‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’

‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்- 29.1.22.

தமிழர்களின் மரபு திங்களாக இம்மாதம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் தமிழ்த் துறையின்; தாய்மடியான ‘லண்டன் ஸ்கூல் ஒவ் ஓரியன்டல் அன்ட் அபிரிக்கன்ஸரடிஸ்’; (ஓரியண்டல் மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள் லண்டன் பள்ளி) என்ற பல்கலைக் கழக சார்ந்தோர் சந்திப்பு நிகழ்ச்சியில்,’மாந்தர்களுக்குப் பயன் படும் மருத்துவ மானுடவியல்’ என்ற தலைப்பில் பேச அழைத்த ஐக்கிய இராச்சிய தமிழ்த் துறை அமைப்பினருக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்.

அத்துடன் உலகப் பெருமை பெற்ற இப் பல்கலைக் கழகத்திற்தான்,இன்றைய எனது பேசுபொருளாகவிருக்கும் விடயத்தை விளக்கும் ‘மருத்துவ மானுடவியலில்’ முதுகலைப் பட்டம் பெற்றேன் என்பதையும்.இந்தத் துறையில் காலடி எடுத்துவைத்த முதலாவது தமிழ்ப் பெண்மணி என்பதையும் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் அமுதமொழியின் பாரம்பரிய ஆய்வுகளைத் தொடரும் தமிழ்த் துறை இங்கு ஆரம்பிக்கவிருப்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய விடயமாகும். ஏனென்றால் தமிழின் பெருமையை யுணர்ந்த பேரறிஞர்கள் எங்கள் செம்மொழி பற்றிய ஆய்வுகளைச் செய்ய 1916ம் ஆண்டிலேயே தமிழத் துறையை ஆரம்பித்து விட்டார்கள்.

.

எங்கள் தாய் மொழியையும்,எங்கள் முன்னோரையும் பற்றிய ஆய்வுகளுக்கு தமிழ்த் துறையின்; தேவை அன்றைய காலத்தை விட இன்று மிக முக்கியமாகவிருக்கிறது. ஏனென்றால் மருத்துவ மானுடவில் அறிவு எப்படியெல்லாம் மாந்தர்களுக்கு உதவுகிறது என்பதை அறிய நான் ஆய்வுகளை மேற் கொண்டபோது, தமிழ்த் துறையின்; மூலம் எவ்வளவு அரிய பெரிய ஆய்வுகளைச் செய்து தமிழ் மொழியினதும் தமிழ் கலாச்சார, பண்பாடுகளின் பாரம்பரியத்தையும் உலகிற்குப் பரப்பலாம், அதன் மூலம் பெருவாரியான மாந்தர்கள் எவ்வளவு பயன் பெறலாம் என்பதைத் தெரிந்து கொண்டேன்

.அவற்றை முன்னெடுக்கத் தமிழ் இருக்கையின் வளர்ச்சி முக்கியமானது. அதைச் செயற்படுவதற்கு நாங்கள் முடியுமானவரையில் பல துறைகளிலும் தமிழ்த் துறை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைக்கவேண்டும.

தமிழ்த்துறை 1916ம் தொடங்கப் பட்டபோது, தமிழ் மொழியின் மேன்மை பற்றிப் பேராசிரியர்களான. டாக்டர் ஜோன் றோல்ஸ்டன் மார், டாக்டர் ஸ்ருவொர்ட் பிலாக் பேர்ன், டாக்டர், டேவிட் சுல்மான் போன்றவர்கள் பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள்.

டாக்டர் மார் அவர்கள்,சைவ துறவிகளின் வாழ்வியல் அத்தியாயங்கள்,புறநாநுறு மற்றும் பத்துப் பாட்டுக்கள்,எழுத்துமுறை திராவிடச்சே போன்றவற்றை எழுதியிருக்கிறார்.சோஆஸில் தமிழ் பற்றிய மேற்படிப்புக்கான நூலையும் எழுதியிருக்கிறார். 1974ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டிலும் தன்னுடைய ஆய்வொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.அவரின் முயற்சியால் பாரதிய வித்தியபவனில் பாரதியாருக்கான அறக்கட்டளைக் குழுவையும் ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ்த் துறைக்கு அவர் செய்த பல தரப் பட்ட பணிகளுக்காக.குறள் பீடம் அவார்ட் கிடைத்து,அத்துடன் இந்தியா அவருக்கு பத்மஸ்ரீ விருதை 2009ம் ஆண்டு கொடுத்துக் கவுரவித்திருக்கிறார்கள்.

அவர் ஆற்றிய பணிகளைப்போன்று எங்கள் எதிர்கால இளம் தலைமுறையினரும்; இங்கு தமிழ்த் துறையின்; வளர்ச்சிக்கான அத்தனை முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இன்று நான் எடுத்துக் கொண்ட விடயத்தை விளக்க பல தரப்பட்ட மருத்துவப் பாரம்பரியங்களைப் பற்றிய விபரங்கள் தேடும்போது எங்களின் பாரம்பரிய மருத்துவ வழிமுறைகளின் பயன்கள் என்னவென்று,இன்றைய காலகட்டத்தில் மேற்கத்திய வைத்திய முறைகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு மக்களுக்குப் பயன் தருகிறது என்பது தெரிந்தது.

20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்,இரண்டாம் உலகப் போர் முடிந்து உலக மக்கள் ஒரு அளவிலான அமைதியுடன் வாழத் தொடங்கினார். நிர்வாகம், கல்வி வளர்ச்சி,பொருளாதாரம்,விஞ்ஞான ஆய்வுகள் அரசியல் நிலைப்பாடுகள் என்பன சுமுகமாக இயங்கத் தொடங்கின.

உலக சுகாதார நிறுவனம்,ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கமாக 1948ல் நிறுவப்பட்டது.

1950ம் ஆண்டு கால கட்டதில் கலாச்சாரம் சார்ந்த மானுடவியலை ஆராய்ந்து செய்து கொண்டிருந்தவர்களுக்கு,அதைச் சார்ந்து பாரம்பரிய மருத்துவம் நெறிமுறைகளப் போன்ற பல துறைகளிலும் தங்கள் ஆராய்ச்சிகளை மேற் கொண்டார்கள்.அதில் ஒன்றுதான் ‘மருத்துவ மானுடவியல்’ ஆராய்ச்சியுமாகும்.

இந்தியா,சைனா, மத்தியதரைக்கடல் நாடுகள், ஆபிரிக்கா,அவுஸ்திரேலிய,அமெரிக்காவின் பழங்குடிகள்,சைபீரிய பிராந்தியங்கள் போன்ற இடங்களில் பற்பல மருத்துவ முறைகள் மக்களுக்க உதவுகின்றன.

மேற்கத்திய வைத்திய முறையைத் தாண்டிய பல முறைகள் அப்போது உலகெங்குமிருந்தன.அதாவது,

-ஆயர்வேத,சித்தவைத்திய,நாட்டு வைத்திய, கைவைத்திய.மூலிகை வைத்தியம்,

-யுனானி வைத்தியம் (கிரேக்கா பாரம்பரிய முறை மத்தியதரைக்கடல் நாடுகளின் வழியாக இந்தியாவுக்கள் வந்தத),

மத்தியதரைக்கடல நாடுகள்: யுனானி மருத்துவம்.இது கிரேக்க தேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுப் பரவியது. இன்றைய மேற்கத்திய வைத்தியமுறைகளின் ஆரம்பம் இந்த மருத்துவ முறைதான் என்று சொல்லப் படுகிறது. இதன் மக்கிய கொள்கை உடலின் பல்வேறு அம்சங்களில் சமநிலையை பராமரிப்பதது,நான்கு கூறகள்,வௌ;வேறு மனோபாவங்கள்,எளிய மற்றும் கூட்டு உறுப்பகள் மற்றும் நான்கு நகைச்சுவைகளாலானது. மனநோய,உணர்ச்சி,சடங்கு மற்றும் உடல் என்ற விதத்தில் பார்க்கப் படுகிறது.

-ஹோமியோபதி:(Homoeopathy) )சாமுவல் ஹஹ்னிமான்-1796, ஒத்தவிதி,(லா ஒவ் ஸ்ரிமுலஸ்) 7 விதிகள் சிம்லக்ஸ் விதி,குறைந்தபட்ச சட்டம்,மருந்து நிருபிக்கும் கோட்பாடு,நாள்பட்ட நோய்கள் கோட்பாடு,உயிர்சக்தி கோட்பாடு,மருந்து இயக்கக் கோட்பாடு.(ப்ளசிபோh எபெக்ட்) போன்ற விளக்கங்களையுள்ளடக்கியது.

-ஆம்ஸி மருத்தவம் வட இந்திய பவுத்த மருத்துவ முறை( ஆயள்வேத மருத்துவ முறையை அடிப்படையாகக் கொண்டது.).

-சைனாவின்: மருத்துவம்,அக்கியு பங்சர் குத்தூசி மருத்துவம்,கப்பிங் தெரப்பி,மசாஜ்,உடற்பயிற்சி,தாய்ச்சி போன்றவை.

-ப்யெத் ஹீலிங்(faith healing) என்ற நம்பிக்கை குணப்படுத்தல் சார்ந்த ஆன்மீக வழிமுறை சார்ந்தவை.

உதாரணமாக இந்திய உபகண்டத்தில்,நோய் நொடிகள், மருத்துவம்,என்பவன அவர்களின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளிற் தங்கியிருக்கிறது..அந்தத் தெய்வ நம்பிக்கைகளம் பெருந்தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு சடங்குகள், வழிபாட்டு முறைகளுடன் இணைந்திரக்கிறது.

இந்த நம்பிக்கைளுக்கும் மேற்கத்திய வைத்தியமுறைக்குமள்ள வேறுபாடுகள் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்தன. இந்தியாவிலிருப்பது மாதிரியெ உலகெங்கும் மக்களால்,தங்கள் நோய் தீர்க்க்கக் கையாளப்படும் பல தரப்பட்ட வைத்தியமுறைகள், சடங்குகள், மனித முன்னேற்றத்திற்கான பல வைத்திய முறைகளையம் ஆய்பவர்களின் கவனத்தை ஈர்ந்தது.

-~shamanism -மந்திரம்.பூசையாடல்கள்.உருவெடுத்தாடல்,சார்ந்தவை.

-வூடு- ( woodu) ஆபிரிக்கா:மந்திர தந்திர,உருவாடல்களை ஒத்தவை போன்ற பல தரப்பட்ட மருத்துவங்கள் பல நாடுகளின் முறைகளாகவிருந்தது.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்தர் வைத்திய முறை தமிழர்களின் ஆதி மருத்துவத்தின் சரித்திரத்தைக் கொண்டது. ஒரு மனிதனின் நோய் நொடிகள் அவனின் ஒட்டு மொத்த பிரச்சினையாகப் பார்க்கிறது.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று வாழ்ந்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.

சித்தவைத்தியத்தில் மனிதர்களின் மருந்தே உணவாகவும் உணவே மருந்தாகவும் கணக்கப்படுகிறது. இதைத் திருவள்ளுவரும்,

‘மருந்தென வேண்டவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணில்’ என்று சொல்லியிருக்கிறார்.

உதாரணமாக,ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பல உணவுப் பொருள்கள் மிளகு.பல்லாயிரம் வருடங்களாக பல நாடுகடந்த வாணிபத்தில் முக்கிய பொருட்களில் ஒன்றாகவிருந்த ‘மிளகு’என்பது, ‘யவனராணி’ என்று உரோம, கிரேக்க மக்களால் புகழப்பட்டிருக்கிறது.

‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்’ என்று எங்கள் முன்னோர்கள்.

தமிழர்களின் உணவுமுறை அவர்களின் உடல் உள நலத்திற்கான முக்கியத்துவத்தைச் சார்ந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்,

‘உடம்பார் அழியின் உயிரால் அழிவர்

திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை; வளர்க்கும் உபாயம் தெரிந்தே

உடம்பை எளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று திருமூலர் சொல்லியிருக்கிறார்.

சித்தர்களால் வளர்க்கப் பட்ட தமிழர் மருத்துவ முறையில் 4448 பிரிவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதில் மனிதர்களுக்கு 4000 முறைகளும் மிருகங்கள்,பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு 448 வகைகள் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த பிரபஞ்சத்தின் அதிபெருசக்திகளான,பஞ்சபூதங்களும் அத்தனை ஜீவராசிகளையும் பாதுகாக்கும் பணிகளைச் செய்கின்றன.அதேபோல் எங்கள் உடலிலுள்ள வாதம் பித்தம்,கபம்,என்பவை எங்கள் ஆராக்கிய உடல் நலத்திற்க உதவுகிறது.இவற்றின் ஒரு மனிதனின் வாழ்க்கை முறை நிர்ணயம் செய்கிறது. ஆதாவது, கண்டபடி குடித்தால் உடல்நிலையில் பித்த நிலை கூடி பல பிரச்சினைகளைக் கொண்டுவரும். அதன் இந்த சக்திகளில் கோளாறு வந்தால் உடல் நிலை பாதிக்கப் படும். வுhதபித்தசுரம்,வாத கப சுரம்,பித்த கபாசுரம்.

அறிஞர் கமில் ஷெவல்பில் தமிழரின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது

”.தமிழரின் கலாச்சாரத் தொன்மை மிகவும் தெளிவான நீட்சியைக் கொண்டது. வேறு எந்தக் கலாச்சாரத்திலிருந்தும்,பிரிந்தோ.திரிவுபட்டோ வரவில்லை.தமிழர் கலாச்சாரமும் மொழியும் சமஸ்கிருதம் வருவதற்கு முதல் வளர்ந்தன’ என்கிறார்.

சித்த வைத்தியம்,குடிநிர், உலர்த்திய மூலிகைகள்,சில உலோக வகைகள்,(மெட்டல்ஸ்) இரசவாதம் (அல்கமிக்) போன்றவறறால் தயாரிக்கப் படுகின்றது.

சித்த வைத்தியம்,மனிதர்களின் ஆரோக்கியம் வாதம்,பித்.தும்.கபம் என்ற அடி;படையில் அணுகப் படுகிறது.

மனிதர்களின் சுகநலங்களை உள் மருந்து அதாவது உடலுக்குள் செல்வது,வெளிமருத்துவங்கள்,தட்டல், இறுக்கல்,பிடித்தல்,முறுக்கல், கட்டல்,அழுத்தல் இழுத்தல்,மலத்துதல்,அசைத்தல்,போன்ற முறைகளில் குணப் படுத்துகிறார்கள்.

தமிழர்கள்pன் சித்த மருத்துவ பாரம்பரியம் மட்டுமல்லாது,ஆயள்வேத வைத்தியம்,யுனானி மருத்துவம்,அக்கியு பங்சர்.ஹோமியோபதி,போன்ற பல தரப்பட்ட மருத்துவ மானுடவியல் ஆய்வுகளிற்; காணப்படும் அரும் பெரும் தகவல்களை மேற்கத்திய வைத்தியர்கள் உள்வாங்கிக் கொண்டு அவரிடம் வரும் நோயாளிகளுக்கு அற்புதமான வைத்திய சேவைகளை முன்னெடுக்க முயல்கிறார்கள் என்பது ஓரளவு நடைமுறையாக வளர்கிறது. ஆத்துடன்,மருத்துவ மானிடக் கல்வி தந்த அறிவின் மூலம் எனது தமிழ் மக்களுக்கு நான் செய்த பணிகளையும் இந்த சிறிய உரையில் விளக்க முனைகிறேன்.

அவற்றை அறிய மானிடவில் விபரங்கள் தேவை. அதாவது,’மானுடவியல் என்பது விஞ்ஞான நெறிமுறைகளுடன்,மனித வளாச்சியின் பாரம்பரிய ,இனரீதியான தொன்மைசார்ந்த ஆய்வு,மொழிவளாச்சி,கலாச்சார பண்பாடுகள்’ என்பவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

டாக்டர் ஹியு (Dr. Hugh 1986) என்பவரின் கூற்றின்படி,’நோய்கள்.ஒரு மனிதனின் பாரம்பரியத்துடன் சம்பந்தப்பட்டது,அதாவது ஜெனடிக்ஸ்டனும் அத்துடன்,உணவுப் பழக்க வழக்கங்கள்,உடல் சம்பந்தப்பட்டது மட்டுமின்றி மன அழுத்தங்களுடன் சம்பந்தப் பட்டது என்கிறார்.

இந்த பிரபஞ்சத்தின் சனத் தொகை இவ்வருட ஆரம்பத்தின் கணக்கின்படி 790 கோடிகளாகும்.நூறு வருடங்களுக்கு முன் (1920ல்) ஏறத்தாள 200 கோடியாகவிருந்த சனத்தொகை நான்கு மடங்குக்கு நகர்கிறது.உலகின் ஐந்து கண்டங்களும் அவற்றில் உள்ள 195 நாடுகளில் 6500 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

ஆபிரிக்காவில் 54 நாடுகள், ஆசியாக் கண்டம்,48 நாடுகள்,ஐரோப்பிய நாடுகள் 44,தென்னமரிக்காவில் 37 நாடுகள்.அதைவிடப் பல சிறிய தீவுகள் இருக்கின்றன.இவர்களில் 99.99 விகிதமானவர்களுக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கின்றன.ஆனால்,இடம்,இனம், நிறம்,காலச்சார பாரம்பரியம்,வணக்க முறைகளும் ,அவர்கள் பேசும் மொழி போன்ற காரணங்களால் பன்முக வாழ்வியல்களைக் கொண்டிருக்கிறார்கள்

மனிதர்களின் வாழ்வியலின் பரிமாணங்களான,இனம்,பொருளாதாரம்,குடும்ப அமைப்பு,நம்பிக்கைகள் என்பன எவ்வளவு தூரம் அவர்களின் உடல் நலத்துடன் இணைந்திருக்கிறது என்பதை அண்மைக் காலத்தில் பிரித்தானியாவில் வெளியாகிய கொரோனா தாக்குதல் பற்றிய விபரங்களிலிருந்து தெரிய வரும்.இன்றுவரை உலகத்தில் உள்ள பல பாகங்களிலும்,5.65 இலட்சம் மக்கள் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்களான பங்களதேசியர், பாகிஸ்தானியர்,இந்தியர்,இலங்கையர் அத்துடன் கறுப்புஇன மக்கள் வெள்ளையின மக்களைவிடக் கூடுதலாக பிரித்தானிய நாட்டில்; பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

பிரித்தானியாவின் சனத்தொகை 2021ம் ஆண்டு கணிப்பின்படி 68.207 116.(கிட்டத்தட்ட 7 கோடிகளாகும்).இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 விகிதமாகும்.இதில் இந்தியர் 795.000,பாகிஸ்தானியர் 503.000.பங்களாதேசியர் கிட்டத்தட்ட 500.000 என்று கூறுப்பட்டிருக்கிறது.இலங்கைத் தமிழர் கிட்டத்தட்ட 100.000-200.000, என்று எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் சரியான தகவல்களில்லை..

பிரிட்டி~’மெடிகல் அஸே;hசியன்’ (பி.எம்.ஏ) 2013ம் ஆண்டில் பல வைத்தியர்கள்குழு ஆய்வின் படி பிரித்தானியாவின் பூர்வ குடிகளான வெள்ளையின மக்களை விட கூடிய அளவில்,இந்திய உப கண்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு இருதயநோய்களின் தாக்கமிருக்கிறது என்று சொல்லப் படுகிறது. இந்த ஆய்வுகள் 1990ம் ஆண்டுகளில் மருத்துவ அறிக்கைகளின் விபரத்தை ஆதாரமாக வைத்து ஆரம்பிக்கப் பட்டன.

1991ம் ஆண்டு பிரித்தானிய சனத்தொகையில் 6 விகிதத்தில் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்களிருந்தார்கள்.அதில் 36 விகிதமான ஆண்களும் 46 விகிதமான பெண்களும் இருதய நோய்களாலும், 20 விகிதமானவர்கள் நீரழிவு நோயால் துன்பப் படுவது தெரியப் பட்டது. அத்துடன்; உளநோய்கள். மது பாவிப்பது, புகை பிடிப்பது அதிகரிப்பதாகவும் சொல்லப் பட்டது.

மனிதர்களின் வாழ்க்கை நிலை பல்வித மாற்றங்களை எதிர் நோக்குவதால்; மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஆரம்பிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் பெரும்பாலானவர்கள் அந்த மாற்றங்களையுணர்ந்து தங்கள் பிரச்சினைகளுக்குக் காரணங்களைக் கண்டு அவைகளைத்; தீர்த்துக் கொள்ளாமல் வேறு பல காரணங்களைத் தன் நோயின் காரணியாக எடுத்துக் கொள்வதுமுண்டு.

பிரித்தானியாவில் வாழும் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த அதிக அளவான மக்கள் தங்கள் உடல் சார்ந்த நோயான நீரிழிவு போன்றவை,நாங்கள் முதற் பிறப்பில்; செய்த கர்மவினைகளின் பிரதிபலிப்பு என்று நம்புவதுமுண்டு, என்பது அவர்களுடன் நடந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது.

எனவே, ஒரு நோய் பற்றிய கருத்துக்களின் விளக்கத்தை,நோயாளியின் நம்பிக்கைகள் சார்ந்து புரிந்து கொள்வது அவசியம். மேற்கு நாடுகளில் வாழும் இந்திய உபகண்டத்தைச் சோந்த மக்களின் உடல் உள நலம் மேன்பட,அவர்களின் நோய் தீர்க்கும் வைத்தியருக்குத் மருத்துவ மானிடவியல் பற்றிய அறிவு பயனளிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில்,உலகத்தில் பெரும்பான்மை மக்களைக் குணமாக்கும் மேற்கத்திய வைத்திய முறையைத் தெரிந்து கொள்வதும் மானிட மருத்துவ வளர்ச்சியைப் பல தளங்களில் அணுக உதவும்.

பிரித்தானிய பாரம்பரிய வைத்திய முறைகள் உலகிலுள்ள மற்ற நாடுகளில் பழம் காலத்தில் இருந்ததுபோல். மூலிகை சார்ந்து இருந்தது. அதைத் தெரிந்த உறவினர்களும் சினேகிதர்களும் நோயாளிக்குத் தேவையான சிகிச்சைகளைச் செய்தார்கள். உலகில் எல்லா நாடுகளிலும் மூலிகை பற்றிய அறிவில்,மூலிகைகளின் பல தரப்பட்ட செயற்பாடுகளையும் தெரிந்திருந்தார்கள்.

மூலிகை மருந்துகள் பற்றி 5.000 வருடங்களுக்கு முன்னரே மக்கள் பல நாடுகளில் தங்கள் கலாச்சாரம் தழுவிய முறையில் அறிந்திருக்கிறார்கள்.(உதாரணம்: தேயிலையின் பாவிப்பும் சைனாநாடும்).

தேயிலை: கி.மு.2737ம் ஆண்டகால கட்டத்திலேயே சீன சக்கரவர்த்தியின் பாவனையிலிருந்திருக்கிறது.

-ஓப்பியம் என்னும் அபின்: தொல்லியல் அகழாய்வில் ஆய்வில்,நியோலித்திக் என்னும் கற்காலமான கி.மு.5000 ஆண்டுகளாக ,சுமெரியர்,அசிரியர்,எஜிப்து,,இந்தியா.மினோன்,கிரேக்,உரோம்,பாரசீகம்,அரேபிய நாடுகளில் அபின் என்பது.மக்களின் பாவனையிலிருந்திருக்கிறது என்று தெரிகிறது.இது களைப்பான நேரங்களில் ஓய்வெடுக்கவும், சடங்குகளில் மனத்தை ஒருங்கு படுத்தி ட்ரான்ஸ் என்ற,மயக்க நிகை;குக் கொண்டுவரும் மூலிகையாகவும் பயன் படுத்தப் பட்டிருக்கிறதது.

-கனபிஸ் என்று சொல்லப்படும் கஞ்சாவின் சரித்திரமும் மிகப் பழமைவாய்ந்தது.8000 வருடங்களுக்கு முன் ஜப்பானில் மன தத்துவப் பொருள் என்ற உணவு முறையில் பாவிக்கப்பட்டதாகத் தகவல் சொல்கிறது. சணல் செடிவகையாகச் சீனாவில் கற்காலத்தில் வளர்க்கப் பட்ட பல பாவனைகளக்கும் பயன்படத்தப் பட்டிருக்கிறது.பின்னர் வந்த கால கட்டங்களில்,கஞ்சா புகைத்தல் என்பது சடங்குகளில் இருந்திருக்கிறது.

இப்படிப் பல சரித்திரங்களைக் கொண்ட கஞ்சா,தற்போது,மக்களுக்குப் பல பக்க விளைவுகள் தரும் போதை மருந்தாகக் கணிக்கப்பட்டுப் பல நாடுகளிற் தடைசெய்யப் பட்டாலும் நெதர்லாண்ட் போன்ற நாடுகளில் சட்டபூர்வமாகப் பாவிக்கு அனுமதிக்கப் பட்டிருக்கிறது.

ஆசிய,ஆபிரிக்க,அமெரிக்க பூர்வீக குடிகள்மாதிரியே,பிரித்தானியாவிலும் மூலிகை சார்ந்த வைத்திய நம்பிக்கைகள் ‘கடவுள்’ நம்பிக்கை சார்ந்த பல சடங்குகளையும், மந்திரம், மாயம்,சாமியால்,(உருவாடல்), போன்ற shamanisa வணக்கமுறைகளையும் இணைத்திருந்தன.

கி.மு.55 ஆண்டளவில் யூலியஸ்ஸீசர் தலைமையில் உரோமர் பிரித்தானியாவுக்கு வந்தபோது.செல்டிக் கலாச்சாரம் சார்ந்த ட்ருயிட்ஸ் என்ற குருமார் தலைமையிலான வழிபாட்டு முறையில் பலியிடல்,நரமாமிச உணவு,என்பன வழக்கத்தில் இருந்தன என்ற அகழ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவ மதம் ஐரோப்பிய நாடுகளில பரவலாக ஆளுமை செலுத்திய காலத்தில்,கத்தோலிக்க சமயத்துறவிகள்,மக்களுக்கு உதவும் 300 தொகையுள்ள மூலிகைகள் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள் என்ற ஆய்வுமள்ளது. ஆதிகாலத்திரிந்து. 14-15ம் நூற்றாண்டவரை பெண்களும் மூலிகை,மாய,மந்திர வைத்தியம் செய்திருக்கிறார்கள்.

கிறிஸ்தவ சமய ஆதிக்க காலத்தில்.மருத்துவ அறிவு பெண்கள் சூனியக்காரிகளாகக குற்றம் சாட்டப்பட்டு,1580-1630 அண்டு கால கட்டத்தில் ஐரோப்பா,அமெரிக்க நாடுகளில் கொலை செய்யப் பட்டார்கள் பெரும்பாலோர் உயிருடன் எரிக்கப் பட்டார்கள்.சில ஆண்களும் சூனியகாரர்களாக அடையாளம் காணப் பட்டு எரிக்கப் பட்டார்கள்.

கி; பி; 10-11ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய வைத்தியமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

மேற்கத்திய வைத்தியமுறையின் சரித்திரத்தை, பல ஆய்வுகளில் தேடலாம். திரு ஜியோவானி சில்வானோ என்பவரின்(2021 நொவம்பர்) ‘பிறிவ் ஹிஸ்டொரி ஒவ் வெஸ்டேர்ன் மெடிசின்’ என்ற கட்டுரையிலிருந்து எடுத்த சில தகவல்களை இங்கு பதிகிறேன்.

விஞ்ஞானம், தொழில் நுட்ப உதவிகளுடன் மருத்துவமும் கிட்டத்தட்ட இரண்டுஆயிரம் வருடங்களாக மேலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கத்திய வைத்தியத்தின் தந்தையான ஹிப்போகிரட்ஸ்-கி.மு.460லிருந்து கி.மு 370ம் ஆண்டுவரை வாழ்ந்தார்.அவரின் மறைவுக்குப் பின்;.அவரின் வைத்தியம் பற்றிய குறிப்புகள் சொல்லும்;, அதாவது,ஒரு மனிதனின் சுகநலம் அவனுடைய, குருதி,மஞ்சள் பித்தநீர்,(யெலோ பைல்) கறுப்பு பித்தநீர் (ப்லாக் பைல்),கபம்(ப்லம்) என்பற்றில் உண்டாகும் மாற்றங்களுடன் சம்பந்தப்பட்டவை என்பதை அவரின் மாணவர்கள் மருத்துவ உலகுக்குப் பரப்பினார்கள். குலோடியஸ் கெலன் என்பவர் கி.பி 129-216 கால கட்டத்தில்.ஹிப்போகிரட்ஸ் வழிமுறையை முன்னெடுத்தார்.

நோய்களையறியவும் சிகிச்சை செய்யவும் ஆனட்டமி,பிசியோலஜி,பதலோஜி என்னும் அதாவது நோய்க்குணநுல் அறிவு,நோய்நீக்கல் துறை என்ற தெரப்பிகள்.சத்திரசிகிச்சை.என்று வைத்திய சிகிச்சைமுறைகள் பயிற்றப்படுகின்றன. .

கி.பி.பத்தாம் ஆண்டு கால கட்டத்தில்,மத்திய தரைக்கடல் நாடுகள்,மேற்காசிய நாடுகள் என்பன விஞ்ஞானம், மருத்துவத் துறையில்வளர்ச்சியடைந்திருந்தது. அரேபிய வைத்திய முறையில், அரேபிய,இந்திய,சைனா நாடுகளிலுள்ள மருத்துவ நெறிமுறைகள் கலந்திருந்தன.அந்த மருத்தவ வளர்ச்சி ஐரோப்பாவையும் தொட்டது.

அவை பற்றிய நூல் ‘ குலொடியஸ் க்கலன்’ என்பரால் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. ஆல்-றாshiஸ் என்பவர் எழுதிய,’த கொம்பிரயன்சிவ் புக் ஒன் மெடிசின்’என்ற நூல்.அவர் கி.பி 925ல் இறந்தபின் லத்தின் மொழியில் மொழிபெயர்கப்பட்டு ஐரொப்பாவில் பரவலாகத் தெரியப் பட்டது.

மருத்துவத் துறையில் மிகவும் முக்கியமான நூலாகக் கருதப்பட்ட ‘கனொன் ஒவ் மெடிசின்’ என்ற நூல் 1025ல் எழுதப்பட்டு,17ம் நூற்றாண்டுவரை பாவிக்கப் பட்டது. மருத்துவம் பன்முகமாக வளரத் தொடங்கியது.

இத்தாலியில் 820 வைத்தியசாலைகள் கட்டப்பட்டன.

லண்டனிலுள்ள செயின்ட் பார்தலோமியஸ் வைத்தியசாலை 1123 கட்டப்பட்டது.

1140ல் மருத்துவம் சார்ந்த கட்டுப்பாடுகள்,அதாவது பதிவு செய்யப் பட்ட மருத்துவர் மட்டுமே மருத்துவம் செய்யலாம் போன்றவற்றை,’இரண்டாவது றொஜர்’என்றழைக்கப்பட்ட சிசிலி நாட்டு மன்னர் கொண்டு வந்தார்.

பிரேதங்களை வெட்டிப் பார்த்து மனித உடல்களின் பன்முகத் தன்மைகளையறியும் படிப்பும் ஆரம்பித்தது.1316ல் மொண்டினோ டி லியுச்சி என்பவர் ‘அனத்தோமியா கோர்பிஸ் ஹியுமானியா’ என்ற நூலை எழுதினார்.

1423ல் முதலாவது, பிலேக் நோயாளிகளைத் தனிமைப் படுத்தும்,’லsharatoஎன்றழைக்கப்பட்ட வைத்தியசாலை வெனிஸ், ப்லோறன்ஸ் போன்ற நகரங்களில் கட்டுப்பட்டன.

மேற்கத்திய மருத்துவத்தின் பல துறை வளர்ச்சிகள் தொடர்ந்தன.

இன்று,நோய்களை உண்டாக்கும் வைரஸ்,பக்டீரியா பற்றியும், தொற்று நோய்கள் வந்தால் அதைத் தடுக்க அன்டிபயயோட்டிக்ஸ் பல வந்து விட்டன.

பல தரப் பட்ட தொற்று நோய்களும் அதாவது 1918-19ம் ஆண்டுகளில் வந்தஸ்பானிஸ் ப்ளு போன்றவை பல கோடி மக்களின் உயிரைப் பலி எடுத்து விட்டது.25-50 இலட்சம் மக்கள் இறந்தார்கள்.

அலெக்சாண்டர் ப்லேமிங் பெனிசிலின் அன்டிபயயோட்டிக்ஸை 1928ம் ஆண்டில் கண்டு பிடித்தார் இன்று 150 அன்டிபயோட்டிக்ஸ் வகைகள் வந்திருக்கின்றன.

நோய்களும் புதிதாக வந்து கொண்டிருக்கின்றன.1981ம் ஆண்டு வந்த எய்ட்ஸ் மாதிரி பல விதத்தில் பெருகுகின்றன’.எயிட்ஸ்நோயில் இதுவரை இறந்தவர்கள் 33.இலட்சம் மக்கள்.

2014ல் ஆபிரிக்காவில்’இபோலா’ நோய் பரவிப் பலர் இறந்தார்கள். கோரோனா பல்வித பிறவி எடுத்து மக்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டு தொடக்கம் இதுவரை பல்வித,நிபுணத்துவமான சாதனங்களும் நோயைக் கண்டுபிடிப்பதற்காகப்; பெருகிவிட்டன.இருதயம் எப்படி வேலை செய்கிறது என்ற கண்டுபடிக்கப் பட்ட ஈ,சி,ஜி சாதனம் இன்ற கைக்கடிகாரம்மாதிரிக் கையில் கட்டிக் கொண்டு நாடியை அளவிட உதவுகிறது.

இப்படியான அடிப்படைத் தகவல்களைத் தெரிதலின்மூலம் இன்றைய மருத்துவ நிலையை ஆராய முயற்சி செய்யலாம். இன்று உலகம், கடந்த நூற்றூண்டை விடப் பன் மடங்கு பல துறைகளிலும் விருத்தியடைந்ததுபோல் பின்னடைவும் அடைந்திருக்கிறது.

உடல் நோய்கள் மட்டுமல்லாமல் மன நோய்களுக்கும் தீர்வு காணப் பல துறைகளில் வைத்திய அறிவு வளர்கிறது. மருத்துவம் மட்டுமல்லாது, ஆண்களும் பெண்களும் தங்கள் அழகையும் மிருகையும் மேம்படுத்து பல மருத்தவ வழிகளை நாடுகிறார்கள்.

தங்களைத் தாங்களே அடையாளம் காணமுடியாத அளவு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யுமளவுக்கு மனித மனம் பல வழிகளிலும் வைத்திய வளர்ச்சியைப் பயன்படுத்தி மகிழ்வு தேடுகிறது. அதே நேரம், இன்று,மனித நலத்தைப் பாதிக்கப் பல விடயங்கள் முன்னெடுக்கப் படுகின்றன.

மக்களின் வாழ்வாதாரமான இயற்கை வளங்கள் அழிக்கப் படுகின்றன. நிலவளம் அதிகப்படியான பசளை வகைகளால் மாசுபடுத்தப் பட்ட விட்டது.நீர்வளம் மனிதர்களின் கழிவுகளால் களங்கமாகிவிட்டது. உயிர்நாடியான காற்று அதிகப்படியான மின்சாரபாவிப்பு விகிதம்) போன்றவற்றால் மாசுபடுத்தப்பட்டுவிட்டது (சி. ஓ.டூ-71 விகிதம்).

உணவுகள் பாரம்பரிய முறைகளைத் தாண்டி,பதமாக்கிய டேக் அவேய் நிலையில் அவசர தேவையாக மாறிவிட்டது. மனித உறவுகள் சமூக ஊடகங்களுக்குள் ஒடுங்கி விட்டன.இவை அத்தனையும் மனிதனின் சுகவாழ்வைப் பல வழிகளில் பாதிக்கின்றன.

இலாபத்தின் அடிப்படையில் கிளைபரப்பும் பல்வித மேற்கத்திய மருத்துவ முறைகளைத் தாண்டி,ஒட்டு மொத்த மனித இனத்தின் நலத்தையும் மேம்படுத்த பழைய. புதிய மருத்துவ முறைகளின் மூலம் அணுகவேண்டும என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப் பட்டிருக்கிறோம்.;.

3.12.1967ம் ஆண்டு மனிதனின் இருதயத்தையே இன்னொருத்தருக்கு டாக்டர் கிறிஸ்டியன் பார்னார்ட் மாற்றினார்.

11.1.2022ல் ஜெனட்டிக்கலி மோடிவைட் பன்றியின் இருதயத்தை மனிதனுக்கு அமெரிக்காவில் பொருத்தும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.

ஆனால் மனிதனின் இருதயம் எதைத் தேடுகிறது என்பதை,இன்று பெருகிவரும்,ஒரு வருடத்திற்கு இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர்ஸ் வருமானத்தைத் தரும் ஆயள்வேத மருத்துவ முறை பறைசாற்றுகிறது. மனித இனத்தின் மேன்மைக்கு உதவிய பாரம்பரியத்தைத் தேட மக்கள் முனைந்து விட்டார்கள். ஆயள்வேத வைத்தியம்-அதாவது ‘வாழ்க்கைக்கான அறிவு’ அல்லது’வாழக்கை அறிவியல்’என்ற சொல்லப்படும் மருத்துவ முறை குறைந்தது 5000 வருட சரித்திரத்தைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்திய பாரம்பரை வைத்திய முறைகளை மேற்கு நாட்டார்,அதிகம் தெரிந்திருக்கவில்லை. மேற்கு மருத்துவ நெறிகள் சாராத மற்றவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவில்லை.

ஆனால் மாசிமாதம் 1968ம் ஆண்டு பிரித்தானியா மட்டுமல்லாமல், உலகமே வியந்த பாராட்டப் பட்டுக் கொண்டிருந்த ‘பீட்டில்ஸ்’ என்ற பெயரைக் கொண்ட பாடகக் குழுவினர் தங்களின் மனச் சுமையை நிவர்த்திக்குத் தியான வழியைத் தேடி இந்தியா சென்றார்கள்.அதன்பின் பிரித்தானிய இளம் தலைமுறையினரின் பார்வை இந்திய பாரம்பரிய மருத்துவத் முறையின்; பக்கம் திரும்பியது.

அத்துடன் ஐம்பதாம் ஆண்டுகளிலிருந்து பெருவாரியான இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரித்தானியாவில் குடியேறத் தொடங்கித் தங்களுடன் தங்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கொண்டு வந்திருந்தார்கள்.அதைத் தொடர்ந்து,சைவ உணவு, யோகாசனம் பற்றிய ஒரு பரவலான தெரிதல் ஆரம்பித்தது.இன்று பிரித்தானியாவில் முற்று முழுதாகச் சைவ உணவு உண்பவர்களின் தொகை 11 விகிதமாகும்.2019ம் ஆண்டு கணிப்பின்படி யோகாசனம் செய்பவர்களின் தொகை 500.000 என்று தெரிகிறது.

கடந்த ஐம்பது வருடகாலத்தில் மேற்கத்தியரும் இந்திய,சீன, ஹோமியோபதி, யுனானி மருந்துகளை நாடத் தொடங்கி விட்டார்கள். அதே மாதிரி.மேற்கு நாடுகளுக்கு வந்த இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த மக்களின் நோய்களையும் அவர்களுக்கான சிகிச்சை முறைகளையும் ஆராயவேண்டிய நிர்ப்பந்தம் லண்டன் போன்ற இடங்களில் தொடங்கியது.

இவ்விடத்தில்,இந்திய உபகண்டத்திலிருந்து பிரித்தானியாவுக்கு

வந்த மக்களின் உடல் உள நலத்திற்குப் பயன் படும் விதத்தில் மேற்கொண்ட சில ஆய்வுகளை.ஆவணப் படுத்த விரும்புகிறேன். இக்கட்டுரைகள் சில, மேற்கு லண்டன் பொதுச் சகாதார வைத்திய ஆணையுரிமை அமைப்பில் ஆசிய நாட்டு மக்கள் இருதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதைத தடுக்கும் பொது சுகாதார அதிகாரியாக நான்; பணிபுரிந்தபோது எழுதப்பட்டது.

இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த மக்களுடன் பணி புரியத் தொடங்கியது,மருத்துவ மானுடவியல் என்ற நெறிமுறைக் கல்வியை ஆரம்பிப்பதற்கு உந்துதலாக இருந்தது.

1.மருத்துவ மானிடவியல் என்றால் என்ன என்பதைப் பற்றி ‘தோட் கோ’ என்ற பத்திரிரிகையில் எலிஸபெத் லுயிஸ் (21.9.2018) என்பவர் எழுதும்போது,மருத்துவ மானிடவியல் என்பது,’மாந்தர்களின் சுகாதாரம்,வருத்தங்கள்,அவர்களின் கலாச்சாரப் பின்னணி,நம்பிக்கைகள் என்வற்றுடன் தொடர்பு கொண்டவை.அவற்றை மக்களின்,சமுகக் கோட்பாடுகள்.சமய நம்பிக்கைகள்,அரசியல் சிந்தனைகள்;,ஒரு சமுகத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்களும் சரித்திரப் பினனணி; அத்துடன் பொருளாதாரப் பின்னணி, என்பவற்றால் நிர்ணயிக்கின்றன’என்று ஆரம்பிக்கிறார்.

மானுட மருத்துவம் சார்ந்த இந்த அமர்வில் நான் மேற்கோள் காட்டும் எனது சில கட்டுரைகள் குழந்தை நல அதிகாரியாகக் கிழக்கு லண்டன் பொது வைத்திய அமைப்பிலிருந்தபோது, அந்தப் பிரதேசத்தில் வாழும் இலங்கை இந்தியர்களின் பாரம்பரிய உணவு முறை போன்ற பதிவுகளையும் உள்ளடக்கியதாகும்.பல கட்டுரைகள் மருத்துவ மானிடவியல் பட்டப்படிப்பு சார்ந்த ஆய்வுகளாகும்.கிட்டத்தட்ட 12 கட்டுரைகள்,இவை ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை.

தமிழில் ‘தாயும் சேயும், ‘உங்கள் உடல் உள பாலியல் நலம் பற்றி’என்ற இரு மருத்துவ நுல்களை எழுதியிருக்கிறேன்.அத்துடன்,தமிழர்களின் மருத்துவம் சார்ந்த நம்பிக்கைகள் அவர்களின் வழிபாட்டுடன் இணைந்தது என்று கருதப்படுவதால், ‘தமிழ்க் கடவுள் வரலாறும் தத்துவமும்’ என்ற ஆய்வு நூலை எழுதியிருக்கிறேன்.

என்னுடைய கட்டுரைகளும் நூல்களும் பற்றிச் சில வார்த்தைகள்.

1.Food and heart health-City of Westminster College-1993.( மக்களின் உணவு முறைகளும் ஆரொக்கியமான இருதயமும்))

2.Asian life style and Diabetes Malitus-1994-(ஆசிய நாட்டு மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் டையாபெட்டஸ் மெலிடஸ்) சலரோகம். இருண்டாவது முறையானது-

3.Dietary habits and Coronary heart heart disease-1993 ( உணவுப் பழக்க வழக்கங்களும் இருதய நோயும்).

4.’Asian communities in Brent-The Project report,1993-94

(1).ஆசிய நாட்டு மக்களின் காலச்சார,பொருளாதார,சமய,ஆன்மீக கட்டுமானங்களைத் தெரிந்து கொள்ளுதல்,

(2).அவர்கள்ன உடல உள நலத்தை மேம்படுத்த,அவர்கள் குடும்ப அமைப்பு,சுகநலம் பற்றிய நம்பிக்கைகளை அறிந்து கொள்ளுதல்.

(3).அரச அமைப்புகள், சமூக அமைப்புகளுடன் சேர்ந்து முன்னெடுக்கும் செயற்பாடுகள்.

-Specialists-Cardiac rehabilitation.

-Informations of resources in Asian communities.

– community Dietician

-Interpreting service

-Alcohol Unit

4. What do we mean by Racializing of bodies and what are range of possibilities in terms of which bodies may be racialized ?( racialized body in medical settings ) 1994

( உடல்களை இனமயமாக்குவது என்றால் என்ன? எந்த அமைப்பகளின் அடிப்படையில் எந்த வகையான சாத்தியக் கூறுகள் உள்ளன?( மருத்துவ அமைப்பகளில் இனமயமாக்கப் பட்ட உடல்கள்)

அடிமைமுறை,(12 கோடி மக்கள் ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்கா

கோடி இடையில் இறந்தார்கள்).

-காலனித்துவ அதிகாரம், (56 கோடி மக்கள் -1600ம் ஆண்டு கால கட்டத்தில்: -செயற்கையாகக் கொடுக்கப் பட்ட தொற்று வருத்தங்கள் -உதாரணம்:சின்ன அம்மை-இந்த வருத்தத்தைத் தொற்றுக் கிருமிகள் உள்ள போர்வைகளை அப்பாவி சிவப்பு இந்திய மக்களுக்குக் கொடுத்துப் பல்லாயிரம் மக்களைக் காலனித்துவ வாதிகள் கொலை செய்தார்கள் ). ஆங்கில ஆதிக்கவாதிகள் பல தடவைகள் வந்த பட்டினியால் இந்திய மக்கள் இறக்கக் காரணமாகவிரந்தார்கள்(சரித்திரக் குறிப்புக்களைப் பார்க்கவும்),உதாரணம்:

1871-1921 பஞ்சாபில் உண்டான பஞ்சம்.

Some worst British Indian Famines: 800,000 died in the North West Provinces, Punjab, and Rajasthan in 1837–1838; perhaps 2 million in the same region in 1860–1861; nearly 1 million in different areas in 1866–67; 4.3 million in widely spread areas in 1876–1878, an additional 1.2 million in the North West Provinces and Kashmir in 1877–1878; and, worst of all, over 5 million in a famine that affected a large population of India in 1896–1897. In 1899–1900 more than 1 million were thought to have died. 5 million during world war 1.

16.17ம் நூற்றாண்டுகளில் குஜராத்தின் பட்டினி 3இலட்சம் மக்கள் இறந்தார்கள்.

மருத்துவ ஆய்வுகள்,(சி.ஐ.ஏ -எல் எஸ்.டி,Brain washing ,,சைக்கோஅக்டிவ் ட்றக்ஸ்,electonics, ,ஹிப்னோசிஸிஸ்,சித்திரவதை) போன்றவற்றைச் செய்தார்கள்.

இனம் சார்ந்த கணிப்புகள் (யூத மக்களும்- யோசேவ மெங்கிள் என்ற Hitlers’ வைத்தியரும் செய்த கொடுமையான மருத்துவ பரிசோதனைகள்.

வெனிரல் நோய்களும்,கறுப்பு மக்களும் எயிட்ஸ் நோயும்.,கறுப்பு பெண்களும் உடறுப்புகளும.

6. Tamil Refugees and Mental Health.994 ( தமிழ் அகதிகளும் அவர்களின் மனநலமும்)

7. Ethnic minority communities and their heart health-(Cultural understanding of Health) 1995. . பிரித்தானியாவில் இனசிறுபான்மை சமூகங்கள் மற்றும் அவர்களின் இதய ஆரோக்கியமும்.(சுகாதார கலாச்சார புரிதல்)

8.Is agency the last resort inevitably determine by the structure in some form? -Regular or Regulated (class, caste) 1995.

பிரித்தானிய வர்க்க முறை. இந்திய சாதி அமைப்பு.

9.Consider the application of Psychoanalysis in non Western Culture-1996

(மேற்கத்திய கலாச்சாரமல்லாத உளப் பகுப்பாய்வின் பயன்பாட்டைக் கவனியுங்கள்)- ப்ராய்ட தியறி ஒவ் நியுறோசிஸ், தனித்துவ சமுதாயம்,ஒன்றுபட்ட குடும்பம், சைக்கோ அனலிஸிஸ்ட்,கடவுளும் சடங்குகளும் பற்றிய ஆய்வுகள் பற்றியவை.

10.Shamanism and healing,women as shamans,healers (diviners and witchers)

1996.

(shamanism மற்றும் குணப்படுத்தும்-பெண்கள் ~Women healers,,(டிவினியர்கள்),மந்திரவாதிகள்)-shamaனின் நம்பிக்கையின்படி உலகத்திலுள்ள எல்லாவற்றிலும் ஒருவித சத்தியுள்ளது.வீடு,ஊர்,காணி பூமி.பூசாரிகள்:பேயாடல்,சாமியாடல் பற்றிய தகவல்கள்.

பெண்களின் மருத்துவம்:மலினோஸ்கி: மேற்கு நாட்டில் பெண்கள் ஹீலர்ஸாக இருந்த சரித்திரம்.பாதிரிகளுக்குப் போட்டியாகப் பாhக்கப் பட்டார்ர்கள்.அத்துடன் மேற்கத்திய மருத்துவமும் வளர்ந்தது.

11.The belief and practices in terms of fertility and infant feeding of the Tamils in London-1996.

கருவுறுதல் மற்றும்,குழந்தை உணவளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்,லண்டனிலுள்ள தமிழர்களின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள்.

12. South Indians and Sri Lankan Food Exhibition. – தென்னிந்திய மற்றும் இலங்கை உணவுக் கண்காட்சி.

13.தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்- திரு.கே. பழனிசாமி-கோயம்புத்தூர்-இந்தியா-2000

14.தாயும் சேயும்-மீரா பதிப்பகம் கொழும்பு,இலங்கை-2002

15. உங்கள் உடல் உள பாலியல் நலம் பற்றி- மீரா பதிப்பகம்.கொழும்பு,இலங்கை-2003.

பெரும்பாலான இந்த நூல்கள் மருத்துவ மானிடவியல்க் கல்வியின் துணையுடன் எழுதப் பட்டவை. இந்த ஆய்வுகளாற் கிடைத்த பயனால், பிரித்தானியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் பல தரப் பட்ட வைத்தியத் தேவைகளையம் ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.அவர்களின் வைத்திய தேவைகளை கலாச்சாரம் சார்ந்த முறையில் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறைக்கு எனது ஆய்வுகள் உதவின.

அதாவது அவற்றை, மருத்துவ மாணவர்கள், குடும்ப வைத்தியர்களாகப் பயிற்சி பெறுபவர்கள்,போன்றோருக்கு விளக்கப் பல கருத்தரங்கள் வைத்து விளக்குவது எனது உத்தியோகத்தில் ஒருபகுதியாகவிருந்தது.

அத்துடன் பொது மக்களின் பொது வைத்திய சேவைகளைப் பன்முறையிலும் தொடரும், சுகாதாரப் பார்வையாளர்கள் -(ஹெல்த் விசிட்டர்ஸ்)’மாவட்ட செவிலியர்கள்,(டிஸ்ட்ரிக் நேர்ஸஸ்),பள்ளி செவிலியர்கள் (ஸ்கூல் நேர்ஸஸ்) அவர்களுக்கும் கருத்தரங்குகள் வைத்தேன்.

பொதுமக்களின் அமைப்புகளில் வேலை செய்யும் அவ்விடம் சார்ந்த அதாவது சமூக ஊழியர்களுக்கும்; செமினார்கள் வைத்தேன்.

அத்துடன் சமூகக் குழுக்களின் ஒன்று கூடல்களில் கலந்துகொண்டு பல தரப்பட்ட மக்கள் நலம் பற்றிய விளக்கங்களைச் செய்தேன்.( தேகாப்பியாசம்.(Dance for Heart) , உணவுகள் சார்ந்த கண்காட்சி, சமையல் வகைகளின் கண்காட்சி,இரத்த அழுத்தத்தைச் சோதனை செய்தல் போன்றவை சிலவாகும்)

இவற்றைத் தொடர மேற்கத்திய ஆய்வு முறைகளையும் தெரிய வேண்டும்:

அமெரிக்காவில் மானுடவியல் பற்றிய அணுகுமுறைகள் 1902ம் ஆண்டுகால கட்டத்திலேயெ ஆரம்பிக்கப் பட்டன.ஒரு காலத்தில் வெள்ளையினத்தாரின் பார்வையிற்தான் அவர்கள் அடிமை கொண்டிருந்த மக்களின் வாழ்வியல் நோக்கப் பட்டது.ஆனால் பல தரப்பட்ட மருத்துவ முறைகள்,புதிதாக விரிந்து கொண்டிருந்த சிந்தன வளர்ச்சி பல புதிய பரிமாணங்களில் மக்களின் வாழ்வியலைப் பன்முகப் பரிசீலிக்க ஆரம்பித்தது.

மானுடவியல் என்பது மாந்தர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்வது.இதை கலாச்சாரம்,மொழி,அகழ்வாய்வுகள்,என்பனவற்றின் உதவியுடன் செய்யலாம்.

.சமூகவியல் என்பது மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அதாவது,கல்விநிலை,அரசியல் சித்தாங்கள்,சமயக்கோட்பாடுகள்,அவற்றை முன்னெடுக்கும் அமைப்புக்கள்,இவற்றில் ஒரு நாட்டைச்சேர்ந்த பல்வேறு இன, குழக்களின் நிலைப்பாடுகள்,அதாவது சாதி,மத, இன,நிற வர்க்க வித்தியாசங்கள் என்ன பற்றிய ஆய்வாகும்.

மானுடவியலாளர்கள் ஒரு சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கவனமாக ஆராய்வு செய்யும்போது,மற்றர்களால் புரிந்து கொள்ள முடியாத பல விடயங்களைப் பார்க்கிறார்கள்.அதிலும் மருத்துவ மானுடவியலார்கள்,மருத்துவம் சம்பந்தமான மக்களின் நம்பிக்கைகளையம் நடைமுறைகளையும் உன்னித்து ஆய்வு செயயும்போத அதன் பூர்வீகம் எத்தனையோ ஆண்டுகளையோ அல்லது பல்லாண்டுத் தொன்மத்தைப் பின்னணியாகக் கொண்டிருப்பதை விளக்கியிருக்கிறார்கள்.

இதில்,

-என்ன வென்று ஒரு குறிப்பிட்டஇன மக்களும் அவர்களும் கலாச்சாரமும் மருத்துவம் சம்பந்தமான பன்முறைத் தன்மைகளைப் பார்க்கும் விதம், உதாரணராக, உலகில் பல்வேறு இனமக்களும் அவர்களுக்கென்றே தனிப்பட்ட உணவு முறைகளைப் பின்பற்றுpகிறார்கள்.

– மேற்கத்திய வைத்திய முறைகளையும் வைத்தியரின்; நோய் கண்டறிதலையும் எப்படிப் பார்க்கிறார்கள்.? உதாரணம் மேற்கத்திய வைத்தியர் பல பரிசோதனைகள் மூலம் ஒரு நோயைக் கண்டு பிடிக்கிறார் (இரத்தப் பரிசோதனை,எக்ஸ்றெய்,ஸ்கானினங்,முதலானவை

-நோயைப் பற்றி,மேற்கத்தியர் வைத்தியர்கள், பூசாரிகள் (சாமன்ஸ்) பூர்வீக அல்லது நாட்டு வைத்தியர்கள் போன்றோரின் செயற்பாடுகள் எப்படியானவை.

-என்னவென்று ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட நோய்பற்றிய பெரிய தாக்க மில்லாமலும் இன்னுமொரு சாரார் அதிகப்படியான தாக்கத்திற்கும் உள்ளாகிறார்கள்? (உதாரணம் கான்ஸர்-மேற்கத்திய, கிழக்கு தேச மக்கள்)

-வாழக்கை முறையில் சந்தோசமாவும் திருப்தியாகவும் இருப்பதற்கும் மன அழுத்தத் வருவதற்கும் உள்ள காரணங்கள் என்ன? (உதாரணமாக மிக அளவிலான ஆசியப் பெண்களின் மனஅழுத்தப் பிரச்சினை)

– என்ன வென்று சில வருத்தங்கள் சில கலாச்சாரங்களில் மறைக்கப்படவேண்டியவையாகவும் சில வருத்தங்கள் மிகவும் கவனமாகக் கவனிக்கப் படவேண்டியதாகவும் கருதப் படகின்றன (முக்கியமாக பெண்கள் மன நோய், ஆண்கள் இருதய வருத்தம?)

2. மருத்துவ மானிடவியல் என்ற இந்த முக்கியமான ஆய்வு எப்படி? யாரால் ஆரம்பிக்கப் பட்டது என்று தெரிந்து கொள்வது. மருத்துவ மானுடவியல் சிந்தாந்தந்தங்களைப் புரிந்து மிகவும் உதவியாகவிருக்கும்.

மானுடவியலாளர்களுக்கு,கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த மக்களின் வித்தியாசமான நம்பிக்கைகளும் அவற்றில் முக்கியமக நோய நொடி பற்றிய நம்பிக்கைகளும் பாரம்பரிய வைத்திய முறைகளும் வியப்பையளித்தன.அதனால் மருத்துவ மானுடவியலைப் பிரத்தியேகமாக. ஆய்வு செய்யத் தொடங்கினார்கள.;

இனவியல் சார்ந்த முறையில் ஒரே விடயத்தைப் பல இனங்களிடையேயும் அந்த மக்களுடன் பலகாலம் வாழ்ந்து பழகி ஆய்வு செய்தார்கள்.சில ஆய்வாளர்கள் பல நாடுகளிலும் ஒரே விடயம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

-உதாரணமாக ஒரு நாட்டில் ஒரே வருத்தத்தின் தாக்கம் எப்படிப் பல தரப்பட மக்களிடம் காணப்படுகிறது? உதாரணமாகப் பிரித்தானியாவில் இருதய நோய்)

-அதே நோயின் தாக்கம் உலகத்தின் பல இடங்களிலம் எப்படியான தாக்கத்தையுண்டாக்குகிறது?

-இனரீதியாகப் பாவிக்கப் படும் பாரம்பரிய வைத்திய முறைகளின் பலாபலன்கள் என்ன?

-இந்த வைத்திய முறைகளிலுள்ள கலாச்சார சார்பியல்வாதம் எப்படியானது?

என்பன போன்ற விடயங்கள் மருத்துவ மானுடவியலாய்வுகளில் மிக முக்கியமானவையாகப் பார்க்கப் பட்டன.

இன்று உலகில் பெயர் றெ;ற மருத்துவ மானுடவியலாளராகத் தெரியப் படுபவர் திரு போல் பார்மர் எனப்படுபவராகும்.இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருக்கும்போது இந்த ஆய்வை ஆரம்பித்தார் இது உலகம் எங்கும் பரவியது.அத்துடன் இன்று, நான்ஸி ஸ்கெபர்-ஹியுஸ்,ஆர்தர் கலெய்ன்மன்,மார்கரெட் லொக்,பைரன் குட்,அத்துடன் றைனா றுப் போன்;றோர் இத்துறையில் மேன்பட்ட ஆய்வுகளையும் வேவைகளையும் செய்கிறார்கள்.

3. மருத்துவ மானுடவியலாளர்கள் எப்படியான கல்வியைப் படிக்கவேண்டும் என்ற கேள்வி அடுத்ததாக வரலாம். மருத்துவ மானுடவியலாளர்கள் பன்முகத் தன்மையான நோய்கள், வைத்திய துறைகள் சம்பந்தமாக ஆயவுகள் செய்பவர்களா இருப்பார்கள் உதாரணமாக ஒருத்தர் ஸ்கிசோஃப்ரனியா என்ற எண்ணம்,செயல்,ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறு பற்றி ஆய்வு செய்யும் தகுதியுடையவராக இருப்பார்.இன்னொருவர்,அல்ஸைமர்ஸ் என்று சொல்லப்படமு; முதுமறதி பற்றி ஆய்வு செய்பராக இருப்பார்.இவற்றின்; பரிமாணங்கள் ஒரேமாதிரி எந்தவிடத்திலுமிருக்காது.எனவே,இந்த ஆய்வுகள் கல்விசார் (அக்கடமி) ஆய்வாகவும்,செயல் முறை சார்ந்த ஆய்வாகவுமிருக்கும்.

உதாரணமாக, லண்டனில் வாழும் இந்திய உபகண்டத்திலுள்ள மக்களிடம் ஏன் அதிகப் படியான இருதய நோய்கள், நீரழிவு நோய்கள் இருக்கின்றன என்ற ஆய்வுக்காக நான் முதன்முறையாகச் சென்றபோது கல்வி சார் முறையை அதாவது ஆராய்ச்சி(றிசேர்ச் மெதடேலோஜி) முறையிற்தான் ஆரம்பித்தேன்.

அதாவது,லண்டனில்,ஒரேமாதிரியான,கல்வி,பொருளாதார நிலையுள்ள ஆங்கிலேயனைவிட,அதே மாதிரியான வாழ்க்கை வளத்துடனிருக்கும் இந்திய உபகண்டத்திலிருந்து வந்து குடியேறிய ஆண்களுக்கு ஏன் இருதய நோய், நிரழிவு என்பன அதிகமாக வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத மேற்கத்திய வைத்தியத்துறை, கலாச்சாரம் சார்ந்த ரீதியில்ஆய்வு செய்து காரணத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள்.

இந்த ஆய்வை, பொது நல சுகாதார அதிகாரியாக சாதாரண பொது மக்களுடன் செய்தேன்.அது சார்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன்.

அதன் பலனால்,இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த மக்களின் சுகாதார நலமேம்பாடு பற்றிய புதிய கண்ணேட்டம் வந்தது.(டான்ஸ் போர் ஹார்ட், ஹெல்தி ஈற்றிங்,மதுவைக்குறைத்தல்.புகைபிடித்தலைக் குறைத்தல்.போன்றவை).

ஆசிய ஆபிரிக்க நாடுகளில் 60-80 விகிதமான மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை நாடுகிறார்கள்.காரணம்அவர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் வைத்தியம் தொடர்கிறது.பல நாடுகளில் தனியார் மருத்துவத்துறை வித்தியாசமானது.இலாபம் சார்ந்தது.மருந்துகளின் விலை கூடிக்கொண்டு வருகிறது.நீண்ட காலம் பாவிக்க வேண்டியிருக்கிறது.

இன்று, மருத்துவ மானுடவியல் பல துறைகளிலும் விரிந்திருக்கிறது.அதாவது.

-மருத்துவ தொழில் நுட்பங்கள (மெடிகல் டெக்னோலோஜிஸ்).

மரபியல்( பிறப் புரிமையியல்-ஜெனட்டிக்ஸ)

உயிர் நெறி முறைகள்; (பையோ எதிக்ஸ்),

இயலாமை ஆய்வுகள் (டிசேபிலிட்டி ஸ்ரடிஸ் -க்லப் பலட்)),

சுகாதார சுற்றலா (ஹெல்த் டூரிஸம்- இந்தியா),

பாலின அடிப்படையிலான வன்முறை( ஜென்டர் பேஸ் வயலென்ஸ் -இந்தியா).

தொற்று நோய் வெடிப்புகள் (இன்பெக்ஸஸ் டிசீஸ் அவுட் பிரேக்ஸ்- சார், போர்ட் புளு.கொரானா,ஒமிக்ரொன்.எச்.ஐ.வி).

போதைப் பொருள் து~;பிரயோகம் என்பன போன்று பலவிதமான மருத்துவத் துறைகளில் மருத்துவ மானுடவியல் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்படியான ஆய்வுகளைச் செய்ய மிகவும் கவனம் எடுக்கப் படவேண்டும்.

– இனவியல் சார்ந்த மருத்துவ மானுடவியல் ஆய்வுகள் அத்தனையும் அவர்கள் ஆய்வு செய்யும் மக்களின் சம்மதத்துடன செய்யப் படவேண்டும்.

-அவர்களின் தனிப்பட்ட வைத்திய விடயங்கள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படவேண்டும்.

-ஆய்வு செய்யப்படுபவர்கிள் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படவேண்டும்.

எந்த விதமான மருத்துவ மானிடவியலாளர்கள் என்றாலும்,பல விதமான ஒழுங்குமுறைகளின் விதிப்படியே தங்கள் ஆய்வுகளைச் செய்யவேண்டும்.முக்கியமாக,ஆய்வுக்காகப் பொருள் து~;பரயோகம் செய்யக் கூடாது. அவர்கள் எடுத்த துறையில் உலக சுதாகதார நிலைகளை (கலொபல் ஹெல்த்) மிகவும் கவனமாக அவதானிக்கவேண்டும்.மருத்துவ தொழில் நுட்பங்களைத் தெரிந்திருக்கவேண்டும்.(மெடிகல் டெக்னோலஜிஸ்).மிக மிக முக்கியமாக வாழ்வியல் நிலைகளைத் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும் பையோஎதிக்ஸ்).

இன்றும் ஆசிய ஆபிரிக்க மக்களில் 80 விகிதமான மக்கள் ஏதா ஒரு வழியில் தங்களின் பாரம்பரிய வைத்திய முறைகளை நாடுகிறார்கள் என்று சொல்லப் படுகிறது.

உலகத்தின் பல தரப் பட்ட மருத்துவ முறைகளும் ஒவ்வொருநாளும் பற்பல மாற்றங்களைக் காண்கின்றன.இந்திய உபகண்டத்திலும் இலங்கையிலும் பூர்வீக மருத்துவ முறைகள் அரச அங்கிகாரத்துடன் மேற்படிப்பகள், ஆராய்ச்சிகள் என்பனவற்றுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. மாறிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் மனித சிந்தனை,தனக்கும் தனது எதிர்காலத்திற்கும் ஏற்ற ஆரோக்கியமான வாழ்வியலைத் தொடரப் பன்முகக் கண்ணோட்டம் அவசியம்.மனித நல மேம்பாட்டை ஆழமாகப் புரிந்து. தெளிந்து தெரிவு செய்ய மனித வாழ்வின் மிக முக்கியமான பகுதியான மருத்துவத்துறையை உணர்த்தல் இன்றியமையாததாகும்.

நன்றி

;.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s