எழுத்தாளனின் முதல் நாவற் பிரசுரம்- ஒரு சரித்திரத்தின் இலக்கிய பிரசவம்
‘ஓரு கோடை விடுமுறை’ இலங்கைத் தமிழ் அரசியலைப் பேசிய முதல் நாவல்;
நேற்றைய (20.1.18) ‘சங்கமம்’ -வீரகேசரி பிரசுரம்
ஒரு குழந்தை பிறக்கும்போது மனித இனப் பெருக்கம் விருத்தியடைகிறது. எதிர்காலத்தில்,அந்தக் குழந்தையின் குடும்பம் சார்ந்த சமுகத்தின் பன் முக வளர்ச்சிக்கும் அந்தக் குழந்தை தன் பங்களிப்பைக் கொடுக்கிறது. ஓரு எழுத்தாளனின் படைப்பும் அவன் வாழும் சமுதாயத்தின் புத்திஜீவித்துவத்தின் ஒரு பிரசவமாகவே கருதப் படுகிறது. ஓரு குழந்தை அக்குழந்தை சார்ந்த சமுதாயத்தின் பன்முகத் தன்iமைகளான,கலை,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் நிலை என்ற பலவற்றைப் பிரதிபலிப்பதுபோல் ஒரு எழுத்தாளனின் படைப்பும் அவன் வாழும் கால கட்டத்தின்,பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
ஓரு குழந்தை அந்தக் குடும்பத்தின் முதற் பிள்ளையானால் அதன் தாலாட்டல்களும் சீராட்டல்களும் மிகவும் விசேடமானவை. அதுபோலவே, ஒரு குடும்பத்தில்;, அவர்களுக்குக் கட்டாயமாக ஒரு ஆண் குழந்தையையோ அல்லது பெண்குழந்தையையோ அவர்கள் எதிர்பார்த்தபோது அது பிரசவமானால் அந்தப் பிரசவமும் மிக முக்கியமாகக் கொண்டாடப்படும்.
ஒரு தாயைப் பொறுத்தவரையில்,அந்தப் பெண் தனது குழந்தையைப் பத்துமாதங்கள் சுமந்து பெற்றெடுக்கும்போது அவளின் எதிர்பார்ப்புகள் பல. குழந்தை ஆணா பெண்ணா, கறுப்பா,சிவப்பா,பிரசவம் சுகமாக நடக்குமா என்பது போன்ற பல கேள்விகள்,அந்தக் குழந்தை இந்த உலகத்தில் தனது உடலைப் பதித்து ஓலமிட்டுத் தனது வரவை அறிவிக்கும் வரை ஒரு தாயின் மனதை உறுத்திக் கொண்டிருக்கும்.
ஒரு எழுத்தானின் சிந்தனைக் கருவில் உதித்த எழுத்தின் வடிவம் அது அச்சேறிப் புத்தகமாக வெளிவந்து அவனின் கையில் கிடைக்கும்போது அவனும் ஒரு தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துத் தன் கையிற் தாங்கிய நிலையையடைகிறான்.
கர்ப்பமான தாயின் பிரசவம் நல்ல விதத்தில் நடக்கக் குழந்தையைச் சுமந்து பிரசவத்தை எதிர்பார்க்கும் தாய் மட்டுமல்லாமல் அக்குழந்தையின் நல்ல பிரசவத்தைக் கவனிக்க ஒரு வைத்தியரோ,மருத்துவமாதோ தேவைப் படுகிறாள். பிரசவத்திற்கு மருத்துவ நிபுணத்தவமும் தேவையாகவிருக்கிறது.இப்படியான சிந்தனைகளால் ஒரு தாய் தனக்குள் தவிப்பது தவிர்க்க முடியாததது.
பெரும்பாலான எழுத்தாளர்களும்அவர்களது முதல் நாவல் பிரசுரிக்கப் பட்டு அவர்களின் கையில் கிடைக்கும் வரை இப்படித்தான் அல்லற் பட்டுக்கொண்டிருப்பார்கள். எனக்கும், எனது முதல் நாவல் ‘ஒரு கோடை விடுமுறை’ பிரசுரமாகி எனது கையில் கிடைக்கும் வரை மேற்குறிப்பிட்ட மன உறுத்தல்கள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன.
ஓரு தரம் இலங்கைக்கு விடுதலைக்குப் போய் வந்ததும் அங்கு கண்டஅரசின் அடக்குமுறை,1977ம் ஆண்டு கலவரத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை அதில் நேரடியாகத் தாக்கப் பட்டவர்கள் விபரித்த விதம்,அடக்கு முறையால் தொடர்ந்து நடக்கும் கொடுமைகளைக் கேள்விப் பட்ட விடயங்கள் என்பவற்றை எப்படி ஒரு புலம் பெயர்ந்து வாழும் மத்தியதர வர்க்கத் தமிழன் கிரகித்துது; துன்பப் படுகிறான் என்ற சொல்;வது மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையை இலக்கிய வடிவில் படைக்கத் துடித்தேன்.
அந்த இலக்கியத்தைப் பிரசுரிப்பதால் இலங்கை அரசு மூலம் என்னென்ன பிரச்சினை வரும் என்று தெரியும். குழந்தையைத் தாலாட்டாமல் பயத்தின் நிமித்தம் அந்தப் படைப்பை ஒரு தேவையற்ற குழந்தை என்று தூக்கியெறிந்தால் என்ன செய்வேன் என்று என் மனம் பதறியது.
ஓரு குழந்தை பழறக்கம்போது அந்தக் குழந்தையை எப்ப மற்றவர்கள் தாலாட்டிப் பாராட்டுவார்கள் என்று ஒரு தாய் எதிர்பார்ப்பதுபோல் ஒரு எழுத்தானும் தனது படைப்பு வந்ததும் மற்றவர்கள் எப்படி அதை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் விமர்சிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் தனக்குள் தவித்துக் கொண்டிருப்பான். ஆனால் எனது எழுத்து இலங்கை அரசின் கொடுமைகளையும் பேசுவதால் எனது படைப்பை எப்படி? யார் மூலம்; பிரசரிப்பது (பிரசவிப்பத) பற்றி திண்டாடிக் கொண்டிருந்தேன்.
ஓவ்வொரு எழுத்தானும் தாங்கள் வாழும் சமுதாயத்தை அவன் புரிந்துகொண்ட யதார்த்த நிலையைப் பின்னணியாக வைத்துத்தான் தனது படைப்பை எழுத்தில் வடிக்கிறான்.அந்த உலகில் போற்றுவதற்குச் சிலரும் தூற்றுவதற்குப் பலருமிருப்பது யதார்த்தம்.
அதுபோலவே,இலங்கைப் பிரச்சினையை மையமாகவைத்து எழுதப்பட்ட எனது படைப்புக்கள் பலராலும் பலதரப்பட்ட விதத்தில் விமர்சிக்கப் பட்டிருந்தன. அவையெல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. ஆனால் ஒரு குழந்தை ஒரு தாயின் கையிற் கிடைக்கும்போது கிடைக்கும்போது அவளுக்கு வரும் பல்வதை உணர்ச்சிகள் சொற்களில் வடிக்க முடியாதவை.அதே மாததிரி, தமிழ் மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக்கிய அந்தப் படைப்பை இலங்கையில் நூல் வடிவிற் பார்க்கத் துடித்தேன்.
எனது நாவல் இலங்கையில் அச்சேறிப் புத்தகமாக வெளிவருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனது உணர்வுகளும் நான் எனது முதற் குழந்தையின் பிரசவத்தை எதிர்பார்த்துக் கொண்டு தவித்தமாதிரியே இருந்தது.
அதற்குப் பல காரணங்களிருந்தன. புத்தகமாகப் பிரசுரமான எனது முதலாவது நாவல் ‘ஒருகோடை விடுமுறை’அந்த நாவல் அக்காலத்தில் புலம் பெயர் நாட்டிலிருந்து இலங்கையில் பிரசுரிக்கப் பட்ட முதற் தமிழ் நாவல் என்ற முக்கியத்துவத்தை மட்டுமல்ல, முக்கியமான ‘தமிழ்த் தேசிய அரசியல்’ பற்றிப் பேசும் நாவலாகவுமிருந்தது.
இந்நாவலின் ‘கர்ப்பம்’ நாங்கள் ஒரு விடுதலைக்கு யாழ்ப்பாணம் சென்றபோது நேரிற் கண்ட, அரச அடக்குமுறையை நேரிற் கண்டதுடன் அத்துடன் பலரும் எங்களுக்குச் சொன்ன இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையின் அவல நிலையையும் கண்டு கொதித்தெழுந்து ஆத்திரத்தில் விடயங்களால் விதைக்கப் பட்டது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏனென்றால்,ஏற்கனவே எனது பல படைப்புக்கள்; இலங்கைத் தமிழரின் பிரச்சினைகளை எழுதியதால் எனது துணிவை பலரும் மெச்சினர். இலங்கை சென்றதும் தமிழ் மக்கள் மனித உரிமையற்று வாழும் பரிதாபமான நிலை இலங்கை அரசிலுள்ள எனது ஆத்திரத்தைப் பன்மடங்காக்கியது.அதை எழுத்தில் படைக்க விரும்பினேன்.
ஓரு தாயின் பிரசவத்திற்குத் தக்க தருணத்தில் பன்முகத் தகைமையானவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழந்தையின் வரவை ஆசையுடன் செயற் படுத்தியதுபோல்,தமிழருக்கெதிரான இலங்கை அரசின் கடும் கண்கணிப்பில்,தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதோ எழுதுவதோ பயங்கரமான விடயமாகக் கருதப் பட்ட காலத்தில், இலங்கைத் தமிழரின் தேசியப் பிரச்சினையை மையப் படுத்திய எனது நாவலைப் பிரசுரிப்பதை ‘அலை’ (யாழ்ப்பாணம்) பிரசுரத்தார் பொறுப்பெடுத்திருந்தார்கள்.
நாவலைப் பிரசுரிக்கும் விடயங்கள் அத்தனையையும் யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர் திரு நித்தியானந்தன் அவர்களும் அவருக்கு உதவியாக பத்மநாப ஐயர் போன்ற பலரும் உறுதுணையாகவிருந்தார்கள். நாவலுக்கு முன்னுரை எழுதப் பல்கலைக விரிவுரையாளர் திருமதி நிர்மலா நித்தியானந்தன் முன்வந்தார். அதை வெளியி;ட ‘ அலை’ பிரசுரமும்,அந்த நாவல் வெளிவரப் பலர் பங்களித்தார்கள்.
இலங்கைத் தமிழரின் தேசியப் பிரச்சினைபற்றி எனது நாவல் வெளிவர முதல் ஞானசேகரனின்’ கருதிமலையும்’ அருளரின்’ லங்காராணியும’ வெளிவந்திருந்தாலும்,எனது நாவல்,’ஒரு கோடை விடுமுறை’ தமிழரின் சுயமையின் வெற்றிக்கு ஆயதம் எடுத்த இளைஞர்களைப் பற்றியும் பேசியிருந்ததால்,இலங்கைத் தமிழரின் அரசியலில் இந்த நாவல் முக்கிய இடம் பெறப் போவதாக நாவல் வெளிவர முதலே பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது.
ஏனென்றால் லண்டனுக்கு வந்த நாட்களிலிருந்து நான் பல படைப்புக்களை எழுதிப் பிரசுரித்திருந்தேன்.அதனால் தமிழ்த்தேசிய இலக்கிய உலகில்’ நன்கு தெரியப் பட்ட எழுத்தாளராக மதிக்கப் பட்டிருந்தேன்.
இந் நாவலின் கரு லண்டனுக்கு வந்து சேர்ந்த ஒரு தமிழனின் வாழ்க்கை பற்றியது. இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ என்ற சட்டம் அமுலானதும், ஆங்கிலத்தில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்திருந்த தமிழ்ப் பட்டதாரிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் செல்லவேண்டிய நிலையையுண்டாக்கியது.அதனால் பல தமிழ் பட்டதாரிகள் லண்டன் வந்து சேர்ந்தார்கள்.
அப்படியான கால கட்டத்தில் லண்டனுக்கு வந்த ஒரு மத்தியதரவர்க்கத் தமிழனான பரமநாதன் என்ற எனது கதையின் கதாநாயகன்,இங்கிலாந்தில் ஆங்கில மனைவியைத் திருமணம் செய்து குழந்தையுடன் வாழும்போது,தகப்பனின் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் செல்கிறான்
அவன் இலங்கையில் கண்ட நிகழ்வுகள் நாவலின் கருவூலமாகிறது.
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய திருமதி நித்தியானந்தன்,’ தனது முதலாவது நாவலிலேயே,திட்டவட்டமாக அரசியற் சார்புடன் இலக்கியம் படைக்கும் ராஜேஸ்வரியின் நாவலுக்கு முன்னுரை எழுதுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.ராஜேஸ்வரியும் நானும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை.ஆனால் அவரின் நேர்மையும் பிரச்சினைகளில் ஈடுபடும் தீவிரமும் அவர் எழுத்துக்களிலிருந்து நான் உணர்ந்துகொண்டவை’ என்று கூறுகிறார்.
அத்துடன் அன்றைய கால கட்டத்தில் புலம் பெயர் உயர் வர்க்கத் தமிழரின் மனதில் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை நிலை பற்றிய குழப்பத்தையும் இந்நாவல் அலசுவதையும் நிர்மலா தனது முன்னுரையில்,’–தாய் நாட்டின் சுமைகளிலிருந்து தப்பிப்போக விழையும் பரமநாதன்கள் கூட தேசிய இன ஒடுக்கலின் கூர்மையினால் இழுத்துவரப்பட்டு அதற்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், எழுத்தாளன் தான் வாழும் காலத்தின் யதார்த்தைத் தனது எழுத்துக்களமூலம் பிரதிபலிக்கிறான் என்பதற்கு இந்த நாவல் உதாரணமாகிறது. ஓரு குழந்தையின் பிரசவம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை நிலையைப் பிரதிபலிப்பதுபோல் இந் நாவலும் லண்டன் வாழ் தமிழர் வாழ்க்கையை யதார்த்தமாகப் பிரதிபலித்ததால் பிரசுரமான சொற்ப நாட்களிலேயே இலங்கை இலக்கியவாதிகளால் மிகவும் விரும்பிப் படிக்கப் படடதாக இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை (வீரகேசரி போன்றவை) விமர்சனங்கள் எழுதின.
இந் நாவல் இலங்கையிலும் இந்தியாவிலும் திரு பத்மநாப ஐயர் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்தியாவில் பிரபலமாகிய முதலாவது புலம் பெயர் தமிழ் இலக்கியப் படைப்பு என்ற புகழைத் திரு ஐயர் அவர்கள் இந்திய இலக்கிய உலகிற் தோற்றுவித்தார்.அத்துடன் இன்று இந்திய உலகில் புலம் பெயர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் ஆணித்தரமான இடம் பெறவும் ‘ ஒரு கோடை விடுமுறை’ நாவல் முன்னோடியாகவிருந்தது.
இந்நாவலால் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலைபற்றி இந்திய இலக்கிய உலகிற் தெரியவந்தது. அக்காலத்தில் இலங்கைத் தமிழரின் நிலைபற்றி மிகவும் பரிதாபப் பட்ட இளம் எழுத்தாளர்களான மாலன் போன்றவர்கள் இந்த நாவல் தந்த தாக்கத்தால்,இலங்கைத் தமிழரின் பரிதாப நிலை கண்டு மவுனமாகவிருக்கும் தென்னகத் தமிழ் அரசியல் வாதிகளைத்தனது எழுத்துக்களாலற் பலமாகத் தாக்கினார்(கணையாழி நவம்பர்1981);. ஓரு குழந்தையின் பிரசவம் அந்தக் குழந்தை பிறந்த குடும்பத்திற்குப் பல மாற்றங்களைக் கொண்டு வருவதுபோல் எனது முதற் படைப்பும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலை பற்றிய புதிய கண்ணோட்டத்தை இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர் வாழும் புலம் பெயர் நாடுகளிலும்; உண்டாக்கியது.
இந் நாவல் இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பட்டுப் பல ஆண்டுகளுக்குப் பின் நான் இந்தியா சென்றிருந்தபோது சென்னைப் பல்பலைக் கழகத்திலும் தஞ்சாவூர்ப் பல்கலைக் கழகத்திலும் ‘ஒரு கோடை விடுமறை’ நாவல் பற்றியும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலை பற்றியும் பல கருத்துக்கள் பேசப் படடன என்பது இந்நாவலின் ‘பிரசவம்’ எத்தனை கேள்விகளைப் ‘பிறக்கப்’ பண்ணியிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.