தமிழத் தொன்மையைத் தேடிய தமிழத் தூதர்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 19.11.22
இங்கு என்னைப் பேச அழைத்த சகோதரி பைந்தமிழ்ச்சாரல்,பவானி அவர்களுக்கும், நெறிப் படுத்திக் கொண்டிருக்கும்திரு ராஜ் குலராஜா அவர்களுக்கும் இங்கு வந்திருக்கும் அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் எனது தாழ்மையான வணக்கம்.
முன்னுரை:
மனிதர்கள், வாழ்க்கை நியதி காரணமாகப் படிக்கத் தொடங்கும் காலத்திலிருந்து வௌ;வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கை, அவர்களின் அறிவாலும் அனுபவத்தாலும் இணைந்து செயல்படுகிறது. இந்தப் பிரயாணத்தில், ‘நான் யார்,எனது அடையாளமான மொழியின் தொன்மையென்ன’? என்ற கேள்வியைக் கேட்டுத் தன்னையும், தனது மரபின் தொன்மையையும் பெருமையையும் அறிந்து கொள்ள நினைப்பவர்களாற்தான் இன்று உலகம் பல்வித அறிவைப் பெற்றுத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது.மேற்குறிப்பிட்ட தகமைகள் இப்படித் தேடலின் மூலம்தான் எங்களுக்குப் பாரிய சரித்திர உண்மைகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அதில் மிகவும் மேன்மையாகக் குறிப்பிடத் தக்க தமிழ் அறிஞர்களில்; தவத் திரு தனிநாயகம் அடிகளாரும் ஒருத்தர்.
முதலாவது உலகத் தமிழ் மகாநாட்டை 1966ம் ஆண்டு கோலாலம்பூரில் ஆரம்பித்த,இன்றுவரை பதினொரு தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடக்கக் காரண கர்த்தாவாகவிருந்த, தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளாரை இன்று,தமிழை உலகறியப் பண்ணிய தமிழ் அண்ணலாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.
பல மொழிகள் கற்று பல நாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பெருமையைப் பரப்பிய’தமிழ்த் தூதுவன்’; என்றழைக்கப் பட்ட தமிழ் மேதகு தனிநாயகம் அடிகளார் தேடிய, எழுதிய.தமிழத் தொன்மை பற்றி ஆய்வதுதான் இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ் மொழிக்கு இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பல அடிப்படை மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.முதலாவதாக, ஆறுமுக நாவலர் (1822-1730) அவர்கள் தமிழை அச்சேற்றினார்;.முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்(1892-1947);,ஒரு சமயத் துறவியானதும், மதத்தைப் பரப்பும் வேலையைத் தொடராமல்,சாதி மத பேதமற்ற கல்வி மூலம் தமிழை மேன்படுத்தத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். தமிழ்த் தொன்மங்களான இசை இயல் நாடகம என்று முப்பெரும் கலைகளையும் பற்றி ஆய்வு செய்து தமிழுலகிற்கு அர்ப்பணித்தார்.
முத்தமிழ் வித்தகர் விபுலானாந்த அடிகளார்.மேற்கத்திய நாடக சக்கரவர்த்தியாக இன்று உலக மயமாகப் போற்றப் படும் ஆங்கிலேய நாடக அண்ணல் சேக்;ஸ்பியரின்(1564-1616),12 நாடகங்களை ஆய்வு செய்து ‘மதங்க சூழாமணி’ என்ற நூலை எழுதியதால் தொன்மையான தமிழ் நாடகத் துறையை மீளாய்வுக்குத் தூண்டினார். அது மட்டுமல்லாமல்,’யாழ்நூல்’ எழுதித் தமிழனின் மிக மிகத் தொன்மையான ‘யாழ்’இசைக் கருவியின் சரித்திரத்தை ஆராய்வதன் மூலம் தமிழனின் தொன்மையை, தென்னாசிய நாடுகள், மத்தியதரைக் கடல் நாடுகளில் வணிகத் துறையில் கொடி கட்டிப் பறந்தது மட்டுமல்லாமல், தமிழரி;ன தமிழரின் பன் முகத் திறமைகளை எங்கெங்கெல்லாம் நிலை நிறுத்தியிருக்கிறார்கள் என்ற அற்புத ஆய்வு நூலாக’யாழ்நூலைப் படைத்திருக்கிறார்.
தமிழுக்குத் தொண்டு செய்த மேற்கத்தியர்களை எடுத்துக் கொண்டால் கடந்த சில நூற்றாண்டுகளாக அவர்கள் தமிழக்குச் செய்த சேவையாற்தான் தமிழர்களே பல விடயங்களை அறிந்து கொண்டார்கள்.
உதாரணமாக, ஒரு சிலரை இங்கு குறிப்பிடுகிறேன். பெச்சி கொன்ஸ்டான்டினோ யோசப் என்பவா ;(-1680-1747-,இத்தாலிய நாட்டிலிருந்து தமிழத்திறகுக் கிறஸ்தவ மதத்தைப் பரப்ப வந்தவர்.தமிழ் மொழி கற்றுத் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டவர். தேம்பாவணி என்ற காப்பியத்தைப் படைத்தவர் அத்துடன் கொடுந்தமிழ் இலக்கணம்,இலக்கணத் திறவுகோல், கிளாவிஸ் ஐந்திணை நூல்,தமிழின் முதல் அகராதியான சதுரகராதி எழுதியவர்.தமிழ் இலத்தின் அகராதி, போர்த்துக்கீசியம-;,தமிழ்-இலத்தின் அகராதியையும் எழுதியவர்.திருக்குறள் (அறத்துப்பால்,பொருட்பால்),தொன்னூல் விளக்கம் இரண்டையும் இலத்தினில் மொழிபெயர்த்தவர்.அத்துடன் ‘பரமார்த்த குரு என்ற எள்ளல் (சார்ட்டாய) உரைநடை இலக்கியம் படைத்தவர்.
செக்கோஸ்லாவேக்கியாவைச் சேர்ந்தவர்.தமிழ் சமஸ்கிருதம்,திராவிட மொழிகள் பற்றி ஆய்வு செய்தவர்.திருக்குறளைச் செக்கோஸ்லாவேக்கிய மொழியில் மொழி பெயர்த்தவர்.சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் திராவிட மொழிகள் பற்றி பேராசியராகக் கொஞ்சகாலம் பணி புரிந்தவர். தனிநாயகம் அடிகளாருடனும் சி.ஐ. சுப்பிரமணியம் அவர்களுடனும்; சேர்ந்து முதலாவது மகாநாட்டைத் தொடக்கி வைத்தவர்.
அடிகளாருக்கு முன் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டப் பாடுபட்ட அத்தனை தமிழ்த் தமமைகளும் சைவ சமய மேம்பாட்டுடன் இணைந்தவர்கள்.
சைவ சமய வழிமுறையில் கல்வி கற்று, தமிழரின் தொன்மையை மொழி மூலமட்டுமல்லாமல், சமய முறையிலும் படித்துத் தெளிந்த அண்ணல்கள். அவர்களிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையிலிருந்து வந்தவர் தனிநாயகம் அடிகளார்.கிறிஸ்துவரான.தவத்திரு தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழியின் தொன்மையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அளப்பரியன.தனி நாயகம் அடிகளார் அவர்களது தமிழ்த் தொண்டை இலங்கை இந்தியா என்ற நாடுகளில் மட்டும் பரப்பாமல் உலகில் 51 நாடுகளுக்குச் சென்று பரப்ப முனைந்தார் என்று சொல்லப் படுகிறது.
.
அவரது ஆரம்ப ஆங்கிலக் கல்வி,ஆவலுடன் அவர்படித்த தமிழ்க் கல்வி,மட்டுமல்லாமல், அத்துடன் மேற்கு நாடுகளிற் கிடைத்த தமிழ் மொழிப் படைப்புகள் அவரின் தேடலை ஊக்கப் படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
தனிநாய அடிகளார்,கத்தோலிக்கனாகப் பிறந்து, துறவியாகி கிறிஸ்துவ தத்தவங்களைத் தமிழின் மூலம் தமிழ் மக்களிடையே பரப்பாமல்.இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பரவலாகப் பேசப் பட்ட தமிழ் மொழியின் தொன்மையை,பெரும்பாலும் அன்னிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டிருந்த உலக அரங்கிற்குக் கொண்டு சென்றிருக்கிறார். 1949-1951ம் ஆண்டுகாலத்தில் அவர்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தில்;; ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மற்றைய நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் மிகவும் விசேடமாகத் தமிழ் நாட்டுடனும் தமிழ் மக்களுடனும் பல நாடுகள் வைத்திருந்த,பன்முகத்தன்மையானதும் பிரமாண்டமானமானதுமான பல சரித்திரங்களைக் கண்டு மகிழ்ச்சி கண்டிருப்பார்.
கடந்த நூற்றாண்டில் தனிநாயகம் அடிகளார் மாதிரி வேறு எந்தத் தமிழ் அறிஞர்களும் இவ்வளவு பாரிய தேடலைச் செய்யவில்லை என்பது எனது அபிப்பிராயம்.
அடிகளாரின் வாழ்க்கையின் ஆரம்பம்:
ஒரு மனிதனின் திறமை அவனுடைய அடிமனத்தில் ஒரு சிறு விதையாக அவனது ஆரம்ப வயதில் விதைக்கப் படுகிறது.அதன் வளர்சியை, அவனது பெற்றோர் மட்டுமல்லாது,அவனது சூழ்நிலை,அவன் வளர்ந்த கால கட்டத்தில் நடந்த அரசியல்,சமூகமாற்றங்கள் அத்துடன் அனது உள்ளுணர்வின் தேடல் என்பன நீட்சி செய்கிறது..
தமிழ்த் திருமகன் தனிநாயகம் அடிகள் அவர்கள் செய்த பணிகளின் பன்முகத் தன்மையை அறிஞர்களாலும் சாதாரண பொது மக்களாலும் மதிக்கும் அளவிற்கு உயர்ந்த வெற்றியை ஆய்வு செய்யும்போது பல நுணுக்கமான விடயங்களை நாங்கள் புரிந்து கொள்ளலாம். அடுத்த வருடம் அவர் பிறந்த நூற்றிப் பத்தாம் ஆண்டைக் கொண்டாடப் போகிறோம்.இதுவரை, அவரின் தமிழ்த் தொண்டு பற்றி பன்முகத் தன்மையான ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. தமிழரின் தொன்மை சரித்திரத்தைப் பல அறிஞர்களும் ஆயந்து உலகம் பரந்த விதத்தில் பரப்ப வேண்டும் என்பதற்காக,
– 1945ம் ஆண்டு அவரின் 32 வது வயதில்,அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘தமிழ்’ மொழி பற்றிய ஆய்வில்; எம்.ஏ பட்டமும்,அதைத் தொடர்ந்து,’தமிழ் இலக்கியத்தில்’; எம்.லிட்.பட்டமும் லண்டன் பல்கலைக் கழகத்தில (1955-57;,’பழம் தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனை’ என்ற பொருளில் ஆய்வு செய்து. முனைவர் பட்டமும் பெற்றவர்.;
-தமிழ்க்கலாச்சாரம் என்ற பத்திரிகை ஆசிரியராக 1951-1959 வரை பணியாற்றியவர்.
-இன்டநாஷனல் அசோசியேசன் போர் தமிழ் றிசேர்ச்’ என்ற அமைப்பை ஆரம்பித்தவர்.
– முதலாவது, தமிழ் மகாநாட்டை ஆரம்பித்தவர்,
-தமிழை வளர்கக்ப் பிறந்த தூதுவனாகக் கருதப் பட்டுப் போற்றப் பட்டவர்.
குடும்பம்: தனிநாயக அடிகளார், 2.8.1913ம் ஆண்டு,ஊர்காவற்துறையிலுள்ள கரம்பன் என்ற கிராமத்திற் பிறந்தார்.தந்தை வழி நெடுந்தீவாகும். தமிழில் ஆர்வம் வந்ததும் அவரது தந்தைவழிப் பூட்டனார் பெயரான ‘தனிநாயகம்’ என்ற பெயரை,திருநெல்வேலி சென்று பணியாற்றும்போது. அந்தப் பிரதேசத்திலிருந்து வந்த அவரின் மூதாதையர் ஞாபகமாக மாற்றி எடுத்துக் கொண்டது. அது தமிழ்த் தொன்மையின் இறுக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
தாயார் சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை. தகப்பனார் நாகநாதன் கணபதிப்பிள்ளை ஸ்ரானிஸ்லஸ்.தந்தையார் கணபதிப்பிள்ளை சைவராக இருந்து கிறிஸ்தவராக மாறியவர் என்று தகவல்கள் சொல்கின்றன,இவரின் பாரம்பரியம் தமிழ்நாடு திருநெல்வேலியுடனிணைந்து..
அடிகளார் பிறந்து,; 21ம் நாள் திருமுழுக்கு (ஞானஸ்னானம்) செய்யப் பட்டு,’சேவியர்’ என்ற பெயர் சூட்டப் பட்டது.அடிகளாரின் முழுப் பெயர்’சேவியர் நிக்கலஸ் ஸரானிஸ்லஸ்’ என்பதாகும்.
ஆரம்பப் படிப்பு,ஊர்காவற்துறை,செயின்ட் அந்தோனி பாடசாலையில் ஆரம்பமானது.அடுத்த கட்டப் படிப்பு 1920ம்-1922 ஆண்டுகளில்,யாழ்ப்பாணம் செயின்ட பற்றிக்ஸ் கல்லூரியில் தொடர்ந்தது. 1919ம் ஆண்டில் முதலாவது உலக யுத்தம் முடிவுற்றது. உலகம் பல கோணங்களில் மிகத் துரிதமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கையில் படித்த ஆண்களுக்கு 50 விகிதமும படித்த பெண்களுக்கு 50 விகிதமும் என்ற பிரித்தானிய சட்டம் வந்தது. படிப்பவர்களின் தொகை கூடியது.கல்வியின் வளர்ச்சியால் இலங்கை இந்தியா மட்டுமல்ல அகில உலகமே ஒரு புதிய மாற்றத்தை முகம் கொடுத்தது.
வானொலி. திரைப்பட வளர்ச்சிகளால் மக்கள் விரிவான உலக அறிவைப் பெறத் தொடங்கினார்கள்.
அகில உலகிலும் நடந்த,சமுதாய,பொருளாதார,பிரயாண.கல்வி, சிந்தனை மாற்றங்கள் இலங்கையிலும் அந்த மாற்றத்தின் எதிரொலியாகப் பல மாற்றங்கள் வளர்ந்தன.தாயார் இவரை மத குரவாக வரவேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் அதை ஏற்கவில்லை என்றும், ஆனால் தாயார் அடிகளாரின் பன்னிரண்டாவது வயதில் இறந்ததும் இவரை ஆதரித்த மத குருவின் உதவியுடன் மதகுருவானதாகவும் அவணங்கள் சொல்கின்றன.
தனிநாயக அடிகளார் செயின்ட் பற்றிக்ஸ் கல்லூரிக்குப் போகமுதல் அங்கு முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் 1919ல் விஞ்ஞான ஆசிரியராக அங்கு அழைக்கப் பட்டுப் படிப்பித்தார். 1920ம் ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தலைமையேற்றார். அவர் படிப்பித்த இடங்களில்,விபுலானந்த அடிகளார், அங்கு படிக்கும் மாணவர்கள் பல மொழி;களையும் கற்கவேண்டும்,உலக விடயங்களைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தினார் என்பதை இங்கு பதிவிடவேண்டு:ம். ஏனென்றால், விபுலான்ற அடிகளார் என்ற தமிழுணர்வாணர், தமிழை மட்டும் படித்திருக்காமல்,
சிங்களம்,ஆங்கிலம்,சமஸ்கிருதம்,இலத்தின்,கிரேக்கம்,வங்காளம்,பாளி, அரபியமொழி போன்ற பல மொழிகளையம் கற்றவர்.தமிழ்த் தொன்மையைத் தேட இந்த மொழிகளில் பல படிப்புக்களை மேற் கொண்டவர் என்பதை அவரின் ‘யாழ்நூல்’ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியே,தவத்திரு தனிநாயம் அடிகளாரும்,பன் மொழிகளைக் கற்றவர்.
20ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து, பல நாடுகளில் மக்கள் தங்கள் அடையாளங்களுக்கும் சுயமரியாதைக்கும் போராடத் தொடங்கியிருந்தார்கள். ஆங்கிலேயரின் அடிமைநாடாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த தெற்கு அயர்லாந்து மக்கள் பிரித்தானியருக்கு எதிராகப் போராடித் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றார்கள்.
இந்தியாவில் சுதந்திர உணர்வு பரவத் தொடங்கியது.முக்கியமாகத் தமிழ் நாட்டில்,அரசியல்,கல்வி,;தமிழுணர்வு போன்ற விடயங்களில் பல மாற்றங்கள் நடந்தன. பார்ப்பனர்களாலும் ஆங்கிலேயர்களாலும் ஒதுக்கப் பட்டிருந்த தமிழச் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்தது.1924ல் ‘சுயஉரிமைக் கட்சியை; ஈ.வே.ராமசாமி தலைமையில் ஆரம்பிக்கப் பட்டது. தமிழ்த் தொன்மையைத் தேடும் ஆவல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது.
இந்தியாவில், பார்ப்பனர்களால்,’ந சூத்ர மதிமம் தத்யா’ (சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே’ என்ற அடிப் படையில் இரண்டாயிரம் வருடங்களாகத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப் படாமலிருந்த படிப்புரிமைக்காக போராட்டங்கள் ஆரம்பித்தன. தமிழர்களுக்கு ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கையில் இலங்கையையைச் சேர்ந்த விபுலானந்த அடிகளாரும் முன்னின்று குரல் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப் பட்டது.
இலங்கையில் விபுலானந்த அடிகளார் தமிழர்களுக்காக,1925லிருந்து 38 பாடசாலைகளை கிழக்கிலும் வடக்கிலும் ஆரம்பித்தார்.;தமிழரின் இயல் இசை,நாடகத் தொன்மையில் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றால், ஆங்கில நாடகாசிரியரான சேக்ஸ்பியரின் 12 நாடகங்களை ஆய்வு செய்து ‘மதங்கசூழாமணி’ நூலை 1927ல் வெளியிட்டார்..
இந்தியாவில்,தமிழ் நாடகத் துறையிலும் விழிப்புணர்ச்சியுண்டாகியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழத் துறைத் தலைவராக விபுலானந்த அடிகளார் 1932ல் பதிவியேற்றார்.
அக்கால கட்டத்தில் தனிநாயகம் அடிகளார்,கொழும்பு புனித செயின்ட் பேர்ணார்ட் செமினறில்.படித்தார் இவரது படிப்பு ஆங்கிலத்திலேயே இருந்தது.1931-1934 வரை படித்து பி.ஏ.பட்டத்தை ‘பிலோசபி- இறையியல் தத்துவப் படிப்பில்’ பெற்றார்.
அத்துடன் தனிநாயக அடிகளாரும்,தமிழ்.ஆங்கிலம்,சிங்களம். இத்தாலி,ப்ரன்ஷ்,இரஷ்ய,இலத்தின். ஜேர்மன்,ஸ்பானிஸ்,போர்த்துக்கீஸ், போன்ற மொழிகளில் தேறினார்.
அதைத் தொடர்ந்து,திருவனந்தபுரம் மாவட்டத்தில் (1934-1939) பணியாற்றும்போது,உரோமாபுரி வத்திக்கன் பல்கலைக்கழகம் சென்;று, ‘கார்தாஜினிய மதகுருமார்;’என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையை எழுதி ‘டாக்டர் ஒவ் டிவினிட்டி (தெய்வீக டாக்டர்)’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
இக்காலத்தில்.ஐரோப்பாவில் வலதுசாரி அரசியல் மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து வந்தது. ஜேர்மனியல் ஹிட்லரும்,இத்தாலியல் முசொலினியும் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்த முனைந்து கொண்டிருந்தார்கள்.ஹிட்லர் ஆரிய இனவெறியுடன் யூதமக்களைக் கொன்றொழித்துக்கொண்டிருந்தான்.
தனிநாயகம் அடிகளார் ரோமாபுரியல் படிக்கும்போது வத்திக்கன் புத்தக ஆவணங்களில் தமிழில் எழுதப்பட்டிருந்த கிறிஸ்தவ நூல்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கை மக்களின் சரித்திரத் தடயங்கள்,வணக்கத் தலங்கள், வழிபாட்டு முறைகள் என்பன அடியோடு அழிக்கப் பட்டதும் துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப் பட்டு சமயம் மாற்றப் பட்டதும் அதுவரை அவருக்குத் தெரியாதிருக்கலாம்.
ரோம் நகரில் அவர் படிக்கும்போது, பல விதமான 80.0000 கையெழுத்துப் பதிவுகளுக்கு மேலான வத்திக்கன நூலகத்தை ஒரு புத்தக பொக்கிஷமான அறையாகத் தரிசிரித்திருப்பார்.சமய நூல்கள் மட்டுமன்றி,பழங்காலத்து. பாபிலோனிய, ரோம, கிரேக்க ஆவணங்கள் போன்று வத்திக்கன் நூலகத்தில் கோடிக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.,கிட்டத்தட்ட உலகத்திலுள்ள பெரும்பாலான மொழிகளிலுமுள்ளன.வேறு எங்கும் கிடைக்காத பலநாடுகளின் பல தகவல்கள் அங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான நாடுகளின் சரித்திரத் தொன்மைக் கலைகள் பற்றிய தகவல்கள அங்கு இருக்கின்றன.இங்கிலாந்து மன்னர் எட்டாவது ஹென்றி அவரின் காதலி அன்னா பொலினிக்கு எழுதிய 17.காதல்கடிதங்கள் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மனியிலிருந்த உணவு முறைகள் பற்றி தகவல்கள சேகரித்து வைக்கப் பட்டிருக்கிறது.1493ம் ஆண்டு,உலகம் உருண்டையானது என்ற சொன்னதால் கத்தோலிக்க மதத்தால் கடுமையாகத் தண்டிக்கப் பட்ட இத்தாலிய அறிஞர் கலிலிலெயொ அவர்களைப் பற்றிய தகவல்கள் என்று எத்தனையோ விதமான ஆவணங்கள் அங்குள்ளன.
கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடிச்சென்ற வரலாறு,ஆதிகால உலகப்படம்,என்று எத்தனையோ அரிய புத்தகங்கள் இருக்கின்றன.அங்கிருக்கும் புத்தகங்களை நிரைப்படுத்தினால் 31 மைல் நீளத்திலிருக்குமாம்.
அவற்றில்,பல நூல்களைப் படித்துப் பல அரிய விடயங்களைத் தெரிந்து கொண்டதுபோல,அங்கிருந்த தமிழ் நூல்களிலும் எத்தனையோ அறிவைப் பெற்றிருப்பார். அத்துடன் அவருடன் 43 நாடுகளிலிருந்து அங்கு படிக்க வந்து 250 குருமார்களுடன் பல தரப்பட்ட விடயங்களைக் கலந்து பேசித் தெரிந்து கொண்டிருப்பார்.இப்படி ஒரு அதிர்ஷ்டத்துடன் கிடைத்த அற்புதத் திறமையுடன் இந்தியா திரும்பினார்;.
அதைத் தொடந்து,அவர் இந்தியாவில்,திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் என்ற இடத்திலுள்ள செய்ன்ட் திரோசா கொன்வென்டில் 1940-1945 வரை துணைத்தலையாசிரியராகப் படிப்பிக்கும்போது தமிழ் படிக்கும் அவசியம் வந்ததால் தமிழ் படிக்க ஆரம்பித்தார்.
.
அப்போது,அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருந்தது.சாதி சார்ந்த நிலையில் மக்களை ஒதுக்கி வைத்திருக்கும் வர்ணாஸ்ரமக் கொள்கைக்கெதிரான போராட்டங்கள் ஆரம்பித்தன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்;’ என்ற கணியன் பூங்குன்றனார் அவர்களின்; வாக்கு திராவிடக்கட்சியினால் ஒலிக்கத் தொடங்கியது. தமிழக்கலைகளான இசை இயல் நாடகங்கள் மூலம் தமிழுணர்வைத் தூண்டும் படைப்புக்கள் வெளிவரத் தொடங்கின.
உலக முது மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதும் தமிழின் வயது 5000-10.000 என்பதும், அத்துடன் தமிழர் நாகரீகம் பத்தாயிரம் வருட வரலாற்றைக் கொண்டது, என்பதையும் தமிழருக்கான இலக்கண நூல் தொல்காப்பியரால் கி. மு. 8ம் நூற்றாண்டிலேயெ எழுதப்பட்டது (கலாநிதி கைலாசபதி1964.) என்பதை எல்லாம் தெரிந்து கொண்டாரோ இல்லையோ தமிழார்வம் அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறது என்பதை அவரின் பின்னாளில் குறிப்புகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
இன்று,2022ல் உலகம் பரந்த விதத்தில் 8 கோடி தமிழர்கள் பல நாடுகளில் வாழ்கிறார்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பெரிய பதவிகளையம் வகிக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியின் தொன்மையை ஆங்கிலத்தில் எடுத்துப் பரப்புவோர் மிகக் குறைவே.தொன்மைக்காலத்; தமிழ் வளர்ச்சி,தொன்மைக்காலத்; தமிழரின் சமத்துவ
சமூக அமைப்பு,அக்காலத்தில் உலகில் நான்கு பக்கங்களு;க்கும் கப்பலோட்டி வணிகம் செய்த பெருமை,கலைகளைப் பரப்பிய திறமை, அரச தூதுவர்களாகக் கடமையாற்றிய ஆற்றல்கள் என்பவற்றை அடிகாளார் படித்துணரத் தொடங்கினார்.
தமிழர்களின் நாகரீகமும் வணிகத் திறமையும் மேற்கத்திய நாடுகளான, கிரேக்கம், எஜிப்து, உரோமாபுரி,பாரசிகம், சிரியா, கிழக்காசிய நாடுகளான சீனா,இந்தோனேசியா, தாய்லாந்து,பிஜி,சிங்கப்பூர்மலேசியா,கம்போடியா போன்ற நாடுகளுடன் வாணிப, கலாச்சாரத் தொடர்பை கி.மு 10ம் நூற்றாண்டுகளிலேயே செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்குப் பல சரித்திர தடயங்கள் உள்ளன. அங்கு தங்கி வாழ்ந்ததற்கும் தரவுகள் உள்ளன.
கிரேக்க திவுகளில் ஒன்றான கிரட் என்ற தீவில் ‘தமிழ’என்பவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கும் தடயங்கள் உள்ளன. கிழக்காசிய நாடுகளில் தமிழர் கலாச்சாரங்கள் பேணப் படுவதை தனிநாயகம் அடிகளார் தாய்லாந்து சென்றபோது, நேரில் கண்டிருக்கிறார்.அந்த அனுவபங்களின் விபரத்தைத், தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவரும் அவரின் நூல்களைப் பதிவிட்டவருமான அடிகளார் அமுதன் அவர்கள் அடிகாளரின் தாய்லாந்து பிரயாணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனிநாயக அடிகளார்,தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு நடந்து மன்னனின் முடுசூட்டு விழாவில்,அங்கு தாய்லாந்து மொழியில் சொல்லப் பட்ட,மந்திரம்,’ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் ஜோதியே’ என்ற தமிழ்த் திருவெம்பாவை மந்திரமெனத் தெரிந்து கொண்டபோது அவர் மெய்சிலிர்த்திருப்பார் என்பது நினைக்கும்போது நான் பெருமைப் படுகிறேன்.
ஆதிகாலம் காலம் தொட்டே,தமிழர்கள் பல நாடுகளிலும், வணிகம் மட்டுமல்லாமல்,கலைப் படைப்புக்களை வெளிநாட்டில் பரப்பியவர்கள்.அதன் தடயங்களாக,பாரசீக,சீனா,மத்திய தரைக்கடல் நாடுகள்,கிரேக்கம்,உரோமாபுரி, போன்ற வெளிநாட்டு நாணயங்கள் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்திருக்கின்றன.
-உரோமாபுரி பொம்பே நகரில் தமிழ்த் தெய்வத்தின் (இலக்சுமி?) சிலையிருக்கிறது.அத்துடன் தமிழக காரங்களைச் சேர்த்துச் செய்யும் 300 உணவு வகைகளும் உNரொமாபுரியில் இருந்ததாம்.
-கிரேக்க வரலாற்றாசிரியர் ‘மெகதீனெஸ்’ பாண்டிய மன்னனின தலைநகர் மதுரை என்று குறிப் பிட்டிருக்கிறார்.கிரேக்க வரலாறு உரோம வரலாற்றை விடப் பழமையானது. பாண்டிய மன்னனின் சபையில் தமிழ்ப்; புலவர்கள் தங்கள் படைப்புகளை அர்ப்பணித்த சரித்திரமுண்டு. அப்படியானால் கிரேக்க வரலாற்றாசிரியர் கி.மு.4ம் நூற்றாண்டைச் சொல்கிறார் எனவே பலர் சொல்லும் சங்க காலம் என்று சொல்லப் படுவது கி.மு 4ம் நூற்றாண்டிலிருந்து கிபி.3ம் நூற்றாண்டு வரையான கால கட்டம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழ் ‘சங்க’ வரலாற்று ரீதியில் முரணான தகவல்கள் உள்ளன. உதாரணமாக, சங்கம் என்ற செல்லே தமிழச் சொல் இல்லை.அதுவடமொழிச் சொல். அப்படியானால் தமிழகத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் வந்தபின்தான் தமிழரின்’ சங்கத் தமிழ்’ வளர்ந்ததா என்பது கேள்வி. நாங்கள் அடிக்கடி கேட்கும் ‘சங்கத் தமிழ்’ சொல்வதாகப் பதிவிடப் படும் சார்ந்த’தமிழரின் தொன்மை கி.மு 3ம் நூற்றாண்டுக்கும் கிபி 3ம் நூற்றாண்டுக்கமிடைப் பட்ட காலமாக இருக்க முடியாது.
தனிநாயகம் அடிகளாரைப் பற்றியறியும் ஆவலுடன் எனது ஆய்வை ஆரம்பித்தபோது, அவரின் பதிவுகளில்;,’சங்கத் தமிழ்’என்று குறிப்பிட்;ட தகவல்கள்; மிகக் குறைவு.தமிழர் தொன்மையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அடக்க முடியாதது என்பதைச் சூசகமாகச் சொல்லிச் சென்றிருப்பவர் தனிநாயகம் அடிகளார்.
தமிழர்களிடமிருந்த பலநாடுகள் தெரிந்து கொண்ட விடயங்கள். தமிழரின் தொல் கலைகள் எங்கெல்லாம் அடித்தளம் அமைத்திருக்கின்றன என்பதை அடிகளாரின் பிரயாணங்களின் தேடுதலுடன் இணைத்துப் பார்ப்பது நன்று.
அதாவது, பேராசிரியர் கைலாசபதி அவர்களின்,’பண்டைத்தமிழர்களின் வாழ்வும் வழிபாடும’ என்ற நூலில் தொல்காப்பிய காலம் கி.மு 8ம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார்.
ஒரு மொழி பேச்சு வழக்கிலிருந்து அதன் நீட்சி இலக்கணத்துடன் வளர்வதானால் அதன் வயது சில ஆயிரம் வருடங்களையாவது கொண்டிருக்கவேண்டும்.
தமிழத் தொன்மை, வாணிபம்,கலைவளர்ச்சி,மற்றைய நாடுகளுடனான அரசியற் தொடர்புளைப்பார்க்கும்போது தமிழர் தொன்மை குறைந்தது ஐயாயிரம் வருடங்களாவது இருக்கும். மனித நாகரிகத்தில் பயிர் விளைச்சலை முதலில் ஆரம்பித்தவர்கள் திராவிடர்கள். தென்னகம் பல் வளம் நிறைந்தது. பயிர்கள் வளர்ந்தன.ஐந்திணை மக்களும் ஒருத்தொருத்தொருக்கொருத்தர் சமத்துவமாக வாழ்ந்திருக்கிறார்கள்.சமூகக் கட்டுமானங்கள்.நிர்வாகம்,கொடுத்தல் வாங்கலான வாணிபம்,வாழ்வின் மகிழ்வைக் கொண்டாடும் வைபவங்கள், இறந்தோரை, முன்னோரை மதிக்கும் பண்பாடுகள், கலாச்சாரவழுமியங்கள் என்பன ஒரு நாகரீக சமூகத்தாற்தான் வளர்க்க முடியும்.’யாதும் ஊரெ யாவரம் கேளிர்’ என்ற தொல் தமிழன் உயர்பண்பு அவர்களை பரந்த உலகத்தடன் இணைத்திருக்கிறது.அதன் சாட்சியங்கள், தமிழருடன் தொடர்பு வைத்திருந்த அன்னிய நாடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன.
உதாரணங்களுக்குச் சில இங்கு பதிவாகின்றன.
-அசோகனின் 273-232 (மூன்றாம் நூற்றாண்டு நடுப்;பகுதி.) கால கட்ட கல் வெட்டில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் திறமை பொறிக்கப் பட்டிருக்கிறுது.
-பாண்டிய மன்னரின் வாசல் காவலர்களாக கிரேக்க நாட்டவர்கள் வேலை செய்த தகவல்களுமுள்ளன.
– முருக வழிபாட்டின் ஆயிரம் வருட தடயங்கள் ஆதிச்ச நல்லூரில் கிடைத்திருக்கிறது.
-தென் கொரியாவில் தமிழ் மொழியின் அடையாளங்களம்,கலாச்சார வழிமுறைகளும் இரண்டாயிரம் வருட நீட்சியாக இன்றும் பரவலாக இருக்கிறது. செப்பவளம் (கிஓ கு வாங் ஓக்) என்ற பாண்டிய இளவரசி தென் கொரிய அரசனான சூரோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும்,இன்றும் அங்கு,அந்தத் தம்பதியர்களின் மரபணு சார்ந்த (தமிழ் மரபணு) 6 கோடி (10 விகிதமான மக்கள் தொகை) தென் கொரிய மக்கள் அங்கு இருப்பதாகவம் சொல்லப் படுகிறது. அவர்களின் மொழியில் 500 தமிழ் வார்த்தைகள் ( அப்பா, ஒம்மா) போன்றவை பாவனையிலிருக்கிறது.இறந்தோருக்குப் படைக்கும் தமிழ் மரபு தென் கொரியாவில் தொடர்கிறது. தமிழர்கள் மாதிரியே சூரிய பகவானுக்கு அறுவடை (பொங்கல்) விழா செய்கிறார்கள்.தமிழரின் வெள்ளையணி மாதிரி அவர்களும் வெள்ளையணி பாவிக்கிறார்கள்.வெளியில் காலணியை வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறார்கள்.பண்டைய கால கட்ட குடிசை வீடுகளும் அங்குள்ளன. சாப்பாட்டில் பருப்புவகையுண்டு.
தனிநாயகம் அடிகளார் தொடக்கிய முதலாவது உலகத் தமிழ் மகாநாட்டில்,’தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்ட தென்கிழக்காசிய நாடுகள்’ பற்றி ஆய்வுக் கட்டுரை வாசிக்கப் பட்டிருக்கிறது.இதிலிருந்து அவர் தொல் தமிழர்களுக்கும் தென்னாசிய நாடுகளுக்குமுள்ள வரலாற்றைப் பதிவிட்டிருப்பது தெரிகிறது.
அடிகளார்,தேடிய தொன்மைகளில் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
வாணிபத் தொடர்பால் தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள். சீனாவுடன் அவர்களுக்கிருந்த உறவின் அடையாளமாக,அங்கு குடியேறிய தமிழர்கள் கட்டிய சிவன் கோயில்’குவான்ஷோ’ என்ற இடத்திலிருக்கிறது.
கி.மு.20ம் ஆண்டு உரோம சக்கரவர்த்தி ஆகஸ்டஸ் அவர்களை தமிழ் மன்னன் பாண்டியனின் தூதர்கள் வணிபம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்குச் சந்தித்தை நிக்கலஸ் என்பரின் பதிவு லெபனான் லப்பரரியிலிருக்கிறதாம்.
தென்னகத் தமிழருடன்,எஜிப்த்தியர்,உரோமருக்கும், கிரேக்கர்களுக்கும்,யூதர்களுக்கும் இருந்து உறவு பல நூறு வருடங்களாகத் தொடர்கிறது. யூதர்களுடனான உறவு கி.மு.10ம் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது,என்று சொல்லப் படுகிறது. அதாவது யூத மன்னன் சொலமன் அரசனின் மாளிகையை அழகு செய்ய,தங்கம் முத்து, பட்டாடடைகள், சந்தனம் மயிலிறகு என்பன தமிழகத்திலிருந்து சென்றதான தகவலுண்டு. அத்துடன் தமிழர்கள் வாணிபர்களாக மட்டுமல்லாது. கலைஞர்கள், அறிஞர்கள்,அரச தூதுவர்கள்,அரசபடை வீரர்கள் என்ற பல விதத்தில் கிரேக்க, உரோம நாடுகளிலிருந்திருக்கிறார்கள் இத்துடன் அது மட்டுமல்லாமல் உரோம அடிமைகளாகவம் ஏழைத் தமிழர்கள் விற்கப் பட்டிருக்கிறார்கள்.அடிமை வியாபாரம் உலகம் பரந்த விதத்தில் கி மு 5000 வருடங்களுக்கு முன்னரே,பயிர் விளையும் இடத்தில் வேலை செய்யக் கொத்தடிமைகளாக்கப் பட்டதிலிருந்து தொடர்கிறது.
உரோமருடன் நடந்த வணிக காலத்தில்,120 கப்பல்களில் உரோமாபுரியிலிருந்து காவிரிப் பட்டினம் போன்ற துறைமுகங்களுக்குப் பல தரப்பட்ட பொருட்களுடன் வந்தன.
இன்று உலகமெல்லாம் உள்ள 50 கோடி அடிமைத் தொழிலாளர்களில் 80 விகிதமானவர்கள் பெண்கள் என்று சொல்லப் படுகிறது. இன்றைய (18.11.22) செய்தியின்படி பல இளம் பெண்களுக்கு ஓமான நாட்டில் வேலை எடுத்துத் தருவதாகச்சொல்லிக் கடத்தப்பட்டு சந்தைகளில் கொடிக்கணக்பான விலைகளில் விற்கப் பட்டிருக்கிறார்கள். விபச்சாரத்திற்காக விற்கப்படும் இவர்களின் விலை பல கோடிகள்.இதில் இப்போது 43 பெண்கள் அனாதரவற்ற நிலையில் அங்கு நிற்பதாக இலங்கைத் தூதுவரகம் சொல்லியிருக்கிறது.
அக்காலத்திலும்,தென்னகத்தில், கிரேக்க, உரோம அடிமைகளாக,பல இன அழகிய பெண்கள் விற்கப் பட்டிருக்கிறார்கள். இந்த அழகிய பெண்கள் தமிழத்தில் பெரிய தனவந்தர்களுக்கு ஆடல், பாடல் மூலம் சந்தோசப் படுத்த மட்டுமல்லாமல் தனவந்தர்கள், அரசர்கர்களின் பாதுகாவலர்களாகவும் பணி புரிந்தார்களாம்.
சாக்ரட்டிஸ் (கி.மு.470-399) காலத்தில் அவருடன் விவாதம் செய்யும் தகமையுடன் தமிழர்கள் அதன்ஸ் நாகரில் வாழ்ந்தார்களாம். உரோம சாம்ராச்சியத்தின் அறிவின் தலைநகராக இருநதது அலெக்ஸாண்டரியாவில் இந்தியக் (இன்றைய பீகார் அன்றைய மகதம்) கலப்புடைய’அம்மோனியஸ்;’என்ற ஒரு அறிஞர்(கி.மு.நான்காம் நூற்றாண்டு) கல்வி புகட்டினாராம் அவரது சீடன் அவரின் கல்வித்திறனில் மதிப்பு வைத்து ‘ஐ லவ் இந்தியா’ என்று கூவினானம்.’அம்மோனியஸ்’ என்ற இந்தியரின் தத்துவ போதனை முறைதான கிறிஸ்தவ சிந்தனைக்கு வழியாக வந்தது என்ற குறிப்பும் இருக்கிறது.
அலெக்ஸாண்டர் இந்தியாவின் வடபகுதிக்கு (கி.மு 327-325) வந்த கால கட்டத்தைதில் குஜராத் பிரதேசத்தில் கிரேக்கர்கர்கள் வாழ்த்திருக்கிறார்கள். அவர்கள் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறார்கள்.
அசோகன் கால கட்டத்தில்’தர்மர்சக்திதா’ என்ற கிரேக்க பௌத்த குருவை,அசோகன் வெளிநாடுகளுக்கு அனுப்பினானம்.
இந்திய கலைகளுடன் கிரேக்க கலைகள் பின்னிப் பிணைந்தன. கிரேக்க தேவதை ‘டெவிஸ்’இந்திய கங்காதேவி சிலை ஆனாள்.
குள்ளமான கிNரெக்க ‘அட்லஸ்’அவதாரம் சிலை ‘அகத்தியரானதா’? அவர்தான் தொல்காப்பியரின் குருவென மருவு பெற்றதா?
தொல்காப்பியம் எழுதப் பட்ட காலத்தில் வாழ்ந்த ஹோமரின் (கி.மு 8ம் நூற்றாண்டு) இலக்கியங்கள் வட இந்தியாவில் பெருமதிப்பைப் பெற்றன. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் குறிப்பிடும்போது,ஹோமரின் ‘இலியாட்’ என்ற கதைதான் இராமாயணம் ஆனது என்கிறார். கிரேக்க வனக் கடவுள் டையனிஸிஸ் குறிஞ்சிக் கடவுள் முருகனுடன் இணைக்கப் பட்ட சரித்திரமும் உள்ளது.
யுதர்கள்,இஸ்ரேலில் பிரச்சினை வந்த காலத்தில் கி;மு.6ம்.7ம் நூற்றாண்டுகளில் தென்னகம் வந்திருக்கிறார்கள்.
இயேசுவின் சீடர்களில் ஒருத்தரான செயின்ட் தோமஸ் அவர்கள் கி.பி. 52;ல் தமிழகம் வந்தார் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கினார். அவரின் செய்ன்ட் தோமஸ் சேர்ச் சென்னையிலிருக்கிறது.
தமிழ் எழுத்துகளுடனான தடயங்கள் தாய்லாந்து,எஜிப்து போன்ற இடங்களிலுள்ள. கி;பி 4ம் நூற்றாண்டில்,தாய்லாந்,இந்தோனேசியா,வியட்நாம் போன்ற நாடுகள் தமிழ் மன்னர் ஆட்சியல் இருந்திருக்கின்றன. இன்றும் தாய்லாந்தின் பல சடங்குகள் தமிழர் பாரம்பரியத்தை ஒட்டியிருக்கிறது.
தமிழர்கள் சூரியக் கடவுளை மிகவும் முக்கியமாக வணங்குபவர்கள்.
கி;பி.12ம் அங்கோவார்ட் கோயில்,’சூரியவர்மன்’ என்ற மன்னரால் நாற்பது ஏக்கர் பரப்பளவான இடத்தில் தமிழகத்தின் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ‘பரமவிஷ்ணு லோக’ என்ற பெயரில் இருந்துது. 213 அடி உயரமானது.இந்தக் கோயிலின் மிகவும் உயர்ந்த கோபுரத்தில,ஒருவருடத்தில் ஒருநாள்; சூரிய வெளிச்சம் உதயமாவதைப் பார்க்க மக்கள் பக்தியுடன் செல்வார்களாம்.
ஆரம்பத்தில்,தமிழர்கள் வணங்கிய, ஒன்பது கிரகங்களையும் பிரதிபலிக்கும் ஒன்பது கோபுரங்கள் இருந்தன. ஆனால் ‘சூரியவர்மனின் மகன் ‘நந்திவர்மன’; புத்த சமயத்தைத் தழுவியபோது பல மாற்றங்கள் நடந்து புத்தக சிலைகள் செதுக்கப் பட்டனவாம்.அங்கோவார்ட் சென்ற தனிநாயகம் அடிகளார் அந்தக் கோயில் பற்றிக் கட்டுரை எழுதப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.
கம்போடியா மட்டுமல்லாது தென்னாசிய நாடுகளில்,சோழ சாம்ராச்சியம் 9-13ம் நூற்றூண்டு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது.அக்காலத்திறு;கமுதலே கம்போடியா தமிழகத்துடன் தொடர்பிலிருந்தது. வளரும் ஒரு சிறு நாடான கம்போடியாவின் முதல் மன்னனே அங்கு வணிகம் செய்யச் சென்ற ஒரு தமிழன்; என்றும் சொல்லப்படுகிறது.
சோழ சக்கரவர்த்தி,கால கட்டத்தில் தென்னாசிய நாடுகளில் பல விருத்திகள் செய்யப் பட்டன.நெல் பயிர் வளர்ச்சி தொடக்கி வைக்கப் பட்டது.சோழமன்னின் வீரமும் நிர்வாகத் திறமையும் கடல் பரந்து பேசப் பட்டது.மிகவும் வலிமை வாயந்த அரசனான சோழன் 60.000 போர்யானைகளை வைத்திருந்தான்.
சோழனின் பாரம்பரியம் இலங்கையையும் ஆண்டது.திருகோணமலையை ஆண்ட குளக்கோட்டன் மகாராஜா சோழபாரம்பரியம் என்று சொல்லப் படுகிறது.
இலங்கைக்கு விஜயன் வந்த காலத்திலிருந்து கிழக்கிலங்கை தென்னத்துடன் இணைந்து வளர்ந்தது. இன்றும் அழியாத சங்கத் தமிழ்ப் பேச்சு வழக்கு அங்குண்டு.தமிழர் தொன்மையில் நாட்டமுள்ள தனிநாயகம் அடிகளார் அவர்களுக்கு,மட்டக்களப்பு தொன்மை பிடித்திருந்தது என்று’ மட்டக்களப்புத் தமிழகம்’ (ஈழகேசரி பொன்னையா வெளியீட்டு மன்றம் 1964) என்ற நூலிற் குறிப்பிடுகிறார்.
பெரும்பான்மையான கிழக்குத் தமிழ் மக்கள் ,அசோகன் கலிங்க நாட்டை வெற்றி
(கி.மு.260) கொண்டபின்,அக்காலத்து,போர்தர்மப்படி, தோற்றுவிட்ட நாட்டுப், பெண்கள், முதியோர்,குழந்தைகளைக் கொல்லத் தயங்கியதால்,அல்லது அந்த மக்கள் பௌத்தத்தை; தழுவ மறுத்ததால் 150.000 கலிங்க மக்கள் கலிங்கத்திருந்து வெளியேற்றப் பட்டார்கள். இலங்கையில் அப்போது சிவ வழிபாடு செய்யும் மன்னன் மூத்தசிவன் ஆட்சி செய்தான். அக்காலத்தில் கிழக்கில் குடியேறிய மக்கள் சங்கத் தமிழ் கலாச்சாரத்துடன் வந்தவர்கள்.இயற்கையை வணங்கியவர்கள். இயற்கை சார்ந்த பெயர்களை, அதாவது, தாமரைக்கேணி, அக்கரைப் பற்று,கல்லடி,பனங்காடு, ஆலையடி வேம்பு,கல்முனை, வாழைச்சேனை என்றெல்லாம் வைத்தவர்கள். பழங்காலக் கலாச்சாரமான வாழ்வு முறை இன்றும் நடைமுறையிலிருக்கிறது. அவர்களின் கலைகள்,பேச்சு வழக்கு தொன்மையானது.உதாரணமாக, அவ்வையார் தனிப்பாடல் திரட்டில் பாடிய ‘வரகு அரிசிச் சோறும்,வழுதுனங்காய் வாட்டும்,மொர மொரவென புளித்த மோரும்’ இன்றும் பேசப்படும் பழம் கலாச்சாரம் கிழக்கில் உள்ளது.
தனிநாயகம் அடிகளார்,1964ம் ஆண்டில் வித்துவான் வி.சீ. கந்தையா அவர்களால் வெளியிடப் பட்ட,மேற் சொல்லப் பட்ட,’மட்டக்களப்புத் தாயகம்’ என்ற ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும்போது,’ மட்டக்களப்புக்குச் செல்லும் வெளிநாட்டார்க்கு வியப்பூட்டும் வகையில்அங்கு வழங்குவதும் பழங்காலத் தொடர்புடையதுமான மொழிச்செல்வம் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ள ஒன்று.அத்துறை,இந்நூலில் விரிவாக ஆராயப்பெற்று,நாட்டு வழக்கிலுள்ள பல சொற்களின் பொருள் வளமும் நன்கு காட்டப் பட்டுள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலே வழக்கின்றொழிந்தனவாய் இங்கே வழங்கி வரும் சொற்கள் சிலவற்றின் பயிற்சிச் சிறப்பைப் பண்டைய இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டி ஆசிரியர் அதற்கு தன் விளக்கம் தந்துள்ளார்’ என்று குறிப்பிடுகிறார்.உதாரணத்திற்குச் சங்கத் தமிழ்ப் புறநானுறு 172ல் உள்ள,
‘ஏற்றுக உலையை ஆக்குக சோறே’ என்ற அடிகள் மட்டக்களப்பில் ஒவ்வொரு நாளும் இன்றும் பாவிக்கப் படும் சொற்களாகும்.
சங்க இலக்கியத்தில் அவர் கண்ட இன்பம்,பல்லாண்டுகளுக்குப் பின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பற்றி அவர் குறிப்பிட்ட வார்த்தைகளில் எதிரொலிக்கிறது.அதாவது,’நாட்டுப் பாடற் துறையில்,வளம் நிறைந்தது ஈழத்து மட்டக்களப்பு நாடு என்பதை யாவரும் அறிவர்.எனினும்,அப்பாடல்களின் இன்பத்தினையும்,இலக்கியச் சுவையினையும் பெரும்பாலோர் கருதுவதில்லை.சங்கச் செய்யுள்களை ஒத்து,நலம் கனிந்த அவற்றினை,எடுத்து,அகம் புறம் என்று ஆசிரியர் இருகூறாகப் பிரித்துக் காட்டியிருப்பது,மிக சுவை அளிப்பதாகும்.நாட்டுக் கூத்துக்களைப் பற்றிய பகுதியானது,வேதவியல்,பொதுவியல்,என்ற சங்கச் சான்றோரின் பிரிப்புக்கும், மங்கல முடிவின,அமங்கல முடிவின என்ற மேல்புல அறிஞரின் பிரிப்புக்கும் அமைய நடக்கின்ற தென்மோடி,வடமோடி நாடகங்களை இலக்கணத் துறையோடு சுவைபெறக் காட்டுவதாயுள்ளது.’ என்கிறார்.
இக்குறிப்பை அவர் எழுதம்போது உலகத் தமிழ் மகாநாட்டை நடத்தவில்லை. அவர் அப்போது,தூத்துக்குடி தமிழ் இலக்கிய மன்றத் தலைவரும், ‘தமிழர் பண்பாடு’ என்ற ஆங்கில மாத வெளியீட்டின்ஆசிரியரும்,இலங்கைப் பல்கலைகழகத்த முன்னைநாட் கல்விப்பகுதி விரிவுரையாளரும்,மலாயா தேசத்துப் பல்கலைக் கழகத்துக் கீழைத்தேய மொழித்துறைகளின் தலைவரும்,தமிழப் பேராசிரியருமாகிய வணக்கத்துக்குரிய சேவியர் தளிநாயக அடிகள்’என்றுதான் அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறார்.அவர் எழுதிய அணிந்துரையில் ஒரே ஒரு வடக்குத் தமிழ் வார்த்தை மட்டும்’ சங்கச் செய்யுள்’ என்பதிலி பதிந்திருக்கிறது.
கடாரம் கண்ட மன்னன் என்று ஒரு தமிழ் மன்னன் புகழப் பட்டபோது அந்தக் கடாரம் என்பது, அவர் 1961-1969 வரை படிப்பித்த மலேசியாசிலிருக்கும் துறைமுகம்தான் என்று புழங்காகிதம் கொண்டிருப்பார்.
தமிழத் தொன்மை பற்றிய அவரின் தேடலுக்கு,1940களில் தமிழ்நாடடில் பரவிய தமிழுணர்ச்சி அவரையும் தூண்டியது என்பதற்கு உதாரணமாக அவர் 1945ல்,அடிகளாரின்,32வது வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பித்தார். பன்மொழிப் புலவர் என்று அழைக்கப் பட்ட பேராசிரியர்,தெ.பொ. மீpனாட்சிசுந்தரம்,துணைவேந்தர் இரத்தினசாமி இருவரும் தனிநாயகம் அடிகளாரை முதுமாமணிப் பட்டப் படிப்பில் இணைத்தார்கள் என்று தகவல்கள் பகிர்கின்றன.
அக்காலத்தில்,விபுலாந்த அடிகளார் தனது,’ யாழ்நூல்’ பற்றிய ஆய்வுகளையும், தமிழத் தொன்மை பற்றிய பல சொற்பொழிவுகளையும் தமிழகம் எங்கும் செய்துகொண்டிருந்தார்.
விபுலானந்த அடிகளார்,1947ல் உலகும் புகழும் வரலாற்றுத் தொன்மைபற்றிய,
‘யாழ்நூலை’ வெளியிட்டார்.
தனிநாயகம், அடிகளார்,அவ்வருடத்திலிருந்து,1947-1949 வரை அங்கு ‘தமிழ் இலக்கியச் செய்யுளில் இயற்கை’ என்னும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்து தனது எம்.லிட்; (மாஸ்டர் ஒவ் லிட்டரேச்சர்) என்ற பட்டத்தை எடுத்தார்.
1949-1951ம் ஆண்டுகளில் தனிநாயகம் அடிகளார்,ஜப்பான்,அமெரிக்கா,சிலி,பிரேஸில்,பெரு,மெக்சிக்கோ,ஈக்குவடோர்,ஆர்ஜன்டினா,உருக்குவெய்,மேற்கிந்தியத் தீவுகளான, ட்னிடாட்,ஜமேய்க்கா,மார்ட்டினி,மத்திய ஆபிரிக்கா,வட ஆபிரிக்கா,இத்தாலி, பாலஸ்தான்,எஜிப்த்,போன்ற பல நாடுகளுக்குச் சென்று,தமிழ்மொழி, தமிழ்த் தொன்மை பற்றிப் பல சொற் பொழிவுகளைச் செய்திருக்கிறார்.தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாடு போன்று பல ஐரோப்பிய காலனித்துவ நாடுகள் பலவற்றிற்குச் சென்றார்.அவர் உரோமாபரியில் படிக்கும்போது,மேற்சொன்ன நாடுகளிலிருந்து வந்திருந்த குருத்துவ மாணவர்கள் மூலம் அந்நாடுகளின் வரலாற்றுச் சரித்திரம்,சமுதாய அமைப்பு,வாழக்கை முறைகள் என்பவற்றைத் தெரிந்து வைத்திருந்ததும் அவரின் பிரயாணங்களுக்கு ஒரு காரணமாகவிருக்கலாம்.
அத்துடன் அக்கால கட்டத்தில்,அந்த நாடுகளில், கிட்டத் தட்ட இருநூறு சொற்பொழிவுகள்,தமிழ் பற்றிச் செய்திருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. அந்தப் பிரயாணத்தில் தமிழ் மொழி, தமிழக் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள பலரைச் சந்தித்தார்.
அவை பற்றி விரிவான விளக்கத்தை 1952ம் ஆண்டு ‘தமிழ் கல்ச்சர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கிப் பதிவிட்டார்.
ஐரோப்பிய,அமெரிக்கப் பிரயாணங்களின்போது, 16ம் நூற்றாண்டுகளிலிருந்து எழுதப்பட்ட பதிவுகள் வெளி நாடுகளில் இருப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டார்.
-1554ல் ஆங்கிலம், இலத்தின், போர்த்துக்கீச மொழிகள் தெரிந்த இந்தியர்களால், எழுதப்பட்டு லிஸ்பன் நகர் லைப்பரி ஒன்றில் இருக்கும் ‘கார்ட்லிஹா’என்ற பதிவு.
-1578ல் கேரளாவில் உள்ள கொல்லம் என்ற இடத்தில் எழுதப் பட்ட’தம்பிரான் வணக்கம்’
-1579ல் கேரளாவில் எழுதப்பட்ட ‘கிருத்தியானி வணக்கம்’
-1586ல் எழுதப்பட்ட ;அடியார் வரலாறு’
-1679ல் எழுதப் பட்ட தமிழ்ப் போர்த்துக்கேயர் அகராதி
தமிழரின் தொன்மைச் சரித்திரத்தைத் தேடியதுமட்டமல்லாமல் அதைத் தமிழ்ப் பற்றுள்ள பலருடன் பகிர்ந்திருக்கிறார்.
பல நாடுகளுக்கும் சென்றதால் தமிழின் தொன்மையின்; பெருமைக்கு மெருகூட்டியிருக்கிறார்.
The Carthaginian Clergy
- Nature in the ancient poetry
- Aspects of Tamil Humanism
- Indian thought and Roman Stoicism
- Educational thoughts in ancient Tamil literature
தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.
தமிழ்த்தூது
ஒரே உலகம்
திருவள்ளுவர்
உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.
- Reference guide to Tamil studies
- Tamil Studies Abroad
- Tamil Culture and Civilization
தமிழ்க் கல்ச்சர் பத்திரிகையில் வந்த கட்டுரைகள்,அத்துடன்,அன்ரம் டி பெறோனிக்கா என்பரால் தொகுக்கப் பட்ட தமிழ்-போர்த்துக்கீச அகராதியை மறுபதிப்பு செய்தார்.அவரின் பிரயாணம் பற்றிய ‘தமிழ்த்தூது 1952ல் வெளியிட்டார். உலக அனுபவங்களை,’ ஒரே உலகம்’ என்ற பெயரில் 1963ல் வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகள்,’திருவள்ளுவர்’ என்ற மகுடமிடப்பட்டு 1967ல் வெளியானது.அவரின். 30 ஆய்வுக் கட்டுரைகள்.’தமிழக்கலாச்சாரம்’ சஞ்சிகையில் வந்த
70 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களிலும் கருத்தரங்க இதழ்களிலும் வந்தன். அத்தனையும் தமிழக் கலாச்சாரத்தின்ஈ தொன்மை, அறம், திறமை பற்றியதாகத்தான் இருக்கும் என்ற நம்புகிறேன். ஒட்டுமொத்தமாக 137 பதிவுகளை எழுதியிருக்கிறார்.
இவர் ஒரு தமிழுணர்வாளர் என்பது உலகறிந்த விடயம்.தென்னிந்தியாவில்,இவர் இருந்த கால கட்டமான 1937ல் கொண்டு வரப்பட்ட,இந்தி’மொழித் திட்டம்,அதைத் தொடர்ந்த திராவிடக் கட்சியினர்,மறைமலையடிகள்,சோமசுந்தர பாரதியார்.கே.அப்பாதுரை, முடியரசன், இலக்கியவாணர்,போன்றோரின் போராட்டங்கள், தமிழின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்று உத்வேகத்தை இவருக்குக் கொடுத்ததா என்பதும் எனது கேள்விகளில் ஒன்று.
1938ம் ஆண்டு,1198 தமிழர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தில் கைது செய்யப் பட்டார்கள். தமிழறிஞர் அண்ணாதுரை கைது செய்யப் படுகிறார்.1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கிறது.
பல கோடி மக்களின் அழிவுக்குப் பின் இரண்டாம் உலக யுத்தம் 1945ல் முடிவுக்கு வருகிறது.முதலாம் உலக யுத்தம் முடிந்த 1919ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட ஐக்கியநாடுகள் சபை,இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின்,1945ல் பெரிதாகச் செயல்பட ஆரம்பிக்கிறது. காலனித்துவ நாடுகள் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்குக் கம்யுனிஸ நாடான சோவியத் இரஷ்யா தலையிட்டு அணுகுண்டுப் போர் வருவதைத் தடுக்கவும் இரண்டாம் போரில் தாங்கள் பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் முடியாமலும் ஐரோப்பிய நாடுகள் தவிப்பதால் ஆசிய, ஆபிரிக்கஈ தென்அமெரிக்காவிலுள்ள பல நாடுகளுக்குச் சுதந்திரம் கிடைக்கிறது.
1947ல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. ஆனால் இந்தி எதிர்பு தமிகத்தில் தொடர்கிறது.1950ம் ஆண்டு’ திராவிட’நாடு கொள்கை முன்வைக்கப் படுகிறது.
அடிகளார். 1949-1951 வரை உலக நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகள் செய்கிறார்.பல சரித்திரங்களையும் சுதந்திரப் போராட்ட வரலாறுகள்,காலனித்துவவாதிகளால் அழிக்கப் பட்ட அவர்கள் தொன்மை என்பவற்றை அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
1951-1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறைப் பணியை அடிகளார் செய்கிறார்கள்.தமிழாராய்ச்சியில் மிகவும் கவனமெடுக்கிறார்.
இலங்கையில், தமிழர்களுக் கெதிராக ஆரம்பித்த,திரு. ஏஸ் டபிளியு. ஆர். பண்டாரநாயக்காவால் 1952ல் ஆரம்பித்த இலங்கை சுதந்திரக் கட்சியினின் சிங்கள இனவாதம் இவரின் சிந்தனையைத் தட்டியதா? அதன் நீட்சியாக,தமிழர் தொன்மையை உலகறிச் செய்த தமிழரின் தனித்துவத்திற்கு அங்கிகாரம் தேட அவர் தனது பணியைத் தொடர்ந்தாரா என்பதையும் நாங்கள் ஒரு கேள்வியாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த அடுத்த வருடமே, இந்திய வம்சாவழியினர்,இலங்கையில் நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்கள்.இந்தியாவிலும்;,இலங்கையிலும் தமிழர் தங்கள் அடையாளத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.
1953ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
2 திராவிடக் கட்சி தொண்டர்கள் மரணமடைந்தார்கள். 1955ம் ஆண்டு, தமிழ் மொழியை அழிக்கும் திட்டமான ‘இந்தி’ மொழியைத் தமிழகத்தில் கொண்ட’இந்தி மொழிச் சட்டத்தால்;’ உத்வேகமடைகிறது. அடிகளார்,1955-57ம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக் கழகத்தில்,’பழம் தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்’ என்ற விடயத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
1956ம் ஆண்டு,சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராகத் தமிழ்த் தலைவர்கள், இலங்கையில் நடந்த காலி முகக்கடற்கரையில் தாக்கப் பட்டார்கள்.1958ம் ஆண்டு, தமிழர்களுக்கெதிரான பயங்கர கலவரத்தில் தமிழர்கள் நூற்றுக் கணக்காகக் கொல்லப் பட்டார்கள் உடமைகளை இழந்தார்கள்.ஊரற்று,வேரற்றுத் தவிக்க ஆரம்பித்தார்கள்.1961ம் ஆண்டு. தமிழர்கள் தங்களது அஹிம்சா போராட்டத்தை,’சத்தியாக்’ கிரகமாகத் தமிழப் பகுதிகளில் தொடங்கினார்கள்.இந்தச் சத்தியாக் கிரகத்தில் அடிகளார் கலந்து கொண்டால் அவரின் அரச பணிக்குப் பிரச்சினை வந்தது என்று அருட் தந்தை றெஜினால்ட்.அ.மதி அவர்கள் கனது காணொலியில் பதிவு செய்திருக்கிறார்.
இவையெல்லாம் தமிழுக்குத்;தலைவணங்கும் தனிநாயகம் அடிகளாரை எப்படி வருத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இக்காரணங்கள்தான் அவரை மலேய்சியா செல்லத் தூண்டியது என்பது தெரிகிறது..
1961ல் மலேய்சியா பல்கலைக்கழக இந்திய இயல்வியல் துறைப் பணிக்குச் செல்கிறார்.தமிழை மேம்படுத்துகிறார்.அவரது ஆள்மையும், அறிவும் பலரை மெச்ச வைக்கிறது.
தமிழைப் பரப்பும் வேலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.அதன் முயற்சியாக,
1963ல் தமிழகத்தில் திரு பக்தவத்சலம் அவர்கள் பிரதமராக இருந்தபோது,அடிகளார் அவர்கள்,தமிழகத்தில் ஒரு தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை நடத்த அன்றிருந்தவர்கள் உதவவில்லை என்பது நம்பமுடியாத விடயம்.தனது வாழ்நாளையே தமிழுக்காகச் செலவிடும் ஒரு தகமையை அவர்கள் அறிந்து கொள்ளாதது வேதனையே.
அவரின் தமிழாராய்சி மகாநாடு நடத்தவேண்டும் என்ற அவாவின் முதற்கட்டமாக, அடுத்த வருடம்,தகமைகளான. திரு கமில் சுவலபிலு,வ.ஐ .சுப்பிரமணியம்,மற்றும் 26 அறிஞர் குழுவான,’கீழ்த்தசை அறிஞர்கள்’மகாநாடு டில்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, முதலாவது, உலகத் தமிழ்; ஆராய்ச்சி மகாநாடு, 1966 ஆண்டு சித்திரை 17-23ம் திகதிகளில் கோலாலமபூரில் பிரமாண்டமாக நடந்து. அதைத் தொடர்ந்து,
-இரண்டாவது மகாநாடு 1968ல்,திராவிடத் தமிழ் முதலைமைச்சர் அறிஞர் அண்ணா காலத்தில் சென்னையில் நடந்தது.
1969ல் அவரின், 56 வயதில் மலெய்சியாவில்; ஓய்வு பெற்று பிரான்ஸ் வருகிறார்.
பிரான்சில் விசிட்டிங் பேராசிரியராக ஆறுமாதம் வேலை செய்யும்போது
-அங்கு,3வது தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை,1970ல் நடத்துகிறார்.
-அவரின் உதவியுடன்,4வது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு,இலங்கை யாழ்ப்பாணத்தில் 1974ல் நடைபெற்றது.
அடிகளாரின்,அறுபத்தி ஏழாவது வயதில்,1980ம் ஆண்டு அவரின் மறைவு தமிழ் உலகைத் துயரில் ஆழ்த்தியது.
அவர் உயிரோடிருக்கும்போது,தமிழ்த் தொன்மையைப் பதிவாகக் கொண்ட 96.000 அற்புதத் தமிழ் நூல்கள் யாழ்ப்பாணம் நூலகத்தில்,சிங்கள இனவாதிகளால்1981ல் எரிக்கப்பட்டபோது,அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கியிருப்பார் என்பது கற்பனை செய்யமுடியாதது.
அவரின் மறைவு 1980க்குப் பின்,இதுவரை ஏழு மகாநாடுகள் நடந்திருக்கின்றன.
-5வது மகாநாடு,1981ம் ஆண்டு தமிழக முதல்வராக திரு.எம்ஜி.ஆர் அவர்களிருந்த காலத்தில் நடந்தது.
– 6வது மகாநாடு, மலேய்சியா தலைநகர் கோலாலம்பூரில் 1987ல் நடந்தது.
-7வது மகாநாடு,தமிழர்கள் செறித்துவாழும் மொரிஸியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் நகரில் 1989ல் நடந்தது.
-8வது மகாநாடு,செல்வி ஜெயலலிதா தமிழக முதலவராக இருந்த காலத்தில் 1995ல் தமிழகத்தில் தஞ்சாவூர் நகரில் நடந்தது.
-9வது மகாநாடு, தமிழ்க்கலைஞர் திரு கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வராக இருந்த 2010ம் ஆண்டு தமிழகம் கோயம்புத்தூரில் நடந்தேறியது.
-10வது மகாநாடு, மூன்றாம் தடவையாக,மலேய்சியாவில் கோலாலம்பூர் நகரில் நடந்தேறியது.
-கடைசியான 11வது மகாநாடு,அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 2019ல் நடந்தேறியது.அந்த மகாநாட்டில் தமிழரின் சமத்துவ உணர்வை வெளிப்படுத்த இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சங்கப் புலவர்,கணியன் பூங்குன்றனார் அவர்களால்;; எழுதப் பட்ட ‘யாதும் ஊரெ யாவரும் கேளீர்’ பாடல் ஒலித்தது.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றகத் தமிழ் செய்யுமாறே’ என்ற திருமூலர் வாக்குப்படி,தன்னையே தமிழக்காக அர்ப்பணித்த தமிழ்தகமை, தவத்திரு தனிநாயக அடிகளாரை நாங்கள் பின் பற்றி எங்களால் முடிந்த தமிழ்ப் பணிகள்; செய்து தமிழுக்கு தொண்டு செய்ய முனைவோம்.
நன்றி.