‘சமுதாய வளர்ச்சியும் கல்வி அறிவும்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். (ஓய்வுபெற்ற குழந்தை நல அதிகாரி)- 20.7.22;

‘எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும்’ என்ற சொன்னவர்கள் எங்கள் மூதாதையர்..உலகத்தில் எந்த சமுதாயத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தசமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் முன்னெடுக்கும் கல்வி பற்றிய திட்டங்கள் எப்படி உதவுகின்றன் என்பது தெரியும்..

கல்வியின் நோக்கம், அதைப்படிக்கும் மாணவர்களின் அறிவு வளர்ச்சி,தொழில் நுணுக்கம்,சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத்திட்டங்கள்,விஞ்ஞானம், கலைப்பிரிவுகள், சமயக்கல்வி,தாவரவியல், புவியியல் சரித்திரம் போன்ற கல்வித்தளங்களின்; பல்வித மதிப்புநிலை, அத்துடன் ஒரு நாட்டின் பிரiஐயின் கடமைகள் என்பன பற்றி மாணவர்களுக்குப் புகட்டுவதாகும்..

ஒரு நாட்டின் அத்தனை மாணவர்களுக்கும் ஒரேமாதியாகவிருக்கும் விதத்தில் இலங்கையின் கல்விட்டங்கள் இருக்கின்றன.;.இலங்கையில் பெரும் பாலான மாணவர்கள் அரச பள்ளிகளில் படிப்பை ஆரம்பித்தாலும் கணிசமானவர்கள் தனியார் துறைக் கல்வியையும் நாடுகிறார்கள்.

இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றி ஆராயந்தால் அதன் நீட்சி இரண்டு ஆயிரங்களைத் தாண்டியது அதாவது 2300 வருடகாலத்தை உள்ளடக்கியது என்பது சரித்திரம். ஆங்கிலேய ஆட்சியில் 1796 லிருந்து 1948ம் ஆண்டுவரை பல காத்திரமான மாற்றங்கள் நடந்தன.

வைத்தியிக் கல்லூரி 1870,லோ கல்லூரி 1875,விவசாயக்கல்லூரி 1884,; கால கட்டங்களில் ஆரம்பிக்கப் பட்டன..

1921ம் அண்டிலேயே யூனிவர்சிட்டி-றோயல் கொலிஜ் ஆரம்பிக்கப் பட்டது.இது லண்டன் யுனிவர்சிட்டியுடன் இணைந்து இலங்கை மாணவர்களுக்கு விஞ்ஞானம், வைத்தியக் கல்வி, கலைகள் சார்ந்த கல்வி, மனித வளர்ச்சிக்கான படிப்புக்கள், என்பன கொடுக்கப் பட்டன.

1942ல் முதலாவது பல்கலைக்கழகம் இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஆரம்பிக்கப் பட்டது.இலங்கைப் பலகலைக்கழகம் பிரித்தானிய ஒக்ஸ்பிறிட்ஜ் முறைகளைத் தழுவியதாகும்.1949ம் ஆண்டு பேராதெனியப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பட்டது.வித்தியோதயா,வித்தயாலங்காராப் பல்கலைக்கழகங்கள்; 1959ம் ஆண்டும் கட்டுப்பெத்த பல்கலைக்கழகம் 1972லும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974லும் ஆரம்பிக்கப் பட்டன.இன்று இலங்கையில்16 பல்கலைக்கழகங்களும் 18 உயர் கல்வி நிலையங்களும்; இலங்கை முழுதும் ஒட்டுமொத்த மக்களுக்கும் எவ்வித பேதமுமன்றி இலவசக்கல்வியைக் கொடுக்கின்றன. அத்துடன் சில இன்டர்நாஷனல் கல்வி நிலையங்களும்,தனியார் உயர் கல்வி அமைப்புகளும் இலங்கையிற் செயற்படுகின்றன.

இலங்கையில் 5 வயதிலிருந்து 13 வயது வரை கட்டாயக் கல்வி இருக்கிறது..இத்துடன் உயர்படிப்பான பல்கலைக்கழகப் படிப்பும் இலவசமான கல்வியாக 1947ம் ஆண்டு தொடக்கம் அரசு வழங்குகிறது.இதை 1943ல் ஆரம்பித்தவர் இலங்கைக் கல்வியின் தந்தை என்ற சொல்லப் படும் டாக்டர் சி.டப்ளியு.டப்ளிய கன்னங்கரா என்பராகும். இன்று இலங்கையில் 92 விகிதமான பெண்களும் 94 விகிதமான ஆண்களும் கல்வியறிவு உடையவர்களாகவிருக்கிறார்கள்.பல கோடிக்கணக்கான பாடசாலைப் புத்தகங்கள் 250 விடயங்களை உள்ளடக்கிப் பிரசுரிக்கப் படுகிறது.1993 தொடக்கம்; பாடசாலை யூனிபோமும் இலவசமாக்கப்படுகின்றன.

தென்னாசிய நாடுகளில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைவிட இலங்கையின் கல்வித்தரம் மிகவும் மேன்மையான நிலையிலிருக்கிறது.இந்த இலங்கையின் கல்வியில் சிங்கள,தமிழ், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளும் இடம் பெறுகின்றன.

1981ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கையின்படி படிப்பில் ஆர்வம் காட்டும் தென்னாசியப் பிரதேசத்தில் ஒரு முக்கியநாடாக இலங்கை கணிக்கப் பட்டது.அதிலம் உயர்தரப் படிப்பில் இலங்கையின் வடக்கு மாகணம் மேல் நிலையிலிருந்தது. அதிலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் பெண்கள் உயர் படிப்பில் வடக்கு மாகாணப் பெண்கள் கணிசமான நிலையிலிருந்தார்கள்.இதற்குக் காரணம் 19ம் நுூற்றாண்டிலிருந்தே தென்னாசியாவிலேயே பெண்கள் கல்வியை ஊக்குவித்ததில் இலங்கை முன்னிடம் பெற்றது.

இலங்கையின் மக்கள் தொகை 21.575.842 உள்ள நாட்டில் கல்வித்தரம் உலக அளவுடன் ஒப்பிடும்போது 66ம் நிலையில் இருக்கிறது. உலக வங்கியின் அறிக்கையின்படி ( ஆனிமாதம் 2022) கல்விக்காகச் செலவாகும் பொருளாதாம் இலங்கையின் பொருளாதாரத்தில் 1.9 விகிதமாகம்.

அண்மைக்கால கட்டத்தில் இலங்கை எதிர் நோக்கும் பல பிரச்சினைகளால் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் கல்வித்தரம் குறைந்துகொண்டுவருவது கவலையைத் தருகிறது.

இலங்கையிலிருந்த பிரமாண்டமான தொழில் நிலையங்;களான, காங்கேசன்துறை சிமேந்துத் தொழிற்சாலை, பரந்தன் கெமிகல் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை,அம்பாரை கரும்புத் தொழிற்சாலை,யாழ்ப்பாணத்திலிருந்து பலரகப்பட்ட சிறு தொழில் அமைப்புகள் (தீப்பெட்டிடத் தொழிற்சாலை ஒரு உதாரணம்), வெள்ளவத்தை நெசவுத் தொழிற்சாலை போன்றவை பல தரப்ட்ட கல்வியின் மேன்மையால் உருவாகியவை.அவையெல்லாம் அழிக்கப் பட்டுவிட்ட அரும் பொக்கிசங்கள். இன்று கல்வி என்பது, பன்விதமான தொழில் வாய்ப்புக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தருவதற்கு உதவினாலும் ஆக்கபூர்வமான தொழில் வளர்ச்சிக்கான கல்வி அறிவு குறைந்து விட்டது.

தமிழ்ப் பகுதிகளில் கல்வி நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதற்கு,30 வருடகாலப் போர்நிலை, அடிக்கடி இடம் பெயர்தல், படித்தவர்கள் புலம் பெயரும் நிலை,வெளிநாடு போகவேண்டும் என்ற ஆவலில் தாய்நாட்டுப் படிப்பில் அக்கறை காட்டாமை.வறுமை அத்துடன் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் படிப்பில் அக்கறை காட்டாமை என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

ஓரு குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல, அவனின் சமுதாய வளர்ச்சியும் அக்குழந்தையின் கல்வி அறிவின் மேம்பாட்டிலிருந்து நீட்சி பெறுகிறது.ஆரம்பக்கல்வியின் ஆழமான அத்திவாரம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை பாடசாலை வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது,அவன் தனது வாழ்க்கையின் நீண்ட பிரயாணத்தில் கால் வைக்கிறான்.அக்கால கட்டத்தில் கல்வித் திறமையை ஊக்குவிக்கும் அத்தனை ஏற்பாடுகளும் அவனுக்குக் கிடைப்பது மிக மிக அத்தியாவசியம்.

போரினால் துயர் பட்ட தமிழச் சமுதாயத்திற்குப் பல இடர்பாடுகள் தொடர்கின்றன. இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த மக்களுமே இன்று மிகவும் சிக்கலான கால கட்டத்தில் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

முக்கியமாகத் தமிழ்ப் பகுதிகளில் வாழும் வசதியற்ற குழந்தைகள் மட்டுமல்லாமு அத்தனை தமிழ்க்குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வெளிநாடு வாழும் நாங்கள் எங்களால் ஆனதைச் செய்யவேண்டும்.

கொடைகளில் முக்கிய கொடை ஒரு குழந்தைக்கு அறிவைக்கொடுக்க உதவுவது என்பது எனது ஆழமான கருத்து.புலம் பெயாந்த தமிழ் மக்கள் எங்கள் மக்களுக்கு எத்தனையோ உதவிகளைச் செய்கிறோம் அதில் முதற் கடமையாகவிருப்பது எங்கள் சொந்த பந்தங்களின் கல்வி மட்டுமன்றி ஏழைகளுக்கும் உதவுவதாகும். இதைப் பல வழிகளிற் தொடரலாம்.

– அங்கிருக்கும் அமைப்புக்களுக்கு பணஉதவி செய்தல்.

– ஒன்றோ இரண்டோ ஏழைக்குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பெடுக்கலாம்.

-இங்கிருந்து கணனி; வழியால் கல்வி கொடுக்கலாம்.

– அங்கு போகும்போத ஒரு கிழமையை என்றாலும் கல்வி சம்பந்தமான செயற்பாட்டில் செலவிடலாம்.

முடியுமானவர்கள் சிறுகைத்தொழில் அமைப்புக்களைத் தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கலாம்.

இப்படியான எத்தனையோ விடயங்களில் நல்மனமுள்ள தமிழந்சமுதாயம் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

‘எழுத்தறிவுகொடுத்தவன் இறைவனாவான்’; என்று எங்கள் தமிழ் அறிஞர்கள் பகர்ந்திருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் இலக்கண இலக்கியங்களை 3000 ஆண்டுகளாகப் படைத்துக்கொண்டுவரும் தமிழச் சமுதாயம், இன்று நொடித்துப்போயிருக்கும் எங்கள் சமுதாயத்தை கல்வி அறிவில் முன்னேற்றுவது எங்களின் தார்மீகக் கடமையாகும்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s