அமெரிக்காவிற் தொடரும் ஆயுத பலிகள்

அமெரிக்காவிற் தொடரும் ஆயுத பலிகள்-

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.03.10.17.

ஓரு நாட்டின் நாகரீகம் அந்நாட்டின் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அந்தச் சுதந்திரம் ஒரு மனிதன் தனது சொந்த வீட்டில் மட்டுமல்லாது,பொது இடங்களில், பிரார்த்தனைக் கூடங்களில்,கல்வி நிலையங்களில்,கலாச்சார ஒன்று கூடலிடங்களில், பாதுகாப்பு ஸ்தாபனங்களில் பயமின்ற்p எப்படி பாதுகாப்பாக நடமாடுகிறார்கள்; என்தைப் பொறுத்திருக்கிறது.

கடந்த (01.10.17) சனிக்கிழமை இரவு.அமெரிக்காவின் கேளிக்கை மாகாணம் என்று சொல்லப்படும் லாஸ் வேகஸ் என்ற இடத்தில் திறந்த வெளியில் நடந்துகொண்டிருந்த நாட்டுப் பாடல்கள் சார்ந்த இசைவிழாவுக்குச் சென்றிருந்த கிட்டத்தட்ட இருபத்திரண்டாயிரம் அமெரிக்கப் பொது மக்களில் ஐம்பத்தி ஒன்பது பேர் சட்டென்று அவர்களைக் குறிவைத்துப் பாய்ந்து வந்த குண்டு மழையால் உயிர்களைப் பறி கொடுத்திருக்கிறார்கள்.ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஸ்ரிவன் படோக் என்ற 64 வயது மனிதன் பலரகத் துப்பாக்கிகளாற் பொதுமக்களைத் துளைத்துக் கொட்டியிருக்கிறான்.அவன் இந்தப் பயங்கரக் கொலைகளை ஏன் செய்தான் என்பதற்கான காரணங்களைப் பாதுகாப்புப் படையினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் பொது மக்கள் ஸ்ரிவன் படோக் போன்றவர்களின் ஆயுதங்களுக்குப் அடிக்கடி பலியாகுவது எதிர்பாராத விடயமல்ல.ஆனால் இந்தப் பலிகளின் எண்ணிக்கை பழைய பலிகளின் எண்ணிக்கைளைத் தாண்டி விட்டிருக்கின்றது.
ஆயுத பாவனை அமெரிக்க கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்தது.அவர்களின் தனிமனித பாதுகாப்பு உரிமைபற்றிய இரண்டாவது சாசனத்தில் இதுதெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதனால் அமெரிக்காவில் ஐம்பத்திஐந்து கோடிமக்கள் முன்னூகோடிக்கும் மேலான பல தரப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.

அரசியல் யாப்பில் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பைத் துணைகொண்ட ஆயத விரும்பிகள் பலவாறான ஆயதங்களை வைத்திருக்கிறார்கள். எவ்.பி.ஐ. போன்ற பாதுகாப்பு உயர்தளங்களின் பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே ஒரு அமெரிக்கப் பிரiஐ ஆயத கொள்வனவு செய்யவேண்டுமென்றிருக்கிறது. பலகோடி அமெரிக்கர்; அப்படியான பல கெடுபிடிகளையும் தாண்டிப் பல தரப்பட்ட நவீன ஆயுததாரிகளாக வலம் வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் பாதுகாப்புப் பல தடவைகளில் கேள்விக் குறியாகவிருக்கின்றது.

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பதவியிலிருந்த 2007ம் ஆண்டில் வேர்ஜினியா என்ற இடத்திலுள்ள கல்லூரியொன்றில் முப்பத்தியிரண்டு மாணவர்கள் தங்கள் சகமாணவரின் ஆயுதத்துக்குப் பலியானார்கள்.
திரு.பராக் ஓபாமா ஜனாதிபதியாயிருந்த 2015ம் ஆண்டு தெற்கு கரலைன் என்ற இடத்திலுள்ள கறுப்பு மக்களின் தேவாலயம் ஒன்றில் ஆயதத்துடன் நுழைந்த ஒருத்தனால் பல கறுப்பு மக்கள் சில நிமிடங்களில் கொலை செய்யப்பட்டனர்.

2016ம் ஆண்டு ஓர்லாண்டோ இரவு களியாட்டக்கூடத்தில் 49 பொதுமக்கள் தங்கள் உயிரைப் பறி கொடுத்தனர்.

ஆயுதத்தைத் தங்கள் பாதுகாப்பக்காக வைத்திருக்கும் ஒருசிலர், அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், அரச நிர்வாகத்தில் எதிர்கொண்ட தோல்விகள், இனவெறித் தூண்டுதல்கள், சமமானமற்றதான மனநிலை மாற்றங்களால் ஏற்படும் சட்டென்ற தடுமாற்ற ஆத்திரத்தால் மற்றவர்களைப் பழிவாங்கித் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதன் எதிரொலியாகத்தான் கடந்த காலங்களில் நடந்த ஆயத பலிகள் சாட்சி பகிர்கின்றன.

பல ஜனாதிபதிகள் அவர்களின் பதவிக்கால கட்டத்தில் ஆயதக் கட்டுப்பாடு பற்றிய சட்டதிட்டங்களை மாற்றியமைக்கப் பல யோசனைகளை முன்வைத்தாலும் ஆயதத்தை வைத்திருக்க விரும்பும் மிகவும் பலம் படைத்த ஸ்தாபனங்களைத் தாண்டி ஓபாமா போன்ற ஜனாதிபதிகளே ஆயதக் கட்டுப்பாடு பற்றி ஒன்றும் செய்யமுடியாத கையாலாகத் தன்மையே காணப் பட்டது.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஆயதம் வைத்திருப்பதைத் தங்களின் மிகவும் மேன்மையான சுதந்திரம் என்ற பிரசாரம் செய்யம் என்.ஆர் ஏ (நாஷனல் ட்ரைவுள் அசோசியோசன்) என்ற குழுவினரால் மிகவும் விரும்பப் படுபவர்.அவரின் தேர்தல் செலவுகளக்காக அவர்கள் முப்பது போடி டாலர்ஸ்களைக் கொடுத்ததாகச் செய்திகள் சொல்கின்றன.

பணத்தைத் தாண்டி அரசியலில் எதுவும் செய்யமுடியாது என்பதற்கு ஆயத வெறி பிடித்தவர்களினால் அநியாயமாக அழியும் அப்பாவி அமெரிக்க மக்கள் ஒரு உதாரணம்.
ஊழல்கள் வளரும் நாடுகளில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் களையமுடியாத கறை
படிந்திருப்பதை யார் அகற்றுவார்கள்?

 

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s