‘பாலியல் வன்முறை வழக்கும் சட்டத்தரணிகளும்’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்-3.6.17
”பெண்மை தெய்வீகமானது. ஓரு உயிரின் ஆக்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு தாய் இன்றியமையாதவள். பூமியைத் தாய் என்று வணங்குகிறோம். ஏனென்றால்,இவ்வுலகத்தைத் தாங்கி நிற்பவள் அவள்.
உலகம் மாசு பட்டால் அப்பூமியில் எதுவும் வளராது. ஒரு பெண் மாசு பட்டால் அவள் வாழும் சமுதாயம் மாசுபடும். அந்தக் கொடுமையைச் செய்தவர்களை, அந்த விடயத்தை நீதிப்படுத்துபவர்களைக் கடவுள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்’
‘ஓரு பெண், இரவிற் தனிமையாகப் போகுமளவுக்குச் சுதந்திரமில்லாவிட்டால் அந்த நாhட்டில் யாhருக்கும் சுதந்திரமில்லையென்றார் மகாத்மா காந்தி. ‘
‘கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் அதிர்ச்சியூட்:டும் அளவுக்கு; மௌனமாய்ச் சகித்துக் கொண்டிருப்து பற்றியே நாம் இந்தத்தலைமுறையில்வருத்தமுற வேண்டும்’ என்றார் மார்ட்டின் லூதர்கிங்;.
மேற் குறிப்பிடப் பட்டவை, கடந்த பல வருடங்களுக்குமன், 3.10.05ம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் அவர் வீட்டில் வேலைக்காரியாக ,7வயதில் அவர் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து அவளின் பதின்மூன்று வயது வரைக்கும் 40 தடவைகளுக்குமேல் அவரால் பாலியல்க் கொடுமை செய்யப் பட்ட யோகேஸ்வரிக்காக நடந்த வழக்கைப் பற்றிய கட்டுரையில் நான் எழுதியவைகளாகும்.
அன்றும் அவளைப் பாலியல் கொடுமை செய்த பிரமுகரைக் காப்பாற்ற, பணத்திற்காக எதையும் செய்யும் பல பிரபல தமிழ் சட்டத்தரணிகள் முன்வந்தார்கள்.
யோஸ்வரியின் சார்பில் திரு. றேமடியஸ் என்ற கிறிஸ்தவர் வாதாடினார்.
ஒரு சில நாட்களுக்கு முன் மூதுர் பகுதியிலுள்ள மல்லிகைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளம் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் கொடும் செயல்களுக்கு ஆளாகியது பற்றிய வழக்கு 31.5.17ல் மூதுர் நீதபதி முன் எடுக்கப்பட்டபோது, அந்தத் தமிழ்ப் பெண்களுக்காக வாதாட ஒரு சட்டத்தரணியும் சட்ட மன்றத்தில் இருக்கவில்லை, போலிஸ் தரப்பில் விசாரணைபற்றிய விடயங்களைச் சொல்ல, கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் சார்பில் போலிசார் மட்டும் வந்திருந்தார்கள் என்ற விடயத்தை முகநூலில் கண்டதும், எங்கள் சமுதாயம் எவ்வளவு கேவலமாக மாறிட்டது என்று நினைத்து வெட்கப்படடேன்.
இதைக்கண்டதும், நான் இருக்கும் நாட்டில், றொச்டேல் என்ற நகரில்;,2008ம் ஆண்டு முதல் 2010 வரை ஆங்கில இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு (பதின் மூன்று வயது தொடக்கம்) இஸ்லாமிய ஆண்களால்( இளைஞர்கள் தொடக்கம் 59 வயது வரையிலானவர்கள்) நடத்திய பாலியல் கொடுமைகளுக்கு நீதி தேடிப் போராடிக் குற்றவாளிகளைக் கம்பி எண்ணவைத்திருக்கும் இஸ்லாமிய சட்டத்தரணி திரு நஷீர் அவ்ஸெல் அவர்களை மலர்மாலை சூட்டிப் பாராட்டவேண்டும் போலிருந்தது.
றோச்டேல் நகரில் இளம் பெண்களுக்கெதிரான பாலியல்க் கொடுமைகள் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற இந்து சமயம் கிறிஸ்தவ சமயமென்றோ பார்க்காமல் பல பிரபல வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். கொடுமைகளுக்காளான,பணவசதியற்ற வறுமைமக்குடம்பத்தைச் சேர்ந்த ஆங்கில இளம்பெண்களுக்காக அரச தரப்பில் இஸ்லாமிய சட்டத்தரணி திரு அவ்செல் அவர்கள் வாதாடினார். இங்கு சாதி மதம். இனம் என்ற பிரிவுகளக்கப்பால் திரு அவ்செல் அவர்கள் பாதிக்கப் பட்ட பெண்களுக்காக அயராது பாடுபட்டு வாதாடினார்.
அவரின் கூற்றுப்படி,’இங்கு நாங்கள் பார்க்கவேண்டியவிடயம்,பெண்களுக்கெதிராக நடந்த கொடுமை என்பது மட்டுமே. அதில் ஆண்.பெண் சாதி சமய வித்தியாசம் எதுவும் கிடையாது. பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் பலவீனமானவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள்; செய்வது என்பது எந்த சமுதாயத்திலும் இருக்கக்கூடாது’ என்றார்,
‘பெண்கள் ஏதோ விதத்தில் பெலவீமானவர்கள்;–‘ என்பதின் அர்த்தம், வலிமை படைத்த ஆண்களால் வலிமையற்ற பெண்கள் அதாவது. வயதில் பணத்தில், சுற்றாடல் சூழ்நிலையால் வித்தியாசமான வாழ்க்கை வாழ்பவர்களை கொடுமைப்படுத்தப்படுவது எந்த சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது என்பது அவர் கருத்தாகும்.
மல்லிகைத்தீவு ஏழைப் பெண்களுக்காக வாதாட எந்தச் சட்டத்தரணியும் வரவில்லை என்ற தகவல் வெளிவந்த பின் அந்த ஏழைகளுக்காக நீதி கேட்டு வாதாட முன்வந்திருக்கும் சட்டத்தரணி திரு . ஸ்ரானிஸ்லஸ் செலஸ்டின் அவர்களக்கு மிகவும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
( ஏழைப் பெண் யோகேஸ்வரிக்கு வாதாடிய சட்டத்தரணி றெமடியஸ் மாதிரி இந்த மூன்று ஏழைப்பெண்களுக்கும் வாதாட முன்வந்திருக்கும் இவரும் ஒரு கருணைமனம் கொண்டவராக இருக்கலாம்).
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க மனித நேயமுள்ளவர்கள் அத்தனைபேரும் ஒன்றிணயவேண்டும். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காமலிப்பவர்கள் அந்த அநீதியைச் செய்தவர்களைவிடக் கேவலமானவர்கள்.
(இணைக்கப்பட்டிருக்கும் படம் ஆங்கில இளம் பெண்களுக்கு நீதி கேட்டுப் போராடி வெற்றி பெற்ற றொச்டேல்,மான்செஸ்டர் சட்டத்தரணி திரு.நஷீர் அவ்செல் அவர்களாகும்)