‘சரியான தலைமையற்ற பரிதாபமான இலங்கைத் தமிழ் மக்கள்’

 

 

‘சரியான தலைமையற்ற பரிதாபமான இலங்கைத் தமிழ் மக்கள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- ஆனி 2012
(இந்தக் கட்டுரை ஐந்து வருடங்களுக்;கு முன் எழுதியது,ஆனாலும் தமிழரின் நிலை இன்னும் ஒரு திருப்தியான திருப்பத்தைக் காணாமலிருப்பதால் இதை இங்கு பதிவிடு;கிறேன்)

தலைவர்கள் என்பவர்கள், தங்களைத் தலைவராக்கிய மக்களுக்கு நல்ல வழிமுறைகளைக் காட்டுபவனாகவும்,மக்களுக்காக அமைக்கப் பட்ட நல்ல சட்டதிட்டங்களை அமுல்ப் படுத்துபவனாவும் கருதப்படுகிறார்கள்;. ஆனால், கடந்தசில காலங்களாகத்; தமிழ்க்கூட்டணித்தலைவர்கள் சொல்லும் சில கருத்துக்கள்,மனித நேயத்தில் அக்கறை கொண்ட எங்கள் போன்ற பலரைத் யோசிக்க வைத்தது. அவர்களின் கருத்துரைகள், தங்களைத் தெரிவு செய்த தமிழ் மக்களை இன்னோருதரம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்ல அவர்கள் காய் நகர்த்துகிறார்கள் என்பது அப்படட்டமாகப் புரிகிறது.

 

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இதுவரையும் இலங்கையின் பல தமிழ்த்தலைர்கள்; தூரநோக்கிய அரசியற்பார்வையற்ற ‘சூனியஞானிகள்’ என்பது, இலங்கைத்தமிழரின் பரிதாபநிலையை அலசி ஆராயும் பலரின் கருத்துமாகும். இதற்கு உதாரணமாக, இந்திய வம்சாவழித்தமிழ் மக்களின் குடியுரிமையப் பறிக்கத் துணைபோன தமிழ்த்தலைவர்கள் தொடக்கம், சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த இலங்கைத் தமழருக்கு இலங்கை அரசியலில் மிகவும் சமத்துவமான பிரேரணையைத் தூக்கியெறிந்ததிலிருந்து, 2005ம்ஆண்டு தோர்தலில் தமிழ்மக்களை ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப்பாவிக்காமல் செய்யப்பண்ணியதிலிருந்து,2009ல் பலிகள் பொதுமக்களைப் போர்ப்பலிக்கடாக்களாக பாவித்ததைக் கண்டிக்காமலிந்தது வரைக்கும் பல உதாரணங்களைச்சொல்லலாம்.

இன்று அவர்கள், இதுவரைகாலமும் நடந்து கொண்டதுபோல்,தங்களின் ‘இருத்தலை’ உறுதிசெய்வதற்கு பல நாடகங்களையும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்.இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான ‘ த இந்து’ வுக்குக்கொடுத்த செய்தியின்படி, இலங்கைத் தமிழ்த் தலைவர் ஒருத்தர், இலங்கையில் தமிழருக்கு மட்டுமல்ல,முஸ்லிம்மக்களுக்கும் ஒரு தனிநாடு என்ற வித்தில் இலங்கை மூன்றாகப்பிரிபடவேண்டும் என்ற கருத்தைத்தெர்வித்திருக்கிறார். இப்படியான பேச்சுக்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒவ்வொரு இலங்கை மக்களும் இனமத பாகு பாடன்றி சமத்துவமாக நடத்தப் படவேண்டும் நல்லெண்ண முயற்சிகளைத் தூக்கியெறியும் விடயமாகக் கருதப்படும். அத்துடன் இப்படிப் பொறுப்பற்ற பேச்சுக்கள் சிங்கள் இனப் பேரினவாதத்தைதூண்டி அவர்களிடம் தடியைக்கொடுத்து சிறுபான்மை மக்களுக்கு அடிபோடச்சொன்ன கதையாகத்தான் முடியும்.

அதற்கு முதல் ஒரு சில நாட்களுக்குமுன், இலங்கை ஐக்கியதேசியக்கடசியுடன் சேர்ந்து நடத்திய மே தின ஊர்வலத்தில் இலங்கைத்தேசியக்கொடியை உயர்த்தி, இலங்கை மக்களின் ஒறு;றுமைக்குத்; தன் ஏகோபித்த சம்மத்ததைத் தெரிவித்த தலைவர் அடுத்த சில நாட்களில் மட்டக்களப்பில் நடந்த மகாநாட்டில், மூவின அடிப்படைப் பிரிவினையைப்பேசியது, இலங்கை மக்கள் அத்தனைபேரம் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும என்று யோசிக்கத் தெரிந்தவர்களை மிகவும்ஆத்திரப்படவைக்கிறது.

இலங்கையில் வாழும் பெரும்பான்மையான இனமான சிங்கள மக்கள் சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் குடிபெயர்வதும், வியாபாரம் செய்து வாழ்வதும் ஒருகுறிப்பட்ட அளவுக்குமேலில்லை. ஆனால், சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸலிம்களும் கணிசமானவித்தில் பெரும்பான்மையான மக்களின் பிரதேசமென்று குறிப்பிடு;ம் பகுதிகளில் வாழ்கிறார்கள். அதற்குச் சாட்சியாக, 19மு; நூற்றாண்டு காலம் தொடக்கம் சிங்களப்பகுதிகளுக்குச் சுருட்டு வியாபாரம் செய்யப் போன தீவுப் பகுதியைச்சேர்ந்த தமிழ் வியாபாரிகள் கட்டிய கோயில்கள் இன்னும் அங்கு சாட்சியங்களாகப் பரிணமிக்கின்றன. இன்று கொழும்பில் வாழும் மக்களில் 53 விகிதமானவர்கள் தமிழ்பேசும் மக்கள் என்று சொல்லப்படுகிறது. அத்துடன், மலையகப்பகுதிகளில் பல இடங்களில் இந்திய வம்சாவழித்தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவாழ்கிறார்கள். இனரீதியாக இலங்கையை மூன்றாகப் பிரித்தால், வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றைய பல்லிடங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின கதியென்ன?

தமிழ்த்தலைவர்களுக்கு, உணர்ச்சிவசமான பேச்சுக்களைப்பேசி மக்களை உசார்ப்படுத்துவது அவர்களின் அரசியல் விளையாட்டுக்களில் ஒன்றாகவிருக்கிறது. அதைத்தொடரும் அழிவுகள்பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது என்பதை இதுவரை நடந்த எத்தனையோ விடயங்களும், இன அழிவும் உதாரணங்களாகவிருக்கின்றன.

உலகில் பல பகுதிகளிலும் சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வென்றிருக்கிறார்கள். இன்று அகில உலகுமே ஆச்சரியப்படும் வகையில் தங்கள் அரசியற்போராட்டத் திட்டக் காய்களை நகர்த்தியவர்கள் அமெரிக்காவில் வாழும் கறுப்பு இனமக்களாகும்.

ஆபிரிக்காவின் பல பகுதிகளிலிமிருந்து, பிரித்தானிய, ஒல்லாந்து, ஸ்பானிய,முதலாளிகளால் மிருகங்கள்மாதிரிக் கட்டியிழுத்துக்கொண்டு 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக்கொண்டு செல்லப்பட்ட அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கப் பல சட்டங்கள் 1885ம் ஆண்டு தொடக்கம் வந்தன. ஆனாலும் அமெரிக்காவின் தென்பகுதி முதலாளிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. ஆபிரகாம்லிங்கன் ஜனாதிபதியாகவந்ததும் அமெரிக்க உள்நாட்டுப்போர் வெடித்தது. அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கப்போராடிய அமெரிக்காவின் வடபகுதித் தலைமை வெற்றி பெற்றது.

ஆனாலும் 1950ம் ஆண்டுவரை அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடியது.கறுப்பு மக்கள் படும் கொடுமைக்கெதிராகப் போராடப் பல கறுப்பு இனத் தலைவர்கள் தோன்றினார்கள். அவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவர்களில் ஒரு தலைவராக வளர்ந்த மால்க்கம் லிட்டில் (1925-1965) என்றவர், தனது பெயர் தனது அடிமை வரலாறை;றைக் கொண்டது என்பதால் மால்க்கம் எக்ஸ் என்று தனக்குப்பெயர்வைத்துக்கொண்டார். கறுப்பு மக்கள் வெள்ளையரின் சமயமான கிறிஸ்துவத்திலிருந்து பிரிந்து முஸலிம்களாக மாறவேண்டும் என்று முஸ்லீமாக மாறினார். அவரின் கொள்கைகள் வன்முறையுடன் தொடர்புள்ளதாகக்குற்றம் சாட்டப்பட்டார் 1965ல் அவரின் குழவைச்சேர்ந்த ஒருத்தரால் கொலை செய்யப்பட்டாh.

அமெரிக்காவின் இனவாத்தை எதிர்த்த முதற்பெண்மணியான திருமதி றோசா பார்க் (1913-2005); என்ற கறுப்பு இனப் பெண்ணின் இனஎதிர்ப்பு நடவடிக்கையால், அமெரிக்கா முழுதும் கறுப்பு மக்களுக்கெதிரான போலிஸ் நடவடிக்கை கொடுமையாக நடைமுறைப்படுத்துப்பட்டது. இதைக் கறுப்பு மக்கள் மட்டுமல்லாது சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட வெள்ளையின மக்களும் எதிர்த்தார்கள். வன்முறையால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதையுணர்ந்த கறுப்பு இன மக்களின் தலைவர்களான மார்ட்டின ;லூதர் கிங், ஜெசி ஜக்ஸன் போன்றோர், இன மத வேறுபாடற்ற ஒரு புதிய சமத்துவ சிந்தனை பிறக்க அடித்தளமானார்கள். அவர்களின் சமத்துவததை நோக்கிய பிரசாரம் அமெரிக்க இனவாதிகளையுலுக்கியது. மார்ட்டின் லூதர் கிங் 1968ல் கொலை செய்யப் பட்டார். ஆனால் கறப்பு இனத்துக்காகப் போராடவந்த பல தலைவர்கள் அமெரிக்காவின் பெரிய அரசியற் கட்சிகளில் ஒன்றான டெமொகிராட்டிக் பார்டியில் சேர்ந்தார்கள்.

அதைத்தொடர்ந்து கறுப்பு இனமக்கள் அமெரிக்க தேசியக் கட்சிகளில் தங்களையிணைத்துக் கொண்டார்கள். அமெரிக்க கறுப்பு இன மக்களின் தலைவராக மட்டுமல்லாமல், அமெரிக்காவின் சமத்துவக்கொள்கைகளின் தலைவர்களிலொருத்தரான ஜெஸி ஜக்ஸன் 1984, 88ம் ஆண்டுகளில், அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் வேட்பானாராகக்குதித்தார். அப்போது அவர் வெற்றி பெறாவிட்டாலும் இன்று, உலகமே வியக்கும் வண்ணம், உலகின் மாபெரும் அரசியல் இராணுவ சக்தியான அமெரிக்கா,அவர்களால் ஒருகாலத்தில் அடிமைகளாக இழுத்துக்கொண்டு சென்று, மிருகங்களாக நடத்தப்பட்ட ஆபிரிக்க நாட்டுப் பரம் பரையில் வந்த ஒரு கறுப்பு இனத்தவரைத் தங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்து உலகின் பிரமாண்டமான ஜனநாயக பூமியாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. 1960ல் ஆண்டுகளில் கறுப்பு இன மக்களுக்காக மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடிய திரு ஜெஸி ஜக்ஸன் உலகத்திலேயே மிகவும் மதிக்கப்படும் கறுப்பு இனத் தலைவராகப் பணிபுரிகிறார்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள அரசியற் கட்சிகளிற் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையிற தமிழ்த்; தேசியக் கட்சித் தலைவர்கள் இலங்கையின் தேசியக் கட்சிகளில் தமிழர்கள் சேர்வதை ஒரு தாழ்வான விடயமாக நினைக்கிறார்கள். அப்படிச் சேரும் தமிழர்களைத் ‘துரோகிகள்’ என்று வைகிறார்கள். சிங்கள மக்கள் தமிழரை விடத் தாழ்ந்தவர்கள் எனபது இவர்கள் பலரின் அபிப்பிராயம் என்பது பலருக்கும் தெரியும். இலங்கைத் தமிழ்த் தலைவர்களுக்கு உலக சரித்திரங்களும் மாற்றங்களும் தெரியாமல் இருப்பதும், அரசியற்தூர நோக்கற்றுச் செயற்படுவதும் மிகவும் வெட்கப்படவேண்டிய விடயமாகும். தமிழ்த்தேசியம் தேய்ந்துகொண்டுபோகும்போது உணர்ச்சிப்பேச்சுக்களால்
உசுப்பேத்தி மக்களைப் பல இன்னல்களுக்குள் தள்ளுவதை இன்னும் இன்னும் தமிழ்ப் புத்தி ஜீவிகள் கண்டிக்காமலிபு;பது ஆச்சரியமான விடயமாகும்.

பாராளுமன்றவாதியாகத் தெரிவுசெய்யப் படுபவர்,தன்னைத் தெரிவு செய்த மக்களுக்குப் பல விதத்திலும் உதவி செய்ய எதிர்பார்க்கப்படுகிறார். அவர்களின் கல்வி, பொருளாதாரம், பண்பாடு சமுக விருத்திப்பணிகள், என்பனவற்றை முன்னேற்றுவதில் அவருக்குத் தார்மீகக் கடமையுண்டு. ஓரு தொகுதியின் பாராளுமன்றவாதி என்பவர், தன்னைத் தெரிவுசெய்த தொகுதிக்கும் அந்தத் தொகுதி மக்களுக்கும் பாரிய நல்ல மாற்றங்களைக் கொண்டுவருவது அவரிடம் யதார்த்தமாக எதிர்பார்க்கப்படும் கடமைகளாகும். ஆபிரகாம் லிங்கனின் தொடக்கம் அப்துல் கலாம் வரை அந்தப்பணியைத்தான் மக்களுக்குச் செய்கிருக்கிறார்கள்.

இலங்கையிலுள்ள மக்கள்,தங்களைத் தெரிவுசெய்தவர்கள், தாங்கள் சிரமமின்றிப் பிரயாணம் செய்யத் தேவையான பாதைகளைப் போட்டுக்கொடுப்பதிலிருந்து, உடல் உள் நலக்குறைவுக்கு வைத்தியம்செய்யும் வைத்தியசாலைகளையும், சுற்றூடல் சூழ்நிலையைப்புhதுகாக்கும் நடவடிக்கைகளையும், தொழிற்சாலைகள் போட்டுத் தொழில் வசதிகள் செய்து கொடுப்பது போன்ற பொதுக்கடமைகள் ஒரு பாராளுமன்றவாதியிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ்த் தலைவர்கள் கடைப்பிடிக்கும் முரண்பாட்டு அரசியலால் தமிழ் இனமும் தமிழக் கலாச்சாரமும் சொல்லவொண்ணாத் துயர்களைக் காண்கின்றன. தமிழ்ப்பகுதிகளில் பல கிராமங்களில் இன்னும் மின்சாரவசதிகூடக் கிடைக்காமலிருக்கிறது. பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்கள் கிடையாது. போரினாற்பாதிக்கப்பட்ட விதவைகளுக்கான உதவிகள் சரியாக வளங்கப்படுவதில்லை. புனர்வாழ்வுத் திட்டங்களை அமுல்ப் படுத்துவதில் எத்தனையோ மோசடிகள் நடப்பதாகச் சொல்லப் படுகின்றது. போரின்மூலம் அனாதைகளான ஆயிரக்கணக்கான குழந்தைகளின் முன்னேற்றம் கல்வி என்பன பற்றி ஒரு கட்டுப்பாடான செயற்திட்டம் கிடையாது.

கிழக்கில் பெரு வெள்ளம் பரவிய காலத்தில் கிழக்குக்குப்போயிருந்தபோது மட்டக்களப்பு நகரைச் சுற்றி மட்டும் பத்துக்கும் மேற்பட்ட அனாதை இல்லங்கள் இருப்பதாச் சொல்லப் பட்டது. அவர்களிற் பெரும்பாரோர் தமிழருக்காகப் போராடிய போராளிகளின் குழந்தைகள். இவர்களுக்கான உதவி அவ்வப்போது புலம் பெயர்ந்த நல்ல தமிழர்கள் மூலம் கிடைக்கிறது; ஆனால் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு வரும் தமிழ்த் தலைவர்களோ புலம் பெயர் நாடுகளுக்கு வரும்போது அவர்களுடன் விருந்து சாப்பிட நூற்றுக்கணக்கான டொலர்ஸ்;களை அறவிடுகிறார்கள்!.இவர்களுக்கு இலங்கையிலுள்ள ஏழைத்தமிழர்கள் பற்றிய கவலை பெரிதாகவிருப்பதாகத் தெரியவிலலை.

இன்று, தமிழ்ப்பகுதிகளில் அரசியல் ஒரு வியாபாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. மக்களுக்காக மக்களே தெரிவு செய்த பாராளுமன்றவாதிகள் தங்களை முன்னிறுத்தி அரசியல் செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது. ஊழல்களும், சுற்றுமாத்தும் எண்ணிக்கையற்றவை என்று சாதாரண மக்கள் கவலைப்படுகிறார்கள். இதைக் கேள்வி கேட்கும் புத்திஜீகளும், சமுக உணர்வாளர்களும் ‘தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களாக’ப் பிரசாரப்படுத்தப்படுகிறார்கள். வளரும் இளம் தலைமுறையியனர்,போருக்குப் பின் மாறிவரும் சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொள்ள பல தரப்பட்ட போராட்டங்களுக்கும் முகம் கொடுப்பதால், அரசியல் ஊழல்களுக்கு எதிரான பெரிய போராட்டங்களை முன்னேடுக்கும் சந்தர்ப்பங்களும் உண்மையான சமுதாய விளிப்புணர்வும் இன்னும் சரியாக உருவெடுக்கவில்லை.

1950-70ம் ஆண்டுவரை. வடக்கில் பரவிய முற்போக்குச் சமத்துவச் சிந்தனைகளைச் சிதறடிக்கத் தமிழ்த் தேசியம் உருவாகியது. அந்தக் காலகட்டத்தில், வடக்கில் உருவாகிய முற்போக்கு சக்திகளால் தெற்கிலுள்ள அரசியற் சக்திகளுடன்சேர்ந்து பல முன்னேற்றத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வடக்கு விவசாயி வாழ்க்கையில் முதற்தரமாகத் தனது விவசாய உற்பத்தியைத் தெற்குக்கு ஏற்றுமதி செய்து உழைத்தான்.

அக்கால கட்டத்தில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவிய மறுமலர்ச்கிக் கருத்துக்கள் மாதிரி யாழ்ப்பாணப் புத்திஜீவிகள் சமத்துவமான ஒரு பதிய உலகைப் படைக்கப் பலவழிகளிலும் போராடினார்கள். ஓடுக்கப் பட்ட மக்களால் கோயில் பிரவேசப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. தமிழ்த்தேசியம் அதைச் சிங்களப் போலிசாருடன் சேர்ந்து முறியடித்தது.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை மையப்படுத்தி எழுதிய டானியல் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்பு இந்திய கற்பனாவாத இலக்கியப் படைப்புக்களைப் பின் தள்ளியது;. டாக்டர் கைலாசபதி போன்ற முன்னோடிச் சிந்தனையாளர்கள் பலரை வடக்கு தோற்றுவித்தது. அவர், தமிழ் இலக்கிய வானில் ஒரு பதிய இலக்கிய சிந்தனைக்கு விதை போட்டார்.

இவற்றையெல்லாப் பொறுக்காத தமிழ்த்தேசியம் 70ம் ஆண்டின் ஆரம்பத்தில் தங்கள் பிரிவினைவாதத்தைக் கட்டவிழ்த்த மக்களின் சிந்தனையைத் திசை திருப்பினார்கள். யாழ்ப்பாணத்தில் முற்போக்குவாதிகளின் சிந்தனைகளுடன் முண்டியடிக்க முதல், சிங்கள அரசு கொண்டுவந்த சிங்களம் மட்டும் என்ற சட்டத்தால் பாதிக்கப்படாத-அதாவது, அரசகரும உத்தியோத்தை நம்பிப்பிழைத்து, அதற்கு மொழி ரீதியாகப் பிரச்சினை வந்தால் எந்தத் தாக்கமும் அடையாத விவசாயிகளைக்கொண்ட கிழக்குக்குத் தங்கள் விஷக்காவடியைத் தூக்கிக்கொண்டுவந்தார்கள் தமிழ்த் தேசியவாதிகள்.

அரசு கொண்டுவந்த கல்வி பரவற்படுத்தல் முறையால் மலையக மக்களும் கல்வியில் பின்தங்கிய நிலையிலிருந்த கிழக்கு மக்களும் நன்மையடைவதைப் பொறுக்காத தமிழ்த் தேசியம் தமிழ் மொழி வெறியூட்டி மக்களின் சிந்தனையைத் திசை திருப்பியது. வடக்கில் தேர்தலில் நின்று வெல்ல முடியாத தலைவர்கள் கிழக்குக்குப் பாய்ந்து வந்தார்கள். காலக்கிரமத்தில், கிழக்கின் செந்தமிழ்ச் செல்வனான இராஜதுரை போன்றோரின் செல்வாக்கு அவர்களைப் பொறாமைப் படுத்தியது. தமிழ்ப்பாசிசம் என்ற சக்தி தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தரோகியாக்கும் படலத்தைத் தொடங்கி இராஜதுரையை ஓரம் கட்டியது.

தமிழ்த் தேசியத்தின் பிராந்திய வெறி சமத்துவத்தை மதிக்கும் அத்தனை மக்களாலும் காறித்துப்பப் படவேண்டியது. இங்கிலாந்து லேபர் பார்ட்டியில் தலைவர்களாக இருந்த நீ+ல் கினக், இங்கிலாந்தின் ஒருபகுதியான வேல்ஸ் நாட்டைச்சேர்ந்தவர், கோர்டன் பிறவுன் ஸ்கொட்லாந்தைச்சேர்ந்தவர். அவர்கள் ஆங்கிலேயர் பரம்பரையிலிருந்து வரவில்லை. பிரித்தானிய லேபர் பார்ட்டியில் இன்று பல புலம் பெயர் தமிழர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆதரிக்கும் இலங்கைத் தமிழ்த்தேசியத்தின் பிராந்திய வெறிபற்றி அவர்கள் அக்கறைப் படுவது கிடையாது என்பது தௌ;ளத் தெளிவான விடயம். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் துரத்தப் பட்டபோது, லண்டனில் வாழும் தமிழ்த்தேசியவாதிகள் அதை ஆதரித்ததும் எங்களுக்குத் தெரியும்.

சந்தர்ப்ப வாதிகளான தமிழ்த் தேசியம். இன்று தமிழ் மக்களை பிராந்திய வெறியால் பிளவுபடுத்தியும்,சமயத்தின் அடிப்படையில் அடக்கி நடத்தவும், குரலற்ற சிறு தொழிலாளர்களின்; பொருளாதாரத்தையும் சுரண்டும் ஒரு சக்தியின் காவலனாகத் செயற்படுகிறது.

வடக்கில் இன்று, தமிழ்த்தேசியத்தின் செல்வாக்குக் குறைந்து கொண்டுபோகிறது என்று சொல்லமுடியாது. புலம் பெயர்ந்த தமிழ் இனவாதிகள் எப்போதும் தங்கள் பணியான இனவெறித்தூண்டலைச் செய்து வடபகுதித்தமிழ் மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் தூண்டிக்கொண்டிருப்பார்கள்.

இன்று, முப்பது வருடகாலத் துயருக்குப் பின், தமிழர்களின் பூமியென வர்ணிக்கப்படும் வடக்கில் நடக்கும், சமுதாய அரசியல் என்ற பல மாற்றங்களால் அதிர்ப்தியடையும் முற்போக்கு சக்திகளும், இதுவரை தொடர்ந்த, அறிவு சாராத ஆனால் உணர்ச்சியுட்டப்பட்ட போராட்ட சரித்திரத்தை மாற்றியமைத்துத் தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக்காட்ட விளையும் இளம் தலைமுறையும் தமிழ்த் தலைமைக்குச் சவாலாக வளர்கின்றன. அதனாற் தமிழ்த் தலைவர்கள் வடக்கு தவிர்ந்;த இடங்களில் மேடை தேடுகிறார்கள்.

தமிழ்த் தலைவர்கள்,தங்களுக்கு வடக்கில் வாழ வழியற்றபோது கிழக்குக்குப் படையெடுத்து, ‘தமிழ் உணர்வு’ உசுப்பேத்திக் கிழக்கு மக்களைப் பாவிப்பதில் வெற்றி கண்டவர்கள். இதுவரை நடந்த போராட்டத்தில் மிகப் பெரிய பாதிப்புக்களைக் கண்டவர்கள் கிழக்கு வாழ் ஏழைத்தமிழர்கள். போராட்டத்தினால் பெரிய தொகையான விதவைகளைககொண்ட இடம் கிழக்குப் பகுதியாகும். தமிழ் மக்களை எப்படித் தூண்டி விடடுடப்பாவிப்பார்கள் பின்னர் தூக்கியெறிவார்கள் என்பதற்குப் பல ஆதாரங்களுள்ளன.

வடக்கின் தமிழ்த் தலைவர்களிற் சிலரின் ஆணவம் பன்முகமானது. தங்களுக்குப்பிடிக்காத தமிழர்களை மட்டுமல்லாது வடக்குக்குச் செல்லும் அரசியற் தலைவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். 1977ம் தேர்தல்ப் பிரசாரத்துக்குச் சென்ற ஜே. ஆர். ஜெயவார்த்தனாவுக்குச் செருப்பை எறிந்து ‘வரவேற்றார்கள்’. அதன்பலனாக, ஜே.ஆர், ‘ ஆணவம் பிடித்த தமிழரை அடக்காமல் விடமாட்டேன்’ என்று சபதம் செய்ததும் அதன்பின்னர் 77ம் ஆண்டுக் கலவரம் தூண்டிவிடப்பட்டதும் சரித்திரததில்; திருப்பிப் படிக்கவேண்டியவிடயங்கள்.

அதிலும், மலையகத் தமிழ்த் தலைவர்களையும் கிழக்குப் பகுதித் தமிழ்த் தலைவர்களையும் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு அவர்களின் ‘துரோகிகள்’ பட்டியலைப் பார்த்தால் தெரியவரும்.

; தமிழ்த்தேசியத் தந்தை செல்வநாயகத்தின் நூற்றாண்டு விழாவுக்குச் வடக்கு சென்ற, ஒரு காலத்தில் ‘தமிழ்த் தேசியத்தின் அருச்சுனன்’ என்று கிழக்கு மக்களாற் போற்றப்பட்ட ,இராஜதுரை அவர்களுக்குச் சிவாஜிலிங்கம்பேசிய தரம் கெட்ட தமிழ்த் தேசிய வாய்மொழிகளிலிருந்து, தமிழ்த் தேசியத் தலைமைக்கும கண்ணியம், பண்பு, கவுரவம் என்ற வார்த்தைகளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்பது புரியவரும். இதையும் புரியாமல் இன்னும் தமிழ்த்தேசிய விஷவாயுவை உட்கொள்ளப் பல கிழக்கு முட்டாள்த் தலைவர்கள் முன்னிற்பார்கள்.

தமிழத் தலைவர்களுக்கு ஒரு ஆழமானதோ அல்லது ஆளுமையானதோவான எந்தக் கொள்கையோ பார்வையோ கிடையாது என்பது இதிலிருந்து தெரிகிறது. இன்னும் பரிதாபமான விடயவென்னவெற்றால், இவர்களைப் பல மேட்டுக்குடித் தமிழர்களும் சில புலம் பெயர்ந்த தமிழர்களும் ‘அபரிமிதமான சக்தி கொண்ட தலைவர்கள்’ என்று கொண்டாடுவதுதான்.

பெரிய சக்திகளை வெல்ல, எந்தவிதமான பலமுமற்ற வெற்று வாய்மொழிகளால் மட்டும் முடியாது. தமிழ்ப் பகுதிகளில் பெரிய உலக சக்திகளைக்கவரும் எந்த பொருளாதார வளமும் கிடையாது. வெற்றுப் பேச்சுக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பெரிய அரசியலைக்கொண்டு நகர்த்தமுடியாது. இன்று, தமிழர்களுக்கென இருப்பது வெறும் வாய்சசவடால் மட்டுமே. பல காரணிகளால தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
சுpங்களப்பேரினவாதம் மட்டுமல்ல பொருளாதார தேவையும் இந்த புலம்பெயர் நடவடிக்கைகளுக்குக் காரணிகளாகின்றன. உலகமே ஒரு சிறிய கிராமமாகிக் கொண்டுவருகிறது.

பல காரணிகளால் உலகின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் வெவ்வேறு தேசங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் மட்டுமல்லாது சிங்கள முஸ்லிம் மக்களும் இதில் அடங்குவர். இதனால், இலங்கைத் தமிழர்கள் தொகை ஒட்டுமொத்த சனத்தொமையிலும் நான்காம் இடத்திலிருக்கிறது. அரசியலை மாற்றியமைக்கும் சனத்தொகையோ அல்லது யூத மக்களிடமுள்ள அறிவு ஞானமோ அல்லது பொருளாதார சக்தியோ தமிழ்ப்பகுதிகளிற் கிடையாது.

தமிழத் தலைர்களின் அரசியல் விற்பனைப் பொருள் மக்களையழிக்கும் விஷமான உணர்ச்சிப்பேச்சுக்களாகும்.

தங்களின் நன்மைக்காகத் தலைவர்கள் மட்டுமல்லாது பல பெரிய அன்னிய சக்திகளும் மக்களைப் பிரிக்கும் தந்திரங்களைக் கைக்கொண்டு பிரச்சினைகளையுண்டாக்கி அதிற் தங்களுக்குத் தேவையான ஆதாயததைத்தேடிக்கொள்ளும் என்பதற்கு இன்று மத்திய தரைக்கடல் நாடுகளில் நடக்கும் பல போர்கள் சாட்சியங்களாகும்.

பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைக்கடல் நாடுகள் பற்றிய அரசியல் கலந்துரையாடல் ஒன்றிற் கலந்து கொண்ட ஒரு முஸ்;லிம் அறிஞர் சொல்லும்போது, ‘1975-1991 வரைக்கும் லெபானான் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்தது. ஓவ்வொரு சிறிய இனமும், ஒவ்வொரு சிறிய குழுக்களும் ஒன்றையொன்று அழிக்கப்போராடின. அதிலிருந்து தப்பியோடிய ஒருசிலரின் குழந்தைகள் இன்று பலநாடுகளிலுமிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் லெபனானில் இன்னொரு போர் ஒரு நாளும் வரக்கூடாது என்பதற்காகத் தங்களால் முடிந்தவரையும் பாடுபடுகிறார்கள’ என்று சொன்னார்.

இதேமாதிரி ஒருசில தமிழர்கள் சில நல்ல காரியங்களைச்செய்தால் அவதிப்படும் எங்கள் இனத்துக்குப் புண்ணியம் செய்யும் தர்மவான்களாவார்கள்.இதை முன்னெடுக்கத் தமிழ்த் தலைமை முன்வரவேண்டும். தமிழ்த்தலைமை, தங்களின் தன்னலத்தை முன்வைக்காது, தங்களைத் தெரிவு செய்த மக்கள் நலத்தில் அக்கறை காட்டவேண்டும்.

எங்களிற் பலருக்குத் தெரியும், தமிழ்த் தலைவர்கள் எப்போதும் முரண்பாடுகளை முன்னெடுப்பவர்கள், தர்மம், நியாயம்,ஒழுங்கு.என்பதைப் பற்றி அக்கறைப் படுவதில்லை. தங்கள் இருத்தலை முன்னெடுத்துத் தங்கள் ஆதாயத்தைத்தான் பார்ப்பார்கள். தமிழ்த் தலைமை அதைத்தான் இதுவரை செய்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நன்மை அவர்களின் குறிக்கோளல்ல, பாராளுமனத்திற்குப் போவது,அந்தச் சலுகைகளை அனுபவிப்பது, புலம் பெயர் நாடுகளுக்குச் செல்வது, சந்தோசங்களை அனுபவிப்பது என்பதுபோன்றவைதான் அவர்களின் முக்கிய நோக்காக இருக்கிறாதா என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து பொள்ளவேண்டும்.

வாழ்வியலின் முக்கிய வரைமுறை, சுற்றாடல் சூழ்நிலை மாறும்போது, உயிரினங்கள்.தாவரங்கள் என்பன தங்களால் முடிந்தவரைத் தங்களை மாற்றிக்கொள்கின்றன. பலமுடையவன் பிழைக்கத் தெரிந்தவன் என்பது நியதி; மனித பலம் வெற்றுப்பேச்சை அடிப்படையாககக் கொள்ளவில்லை. பன் முக மாற்றங்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு முகம் கொடுக்கத் தெரிந்ததுதான் மனிதப் பகுத்தறிவு.

இந்தியத் தேசியத்தில் பல்லின மக்களும் இணைந்திருக்கிறார்கள். ஓரு சீக்கியன் பிரதமராகவும் ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு தலித் மகனோ ஒரு பெரிய பதவிiயை அடைய பன்முக அரசியிலிணைவு உதவுகிறது.

உலகத்துக்குத் தங்களைத் தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மடடுமல்ல அரசுடன் சேர்ந்திருக்கும் தமிழ்த் தலைவர்களும் மக்களை முன்னிலைப்படுத்தாமல்த் தங்களை முன்படுத்திக்காரியங்ளைத் தொடர்வதாக மக்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். கடந்த முப்பது வருடங்கள் தமிழ் மக்கள்; பட்ட துயர் நீங்கி எதிர்காலத்தை வளமுடையதாகப்; படைக்கத் தமிழர்களுக்குத் தன்னலமற்ற தமிழ்த் தலைவர்கள் தேவை.

நுண்மையான சிந்தனை, விடயங்களை ஆராயும் தூரப்போக்கு என்பன ஒரு சாதாரண மனிதனினிலிருந்து அரசியலவாதிவரையும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். இலங்கையில் இதை உணர்ந்து கொண்ட பல முஸ்லிம் தலைவர்கள் தேசிய அரசியலிற் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் மக்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தர், ஓருகாலத்தில், இலங்கை ஜனாதிபதியாக வரலாம் (இப்போதைய சட்டம் ஒருகாலத்தில் மாற்றப்படும்). இவை, இப்படியான அரசியல் செயற்பாடுகளின் முன்னோடிகள் அமெரிக்க கறுப்பு மக்களாகும.; இன்றைய நவநாகரிக காலத்தில் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு யார் தலைவர்களாக இருக்க வேண்டுமென்பதையணர்ந்து கூடிய கெதியில் செயற்படாவிட்டால் அந்தச் செயல் எங்கள் எதிர்காலத்துக்கச் செய்யும் மிகவும் கொடுமையான துரோகமாகும்.

 

 

 

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s