‘உதிர்தலில்லை இனி’ ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய சிறு குறிப்பு.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 27.4.19with sri ranjani-2

புலம் பெயர்ந்த தமிழர்கள்,கனடா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த கால கட்டத்தில் முகம் கொடுத்த பிரச்சினைகள பல. கனடியத் தமிழர்களின் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினைகளில் சிலவற்றை ஸ்ரீரஞ்சனி; தனது கதைகளின் மையக் கருத்தாகப் படைத்திருக்கிறார். அதாவது, தமிழ்க் குடும்பங்களில் தாய் தகப்பனிடையே நடக்கும் பிரச்pனையால்,சோசியல் சேர்விஸ் அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப்; பிரித்துக் கொண்டு போவதால் வரும் துயரங்ளை இரு கதைகளிற் சொல்லியிருக்கிறார்.

அத்தோடு, போர் காரணிகளால் இல்லல் பட்டுப் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளால் சில தாய்மார் மன உளைச்சல்களுக்காளாகுவதும் அதனால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதும் கனடா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் இன,மத,நிற வேறுபாடின்றி எல்லா சமூகத்தினரிடையும் நடக்கிறது.இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றன.

‘உள்ளங்கால் புல் அழுக்கை’ என்ற கதையில், குடும்பப் பிரச்சினை காணமாகத் தாய் தகப்பனைப் பிரிந்து.மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட ஒரு குழந்தை, ‘தன் சுயமையின் வலிமை’ என்ன என்பதை மற்றவர்களுக்குக் காட்ட,’நாளைக்கு ஏதாவது சாமானை உடைக்க வேணும்’ என்று தனக்குள் முடிவெடுப்பது,அக்குழந்தையின் சாதாரண மனவளர்ச்சி.அக்குழந்தையின் வாழ்க்கையில் நேர் கொண்ட குடும்பத்து வன் முறைகளால்.எப்படி அசாதாரணமாக்கப் பட்டு விட்டது என்பதைக் காட்டுகிறது. வன்முறை என்பது, ஒரு குழந்தையின் பாதுகாப்புத் தளமான குடும்பத்தில் மட்டுமல்ல,சமுதாய நல்லுணர்வு, அரசியல் முன்னெடுப்புக்களையும் அழித்துவிடும் ஒரு பயங்கர ஆயதம் என்பதை இக்கதையின் ஒரு; வரி மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

குடும்பத்தில் நடக்கும் பல பிரச்சினைகளால்,அநதக்குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எதிர்காலம் சிதைவதைத் தடுக்க அரசுகள் அந்தக் குழந்தைகளைத் தாய் தகப்பனிடமிருந்து அகற்றுவது பல நாடுகளிலும் நடக்கும் விடயமாகும். ஆனால், தாய் தகப்பனிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில்,கனடா இரண்டாமிடத்தைப் பெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் 1.2 விகிதமான பிள்ளைகளும்,கனடாவில் 1.1 விகிதமான குழந்தைகளும் சோசியல் சேர்விஸின் பாதுகாப்புக்குள் வளர்கிறார்கள்.பிரித்தானியாவில் இந்தத் தொகை 0.55 மட்டுமே.கனடாவில் அரச பாதுகாப்புக்குள் வளரும் 30.40 விகிதமான குழந்தைகள் அந்நாட்டின் முதற்குடியினரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது. இந்திய உப கண்டத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் தொகை தெரியவில்லை.

தாய்தகப்பனிடமிருந்து பிரிந்து வாழ்வதால்; குழந்தைகளின் எதிர்காலம் பலவிதத்திலும் பாதிக்கப் படலாம்.அவர்களின் உடல் உள.கல்வி வளர்ச்சியில் பல தளர்வுகள் நிகழலாம். உதாரணமாக ஒரு அன்பான வீட்டில் தாய்தகப்பன் இருவரின் அன்பிலும் பாதுகாப்பிலும் வளரும் குழந்தைகளை விட, ஒட்டு மொத்த அன்பற்ற யாரோ வீட்டில் வளரும்போது அவர்களின் முழுத்திறமையும் வெளிப்படாது போகலாம்.
இவருடைய பதினாறு கதைகளில் இருகதைகள் இப்படியான கதைகள் என்பதைப் பார்க்கும்போது, கனடாவில் வாழும் தமிழர்களில் 12.5 குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்களா என்ற கேள்வி வந்தது.இவர்களுக்கு உதவி செய்யும் தமிழர்களால் உண்டாக்கப் பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவா என்றும் தெரியாது.

ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத் தொகுப்பின் தலையங்கமான,’ ‘உதிர்தலில்லை இனி; என்ற பெயரைத்; தாங்கிய இவரின் ஆறாவது கதை,காதலிற் தோல்வியுற்ற ஒரு பெண்,மீண்டும் அவளது பழைய காதலரைக் காணும்போது எழுந்த மனத் துயரைத் தொடர்ந்து, சுயநலமாக என்னைப் பாவித்து முடித்த இந்த மனிதனுக்காக ஏன் நான் இவ்வளவு நாளும் என்னை வருத்தி, ஒடுக்கி வாழ்ந்தேன் என்று தன்வாழ்க்கையை அலசும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. இது 2010; ஆண்டில் முதற்தரமும் 2014ம் ஆண்டு இரண்டு முறை பதிவாகியிருக்கிறது. 1984ல் எழுதப்பட்ட இவரின் முதலாவது கதையான,’கனவுகள் கற்பனைகள்’ என்ற கதையின் கருத்துக்கும உள்ள வித்தியாசம் இந்த எழுத்தாளர் என்னவென்று படிப்படியாகத் தன் படைப்புகளில் தன்னம்பிக்கை கொண்ட பெண்களைப் பிரதிபலிக்கிறார் என்பது புரியும்.

ஸ்ரீரஞ்சனி தெல்லிப்பளையிலிருந்து சென்று கனடாவில் வாழ்கிறார். இலங்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபட்டதாரியான ஸ்ரீரஞ்சனிக்கு மூன்று பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். கனடாவில் மொழி பெயர்ப்பாளராகவிருக்கிறார். இவர் இலங்கையில் படித்த படிப்புக்கும் இவர் கனடாவில் தொடரம் வேலைக்கும் ஒருசம்பந்தமும் கிடையாது. இவர் கனடாவில் உத்தியோக ரீதியாக சில தமிழ்களின் சோகமான. சோதனைகள் நிறைந்த உலகத்தைக் காணுகிறார்.தெல்லிப்பளையை ஞாபகப் படுத்தும் கதைகள் எதுவும் கிடையாது. அதெமாதிரி, கனடாவில் வாழும் வேற்றின மக்களுடனான இணைவுகள் நெருங்களைச் சார்ந்த உறவுகளின் அடி;படையிலும் எந்தக் கதையும் கிடையாது. அன்னியர்கள் தமிழர்கள் சந்திக்கும் உத்தியோகஸ்தர்களாக வந்து போகிறார்கள்.

இந்தத் தொகுதி அவருடைய இரண்டாவது சிறு கதைத் தொகுப்பு.இதில் 1984ம் தொடக்கம் 2017ம் ஆண்டுவரை எழுதப்பட்ட பதினாறு கதைகளிருக்கின்றன.33 வருட காலகட்டத்தில் எழுதப்பட்ட இக்கதைகள்,புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கையூடாக அவர் கண்ட அனுபவங்களின் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்கின்றன.

தவிர்க்க முடியாத பல காரணங்களால் சொந்த இடத்தைவிட்டு அன்னியமான சூழலில் தள்ளப் பட்ட மனிதர்கள் தங்கள் கலாச்சாரம் சாராத இன்னொரு கலாச்சாரஆளுமைக்குள்த் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் சில கதைகளில் இடம் பெறுகின்றன.
சீதனம் என்பது வாழ்க்கையை ஆரம்பிக்கக் கொடுக்கப் படும்’ முதல்’ என்ற கருத்தைச் சொல்லும் கணவனின் பேச்சுடன் இவரின் முதலாவது கதையான ‘மனக்கோலம்’ ஆரம்பிக்கிறது.

தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போய் உழைக்கும் பெண்களாக இருக்கிறார்கள்.ஆனாலும் அவர்களிடமும் சீதனம் எதிர்பார்க்கப் படுகிறது. ஆங்கில நாட்டில் உழைக்கும் கணவனும் மனைவியும் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தங்களின் வருமானத்திறகேற்ப,தங்கள் எதிர்கால திட்டங்களை அமைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் காலம் காலமாக எங்கள் சமுதாயம், வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது பெண்களின்,’முதல்தான்’அத்தியாவசியமாகப் பார்க்கப்படுவதும் எங்கள் கலாச்சாரத்தில் ஆண் என்பவர் திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விலை பொருளாகிறார் என்பதும் அந்த விலை அவருக்குக் கிடைக்காவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தலைதூக்கும் என்பதை அக்கதை சொல்கிறது. இவரின் 2010ம் ஆண்டு எழுதிய கதையில் வரும் கதாநாயகி மாதிரி ‘எனது திறமையில், எனது சுயமையில் வாழ்ந்து காட்டுகிறேன்பார்’ என்ற சவாலைத் தனக்குள் எடுத்துக் கொள்கிறாள்.1884ம் ஆண்டுக் கதாநாயகி, ‘ஏதோ கடமை என்ற நிலையில் வாழ்வு வந்து விட்ட வேளையில் அவனது மூன்று வயதுக் குழந்தை காயத்திரியுடன்தான் அவனது பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன’ என்று எழுதுகிறார்.இதில் ஏனோ தானோ என்று வாழ்க்கையையைக் கழிப்பவர் அவனா அவளா என்ற குழப்பம் இருந்தாலும் அந்த உப்புச் சப்பற்ற திருமணவாழ்வில் இருவருமே ஏதோ ஒரு வெறுமையில் பொழுதைக் கழிப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இக் கதைகள் பலவும் குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை. வாழ்க்கை என்ற வண்டியை நகர்த்த உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்ட கணவன் மனைவி இருவரினதும் சங்கமமில்லை என்றால் வரும் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது இரண்டாவது கதையான ‘கனவுகள் கற்பகைள்’. மேற்குறிப்பிட்ட கதைகள் தாய்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் தொடர்ந்து கொண்டிருப்பவை.அவைக்குக் கணவன் மனைவியர்களின் படிப்பு வித்தியாசமும் காரணியாக இருக்கும் என்கிறது இக்கதை.

மூன்றாவது கதை.’யதார்த்தம் புரிந்தபோது’ என்பது மாணவி-ஆசிரியர் இருவருக்கும் வரும் ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. பேராண்மை கொண்ட ஆசிரியர்கள் பெண்களிடமுள்ள தனித்துவத் திறமையை அடையாளம் கண்டு அந்த மாணவிகளின் வாழ்க்கையின் வழியை மாற்றி முன்னேற்றி விடுகிறார்கள். கிராமத்து மாணவியான எனக்கு.என்னை ஊக்கப்படுத்திப் படிப்பில் அக்கறையையுண்டாக்கிய திரு அரசரெத்தினம் மாஸ்டர் என்பவர் கிடைத்திருக்காவிட்டால் என்வாழ்க்கை என்னமாதிரி இருந்திருக்கும் என்ற எனக்குத் தெரியாது. ஆனால் ஆசிரிய தொழிலுக்கு வந்தவர்களில் ஒருசிலர் தங்கள் மாணவிகளை என்னமாதிரித் திசை திருப்ப முயல்வார்கள் என்பதற்கு எங்களுக்குத் தெரிந்த பல கதைகளை இங்கு பேசுபொருளாக எடுக்கலாம். அப்படியான ஒரு ஆசிரியரிடமிருந்து கெட்டித்தனமாக விலகிக் கொண்ட ஒரு மாணவியின் கதையைப் படம் படிக்கிறது மேற்குறிப்பிடப் பட்டகதை.

‘வெளியீட்டு விழா’. என்ற கதை தற்போதைய ‘புத்தக வெளியீடுகள்’ எவ்வளவு தூரம் ஒரு சடங்காக மாறியிருக்கிறது என்பதைச் சொல்கிறது.இன்றெல்லாம் புத்தக வெளியீடுகள் நடப்பது ஏதோ ஒரு கல்யாண விழாமாதிரிப் பரிமாணமெடுத்திருக்கின்றன என்பதை இவர் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறார்;. எனது நினைவின்படி ஒரு கால கட்டத்தில் இலங்கை எழுத்தாளர்களின் வெளியீடுகள் மிகவும் காரசாரமாகவிருக்கும்.அந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தில் வந்திருக்கும் கூட்டம் மிகச்சிறியதாகவிருந்தாலும் கருத்துப் பரிமாறல்கள், தர்க்கங்கள் என்பன தாராளமாகவிருக்கும். எத்தனையோ விதமான அரசியற் கருத்துக்கள் அலசப்படும். ஒரு சர்வகலாசாலை விரிவுரைக்குப் போய்ப் பல விடயங்களை அறிந்த மகிழ்ச்சி மனதில் வரும்.கடைசியில் ஒரு தேனிரும் வடையுடன் கூட்டம் முடியும்.ஆனால் இப்போதெல்லாம் நாவல்கள் என்றால் என்ன என்று தெரியாத. இலக்கிய ரசனையற்ற பலர் ‘எழுதியவருக்குத்’ தெரிந்தவர்கள் என்பதால் மண்டபத்தை நிறைத்திருப்பார்கள். பொன்னாடை போர்த்திப் பூரிப்படைவார்கள்.’இலக்கியம்’ என்ற பெயரில் விற்பனை நடக்கும்.

ஸ்ரீஞ்சனியின் அத் தொகுதியில், திருமணவாழ்வுக்குள் புதைபட்ட சில மனிதர்கள். ஏனோ தானோ என்ற உப்புச் சப்பற்ற வாழ்க்கைக்கப்பால் உடல்,உள திருப்திக்கு அலையும் சில மனிதர்களைப் பற்றிய கதைகளையும் அடக்கியிருக்கிறது. இலங்கை இந்தியா மட்டுமல்ல, உலகத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குத் திருமணம் என்பது,ஒரு சாதாரண மனித எதிர்பார்ப்புகளின்; திருப்தியை முழமைப் படுத்துவதில்லை. வரண்ட திருமணவாழ்வில் ஏதோ ஒரு விதத்தில் ‘சந்தோஷம்’ தேடும் தேடலின் கருத்தை அடித்தளமாக வைத்து சில கதைகளைப் படைத்திருக்கிறார்.

ஒரு சில ஆண்கள்.அந்தத் தேடலிற் சிலவேளைகளில்,சாதாரண குடும்ப சூழ்நிலையைத் தாண்டி சமுதாயத்தில் ஏதோ ஒரு துறையில்,தங்களின் தனித்துவத்தை அடையாளப் படுத்தும் பெண்களைக் குறிவைத்துப் பொறிவைக்கிறார்கள் என்பதை’பச்சை மிளகாய்’ என்ற கதையில் இலாவகமாகப் படைத்திருக்கிறார். ஒரு எழுத்தாளப் பெண் அப்படி அகப்பட்டு மனம் சிதைந்த சம்பவம் இக்கதையில் சொல்லப் படுகிறது.இந்தக் கதையில்,நூடில்ஸ் என்ற உணவில் அளவுக்கதிகமாக அவர் போட்ட ‘பச்சை மிளாகாய்’ அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது.சமுதாயத்திலிருந்து சிலகாரணங்களால் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் சில பெண்களுக்குச் அவர்களைப் பாவித்து முடிக்கவிரும்பும் சில ஆண்களின் பசப்புவார்த்தைகளும். பழக்க வழக்கங்களும் பிடிக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

அவரைச் சந்திக்கப் போன எழுத்தாளப் பெண் அவரைச் சந்தித்து விட்டு வெளிக்கிடும்போது. அந்த ஆண் எழுத்தாளப் பெண்ணிடம் ஒரு’ ஹக்’ கேட்கிறார். அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு, அவளும் அவரும்’ மனரீதியாக மட்டமல்லால் உளரீதியாகவும் கவரப்பட்டிருக்கிறோம்;’என்று அவர் சொல்ல அதை எற்றுக் கொள்ள அவள் முதலிற் தயங்கினாலும் பின்னர் அவளும் அவரின் ஆசையை ஏற்றுக் கொள்கிறாள்.
அதன் நீட்சியாக அவள் அவரைத் தொடர,அவர் ‘ஒழுக்கத்தின் உயர் மனிதராகி’ அவள் தன்னைத் தொந்தரவு செய்வதாகப் போலிசுக்கு முறைப்பாடு கொடுத்து விடுகிறார். அவள் ‘அவருக்குச் செக்ஸ்’ தொல்லை கொடுத்ததாகப் புகார்வருகிறது. இந்தமாதிரி விடயங்கள் இன்று பரவலாக நடக்கிறது.

ஒடுக்கப் பட்ட கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த பெண்கள் அந்த அடக்குமுறையைத் தாண்டி வெளியில் வரும் வரும்போது அவர்களைச் சீரழிக்க எத்தனையோ கேடிகள் இருப்பார்கள் என்பதற்கு அண்மையில் பொள்ளாச்சியில் நடந்த சப்பவங்கள் சாட்சிகளாகும்.

2016ம் ஆண்டில் எழுதப்பட்ட’நிகண்டுகள் பிழைபடவே’ என்ற கதையம் கிட்டத்தட்ட இதேமாதிரியே இருக்கிறது.’திருமணத்தற்குள் திருப்திதராத வாழ்க்கையைத் தொடரும் ஒருத்தரின் உறவில் இன்னொரு பெண்வருவதும் இவரைத் தன்னுடையவராக்க முனைவதும் கதைகயின் கருத்தாக அமைகிறது. அவள் அவரின் மகள்களால் மிகவும் தரம் கெட்ட முறையில் ;வேசை’ என்று பட்டம் கொடுக்கப் படுகிறாள். ஆண்கள் எப்படி நடந்து கொண்டாலும் அவர்களில் பிழைகிடையாது.ஆனால் தடம் புரண்ட சந்தர்ப்பங்களில்.அல்லது ஆண்களால் தடம் புரளப்படவைத்து தரம் கெட்டவளாக நடத்தப்படுவது பெண்களே என்பது புலம் பெயர்ந்த நாடுகளிலும் தொடர்கிறது.

2017ம் ஆண்டில் எழுதிய’சில்வண்டு’ என்ற கதையும் ஒரு எழுத்தாளப் பெண்ணுக்கும் விமர்சகருக்கும் ஏற்பட்ட உறவைப் பற்றிச் சொல்கிறது.’என் இதயபூர்வமான நன்றியுரையில்,அத்தனை பேரையும் குறிப்பிட்டு நன்றி கூறிய எனக்கு என் குடும்பத்தவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏனோ வரவில்லை'(பக்105) என்று அநத எழத்தாளப் பெண் நினைக்கிறார்.அதனால் அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையில் தொடர்ந்த சில மனக் கசப்பான மாற்றங்களால் அவள் வாழ்வில் இன்னொரு கதை பிறக்கிறது. அந்தக் கதைதான ‘சில்வண்டு’. அந்தக் கதையின் கதாநாயகி ஒரு எழுத்தாளர்.அவரின் பெயர் ரஜனி. விமர்சகர் பெயர் பிரேம். அவரின் விமர்சனத்தில்,தமிழ் பேசும் அழகில் கதாநாயகி ரஜனி ஆழ்ந்து மகிழத் தொடங்குகிறார்.அவர் ஒரு நோயாளி. கான்சர் வந்தபோதை அதற்கு ஆயள்வேதச் சிகிச்சை செய்யவேண்டுமென்று அடம் பிடித்த மனைவி பிரிந்து போயிருப்பதாக அவர் சொல்லித் துயர் படுகிறார்.இருவரின் உறவும் நெருங்குகிறது.

அவர் இரண்டாவது வேலையும் செய்துவிட்டு நடுச்சாமம் வந்து ஏதோ சமைத்துச் சாப்பிடும்’ துயர் கதை அவரில் அவளுக்குப் பரிதாபத்தையுண்டாக்குகிறது. ஒருநாள் அவள் அவரைச் சந்தித்து விட்டு வரும்போது ஒரு’ ஹக்’ கேட்கிறார். இதைப் படித்ததும்,கனடாவில் வாழும் தமிழ் ஆண்களுக்கு ‘ஹக்’ அடிக்கடி தேவைப் படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.
ஐப்பது வயதான கதாநாயகி,பிரேமிடமுள்ள இலக்கியத் தொடர்பு நீட்சியின் முத்தத்தில் மூழ்கி ஐந்து வருடம் கழிந்து எழுந்தபோது,பிரேமிடம் ஏன் அவர் பிரிந்திருக்கும் மனைவியை விவாகரத்துச் செய்ய முடியாது ரஜனி என்று கேட்கிறாள். அதற்கு எத்தனையோ சாட்டுக்கள்.அதன்பின்னர்தான் அவரின் ‘ஆண்மை’யின் சுயரூபம் தெரிகிறது. பாலுறவு அலுத்தபின் உறவை வெட்டி விடுகிறார். போலிசாரிடமிருந்து அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று ரஜனிக்குச் செய்தி வருகிறது.
அவரிலுள்ள ஆத்திரத்தில் அவர் தந்த பரிசுகளை அவரிடம் திருப்பிக் கொடுக்க ரஜனியின் சினேகிதி வினோவி சென்றபோது அவளிடமும் அவர் ஒரு’ஹக்’ கேட்டாராம்.இதைப் படித்தபோது ஆண்களை நம்பித் தங்கள் வாழ்நாளில் துயர்பட்ட பல பெண்களின் கதைகள் ஞாபகம் வந்தன. நல்ல காலம் இந்தக் கதாநாயகி அவமானத்தால் தற்கொலை ஒன்றும் செய்து கொள்ளவில்லை. இன்னொருத்தனிடமும் இப்படி ஏமாற மாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவள் தனது வாழ்க்கையைத் தொடர்கிறாள்.
இக்கதை கிட்டத்தட்ட ‘பச்சை மிளகாய்’என்ற சிறுகதை மாதிரியேயிருக்கிறது.

இதுமாதிரி அனுபவங்கள் எழுத்துலகில் மட்டுமல்ல,ஊடகத்தறை,சினிமாத்துறை,அரசியல் மேடைகள் போன்ற பல இடங்களில் தொடர்கின்றன. இது எண்ணிக்கையற்ற பெண்களின் கதை.கோர்ட்டுக்குப் போய் வெல்ல முடியாத ‘காதல்’ கதைகள். சாதாரண உலகில் மிகச் சாதாரணமாகத் தொடரும் இந்த நாடகத்தை வெளியிற் சொல்ல வெட்கப் படுபவர்கள் அதிகம்.
1856ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் கஸ்டாவா புலுபேர்ட் வெளியிட்ட நாவலில் வரும் மடம் போவரி. லியோ டால்ஸ்டாய் 1878ல் வெளியிட்ட எழுதிய நாவற் கதாநாயகி அன்னா கதத்ரீனா போன்றவர்களைப் படைத்த நாலாசிரியர்கள்.திருமணத்திற்கப்பால் காதலையோ காமத்தையோ தேடிய குற்றத்திற்காக அவர்களை மரணமைடயப் பண்ணிவிட்டார்கள்.
திருமண வாழ்வுக்கப்பால் வேறு உறவு தேடிய பெண்களை இவர் கொலை செய்யவில்லை. அவமானத்தால் அவர்களைத் தற்கொலை செய்யப் பண்ணவுமில்லை.
இங்கிலாந்தின் சனத்தொகை 66.85 கோடி.அதில் 42 விகிதம் விவாகரத்தில் முடிகிறது (2019).45-49 வயதுகளில் இவை பெரும்பாலும் நடக்கின்றன.62 விகிதமானவை பெண்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
2018ம் அண்ட 37.06 கோடி மக்களைக் கொண்ட கனடாவில் 41 விகிதமான கல்யாணங்கள் அவர்களின் முப்பதாவது திருமணவாழ்க்கையுடன் விவாகரத்தில் முடிகிறது என்று தகவல(20013 சொல்கிறது. ஒரு திருமணவாழ்க்கையின் ஆயுள் சாதாரணமாக 13.7 வருடங்கள்தான் என்று 2008ம் ஆண்டு தகவல் சொல்கிறது. ஆனால்.103.415 எண்ணிக்கை கொண்ட கனடாத் தமிழர்கள் திருமணப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளாமல் இன்னொரு உறவைத் தேடுவது இவரின் கதைகளில் பரவலாகத் தெரிகிறது.

இக்கதையை இளம் தலைமுறைப் பெண்கள் படித்து,அவர்கள் ‘சினேகிதம்’ என்று ஆரம்பித்து எதிர்நோக்கப்போகும் பிரச்சினைகளை உணரர்தலுக்கு இப்படியான கதைகள் முக்கியம என்பது எனது அபிப்பிராயம்;.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s