‘வளரும் வயதினரும் மனநலமும் என்ற பொருள் பற்றி இன்று இங்கு என்னைப் பேச அழைத்த திரு சிறி கந்தராஜா, அருந்ததி தம்பதியினருக்கும் இங்கு வந்திருக்கும் அத்தனை அன்பான தமிழ் மக்களுக்கும் எனது தாழ்மையான வணக்கம்.
எங்களின்; ஆரோக்கியமான,,அறிவுசார்ந்த.,ஆக்கபூர்வமான,வாழ்க்கை என்பது எங்களின்; உடல்,உள நலங்களில் தங்கியிருக்கின்றன.இவையிரண்டும் எங்களின் வாழ்க்கை சுற்றாடல், சூழ்நிலை,பெற்றோர் உறவினர்,ஆசிரியர்,சினேகிதர்களுடான உறவுகளுடன் தொடர்புள்ளது.
இன்று நாங்கள் எடுத்துக் கொண்ட விடயம், வளரும் வயதினரும்; மன அழுத்தமும் என்பதாகும். வளரும் வயது என்பதை குழந்தை பிறந்த கணத்திலிருந்து எடுத்துக் கொண்டாலும் இங்கு முக்கியமாக எடுத்துக் கொண்ட வயது பதின்மூன்றிலிருந்து பதினெட்டு வயது வரையான ‘ டிPனேஜ் பருவம்’ என்பதாகும். இக்கால கட்டம் ஒரு மனிதனின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகவும் முக்கியமான கால கட்டமாகும்.
நாங்கள் அத்தனைபேரும் இந்தக் கால கட்டத்தைத் தாண்டி வந்தவர்கள். எங்கள் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வித்தியாசமாகவிருக்கும். ஏதோ ஒரு கால கட்டத்தில் நாங்களும் எங்கள் வளரும் வயதில் மூட் அவுட்டாக இருந்திருப்போம்.
ஆனால் கடந்த ஐம்பது வருடகாலமாக உலகில் நடக்கும் பல மாற்றங்கள் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களையுண்டாக்கியிருக்கின்றன. இன்று வளரும் வயதினரின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மனநலம் எவ்வளவு முக்கியமானது என்று கலந்துரையாடுவோம்.
இந்த முக்கிய கால கட்டமான ‘வளரும் வயதில்’ உண்டாகும் மன அழுத்தங்கள், சில வேளை பாரதூரமான விளைவுகளை அவர்களின் வாழ்க்கையிலுமுண்டாக்கும். கடந்த இருவருடங்களுக்கு மேலாக ஒட்டு மொத்த உலக மக்களின் வாழ்க்கையயே உலுக்கிவிட்ட கோவிட் 19 பண்டமிக் கால கட்டத்தில் நடந்த பல மாற்றங்களின் அதிர்வு பல முனைகளில் வெளிப்படுகின்றன.
அதில் முக்கியமானதொன்று வழக்கம்போல் உலகத்தில் வாழும் அத்தனைபேரும் முகம் கொடுக்கும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் அளவுக்கு மீறிய விதத்தில் வளரும் வயதினரைப் பாதித்தது தெரிய வருகிறது.
சாதாரண வாழ்க்கை அசாதாரணமானகால கட்டத்திலிருந்து இன்று வரை பொருளாதாரம்,வாழ்க்கை நிலை,ஆரோக்கிய நிலைகளின் மாற்றங்களை இன்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.
உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களிலும் மூன்றில் ஒருத்தர் அவர்களது வாழ்க்கையில் ஏதோ ஒரு கால கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாவது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விடயங்களில் ஒன்றாகும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
அதில் வளரும் வயதினர் பற்றிய விடயத்தில் பல மனநல விடயங்களும் அடங்கும்.
2.
இங்கிலாந்தில்,இவ்வருடம் ஓக்டோபா 6ம் திகதி; வந்த அறிக்கையின்படி, 15-17வயதுக்குகமிடையிலுள்ள147 இளம் வயதினர் தற்கொலைசெய்து கொண்டார்கள்.
செப்டம்பர் 14 திகதி வரை 241 791 இளவயதினர் என்.எச.;எஸ். மனநல கிளினுக்குகளுக்குச் செல்ல சிபாரிசு செய்யப் பட்டிருக்கிறார்கள்.
15-19ம் ஆனவயதுடையவர்கள் தற்கொலை செய்து கொண்டது 2021ம் வருடத்தை விட 30 விகிதம் சுடியிருக்கிறது என்ற சொல்லப்படுகிறது.
உடல் வளர்ச்சிக்கு.சத்தான உணவுகள்.தூய்மையான.நீரும்,காற்றும்.எவ்வளவு அத்தியாவசியமோ,அதேமாதிரி உள நலத்திற்கு அன்பு,ஆதரவு,அறிவாற்றல்.சுதந்திர உணர்வு என்பன மிகவும் முக்கியமானவையாகும்.
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் தனது வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அக்குழந்தை முற்றும் முழுதாகத் தாயின் பராமரிப்பில் வளர்கிறது. தாயின் அன்பு அவனின் உடல், உயிர் உணர்வுகளுடன் இணைந்து அவனை உருவாக்குகிறது.
அந்த அன்பான,பாதுகாப்பான உணர்வே அவனின் வாழ்க்கை முழுதும் வழி நடத்துகிறது.
ஒரு குழந்தையின் முதல் ஐந்து வயதுகளும் பெரும்பாலும் அன்பான,பாதுகாப்பான சூழ்நிலையில் தொடர்கிறது. உடல்,உள, அறிவு. சமுதாய, ஆன்மீக வளர்ச்சிக்கு அத்திவாரமிடுகிறது.
ஐந்து தொடக்கம் பதினொரு வயது வரை பாலர் கல்வியான புது உலகத்துடன் இணைக்கிறது. தாய் தகப்பன்,உற்றார் உறவினர் தவிர்ந்த உலகத்தைப் பாடசாலை ஆசிரியர்கள், சினேகிதர்கள் மூலம் தெரிந்த கொள்கிறார்கள்.
வயது பன்னிரண்டைக் கடந்ததும் அவர்களின்; வாழ்க்கையின் அதி பிரமாண்டமான திருப்பங்கள் வருகின்றன. புதிய பாடசாலை, புதிய சினேகிதர்கள்,சில வேளைகளில் புதிய இடமாற்றம் என்பன அவர்களின்; சம்மதமின்றி வந்து சேர்கின்றன.
மிக மிக முக்கியமான மாற்றம் அவர்களதுஉடல்,உள வளர்ச்சியில் மாற்றங்கள்; மட்டுமல்லாது, இன விருத்திச் சுரப்பிகள் தங்கள் வேலைகளை இந்த வயதில் ஆரம்பிக்கின்றன. மூளைவளர்சியிலும் பெருமாற்றங்கள் நடைபெறத் தொடங்கும்.
குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்து அவர்களின் உணர்வுகளில் சோகமான மாற்றங்களின் தாக்கம் வந்தாலும் அவற்றைக் குழந்தைகளால் புரிந்து கொள்ளவோ மற்றவர்களக்குப் புரிய வைக்கவோ தெரியாது.
பதின் மூன்றாவது வயதில் வளரும் வயதின் பாரங்கள் மிகவும் பிரமாண்டமான மாற்றங்களைக் கொடுப்பவை. உதாரணமாக,
அறிவு வளர்ச்சியில் மிகப் பெரும் பொறுப்புக்களை முகம் கொடுக்கும் கால கட்டமான இந்த வயதில் அவர்களின் மன வளர்ச்சி அந்தச் சவால்களை எதிர் கொள்ளத் தயாராகிறது.
எங்கள் மூளையின் 100 பில்லியன் அளவில் பலவிதமான கலங்கள் உள்ளன. மூளையின் தொடர்ந்த வேலையால், 85.000 கலங்கள் ஒவ்வொருநாளும் அழிகின்றன.
ஓரு கலத்திற்கும் அடுத்த கலத்துக்குமுள்ள தொடர்பு 280 மைல் வேகத்தில் நடைபெறுகிறதாம்.நாங்கள் உண்ணும் உணவின் 20-30 விகிதமான கலறிகள் மூளையின் சேவைக்காகப் பாவிக்கப் படுகிறது.
வளரும் வயதில் உடலின் முக்கிய பகுதியான மூளையில் பிரச்சினைவந்தால் எதிர்விளைவகள் பாரதூரமாகவிருக்கும்.
பருவ வளர்ச்சியை மேம்படுத்தும் பல ஹோர்மோன்ஸ்கள் உண்டாகும் கால கட்டமிது. ஹோர்மோன்ஸ்கள் என்பவை,இரத்த ஓட்டத்தில் பரவி பல்வேறு பகுதிகளுக்குச் செய்திகளை அல்லது சமிக்ஞைகளை எடுத்துச் செல்ல உடல் உறுப்புக்களைச் சுற்றிப் பரவும் இரசாயனங்களாகும்.
மூளையிலுள்ள பிட்டயூட்டரி க்லாண்ட்சிலிருந்து இனவிருத்திச் சுரப்பிகள் வேலைகளை மேற்பார்வை செய்யப் படும்;;.
இந்த 10-14 வது வயதில்,ஆண்குழந்தைகளுக்கு டெஸ்ட்டெஸ்ரரோன் சுரப்பி வேலை செய்யும்.இது ஆண்களின் விரைகளில் முதன்மையாக உற்பத்தி செய்யப் படும் ஒரு ஹோர்மோன்.
எலும்பு,தசை,கொழுப்பு,உடல் பலம்,போன்றவற்றிற்கும் இன விருத்திக்குத் தேவையான விந்து உற்பத்திக்கும் இன்றியமையாதது.இக்கால கட்டத்தில் மீசை,வளரத் தொடங்கும் குரலில் மாற்றம் வரும்.ஆண்மைத்தனமான நடைமுறைகள் தலையெடுக்கும்.சுரப்பியின் வேலை 15-17வயதில் மிகவும் உச்ச கட்டத்திலிருக்கும்.
பெண்களின் ஈஸ்ட்றஜன் சுரப்பி 8-14 வயதுகளில் வேலைசெய்யத் தொடங்கும்.
பெரும்பாலான ஈஸ்ட்ரோஜன் பெண்களின் கருப்பைகளில் உண்டாகின்றன.அத்துடன் அட்ரீனல்,கொழுப்பு சுரப்பிகளும் சிறய அளவுகளை உருவாக்குகின்றன.
ஈஸ்டரோஜன் என்பது பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான ஒரு முக்கியமான பெண் பாலியல் ஹோர்மோன்.ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மாதவிடாயக் கால கட்டத்தில் ஏற்ற இறக்கமாகவிருக்கும்.மாதவிடாய் நிற்கும் கால கட்டத்தில குறையத் தொடங்கும்.
அத்துடன் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கியமானது. எலும்பு,இருதயம்,மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களின் முக்கியமான செயற்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது.
இது சுரக்கும்,பருவ வயதில் மார்பகங்கள் உயரத் தொடங்கும்.இடுப்புப் பகுதி அகலத் தொடங்கும்.இந்த இயற்கையான ஆரம்ப மாற்றங்களின் விளைவாக அவர்களின் மன உணர்வுகளும் மாறுபடத் தொடங்கும்.இனவிருத்தி, சுரப்பிகளின் வேலைப்பாட்டால், வளரும் இளவயதினரின்; ‘மூட்’ அடிக்கடி மாறலாம்.
ர்Pனேஜ் மனஅழுத்தங்களுக்கு இதைவிட வேறுபல காரணங்களுமுள்ளன.
-குடும்ப அமைப்பு (பிரச்சினைகள்),பொருளாதாரம், தாழ்ந்த மனப் பான்மை, அன்புள்ளவர்களின் இழப்பு, உயிருக்குப் பயந்த போர்ச்சூழ்நிலை.இடமாற்றம் அல்லது
புலம் பெயர்தல் (80 கோடி மக்கள் அகதிகளாக உலகெங்கும் வாழ்கிறார்கள் இதில் 20 கோடி அளவானவர்கள் டிPனேஜர்ஸாகும்.
அத்துடன் அந்த அனுபவத்தில் வாழ்ந்த ஞாபகங்கள். பன்முகச் சமுகங்களுடன் வாழும் வாழ்க்கை முறை,அத்துடன் பாரம்பரியம் (ஜெனட்டிக்ஸ்)
பாடசாலை (புதிய சவால்கள்),
படிப்பு அழுத்தங்கள்,சினேகிதங்கள்,பழயை முறைகளைக் கடந்து கொண்டிருக்கும்; தனிமைப் பட்ட வாழ்க்கை முறை,(இன்ர நெட்,சோசியல் மீடியா-பேஸ்புக்,இன்ஸோகிராம்,டிக்டொக்);.
அமெரிக்காவில் 50 விகிதமானவர்களுக்கு’மிக இறுக்கமான பேர்ஸனல்’சினேகிதர் என்று இல்லையாம். இது மன அழுத்தத்தைக் கூட்டும்.
அறிகுறிகள்: மூட் மாற்றம்,(செரட்டோனின் மாற்றங்கள்-நியுறோ ட்ரான்ஸ்மிட்டர்- மூளையிலும் உங்கள் உடல் முழவதிலும் உள்ள நரம்புக் கலங்களுக்கு இடையில் செய்திகளைக் கொண்டு செல்லும் ஒரு இரசாயனம்). இது மூட் மாற்றத்தில் அதிக அளவு முக்கியமானது. கோபம், படிப்பில் கவனம் செலுத்த முடியாத தன்மை.கவலை(அன்சயட்டி இது 6.5 வயதிலிருந்து 13 வயது வரையிலும் இருக்கும்).
சோகம்;,கிலி பிடித்த நிலை (பனிக் அட்டாக்)
தனித்துவமான பயங்கள்(அச்சக் கோளறு) அதிக நேர நித்திரை, நித்திரையின்மை (உடம்பின் இயற்கைச் தேவையில் மாற்றம்,பயங்கரக் கனவுகள் காணுதல்.தனிமை,சாப்பிட மனமின்மை. எடை குறைதல்.அல்லது அடிக்கடி சாப்பிடுதல் அதனால் எடைகூடுதல்.அடிக்கடி தலையிடி. அடிக்கடி வயிற்று வலி. தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளல், நெகடிவ் மயமான சிந்தனைகள்( தற்கொலை செய்யும் யோசனை).
போதைப் பொருள் பாவித்தல்,மது பாவித்தல்.குழுக்களுடன் சேர்ந்து சண்டித்தனத்தில் ஈடுபடுவது. நாடித்துடிப்பு அதிகரித்தல்.மூச்செடுக்கக் க~;டப்படுதல (ஆஸ்த்மா,இது பெரும்பாலும் 18 வயதுக்கு முதல் வரலாம்);.
இளம் ஆண்,பெண்களின் உணவு சார்ந்த பிரச்சினைகளும் இப்பருவ கால கட்டத்தில் ஆரம்பிக்கும்.
மன அழுத்தத்தின் வேறு விரிவான விளக்கங்கள்.
இளவயதில் ஏற்படும் மனஅழுத்தத்தைக் கண்டு பிடித்துக் கவனமாகச் செயற்படாவிட்டால் அந்த அழுத்தம் தொடர்ந்து பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம்.
ஆழ்ந்த மனஅழுத்தம். பைபோலா டிஸோடர்ஸ்(‘இருமுனைக் கோடிகளையுடைய’ நிலை).திருப்பித்திருப்பி ஒரே வேiயைச் செய்வது (ஒப்சஸிவ் கொம்பலசிவ் கோளாறு- ,நியுரோட்டிக்).
என்ன செய்யலாம்:
கோப்படாமல் அவர்களை அணுகிப் பிரச்சினையைக் கேட்டறியவேண்டும். அந்த வயதில் அவர்களின் அடையாளத்தை நிலைப்படுத்தும் ஆர்வம் இருப்பதால் அவர்களை அவர்கள் விரும்பும், படிப்பு, விளையாட்டுத்துறை, கலைத்றை என்பன பற்றி அவர்களுடன் சேர்ந்து கலந்துரையாடவேண்டும்.
உலகத்தை மாற்றிய பல தலைவர்கள்,அறிஞர்கள்,கலைஞர்கள் என்போரின் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் அவர்களும் எத்தனையோவிதமான போராட்டங்களுடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற தெரியும்.