‘காதலில்ச் சரணடைதல்’


‘காதலில்ச் சரணடைதல்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.27.2.22.

தமிழ் வான அவை (ஜேர்மனி) வழங்கும்,இணையவழிப் பண்பாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில்,’காதலின் ஆறு வகை நிலை’ என்ற கருத்தரங்கத்திற்குக் ‘காதலில் சரணடைதல்’ என்ற தலைப்பில் என்னைப் பேச அழைத்த திருமதி கௌரி சிவபாலன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த அன்பான வணக்கம்.அத்துடன்,இங்கு கருத்துரைகள் வழங்க வந்திருக்கும்,திருமதி பூங்குழலி பெருமாள்,திரு நீலாவணை இந்திரா,திருமதி.செ.கி.சங்கீத்ராதா,திருமதி க.மலர்வாணி,கவிஞர் மூரா ஆகியோருக்கும்,அத்துடன் இந்நிகழ்ச்சிக்குப் பாடவந்திருக்கும்.செல்வி பிரவீனா தயாநிதி,நடன விருந்தளித்த செல்வி தேஜஸ்வி ஸ்ரீராமுலு அமீரகம் அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

மாசிமாதம் 14ம் திகதி காதலர் தினமாக உலகமெல்லாம் கொண்டாடப்படட்டது. காதலர்கள் தங்களிடையே பரிசுகளையும்,காதற் கவிதைகளையும்,முத்தங்களையும் விருந்துகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு தங்கள் காதலை அர்ப்பணித்து மகிழ்ந்திருப்பார்கள்.

மனித இன தோற்றத்தின் ஆரம்பத்தில் ;காதல் என்ற உறவு இருக்கவில்லை.ஆதிகாலத்தில் மனித ஆண் பெண்,;இனவிருத்தி,குழுக்கள் சார்ந்த உறவு,குடும்ப பாதுகாப்பு,சாதி, சமய,வர்க்கக் கோட்பாடுகள், அரசியல் தேவை என்று பல பரிமாணங்களுடன் வளர்ந்தது.

அதன்பின். நாகரிக வளாச்சியில் தனி மனித மனத் தேடலில் வளர்ந்த உறவின் பரிமாணம்தான்,’;காதல்;;. ஆந்தக்; காதல் என்பது,இளமைக் காலத்தில் ஒரு மனிதனைப் பெரிதளவாகப் பாதிக்கும் உணர்வு.

;-அலக்சாண்டர் மகா சக்கரவர்த்தியின் ஆசிரியர் அறிஞர் அரிஸ்டாட்டல் சொல்லும்போது, ‘ஈருடல் ஓருயிர்’ என்ற நிலைதான் காதல்’என்றார்.

இன்று வாழும் பெரும் அறிஞரான நியொம் சொம்ஸ்கி அவர்கள்’காதலற்ற வாழ்வு வெறுமையானது’ என்ற மூன்று வார்த்தைகளில்,ஒரு மனிதனின் வாழ்வில் காதலின் தார்ப்பரியம் என்னவென்று விளக்கி விட்டார்.

இந்தக் ‘காதல் உணர்வு பழைய கட்டுமானங்களைக் கடந்து,முற்று முழுதான இரு மனித தேடலின் இணைவாக உருவெடுக்கிறது. இனவிருத்திக்கான வெற்று உடலுறவைத் தாண்டிய ஒரு உளம் சார்ந்த அறிவுநிலை,அதையொட்டிய பல தரப்பட்ட தெளிவு நிலைகள் சேர்ந்தது’ என்றாராம் இற்றைக்கு இரண்டாயிரத்துநாநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த தத்துவ அறிஞர் பிளாட்டோ.

காதலின் இயற்கையான பரிமாணங்கள் மூன்று விதமானது என்று பழையகாலத்தில் கணித்தார்கள்: அவையாவன:ஈரோஸ்,அகபெ, பிலோசபிக்கல்என்பனவையாகும்.

‘ஈரோஸ்’ என்று சொல்லப்படும் காதல் உரோம,கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரைக கொண்ட பதம். இளமையில் உண்டாகும் பருவ, பாலியல் மயக்க, காதலின்றேல் சாதல் போன்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது.

‘அகபே’- என்பது ‘காதலை’க் கடமையாக முன்னெடுப்பது.
பிலோசிபிக்கல்:காதலைத் தத்துவ ரீதியாகப் பார்ப்பது என்பதாகும்.

(இம் மூன்று பரிமாணங்களையும் விளக்கி நான் எழுதிய ‘பனிபெய்யும் இரவுகள’ சாகித்திய அக்கடமிப் பரிசை எடுத்தது மட்டுமல்லாமல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளி வந்தது)

ஈரோஸ்;:
இதில் ஆறு நிலைகள் இருப்தாகப் பரவலாகப் பேசப்பட்டாலும் சிலர் காதலைப் பல வித்தில் பரிமாணம் செய்து ,ஏழுநிலைகள்,அல்லது எட்டு நிலைகள் இருப்பதாகவும் நெறிப் படுத்துகிறார்கள்.,

எங்கள் கலாச்சாரத்தில்:
-பார்வை(இருவரின் உணர்வுப் பார்வையால் பரிமாறுதல்), பால் மயக்கம்,(காதல் உணர்வால் வரும் உளத் தடுமாற்றம்) குரல்-(பேசல்),ஸ்பரிசம் (தொடுதல்),.பித்தநிலை(காதலால் மனம் மயங்கிய நிலை),சரணடைதல்(ஈருடல் ஓருயிரான அற்புத நிலை) என்று சொல்லப் படுகிறது.
பார்வை,-கண்கள் என்பது ஆன்மாவின் ஜன்னல்கள் என்று சொல்லப்படுகின்றன.இருகாதலர்களிக் முதற்பாhவையின் ஈர்ப்பு அவர்களின் ஆழ்மனத்தில் ஒரு சலனத்தைப் பிறப்பிக்கிறது.அதன் பிரதிபலிப்பாக அவளை அவனும் அவளும் பார்க்க உள்ளம் தவிக்கிறது (ஆணையிடுகிறது).

பால் மயக்கம்: காதலின் இரண்டாம் நிலை: பார்வை தந்த ஈர்ப்பால் அவள் அல்லது அவன் உருவம் மனதில் உருவாகிப் பார்க்கும் இடமெல்லாம் காலித்தவனின் அல்லது காதலித்தவளின் உருவம் பிரதிபலிப்பது.சாதாரண வாழ்நிலையை அசாதரணமாக்கும் மனவலைகளைக் கிளப்பக் கூடியது.

பேச்சு-குரல்);: ஒருத்தரின் குரலை இன்னொருத்தர் கேட்பதும் அதில் தொனிக்கும் காதல் உணர்வை உள்வாங்கியதன் எதிரொலியாக அவன அல்லது அவள் காதல் அந்தக் குரல் ஒலிப்பதாகக் கற்பனை செய்து தவிப்பது.

ஸ்பரிசம்: மிகவும் முக்கிய நிலை,மனிதர்களின் உடலில் உள்ள கலங்களில் வேலையில் எலக்ரிக் சக்திகள் இருக்கின்றன. காதலர்கள் இருவர் ஒருத்தரைத் தொடும்போது அவர்கள் உடலில் இராசாயன மாற்றங்கள்,உணர்;வு சார்ந்த நிலையை,மாற்றுமளவுக்கு அல்லது உறுதி செய்யுமளவுக்கு நடக்கின்றன.

பித்த நிலை: எங்கும் எதுவும் காதலனின் காதலியின் உருவாகவும், கனவிலும் அதுவே பிரதி பலிப்பாகவும் உணர்வது.

சரணடைதல்: முற்று முழுதாக இருவரம் காதலில் சங்கமிப்பது. காதல்,சாதி மத, வர்க்க பேதங்களைத் தாண்டிக் காலில் ஒன்று கூடல். போரில் வெல்வதை விட,நாட்டை ஆழ்வதை விட,உலகம் சிறந்த எழுத்தானகவோ,விளையாட்டு வீரனாகவோ,அதிபெரும் செல்வந்தனாகவோ வருவதை உதறித் தள்ளி உண்மையான காதலை ஏற்றுக் கொள்வது. அல்லது அதை அடையாவிட்டால் இருவரும் மரணத்தில் சங்கமித்தல்.

மேற்கத்தியரின்; கண்ணோட்டத்தில்,ஆறு நிகை;காதலில் முதலாவதாக,-

1-காதல்காதல்-(ரோமாண்டிக் காதல்)
2-காதலர்களுக்குள்ளான அதிகாரப் போராட்டம் (பவர் ஸ்ரகில்)
3-காதலில் வீழ்தல்-மீண்டும் அர்ப்பணிப்பு (றீ கொமிட்மென்ட்)
4- காதலையடைவதற்கான செயற்பாடுகள் (டு த வேர்க்)
5- காதல் உணர்வு பற்றிய விழிப்படைதல் (அவேக்கனிங்)
6- உண்மையான காதல் (றியல் லவ்).

இந்தக் காதல் நிலைகளைத் தற்காலத்தின் மிகவும் முக்கிய கலைச் சாதனமான தமிழ் சினிமா எப்படிப் பிரதி பலிக்கிறது என்று பார்த்தால் மிக முக்கியம்.

மனித வாழ்க்கையில்,நாகரிகத்தில்,இசை,இயல்நாடகத்தில் மிகப் பெரிய இடம் பெற்றிருக்கும் ஒரு மாபெரும் விடயம் ‘காதல்’ என்ற ஒரு பதமாகும்.அந்தக் கண்ணோட்டத்தில் இசைமூலம் காதலர்களின் உணர்வுகள் எப்படிப் பிரதிபலிக்கினறன என்பதைச் சங்க காலத்திலிருந்து,தற்காலச் சினிமாப் பாட்டுக்கள் தாராளச் சொல்கின்றன.

அதிலும் காதலிற் முற்றுமுழுதாய்;ச் ‘சரணடைதல்’ என்ற ஒரு வார்த்தை,இரு தனி மனிதர்கள், பல்வேறு வேறுபாடுகளையும் தாண்டி,காதல் என்ற உன்னத உணர்வால்,ஈருடல் ஒருயிர் என்றிணைந்த காதல் நிலையை வெளிப்படுத்துகிறது.

இந்நிலை காதல் வயப்பட்டவர்களின் உணர்வுகளில் முற்று முழுதாகத் தோய்ந்து அவர்களில் மனநிலையை வேறு உலகத்திற்கு இழுத்துச் செல்லுகிறது.
காதல் வயப்பட்டவர்கள் கண்ட இடங்களிலெல்லாம் அவர்கள் நேசிப்பர்களையே காண்பது போன்றவை,இந்த தன்னை மறந்த மன நிலையேய காரணமாகும்.கனவும் நினைவும் காதலில் படிந்து சுய நினைவைத் தொலைத்த நிலையை விளக்க இந்தப் பாடலைக் கேட்டாற் தெரியும்.இது,படத்திற்காக ஹரிராஜ் பாடியது

‘முதற்கனவே முதற் கனவே ஏன் வந்தாய்,நீ மறுபடி ஏன் வந்தாய்,
விழித்தெழுந்ததும் கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவெனைத் துறந்தது நிஜமா நிஜமா’ என்று அவள் கேட்க அவன் பதில் சொல்கிறான்,

‘முதற்கனவே முதற் கனவே மூச்சுள்ள வரையிலும் வருமல்லவா? கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?’ என்று பதில் சொல்கிறான். கனவு என்பது எங்கள் அடிமனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் எங்கள் நினைனவுகளின் வெளிப்பாடு என்கிறார் மன தத்துவ நிபணர் சிக்மண்ட ப்ரொயிட். இந்த வரிகள் காதலர் இருவரும் என்னவென்று தங்களின் யதார்த்த வாழ்வுக்கு அப்பால் காதல் நிலையில் சரணடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

காதல் என்ற அற்புத உணர்வை எங்கள் தமிழ் மூதாதையர் எவ்வளவு இனிமையாகவும் கருத்தடால்களும் பதிந்திருக்கிறார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களும்,திருக்குறளும் சான்று பகர்கின்றன.

சங்க இலக்கியம் அகம் புறம் என்றுதான் ஆரம்பிக்கிறது. மனிதனின் ‘ அக’ உணர்வின் வெளிப்பாட்டுக்குத்தான் பல படைப்புக்கள் முன்னிடம் கொடுக்கின்றன.ஒரு மனிதனின் அக உணர்வுகள் திருப்தியடையாவிட்டால் அவனது புற நடவடிக்கைகளில் முழுமையிருக்காது என்பதைக் காதலில் மனத்தைப் பறி கொடுத்த போதை நிலையிலிருக்கும் காதலர்களை வர்ணிக்கும் பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மனித வாழ்க்கையின் முப்பெரும் தேவைகளையும் திருவள்ளுவரும், அறத்துப்பால். பொருட்பால், காமத்துப்பால் என்றுதான் தனது படைப்பை முப்பரிமாணக் கண்ணோட்டத்தில் உலகுக்குத் தந்திருக்கிறார்.
திருவள்ளவரின் ஒரே ஒரு குறளில்,காதலிற் சரணடைவதை எப்படி அழகாகச் சொல்கிறார் என்றால்,
‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழாப் படாஅ முயக்கு’

என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். காதலர் இருவரின் சங்கமத்தில். மனித வாழ்வுக்கு இன்றியமையாத காற்றுக்கூட புகமுடியாமல் அவர்கள் இணைவு ஒன்றாகி விட்டது என்கிறார்.
இந்த நிலையையடைய இருவரின் மனநிலையும் ஒன்றாவதை காதலர்களின். பன்முகமான கற்பனைகள் வெளிப் படுத்துகின்றன.இதை ஒரு பெண் எப்படி வெளிப் படுத்துகிறாள்,அவளின் காதற்சரணடைவைத் தேடி ஏங்கிய துன்பத்தின் பிரதிபலிப்பை ‘வசீகரா பாட்டில் வரும்,

‘வசீகரா என்நெஞ்சினிக்கு,உன் மடியில் தூங்குமதே கணம்,என் கண் உறங்கா உன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும், நான் நேசிப்பதும்,சுவாசிப்பதும் உன் தயவாற்தானே’ என்ற வசனங்களிற கண்டு கொள்ளலாம்.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21600 சுவாசிக்கிறான்.
சுவாசமற்றால் உயிரில்லை.காதல் வயப்பட்டவர்களுக்குத் தேவையான சுவாசத்தை,அதாவது உயிர்வாழும் உந்துதலைக் கொடுப்பதே ஒருத்தரில் ஒருத்தர் கொண்ட அன்புதான் ‘நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் என்று ஒலிக்கிறது.

அதே மாதிரி, காதல் வயப்பட்ட ஒரு ஆணும் தன்,மனநிலையை.சங்கர் மகாதேவாவுக்கு இந்திய உயர்பரிசை எடுத்துக் கொடுத்த,’ என்ன சொல்லாப் போகிறாய்’ என்ற பாடலில் வரும்,’ சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ஞாயமா’ என்ற அற்புதமான ஒரு சில வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அவன் தன்னைச் சந்தணத் தென்றலாகவும் அவளின் உணர்வை ஜன்னலாகவும் உருவகப்படுத்திக் கவிதை சொல்கிறான்.

இந்திய கலாச்சாரத்தில், காதலுக்கும் காமத்துக்கும், எத்தனை முக்கிய உயர் இடமிருக்கிறது என்பதை,.கி;பி; 400-200 கால கட்டத்தில் வாத்சாயனார் அவர்களால் எழுதி வைத்திருக்கும் காமசூத்திரா என்ற நூலிலிருந்த புரிந்து கொள்ளலாம்
அதுமட்டுமல்லாமல், காமத்தை விளக்கும் பற்பல சிற்பங்களை,கி.பி.885-1050ம் ஆண்டளவில் மத்திய பிரதேசத்திலுள்ள சற்றபூர் என்னமிடத்தில் சாண்டேலா அரச பரம்பரையினராற் கட்டப்பட்டிருக்கிறது.
‘ஆய கலைகள் அறுபத்தி நான்கினவும்’ என்ற தமிழ் முதுமொழியில் மனிதர்களின் அதி உன்னத அறிவு நிலை,மனித சமுதாயத்திற்குத் தேவையான அறுபத்தி நான்கு கலைகளையும் கொடுக்கிறது என்பது சொல்லப் படுகிறது.

அதே மாதிரி,காதல் இன்பத்தின் பரவசத்தையும் அறுபத்திநான்கு விதத்தில் புரிந்து கொள்ளலாம் என்ற காம சூத்திரா விளக்குகிறதாம். அதாவது. ஒரு மனிதனால்; மிக மிக வேண்டப்படும் காதல் இன்பம் என்பது அவனை ஒரு திருப்தியான மனிதனாக எதிர்காலத்தில் வாழ உதவுகிறது என்பதை அந்தசிற்பங்களின் விரிவாக்ககங்கள் உணர்த்துகின்றன.இந்தச் சிற்பங்கள்,சரணடையும் காதல் நிலையை மட்டும் முன்னெடுக்கவில்லை காமத்தின் பன்முறையை விளக்குவதாகச் சொல்லலாம்.

இந்த,சரணடைதல் நிலையின் ஏக்கத்தைப் பல கவிஞர்கள் காலம் காலமாக எழுதிவருகிறார்கள். சங்க காலத்தில், காதலும் காமமும் சரி சமமான நிலையிலிருந்துக்கிறது என்பது பதியப் பட்டிருக்கிறது.அதன் நீட்சி மாதிரி தமிழ்க் கிராமியக் கவிதைகளும் பெண் உணர்வைக் கவியாக உதிர்த்துக் கொட்டியிருக்கின்றன.

உதாரணமாகக் கிழக்கிலங்கைக் கிராமம்,நாட்டுக் கவிகளுக்குப் பெயர் போனது. என்பதைக் காதல் உணர்வைப் பகிரங்கமாக ஒரு பெண் சொல்லும் இக்கவியிற் தெரிந்து கொள்ளலாம்’

‘இந்தக் குளிருக்கும் இனிவாற கூதலுக்கும் சொந்தப் புரு~ன் என்றால் சுணங்குவாரோ உம்மாரியில்’
இப்படியான ஒரு உணர்வு மனிதர்களை ஆட்டிப் படைப்பதற்கு அவனின் இயற்கைச் சுரப்பிகள் மிக மிக முக்கிய காரணமாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையான கொடையான தனித்துவ சுரப்பிகள். அவர்களுக்கு மிகவும் விருப்பமான,இன விருத்திக்கும் காதல் இன்ப நிலைக்கும் அத்தியாவசியமான செயற்பாடுகளின் தரகர்களாகச் செயற்படுகின்றன.அவர்களின் வாழ்க்கையின் அத்தனை செயற்பாடுகளிலும் பங்கெடுக்கின்றன.

அதைப் பல்வித வழிகளில் வெளிப்படுத்த,அதாவது அவனின் உணர்வைப் பேசாவழியாக வெளிப்படுத்த இயலறிவு நிலை (சென்ஸஸ்)அவனுக்கு உதவுகின்றன. மொழி வழியாக வெளிப்படுத்த கவிதைகள்,மனதில் பதிந்த இனிய காதலை உருவகப்படுத்த சிற்பங்கள் ஓவியங்கள், உதவுகின்றன.இவற்றை அவர்கள்; வாழும் வாழ்வியல்கள சூழல் கற்றுக் கொடுக்கிறுது.
ஒரு இளம் பெண் தன்னை மறந்து காதலிற் சரணடைந்த நிலையை,சின்மயி பாடிய’ இதயத்தை ஏதோ ஒன்று என்ற பாட்டு’அருமையாக விளக்குகிறது.இந்தப் பாடல்,

‘இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று,
இதுவரை இதுபோல நானுமில்லையே, கடலலைபோல வந்து,
கரைகளை அள்ளும் ஒன்று, முழுவிட மனம் பின் வாங்கவில்லையே,
இருப்பது ஒரு மனது, இதுவரை அது எனது,
எனைவிட்டு அது மெதுவாகப் போகக்கண்டேனே
இது ஒரு கனவு நிலை,கலைத்திட விரும்பவில்லை,
கனவுக்குள் கனவாக எனைக் கண்டேனே
எனக் கென்ன வேணுமென்று, ஒருவார்த்தை கேள் நின்று,
இனி நீயும் நானும் ஒன்று,என சொல்லும் நாளும் என்று?’

இந்தப் பாடலில் ஒரு பெண் மனம் என்னவென்று காதலில் துவைந்து நெளிகிறது என்று புரியும். இந்த அற்புத நெருக்கத்தின் பிரதிபலிப்பாகத்தான் அவர்களின் சங்கமத்தில்,இன்னொரு உயிர் பிறக்கிறது. அந்தக் காதல் சங்கமம் சரிவராவிட்டால் உயிர்கள் சிலவேளை பிரிகின்றன.
காதலிற் சரணடைந்த காதலனின் இந்த நிலையைக் கண்ணதாசன் சொல்லும்போது,

‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறி;வேன்.
இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்,
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்,
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூடவரும்
இந்தக் காற்றினில் நான் கலந்தேன்,உன் கண்களைத் தழுவுகிறேன்
இந்த ஆற்றினில் ஓடுகிறேன்,உன் ஆடையில் ஆடுகிறேன்
நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்’என்கிறார்.

காதலின் முதல் நிலை பார்வையிலாரம்பிக்கிறது. அதன் நீட்சி பால் மயக்கத்தில் இணையத் துடிக்கிறது.இந்த நிலையின் நீட்சியில் இன்னும் சில நிலைகள் வருகின்றன.ஸ்பரிசத் தொடர்பில்; புணர்கிறது. காதலையும் மீறிய கடமைகளால் அது தடைபட்டால் அந்தக் காதல் சாதலைத் தழுவுகிறது. இதை எத்தனையோ கலாச்சாரங்களின் வழியாக வந்த கதைகளும் காவியங்களும் எங்கள்முன் படைக்கப் பட்டுக் குவிந்து கிடக்கின்றன.
காதலால் இறந்தோர் பலர். அப்படியானவர்களில்,ரோமியோ யூலியட். அம்பிகாபதி,அமராவதி, சலீம். அனார்க்கலி, போன்ற காதலர்களின் கதைகள் விளக்குகின்றன. காதலால் உருவான கவிகள் பல்லாயிரம், காதலால் பாடிய பாடல்கள் எண்ணற்றவை.காதலால் எழுதப்பட்டிருக்கும் கதைகள் கோடி,கோடி,கோடியாகும்.

காதலால் சிதைந்த நாடுகள் பல.உலக அழகியாய வர்ணிக்கப்படும் கிளியோபாத்திரா,உரோம தளபதியான மார்க் அன்டனியின் கொண்ட காதலால் பல்லாயிர வருட உயர் நாகரிகம் கொண்ட எஜி;த்து நாடு அழிந்தது.

ஈருடல்,ஓருயிராக இணைந்த நிலையில் காதலின் சரணடையும் மனித காதல் உணர்வின் உச்சநிலை. இணைபிரியாதவை என்பது உண்மை. அது என்ன விளைவைத் தரும் என்பதற்குத்தான் முன் குறிப்பிட்ட, காதலுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த காதலர்களின் பட்டியலிற் சிலவற்றைப் பதிந்தேன்.இதை, என்னுயிரே பாடலில் வரும்:

‘என் உடல் பொருள் தந்தேன் சரணடைந்தேன்,
என்னுயிரை உன்னுள் ஊற்றி விட்டேன்,இதுதான் காதலின் ஐந்து நிலை,
நான் உன் கையில் நீர்த்திவலை,
ஒரு மோகத்தினால் வரும் பித்த நிலை,முத்தி நிலை,
நம் காதலிலே இது ஆறுநிலை,இந்தக் காதலின் மரணத்தால் ஏழுநிலை,
இது இல்லை என்றால்,அது தெய்வீகக் காதலில்லை’

என்பது போன்ற சில வார்த்தைகள் மார்க் அன்டனி என்ற உரோமநாட்டுத் தளபதி,உலக அழகியும் எகிப்திய மகாராணியுமான கிளியோபத்திரா என்றவளின் காதல் இல்லை என்றால் தனக்கு வாழ்வேயில்லை என்று மரணத்தில் சரணடைகிறான்.

இது,உலகில் எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரணத்தால்; இரு உயிர்களும் சாதலில் இணைந்த தெய்வீக காதல், என்றும் முடிவடைகிறது.

ஆனால் பல்லாயிரக்கணக்கான காதலர்கள் பல்விது போராட்டங்களையும்
தாண்டிய தங்கள் காதலில் சரணடைதல் என்பது பெரும்பாலும் நன்றாக திருமணத்தில் முடிவடைகின்றன. உலகம் விரிகிறது. கவிதைகள்,கதைகள்,தொடர்கின்றன.

வாழ்க காதல்.நன்றி-வணக்கம்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.27.2.22.

தமிழ் வான அவை (ஜேர்மனி) வழங்கும்இஇணையவழிப் பண்பாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில்இ’காதலின் ஆறு வகை நிலை’ என்ற கருத்தரங்கத்திற்குக் ‘காதலில் சரணடைதல்’ என்ற தலைப்பில் என்னைப் பேச அழைத்த திருமதி கௌரி சிவபாலன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த அன்பான வணக்கம்.அத்துடன்இஇங்கு கருத்துரைகள் வழங்க வந்திருக்கும்இதிருமதி பூங்குழலி பெருமாள்இதிரு நீலாவணை இந்திராஇதிருமதி.செ.கி.சங்கீத்ராதாஇதிருமதி க.மலர்வாணிஇகவிஞர் மூரா ஆகியோருக்கும்இஅத்துடன் இந்நிகழ்ச்சிக்குப் பாடவந்திருக்கும்.செல்வி பிரவீனா தயாநிதிஇநடன விருந்தளித்த செல்வி தேஜஸ்வி ஸ்ரீராமுலு அமீரகம் அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

மாசிமாதம் 14ம் திகதி காதலர் தினமாக உலகமெல்லாம் கொண்டாடப்படட்டது. காதலர்கள் தங்களிடையே பரிசுகளையும்இகாதற் கவிதைகளையும்இமுத்தங்களையும் விருந்துகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு தங்கள் காதலை அர்ப்பணித்து மகிழ்ந்திருப்பார்கள்.

மனித இன தோற்றத்தின் ஆரம்பத்தில் ;காதல் என்ற உறவு இருக்கவில்லை.ஆதிகாலத்தில் மனித ஆண் பெண்இ;இனவிருத்திஇகுழுக்கள் சார்ந்த உறவுஇகுடும்ப பாதுகாப்புஇசாதிஇ சமயஇவர்க்கக் கோட்பாடுகள்இ அரசியல் தேவை என்று பல பரிமாணங்களுடன் வளர்ந்தது.

அதன்பின். நாகரிக வளாச்சியில் தனி மனித மனத் தேடலில் வளர்ந்த உறவின் பரிமாணம்தான்இ’;காதல்;;. ஆந்தக்; காதல் என்பதுஇஇளமைக் காலத்தில் ஒரு மனிதனைப் பெரிதளவாகப் பாதிக்கும் உணர்வு.

;-அலக்சாண்டர் மகா சக்கரவர்த்தியின் ஆசிரியர் அறிஞர் அரிஸ்டாட்டல் சொல்லும்போதுஇ ‘ஈருடல் ஓருயிர்’ என்ற நிலைதான் காதல்’என்றார்.

இன்று வாழும் பெரும் அறிஞரான நியொம் சொம்ஸ்கி அவர்கள்’காதலற்ற வாழ்வு வெறுமையானது’ என்ற மூன்று வார்த்தைகளில்இஒரு மனிதனின் வாழ்வில் காதலின் தார்ப்பரியம் என்னவென்று விளக்கி விட்டார்.

இந்தக் ‘காதல் உணர்வு பழைய கட்டுமானங்களைக் கடந்துஇமுற்று முழுதான இரு மனித தேடலின் இணைவாக உருவெடுக்கிறது. இனவிருத்திக்கான வெற்று உடலுறவைத் தாண்டிய ஒரு உளம் சார்ந்த அறிவுநிலைஇஅதையொட்டிய பல தரப்பட்ட தெளிவு நிலைகள் சேர்ந்தது’ என்றாராம் இற்றைக்கு இரண்டாயிரத்துநாநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த தத்துவ அறிஞர் பிளாட்டோ.

காதலின் இயற்கையான பரிமாணங்கள் மூன்று விதமானது என்று பழையகாலத்தில் கணித்தார்கள்: அவையாவன:ஈரோஸ்இஅகபெஇ பிலோசபிக்கல்என்பனவையாகும்.

‘ஈரோஸ்’ என்று சொல்லப்படும் காதல் உரோமஇகிரேக்க காதல் தெய்வத்தின் பெயரைக கொண்ட பதம். இளமையில் உண்டாகும் பருவஇ பாலியல் மயக்கஇ காதலின்றேல் சாதல் போன்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது.

‘அகபே’- என்பது ‘காதலை’க் கடமையாக முன்னெடுப்பது.
பிலோசிபிக்கல்:காதலைத் தத்துவ ரீதியாகப் பார்ப்பது என்பதாகும்.

(இம் மூன்று பரிமாணங்களையும் விளக்கி நான் எழுதிய ‘பனிபெய்யும் இரவுகள’ சாகித்திய அக்கடமிப் பரிசை எடுத்தது மட்டுமல்லாமல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளி வந்தது)

ஈரோஸ்;:
இதில் ஆறு நிலைகள் இருப்தாகப் பரவலாகப் பேசப்பட்டாலும் சிலர் காதலைப் பல வித்தில் பரிமாணம் செய்து இஏழுநிலைகள்இஅல்லது எட்டு நிலைகள் இருப்பதாகவும் நெறிப் படுத்துகிறார்கள்.இ

எங்கள் கலாச்சாரத்தில்:
-பார்வை(இருவரின் உணர்வுப் பார்வையால் பரிமாறுதல்)இ பால் மயக்கம்இ(காதல் உணர்வால் வரும் உளத் தடுமாற்றம்) குரல்-(பேசல்)இஸ்பரிசம் (தொடுதல்)இ.பித்தநிலை(காதலால் மனம் மயங்கிய நிலை)இசரணடைதல்(ஈருடல் ஓருயிரான அற்புத நிலை) என்று சொல்லப் படுகிறது.
பார்வைஇ-கண்கள் என்பது ஆன்மாவின் ஜன்னல்கள் என்று சொல்லப்படுகின்றன.இருகாதலர்களிக் முதற்பாhவையின் ஈர்ப்பு அவர்களின் ஆழ்மனத்தில் ஒரு சலனத்தைப் பிறப்பிக்கிறது.அதன் பிரதிபலிப்பாக அவளை அவனும் அவளும் பார்க்க உள்ளம் தவிக்கிறது (ஆணையிடுகிறது).

பால் மயக்கம்: காதலின் இரண்டாம் நிலை: பார்வை தந்த ஈர்ப்பால் அவள் அல்லது அவன் உருவம் மனதில் உருவாகிப் பார்க்கும் இடமெல்லாம் காலித்தவனின் அல்லது காதலித்தவளின் உருவம் பிரதிபலிப்பது.சாதாரண வாழ்நிலையை அசாதரணமாக்கும் மனவலைகளைக் கிளப்பக் கூடியது.

பேச்சு-குரல்);: ஒருத்தரின் குரலை இன்னொருத்தர் கேட்பதும் அதில் தொனிக்கும் காதல் உணர்வை உள்வாங்கியதன் எதிரொலியாக அவன அல்லது அவள் காதல் அந்தக் குரல் ஒலிப்பதாகக் கற்பனை செய்து தவிப்பது.

ஸ்பரிசம்: மிகவும் முக்கிய நிலைஇமனிதர்களின் உடலில் உள்ள கலங்களில் வேலையில் எலக்ரிக் சக்திகள் இருக்கின்றன. காதலர்கள் இருவர் ஒருத்தரைத் தொடும்போது அவர்கள் உடலில் இராசாயன மாற்றங்கள்இஉணர்;வு சார்ந்த நிலையைஇமாற்றுமளவுக்கு அல்லது உறுதி செய்யுமளவுக்கு நடக்கின்றன.

பித்த நிலை: எங்கும் எதுவும் காதலனின் காதலியின் உருவாகவும்இ கனவிலும் அதுவே பிரதி பலிப்பாகவும் உணர்வது.

சரணடைதல்: முற்று முழுதாக இருவரம் காதலில் சங்கமிப்பது. காதல்இசாதி மதஇ வர்க்க பேதங்களைத் தாண்டிக் காலில் ஒன்று கூடல். போரில் வெல்வதை விடஇநாட்டை ஆழ்வதை விடஇஉலகம் சிறந்த எழுத்தானகவோஇவிளையாட்டு வீரனாகவோஇஅதிபெரும் செல்வந்தனாகவோ வருவதை உதறித் தள்ளி உண்மையான காதலை ஏற்றுக் கொள்வது. அல்லது அதை அடையாவிட்டால் இருவரும் மரணத்தில் சங்கமித்தல்.

மேற்கத்தியரின்; கண்ணோட்டத்தில்இஆறு நிகை;காதலில் முதலாவதாகஇ-

1-காதல்காதல்-(ரோமாண்டிக் காதல்)
2-காதலர்களுக்குள்ளான அதிகாரப் போராட்டம் (பவர் ஸ்ரகில்)
3-காதலில் வீழ்தல்-மீண்டும் அர்ப்பணிப்பு (றீ கொமிட்மென்ட்)
4- காதலையடைவதற்கான செயற்பாடுகள் (டு த வேர்க்)
5- காதல் உணர்வு பற்றிய விழிப்படைதல் (அவேக்கனிங்)
6- உண்மையான காதல் (றியல் லவ்).

இந்தக் காதல் நிலைகளைத் தற்காலத்தின் மிகவும் முக்கிய கலைச் சாதனமான தமிழ் சினிமா எப்படிப் பிரதி பலிக்கிறது என்று பார்த்தால் மிக முக்கியம்.

மனித வாழ்க்கையில்இநாகரிகத்தில்இஇசைஇஇயல்நாடகத்தில் மிகப் பெரிய இடம் பெற்றிருக்கும் ஒரு மாபெரும் விடயம் ‘காதல்’ என்ற ஒரு பதமாகும்.அந்தக் கண்ணோட்டத்தில் இசைமூலம் காதலர்களின் உணர்வுகள் எப்படிப் பிரதிபலிக்கினறன என்பதைச் சங்க காலத்திலிருந்துஇதற்காலச் சினிமாப் பாட்டுக்கள் தாராளச் சொல்கின்றன.

அதிலும் காதலிற் முற்றுமுழுதாய்;ச் ‘சரணடைதல்’ என்ற ஒரு வார்த்தைஇஇரு தனி மனிதர்கள்இ பல்வேறு வேறுபாடுகளையும் தாண்டிஇகாதல் என்ற உன்னத உணர்வால்இஈருடல் ஒருயிர் என்றிணைந்த காதல் நிலையை வெளிப்படுத்துகிறது.

இந்நிலை காதல் வயப்பட்டவர்களின் உணர்வுகளில் முற்று முழுதாகத் தோய்ந்து அவர்களில் மனநிலையை வேறு உலகத்திற்கு இழுத்துச் செல்லுகிறது.
காதல் வயப்பட்டவர்கள் கண்ட இடங்களிலெல்லாம் அவர்கள் நேசிப்பர்களையே காண்பது போன்றவைஇஇந்த தன்னை மறந்த மன நிலையேய காரணமாகும்.கனவும் நினைவும் காதலில் படிந்து சுய நினைவைத் தொலைத்த நிலையை விளக்க இந்தப் பாடலைக் கேட்டாற் தெரியும்.இதுஇபடத்திற்காக ஹரிராஜ் பாடியது

‘முதற்கனவே முதற் கனவே ஏன் வந்தாய்இநீ மறுபடி ஏன் வந்தாய்இ
விழித்தெழுந்ததும் கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவெனைத் துறந்தது நிஜமா நிஜமா’ என்று அவள் கேட்க அவன் பதில் சொல்கிறான்இ

‘முதற்கனவே முதற் கனவே மூச்சுள்ள வரையிலும் வருமல்லவா? கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?’ என்று பதில் சொல்கிறான். கனவு என்பது எங்கள் அடிமனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் எங்கள் நினைனவுகளின் வெளிப்பாடு என்கிறார் மன தத்துவ நிபணர் சிக்மண்ட ப்ரொயிட். இந்த வரிகள் காதலர் இருவரும் என்னவென்று தங்களின் யதார்த்த வாழ்வுக்கு அப்பால் காதல் நிலையில் சரணடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

காதல் என்ற அற்புத உணர்வை எங்கள் தமிழ் மூதாதையர் எவ்வளவு இனிமையாகவும் கருத்தடால்களும் பதிந்திருக்கிறார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களும்இதிருக்குறளும் சான்று பகர்கின்றன.

சங்க இலக்கியம் அகம் புறம் என்றுதான் ஆரம்பிக்கிறது. மனிதனின் ‘ அக’ உணர்வின் வெளிப்பாட்டுக்குத்தான் பல படைப்புக்கள் முன்னிடம் கொடுக்கின்றன.ஒரு மனிதனின் அக உணர்வுகள் திருப்தியடையாவிட்டால் அவனது புற நடவடிக்கைகளில் முழுமையிருக்காது என்பதைக் காதலில் மனத்தைப் பறி கொடுத்த போதை நிலையிலிருக்கும் காதலர்களை வர்ணிக்கும் பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மனித வாழ்க்கையின் முப்பெரும் தேவைகளையும் திருவள்ளுவரும்இ அறத்துப்பால். பொருட்பால்இ காமத்துப்பால் என்றுதான் தனது படைப்பை முப்பரிமாணக் கண்ணோட்டத்தில் உலகுக்குத் தந்திருக்கிறார்.
திருவள்ளவரின் ஒரே ஒரு குறளில்இகாதலிற் சரணடைவதை எப்படி அழகாகச் சொல்கிறார் என்றால்இ
‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழாப் படாஅ முயக்கு’

என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். காதலர் இருவரின் சங்கமத்தில். மனித வாழ்வுக்கு இன்றியமையாத காற்றுக்கூட புகமுடியாமல் அவர்கள் இணைவு ஒன்றாகி விட்டது என்கிறார்.
இந்த நிலையையடைய இருவரின் மனநிலையும் ஒன்றாவதை காதலர்களின். பன்முகமான கற்பனைகள் வெளிப் படுத்துகின்றன.இதை ஒரு பெண் எப்படி வெளிப் படுத்துகிறாள்இஅவளின் காதற்சரணடைவைத் தேடி ஏங்கிய துன்பத்தின் பிரதிபலிப்பை ‘வசீகரா பாட்டில் வரும்இ

‘வசீகரா என்நெஞ்சினிக்குஇஉன் மடியில் தூங்குமதே கணம்இஎன் கண் உறங்கா உன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்இ நான் நேசிப்பதும்இசுவாசிப்பதும் உன் தயவாற்தானே’ என்ற வசனங்களிற கண்டு கொள்ளலாம்.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21600 சுவாசிக்கிறான்.
சுவாசமற்றால் உயிரில்லை.காதல் வயப்பட்டவர்களுக்குத் தேவையான சுவாசத்தைஇஅதாவது உயிர்வாழும் உந்துதலைக் கொடுப்பதே ஒருத்தரில் ஒருத்தர் கொண்ட அன்புதான் ‘நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் என்று ஒலிக்கிறது.

அதே மாதிரிஇ காதல் வயப்பட்ட ஒரு ஆணும் தன்இமனநிலையை.சங்கர் மகாதேவாவுக்கு இந்திய உயர்பரிசை எடுத்துக் கொடுத்தஇ’ என்ன சொல்லாப் போகிறாய்’ என்ற பாடலில் வரும்இ’ சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ஞாயமா’ என்ற அற்புதமான ஒரு சில வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அவன் தன்னைச் சந்தணத் தென்றலாகவும் அவளின் உணர்வை ஜன்னலாகவும் உருவகப்படுத்திக் கவிதை சொல்கிறான்.

இந்திய கலாச்சாரத்தில்இ காதலுக்கும் காமத்துக்கும்இ எத்தனை முக்கிய உயர் இடமிருக்கிறது என்பதைஇ.கி;பி; 400-200 கால கட்டத்தில் வாத்சாயனார் அவர்களால் எழுதி வைத்திருக்கும் காமசூத்திரா என்ற நூலிலிருந்த புரிந்து கொள்ளலாம்
அதுமட்டுமல்லாமல்இ காமத்தை விளக்கும் பற்பல சிற்பங்களைஇகி.பி.885-1050ம் ஆண்டளவில் மத்திய பிரதேசத்திலுள்ள சற்றபூர் என்னமிடத்தில் சாண்டேலா அரச பரம்பரையினராற் கட்டப்பட்டிருக்கிறது.
‘ஆய கலைகள் அறுபத்தி நான்கினவும்’ என்ற தமிழ் முதுமொழியில் மனிதர்களின் அதி உன்னத அறிவு நிலைஇமனித சமுதாயத்திற்குத் தேவையான அறுபத்தி நான்கு கலைகளையும் கொடுக்கிறது என்பது சொல்லப் படுகிறது.

அதே மாதிரிஇகாதல் இன்பத்தின் பரவசத்தையும் அறுபத்திநான்கு விதத்தில் புரிந்து கொள்ளலாம் என்ற காம சூத்திரா விளக்குகிறதாம். அதாவது. ஒரு மனிதனால்; மிக மிக வேண்டப்படும் காதல் இன்பம் என்பது அவனை ஒரு திருப்தியான மனிதனாக எதிர்காலத்தில் வாழ உதவுகிறது என்பதை அந்தசிற்பங்களின் விரிவாக்ககங்கள் உணர்த்துகின்றன.இந்தச் சிற்பங்கள்இசரணடையும் காதல் நிலையை மட்டும் முன்னெடுக்கவில்லை காமத்தின் பன்முறையை விளக்குவதாகச் சொல்லலாம்.

இந்தஇசரணடைதல் நிலையின் ஏக்கத்தைப் பல கவிஞர்கள் காலம் காலமாக எழுதிவருகிறார்கள். சங்க காலத்தில்இ காதலும் காமமும் சரி சமமான நிலையிலிருந்துக்கிறது என்பது பதியப் பட்டிருக்கிறது.அதன் நீட்சி மாதிரி தமிழ்க் கிராமியக் கவிதைகளும் பெண் உணர்வைக் கவியாக உதிர்த்துக் கொட்டியிருக்கின்றன.

உதாரணமாகக் கிழக்கிலங்கைக் கிராமம்இநாட்டுக் கவிகளுக்குப் பெயர் போனது. என்பதைக் காதல் உணர்வைப் பகிரங்கமாக ஒரு பெண் சொல்லும் இக்கவியிற் தெரிந்து கொள்ளலாம்’

‘இந்தக் குளிருக்கும் இனிவாற கூதலுக்கும் சொந்தப் புரு~ன் என்றால் சுணங்குவாரோ உம்மாரியில்’
இப்படியான ஒரு உணர்வு மனிதர்களை ஆட்டிப் படைப்பதற்கு அவனின் இயற்கைச் சுரப்பிகள் மிக மிக முக்கிய காரணமாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையான கொடையான தனித்துவ சுரப்பிகள். அவர்களுக்கு மிகவும் விருப்பமானஇஇன விருத்திக்கும் காதல் இன்ப நிலைக்கும் அத்தியாவசியமான செயற்பாடுகளின் தரகர்களாகச் செயற்படுகின்றன.அவர்களின் வாழ்க்கையின் அத்தனை செயற்பாடுகளிலும் பங்கெடுக்கின்றன.

அதைப் பல்வித வழிகளில் வெளிப்படுத்தஇஅதாவது அவனின் உணர்வைப் பேசாவழியாக வெளிப்படுத்த இயலறிவு நிலை (சென்ஸஸ்)அவனுக்கு உதவுகின்றன. மொழி வழியாக வெளிப்படுத்த கவிதைகள்இமனதில் பதிந்த இனிய காதலை உருவகப்படுத்த சிற்பங்கள் ஓவியங்கள்இ உதவுகின்றன.இவற்றை அவர்கள்; வாழும் வாழ்வியல்கள சூழல் கற்றுக் கொடுக்கிறுது.
ஒரு இளம் பெண் தன்னை மறந்து காதலிற் சரணடைந்த நிலையைஇசின்மயி பாடிய’ இதயத்தை ஏதோ ஒன்று என்ற பாட்டு’அருமையாக விளக்குகிறது.இந்தப் பாடல்இ

‘இதயத்தை ஏதோ ஒன்றுஇ இழுக்குது கொஞ்சம் இன்றுஇ
இதுவரை இதுபோல நானுமில்லையேஇ கடலலைபோல வந்துஇ
கரைகளை அள்ளும் ஒன்றுஇ முழுவிட மனம் பின் வாங்கவில்லையேஇ
இருப்பது ஒரு மனதுஇ இதுவரை அது எனதுஇ
எனைவிட்டு அது மெதுவாகப் போகக்கண்டேனே
இது ஒரு கனவு நிலைஇகலைத்திட விரும்பவில்லைஇ
கனவுக்குள் கனவாக எனைக் கண்டேனே
எனக் கென்ன வேணுமென்றுஇ ஒருவார்த்தை கேள் நின்றுஇ
இனி நீயும் நானும் ஒன்றுஇஎன சொல்லும் நாளும் என்று?’

இந்தப் பாடலில் ஒரு பெண் மனம் என்னவென்று காதலில் துவைந்து நெளிகிறது என்று புரியும். இந்த அற்புத நெருக்கத்தின் பிரதிபலிப்பாகத்தான் அவர்களின் சங்கமத்தில்இஇன்னொரு உயிர் பிறக்கிறது. அந்தக் காதல் சங்கமம் சரிவராவிட்டால் உயிர்கள் சிலவேளை பிரிகின்றன.
காதலிற் சரணடைந்த காதலனின் இந்த நிலையைக் கண்ணதாசன் சொல்லும்போதுஇ

‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறி;வேன்.
இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்இ
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்இ
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூடவரும்
இந்தக் காற்றினில் நான் கலந்தேன்இஉன் கண்களைத் தழுவுகிறேன்
இந்த ஆற்றினில் ஓடுகிறேன்இஉன் ஆடையில் ஆடுகிறேன்
நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்’என்கிறார்.

காதலின் முதல் நிலை பார்வையிலாரம்பிக்கிறது. அதன் நீட்சி பால் மயக்கத்தில் இணையத் துடிக்கிறது.இந்த நிலையின் நீட்சியில் இன்னும் சில நிலைகள் வருகின்றன.ஸ்பரிசத் தொடர்பில்; புணர்கிறது. காதலையும் மீறிய கடமைகளால் அது தடைபட்டால் அந்தக் காதல் சாதலைத் தழுவுகிறது. இதை எத்தனையோ கலாச்சாரங்களின் வழியாக வந்த கதைகளும் காவியங்களும் எங்கள்முன் படைக்கப் பட்டுக் குவிந்து கிடக்கின்றன.
காதலால் இறந்தோர் பலர். அப்படியானவர்களில்இரோமியோ யூலியட். அம்பிகாபதிஇஅமராவதிஇ சலீம். அனார்க்கலிஇ போன்ற காதலர்களின் கதைகள் விளக்குகின்றன. காதலால் உருவான கவிகள் பல்லாயிரம்இ காதலால் பாடிய பாடல்கள் எண்ணற்றவை.காதலால் எழுதப்பட்டிருக்கும் கதைகள் கோடிஇகோடிஇகோடியாகும்.

காதலால் சிதைந்த நாடுகள் பல.உலக அழகியாய வர்ணிக்கப்படும் கிளியோபாத்திராஇஉரோம தளபதியான மார்க் அன்டனியின் கொண்ட காதலால் பல்லாயிர வருட உயர் நாகரிகம் கொண்ட எஜி;த்து நாடு அழிந்தது.

ஈருடல்இஓருயிராக இணைந்த நிலையில் காதலின் சரணடையும் மனித காதல் உணர்வின் உச்சநிலை. இணைபிரியாதவை என்பது உண்மை. அது என்ன விளைவைத் தரும் என்பதற்குத்தான் முன் குறிப்பிட்டஇ காதலுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த காதலர்களின் பட்டியலிற் சிலவற்றைப் பதிந்தேன்.இதைஇ என்னுயிரே பாடலில் வரும்:

‘என் உடல் பொருள் தந்தேன் சரணடைந்தேன்இ
என்னுயிரை உன்னுள் ஊற்றி விட்டேன்இஇதுதான் காதலின் ஐந்து நிலைஇ
நான் உன் கையில் நீர்த்திவலைஇ
ஒரு மோகத்தினால் வரும் பித்த நிலைஇமுத்தி நிலைஇ
நம் காதலிலே இது ஆறுநிலைஇஇந்தக் காதலின் மரணத்தால் ஏழுநிலைஇ
இது இல்லை என்றால்இஅது தெய்வீகக் காதலில்லை’

என்பது போன்ற சில வார்த்தைகள் மார்க் அன்டனி என்ற உரோமநாட்டுத் தளபதிஇஉலக அழகியும் எகிப்திய மகாராணியுமான கிளியோபத்திரா என்றவளின் காதல் இல்லை என்றால் தனக்கு வாழ்வேயில்லை என்று மரணத்தில் சரணடைகிறான்.

இதுஇஉலகில் எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரணத்தால்; இரு உயிர்களும் சாதலில் இணைந்த தெய்வீக காதல்இ என்றும் முடிவடைகிறது.

ஆனால் பல்லாயிரக்கணக்கான காதலர்கள் பல்விது போராட்டங்களையும்
தாண்டிய தங்கள் காதலில் சரணடைதல் என்பது பெரும்பாலும் நன்றாக திருமணத்தில் முடிவடைகின்றன. உலகம் விரிகிறது. கவிதைகள்இகதைகள்இதொடர்கின்றன.

வாழ்க காதல்.நன்றி-வணக்கம்

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s