‘தெய்வீகமான இலங்கைத் தமிழ்;’

‘தெய்வீகமான இலங்கைத் தமிழ்;’

கடந்த வருடம் டாக்டர் திருமதி பிரியா ரமேஸ் அவர்கள் தனது கலாநிதிப் பட்டப்படிப்புக்காக எனது நாவல்களை ஆய்வு செய்து,”ரஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களில் புலம் பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அந்த நிகழ்வுக்குக் கோவைக்குச் சென்றபோது.அவ்விடத்து மக்களுடனான உறவுடன் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் எனது நெஞ்சை நெகிழப் பண்ணின.
இலங்கைத் தமிழர்களில் பலதரப்பட்ட இந்திய மக்களும் வைத்திருக்கும் ஆழமான அன்பும் அளப்பற்ற மரியாதையும் என்னைத் திகைக்கப் பண்ணின.

-நான் சந்தித்த சாதாரணமான மக்களில் பெரும்பாலோர் தமிழ் ஈழத்தை விரும்புகிறார்கள்.
-பெரும்பாலோர் தலைவர் பிரபாகரனிலுள்ள மதிப்பை,அபிமானத்தை, கிட்டத்தட்ட பக்தி நிலையைக் காட்டத் தயங்காத நிலையிலுள்ளவர்களாகவிருக்கிறார்கள்.
– நான் ஒரு ஈழத்தைச் சேர்ந்த பெண்மணி என்றதும் அவர்கள் தரும் மரியாதை அளப்பரியது,(இலங்கை என்ற வார்த்தையை அவர்கள் பாவிப்பது குறைவாகவிருக்கிறது).
-கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக லண்டனில் வாழ்ந்துகொண்டும் இன்னும் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் என்னை மிகவும் ஆச்சரியத்துடனும், மதிப்புடனும், அளவற்ற அன்புடனும் வரவேற்றார்கள்.

சில அனுபவங்கள்:

1. இந்தியா சென்றால் எல்லாப் பெண்களும் சேலைக்கடைக்குச் செல்வது வழக்கம். நானும் அதையே செய்தேன். மிகப் பிரமாண்டமான சேலைக்கடை வைத்திருக்கும் மிகப்பணக்காரர் என்னை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார் என்று சொன்னபோது நான் மிகவும் ஆச்சரியப் பட்டேன். இப்படிப் பணக்காரருக்கு என்னவென்று புத்தகம் படிக்க நேரமிருக்கிறுது என்ற எனது கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன்.’ தமிழ்க் கடவுள் முருகன்’ என்ற எனது புத்தகத்தைப் படித்திருப்பதாகவும் அதனால் மிகவும் பல விடயங்களைத் தெரிந்து கொண்டதாகவும்,அவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்திற்கு (கடவுள் பற்றியது!) நான் முகவுரை தந்தால் சந்தோசப் படுவதாகவும் சொன்னார்.முருகன் பற்றிய புத்தகத்தை,’வழிபாட்டு முறைகள்’ என்ற பரிமாணத்தின் மையத்திற்தான் ஆய்வு செய்தேன்,ஆனால் அதன் தாக்கம் என்னமாதிரி வியாபத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாகவும் ஒரு விதத்தில் ஆச்சரியமாகவுமிருந்தது.

2.எனது பழைய நகையொன்றைத் திருத்திக் கொள்ள ஒரு சாதாரண நகைத் தொழிலாளியிடம் சென்றபோது அவர் நான் எந்த ஊர்என்று கேட்காமலே,எனது பேச்சுத் தமிழின் மூலமாக என்னையொரு,’ஈழத்துப் பெண்மணி’ என்ற தெரிந்துகொண்டு,அவருக்கு வந்த வாடிக்கைக் காரர்களுக்கு முன்னால் எனக்கு உதவி செய்தார்.அவரின் பேச்சில் அவர் எவ்வளவு தூரம் அவர் இலங்கைத் தமிழரை மதிக்கிறார் என்பது ஆச்சரியமாகவிருந்தது.
‘தமிழ் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு,தமிழ் நாட்டையே கொள்ளையடிக்கும் கொடிய தமிழகத்தில்; தமிழர்கள் அபாக்கியசாலிகள்,இலங்கைத் தமிழர்கள் தமிழுக்காகத் தங்கள் உயிரையே வைத்துப் போராடிய உண்மை வீரர்கள்’ என்றார்.அவர் கண்கலங்கியிருந்தன. இலங்கைத் தமிழர்களில் பலரைப் கொன்று குவித்துப் போராட்டத்தைத் தோல்வியடையப் பண்ணியதும்; அந்த ‘தமிழ்ப் போராளிகள்தான்’என்று அவருடன் வாதாடி அந்த மனிதர் பக்தியுடன் வணங்கும்; அவரின் நெஞ்சைப் புண்படுத்த மனமற்று மவுனமாகவிருந்தேன்.

இப்படிப் பற்பல அனுபவங்கள் நேரமிருக்கும்போது தொடர்வேன்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s