லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் நடந்த இராஜேஸ்வாரி பாலசுப்பிரமணியத்தின், தமிழ் நாவலின் சிங்கள மொழி; பெயர்ப்புப் புத்தக வெளியீடு வைபவம் -.12.8.18

லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் நடந்த இராஜேஸ்வாரி பாலசுப்பிரமணியத்தின், தமிழ் நாவலின் சிங்கள மொழி; பெயர்ப்புப் புத்தக வெளியீடு வைபவம் -.12.8.18MP and us at SLHC

இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும் லண்டனில் வாழும் திருமதி இராஜேஸ்வரியின் சாகித்திய அக்கடமி பரிசு பெற்ற ‘பனிபெய்யும் இரவுகள்’ என்ற தமிழ் நாவல் சிங்கள எழுத்தாளரான் மதுலகிரிய விஜயரத்தின அவர்களால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 2016ம் ஆண்டு கொழும்புப் பொது நூலகத்தில் சிங்கள் தமிழ் எழுத்தாளர்கள் அறிஞர்கள் கூடிய மண்டபத்தில் விமரிசையாகக் வெளியிடப்பட்டது.

அதன் நீட்சியாக லண்டனிலும் அந்தப் புத்தகத்தின் வெளியீடு கடந்த 10.8.18ல் இலங்கைத் தூதுவராலயத்தில் மிக விமரிசையாக நடந்தது. லண்டனுக்கான இலங்கைததற்காலிகத் தூதுவர் மாண்புக்குரிய திரு சுகீஸ்வரா குணவார்த்தனா அவர்களின் உதவியுடன் இலங்கைப் பத்திரிகையாளர் திரு அழகப்பெருமாவின் ஒருங்கிணைப்புடன் இவ்விழா ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.

லண்டன் இலங்கைத் தூதரகத்தில் நடந்த இந்த நூல் வெளியீடும் வைபவம்,தூதராலயத்தின் சரித்திரத்தில் நடந்த முதலாவது மொழிபெயர்ப்பு நூல் வெளியீடாகும். அதுவும் ஒரு தமிழ் எழுத்தாளரின் படைப்பு இலங்கைத் தூதராலயத்தில் வெளியிடப்பட்ட வரலாறு இதுவரை எங்கும் நடந்ததில்லை.

இலங்கைத்தற்காலிகத் தூதுவர் திரு சுகிஸ்வரா குணவார்த்தனா தனது உரையில், திருமதி இராஜேஸ்வரியின் சிங்கள மொழி பெயர்ப்புபு; புத்தகத்தை இந்தத் தூதுவராயலயத்தில் ஒழுங்கு செய்வதால் இலங்கையிற் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டும் தனது நாட்டு மக்களின் அமைதியிலும் ஒற்றுமையிலும் மிகவும் ஆழ்ந்த பற்றுள்ள இராஜேஸ்வரியை லண்டனிலுள்ள சிங்கள வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதால் பெருமையடைகிறேன் என்றார்.P1100549

கூட்டத்தை ஒழுங்கு செய்த திரு அழகப்பெருமா அவர்கள் தனது உரையில், தன்னலம் பாராது சாதி.மத.இன.மொழி,பிராந்திய பேதமற்று ஒட்டு மொத்த மக்களின் நன்மைகளுக்காக, முக்கியமாக இலங்கை மக்களின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அவர் எவ்வளவு தூரம் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்பதை அவரின் பற்பல பணிகள் மூலம் நான் நீண்டகாலமாக அறிவேன். இலக்கியம் மட்டுமல்ல, மனித உரிமைப்போராட்டங்கள், பெண்கள் சமத்துரிமைக் கருத்துக்கள், அத்துடன் பன்முக அறிவுகளை வெளிப்படுத்தும் அவரின் படைப்புக்கள் என்பனவற்றைப் பலரும் அறிய வேண்டும் என்பதனால், அவரைக் கவுரப்படுத்த இவ்விழாவை ஒழுங்கு செய்தேன் என்று கூறினார்.

விழாவின் சிறப்பு விருந்தினரான ஹோர்ன்சி-வுட்கிறின் தொகுதிப்; பாராளுமன்றப் பிரதிநியான திருமதி கதரின் வெஸ்ட் வந்திருந்தார்.அவர் தன் உரையில்,இராஜேஸ்வரியின் மனித உரிமைப் பணிகளைத்தான் மெச்சுவதாகவும், இலக்கியவாதியான அவரது மறுமுகத்தை இன்று காணுவதாகவும் இராஜெஸ்வரியைப் பாராட்டும் நிகழ்வில் தன்னையழைத்தற்கு மிகவும் சந்தோசப் படுவதாகவும் தனது தொகுதியில் இராஜேஸவரி ஈடு பட்டு உழைக்கும் பல பொது நல பொது விடயங்களையம் பாராட்டி இராஜேஸவரியைப் புகழ்ந்து பேசினார்.P1100590

சிங்கள வாசகர்களும் புத்திஜீவிகளுமட்டுல்லாமல் இராஜேஸ்வரியுடன் பலகாலமாகப் பல துறைகளில் ஒன்றாகச் சமுக நல வேலைகளில் ஈடுபட்ட- இன்று வரை ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆங்கில தமிழ்,சிங்கள நண்பர்களும் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள்.

சிங்கள வழக்கறிஞரும் எழுத்தாளருமான திருவாளர் ஷாந்தி சேனதீர புத்தகத்தை ஆய்வு செய்து ஒரு ஆளுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.P1100550
அவர் தனது உரையில், இலங்கையில் நடந்த தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிராக லண்டனில் முதன் முதல் தமிழ் மக்களின் நிலையை எடுத்து உலகுக்குச் சொல்ல இராஜேஸ்வரியின் தலைமையில் தொடங்கிய மனித உரிமை அமைப்பான ‘தமிழ் மகளிர் அமைப்பின் மூலம் இலங்கைப் பெண்ணியவாதி திருமதி நிர்மலாவையும் அவருடன் சேர்ந்த பல புத்தி ஜீவிகளையும் இலங்கை அரசுகைது செய்தததையிட்டு பிரித்தானியா பெண்ணிய அமைப்புக்கள் பலவற்றுடன் சேர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக இராஜேஸ்வரி; போராடியதைக்குறித்துப் பேசினார்.

அவர் தனது பேச்சில், இராஜேஸ்வரி தமிழருக்கெதிரான் அரசின் அடக்குமுறக்குமட்டுமல்லாமல், 1971ம் ஆண்ட இலங்கையரசுக்கு எதிராக ஆயதமெடுத்த ஜே.பி.வி;யை அடக்கும்போது, குற்றமற்ற பொதுமக்களையம் அழித்ததை எதிர்த்த மனித உரிமைவாதிகளுடன் சேர்ந்து மனித உரிமைக்கான குரல் கொடுத்தார்என்று குறிப்பிட்டார்

அத்துடன் இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் லண்டனுக்க வந்தகாலத்தில் அவர்களுக்காக இராஜேஸ்வரியின் தலைமையில் உண்டாக்கப்பட்ட தமிழ் அகதி ஸ்;தாபனம்,தமிழ் அகதிகள் வீடமைப்பு என்பவற்றின் மூலம் அகதியாக வந்த தமிழர்களுக்கு அவர் செய்த நற்பணிகளை விவரித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், இராஜேஸ்வரியின் திரைப்படத்துறைப் பட்டப்படிப்பு, மனித உரிமையை முன்வைத்த படைப்புக்களுடன் தொடர்ந்த இலக்கியப்பணி, அதைத் தொடர்ந்து அவருக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைத்த விருதுகள் பற்றிச் சொன்னார்.

அவரின் குறிப்பில்,ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரைகளில் திரு மாலன் அவர்களால் இராஜேஸ்வரியின் எழுத்து எப்படி பிரதிபலிக்கிறது என்பதைச் சில உதாரணங்கள் மூலம் விளக்கினார்;.
திரு மாலன் அவர்களின் ஆங்கிலக் கட்டரையில்:>’Interestingly Rajaeswary balasubramanian does not belong to any of these groups. She is a diaspora writer, but didn’t migrate during the Civil war. She relocated to London after her marriage in seventies. She hails from the region and has written a novel (Thillaiarangkaraiyil) and a few short stories depicting the life of the people in that region, but has not restricted herself to that domain. Her leanings to the leftist ideology are well known and have written about the victims of social oppression and about their sufferings, their humiliations and deprivations. Yet her writing cannot be dismissed as too doctrinaire.
That is the uniqueness of Rajeswari Balasubramanaiam. Her works do not carry a tag or sermon a message. They are born out of her concern for the human kind, not just for Tamils. One can come across, East European refugees, Pakistani immigrants, Caribbean maids, German Jews, Indian librarians and of course Sri Lankan student in her novels’

‘ என்று குறிப்பிட்டதைச் சொன்னார்
அத்துடன் அவர் அருள் நடராஜா என்ற இந்திய புத்திஜீவி,இராஜேஸ்வரியைப் பற்றி எழுதிய சில வரிகளை எடுத்துரைத்தார்,’ இராஜேஸ்வரி,தமிழரின் பாரம்பரியத்தின் நீட்சியைத் தொடரும் ஒரு தமிழ்ப் பெண்,அவரின் உணர்வுகள் இலங்கைக் கலாச்சாரத்துடன் பின்னிபை; பிணைந்தவை,அவரின் புத்தி ஜீவித்துவம் பிரித்தானிய வரைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை,ஆனால் அவரை ஒரு சிலவரிகளில் அடையாளப் படுத்த வேண்டுமானால் அவரை ஒரு அகில உலகவாதி-இன்டநாஷனலிஸ்ட்’ என்றுதான் சொல்ல வேண்டும்.,; என்பதை வந்திருந்தவர்களுக்கு வலியுறுத்தினார்.
அத்துடன் மிக நீண்டகாலமாக இராஜேஸ்வரியுடன் மனித உரிமை, பெண்கள்,குழந்தைகள் சமத்துவம், போன்ற பற்பல அரசியல் வேலைகளில் தொடர்பு பட்டவரும் இராஜேஸ்வரியின் ‘ஒரு தில்லையாற்றங்கரை’ என்ற தமிழ் நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பை எடிட் பண்ணிக் கொண்டிருப்பவரும் பிரித்தானிய ‘கார்டியன்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுபவருமானமான செல்வி சாவித்திரி ஹென்ஸ்மன் அவர்கள், இராஜேஸ்வரியின் அரசியல்,இலக்கியப் பணிகளுடனுனான தனது தொடர்புகளைச் சொன்னார்.அப்போது அவர், பிரித்தானியாவில் மிகநீண்டகாலமாக வாழ்ந்து கொண்டு இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒடுக்கப் பட்ட மக்களுக்கும்,அரசியல் அநீதிகளுக்கும், பெண்கள் சமத்துவத்துக்குமாக எழுதிக்கொண்டுவரும் அவரின் எழுத்துக்கள். ஆங்கில,சிங்கள மொழிகளில் வெளிவந்து பலருக்கும் படிக்ககூடிய விதத்தில் பரவலாக்கப் படவேண்டிய அவசியத்தை அழுத்திச் சொன்னார்.P1100651

தனது நன்றியுரையில் இராஜேஸ்வரி,இன்று இந்த விழா நடப்பதற்குத் தன் முழு ஒத்துழைப்பையும் தந்த பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகத் தற்காலிகமாக் கடமையாற்றும் மயண்புமிக்க திரு சுகிஸ்வர குணவார்த்தனா அவர்களுக்கத் தன் மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொண்டார்.அத்துடன் வைபத்தை ஒழுங்கு செய்த திரு அழகப்பெருமா அவர்களுக்கும், கௌரவ விருந்தினராக வந்து விழாவைச் சிறப்பித்த பாராளுமன்றப் பிரதிநிதி செல்வி கதரின் வெஸ்ட’ அவர்களுக்கும:.தனது மொழி பெயர்ப்பு நூலுக்கு விமர்சனம் வைத்த திரு ஷாந்தி சேனதீர அவர்கட்கும், நீண்டகாலமாகத் தனக்குப் பொதுப் பணிகளில் மட்டுமல்லாது இலக்கியப் பணிகளிலம் உதவி வெய்யும் செல்வி சாவித்திரி ஹென்ஸ்மன் அவர்களட்கும், ‘தமிழ் டைம்ஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தனது ஆங்கிலப் படைப்பக்களை வெளியிட்டு உதவிய திரு இராஜநாயகம் அவர்கட்கும், தனது முதமைiயுயம் பார்க்காமல் விழாவுக்க வந்திருந்து புத்திஜீவி திரு சிவசம்பு அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைச் சொன்னார்.P1100556P1100665P1100665

இறுதியாகக் கூட்டத்திற்குத் தனது பார்ட்னர் ஜெசிக்காவுடன் வந்திருந்த அவரின் கடைசி மகனான சேரனுக்கும், தடுக்கமுடியாத காரணங்களால் இந்தக் கூட்டத்திற்கு வரமுடியதா தனது இருமகன்களக்கும், பல விதங்களிலும் தனக்கு வாழ்க்கை முழுதும் உதவும் தமிழ், சிங்கள,ஆங்கில நண்பர்களுக்கும்,சிங்கள ஊடகத்தினர், சிற்றண்டி செய்த உதவியவர்கள், இராஜேஸ்வரிக்குப் பாராட்டுச் சொலல நேரடியாக வராத காரணத்தால் பூங்கொத்து அனுப்பிய சிங்கள நண்பி நளினி பத்திரான,போன்றொருக்கும்நன்றி சொன்னார்.

லண்டனில் முதன் முதலாக ஒரு மனித உரிமை அமைப்பான தமிழ் மகளிர் அமைப்பையுண்டாக்கி

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s