‘நானும் கோவை ஞானி அய்யா அவர்களும்.’

கோவை ஞானி அய்யாவுக்கும் எனக்குமுள்ள முப்பத்திஏழு வருட தொடர்பும் எனது எழுத்துலக நீட்சி;;யும்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம.;.லண்டன்.

ஒரு நல்ல நண்பரோ,அல்லது உங்களுடன் வேலைசெய்பவர்,அல்லது படிப்பவருடனான உறவு எங்களையறியாமல் எங்களின் வாழ்க்கைப் பாதையை ஒரு அறிவு சார்ந்த,அன்பு சார்ந்த,தூரநோக்குடன் அணுகக்கூடிய ஒரு ஆய்வு நிலைசார்ந்த வழிக்குத் திருப்பி விடுவதை நாங்கள் உணரப் பலகாலம் எடுக்கும். குடும்பம்,பொதுத்தொண்டு, மேற்படிப்பு,இலக்கிய ஈடுபாடு என்று பன்முனையில் என் வாழ்வு மிகவும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தபோது கோவை ஞானி அய்யா அவர்களின் தொடர்பு சட்டென்று கிடைத்தது எனது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான திருப்பு முனையாகும்.

லண்டனுக்கு வரமுதலே இலங்கைப் பத்திரிகைகளில் எனது சிறு கதைகள் வந்திருந்ததால்,;’முற்போக்கு’ எழுத்தை விரும்பும் வாசகர்கள் எனது படைப்புக்களைப் படித்துக் கொண்டிருந்தார்கள்.சாதிக் கொடுமை பற்றிய சிறு கதைகள் யாழ்ப்பாணத்தில் ‘மல்லிகை,வசந்தம்’ போன்ற பத்திரிகைகளிலம் சில வேறு சிறுகதைகள் (‘நிலையாமை’ போன்றவை) கொழும்பிலிருந்து வரும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளில்’ ‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் ஏற்கனவே வந்திருந்தன..

லண்டனுக்கு வந்ததும் இலங்கைப் பத்திரிகைகளில் அவ்வப்போது சிறுகதைகள் எழுதினேன்.லண்டனின் முதற் தமிழ்ப் பத்திரிகையான,’லண்டன் முரசு பத்திரிகை’ திரு சதானந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதும் எனது எழுத்துக்கள் அந்தப் பத்திரிகைகளில் வந்து பிற்போக்கு வாதிகளின் கண்டனத்தையும்,எரிச்சலான விமர்சனங்களையும் எனக்கு எதிராகக் குவித்தன.

இலங்கைத் தமிழ் அரசியலை வைத்து எழுதிய எனது முதலாவது நாவலான,

‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற நாவல் லண்டன் தமிழ் வாசகர்களிடையே ஒரு பூகப்பத்தையே கிளப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து லண்டன் முரசில் தொடராக வந்த ‘சிறு முகிற் கூட்டங்கள்’, என்ற லண்டனிலும் இலங்கையிலும் எனக்கு ஒரு நிரந்தர வாசகர் கூட்டத்தை உருவாக்கியது,(இந்நாவல்’N;தம்ஸ் நதிக்கரையில்’ என்ற பெயரில் பின்னர் புத்தகமாக வெளிவந்தது)

1978-79ம் ஆண்டுகளில் எனது எழுத்துக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள,’இலக்கிய பத்திரிகையான ‘அலை’ என்ற பத்திரிகையிலும்,’சித்திரன்’; பத்திரிகையில் வந்து கொண்டிருந்தன.லண்டனுக்குப் படிக்க வரும் இலங்கைத் தமிழ் மாணவர்களின் பல தரப்பட்ட சமுதாயப் பிரச்சினைகளையும் யதார்த்தமாக எனது சிறு கதைகள் பிரதிபலித்ததால் எக்கச் சக்கமான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

1979ம் ஆண்டு கடைசியில் இலங்கை சென்றிருந்தேன்.இலங்கையில் தமிழர்களுக்கெதிரான அடக்கு முறையை நேரிற் கண்டேன்.அதைப் பின் புலமாக வைத்து,’ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவலை எழுதி அதைப் பிரசுரிக்க,யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கொண்டிருந்த ‘அலை’ பத்திரிகையும் திரு பத்மநாபஐயரும் முன்வந்தார்கள்.

1981ம் ஆண்டு வைகாசி மாதம் 31ம் திகதி,இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தென்னாசியாவின் பிரமாண்டமானதும் பூர்வீகமானதுமான தமிழ் புத்தக நிலையம் இலங்கையரசின் கொடுமையால் தீக்கிரையாக்கப் பட்டது.அதைக் கண்டித்து எழுதிய முதல் இந்திய எழுத்தாளர் திரு மாலனாகும் ‘கணையாழி’ பத்திரிகையில் அவர் கட்டுரை வந்திருந்தது.. அதனால் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் இலங்கை அரசியல் பற்றிய ஒரு தேடல் இந்திய வாசகர்களிடையே பரவியிருந்தது தெரிந்தது..

எனது எழுத்துக்களில் புத்தக உருவில் முதலில் வெளிவந்த ‘ஒருகோடை விடுமுறை’ 1981ம் ஆண்டு இறுதிக் கால கட்டத்தில்; இலங்கையைச் சேர்ந்த திரு பத்மநாப ஐயர் வெளியிட்டார். இலங்கைத் தமிழரின் அரசியலைப் பேசும் இந்த நாவல் இந்தியாவில் திரு பத்மநாப ஐயர் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது.இந்த நாவல்தான் இந்திய வாசர்களிடையே தெரியப் பட்ட முதலாவது புலம் பெயர் தமிழ் நாவலாகும். இலங்கைத் தமிழரின் அரசியல் நிலமைபற்றிப் பேசிய முதல் நாவல் என்பது மட்டுமல்லாது, மேற்குநாட்டு வாழ்க்கை முறை,அரசியல்,பெண்ணியக் கருத்துக்கள்,இலங்கையில் நடந்த சாதிக்கெதிரான போராட்டம் என்று பற்பல விடயங்களள் இந்நாவலில் பேசப் பட்டதால்,இந்திய எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் கவனத்தைத் திருப்பியது.

1982ம் ஆண்டு இலங்கையில்,காந்திய நிறுவனத் தலைவராகவிருந்த திரு ராஜசிங்கம்,அத்துடன் டாக்டர் ஜெயக்குலராஜா போன்ற பல புத்திஜீவிகள் இலங்கை அரசால் கைது செய்யப் பட்டு வெலிக்கடை என்னும் சிறையில் அடைக்கப் பட்டார்கள். அந்தக் கொடுமையான நிலையை எதிர்த்து லண்டனின் தமிழ் மகழீர் அமைப்பு என்ற மனித உரிமை நிறுவனத்தை உருவாக்கி அதன்மூலம் எனது இலங்கைத் தமிழ் மக்களுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்தேன்.எனது பெயர், பி.பி.சி உலக சேவை தொடக்கம் பல ஊடகங்களில் அடிபடத் தொடங்கின.

1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கெதிரான கலவரம் நடந்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மிகப் பிரமாண்டமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. இலங்கையிலிருந்து தப்பி வரும் தமிழ் அகதிகளுக்கு உதவும் பணியில் மிகவும் ஆழமாக ஈடுபட்டகால கட்டத்தில் எனது தமிழ் இலக்கியப் படைப்புக்கள் முற்று முழுதாக நிறுத்தப் பட்டிருந்தது.

இலங்கைத் தமிழருக்கான மனித உரிமைப் போராட்டத்தில்,இங்கிலாந்தில் நான் மிகவும் இறுக்கமாக ஈடுபட்டிருந்த கால கட்டத்தில், ‘ஒருகோடை விடுமுறை’ என்ற நாவலைப் படித்தபின் கோவை ஞானி அய்யா அவர்கள் அந்த நாவல் பற்றி எழுதிய விமர்சனத்தை எழுதியதாகத் திரு பத்மநாப ஐயர் எனக்கு எழுதியிருந்தார்.திரு பத்பநாப ஐயரிடமிருந்து கோவை ஞானி அய்யாவின் விலாசத்தை வாங்கிக்கொண்டு கடிதம் மூலம் தொடர்புகொண்டு எனது நாவலுக்கு அருமையான விமர்சனம் செய்ததற்கு நன்றி சொல்லி எழுதினேன்.

எனக்கு எழுதிய பதிலில்,அவர் மேலதிகமான எனது இலக்கியப் படைப்புக்கள் பற்றி விசாரித்தார் என்று நினைக்கிறேன்.

அன்றிலிருந்து கடந்த யூலைமாதம் 2020 வரையும் எங்கள் தொடர்பு கடிதம் மூலமாகவும் டெலிபோன் உரை மூலமாகவும் முப்பத்தி ஏழுவருடங்கள் தொடர்ந்தன.

அவரின்,முதற் கடிதம்; தொடக்கம் பல்லாண்டுகளாக அவரது அறிவுரை எனது தமிழ் இலக்கிய ஆர்வலைத் தூண்டுவதாகவிருந்தது. ஆனால் எனது வாழ்க்கை பல விதமான போராட்டங்களுடன் தொடர்ந்ததொன்றாகும்.1980ம் ஆண்டின் முற்பகுதி தொடக்கம் இங்கிலாந்தில்,மிகப்பெரும் சமூக மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. இங்கிலாந்தின் மிகவும் பலமான தொழிலாளர்களான சுரங்கத் தொழிலாழர்களைப் பலமிழக்கச் செய்ய அன்றைய பிரித்தானிய பிரதமர் மார்கிரட் தச்சர், நிலக்கரிச் சுரங்கங்களை மூடத் தொடங்கினார்.

இதனால,பிரித்தானிய சரித்திரம் காணாத பெரிய தொழிலாளர் போராட்டம் இங்கிலாந்தில் வெடித்தது.தொழிற்கட்சியினரான என்போன்றோர் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தோம். அந்த ஊர்வலங்கள், போராட்டங்களை நான் விடியோ செய்தேன். இவை பற்றி ஞானி அய்யாவுக்கு எழுதும்போது,தொழிலாளர்களின் போராட்டம் மிகப் பிரமாண்டான பிரித்தானிய அரசால் நிர்மூலமாக்கப்பட்டதைக் கேட்டுத் துக்கப் பட்டார். ஆனால் அவரின் முற்று முழுதான அறிவுரையும் இப்படியான விடயங்களை இலக்கியமாக்கும்; எனது எழுத்துப் பணியைத் தொடரவேண்டும் என்பதாகும்.

ஆனால் எனது தமிழ் மக்களுக்கான மனித உரிமை சார்ந்த பணியை என்னால் முற்று முழுதாக விட முடியவில்லை;

ஏற்கனவே நான்,இங்கிலாந்தில் 1982ல் தொடங்கிய முதலாவது மனித உரிமை அமைப்பான ‘தமிழ் மகளீர் அமைப்பு மட்டுமல்லாமல்,1985ல் ஆரம்பித்த தமிழர் அகதிகள் ஸ்தாபனம், தமிழ் அகதிகள் வீடமைப்பு, என்பனவற்றில் தலைவியானேன். சமுகப்பணியின் பொறுப்பு தலையை அமிழ்த்திக் கொண்டிருந்தபோது,எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்ற அய்யாவின் அறிவுரையை என்னால் செயற்படுத்த முடியவில்லை. ஏனென்றால் பன்முகத்தன்மையான அறிக்கைகளை ஸ்தாபன தலைவ்p என்ற முறையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

அப்போது, திரைப்படத்துறையில் உள்ள ஆர்வத்தால் நான் மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்திருந்தததை அய்யாவுக்குச் சொன்னபோது மிகவும் ஆச்சரியத்துடன் எனது துணிவை மெச்சினார்;.ஆங்கிலேயரல்லாதவர்கள் திரைப்படக் கல்லூரிகளில் கால்வைக்காத கால் கட்டமது.

அய்யாவின்; ஆசியுடனும் அவர் போன்ற நல்ல மனதுடைய ஆங்கிலேய நண்பர்களின் தூண்டுதலுடனும் 1985ம் ஆண்டு கடைசிப் பகுதியில் திரைப்படக் கல்லூரிக்குள் கால் பதித்தேன்.

சந்திப்பு: எனது திரைப்படப் பட்டப் படிப்பு, இங்கிலாந்தில் மூன்று பிரமாண்டமான தமிழ்ஸ்தாபனங்களின் தலைவி, மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்ற பெரும் பொறுப்புக்களுடன்,அய்யா அடிக்கடி என்னிடம் சொல்லும் எனது தமிழ் இலக்கியப் பணியைப் பெரிதாக என்னால்த் தொடர முடியவில்லை. ‘அங்கு அகதிகளாக வரும் தமிழர்களின் நிலைபற்றி எழுதுங்கள்,அவை இலங்கைத் தமிழரின் சரித்திரமாகவிருக்கும்.’என்று உருக்கமாக வேண்டிக் கொண்டார். அதைத் தொடர்ந்து,ஒருசில சிறுகதைகள் எழுதினேன்.

அக்கால கட்டத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களிலும்;, கனடா,அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசீலாந்து போன்ற பல பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் குடியேறத் தொடங்கினார்கள். ஐரோப்பாவுக்குத் தமிழ் அகதிகள் விடயமாக அடிக்கடி போகவேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு,இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்து குவிபது பற்றி,அய்யாவிடம் தமிழர் நிலைபற்றிச் சொல்லித் துக்கப் பட்டகாலத்தில், இலங்கையிலிருந்து முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வந்த நிறைவதைபற்றிச் சொன்னதைக் கேட்டு அவர் சந்தோசப் பட்டார்.

‘அவர்களும் ஒருகாலத்தில் உங்களைப் போல் எழுதுவார்கள்’ என்று அன்புக் குரலிற் சொன்னார். அவரின் அன்பான வார்த்தைகள் பலித்ததுபோல்,ஐரோப்பாவிலிருந்து தமிழ் இலக்கிய இதழ்களின் வருகை 80ம் ஆண்டின் நடுப்பகுதிகளிலிருந்து ஆரம்பித்தன. எனது சிறுகதைகளின் பிரசுரம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தன.

1986ம் ஆண்டு திரைப்படத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவியாகவிருந்தபோதே, தமிழ் மக்களின் அவலத்தை உலக அரங்கில் காட்ட நான் எடுத்த,’ எஸ்கேப் புறம் ஜெனசைட்’ என்ற டாக்குமென்டரியைப் பற்றிப் பல மனித உரிமை நிறுவனங்கள் உயர்வாகப் பேசியதை அய்யாவிடம் சொன்னபோது அவர் மிகவும் சந்தோசப் பட்டார்.

அக்கால கட்டத்தில் இலங்கையிலிருந்து பெரும் தொகையில் தமிழ் அகதிகள் இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அது விடயமாக,தகவல்களையும் புகைப் படங்களையம் சேர்க்க அகதிகள் ஸ்தாபனத் தலைவி என்ற ரீதியில் நான் கட்டாயம் இந்தியா செல்லவேண்டிய நிலையுருவானது.

அப்போது,எனது கடைசி வருடப் படிப்புக்குச் சமர்ப்பிக்க சினிமாத்துறை ஆய்வு எழுதுவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அதுபற்றி இந்தியாவிலுள்ள எனது நண்பரும் எழுத்தாளருமான செ. கணேசலிங்கத்திடம் பேசினேன். அவர் தமிழ் சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவிடம் என்னைப் பேசச் சொன்னார். பாலு மகேந்திரா,இலங்கையில் எனது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் திரைப்பட்டப் படித்த பட்டதாரி. சென்னையில்,தமிழ் திரைப்படத்துறை தமிழ் திரைப்படங்கள் சம்பந்தமான எனது ஆய்வுகளுக்கு பல நேர்காணல்களைப் பல திரைப்படப் பிரபலங்களான பானுமதி போன்றோருடன் ஒழுங்கு செய்தார்.

அதுபற்றி கோவை ஞானி அய்யாவுடன் சொன்னபோது,’ நீங்கள் திரைப்படம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது,தமிழ் எழுத்தாளர்களையும் நேர்காணல் செய்தால் என்ன?’ என்று கேட்டார். இந்தியாவில் நான் தங்கும் கால கட்டத்தில், திரைப்படத் துறை ஆய்வு, அகதிகள் வாழ்வுநிலை பற்றிய ஆய்வு என்று பல வேலைகள் எனது தலையைச் சுற்றப் பண்ணிக் கொண்டிருந்தபோது கோவை ஞானி அய்யா கேட்டதை என்னால் செய்ய முடியுமா என்று யோசித்தபடி இந்தியா சென்றேன்.

சென்னை நகர் சார்ந்திருந்த அகதி முகாம்களுக்குச் சென்று பல விடயங்களைளும் சேகரித்து புகைப் படங்களையும் எடுத்தபின்; எனது அன்பான அய்யா கோவை ஞானி அய்யா அவர்களைக் காண கோவை சென்றேன். அது ஓரு அற்புதமான சந்திப்பு. அய்யாவும் இ;ந்துராணி அம்மாவும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். எனது எழுத்துக்கள் பற்றி நிறையக் கேள்வி கேட்டார். ‘ எனது ஒரு கோடை விடுமுறை’என்ற நாவல் அவரின் கருத்தையும் சில கவனத்தையும் தீண்டியிருக்கிறது என்பது புரிந்தது.அதில் பேசப்படும் விடயங்கள் அவருக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது என்ற அவர் பேச்சில் பிரதிபலித்தது.

அதாவது, இலங்கையிலிருந்து லண்டனுக்கு அக்கால கட்டத்தில் வந்த மத்திய வர்க்கத்துத் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை முறை, பிரித்தானியாவில் உள்ள சமூக சமத்துவநிலை, இலங்கைப் பிரச்சினை முக்கியமாக 1977 ம் கலவரத்தில் தமிழர்கள் பட்ட துயர்கள் பற்றி அந்நாவலில் சொல்லப் பட்டிருந்த விபரங்கள் அவரைத் துக்கப் படுத்தின.

அத்துடன், அந்நாவலில்,பாரம்பரிய பெண்களின் மனப்மான்மையுடன் தன்னைக் காதலித்துக் கைவிட்டுச் சென்றவனையே நினைத்து வாழுந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்மை, கணவன் நேர்மையுடன் நடந்து கொள்ளாததால் விவாகரத்து செய்யும் ஆங்கில மனைவி, பெண்ணியக் கருத்துக்களில் நம்பிக்கைகொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துப் பரமநாதனின் உறவைத் தள்ளிவிடு;ம் லிசா பேக்கர் என்ற ஆங்கிலப் பெண் போன்ற பல விடயங்கள் அவரை மிகவும் சிந்திக்கப் பண்ணியிருப்பது அவர் பேச்சில் பிரதிபலித்தது.

என்னைப் பற்றிய மேலதிகமான, செய்திகளான, மனித உரிமை சார்ந்த போராட்டங்கள்,அதுசார்ந்த அரசியல் ஈடுபாடு பற்றிச் சொன்னேன். அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கான அமைப்புக்களில் மட்டுமன்றி பிரித்தானிய தொழிற்கட்சியிலும் அங்கத்தவராகவிருந்தேன். பிரித்தானியாவிலிருந்து இயங்கிய அகில உலகப் பெண்கள் அமைப்பான ‘வைசர் லிங்’ என்ற அமைப்பிலும் இருந்தேன். இப்படிப் பன்முகத்தன்மையான வேலை செய்யும்,நான் அவருக்கு ஒரு விசித்திரமான பெண்ணாகப் பட்டது அவர் பேச்சில் எனக்குப் புரிந்தது.

மூன்று இளம் குழந்தைகளுடன், திரைப்படத் துறைப் படிப்பு அத்துடன் தமிழ் நிறுவனங்களின் தலைவியாகப் பணிபுரியும் எனது பொறுப்பு என்பன பற்றி என்னுடன் பேசினார். சமத்துவத்தை முன்னெடுக்கும் என்னுடைய லண்டன் வாழ்க்கை,அத்துடன் தமிழிலும் தமிழர்களிலும் எனக்குள்ள அளவற்ற அன்பு என்பவை அவருக்குப் பல சிந்தனைகளையும் சந்தோசத்தையும்; உருவாக்கியிருக்கவேண்டும்.

நான் வாழ்ந்து கொண்டிருக்கும்,மேற்குலக நாடுகளின் அரசியல் மாற்றங்களையும் பற்றிச் சொன்னேன். உதாரணமாக,1980-90 ஆண்டு கால கட்டத்தில் பிரித்தானியாவில் பிரமாண்டமான அரசியல் பொருளாதார மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. முதலாளித்துவம் பிரித்தானியா இதுவரை காணாத, பிரமாண்டமான விதத்தில் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. 1979ம் ஆண்டு பிரித்தானிய முதற் பெண் பிரதமராக வந்த மார்க்கிரட் தச்சர், ஒட்டு மொத்த தொழிற்சங்கங்களையும் பலமிழக்கும் வெறியில் சன்னதம் ஆடிக்கொண்டிருந்தார். உலகத்திலுள்ள பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து கொண்டார்.

காந்திய வழியில்,தென்னாபிரிக்க கறுப்பு மக்களுக்காகக் குரல் கொடுத்த நெல்சன் மண்டேலாவை,’பயங்கரவாதி’ என்று மார்க்கிரட் தச்சர் பட்டம் கட்டினார். தென் ஆபிரிக்கத் தலைவர்.பீட்டர் வில்லியம் போதா என்பவா பிரித்தானியாவுக்கு,25.5.1984ல் வருகை தந்தபோது, மிகப் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார். அதை எதிர்த்த ஊர்வலத்திற்கு எங்கள் போன்றர்கள், பிரித்தானிய வரலாற்றில் என்றும் காணாத மூன்றுகோடி மக்கள் திரண்ட ஊர்வலத்தை தென்ஆபிரிக்கப் பிரதமரின் வரவை எதிர்த்து நடத்தினோம்.

சோவியத் யுனியனுக்கும் அமெரிக்காவும் இடையில் நடந்த பனிப்போர் உச்ச கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்க அணுஆயுதங்கள் பிரித்தானிய மண்ணில்,1981ம் ஆண்டிலிருந்து குவிக்கப் பட்டன. அமெரிக்க இராணுவத்தளமிருந்த கிறின்ஹாம் கொமன் என்ற இடத்தில் அமெரிக்கா மிக மிகப் பிரமாண்டமாகத் அணுவாயுத தளமிட்டது அதை எதிர்த்து பிரித்தானிய தாய்;;,கதரின் ஜோன்ஸ் போன்றோர் குரல் கொடுத்தனர். பிரித்தானியாவிலுள்ள ஒட்டு மொத்த முற்போக்கு சக்திகளும் பெண்ணிய அமைப்புக்களும்,தொழில் கட்சியும் அதில் இணைந்தன. அப்போது,இஸ்லிங்டனிலிருந்த எனது வீடு, கோஷங்கள்; எழுதும் இடங்களில் ஒன்றானது.

அமெரிக்க அணு ஆயதங்களைப் பிரித்தானிய மண்ணிலிருந்து அகற்றச் சொல்லி,13.12.1982ல்,இங்கிலாந்திலுள்ள,300.000 பெண்கள் அமெரிக்கரின் இராணுவத்தளமான கிறினாம் கொமன் என்ற இடத்தை முற்றுகையிட்டார்கள்.

அப்படியான பிரித்தானிய அரசியல் நிலை அவற்றில் எனது ஈடுபாடு என்பனவற்றை, 1987ல் அய்யாவைச் சந்தித்தபோது விபரித்தேன். அந்த அரசியற் செய்திகள் அய்யாவிடமிருந்து என்னைப் பற்றிப் பல கேள்விகளை உருவாக்கியது. இந்திய வரலாறு,மார்க்சியம் சார்ந்த வரலாறு, இந்திய அன்றாட நிகழ்ச்சிகளை அவதானிப்பரிடம், ஒட்டு மொத்த உலக மக்களின் என்னால் முடிந்தவரை மனித உரிமைக்குப் போராடுவேன் என்பதை அவருக்கு விளங்கப் படுத்தினேன்.பிரித்தானியாவில் வாழ்வதால் மக்களுக்குக் கிடைக்கும் பல தரப்பட்ட சிந்தனை விருத்திபற்றி எனக்குத்; தெரிந்தளவுக்கு அவருக்கு விளங்கப் படுத்தினேன். எனது தனிப் பட்ட வாழ்க்கையில் நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சாடைமாடையாகச் சொன்னேன்.

‘வாழ்க்கையின் சுமைகள் பல தரப்பட்டவை, ஆனால் எனது மிகவும் சிக்கலான காலகட்டத்தில் சில ஆங்கிலேயச் சினேகிதர்கள் என்னைத் தேற்ற இருப்பதுபோல் எத்தனையோ மைல் தொலைவிலிருந்து கொண்டு நீங்கள் தரும் ஆறுதல்கள் பிரமாண்டமானவை,உங்கள் தொடர்பு கிடைத்தது எனது மகத்தான சந்தோசம்’ என்று அவரிடம் சொல்லிக் கண்ணீர் விட்டேன்.அவரின் உறவு கிடைத்ததும் அவரின் இடைவிடாத அறிவுரைகளும் எனது வாழ்க்கையில் என்ன மாற்றங்களையுண்டாக்கின என்று விபரிக்க முனைந்தால் அது ஒரு காப்பியமாக அமையும். சில நாட்கள் அய்யா,அமம்மாவுடன் தங்கி நின்றேன். சில இடங்களுக்குச் சினேகிதர்களுடன் அழைத்துச் சென்றார்.

இந்தியாவில் சென்னை,மதுரை போன்ற இடங்களில் உள்ள அகதிமுகாம்களிலுள்ள தமிழ் அகதிகளைச் சந்தித்து அவர்களின் நிலையை உலகுக்கு விளக்க லண்டனில் ஒரு புகைப்படக் கண்காட்சி செய்ய நினைத்தேன். பல இடங்களுக்குச் செல்ல அய்யாவின் உதவியாளர்களை என்னுடன் அனுப்பினார்.

சென்னை திரும்பியதும்,திரைப்படத் தறை சார்ந்த பல விடயங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, நடிகை பானுமதியை நேர்காணல் செய்தேன்.அதன் பின்னர்,; அய்யா கேட்டுக் கொண்டதுபோல், பல பிரபல எழுத்தாளர்களானஈ ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி;, ராஜம் கிருஷ்ணன்,போன்றோரையும் நேர் காணல் செய்தேன்.ஆனால் அய்யா அந்த நேர்காணல்களைக் கேட்கச் சந்தர்ப்பம் வரவில்லை.

அய்யாவுடனான எனது தொடர்பின் நீட்சி.: லண்டன் வந்ததும், தமிழ் அகதிகள் புகைப்படக் கண்காட்சி, எனது திரைப்படப் பட்டப் படிப்புக்கான ஆய்வு என்று காலம் கரை புரண்டது. 1988ம் ஆண்டு திரைப்படப் பட்டதாரியாக வெளிவந்த காலத்தில், ஐரோப்பாவில் ஜேர்மன் நகரில் இலங்கைத் தமிழர்களால், முதலாவது இலக்கிய சந்திப்பு நடந்தது.

அதைத் தொடர்ந்து, பெரிய அளவில் ‘புலம் பெயர் தமிழர்கள்’ தமிழ் இலக்கியம் படைக்கத் தொடங்கினார்கள். பல இலக்கியப் பத்திரிகைகள் உலகில் பல இடங்களிலுமிருந்து இலங்கைத் தமிழர்களால் வெளியிடப் பட்டன். 87ம் ஆண்டு ஞானி அய்யாவைச் சந்தித்தபின் எனது எழுத்துத் துறை புதிய திருப்பத்தைக் கண்டது.

‘தில்லையாற்றங்கiஎன்ற எனது நாவல்; 1987ம் ஆண்டுவெளியிடப் பட்டது.

புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றிய பெரும்பாலான எனது சிறுகதைகள் அக்கால கட்டங்களில் எழுதப்பட்டு பல நாடுகளிலும் பிரசுரிக்கப் பட்டன. ஆங்கிலம்,பிரன்ஸ் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

90ம் ஆண்டுகளின்; எனது வாழ்க்கை மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தித்துக்கு முகம் கொடுத்தது. 1992ம் ஆண்டு பிரித்தானியாவில் முதற்தடவையாக ஒரு தமிழ் நாவல் வெளியிடப்பட்டது.கவிஞர் சிவசேகரம்,கவிஞர் சேரன் போன்றோர் வெளியீட்டில் பேசினார்கள்.அந்த நாவல் ‘ இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து எழுதி,’லண்டன் முரசு பத்திரிகையில்’ தொடர் நாவலாக வந்த,’ உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற படைப்பாகும்.

1994ம் ஆண்டு, ஞானி அய்யா அவர்கள்,’எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற புத்தகத்தைப் பிரசுரித்தார். அதில் கருணாநிதி, ஜெயகாந்தன், லா.ச.ரா போன்ற அறுபத்தைந்து தமிழ் எழுத்தாளர்களின்; படைப்புக்களை விமர்சனம் செய்திருந்தார்.அந்தத் தொகுதியில் பெண்ணிய எழுத்தாளர்களாக,ராஜம் கிருஷ்ணன்,ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், காவேரி, சிவகாமி போன்றோரின் படைப்புக்கள் விமர்சிக்கப் பட்டிருந்தன.

திரைப்படத் துறையில் வாங்கிய பட்டத்துடன்,லண்டனில் திரைப்படத் துறையில் கால் ஊன்ற எனது குடும்பச்சுமை தடையாகவிருந்தது. நல்லதொரு வேலைக்காக மீண்டும் பல மேற்படிப்புக்களையும் ஆய்வுகளையும்,1991ம் ஆண்டிலிருந்து செய்யவேண்டிய நிலை வந்தது. அக்கால கட்டத்தில்,அய்யாவின் ஆலோசனையால் நிறைய எழுதினேன். சங்க காலப் பெண்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றை அய்யாவின் வேண்டுகொளுக்கிணங்க எழுதச் சமர்ப்பித்தேன்;. பல நாவல்களை அக்கால கட்டத்தில் எழுதினேன்.

அக்கால கட்டத்தில் எனது எழுத்துக்களுக்கும் நாவல்களுக்கும் சாகித்திய அக்கடமி விருது உட்படப் பல விருதுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைத்தன. இலங்கை சாகித்திய அக்கமி விருதுபெற்ற’பனிபெய்யும் இரவுகள’ என்ற நாவல் சிங்கள மொழியிலும் சில ஆண்டுகளின் பின் இலங்கையில் வெளியிடப்பட்டது.

1992ம் ஆண்டு ,எனது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தையுண்டாக்கியது. பிரித்தானிய பொதுச்சுகாதாரத் துறையில் பதவி கிடைத்தது.அதைத்தொடர்ந்து,மேற்படிப்பும் தொடர்ந்தது.

லண்டனிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமொன்றில்,மானுட மருத்துவ வரலாற்றில் முதுகலைப்பட்டப் படிப்பு படிக்கும்போது, மனித வரலாற்றில்.மனிதர்களின், புராதான நம்பிக்கைகள், அவர்களின் மனநலம் பற்றிய விடயத்தில், சமயச் சடங்குகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமான விடயமாகும். சமயம் .சடங்கு முறைகளில் புதிய கண்ணோட்டம் பிறந்தது.

அதைப் பற்றி நீண்ட நேரங்கள் அய்யாவுடன் தொலைபேசியில் உரையாடும்போது, இலங்கையின் கிழக்குப் பகுதி கலை கலாச்சாரம் பற்றி உரையாடினோம்.’தில்லையாற்றங்கரை’ என்ற நாவல் அவை பற்றிப் பேசுவதால் லண்டன் கலைத்துறை ஸ்தாபனம் (லண்டன் ஆர்ட் கவுன்சில்); அந்த நாவலை மொழி பெயர்க்கப் பொருளாதார உதவி செய்ததசை; சொன்னேன்.

தாய்வழிமரபான கிழக்கிலங்கை பாரம்பரியம் பற்றி அடிக்கடி அவருடன் பேசினேன்.தமிழர்களுக்கெதிரான அரச பயங்கரத்திதால் அதிகம் அழிந்தவர்கள் கிழக்குப் பகுதித் தமிழர்களே;. ஆயிரக் கணக்கில் விதவைகள் கிழக்கில் நிறைந்திருந்தார்கள். எனது ஊரில் உள்ள பெண்களுழம் குழந்தைகளும் ஒன்ற சேர்ந்து படிக்கவும் சேர்ந்து பாவிக்கவும், ‘ராஜேஸ்வரி மண்டபம்’; என்று ஒன்றைக் கட்டிக் கொடுத்தேன். பெண்களை முன்னேற்ற அவர்களின் சிந்தனையை வளம் படுத்த பல செய்ய ஆவலிருந்தது,ஆனால் அரசியல் நிலை இடம் கொடுக்கவில்லை.

கோவை ஞானி அய்யாவின் ஒது;துழைப்பில் தொடர்ந்த ‘பெண்கள் சிறுகதைப் போட்டி ‘

இலங்கையில் பெண்களுக்காக ஒரு சிறு கதைப் போட்டியைத் தொடங்க வேண்டும் என்பதை அய்யாவுடன் பேசினேன். இலங்கையில் அதற்கு இடமில்லை. இந்தியாவில் பெண்களுக்கான சிறுகதைப் போட்டி வைப்பது பற்றி அய்யாவுடன் பேசினேன். அந்த முயற்சிக்குப் பெரும்பாடு பட்டுழைத்தவர் கோவை ஞானி அய்யா அவர்கள். என்னுடைய ஆர்வத்துக்கும்; இலக்கிய முயற்சிகளுக்கும் முதகெலும்பாக இருந்தவர் அவர்.

பெண்கள் சிறுகதைப் போட்டிக்கு வந்த அனைத்துக் கதைகளையும்; படித்துத் தெரிவு செய்ய மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,பரிசுக்கான கதைகள் தெரிவு செய்யப் பட்டன.1998ம் ஆண்டு முதலாவது,பன்னிரண்டு பெண்களின் கதைகளைத் தாங்கிய,’காயங்கள்’ என்ற தொகுதி வந்தது.அதைத் தொடர்ந்து,1999,பதினைந்து கதைகளை உள்ளடக்கிய,’ உடலே சவப் பெட்டியாக’ என்ற தொகுதியும்,2000ம் ஆண்டு,பதினைந்து கதைகளைக் கொண்ட தொகுதி,’காற்றாய்.புயலாய்’ என்ற பெயரில் வந்தத. இம்மூன்று தொகுதியும்’ நிகழ்வு’ அமைப்பின் பெயரில் வந்தன.

அதைத் தொடர்ந்து வந்த தொகுதிகள்,பதினேழு கதைகளைக் கொண்ட’பிளாஸ்டிக் மனிதர்கள்'(2001) அடுத்த தொகுதிகளான,பதினாறு கதைகளைக் கொண்ட,’உழவு மாடுகள்'(2002),பதினைந்து கதைகளைக் கொண்ட,’புதிய ஏவாள்’ (2003)பதினேழு கதைகளை உள்ளடக்கிய,’கனாக்காலம்'(2004),பதினைந்து கதைகளைத் தாங்கிய,’புதிய ஏவாள்(2005),இருபத்திரண்டு கதைகள் கொண்ட,’கனலும் எரிமலை'(2006),இருபது கதைகளைக் கொண்ட,’சுடும் நிலவு'(2007),கடைசித் தொகுதியாக இருபது கதைகளுடன் வந்த,’இலையுதிர் காலம்’ என்ற தொகுதிகள் ‘தமிழ் நேயம்’அமைப்பின் பெயரிலும் வந்தன.

1998ம் ஆண்டு தொடக்கம் 2008ம் பெண்கள் சிறுகதைப் போட்டிக்கு வந்த நூறு சிறந்த சிறுகதைகளின் தொகுதியை’காற்றாய்ப் புயலாய்’ என்ற பெயரில் காவியா பிரசுரம் 2015ம் ஆண்டில் வெளியிட்டது. என்னால் ஆரம்பிக்கப் பட்ட பெண்கள் சிறுகதைப் போட்டி என்ற மிகவும் பிரமாண்டமான வேலையை கோவை ஞானி அய்யா அவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாகப் பொறுப்பெறுத்துச் செயற்படுத்தினார். போட்டிக்கான பரிசுத் தெகையை அன்புடன் கொடுத்ததுடன் அவ்வப்போது கோவைக்கு வந்து பரிசு பெற்ற பெண்களைப் பாராட்டி விட்டுச் சென்றேன்.

அய்யாவின் உதவியில்லாவிட்டால் இந்தப் போட்டி தொடர்ந்திருக்காது. 200 கிட்டத்தட்ட பெண் படைப்பாளிகளை உருவாக்கியிருக்க முடியாது. அவர்கள் எழுதிய படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகில,முதற்தரம் இந்தியாவில் நடந்த ‘பெண்கள் சிறுகதைப் போட்டி’ படைப்புக்களாகச் சரித்திரம் படைத்திருக்க முடியாது. அய்யாவின் பெண்ணிய சிந்தனைகள் பறறிப் பேசுவோர் இந்த முயற்சியைப் பற்றிப் பேசியதை நான் கேட்டதில்லை;.

மனித நேயத்தின் ஒரு முக்கிய அங்கமான பெண்ணியத்தில் அக்கறை கொண்டோர் கோவை ஞானி செய்த இந்த முயற்சியை மறைப்பது, மறந்து விடுவது என்பது அவரின் அறம்சார்ந்த மனித நேய செயற்பாடுகளுக்குச் செய்யும் மிகவும் பிரமாண்டமான துரோகமாகும். அடிமட்ட பெண்களின் யதார்த்த வாழ்வை இலக்கியத்தில் படைக்கவேண்டும் என்ற எனது ஆவலைச் செயற் படுத்திய அய்யாவின் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டும்.இப்படியான முயற்சிகள், புதைங்குழியில் புதைபடக் கூடாது. பெண்கள் சிறுகதைப் போட்டி கோவை ஞானி அய்யாவின் மிக முக்கிய செயற்பாடுகள் என்பதை அவர் வாழ்க்கையையும் தத்துவங்களையும் பேசுபவர்கள் இனிவரும் காலத்தில் என்றாலும் நினைவுகூர்தல் இன்றியமையாதது.

அய்யா வெளியிட்ட,என்னுடைய முருகனைப் பற்றிய புத்தகம்:

1998ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘ஸகந்த-முருகன்’ மகாநாட்டுக்குக் கட்டுரை சமர்ப்பிக்க எனக்கு அழைப்பு வந்தபோது,ஆச்சரியத்துடன் திடுக்கிட்டேன். நான் மனித உரிமைவாதி,எனது எழுத்துக்கள் அந்தக் கட்டுமானம் சார்ந்தது என்று அவர்களுக்குச் சொன்னேன்.’அவர்கள்,’நீங்கள் பெண்கள் நிலை பற்றி எழுதுபவர்கள். எங்கள் சமயக் கதைகளில் இருமனைவிகளைக் கொண்டிருக்கும் கடவுள் முருகன் மட்டுமே. அதன் வரலாற்றுக் கதைகள், கலாச்சார இணைவு. தத்துவ உள்ளடக்கங்கள்; என்னவாக இருக்குமென்று ஆய்வு செய்ய முடியுமா’ என்று கேட்டார்கள்.

அதுபற்றிச் சில ஆய்வுகளைத் தடவிப் பார்த்து விட்டு அய்யாவிடம் பேசினேன்.’முருக வழிபாடு பண்டைத் தமிழரின் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கும் ஒரு அப்பழுக்கற்ற திராவிடியத் தொன்மையின் நீட்சி என்று எனக்குப் படுகிறது’; என்று நான் சொன்னபோது,அவரின் குரலிலிருந்த உற்சாகத்தை என்னால் வர்ணிக்க முடியாது.

‘கட்டாயம் அந்த மகாநாட்டுக்கு நீங்கள் உங்கள் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கணும்’ என்றார். என்னால் முடிந்தவரை,முருக வழிபாடு பற்றிய நூல்களைத் தேடிக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினேன.

முதலாவது,’ஸ்கந்த- முருக மகாநாட்டுக்குச்’சென்றபோது பல விடயங்கள் புரிந்தன. ஸ்;கந்தாவும் முருகனும் வேறு வேறு விதங்களில் வணங்கப் படுபவர்கள். இரு கடவுள்களையம் இணைத்தப் பல குழறுபடிகள் நடந்த வரலாறு சாடையாக எனக்குப் புரிந்தது.நான் மானுட மருத்துவ வரலாறு படித்தவள். பாரம்பரிய மருத்துவ அறிவையும் தொன்மைகளையும் குழிதோண்டிப் புதைத்த மேற்கு வைத்திய சரித்திரத்தைப் படித்தவள். இன்றைய மேற்கத்திய மேற்கத்திய மருத்துவ வளர்ச்சி; ஏன் ஆதிகால மனிதர்களின் வைத்திய முறைகளை முறியடித்துத் தங்கள் வைத்திய முறையை முன்னெடுத்தார்கள், என்னவென்று முதலாளித்துவம் மக்களின் உடல் நலத்தை ஒரு வியாபாரப் பொருளாக்குகிறது என்பதையுணர்ந்தவள்.

வைத்தியத் துறை மட்டுமல்ல, இன்றைய கால கட்டத்தில் உலகில் உள்ள அத்தனை மதங்களும் மக்களை வைத்து எப்படிக் கோடி கோடியாய் உழைக்கின்றன என்பது பலருக்குத் தெரியும். அந்த வியாபாரத்திற்கு அவர்களின் வியாபார முதலீடான,’கடவுள்கள்’அவர்கள் பற்றிய அற்புதக்கதைகள் அடிக்கடி மாற்றுப்படவேண்டும். சமயம் என்ற பிரமாண்டமான முதலாளித்துவ வியாபாரத்திற்கு, முதலீடு என்பது அப்பாவி மக்களை எப்படி ஏமாற்றிக் கொண்டிருப்பது என்ற இடைவிடாத சிந்தனையின் வளர்ச்சிதான் ‘தீவிரவாத’ முறையான சமய வளர்ச்சியாகும்.

இன்றைய கால கட்டத்தில் அறிவியல் எப்படி வளர்கிறதோ அதே அளவில் மனிதர்களுக்கிடையான முரண்பாடுகள், சண்டைகள்,வளர்கின்றன. அதை வளர்க்கும் முதலீட்டுப் பொருட்கள்;,’இனவெறி. குழுவெறி,மொழிவெறி, பிராந்திய வெறி, மதவெறி’ என்பனவாகும். அவற்றைத்; தூண்டி,இலாபம் தேடும் முதலாளிகளும் அவர்களின்; பணத்தால் பதவிக்கு வரும் அரசியலவாதிகளும் பல வழிகளில் மக்களைப் பிரிக்கிறார்கள். முதலாளித்தவ அரசமுறை முதலீட்டுக்குக் கடவுள்களும் அவர்கள் பற்றிய கோட்பாடுகளும் காலத்துக்காலம் பிறபோக்குவாதிகளால்; மாற்றப்படும். சில கடவுள்கள் முன்னெடுக்கப் படுவார்கள், சில கடவுள்கள் பின் தள்ளப் படுவார்கள். தமிழர்களின் ஆதி வழிபாட்டின் மூலவேரான முருகன் வழிபாட்டைத் திரிவுபடுத்த என்ன நடக்கிறது என்பதை 1998ல் சென்னையில் நடந்த அந்த முருக மகாநாடு எனக்கு உணர்த்தியது.

மகாநாடு, முடிந்ததும்,பெண்கள் சிறுகதைப் போட்டி விடயமாக அய்யாவிடம் செல்ல வேண்டியிருந்தது.

அய்யாவிடம் நேரே சென்றேன் எனக்குப் புரிந்த விதத்தில்,முருக மகாநாட்டில் நடந்த வாதங்களையும் தர்க்கங்களையும் பற்றி; எனது மனத்துயரைக் கொட்டினேன். வழக்கம்போல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.அவர் மனைவி இந்திராணி அம்மையார், காலைக் காப்பி இருவருக்கும் தந்தார்.அப்போது,காலை எட்டு மணிச் சூரியன்.கன்னத்தில் இளம் சூட்டால் முத்தம் பதித்துக் கொண்டிருந்தான்.

‘ஏன் நீங்கள் இதுபற்றி மேலதிக ஆய்வு செய்யக்கூடாது?’ என்று அன்புடன் கேட்டார். அவருடைய அழகான சிரிப்புடன், அளவற்ற அன்பான குரலில் அவர் கேட்டபோது நான் சிலிர்த்து விட்டேன். எனது பாட்டியார் எனது அருகில் அன்றிருந்தால்,’முருகனைப் பற்றி எழுதச்சொல்லி அய்யா குரலில் நீ; வணங்கும் முருகன்தான் சொல்கிறான்’ என்று சொல்லியிருப்பாள்.

அய்யாவை உற்றுப் பார்த்தேன், எப்போதும்போல் அவர் முகத்தில் ஒரு அழகிய புன்னகை.

‘என்னம்மா யோசிங்கிறீங்களா’ என்று கேட்டார்.அய்யா கேட்பதை என்னால் எழுதமுடியுமா?

சில வினாடிகள் சிந்தித்தேன்..அய்யா கேட்டது ஆண்டவனின் உத்தரவா?

நான் ஒரு முற்போக்குவாதி என்று என்னை நினைத்துக் கொள்பவள். ஆனால் முருகன் அடையாளம் பதித்த பதக்கமன்றி வெளியில் போவதில்லை. அது எனது பாரம்பரியத்தின் அடையாளம்.முருகன் இலங்கைத் தமிழரின் ஆத்மாவுடன் கலந்தவன். எனது தொண்டைக் குழியடியில் முருகனின்,’ஓம்’என்ற பதக்கம் பெரும்பாலும் இருக்கும். அது எங்கள் ஒவ்வொரு மூச்சையும் பாதுகாக்கிறது எங்கள்,தாய், பாட்டி,மூதாதையர் என்போரின் நம்பிக்கை.

.

நான் லண்டனில் முழுநேர வேலை செய்யம் குழந்தை நல அதிகாரி. வேலைப்பழு அதிகம். ஏப்படி இந்தியா வந்து ஆய்வு செய்வது?

ஆனால்,’முருக புத்தகம் எழுதுங்கள்’ அய்யாவின் வேண்டுகோளைச் செயற்படுத்து,எனக்கு நேரம் கிடைத்தபோது இந்தியா சென்றேன் பல முருக தலங்களுக்குச் சென்றேன்.வழிபாட்டு முறைகள்பற்றி, முருகன்,வள்ளி? தெய்வானை பற்றிய பல ‘மக்கள்’ நம்பிக்கை சார்ந்த கதைகளை ஆய்வு செய்தேன். ஸ்கந்தாவுக்கும் முருகனுக்கும் எழுதப்பட்ட பதிவுகளில் என்னென்ன தொடர்புண்டு,முரண்களுண்டு என்று ஆய்வு செய்தேன்.

‘தமிழ்க்கடவுள் முருகனும்’ எழுத்துப் பிரதியை எடுத்துக்கொண்டு கோவை ஞானி அய்யாவிடம் கொடுத்தேன். படித்துப் பார்ப்பதாகச் சொன்னார்.

அந்தப் புத்தகம் எவ்வளவு துரம் பதிவில் வரவேண்டும் என்று விரும்பினார் என்பது எழுத்தில் நீண்டுகொண்டு போகும் கட்டுரையாக விரிந்து விடும்.’தமிழ்க்கடவுள் முருகன்’,தத்துவமும் வரலாறும்’ என்று நான் எழுதிய புத்தகத்தின் கடைசிப் பகுதிகளில்,அவர் என்னிடம் எடுத்த நேர்காணலைப் படித்தால் அவர் இந்த ஆய்வில் எவ்வளவு துரம் தன்னையிணைத்திருந்தார் என்று பலருக்குப் புரியும்.

1998ம் ஆண்டு காலத்தில், பெண்கள் போட்டி சிறுகதைப் போட்டி ஆரம்பித்த காலத்தில் ‘தமிழ் நேயம்’ பத்திரிகையையும் ஆரம்பித்தார். பலவிதமான அறிஞர்களும் அதில் பன்முகத்தன்மையான பல கட்டுரைகளை எழுதினார்கள்.’தமிழ் நேயம்’பதிவுகள் அத்தனையும் சரித்திரத் தடயங்கள்.அவை எங்கள் செல்வம்.

1998;ல் சென்னையில் நடந்த முதலாவது ‘ஸகந்தா-முருகன’ மகாநாட்டுக்குத் தமிழகம் சார்ந்த பல அறிஞர்கள் வந்திருந்தார்கள்.நான் சமர்ப்பித்த ‘முருகனும் இரு மனைவிகளும்;’ என்ற கட்டுரையைப் பலர் பாராட்டினார்கள். அது பற்றியும் எனது எழுத்துக்கள் பற்றியும் பலர் என்னுடன் பேசினார்கள். அதில் தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தைச் சோந்த திரு.டாக்டர் இராசு. புவன்துரை எனது,எழுத்தில் ஆர்வம்; கொண்டார். எனது பல நூல்களைப் படித்தார்.

ஞானி அவர்கள் ‘முருகன்’ பற்றி ஆய்வு செய்யச் சொல்லிக் கேட்டார்.முனைவர் திரு பவுன்துரை அவர்களும்; தமிழகம் சார்ந்த பத்து முனைவர்களும் எனது பத்துப் படைப்புக்களை, ஆய்வு செய்து,’பன்னாட்டுத் தமிழுரும் பண்பாடும்’ என்ற தொகுப்பை 2001ம் ஆண்டு வெளியிட்டார்கள்.

1999ம் ஆண்டு ‘முருகன்’ பற்றிய எனது ஆய்வை அய்யாவிடம் ஒப்படைத்தேன். அந்தப் புத்தகம் 2000ம் ஆண்டு புதிய நூற்றாண்டு பிறந்தபோது அய்யாவின் முழுமுயற்சியால்’ ‘நிகழ்’ அமைப்பின் பெயரில் பதிப்பாளர் திரு.கே. பழனிசாமி (ஞானி) என்ற பெயரில் வந்து பல ஆயவாளர்களின் பாராட்டையும் பெற்றது. சிறந்த ஆய்வு நூல் என்ற பாராட்டை. இந்தியா டு டேய்’ பத்திரிகை கொடுத்தது.

இவையெல்லாம் எனக்கும் கோவை ஞானி அய்யாவுக்கும் உள்ள இலக்கியத் தொடர்பால் நடந்த செயற்பாடுகள். அவர் பெயர் தமிழர் மத்தியில் பரவும்போது அவரின் செயற்பாடுகள் பாரபட்சமின்றி சொல்லப் படவேண்டும்.

கடைசி காலங்களில்,எனது கால்களில் வந்த பிரச்சினையால் அடிக்கடி இந்தியா போகமுடியவில்லை. 2016ம் ஆண்டு, கொங்குநாடு,கலை அறிவியற் கல்லூரி,தமிழ்த்துறையைச் சேர்ந்த த.பிரியா என்பவர்,தனது முனைவர் பட்டப்படிப்புக்கு எனது எட்டு நாவல்களை ஆய்வு செயது எழுதிய புத்த வெளியீட்டையிட்டு கோயம்புத்தூர் சென்றேன். அய்யாவைப் பார்த்தேன்.அவர் தந்த உந்துதலால் இன்னும் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன்.

அவரின் மறைவு என்னைத் துடிக்கப் பண்ணியது.மனித உறவுகள் நிரந்தரமற்றவை,ஆனால் அந்த உறவுகளின் செயற்பாட்டால் ஆக்கப்பட்ட செயல்கள் நிரந்தரமானவை. அவருடன் சேர்ந்து செய்த பல விடயங்கள் தமிழ் சமுதாயத்திற்கு இன்றியமையாதவை.அவரில் மதிப்பு வைத்திருப்பவர்கள் அவர்கள் பன்முகத்தன்மையான செயற்பாட்டைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s