அண்மையில் லண்டனில் மறைந்த தமிழ் புத்திஜீவி அம்பலவாணர் சிவானந்தன்-(1923-2018) அவர்களின் நினைவாகச் சில குறிப்புக்கள்: ‘பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகள் சிலரில் ஒருத்தர்’:

siva

 

 

 

அண்மையில் லண்டனில் மறைந்த தமிழ் புத்திஜீவி அம்பலவாணர் சிவானந்தன்-(1923-2018) அவர்களின் நினைவாகச் சில குறிப்புக்கள்:

 

பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகள் சிலரில் ஒருத்தர்‘:

 

 

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-17.2.98

 

 

 

உலகின் பல நாடுகளைப் பிரித்தானியர் ஆண்டகாலத்தில் அதாவது,இரண்டாம் உலக யுத்தகால கட்டத்திற்கு முன்னரே,பிரித்தானியாவுக்குத் தங்கள் மேற்படிப்பைத் தொடர வந்த காலனித்துவ நாட்டு மத்தியதர வர்க்கத்தினர் படிப்பு முடியத் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்புவது வழக்கமாகவிருந்தது.

 

 

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின், ஜேர்மனியப் போர்விமானங்களால் சிதைக்கப் பட்ட நாடு நகரங்களைப் புனத்தாருணம் செய்யவும், போரில் இறந்து விட்ட பிரித்தானிய தொழிலாளவர்க்கத்தின் இடத்தை நிரப்பவும் பெருமளவு தொழிலாளர்கள் பிரித்தானியாவின் முக்கிய சேவைகளுக்காக வரவழைக்கப் பட்டார்கள்.

 

 

ஆங்கிலம் படித்த இலங்கைத் தமிழர்கள்,; சிங்களவர்களில் பலரும், இலங்கையில் சிங்களம் மட்டும்சட்டம் வந்தகாலத்திலேயே வெளிநாடுகளுக்குப் புறப்படத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அண்மையில் காலமான அம்பலவாணர் சிவானந்தன் அவர்கள்,1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரத்தால்; அவரின் சிங்கள மனைவியையும் குழந்தைகளையம் அழைத்துக்கொண்டு தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி லண்டனுக்கு வந்தார்..

 

 

இலங்கையில் பொருளாதாரப் படடதாரியான அவர் அங்கு ஒரு வங்கியில் நல்ல உத்தியோகத்திலிருந்தார். அதே மாதிரி நல்ல உத்தியோகம் லண்டனில் கிடைக்காததால் இன வர்க்க ஆய்வுகள்செய்யும் ஒரு லைப்ரரியில் வேலைதொடங்கினார்.அவர் 58ம் ஆண்டு லண்டனுக்கு வந்த கால கட்டத்தில் கறுப்பு இன மக்களுக்கு எதிரான கலவரம் லண்டனிலுள்ள நொட்டிங்ஹில் பகுதியில் நடந்தது. இனவாத அரசியல்வாதியான இனொக் பவுல் என்பவரின் இனவாதப் பேசசுக்கள் வெள்ளையின இனத் துவேசக் கும்பல்களைக் கறுப்பு மக்களுக்கு எதிரான வன்முறைகளைச் செய்யத் தூண்டியது.

 

 

அக்கால கட்டத்தில் பிரித்தானியாவில் தங்களின் ஆழ்ந்த சிந்தனைக் கருத்துக்களால் பிரித்தானிய சட்டதிட்டங்களில் சிறுபான்மையின மக்களின் மனித உரிமையை மையப் பொருளாகக் கொண்டுவந்த புத்தி ஜீவிகளில் இலங்கையைப் பிறப் பிடமாகக்கொண்ட அம்பலவாணர் சிவானந்தன் ஒரு முக்கிய செயலாளியாகும்.

 

 

எங்கள் கலாச்சார பண்பாடுகள் தெரியாத காட்டுமிராண்டிகள் எங்கள் நாட்டின் பாரம்பரியத்தைச் சீரழிக்கிறார்கள்என்ற தோரணையில், இனொக் பவுல் போன்ற இனவாதிகளின் கூற்றுக்;குப் பதிலளிக்கையில், ‘நாங்கள் இங்கே வந்தோம் ஏனென்றால் நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்தீர்கள்எனறு சிவானந்தன் பதில் சொன்னார்.

 

 

அக்கால கட்டத்தில் பல கறுப்பு இன புத்திஜீவிகள், மாணவர்கள் என்பவர்கள் தங்களுக்கு எதிராக எடுக்கப் படும் இனத் துவேசங்களுக்கு எதிராக ஒரு சிறிய அளவில் போராடிக் கொண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாகக் கறுப்பு மக்களைப் பிரதிநிதிப்படுத்த எந்த ஆளுமையான தலைமையும்

 

இருக்கவில்லை.

 

 

பிரித்தானியா தனது காலனித்துவ ஆதிக்கத்தின் மகிமையால் தன்னுடன் பிணைத்து வந்திருந்த பல தரப்பட்ட சமூகநீதிக் கோட்பாடுகள் இரண்டாம் உலக யுத்தத்தின்பின் பிரித்தானியாவுக்குக் குடிபுகுந்த பல்வேறு மக்களின் தேவைகளுக்கு முகம் கொடுத்தபோது பல முரண்பாடுகளையும்,கலவரங்களையும் எதிர் கொள்ளவேண்டி வந்தது. பிரித்தானியவைத் தங்கள் தாய் நாடாகக் கருதிப் பெருமைப் பட்டு லண்டனுக்கு வந்த மேற்கிந்திய கறுப்பு மக்களுக்கு அவர்கள் வந்து இறங்கியதுமே பிரித்தானியாரின் இனத் துவேசம் அப்படமாகத் தெரிந்தது. ஆனாலும் தங்கள் தாய் நாட்டை விட்டு நல்வாழ்க்கை தேடிவந்த கறுப்பு மக்கள் வெள்ளையரின் கொடுமையான பாகு பாட்டை வேறு வழியின்றிப் பொறுத்துக் கொண்டார்கள்.

 

 

1960ம் ஆணடுகளில் அமெரிக்காவில் உள்ள கறுப்பு மக்கள் தங்களின் உரிமைகளுக்காக மார்ட்டின் லூதர் கிங் என்ற அறிவாளியின் தலைமையில் அஹிம்சா போராட்டங்களைத் தொடங்கியிருந்தனர். பிரித்தானியாவில் அதன் பிரதிபலிப்பு லண்டனிலுள்ள, இனத் துவேசத்தால் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காத,பொலிசாரின் தேவையற்ற கெடுபிடிக்காளாகிய இரண்டாம் தலைமுறை,கறுப்பு மக்களை ஒன்று திரட்டியது.அதன் எதிரொலியாகச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பலர் இனவாதத்திற்கு எதிரான குரல்களை எழுப்பினர்.

 

 

அமெரிக்காவில் கறுப்பர்களுக்காகக் குரல் எழுப்பிய மார்ட்டின் லூதர் கிங் 1968ம் ஆண்டு சித்திரைமாதம் நான்காம் திகதி கொலை செய்யப் பட்டார். ஆனாலும்.கறுப்பு மக்களின் உரிமைக்குப் போராடுபவர்கள் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தொடர்ந்தும் தங்கள் போராட்டத்தைக் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.

 

 

அதே வருடம் அதேமாதம்,இனவாதப் பாரளுமன்றவாதியான இனொக் பவுல்@ கறுப்பு மக்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பியனுப்பாவிட்டால்;,பிரித்தானியாவில் இரத்த ஆறு ஓடும்என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

 

இனவாதம் சார்ந்த பிரச்சினைகள், கறுப்பர்கள் அளவுக்கு மீறி பிரித்தானியாவுக்கு வருவதனால் மட்டும் உண்டாகவில்லை. அக்கால கட்டத்தில் ஐரிஷ் மக்களும் நலவாழ்க்கை தேடி பிரித்தானியாவுக்கு வந்தார்கள்

 

 

கறுப்பருக்கும் ஐரிஷ்காரர்களுக்கும் வீடுகள் வாடகைக்குக் கொடுபட மாட்டாதுஎன்ற விளம்பரப் பலகைகள் பகிரங்கமாகத் தொங்கவிடப் பட்டிருந்த அந்தக் காலத்தில் சிவானந்தம் அவர்கள், இனவிரோதம் என்பது ஒட்டுமொத்தமாக நிறம் மட்டும் சார்ந்த கோட்பாடல்ல என்பதைப் பற்றி எழுதினார்;.

 

1970ம் ஆண்டுகளிலேயே பிரித்தானியாவில் பூகம்பமாக வெடிக்கத் தொடங்கிய ஐரிஷ் விடுதலைப் போராட்டமு பிரித்தானிய,இன வர்க்க முரண்பாட்டைக் கூர்மைப் படுத்தின.

 

 

வெள்ளையர்கள் பல நாடுகளிற் தங்கள் ஆளுமையை நிலை நிறுத்தவும் பல நாடுகளைத் தங்கள் பிடியில் வைத்துக் கொள்ளவும் மிகவும் அளவுக்கு மீறிய கொடுமைகளைச் செய்தார்கள் என்பதற்கு ஆங்கிலேயர் எப்படி ஐரிஷ் போராட்டத்தைக்கையாண்டார்கள் என்பதைப் பிரித்தானிய ஏகாதிபத்திய வரலாறுபற்றிப் படிப்போரர் அறிவார்கள். அந்த விடயத்தில் இனவிரோதம் நிறத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

 

 

ஒரே நிறத்தையுடைய வெள்ளையின் ஸ்கொட்லாந்துக்காரரைப் பாவித்து,ஐரிஷ்போராட்டத்தை அடக்கப் பாவித்தார்கள். ஆபிரிக்க,ஆசிய நாட்டு மக்களைத் தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றப் பலநாடுகளுக்கும் அடிமைகளாகவும் கூலிகளாகவும் இழுத்துச் சென்றார்கள். ஆங்கில ஆதிக்கத்தின் மகிமை இரண்டாம் உலகப் போராட்டத்தின்பின் ஆட்டம் கண்டது.

 

பொருளாதாரம் சிதிலமடைந்தது. ஆங்கிலேயரின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்தது. அந்தப் பிரச்சினைகளக்குக் காரணம் அதிகப்படியாக பிரித்தானியாவுக்குப் படையெடுக்கும் கறுப்புநிறத்தவர்கள்என்று இனவாதிகள் பிரசாரம் செய்தார்கள்.

 

 

நாங்கள் 70ம் ஆண்டு லண்டனுக்கு வந்த கால கட்டத்தில் கறுப்பு இன மக்களுக்க எதிராக மட்டுமல்லாது ஆசிய நாட்டாருக்கு எதிராகவுவும் பிரித்தானிய இனத்துவேசம் தலைவிரித்தாடியது. காலனித்துவ நாட்டிலிருந்த வருபவர்களைத் தடைசெய்யக் கோரி,இனவாத அரசியல்வாதியான இனொக் பவுல் வெள்ளையினவாதிகளைத் தூண்டினார். ஆசிய, மேற்கிந்திய நாடுகளிலிருந்து வருபவர்களின் தொகை சட்டென்ற குறைந்து அவுஸ்திரேலியா, கனடா, நியுசீலாந்து போன்ற இடங்களிலிருந்து வரும் வெள்ளையர்களின் தொகை அதிகரித்தது.

 

 

பிரித்தானியாவின் முக்கிய அரசியற் கட்சிகள் வெள்ளையர்களின் நன்மைகளை அடிப்படைப்படுத்தித் தங்கள் நிர்வாகங்களைக் கொண்டு நடத்தினர். இனவாதம் பிரித்தானியாவின் சகல துறைகளிலும் பிரதி பலித்தன. நீதித்துறை, கல்வி, சுகாதாரச் சேவைகள் போன்ற பல சேவைகள் கறுப்பு,ஆசிய மக்களுக்கு எதிரான இனவாதக் கொள்கைகளை மறைமுகமாகச் செயற் படுத்தின.

 

 

இவற்றை எதிர்த்து,70ம் ஆண்டுகளில் லண்டனில் பலவிதமான போராட்டங்கள் நடந்தன.அத்துடன் அகில உலக அரசியல் முரண்பாடுகளை ஒட்டியும் பல போராட்டங்கள் ஊர்வலங்கள் என்பன லண்டனில் நடந்தன. பாலஸ்தீனிய போராட்டம் மட்டுமன்றி வியடநாம் யுத்தம்,பிரித்தானியாவில் அமெரிக்கர் குவிக்கும் அணுஆயுதங்களுக்கெதிரான போராட்டங்கள், பெண்ணியம் பற்றிய பலவிதமான போராட்டங்கள் என்று விரிந்தன.

 

 

1971ம் ஆண்டு இலங்கையில் ஜே.வி.பி போராட்டத்தில் இலங்கை அரசு பொது மக்களைக் கொல்வதை எதிர்த்து இலங்கை வாசிகள் லண்டனில் போராட்டம் செய்தபோது ஒரு சில சிங்கள தமிழ் முற்போக்குவாதிகள் வந்திருந்தார்கள்.அப்போதெல்லாம் சிவானந்தன் பற்றி எங்களுக்குத் தெரியாது.அக்கால கட்டத்தில் உபாலி கூரேய் என்ற சிங்கள் இடதுசாரி லண்டன்வாழ் புத்திஜீவிகளால் மதிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார்.

 

 

1973ல் சிவானந்தன் வேலை செய்த ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரியானார்.அதன்பின் அந்த ஸ்தாபனம்,பிரித்தானியாவின் இனவாதம் பற்றிய பன்முக ஆய்வுக் கருத்துக்களைக் கூர்மையாக எழுதத் தொடங்கியது. அதற்கு ஒருகாரணம்,அரசியல, சமுக முன்னேற்ற ரீதியாக பிரித்தானிய மட்டுமல்லாது,ஐரோப்பாவின் பல நகரங்களிலும் நடந்த பல தரப்பட்ட போராட்டங்களாகும்.

 

 

1968ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் மாணவர்களால் எற்படுத்திய புரட்சி பிரித்தானியாவிலும் பிரதிபலித்தது. பிரான்சில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை அடக்கப் பிரன்ஷ் போலிசார் எடுத்த கடுமையான போக்கை எதிர்த்து மாணவர்களும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் சேர்ந்த கிட்டத்தட்ட 800.000 மக்கள் பாரிஸ் நாகரத்தை ஸ்தம்பிக்கப் பண்ணினார்கள். அரச இயந்திரங்களால் மக்களின் குரல்களை அடக்கும் ஆணவத்தை எதிர்த்து பிரான்ஸ் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல போராட்டங்கள் பரவின.

 

 

அதே கால கட்டத்தில்,ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் அமெரிக்கரின் வியட்நாம் போருக்கெதிராக இடதுசாரி சக்திகளும் மாணவர்கள் ஒன்று திரண்டார்கள். பிரித்தானிய மாணவர்கள் காதல்செய் போர் புரியாதேஎன்று மாணவர்கள் புதிய சொற்பதங்களைப் பாவித்தார்கள்.

 

 

அத்துடன் 60ம் ஆண்டின் நடுப்பகுதிகளில் உலகப் பிரசித்தி பெற்ற பாடகர்களான பீட்டில்ஸ்போன்றவர்கள்,பொருளாதாரத்ரத மட்டும் அடிப்படையாகக்கொண்ட மேற்கத்திய நுகர் கலாச்சாரத்திலிருந்து மனவளத்தை விருத்தி காணும் மாறுதல்காண இந்தியா சென்றார்கள்.சமயரீதியான(ஆத்ம ரீதியான) சில மாற்றங்கள் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டது. ‘ஹரி கிருஷ்ணாஅமைப்பு பிரித்தானியாவில் உணடானது. பெரிய கம்பனிகள் அசைவ உணவுகளுக்காகப் பிரமாண்டமன காடுகளை அழிப்பதை எதிர்த்த இளம் தலைமுறை மரக்கறி உணவுக்கு மாறினார்கள்.

 

 

லண்டனில் பிரசித்தி பெற்றரவி சங்கர்‘,;கோவிந்தாபோன்ற அசைவ உணவகங்கள் முற்போக்குகு; கூட்டங்கள் நடக்கும் இடங்களாக மாறின.

 

ஆங்கிலேய முற்போக்குவாதிகளால் இனவாதத்திற்குஎதிரான அமைப்பு பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் உண்டாக்கப் பட்டது.1976ம்; ஆண்டு இன உறவு சட்டம்அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது.

 

 

அரச அடக்குமுறைகள்,இனசமத்துவம்,தொழிலாளர் போராட்டங்கள், முற்போக்கான சமுகக் கண்ணோட்டங்கள் போன்ற பன்முறைக் கருத்துக்களளையடக்கிய,மேற் கூறப்பட்ட ஊர்வலங்களிலோ,ஒன்றுகூடல்களிலோ திரு சிவானந்தன் அவர்களின் ஈடபாட்டை நான் அந்தக்காலத்தில் காணவில்லை.

 

 

ஆனாலும் பிரித்தானிய நிர்வாகத்தின் பல மட்டங்களலும் மிகவும் ஆழமாகப் பரவியிருந்த இனத்துவேசத்திற்கெதிரான அவரது கண்ணோட்டத்தை விரிவாகப்; பிரித்தானிய அறிஞர்களால் புரிந்து கொள்ளப் பலகாலங்கள் எடுத்தன.

 

 

1972ம் ஆண்டு , உகண்டா ஜனாதிபதி இடி ஆமின் ஆசிய நாட்டாரை வெளியேற்றியதால் பலஇந்திய பாகிஸ்தானியர் லண்டன் வந்து குவிந்தார்கள். வெள்ளையரின் இனத் துவேசம் விரிந்து பரந்தது. ஆசியர்கள் அதிகமாகவாழும் சவுத் ஹோல் என்ற இடத்தில் நமந்த இனத் துவேசத்திற்கான போராட்டத்தில பிளாயர் பீச் என்ற வெள்ளையர் உயிர் இழந்தார்.

 

 

இனப் பிரச்சினை தொடர்ந்தது. கறுப்பு மக்களின் வாழ்வாதாரங்கள் மிக மோசமாகியது. கறப்பு மக்கள்முக்கியமாக இளைஞர்கள் சட்ட விரோதமானஅதாவது போதை மருந்து பாவித்தல், விற்றல், வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதாகப் போலிசார் நடவடிக்கைகள் எடுத்தனர்.

 

போலிசாரின்சஸ்சட்டமுறையால் பல கறுப்பு இளைஞர்கள் தேவையற்ற முறையில் கைது செய்யப் பட்டார்கள்.

 

 

கறுப்பு மக்கள்,தங்களின் வாழ்வு நிலையைப் பிரித்தானிய அரசு கண்டுகொள்ளவில்லை என்று கொதித்தார்கள். அதன் எதிரொலி,சித்திரை மாதம்,1981ம் ஆண்டு பிறிக்ஸ்ரன் என்ற பகுதியில் கறுப்பு மக்களால் பெரிய கலவரமாக வெடித்தது. 300 மக்கள் காயப் பட்டார்கள் பல்லாயிரக் கணக்கான சொத்துக்கள் நாசமாக்கப் பட்டன. கறுப்பு இளைஞர்களால் லிவர்ப்பூல். மான்செஸ்டர் போன்ற நகரங்களிலும் கலவரம் தொடர்ந்தது.

 

 

அதை விசாரித்த பிரபு ஸ்கார்மன் என்பவர்கறுப்பு மக்களுக்கெதிராகத் திட்டமிட்ட எந்த இன வேறுபாட்டுக்கோட்பாடுகளும் அரச நிர்வாகத்தில் கிடையாதுஎன்றார். திரு சிவானந்தம் போன்றவர்கள் பலதடவைகள் சொல்லிக் கொண்டிருக்கும்நிர்வாகக் கோட்பாடுகளின் இனத் துவேசம்என்ற கருத்தைப் பிரபு ஸ்கார்மன் முன்னேடுக்கவேயில்லை.

 

 

சிவானந்தனின் இனத் துவேசத்திற்கான அடிப்படைக் காரணங்கள்பற்றிய விளக்கங்களை வெள்ளையின் நிர்வாகம் நீண்டகாலமாகக் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் சிவானந்தன் அவர்களின் சிந்தனைகளின் கருப் பொருளான, இனத் துவேசத்தின அடிப்படை என்பது, நிற வேறுபாடு மட்டுமல்ல வர்க்க.மேலாதிக்க சிந்தனைகளும் சேர்ந்ததேஎன்பதை. பிரபு மக்போர்ஸன் என்பரால் வெளிப் படையாக அங்கிகரிக்கப் பல வருடங்கள் எடுத்தன.

 

 

1982ம் ஆண்டு இலங்கையில், பெண்ணியவாதியான நிர்மலா தொடக்கம் பல தமிழ்புத்திஜீவிகள் கைது செய்யப் பட்டதை எதிர்த்துத் தமிழ் மகளீர் அமைப்பின் தலைவியாக நான் எடுத்த போராட்டங்களை நடத்தியபோது, பிரித்தானிய விசேட போலிசார் என்னை விசாரிக்கவென்று என் வீட்டுக்கு வந்ததை எதிர்த்து,’ நியுஸ் ஸ்டேட்ஸ்மன்என்ற இடதுசாரி பத்திரிகை மிகவும் கண்டனம் தெரிவித்திருந்தது.

 

 

அந்த விசாரணை பற்றிய, பிரித்தானிய விசேட போலிசாரின் நடவடிக்கை மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு ஆசியப் பெண்மணியைப் பிரித்தானிய வெள்ளையின ஆதிக்கம் இனரீ;தியாகப் பயமுறுத்த முயற்சித்ததா என்ற கேள்விகள் எழுப்பப் பட்டன.

 

 

அந்த விசாரணை ஒரு பிரித்தானிய பிரஜா உரிமையுடன் வாழும் ஆசியப் பெண்மணியின் மனிதஉரிமைகளைப் பயமுறுத்தும் விடயம் என்றும் இதுபற்றிய விளக்கம் கேட்டு, ரோனி பென் போன்ற இடதுசாரி பாராளுமன்றவாதிகளால்; கேள்வி கேட்கப் பட்டது.

 

 

அதைத் தொடர்ந்து திரு சிவானந்தன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார்.

 

82ம்; ஆண்டு கால கட்டங்களில் திரு சிவானந்தன் அவர்களை அவருடைய ஆபிசில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். அதற்கு முன்,அவரது சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.அவரின் நேர்முகச் சந்திப்புக்கள் ஒன்றிரண்டை டி.வியிற் பார்த்திருக்கிறேன்.

 

 

அதன்பின் அவருனான தொடர்புகள் இருந்தகாலத்தில் அவரது நாவல்வென் த மெமெறி டைஸ்நாவல் வாசித்திருக்கிறேன் தனிப் பட்ட முறையில் அவர் ஒரு தனித்துவவாதி; அதாவது,அன்றிருந்த பிரித்தானிய அகங்காரக் கோட்பாடுகளைப் பயமின்றிக் கேள்வி கேட்டவர்.

 

 

அரசாங்க நிர்வாகரக் கொள்கைகள் வெறும் கறுப்பு வெள்ளையின நிறப் பாகுபாட்டை மட்டும் அடிப்படையாகக்கொண்டிருக்காமல், வெள்ளையரின் வர்க்க, காலனித்துவ ஆணவம், என்பனவற்றுடன் பின்னிப் பிணைந்தன என்ற சிவானந்தம் அவர்களுடைய விளக்கங்களை அவரின் கட்டுரைகளைப் படித்தபோது பல மனித உரிமைவாதிகள் புரிந்து கொண்டு செயற்பட்டோம்..

 

 

அப்படியான, தெளிவானஇன. வகுப்புநிலை, காலனித்துவ மிச்ச சொச்சம்நிறைந்த பார்வை சார்ந்த ஆய்வுகளுடன் சம்பந்தப் பட்ட அவரின் அரசியல் பிரக்ஞையை அக்கால கட்டத்தில் லண்டனிலிருந்த இனப் பாகுபாடு சார்ந்த பல போராட்டங்கள் கூர்மைப் படுத்தியது.

 

 

பிறிக்ஸ்ரன் கலவரம் (1981) வந்தபின் வடக்கு லண்டனில் ரொட்டன்ஹாம் பகுதியில் இன்னுமொரு இனக் கலவரம் 1985ம் ஆண்டு வெடித்தது. போலிசார் அதிரடியாக ஒருவீட்டில் நுழைந்ததால் அந்த வீடடிலிருந்த சிpந்தியா ஜரட் என்ற பெண் திடிர் அதிர்ச்சியால் வந்த மாரடைப்பால் மரணமடைந்தார். அதனால் கோபமுற்ற கறுப்பு இளைஞர்களால் கலவரம் ஏற்பட்டது அதனால் கீத் பிளோக்லொக்; என்ற பொலிசார் கொல்லப் பட்டார்.

 

 

இனவிரோதத்தை அரச நிர்வாகம் சரியாக உணராததால் பிரச்சினைகள் தொடர்ந்தன. கறுப்பு மக்களின் பிரச்சினைகள் டார்க்;கஸ் ஹவுஸ் போர்னி கிராண்ட் போன்ற கறுப்பு இன சமுக நலவாதிகளால் முன்னெடுக்கப் பட்டன. ஆனாலும் தொழிற்கட்சி கறுப்பு மக்களின் நலத்திற்குப் பெரிதாக ஒரு மாற்றமும் செய்யாததால். பேர்னி கிராண்ட் என்பவர் பிரித்தானிய தொழிற் கட்சியில் கறுப்பு மக்களுக்கான ஒரு பிரிவு உண்டாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

1993ல் ஸ்ரிவன் லோறன்ஸ் என்ற கறுப்பு இளைஞன் படுபயங்கரமான விதத்தில் வெள்ளையினத் துவேசிகளால் கொல்லப் பட்டான்.அவனைக் கொலை செய்தது யார் என்று தெரிந்தும் போலிசார் யாரையும் கைது செய்யவில்லை. அப்போது லண்டன் வந்திருந்து நெல்ஸன் மண்டேலா அந்த

 

விடயத்தில் தலையிட்டும் ஸ்ரிவனின் மரணம் பற்றிய உண்மைகள் மறைக்கப் பட்டன.

 

ஸ்ரிவனின் குடும்பத்தினரின அயராத போராட்டத்தால் பிரித்தானிய அரசு 1997ம் ஆண்டு ஸ்ரிவனின் கொலை பற்றிய விசாரணையைச் செய்தது.அதன் பின் பல்வேறுகால கட்டத்தில் பற்பல விசாரணைகள் ஸ்ரிவன் லோறன்ஸ் கொலை பற்றிய விளக்கத்தைக்காண முன்னெடுக்கப் பட்டன.

 

 

பிரித்தானியாவிற் தொடரும் இனத் துவேசத்திறகு மூல காரணிகள் ஆராயப் பட்டன. திரு சிவானந்தன் அவர்கள் பல தடவைகள் வலியுறுத்திய பல காரணங்களை,ஸ்ரிவனின் கொலை பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த பிரபு மக்பேர்ஸன்(1999) தனது கவனத்தில எடுத்தார்.பிரித்தானிய பாரம்பரியக் கண்ணோட்டத்தில் பல மாற்றங்கள் நடந்தன. ஸ்ரிவனைக் கொலைசெய்தவர்கள் கைது செய்யப் பட்டுத் தண்டனைக்குள்ளானார்கள்.

 

 

ஆனால் இன்றும் பல இனவெறித்தாக்குதல்கள் தொடர்கின்றன. வெள்ளையின,கிழக்கு ஐரோப்பிய மக்களின் வருகையை எதிர்த்துப் பிரித்தானியரில் கணிசமானவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்ததால் பிரித்தானியா இன்ற ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டியிருக்கிறது.

 

 

இரண்டாம் உலகயுத்தத்தின் பிரித்தானியாவிலிருந்த இனவாதம் இன்று நேரடியாகச் செயல்முறையில் இல்லை என்றாலும், பிரித்தானியாவிற் பிறந்து படித்த ஆசிய ஆபிரிக்க இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் சரிசமமாக நடத்தப்படுகிறார்களா என்றால் அதற்கான பதில் மிகவும் விளக்கமாக ஆராயப்படவேண்டியதாகும்.

 

 

இன, வர்க்க சம்பந்தமான பிரமாண்டமான முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரணங்களைத் தெளிவு படுத்திப் பிரித்தானிய அரச நிர்வாகத்தில் பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் பாகு பாடற்ற சேவை முன்னெடுக்கப் படவேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில்; இலங்கையைச் சேர்ந்த சிவானந்தனும் ஒருத்தர் என்பது வரலாற்றில் பதிக்கப் படவேண்டிய விடயமாகும்.

 

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s