரமாண்டமான விண்வெளிச் செயற்பாட்டுக்கு முதன்மை, என்ஜினியரான பொறுப்பிலிருந்த ஆளுமையான பெண்மணி.இந்தப் புறொஜெக்ட்டுக்கான அத்தனை விடயங்களையும் கையாண்டவர்

3-மூகேகா ஸ்ரைக்கர்-இவர் பேசிவரன்ஸ் றோவர் ஒரு கிருமியுமற்ற பாதுகாப்பான முறையிலிருப்பதற்குக் காரணமாகவிருந்தவர். நாசா நிறுவனத்தின் சாதனைப் பரிசொன்றை 2012ல் பெற்றவர்.

4- ஹெதர் ஆன் போதம் என்வர்;.இவர் பேசிவரன்ஸ் ரோவரின் ஸிஸ்டம் என்ஜினியர்.ஒரு நாட்டியக்காரியாக ஒருகாலத்தில் வேலைசெய்தவர். வாழ்க்கையை இன்னொரு விதத்தில் போராடி வென்றெடுத்த தனது வெற்றிக்குப் பின்னணி  தத்துவமாக, மனதைரியத்தையும், உணர்வின் உறுதியையும் தான் முழுக்கவும் நம்புவதாகச் சொல்கிறார்.

5.டையானா ட்ருஜிலோ: இவர் கொலம்பியன் நாட்டைச் சேர்ந்தவர். ஏரோஸ்பேஸ் என்ஜினியராகப் பல மட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார்.றோபோர்டஸ்;களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்ததிலும் முக்கியமானவராக இருந்திருக்கிறார். கியுறியோசிட்டி என்ற ரோவரை விண்வெளிக்கு அனுப்பிய காலகட்டத்தில்,அதன் டெலிகொம் ஸிஸ்டத்திற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்.அத்துடன்,விண்வெளி ஆய்வுத்தொடரில் முதன் முறையாக ஸ்பானிஸ் மொழியைப் பயன்படுத்தியவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.இவர் தனது என்ஜினியரிங் மேற்படிப்பை புலோரிடாவில் தொடர்ந்தபோது அதற்கான பணம் சேகரிக்க மற்றவர்களின் வீட்டைத் துப்பரவு செய்யும் வேலை செய்து சேமித்ததாகச் சொல்கிறார். நாசா நிறுவனத்தில் 2008ல் சேர்ந்தார்.’எங்களது கனவுகள் என்ன வித்தில் மாற்றமெடுக்கப் போகிறது,செயற்படப்போகிறது என்று தெரியத் தொடங்கினாலும்,எங்கள் ஆரம்பக்கனவைச் செயலாக்குவதில் ஒரு சந்தேகமும் இருக்கக் கூடாது’ என்கிறார்.

6-மிசேலா ரொமேய் கொலி~p:இவர் ஒரு மெக்கானிகல் என்ஜினியர்.றோவர் அசெம்பிளிங்,டெஸ்ட் லோன்ச் போன்றவற்றில் வேலை செய்தவர்.மிகவும் கடினமான,சூழ்நிலையில் சிவப்புக் கிரகத்தில்; இவரின் திறமையால் பத்திரமாக பெர்சிவரன்ஸ் இறங்கியது.அவரின் கூற்றுப்படி,’நாசா நிறுவனத்தில் ஆண் பெண் பேதம் கிடையாது. நான்தான் இங்கு வேலை செய்பவர்களில் இளையவள். இங்கு திறமைக்கு மதிப்பிருக்கிறது. சமத்துவமான உறவு எல்லேரையும் சந்தோசமாக இணைந்துவேலை செய்து பல சாதனைகளைச் செய்ய உதவுகிறது’.

7.-வந்தனா வர்மா: நாசா நிறுவனத்தில்’வன்தினி’ என்று அன்பாக அழைக்கப்படுபவர்.இவர் ‘றோபோர்ட். தயாரிப்பதில் முதன்மைத்துவம்கொண்டவர்.கியுறியோசிட்டி,பேர்சிவரன்ஸ் ரோவர்களைத் தயாரித்தவர்.அத்துடன் இவருடைய அதிதிறமை நாசாவின்  வேறு செயற்பாடுகளிலும் சேர்க்கப் பட்டிருக்கிறது.இந்தியாவில் ஹால்வார என்ற இடத்தில் பிறந்தவர். சாண்டிகா நகரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் இளம்கலை பட்டப்படிப்பை முடித்தவர்.முதுகலைப் பட்டத்தை றோபோர்ட் தயாரிப்பில் கார்னேகி
மெலோன் பல்கலைக்கழகத்திலும்,அதே இடத்தில் தனது பி.எச்.டியையும் 2005ம் ஆண்டு றோபோர்ட்டிக் என்ஜினிரிங் படிப்பில் முடித்தவர்.நாசாவில் 2008ம் ஆண்டு சேர்ந்து பல திறமைகளைச் செய்கிறார்.அத்துடன் இவர் லைசென்ஸ் எடுத்த பைலட்டும்
ஆவார்.

இன்றைய தொற்று வைரஸ் போராட்ட காலத்தில் உலகின் ஒட்டு மொத்த மக்களுக்காகவும் ஆண்களுடன் சேர்ந்து சமத்துவமாக அயராது உழைக்கும் பல பெண்களைக் கண்டோம். ஆதேநேரம், தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துப் பல
பெண்கள் பல நாடுகளில் பணிபுரிகிறார்கள்.இவர்களின் தளராத பணியால், தலைமைத்துவத்தால் பல நல்ல மாற்றங்கள் நடக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்தலைகளையுடைய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் பாராதாரமாகவில்pல.அவை.ஜேர்மனி,டென்மார்க்,தைவான், நியுசிலண்ட்,ஜஸ்லாண்ட்.பின்லாந்த போன்றவையாகும். ‘ ஹங்கர் பறோஜெக்ட்’ என்ற ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி,இன்று இந்த உலகில் 690 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்கிறார்கள்.இதில் 60 விகிதமானவர்கள் பெண்கள். ஆனால், விவசாயம ;போன்ற துறைகளில் அவர்களுக்கு பெரிய இடம்  இருந்தால், அவர்களின் உழைப்பு 150 கோடி மக்களுக்க உதவும்.இவர்கள்,பதின்மூன்று(13) நாடுகளில்,பதின்மூன்றாயிரம்(13.000) அமைப்புகளுடன்,முன்னு10ற்றித் தொண்ணு10ராயிரம் ஊழியர்களுடன்,(395.000) பதினாறுகோடி (16 கோடி) மக்களுடன் வேலை  செய்கிறார்கள்.அந்த மக்களில் எட்டுக்கோடித் (8) தொகையினர் பெண்களாகும்.

ஐக்கிய நாடுகளின் வேண்டுகோளின்படி, எதிர்காலத்தில் பெண்களின் தலைமைததுவத்தில் அவர்களைச் சாதனையாளராக்குவதற்கு, பெற்றோர், கல்வி நிலையங்கள்.சமூக அமைப்புக்கள், பெண்ணிய ஆளுமைகள்,மனித நேயவாதிகள் முற்போக்கு  சிந்தனையாளர்கள் பெண்களுக்க ஊக்கம் கொடுக்கவேண்டும். பெண்களின் கல்வியில்; ஈடுபட்டிருக்கும் மாணவிகளுக்கு,அவர்கள் இந்தியப் பெண்களின் மேன்மைக்கும்,சாதனைக்கும் என்ன துறைகளில் பணிபுரியவேண்டும் என்று நான் விபரிக்கத் தேவையில்லை.

எனது அனுபவத்திலிருந்து, எதிர்காலப் பெண்களுக்கு நான் சொல்வதென்னவென்றால், பெண்ணியம் என்பது,ஒரு பெண் தன்னை அடக்கி வைத்திருக்கும் பல தரப்பட்ட தளைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வெளியே வந்து பன்முகத் துறைகளில் தனது
சாதனையைப் படைப்பது மட்டுமல்ல,தன்னைப்போன்ற நிலையிலுள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமுகத்தின் மேம்பாட்டுக்கும் தன்னாலான பணிகளை மேற்கொள்ளுவதாகும்.

நான், அரைநூற்றாண்டுகளுக்கு முன்,கிழக்கு இலங்கையின் ஒரு தமிழ்க் கிராமத்துப்பெண். இந்த நாட்டுக்குக் காலடி எடுத்து வைத்தபோது. எனது ஆங்கில அறிவு சுமாரானது. இன்றுவரையும் ஆங்கிலத்தில் பெரிய புலமை ஒன்றும் கிடையாது. ஆனால்,
இருக்கிற அறிவை வைத்துககொண்டு,லண்டனில் பல மேற்படிப்புக்களைத் தொடர்ந்தேன். பற்பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக மக்களுக்கு எத்தனையோ செய்யலாம் என்பதற்கு இங்கிலாந்தின் பெண்ணியவாதிகள் எனக்கு
வழிகாட்டினார்கள்.

இலங்கையில் எங்கள் தமிழ் இனம் இனவாத சிங்கள அரசால் துயர்பட்டபோது அவர்களுக்காகக் குரல் கொடுக்க 1982ம் அண்டு லண்டனில்,எனது தலைமையில் தமிழ்ப் பெண்கள்அமைபபையுண்டாக்கிப் பல தமிழ் மக்களின் நன்மைக்களுக்கான பல
மாற்றங்களைச் செய்தோம். தமிழ் மக்கள் அகதிகளாக வந்தபோது எனது தலைமையில்,அகதிகள் ஸ்தாபனம், தமிழ் அகதிகள் வீடமைப்புத் திட்டம் என்பன உண்டாக்கப்பட்டன.பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் லண்டனுக்கு வந்தார்கள். 1985ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து. ஐரோப்பயநாடுகளிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இலங்கைத் தமிழரின் நிலைபற்றியும், ஒட்டு மொத்தமாகச் சர்வதேச ரீதியில் ஒடுக்கப்படும் பெண்கள் பற்றியும் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறேன்.பல மகாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.தமிழ்நாட்டில் பல கல்வி நிலையங்களில் தமிழ் பலதரப்பட்ட விடயங்களில் சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறேன. மனித உரிமை, பெண்ணிய சம்பந்தமான எனது ஆய்வுக் கட்டுரைகளை எனது இணையத்தளத்தில் பார்க்கலாம்.

பெண்களின் தலைமைத்துவத்திற்கும் சாதனைக்கும் எனது வாழ்க்கையில் இன்னும் சிலவற்றையும் சோர்த்துச் சொல்கிறேன். லண்டனில் வாழ்ந்து கொண்டு,தமிழில் இதுவரை பதினெட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.இந்தியாவிலும் இலங்கையிலும்
பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். மேற்படிப்புத் துறையில்,மருத்வ மானுடவியல், திரைப் படத் துறை என்பவற்றில், லண்டனில் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணியென்ற இடத்தைப் பெற்றிருக்கிறேன். இன்று ஆங்கிலத்தில் சிறு கதைகளும் கவிதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பெண்ணியம் சார்ந்த மேற்படிப்பில் ஈடபட்டிருக்கும் நீங்கள்,இவ்வருட, அகில உலக மாதர்தின நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு அறிவுகளைத் திரட்டிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களின்;பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

rajesbala82@gmail.com


Posted in Tamil Articles | Leave a comment

‘Going to planet Mars’

Imagination in Isolation

Going to planet Mars’

By Rajes Bala

I am scared. I wish I could talk to some one to take the fear away from me.

I have to decide what I want to do.

I wish I could see my friend Melanie now. Who has a vision of the future. And I like to see her ‘curing’ smile.

She is one of those people, who has the wonderful personalty to put one in an easy setting and make you feel good. She see things differently from most of us do. She has a big heart, lots of love and kindness to help others. Very rare creature with fascinating personality. She is not much taller than me but at times she is seems taller when she talks about things which are not easy to comprehensive by me. Such as the realm of Science etc.

While I am pottering around in the garden,(not a designer’ s one like some of friend ‘s garden). I thought about Melanie. My mind a bit relaxed, When I am thinking about her. The red roses dancing seductively to the gentle breeze as they wanted me to touch them. The birds were on the trees and talking to them self (about me?). It’s so beautiful to be with the wonderful nature around us.

I watered my jasmine. I like the fragrance of jasmine, that smell bring my old memories from back home, under the moon light and listening to the flute music, playing some where far away in the village.

No Corona or any virus then. We, the small kids get cold if we get soaked in the monsoon rain some times. Mother would give us boiled coriander water with ginger and add a lots of pure forest honey in for a few times, that’s all, we get better. And continue our activities such as playing around the river, walking through the overgrown bushes to pick up berries. Stealing and next door old man’ s mangoes for fun and make him annoyed and to chase us.

‘You all are growing up, the germs wouldn’t like to hurt you, God wouldn’t let get germs to get a better of you’ that’s the statement from my ‘very knowledgeable’ grand ma.

But now?

We all are under attack of Corona virus-the covid-19. ‘Old people may die a lot but others may get infected too’ the scientists are saying.

‘We are going to face the second wave on Covid-19 is inevitable ‘ this was the news every where in the morning. That’s why I am so scared at the moment.

Last year December the Covid-19 infection identified in Wuhan province in China. Since then, there is no place in this beautiful planet escape from the most devastating Virus attack in the human history. How we going escape?

‘The virus is mutating itself, they found that after testing patients in various area in the Western world. The virus from Wuhan is different from the one in Italy…’ the Scientists statements on Corona are confusing as the politicians words. The situation is frightening as we going to face the doom day.

Its every where hot or cold weather, do not stop this Virus to do the last dance of destruction, as the Hindu God Shiva had done the cosmic dance who destroy the world in order to create another one.

I do not want to just die with Covid-19. As I read it some where,’They will isolate you in the hospital. Once you are infected with the Virus, it will get in to one’s central nervous system and the air passages, then your five great vital organs, brain, lungs, heart, liver and the kidneys will lose their ability to keep you alive. No family member will be allowed to see you, die alone- that’s like small animal dying alone after attack by the strong one in the jungle’.

I am, one of the vulnerable person to be affected by the covid-19.

I am old, my body cells are not stronger any more, can die any time, even when I am in my sleep, my breathing can stop and my body will be a ‘body’ as a piece of wood. A frightening prospect.

The telephone rang.

My god, its Melanie. I was thinking about her most of the time today.

‘I have not seen her or talk to her since first week in March 2020. She was busy she said as her grand daughter Maya came to stay with her. Her Son was away abroad as he does a lot work for the company in London which has a branches in various other countries. Melanie’s Son with lovely little family lives in the south of England. Maya had to stay with Melanie in London for while as her daughter in law is looking after her ‘s mother who was not well and in hospital. Melanie was so happy for Maya is staying with her in London. Melanie is not often see her son as he is working on some ‘project’ abroad.

Melanie was kind enough to take me to her Son’s house once. A tranquil place surrounded by greenery, dense bushes and the Sea on one side. More like the village I was growing up. I wish I could have a place like that now to sit write.

‘This is a wonderful place for people like us’ I told while I was looking at sea, The waves are kissing the soft sand in the shore very gently. The air was cool and blended with country aroma of multiple wild flowers of the area.

Her daughter in law was very kind young women. She brought some snacks and tea for us and left two oldies to talk about the ‘world’s issues. Maya was playing around us.

Melanie was fixed her eyes at the beautiful blue sky and said, ‘We always love this place’ she said. I listen as I felt she wanted to tell me something more.

‘My son is often is away’ she said softly as I can tell from her tone she is sad that she couldn’t see him often.

I never asked her what’s the ‘project’ about. She never elaborated on anything of her personal matters such as her divorce. Maya came near us and said,

‘My dad is working on a project to go Mars’. Melanie’s five years grand daughter Maya said in a jolly tone, I noticed that she love to talk. A wide smile spreading on her beautiful angelic face. I was bit like when I was little-very ‘talkative’.

I smiled at her. ‘I am an angel from the sky’ she jumped up and down happily, her golden blond hair is playing with air and covering her face partially.

Me and Melanie looked at each others, I asked Maya ,’Oh, are we all came from the ‘sky?’

Melanie smiled at her and said ‘ Yes, yes, but that’s very long time ago,’ Maya ran towards to her grand ma hugged her grand mother tightly and kissed her cheeks tenderly.

‘No don’t tell me you are believing ‘extra terrestrials’ I joked with Melanie while thinking about my boys were madly in love with Star trek program on TV when they were little.

‘Well, you never know, why these, scientists, researchers and many other people are doing a hell of job to find about the moon and Mars and so on, are looking for connection of the past of man kind.’She was asking me a question while she was poured the tea for me, shaking her head as she is asking the question to herself too.

Why indeed why is the speedy space race,I thought.

‘The space race is going on since 1960s, about 45 missions to the Mars. American, Russians, the E.U, then the Indian in 2014,now, the United Arab Emirates is gone there on the 20.07.2020. And they all wanted to do or take or control something in the Mars’ She continues

‘We got multitude of problem in this planet, why these people spending so much money, time on these missions?’ I am getting interested in Meanie’s explanation. Little Maya seems fascinated to know how much information her grand mothers has on Mars.

‘ How long for us to go there grandma?’ Maya’s eyes were sparkling, she looked at sky and ask her grand ma in an exiting tone as she wanted to her plan to her journey to Mars immediately.

‘ Oh my darling, it will take over six months, in a huge Space ship with everything in it to looked after people who are going there ‘Melanie giving information the child with wild imagination, I thought.

I went to Australia direct flight from London Heathrow air port and it took me 24 hours or more. I have decided I never going to be in the flight for twenty four hours looking through the window of passing clouds.

Mmm, I am not in to a long flight or an adventurous person, I thought.

‘No that is not my cup of tea thank you’ I giggled nervously. Maya joined me in the giggle as little girls do when they are in ‘grown ups’ company’

I leant towards to Melanie and looked in to her blue eyes and asked her,’By the way why these experts such the scientists and aeronautic engineers and cosmonauts are helping the rich, as they are funding these space projects and to run in a hurry to another planet away from our beautiful planet called Earth’ I emphasized the word ‘beautiful’ nicely.

She sighed, started tap on the table with her index finger as she is making a strong point, ‘This planet is in trouble, we are not going run out of enough water to drink,’Melanie’s voice is reflected the pain in heart about the forthcoming water shortages to the man kind. I did not argue.When I was away recently I noticed the struggle of the poor to buy drinking water.

Melanie noticed my silence. She continued,’ Thousands of people are going to die as there will not enough field to grow food crops, not a proper place to live as a few men are destroying the beautiful planets for their greed and self satisfaction’. Melanie said as she was reading my mind.

She continues,’Not every one can join the trip to Mars, when people faced with problems most will struggle to survive, fair number will die with hunger and poverty, some will kill themselves to get a away from horrible world’ Melanie was angry about rich people and explained to me about the rich who are destroying world for their individual families benefits. I nearly cried when she talked about the poor.

‘Why do you think that, the rich are interested in Mars’ this is my childish(!) question.

‘Well, the planet may not have the same atmosphere as the earth but, supposed to have other components such as oxygen and rich minerals other items for survival, so Mars is very important planet and many people think that the next step to the man kind from the earth’.

Next stop? Next stop from the earth? Just like that?

My next stop will be in my library when I returned from this village to London to read more about this Mars.

I stared at her blankly but I know that she knew that I have millions of questions in my mind.

‘Why you looking at me as I am mad or something’ one of her beautiful smile flash across her face.

I started to say,’ Well there is no water for any life to strive..’ I did not finished,

She said, ‘yes there is a little water on the surface but plenty underneath of the surface. With modern technology from the earth people getting water for consumers use is not be huge problem.’

I thought she is cross that somehow the rich people are going to leave this planet to look for better life in Mars.

‘Living in a very small place like this, made people think differently than the busy Londoners. We have more time to read, and see the nature and questing its complexity, My son Robert was like Maya when he was little boy, always asked questions, lots of questions about the sea, the waves, trees, leaves, flowers, animals. fields, mostly about sky and stars’.

She stopped for a few second and said,’ May be that the reason for my Son Robert to get interested in space science’ she got up suddenly as she did not want to continue the subject any more.

After a few months of meeting her in the Corona put the world completely choas.I went away to Sri Lanka to be with my sister in second week in March 2020,as my kids wanted me to be away from London as the Virus infection was increasing at that time and a few cases in Sri Lank

But I stranded in Colombo- the capital city as they put the curfew due to the spread of Corona. While I was in Colombo, when I phoned my other friends in London told me the worrying situation in London. England loosing more people to Corona than any other countries in the world.I was so shocked to hear the news,I was worried about friends and family in London.

I was alone with strangers in the hotel. Not a single familial face at all. Practically empty every where. I could go to the roof top and see and feel the silence and the emptiness of the world. All the humans are indoors except the, animals, birds and bees. I was in a surrounding which was breathtakingly beautiful. I could see the sun rise over the green field and the beautiful sun set in the sea. Seeing those trees from roof top as I am talking to them in close contact. Seeing the pattern of the Marcosa leaves make me feel the mighty design of the nature.

The tropical trees, flowers, the fruits, singing talking, birds all seems so magical. During the full moon in April I was looking at the extraordinary sight of the red moon and the bright stars of Orion,Cyrus and so on. Oh god,you are great I mumbled. Nature is mighty. It has it’s own rhythm to bring the world back from any disaster. Then I thought about Melanie a lot when I was alone. May be because the ‘red moon’ and the stars Orion unconsciously think about ‘Red Planet Mars’ and Melanie and Maya.

Me and Melanie talked via Video call next day. But she seems not ‘engaged’ in the conversation. Has she lost any in the Corona crisis? Her old in-law was in hospital, what has happened to her.

I did not ask her. When I asked about the situation in London, not much as she said about the corona. She is ‘busy’ with her grand daughter, who is stranded in London with her due to lockdown she said.

Now I am back in London and her call make me happy and I wanted to ask her lots question about her lockdown experience with her family. I ran and answer the phone.

She:’How are you my dear?’ Her tone is sad but very loving and concerned.

Me;’ I am fine thank you’.There is a pause from her side.

She;’What you going to do?’

Mmm, what I am going to do? I wanted to say,’I am not to doing much’. But her question was ‘what are you going to do’

me:’ Well I will continue to do what I am doing now read, write, go for a walk and so on.’

She;’And die’ her tone was so strong and definite. She did not say,’die with Corona virus’.

I paused a bit, but started to talk.

She: My daughter in -law has died.. her mother got infected in hospital with Corona and my ..’

She stopped, I felt numbed, what can I say to comfort my friend who had lost her young daughter in-law to the horrible Virus?

Me: Oh no I am so sorry’ repeated that line a few times, I am devastated, up set and frightened when I thought about her question about dying, she continued.

She: Are you just going to die?

Me: What? Yes we all die one day, but that’s not good to hear from your friend or family at time time like this.'(There was a gap of half a minute or so, then,

Melanie:’me and Maya are going away’Her voice sound certain and kind of ‘ending everything.

Me:’ To the South?’ as to the Son’s place?, where she said she loves so much.

There is no answer. Melanie was quiet for thirty second or so and said,

Melanie;’Far away from everything and every one”

me: ‘What?’

Melanie.’The virus is mutating, that’s means no vaccine can protect us no scientists can say exact truth about this exceptionally dangerous virus’

‘Me:’ What are you saying’

Melanie:’ Think very carefully, we cannot live here any more, we have to isolate ourself from these uncertain world’

Me: What on earth you are talking about?’ I am getting cross with Melanie now.

Melanie:’My dearest, we have to do it, far from this confusing world, we three woman will take new path and go far, forget the past, see the light in other side’ she sound as she has already found the ‘way and the place ‘ to get out of this world.

What? Far from everything? Is she going kill herself and Maya? Does the isolation form the Covid-19 make her to lose her mind? Or the death of daughter in law made her to take drastic action?

Me:(panicking)’ Oh no, Oh no please, Melanie don’t do that.'(I am crying) running around in the garden, breathing heavily.

Melanie:’ You can come too, life some time takes sudden turns you know?'(her voice is calm,

as she thought through a very good plan and she will be very pleased if I join her)

What? What is my wonderful, beautiful Melanie who has so much wisdom and knowledge is asking me to do?

Going far away from this place Where? Kill ourself somewhere alone?

I am not going to join them or kill myself, I do not like people who are going to ‘Dignitas’ the place in Switzerland to finish them self in front of their family s while they are fit and healthy.

Me;’ No, no, Melanie, I am not going to do a Suicide pack with you’ (I shouted at her, still crying)

She;’what? Oh no, I am not going Dignitas you idiot, we are going to Mars. I thought you like adventures life, It will be fun to join the crew, who are from various background, I recommend you as you have medical knowledge and interested in Aliens and other world away from us ‘ She was explain a lot in a minute! GOING TO PLANET MARS!

I was shock to hear that she is leaving this beautiful planet with 6.5 billion people to the Red planet which is 142 million miles away and not a single human being, a cold desert with very thin atmosphere. What is going on? Did she meet the ‘Martian’ or some Alien during the isolation?

I was angry, I yelled at her and ask,’What about your talk and tears about the poor in this planet, oh I see you are are joining your Son’s secret project aren’t you?’ I wanted scream at her,BUT,

Suddenly there is a laud noise. As a vehicle is starting to move fast, oh my god not the space ship is taking over with Melanie and Maya?.

I woke up, sweating, rapid pulse because of the confusing bad dream about going to Mars with Melanie and Maya.

I could hear the car moving out side of my house. The man next door usually get ready by four o’clock to in the morning to go to work’.

He may be one of the poor who works in the front line to help others. People like him and other many billions of people. He may catch Corona and die, but he will never afford go to Mars.

Posted in Tamil Articles | Leave a comment

புண்ணியமூர்த்தி

டானியல் ஜன்னல் வழியால் எட்டிப் பார்த்தான்.கீழே கதவு தட்டியவன் டானியலின் நண்பர்களில் ஒருத்தனான புண்ணியமூர்த்தியாக்தானிருக்கும் என்று டானியலுக்குத் தெரியும். ஆனாலும் கதவு தட்டுப் பட்டால் வெளியே எட்டிப் பார்க்காமல் அவனால் இருக்க முடியாது.

வெளியில் சரியான மழை பெய்துகொண்டிருந்தது.வீட்டுக்கு முன்னால்,ஜன்னலை ஒட்டியிருக்கும் மரத்தின் இலைகளிலிருந்து நீர்த்துளிகள் ஜன்னலிற் கொட்டின.

இந்த மழைத்துளிகளின் மெல்லிய,தாளம்,இரவில்,மிகவும் இதமாகவிருக்கும். இரவில்,மூன்று மணிக்குப் பின் இந்தத் தெருவில் கார்கள் போவது மிகவும் அருமை.அந்த மாதிரியான அமைதியான நேரத்தில்,ஜன்னலைத்தட்டும் நீர்த்துளிகளின் ராகம்,மனதுக்கு மிகவும் ரம்மியமாகவிருக்கும்.

டானியல் கதவைத் திறந்தான். புண்ணியமூர்த்தி,கதவினடியிற் போட்டிருந்த கார்ப்பெட் துண்டில் தனது,காலணிகளிலுள்ள நீரைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

‘என்ன இன்னும் சம்பந்தன் வரவில்லையா?’புண்ணியமூர்த்தி,டானியலைக் கேட்டபடி முன் ஹோலில் நுழைந்தான். அவன் கையில் ஒரு பிளாஸ்டிக் கைப்பை இருந்தது.அதனுள் இருந்து இரண்டு’கசட்டுகளை’ எடுத்து ஹோலின் நடுவிலுள்ள சின்ன மேசையில் வைத்தான்.

டானியல் அவற்றை எடுத்து ‘என்ன படம்?’ என்று பார்த்தான்.

‘குஸ்புவின் படம் கிடைக்கவில்லை’

புண்ணியமூர்த்தியின் குரலில் உற்சாகமில்லை.

வெளியில் ஒருகார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நண்பர்கள் இருவரும்,ஜன்னற் திரையை நீக்கிவிட்டு வெளியே பார்த்தார்கள். அவர்களின் நண்பன் சம்பந்தன் தனத காரைப் பார்க் பண்ணிக் கொண்டிருந்தான்.

‘நீயும் சம்பந்தனுடன் சேர்ந்துகொண்டு வந்திருக்கலாமே?’ என்று புண்ணியமூர்த்தியைக் கேட்க நினைத்தவன் கேட்கவில்லை.

டானியலும்,சம்பந்தனும் இலங்கையில் ஒன்றாய்ப் படித்தவர்கள்.லண்டனுக்கு வரும்போது ஒன்றாக வந்தவர்கள். கொழும்பில், லண்டனுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிக்காரனைத் தேடுவதிலிருந்து,கள்ள பாஸ்போர்ட் எடுப்பதிலிருந்து.லண்டனுக்கு வருவதற்காக எத்தனையோ நாடுகளின் தலைநகர்களில்; ஏறியிறங்கியவர்கள்.

டானியல் ஒரு றெஸ்ட்டோரன்டிலும், சம்பந்தன் ஒரு மளிகைக்கடையிலும் வேலை செய்கிறார்கள்.சம்பந்தன் வேலை செய்யும் கடைக்காரன்;,புண்ணியமூர்த்தியின் சொந்தக்காரன்.

புண்ணியமூர்த்தி தனது சொந்தக்காரனின் கடையில் வேலை செய்யாமல் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்கிறான்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டு,ஊர் வம்புகளைப்;பேசி,பார்த்த படங்கள்,பார்க்காத படங்கள்,இன்னும் வெளிவர விருக்கும் தமிழ்ப்படங்கள் பற்றி விமர்சனம் செய்து,தங்களுக்குத் தெரிந்த தெரியாத இளம் பெண்களைப் பற்றிப்பேசி விமர்சித்துப் பொழுது போக்குவார்கள்.

டானியல் கிறிஸ்தவன்ஆனாலும் சேர்ச்சுக்குப்போகாதவன்.சமயங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்பவன்.

‘உலகத்தில் இத்தனை சமயமிருந்தும்,அவை நீதி, நேர்மை, புண்ணிய பாவங்கள் பற்றிப் போதித்தாலும்,அந்தச் சமயங்களைப்; பின்பற்றும்; மனிதர்கள் ஏன் ஒருத்தொருக்கொருத்தர் மிருகமாக நடந்து கொள்கிறார்கள்’ என்று கேட்பவன்.

புண்ணியமூர்த்தி லண்டனில்,நிதியுழைப்பை முன்னெடுத்து முளைத்துக் கொண்டிருக்கும் பல இந்துக் தரப்பட்ட கோயில்களுக்கு அடிக்கடி போகிறவன். அங்கு அவன் போவது,கோயிலுக்க வரும் இளம் பெண்களைப்பார்ப்பதற்கு என்று எல்லோருக்கும் தெரியும.; ஒரு தங்கு தடையுpன்றி மூன்றாம் தரத்தில் மற்றவர்களைப் பற்றிப்;பேசுபவன். சந்தர்ப்பம் வந்தால் அவற்றைச் செய்யவும் தயங்காதவன்,கோயிலுக்கு அடிக்கடி போவான். சைவசமயக் கூட்டங்களுக்கும் அடிக்கடி தலைகாட்டுவான்.இலங்கையிலிருந்தபோது ஏதோ ஒரு இயக்கத்திலிருந்தவன்.

சம்பந்தன் ஒரு ஏழை. லண்டனில் விழுந்து விழுந்து உழைத்து, இலங்கையிலுள்ள இருதங்கைகளின் திருமணத்துக்குச் சீதனம் தேடுபவன்.

டானியல் அடுப்பில் கோழிக்குழம்பு செய்து கொண்டிருந்தான். அதன் சுவையான நெடி மற்றவர்களின் மூக்கைத் துளைத்தது.புண்ணியமூர்த்தி வழக்கமாகச் சில பியர்க்கானுகளுடன் வருவான் மழைகாரணமோ என்னவோ இன்று வெறும் கையுடன் வந்திருக்கிறான்.

கதவைத் தட்டிய சம்பந்தனுக்குக் கதவைத் திறந்தபின், கொதித்துக் கொண்டிருக்கும் கோழிக் குழம்பைப்பார்க்க அடுப்படிக்குச் சென்றான் டானியல்.

‘என்ன மழை?’ சம்பந்தன் தன்தலையைக் கோதிக்கொண்டான்.

‘எப்படி மச்சான் வேலை தேடுற விசயம் போகுது?’ புண்ணியமூர்த்தி, சம்பந்தனைப்பார்த்துக் கேட்டான். சம்பந்தன் ஒரு புதுவேலை தேடிக்கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

‘வேலை என்ன வீதியில் கொட்டிக்கிடக்கா பொறுக்கி எடுக்க?’ புண்ணியமூர்த்தியின் முகத்தைப் பார்க்காமல் மறுமொழி சொன்னான் சம்பந்தன்.

புண்ணயமூர்த்தி அங்கு கிடந்த படக் கசட்டுகளைப் பார்த்தான். ‘குஸ்புவின் படம் கிடைக்கல்ல’ என்று சோகத்துடன் சொன்னவன் வாயிலிருந்து@ ‘மாங்காய்,மாங்காய்,இரண்டு மாங்காய்,மார்க்கட்டுக்குப்போகாத மாங்காய்’ என்ற தரம் கெட்ட சினிமாப்பாட்டு அல்லோல கலலோலப் பட்டது.

சம்பந்தன் ஒன்றும் சொல்லாமல்,டெலிவிஷனைப்போட்டான். பொஸ்னியாவிற் தொடரும் சண்டைபற்றி ஒரு வெள்ளைக்கார றிப்போர்ட்டர் முழங்கிக் கொண்டிருந்தார்.

‘வேசை மக்கள்.பொஸ்னியாவில அனியாயமாக முஸ்லிம்களைச் சாக்காட்டுறான்கள’ புண்ணிய மூர்த்தி முணுமுணுத்தான்.

‘நாங்களும்தான்,ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலவிருந்து கலைச்சுப்போட்டம்’ சம்பந்தன் புண்ணிமூர்த்தியின் முகத்தை நேரே பார்த்துச் சொன்னான்.

அவனுக்கு இலங்கையில் உண்டாக்கப்பட்ட எந்தத் தமிழ் இயக்கத்தையும் பிடிக்காது.

புண்ணியமூர்த்தி பதில் பேசவில்லை. இலங்கையில் அவன் சார்ந்திருந்த இயக்கம்தான் அதைச் செய்தது என்று அவனுக்குத் தெரியும்

டானியல் தான் கடையில் வாங்கி வைத்திருந்த வடைகளைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்தான்அதை அங்கு வைக்கும்போது,அதை வாங்கியபோது,அந்தக் கடையில் வேலைக்கு நின்றிருந்த பெண்ணின் முகம் ஞாபகம் வந்தது.

இப்போதுதான்,இலங்கையை விட்டு வெளியேறி லண்டனுக்கு வந்த பெண்ணாகவிருக்கவேண்டும். பர பரவென்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அவள் பார்வை,எல்லோரையும் சந்தேகமாகப் பார்ப்பதுபோலிருந்தது.

டானியல்,நேற்றுத்தான் முதற்தரம் அவளைக்கண்டான். வுடை வாங்கப் போகப்போகும்போது நிற்கும் நடுத்தர வயது மாது அங்கிருக்கவில்லை.ஏனோ தெரியாமல்,டானியலுக்கு அந்த இளம் பெண்ணில் பரிதாபம் வந்தது. என்ன கஷ்டங்கள்பட்டு லண்டன் வந்து சேர்ந்தாளோ என்று யோசித்தான்.

கடையிற் கண்ட அந்த இளம் தமிழ்ப் பெண்ணைப் பற்றிச் சம்பந்தனிடம் சொல்ல நினைத்தான்.ஆனால் புண்ணியமூர்த்திக்கு முன்னால் அவளைப் பற்றிச் சம்பந்தனிடம் சொல்லத் தயங்கினான்.

புண்ணியமூர்த்திக்கு பெண்களைப்பற்றி உயர்திணையிற்பேசிப் பழக்கமில்லை.

பெண்;களைப் பற்றிப்பேசும்போது ‘சாமான்,சரக்கு என்று பேசுவான் அதற்கு மேலால் என்றால்,அது,இது என்று அடைமொழி கொடுத்துத்தான்; பேசுவான்.

புண்ணியமூர்த்தியின் பெண்களைப் பற்றிய இரசனையில் தமிழிச்சினிமா நடிகை குஸ்பு விதி விலக்கு.குஸ்புக்குத் தமிழ்நாட்டில்; கோயில் கட்டும் பக்தர்களுக்குப் பண உதவி செய்பவர்களில்; அவனும் ஒருத்தனாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.

டெலிவிஷனில், பொஸ்னியா செய்தி முடிய தென்ஆபிரிக்கச் செய்திகள் வருகின்றன.

வெள்ளையரின் கொடுமையால்,நீண்டநாள்ச்சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா,1991ல் வெளிவந்து விட்டபின்,இப்போது தேர்தல் நடக்கப்போகிறது.கறுப்பு இன மக்கள், அவர்களின் வாழ்க்கையில் முதற்தரமாக வாக்களிக்கப்போகிறார்கள்.

‘இந்தக் கறுப்பு நாய்கள் பெரிய பதவியை எடுத்து என்ன செய்யப் போறான்கள்?’ புண்ணியமூர்த்தி வடையைக் கடித்தபடி சொன்னான்.

‘சிங்கள மோடையாக்கள்,(சிங்கள மடையர்கள்) என்று சிங்களவர்களைத் தாழ்த்திச் சொல்வதில் சந்தோஷம் கொள்பவன் புண்ணிய மூர்த்தி.

அவன் தென்னாபிரிக்கக் கறுப்பு மக்களைப்பேசியது பற்றி மற்ற இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. புண்ணியமூர்த்தி,; இலங்கைத் தமிழர்களையும்,ஆங்கிலேயர்களையும் விட இந்த உலகில் யாரும் மதிக்கப்படத் தேவையற்றவர்கள் என்று நினைப்பவன்.

புண்ணியமூர்த்தி டானியலின் மேசையிற் கிடந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையை எடுத்தான்.

வழக்கம்போல்,முன்பக்கத்தில்,இலங்கையில் நடந்த,(இரண்ட கிழமைக்கு முன்) அதிரடித்தாக்குதல் பற்றிய நிகழ்ச்சி போடப்பட்டிருந்தது. அடுத்த பக்கங்களைப் புரட்டிக் கொண்டுபோனால்,திருமண விளம்பரங்கள்,அகால மரணங்கள்,அதையடுத்த பக்கங்களில் நல்ல மீன்கள், ஆட்டுக்கால் கோழிக்கால்களின் மலிவு விற்பனைகள்,

நடுப்பக்கத்தில், கவர்ச்சி காட்டும் தமிழ் சினிமா நடிகைகள்,என்பன வழக்கம்போல் பரந்து கிடந்தன்.

‘இந்த இளவுப்பேப்பரில் என்ன இருக்கு?’ புண்ணியமூர்த்தி வடையோடு சேர்த்து வார்த்தைகளையும் மென்னினான்.

‘என்ன இருக்கவேணுமென்டு நினைக்கிறாய்?’ புண்ணியமூர்தியிடம் எரிச்சலுடன் கேட்டான் டானியல்.

புண்ணியமூர்த்திக்குத் தமிழ் இலக்கியம் பற்றியோ அல்லது வேறு ஏதும் உருப்படியாக புத்திஜீவித்துமான விடயங்களில் அக்கறையிருப்பதாக டானியல் நினைக்கவில்லை.

அவனை ஏன் தன் வீட்டுக்கு வரவிடுகிறேன் என்று டானியல் தன்னைத்தானே கேட்பதுண்டு. துனது சினேகிதன் சம்பந்தன்,புண்ணியமூர்த்தி வேலைசெய்யும் கடைக்காரனின் சொந்தக்காரன் என்பது ஒரு காரணமா? அல்லது லண்டனில் வாழும் தனிமையான வாழ்வில் யாரோ ஒருத்தருடன் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்ற பயமான உணர்வா என்று அவனுக்குத் தெரியாது.

புண்ணியமூர்த்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் யாரோ ஒருத்தரைப்பற்றிக் கண்டபாட்டுக்குப்பேசத் தொடங்குவான் என்று மற்ற இருவருக்கும் தெரியும். பெரும்பாலும் வெள்ளைக்காரப் பெண்மணிகளைப்பற்றிக் கண்டபாட்டுக்கப்; பேசுவான்.

அவனைப் பொறுத்தவரையில், நடிகை,குஸ்புவின் புன்னகைக்கு அப்பால்; எந்தப் பெண்ணினதும் மென்மையை,பெண்மையைப் புரிந்து கொள்ளத் தெரியாதவன்.

டானியலின் மனத்தில் அன்று பினனேரம் அவன் வடை வாங்கிய கடையிற் கண்ட இளப்பெண் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றிச் சம்பந்தனிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது;.

சம்பந்தனின் முகத்தில் தெரியும் சோகம், இலங்கையிலிருந்து கடிதம் அவனுக்கு வந்திருக்கிறது; என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.அவனின் அம்மாவின் கடிதங்களைக் கண்டால் சம்பந்தன் கலங்கி விடுவான்.

சம்பந்தனின் தந்தையார் குடித்தழிந்து இறந்து போனவர். சம்பந்தனின் உழைப்பில்,அவன் லண்டனிலிருந்து அனுப்பும் பணத்தில்,இலங்கையிலுள்ள அவனின் குடும்பம் நகர்கிறது.

சம்பந்தனின் தமயன் ஒருத்தன்,பத்து வருடங்களுக்கு முன் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப்பட்டு விட்டான். அந்தச் சோகத்தில்,தகப்பன் குடிக்கத் தொடங்கினார் என்று இவன் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாலும், அம்மாவுக்கும் அப்பாவுக்குமுள்ள உறவு பல காலமாகச சுமுகமாயில்லை என்பதும் அவர் சம்பந்தனின் சகோதரனின் அகால மரணத்துக்கு முன்னே குடிக்கத் தொடங்விட்டதும் புரிந்து கொள்ள வெகு காலம் எடுத்தது.

சம்பந்தனின் தகப்பன் ஒரு ஆசிரியர். வன்னிப் பகுதியில் படிப்பித்துக்கொண்டிருந்தார்.குழந்தைகளின் படிப்புகாரணமாக அம்மா ஊரோடு தங்கிவிட்டாள்.அம்மாவின் துயரம் தெரியாத வயது.அப்பாவுடன்,சிலவேளை வன்னி சென்று,அங்கேயுள்ள அழகிய குளக்கட்டுகளில் ஓடிவிளையாடிய இன்ப நினைவுகளுக்கப்பால், அம்மாவின் துயர் விழிகள் அவனின் நினைவுகளிற் தட்டிச் செல்லும். வயது வரத் தொடங்கியதும், ஊராருக்குப் புரியாத ஏதோவொன்று அவனுக்குப் புரிந்தது.அதன் பிரதி பலிப்போ என்னவோ, தமயன் சட்டென்று இறந்தது,அப்பா சுகமில்லாமல் ஊருக்கு வந்தது, அதன்பின் அவர் அதிகம் குடித்து இறந்தது எல்லாம் அவனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

அப்பா,குடும்பப் பொறுப்பில்லாமல் குடித்தபோதும், அவர் இறந்தபோது அம்மா அழததும், அவரின் இறப்பு அம்மாவுக்கு ஒரு விடுதலையா என்று அவன் யோசித்திருக்கிறான்.

சம்பந்தன் டானியலின் சமயலறைக்குள் வந்தான். டானியல் கோழிக்கறியை அடுப்பிலிருந்து இறக்கி விட்டான்.

‘எப்படி வடை?’ டானியல் நண்பனைக்கேட்டான். சம்பந்தன்,டானியலிடம்,’வடையை எந்தக் கடையில் வாங்கினாய்?’ என்று கேட்டால், அந்தச் சாட்டில் என்றாலும்,வடைக் கடைப் பெண்ணைப் பற்றி சம்பந்தனிடம்; சொல்ல டானியல் துடித்தான்.

டானியலுக்குக் குடும்ப சுமை ஒன்றும் கிடையாது.குடும்பத்தில் கடைசிப் பிள்ளை.கால நேரமும். காதலிக்கக் கூடிய ஒரு பெண்ணும் கிடைத்தால் காதலிக்க வசதியுள்ளவன்.இவனது வீட்டார் டானியலது சந்தோசத்தைப் பெரிதும் முக்கியமானதாக நினைப்பவர்கள்.

‘எப்படி வடை?’ என்ற டானியலின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,’வீட்டில தங்கச்சிக்குப் பேசின கல்யாணம் சரிவரவில்iயாம்’ சம்பந்தனின் குரலில் உலகத்துச் சோகமெல்லாம் ஒன்றாக வெளிப் பட்டது.அவனிருக்கும் நிலையில்,ஊரிலிருக்கும் அவனின் குடும்பத்தைத் தவிர எதையும் யோசிக்க மாட்டான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

சம்பந்தன் அவனது நண்பனின் முகத்தை நேரே பார்த்தான்;. அவனின் குரலும் முகபாவமும் டானியலை வருத்தியது. சம்பந்தனின் தங்கச்சிக்கு இருபத்தி எட்டு வயது. வெளியில், லண்டன் போன்ற இடத்தில் புலம் பெயர்ந்த தமிழ் மாப்பிள்ளைகள் சீதனம் என்ற பெயரில் யானை விலை குதிரை விலை கேட்கிறார்கள்.சம்பந்தன் ஓடாக உழைத்து அனுப்பிக் கொண்டிருக்கிறான்.

ஆனால், அவனது தங்கை அவளது இளம் வயதில் ஒருத்தனை விரும்பியிருந்ததாகவும், அவன் இயக்கமொன்றில்ச் சோர்ந்து இறந்து விட்டதாகவும், அந்தப் பழையகதை, இப்போது உயிர் பெற்று, ஊரில் வலம் வந்து அவளது கல்யாணம் குழம்பிடக் காரணமாகிட்டதாம்.அம்மா சோகத்துடன் எழுதியிருந்தாள்.

‘சாரி மச்சான்,’ டானியல் சோகமான நண்பனின் தோளில் கைவைத்துத் தேற்றினான்.

இந்த நிலையில் வடைக்கடையில் சந்தித்து அவனது உணர்வையும் உள்ளத்தையும் தகிக்க வைக்கும் பெண்ணைப் பற்றி டானியல் சம்பந்தனிடம் சொல்ல விரும்பவில்லை. அந்தச் சந்தர்பம் வருமட்டும் அவள் நினைவு அவனைத் தாலாட்டட்டும்.

‘என்னாப்பா இரண்டுபேரும் ரகசியம் பேசுறியள்’

புண்ணியமூர்தி இப்படிக் கேட்டுக்கொண்டு சமயலறைக்குள் வந்தான்.

புண்ணியமூர்த்தி மற்ற இருவரையும் விட மிகக் குள்ளமானவன் அனாவசியமற்ற ஒரு புன்சிரிப்பு அவன் முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும்.

ஓரு பெரிய ஜக்கட்போட்டிருந்தான் அது அவனை இன்னும் குள்ளமாகககாட்டியது.

அவனுக்கு இரண்டு தமக்கைகள் லண்டனிலிருக்கிறார்கள். கல்யாணமாகிப் பிள்ளைகளைப் பெற்றவர்கள். இப்போது, அவர்கள் புண்ணியமூர்திக்குப் பெண் வேட்டையாடுகிறார்கள்.புண்ணியமூர்த்தி அவனது கனவுக்கன்னியான குஸ்பு மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யும் கற்பனையிலிருக்கிறான். அவனின் சகோதரிகளோ, கைநிறையச் சீதனம் கொடுக்கும் ‘யாரையும்;’ அவனின் தலையில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

புண்ணியமூர்த்தி தனக்குக்கலயாணம் பேசிவந்த பெண்களைப் பற்றித் தன்சினேகிதர்களுக்குச் சொல்லும்போது ஏதோ கத்தரிக்காய், வெண்டைக்காயைப் பற்றிப் பேசுவதுபோல் விலை பற்றிப் பேசுவான்.

டானியலுக்கு அப்படி அவன் பேசுவது பிடிக்காமல் முணுமுணுப்பான். அவனைப் பொறுத்தவரையில் திருமணங்கள் இருவரின் ஒன்றுபட்ட உணர்வில்,காதலில் நடக்கவேண்டும் என்று கற்பனை செய்பவன். ஆனாலும்,புண்ணியமூர்த்தியின் சொந்தக்காரனின் கடையில் சம்பந்தன் வேலை செய்வதால், அவனுடன்; தர்க்கப் பட்டுத் அவனின்; வேலை போக வைக்கத்; தயாராகவில்லை.

சாப்பாட்டுத் தட்டுகளில் சாப்பாடு பரிமாறப்பட்டது.

புண்ணிமூர்த்தி மேசையிலிருந்த இன்னொரு வடையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

‘மச்சான் வடை நல்லா இருக்க எங்க வாங்கினாய்?’

புண்ணியமூர்த்தி டானியலைக் கேட்டான்.அவன் காரணமில்லாமல் ஒரு நாளும் எந்தக் கேள்வியையும் கேட்க மாட்டான் சூசகமாக ஏதோ மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறான் என்று டானியலுக்கப் புரிந்தது.வடைக் கடைப் பெண் இவன் கண்ணிலும் பட்டிருப்பாளா?

‘மெயின் றோட்டில இருக்கிற கடையில வாங்கினன்’ டானியல் புண்ணியமூர்த்தியின் முகத்தை எடைபோட்டவாறு சொன்னான்.’ அந்தச் சீலைக்கடைக்குப் பக்கத்தில இருக்கிற தமிழ்க்கடையிலயா வாங்கினாய்?’

புண்ணியமூர்த்தியின் கேள்விக்கள் தொக்கிக் கிடந்த விஷமம் டானியலுக்குப் புரிந்தது. வடை விற்கும் கடையில் புதிதாக வந்திருக்கும் அந்த இளம் பெண்ணைப் பற்றிப் பேசப்போகிறான் என்று டானியலின் மனம் சொல்லியது.

புண்ணியமூர்த்தியின் சினேகிதம் கிடைத்த நாளிலிருந்து டானியலும் பல பாவங்களைப் பேசியிருக்கிறான்.இவ்வளவு நாளும் என்னவென்ற புண்ணியமூர்த்தியைச் சகித்தேன் என்ற கேள்வி டானியலின் மனத்தில் உதித்தது.

‘டெலிவிஷனில் நேற்ற ஒரு செய்தியைக் கேட்டாயா?’

வாயில் வடை குதம்ப அத்துடன் வசனங்களும் குதம்ப புண்ணியமூர்த்தி டானியலைக்கேட்டான்.

‘என்ன செய்தி?’ சம்பந்தன் புண்ணியமூர்த்தியைக் கேட்டான்.

‘இந்தியாவில் பெண்குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாமெனறு கொல்கிறார்ளாம் பி.பி.சி. செய்தி சொல்லிற்று’

புண்ணியமூர்த்தி சிரிக்கிறான்.

அப்பாவி இளம் குழந்தைகளைக் கொல்வது இவனுக்குச் சிரிப்பான விடயமா?

‘பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடும் தமிழ் நாட்டிலா இந்தப் பயங்கரக் கொடுமைகள்?’ சம்பந்தன் முணுமுணுதுதான்.

லண்டனில் புண்ணியமூர்த்தி,கல்யாணம் என்ற பெயரில் ஆயிரக்கணக்காகச் சீதனம் வாங்கக் காத்திருப்பதுபோல்,பல வழிகளிலும் பொருளாதாரப் பிரச்சினை கொண்ட தமிழ்நாட்டில், புண்ணியமூர்த்தி போன்ற ஆண்களுக்கு விலை கொடுக்க முடியாத பெற்றோர் தங்கள் பெண்குழந்தைகளுக்கு எதிர்காலமில்லை என நினைத்து இப்படிச் செய்வது என்ன கொடுமை? டானியல தனக்குள் நினைத்தான் வெளியில் சொல்லவில்லை.

‘இந்தச் செய்தி பி.பி.சியில் போடும்போது பக்கத்தில இருந்த வெள்ளைக்காரன், நான் ஒரு இந்தியன் என்டு என்னைப் பார்த்துச் சிரிச்சான் மச்சான்’ புண்ணிமூர்த்தி முகத்தில் கோபம் வெள்ளைக்காரன் அவனை ஒரு இந்தியாக்காரன் என்று நினைத்தது அவனுக்குக் கோபம்

.

புண்ணியமூர்த்திக்குச் சிசுக் கொலை பற்றிக் கோபம் வராமல்,அவனை ஒரு வெள்ளைக்காரன்,சிசுக் கொலை செய்யும் இந்தியாவிலிருந்து வந்தவன் என்று கோபப்படும் புண்ணியமூர்த்தியில்,டானியலுக்கு அளவற்ற கோபம் வந்தது.

அதைக் காட்டிக் கொள்ளாமல்,டானியல் கறியை ருசி பார்த்தான். அளவுக்கு மீறிய உறைப்பு!

‘ஜெயலலிதாவுக்குக் கருணாநிதி கோஷ்டி மேடையில் துரியோதன்மாதிரித் துகிலுரியக்க,அதைப்பார்த்து,மனிதத் தனமில்லாம நீ சிரிச்சது ஞாபகமில்லையா?’சம்பந்தன் ஆத்திரத்துடன் புண்ணியமூர்த்தியைக்கேட்டான்.

‘என்னடா மச்சான் சொல்கிறாய்? ஜெயலலிதாவுக்கச் சீலை உரியறதுக்கும், சிசுக் கொலைக்கும் என்ன சம்பந்தம்?’

‘சீதனக்கொடுமைக்கும்,அதனால பெட்ரொல் ஊற்றிப் பெண்களை எரிக்கிறதுக்குமுள்ள சம்பந்தம். பெண்களுக்கு ஆண்களால்.எந்த வித்தில், எப்போது வந்தாலும் அது கொடுமையானது என்பதன் சம்பந்தம்’

டானியல் தன் ஆத்திரத்தை அடக்கமுடியாமல்க் கோபக் குரலில் சொன்னான்.

டானியலுக்குக் கடையிற் கண்டபெண்ணின் கலங்கிய,பரபரத்த இரு கயல் விழிகள் ஞாபகம் வந்தன.

அந்தப் பயத்தை எந்த ஆண் கொடுத்திருப்பான்?

பர பரவென்று,ஏதோ பயத்தால் தவிக்கும் அந்த மீன் விழிகளில் அமைதி தவழ்ந்தால் எவ்வளவு

அழகாகவிருக்கும்?

ஏன் அந்த விழிகளில் அவ்வளவு பரபரப்பு?

லண்டனிற் தனியாக வந்து தவிக்கும் பயமா? அல்லது, புதிய இந்த ஊரில் எப்படிக் காலூன்றப்பொகிறேன் என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்பா?,

எப்படி வந்து சேர்ந்தாளோ?

வரும் வழியில் எத்தனை காட்டு மிருகங்களின் வேட்டையிலிருந்து தப்பினாளோ? வீட்டில்-இலங்கையில் ஒரு பெரிய குடும்பம் அவளுக்கிருக்கலாமா?;.இவள் உழைப்பில் குடும்பம் தழைக்க இவளை எதிர்பார்க்கும் குடும்பமாக அது இருக்கலாமா?

அல்லது, இவ்வளவு காலமும் தனக்குக் கல்யாணம் நடக்கவில்லை என்ற ஏக்கமா?’ அவளைப்பற்றி ஆயிரக்கணக்கான கேள்விகள் இவன் மனத்தில் ஊசலாடின.

அதே நேரம், சட்டென்று,’வடை விற்கிற கடையில புதிசாக வந்திருக்கிற சரக்கு எப்படி?’ புண்ணியமூர்த்தி சத்தம்போட்டுச் சிரித்தபடி டானியலைப் பார்த்துக் கேட்டான்.

சம்பந்தன் முகத்தில் கோபம். டானியலின் முகத்திலும்; மனத்திலும் அக்கினி.

இத்தனை காலமும், இவர்கள் மூவரும்,லண்டனில் பனி பெய்யும் அல்லது மழைபெய்யும் பின்னேரங்களில் சேர்ந்திருந்த பியர் குடித்த.ஆட்டுக்கறி சாப்பிட்டு,தரம் கெட்ட தமிழ்ப் படங்களைப்பார்த்து,நடிகைகளின், குலுக்கல்களில்,சிங்காரச் சிணுக்கங்களில் வாலிபத்தின் உணர்ச்சியடைந்தவர்கள்.

முன்பின் தெரியாத பெண்களின் முந்தானைகளில்,தங்கள் கற்பனையில் படுத்தெழும்பியவர்கள்.தங்களுக்குத் தெரியாத பெண்களைப்பற்றி தரக்குறைவாகச் சொல்லிச் சிரித்தவர்கள்.

இன்று புண்ணியமூர்த்தியின் பேச்சு அளவு கடந்த அருவருப்பையுண்டாக்கியது.

‘என்னடா மச்சான் பேயடிச்ச மாதிரி நிற்கிறாய்?’

புண்ணியமூர்த்தி தனது தட்டில் ஒரு பெரிய சோற்றுப்படையலை நிறைத்தபடி கேட்டான்.

டெலிவிசனிற் காட்டும் சோமாலியாவில் பட்டினி கிடக்கும்; பத்துப்பேருக்குத் தேவையான உணவை ஒரு கைபார்க்கும் தோரணையில் அவன் சாப்பிடத் தொடங்கினான்.

அவன் சாப்பிடுவது வாழ்வதற்கா அல்லது அவன் வாழ்வதே சாப்பிடுவதற்hக என்ற கேள்விக்குப் புண்ணியமூர்த்தியைப் பொறுத்த வரைக்கும் யாரும் பதில் சொல்ல முடியாது.

தான் கேட்ட கேள்விக்கு டானியல் பதில் சொல்லவில்லை என்பதை நினைவு படுத்த,’ என்னடா மச்சான், வடைக்கடைச்சரக்கு எப்பிடி என்டு கேட்டன் பதில் சொல்லாமலிருக்கிறாய்’ டானியலை இன்னொரு தரம் சீண்டினான் புண்ணியமூர்த்தி.

இவன் என்ன விற்பனைக்கப்பால் மனித உறவுகளைப் புரிந்து கொள்ளத் தெரியாத வெற்றுப் பிண்டமா?

அவன் ஒரு அன்னியனாக மற்ற இருவர்கண்களுக்கம் தெரிந்தான்.

‘நீ அந்தக் கடையில நிற்கிற பெண்ணைப் பற்றிக் கேட்ட விதம் எனக்குப் பிடிக்கல்ல’; தனது கோபத்தை அடக்கிக் கொண்டு மறுமொழி சொன்னான் டானியல்.

‘ஏன்னடா டானியல் கதைக்கிறாய்?கடையில் விற்கிற சாமானோட சாமானாக நிற்கிறாள் வேற எப்படிச் சொல்லறது?’

புண்ணியமூர்த்தி போன்றவர்கள், முருங்கை மரத்துக்குச் சீலையைப் போர்த்து வைத்தால் அதில் முலைகள் இருக்கிறதா என்று தடவிப் பார்க்கத் தயங்காத ஆண்கள்.

‘அவள் விற்பனைக்கு வைக்கப்பட்ட ஒரு சாமானல்ல. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதப் பிறவி.’ டானியலின் குரல் கடுமையாக ஒலித்தது.

புண்ணியமூர்த்திக் கோழிக்காலைக் கடித்தபடி சிரித்தான்.

‘நீ படுகிற பரிதாபத்தைப் பார்த்தால், தமிழ் நாட்டில,ஈரச்சேலையை முகத்தில போட்டுக் கொலை செய்யப்படுற பெண்சிசுக்களைக் காப்பாற்றும் அவதாரம் எடுப்பாய் போல இருக்கு’ புண்ணியமூர்த்தி சத்தம் போட்டுச் சிரித்தான்.

‘புண்ணியமூர்த்தி, அந்தப் பெண்குழந்தைகள் உன்னைப்போல ஆண்களோட வாழ்வதை விட,அந்தப் பெண்கள் இறந்து விடுவது நல்லது என்ற அந்தத் தாய்கள் இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத முட்டாள் நீ;’ டானியல் தன் முகத்தைத் திருப்புpக் கொண்டு உறுமினான்.

புண்ணியமூர்த்தி போன்றோருக்கு வெட்கம் வராது என்பது அவனின் அடுத்த கேள்வியில் அப்பட்மாகத் தெரிந்தது.

‘சரி அதை விடு,உன்ர விசயத்துக்கு வருவம்,உனக்கு அந்தக் கடைக் காரப்பெட்டையில் ஒரு கண்போல கிடக்கு’புண்ணியமூர்த்தி தனது கிண்டல்ப் பேசசுக்குச் சம்பந்தனும் சேர்ந்து சிரிக்வேண்டுமென்பதுபோல் அவனைப் பார்த்தான்.

சம்பந்தன் ஆத்திரத்தைக் காட்டாமல் பொருமிக் கொண்டிருந்தான்.

புண்ணியமூர்த்தி தன் பார்வையை டானியலின் பக்கம் திருப்பினான.

‘ஆமாம், அவள் சரியென்டு சொன்னா நாளைக்கே அவளைக் கல்யாணம் செய்ய நான் தயார்.நீ இப்ப அவளப்பற்றிக் கதைக்கிற விட்டிட்டு வாயைப் பொத்து’

டானியலின் குரல் வெடித்துச் சிதறியது.

சம்பந்தன் தன் நண்பனுக்கத் தன் சம்மதத்தைத்தன் புன்சிரிப்பால் வெளிப் படுத்தினான்.

புண்ணியமூர்த்தி அடங்கிவிட்டான். மற்ற இருவரம் தன்னில் பெரும் கோபத்திலிருப்பதை அவன் முட்டாள் மூளை கிரகித்துக் கொண்டிருந்தது.

வெளியில் மழை விட்டிருந்தது.

(‘தாகம்’-பத்திரிகை பிரசுரம்-சித்திரை 1994) 

Posted in Tamil Articles | Leave a comment

திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!

திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!Monday, 08 February 2021 11:30 –

அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.அவர் 1950-1960;ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமையின் விகார முகத்தை, வக்கிரமான நடவடிக்கைகளை எதிர்த்த பல முற்போக்கு படைப்பாளிகளில் முக்கியமானவராகும். அவரின் காணொலி ஒன்றில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் தாக்கத்தால் அவர் பாடசாலைப் படிப்பையே பன்னிரண்டு வயதில் அதாவது 1939ம் ஆண்டு துறந்து வெளியேறியதைப் பற்றிச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, அன்று யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு 1947ம் ஆண்டு முதல் அத்திவாரமிட்ட அண்ணல் மு. கார்த்திகேசு மாஸ்டரின் சமத்துவத்திற்கான முக்கிய வேலைகள் யாழ்ப்பாணத்தில் பரந்தபோது அதனால் ஈர்ப்பு வந்து இடதுசாரிப் பணிகளில் முக்கிய பங்கெடுத்த சரித்திரத்தைச் சொல்லியிருக்கிறார்.கார்த்தகேசு மாஸ்டரின் கருத்துக்களில ஈர்ப்பு கொண்டவர்களில் நானும் அடங்குவேன். திரு கார்த்திகேசு மாஸ்டரைப் பற்றி,அவரின் மாணவராகவிருந்த, பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது,அக் கருத்துக்கள்,சமத்துவம்,மனித நேயம் என்பவற்றிற்கு மிக முக்கியமானவையாக எனது சிந்தனையில் பதிந்தன.அந்த சிந்தனைக்கு மதிப்புக் கொடுத்து, லண்டனில் புலம் பெயர் முதல் தமிழ் நாவலாக ‘லண்டன் முரசு’ பத்திரிகையில் பதிவாகிய எனது,முதலாவது நாவல்,’உலகமெல்லாம் வியாபாரிகள்’ கதாநாயகனுக்குக் ‘கார்த்திகேயன்’ என்ற பெயரை வைத்தேன். இலங்கையில் வெளியிடப் பட்ட முதலாவது புலம் பெயர் தமிழ் நாவலான ‘ஒருகோடை விடுமுறை’ நாவலின் கதாநாயகிக்குக் ‘கார்த்திகா’ என்ற பெயரைக் கொடுத்தேன். கார்த்திகேயனைத் தெரிந்தவர்களுக்கு,டொமினிக் ஜீவா போன்றவர்கள் எப்படியான முற்போக்குப் பரம்பரையைக் ‘குருகுலமாகக்’ கொண்டிருந்தார்கள் என்று புரியும்.திரு டொமினிக் ஜீவா அவர்களின்; தந்தை அவிராம் பிள்ளை,தாயின் பெயர் மரியம்மா.தாய்தகப்பன் இவருக்கு இட்ட பெயர் டொமினிக். இந்திய இடதுசாரி ஆளுமையான திரு. ப. ஜீவானந்தத்தைச் சந்தித்து,அவரில் கொண்ட பெருமதிப்பால் தனது பெயருடன் ‘ஜீவா’ என்ற பெயரையும் இணைத்துக் கொண்டார் என்று சொல்லப் படுகிறது.1950ம் ஆண்டுகளில் இந்திய வியாபார இலக்கியத்தின வளர்ச்சியை, என்னவென்று ஆளுமையும் அறிவும், சமத்துவக் கொள்கைகளும் கொண்ட யாழ்ப்பாண இலக்கியங்கள் அடித்து நொறுக்கி மக்களை விளிப்படையச் செய்தது என்ற தகவல்கள் 1960ம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் திரு பாலசுப்பிரமணியம், திரு டொமினிக் ஜீவா, செ. யோகநாதன், நீர்வை பொன்னையன், போன்றோரை நேரில் காணும் வரைக்கும் எனக்குத் தெரியாது. அந்தக் காலகட்டத்தில் கணேசலிங்கம், டானியல், பெனடிக்ட் பாலன் போன்றேரின் எழுத்தைப் பாலசுப்பிரமணியம் அறிமுகம் செய்த காலத்தில்,பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் மல்லிகை வாங்கி அதைப் படித்த காலத்தில், கையில் தனது புத்தகங்களுடன் திரியும் ஜீவாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் டொமினிக் ஜீவாவின் சமூகம் சார்ந்த,சமத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய, சாதிக் கொடுமைகளுக்கு எதிரான எழுத்துக்களுக்கு அறிமுகமானேன்.அக்கால கட்டத்தில்,மிகவும் கட்டுப்பாடான கிராமியச் சூழ்நிலையில் கிழக்கிலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு வெளியுலகம் பற்றியோ,பல தரப்பட்ட அரசில் கருத்துக்கள் பற்றியோ அறிவு அதிகமில்லை.1960ம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் ஆண்டு நான் மருத்துவத் தாதியாகப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் எனக்குப் பிடித்த இடங்களில் சில இடங்களில் பூபாலசிங்கம் புத்தக நிலையம் மிக முக்கிய இடம் வகித்தது. அங்கு இலங்கை இந்திய இலக்கியப் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். மல்லிகை 1966ம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கியது. அதை ஆவலாகத் தேடிப் படிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தியானேன்.’மல்லிகைப் பத்திரிகைக்கு அப்போது, ‘எழில் நந்தி’ என்ற புனைப் பெயரில் ஒரு கதையோ அல்லது கட்டுரையோ அனுப்பியதாக ஞாபகம். தலையங்கத்தின் பெயர் தெரியாது. அக்கால கட்டத்தில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் பெருந்தீயாகச் சுவாலையாககிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சாதிக் கொடுமையின் கோரம் ஆத்திரத்ததையுண்டாக்கியது.அக்கால எனது எழுத்தும் யாழ்ப்பாண சமுதாயத்தில் நான் கண்ட கொடுமையான சாதிக் கொடுமைகள் பற்றியதாக இருந்தது.1966ம் ஆண்டு,தொழிலாளர் மாதமான வைகாசியில்,பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்த ‘வசந்தம்’ பத்திரிகைக்கு எனது கதை ஒன்ற கேட்டு, வசந்தம் பத்திரிகை செ.யோகநாதன் கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு,’சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற கதையை,’ எழில் நந்தி’ என்ற புனை பெயரில் எழுதினேன். ஒடுக்கப் பட்ட சாதிப் பெண்ணை உயர்ந்த சாதி ஆண்மகன் வஞ்சகமாகக் கைவிட்டதால் அவள் தன்னைத்தானே எரித்துக் கொண்டதைப் பற்றிய கதை.அக்கால கட்டத்தில்,யாழ்ப்பாணம் பெரியகடை கஸ்தூரியார் வீதியில் உள்ள தனது கடைக்கு முன்னால் திரு ஜீவா அவர்களை அவ்வப்போது சந்தித்த ஒன்றிரண்டு வார்த்தைகள் அவரின் ‘மல்லிகை; இதழ்கள் பற்றிப் பேசியபோது, ‘வசந்தத்தில்’ வந்த எனது சிறுகதையை அவர் பாராட்டியபோது மிகவும் மகிழ்ந்தேன்.அக்கால கட்டத்தில் சாதிக் கொடுமைகை;கு எதிராக எழுதிய முதலாவது பெண் நான் என்றுதான் நினைக்கிறேன்.ஒரு ஒடுக்கப் பட்ட பெண்ணின் குரலை எனது படைப்பில் அவர் கண்டு நெகிழ்ந்ததை .அவரின் குரல் சொல்லியது.’ஏன் எழில் நந்தி’ என்ற புனை பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீ;ர்கள்?’ என்று ஜீவா கேட்டார்.ஏனென்றால் வைத்திய கலாநிதி திரு சிவஞானசுந்தரம் அவர்கள்,இலக்கியத் துறையில் பல படைப்புக்களைப் பிரசுரித்தவர். அவர் தனது புனை பெயரை’ நந்தி’ என்ற வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.தாதிமார் பாடசாலையில் எங்களுக்கு ‘ அனட்டமி அன்ட் பிஸியோலஜி பாடம் எடுக்கும் ‘நந்தி’சிவஞானசுந்தரம் அவர்கள்; பாடம் எடுக்கும்போது,’ உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான விதத்திற்தான் மனிதனின அத்தனை உள்,வெளி உடம்பு அவயவங்கள் படைக்கப் பட்டிருக்கின்றன. ஒரே மாதிரிதான் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாடிகள் அடிக்கிக்கின்றன. மூச்சு வந்து கொண்டிருக்கின்றன. இருதயம் இடது பக்கமும். நுரையீரல்கள் இருபக்கமும் என்று அத்தனை உறுப்புக்களும் ஒரே மாதிரி மனிதனை இயங்கப் பண்ணுகின்றன’ என்ற வைத்திய உண்மையைப் படிப்பித்த அதே வாயால்,’ இயற்கை படைத்த நியதியைத் தெரியாத மனிதன் தனது சுய நலத்திற்காகத் தன்னைத் தானே உயர்த்தி இலாபம் தேட,அடுத்தவனை அடக்கப்; பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறான்’ என்றார்.அவரின் அந்த வார்த்தைகள்,மருத்துவ உலகத்திற்கப்பாலான கொடுமையான சமூக அமைப்பு நிலைகள் பற்றி என்னைச் சிந்திக்கப் பண்ணின. பரந்த உலகம் தெரியாத ஒரு இளம் பெண்ணுக்கு மனித உடலமைப்பின் மூலம் கொடுமையான வர்க்க,சாதி. மத. இன அரசியலை மிகவும் இலகுவாக வெளிப்படுத்தினார்.’நந்தி என்று எழுதிக்கொண்டிருக்கும் டாக்டர் திரு. சிவஞானசுந்தரத்தில் அளப்பரிய மதிப்பு வந்தது.அதனால் அவரின் பெயரைச் சார்ந்த மாதிரி ‘எழில் நந்தி’ என்ற பெயரை வைத்திருக்கிறேன்’ என்று டொமினிக் ஜீவா அவர்களுக்குச் சொன்னேன்;. அக்கல கட்டத்தில்,டொமினிக் என்ற பெயருடன் சேர்ந்திருந்த ‘ஜீவா’ எனபதன் சரித்திரத் தொடர்பு எனக்குத் தெரியாது.1966ம் ஆண்டு கால கட்டத்தில் எங்கள் தாதிமார் பாடசாலைப் புத்தகத்தை வெளியிடுவதில் நான் ஆசிரியையாயவிருந்தேன். அந்த நூல் வெளியிடத் தேவையான நிதிக்கான விளப்பரத்தைத் தேடி, யாழ்ப்பாணத்தின் பிரபல கடைகளான ‘டையரம்ஸ், ரொலரம்ஸ், ‘லலிதா நகை மாளிகை’ போன்ற ஸ்தாபனங்களுக்குச் செல்லும் கால கட்டத்தில் திரு ஜீவா அவர்களைச் சந்தித்து எங்கள் பத்திரிகை பற்றிச் சொன்னேன்.எந்த விதமான அனுபவங்களுமின்றி, ஒரு பத்திரிகை ஆசிரியையாக அலையும் எனக்கும் எனது சக மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்.’வசந்தத்தில்’ எனது கதை வந்த பின் திரு பாலசுப்பிரமணியம் என்னுடன் தொடர்பு கொண்டு இடதுசாரிப் புத்தகங்களை அனுப்பத் தொடங்கியபின் ‘மல்லிகை’ இதழ்களில் வரும் இந்த முற்போக்கு இடதுசாரி;க் கருத்துக்களை ஆழமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி;னேன்.’மல்லிகை’யின் கருத்துக்கள் என்னுள் ஏற்கனவே இருந்து பல கேள்விகளுக்குப் பதில்களைத் தந்தன. ஒரு சமுதாயத்தில் ஒடுக்கப் பட்ட மக்கள் கொடுமையாக நடத்தப்படும்வரை,அந்தச் சமுதாயம் ஒருநாளும் முன்னேறாது என்பதை ‘மல்லிகை’ மூலம் தெரிந்து கொண்டேன். 1960மு; ஆண்டின் பின் பகுதியில் சாதிச் சண்டைகள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நடந்தன.1967ம் ஆண்டு,தொழிலாளர் மாதமான வைகாசி- ஆனி இதழில் ‘மல்லிகையில்’ எனது ‘ரத்தினம் அப்பா’ என்ற சிறு கதை வெளிவந்தபின்,சாதிகளுக்கெதிரான எனது கருத்துக்கள் முற்போக்குவாதிகளால் பாராட்டப் பட்ட,அத்துடன் முற்போக்கு இலக்கியத் துறையிலுள்ள பலருக்குத் தெரிந்த பெண் எழுத்தாளராகக் கருதப் பட்டேன். இலங்கையில் மேட்டுக்குடியினரால் நடத்தப் பட்ட பல பத்திரிகைளில் ‘ ‘ரத்தினம் அப்பா’ போன்ற அப்படியான ஒரு கதையை அக்கால கட்டத்தில், எந்த வர்த்தக பத்திரிகையும் வெளியிட்டிருக்காது என்ற நம்புகிறேன். எனக்கு வந்த பாராட்டுக் கடிதங்களைப் பற்றி ஜீவா அவர்களுக்குச் சொல்லி,எனது கதைலையத் தயக்கமின்றிப் பிரசுரித்தற்கு நன்றி சொன்னேன்.மனித உரிமையை மீறும், மிகவும் கொடுமையான யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமைக் கெதிரான எனது எழுத்துக்கள் தொடர எனக்கு ஆர்வம் தந்த திரு ஜீவா அவர்கயை நான் மறக்க மாட்டேன். எனது கருத்துக்களை உணர்ந்து. நான் ஒரு ‘சின்னப் பெண்’ என்றும் பார்க்காமல், கஸ்தூரியார் வீதியில் என்னுடன் பேசும்போது, ‘இலக்கியத்தில் மக்களுக்காகச் சொல்ல வேண்டியவைகளையம் பதியவேண்டும்’ என்பார். அவர்,தனது இலக்கியத்தின் மூலம்,மிகவும் உயர் நிலையில் வைக்கப்பட வேண்டிய பல விடயங்களை ஒட்டு மொத்த மக்களுக்கும் சொல்லியிருக்கிறார் என்பதற்குஇ 1960ல் சாகித்திய அக்கமி பரிசு பெற்ற ‘ தண்ணீரும் கண்ணீரும்’ பதிவைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.அக்காலக் கட்டத்தில் சங்கானையில் நடந்த சாதிக் கலவரம் வட இலங்கையைமட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் உலுக்கியது. அந்த நிகழ்வுகள் மல்லிகையில் விளக்கமாக வெளி வந்து கொண்டிருந்தன. அப்போது,மருத்துவத் தாதியான நான்,உயர்சாதியினரால் அடிக்கப் பட்டு, ஒடிக்கப் பட்டு வைத்தியசாலைக்கு வந்த ஒடுக்கப் பட்ட மக்களுக்குப் பராமரிப்புச் செயதுகொண்டிருந்தேன்.சங்கானைக் கலவரத்தின் பின், மாவிட்டபுரம் கோயிலுக்குள் ஒடுக்கப் பட்ட மக்களைச் செல்லவிடாது ‘ மேட்டுக்குடியினர்’ போலிசாரின் உதவியுடன் அராஜகம் செய்தனர். அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவனான ஜீவா, கோயில் மண்டபத்தில், ஒடுக்கப்பட்ட சைவசமயத் தோழர்களுக்காகப் போராடியதைப் பற்றிச் சொல்கிறார் அப்போது, கொழும்பு பல்கலைக் கழகங்களிலிருந்து பாலசுப்பிரமணியம் போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகப் போராட யாழ்ப்பாணம் வந்தார்கள். அந்த நேரம்,இலங்கையில் இடதுசாரிகள் இரண்டாகத் துண்டுபடவில்லை.சாதி ஒடுக்குமுறை பற்றி மட்டுமல்ல, சமுகம் சார்ந்த பல விடயங்களை எழுதியதால்,அக்கால கட்டத்தில் ‘மல்லிகை’ ஒரு இடதுசாரிப் பத்திரிகையாகவில்லாது,”மக்கள்’ பத்திரிகையாகப் பெயர் எடுத்தது.அதன் பின், இலங்கையில்,இடதுசாரிகள் இரண்டுபட்டார்கள்.1970ம் ஆண்டு கடைசியில்,நாங்கள்; லண்டனுக்கு வந்தபின் ஜீவாவுடன் ஒரு தொடர்பும் இருக்கவில்லை. 2009;ம் ஆண்டு,நானும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் டாக்டர் நடேசனும் கொழும்புக்குச் சென்றபோது அவரைச் சந்தித்தோம்;. புலிகளின் புலனாய்வுத் துறைத்தலைவர் பொட்டு அம்மானால் தான் கொழும்புக்கு நகரவேண்டியதைச் சொன்னார். சங்கானைக் கலவரத்தை எனது, ‘ஒருகோடைi விடுமுறை’ நாவலில் குறிப்பிட்டதைச் சொன்னேன். சந்தோசப் பட்டார்.முற்போக்கு இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த, திரு. ஜீவா அவர்கள், 2011ம் ஆண்டு,கொழும்பில் நடத்த அகில உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை ஒழுங்கு செய்வதிலும் முன்நின்று உழைத்தவர்களில் ஒருத்தர் என்று ஞானம் பத்திரிகை ஆசிரியர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்வைப் பகிஸகரிக்கச் சொல்லித் தமிழ்த் தேசியம் வழக்கம்போல் கூக்குரலிட்டாலும் அந்த வைபவம் பிரமாண்டமான வெற்றியைத் தந்தது.நானும் நடேசனும்; அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது எங்களைக் கண்டுதிரு ஜீவா அவர்கள் மிக மிகச் சந்தோசப் பட்டார்அவரின் அயராத உழைப்பு என்னைச் சந்தோசப்படுத்தியது. இலங்கை முற்போக்கு இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருத்தரான ஜீவாவின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததியினருக்கும் மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்ற நம்புகிறேன்.

Posted in Tamil Articles | Leave a comment