தோழர் சுகுவின் (திருநாவுக்கரசு சிறிதரன்)
நூலை முன்வைத்து லண்டனில் நடந்த ஒரு உரையாடல்-22.07.17
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தோழமையின் பணியும் நினைவுகளும்;;:
திரு திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களின் நூலின் தலையங்கம்,’மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்பது, எங்கள் தமிழச் சமுதாயத்தின் மிகப்பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தலையங்கம் என்று நினைக்கிறேன். கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் தொடர்ந்து முகம் கொடுக்கும் அவலங்களுக்கு விடிவு கொடுக்க மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறையொன்று அத்தியாவசியம் என்பதை அவர் எதிர்பார்பதின் ஏக்கம் தலையங்கத்தில் பளிச்சிடுகிறது.
அவர் தனது முகநூலில் அடிக்கடி பதிவிடும் ‘யாழ்மையவாத தமிழ்த் தலைமை’ என்ற நான்கு வசனங்களுக்குள். இந்தத் தலைமையினால் இலங்கையின் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் இழந்து விட்டவற்றை சொல்லவொண்ணா துயர்களுக்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.அந்தத் தலைமைக்கு மாற்றீடாக ஒரு புதிய முற்போக்கான தலைமுறையை எதிர்பார்ப்பது கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னைப் பிணைத்துக் கொண்ட தன்னலமற்றவரிடமிருந்து துளிர்வது யதார்த்மானது.
இபி.ஆர்.எல்.எவ்வைச்சேர்ந்த முற்போக்குவாதிகள்; இங்கிலாந்திலும் இலங்கையிலும் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு எவ்வளவுதூரம் மூலகாரணிகளாகவிருந்தார்கள் என்பது சரித்திரத்தில் எழுதப்படவேண்டியவை. இபி.ஆர் எல் எவ்வின் சமத்துவக் கருத்துக்கள்தான் தமிழ் மக்களின் அரசியலை.அவர்கள் பட்ட துயரை உலகம் அறிய முக்கிய காரணியாயிருந்தது என்பதை எனது பார்வையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தோழர் சுகு சிறிதரனை நான் முதற்தரம் சந்தித்தது 2009ம் ஆண்டாகும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த போர் உச்ச கட்டத்தையடைந்திருந்தபோது, போரின் நடுவில் அகப்பட்டுக்கொண்டு மக்கள் படும் துயர்களைக் கேள்விப் பட்டு, அவர்களுக்காக நாங்கள் ஏதும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலங்கை சென்ற புலம் பெயர்ந்த ஒன்பது நாடுகளைச் சேர்ந்த இருபத்தியொன்பது தமிழர்களில் நானும் ஒருத்தியாகும்.
போரின் நடுவில் புலிகளால் மனித கேடயங்களாக நடத்தப்பட்டுத் துயர்படும் தமிழ்மக்களுக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த மக்களின் துயர் நீக்க எதுவும் செய்யவேண்டும் என்ற நோக்கில் சென்றபோது, புலிகளின் பிரசாரத்தால் கட்டுண்டிருந்த புலம் பெயர்ந்த தமிழர் பலர் எங்களைத் திட்டியபோதும், அரசுடன் ஏதும் பேச்சுவார்த்தைகள் வைத்துக்கொண்டால் எங்கள் உயிருக்கு ஆபத்தையுண்டாகு;கவதாகப் புலி சார்பில் பயமுறுததப்பட்டபோதும்,அங்கு நாங்கள் சென்றபோது,இலங்கையில் எங்கள் வருகையை ஆதரித்தவர்கள், சுகு சிறிதரன், சித்தார்த்தன்,ஆனந்த சங்கரி டக்லஸ் தேவானன்தா போன்ற தமிழ்த் தலைவர்களாகும்.
சுகு போன்ற நல்லுணர்வாளர்கள் தந்த பேராதாரவு எங்கள் போன்றேரின் சேவை தொடர்ந்து, இலங்கையில் இருக்கும் மேற்கத்திய தூதுரகங்கள், இலங்கை அரசியல்வாதிகள்,படைத் தலைவர்கள், மதத் தலைவர்கள்,மாகாண சபை அதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், அவற்றையும் தாண்டி இந்தியாவில் தமிழக அரசு போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு இலங்கையில் அல்லற்பட்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய உதவியது. எங்கள் கடும் உழைப்பால் இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் போரின் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு 50.000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் வந்தது.இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கான இந்தத் திட்டம்,புலம் பெயர்ந்து வாழும் எங்களின் ஒருசிலரின் அயராத உழைப்பால் வந்த திட்டமாகும்.
அந்தக் காலகட்டத்தில், எங்களுடன் புலம் பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்று இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிய தமிழர்களில் பலர், இன்றும் தங்களின் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து இலங்கையில் பல தரப்பட்ட சேவைகளையும் செய்கிறார்கள். உதாரணமாக, லண்டனிலிருந்து சூரியசேகரம்,கொன்ஸ்ரன்டைன், டாக்டர் பாலா, சச்சிதானந்தன், அவுஸ்திரேலியாவிருந்து டாக்டர் நடேசன், சிவநாதன், முருகபூபதி,கனடாவிலிருந்து மனோ போனறவர்கள் இன்றும் இலங்கைத் தமிழர்களுக்குத் தங்களாலான பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சுகு போன்றவர்கள் எங்களுடன் இணைந்து உதவ எங்களுக்கும் அவருக்கும் பொதுவாக இருந்தது அவரின் புத்தகத்தின் தலையங்கமான’ மனிதாபிமானம்’ என்ற பொன் மொழிதான். சுகு போன்றவர்கள் மேன்மையான அரசியற் கோட்பாடுகளால் அரசியலுக்கு உந்தப் பட்டவர்கள். சுகு 1970ம் ஆண்டுகளிலேயே அரசியலிற் குதித்தவர். இ;பி.ஆர்.எல். ஏவ் என்ற கட்சியில் நீண்டகாலமாக இருப்பவர். கம்யுனிசக் கட்சியின் சமத்துவக் கோட்பாடுகளில் ஈர்ப்புடையவர் சமத்துவத்தைக் கற்றலும்,கற்பித்தலும்,நடைமுறைப்படுத்தலும் என்ற சிந்தனையைச் செயற்படுத்துவதில் ஆர்வமுள்ளவர்.
எனக்கும் அந்தக் கட்சியினருக்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது.1970ம் ஆண்டுகளில்,லண்டனுக்கு வெளியில் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு அப்போது இலங்கையில் உருவாகிக்; கொண்டிருந்த போராட்ட அரசியற் கட்சிகள் பற்றி அதிக விபரங்கள் தெரியாது, ஈரோஸ் அமைப்பு லண்டனிலிருந்தது. ஈரோஸ் ராஜநாயகம் வீட்டில் இலக்கியக் கூட்டங்களை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தோம்.
1970 ம் ஆண்டின் நடுப்குதியில் லண்டனில். இலங்கையைச் சேர்ந்த முற்போக்கு மாணவர்கள் (புரநள) என்ற மாணவர்கள் அமைப்பை உண்டாக்கியிருந்தார்கள். நாங்கள் அக்காலத்தில் லண்டனுக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்தோம். அக்கால கட்டத்தில் லண்டன் வாழ் தமிழர்கள் பெரும்பாலோர், மேல்வர்க்கத்து. பழம் கொள்கையுள்ள பிற்போக்குவாதிகளாகவிருந்தார்கள்.வட்டுக்கோட்டை மகாநாட்டுக்கு முன் தமிழ் ஈழக் கொள்கைபற்றிய கூட்டங்கள் லண்டனில் நடந்தன. யுதார்த்தமற்ற அந்தக் கொள்கைக்குப் பல முற்போக்குவாதிகள் உடன்படவில்லை.
நான் ஒரு மனிதாபிமான எழுத்தாளி, யாழ்ப்;பாணத்தில் படிக்கும்போது நான் கண்ட கொடுரமான சாதியமைப்பு, சீதனக் கொடுமையால வந்த தாக்கங்கள் லண்டனிலும நடைமுறையிலிருப்பதைப பற்றி லண்டன் முரசு பத்திரிகையில் எழுதி வந்ததால் பிற்போக்குவாதிகளிடமிருந்து பல எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டி வந்தது. திரு பாலசுப்பிரமணியம் ஒரு இடதுசாரி,இபி;ஆர்.எல்எவ் ஆதரவாளர். நான் சமத்துவ சமுதாயத்தை எதிர்பார்த்து எழுதிக் கொண்டிருந்த லண்டன் முரசு பத்திரிகை ஆசிரியர் சதானந்தன் அவரின் நண்பர் ஆனால் இடது சாரியல்ல.அவர்கள் இருவரும் எனது எழுத்துக்கு ஆதரவு தந்தார்கள். எனது மைத்துனர்களும் முற்போக்குக் கருத்துக்கொண்ட அவர்களின் சினேகிதர்கள் சிலரும் எனது ஆதரவாளர் கூட்டத்தில் அடங்குவார்கள்.
அந்தக் காலகட்டத்தில். ‘இ.பி;.ஆர்.எல் எவ்’ இயக்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் எங்கள் வீடு தேடி வந்தார்கள். எங்களைத் தேடிவந்த இபி;ஆர்.எல்.எவ் மாணவர்கள், ஒரு’ சமத்துவ’சமுதாயத்தை’ உருவாக்கும் கொள்கைகளுடையவர்கள் என்று அவர்களின் பேச்சிலிருந்து புரிபட்டது.
இலங்கையிலிருந்து வரும்போது யாழ்ப்பாணத்தில் இப்படியான முற்போக்குக் கொள்கைகள் பரவலாக இருந்தாலும், லண்டனில் உள்ளவர்கள் எங்களைப் போன்ற சீர்சிருத்த ,முற்போக்குக் கொள்கைகளுடன் பலர் இருப்பது சந்தோசமாகவிருந்தது.
லண்டன் வாழ் இபி;ஆர்.எல்.எவ் குழவினரின் அரசியற் கருத்தான, தனி மனித ஆதாயம் தேடாத தமிழ் அரசியலுக்கப்பால் -மனிதாபிமானமுள்ள தேடலான ‘சமத்துவ சமுதாயம்’ என்ற கோட்பாட்டை முன்வைத்த கற்பனைக் கதாநாயகனுடன் எனது முதல் நாவலான ‘ உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற படைப்பை லண்டன் முரசில் எழுதினேன்.
அக்கால கட்டத்தில், லண்டனில் இபி.ஆர். எல் எவ் மாணவர்கள் அரசியலில் தன்னை ஒரு முற்போக்குவாத சிந்தனையாளராகக் காட்டிக்கொண்ட அன்ரன் பாலசிங்கத்தின் பேச்சிக்களில் ஈர்ப்பாகவிருந்தார்கள். இந்த மாணவர்களால் அன்ரன் பாலசிங்கம் ஒரு அரசியற் பிரமுகரானார் என்பது பலருக்குத் தெரியாது..எனது முற்போக்கு சிந்தனை எழுத்துக்களைவாசித்த பாலசிங்கம் அவர்கள்; தன்னைச் சந்திக்க எங்களையும்; தன்வீட்டுக்கு அழைத்தார்.
1981ம் ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரங்களுக்கு எதிராக எனது எழுத்துக்களும் போராட்டங்களும் விரிந்தன. 1982ம் ஆண்டு இறுதிக்கால கால கட்டத்தில் இலங்கையில் பல தமிழ்ப் புத்திஜீவிகள் சிறைபிடிக்கப் பட்டார்கள்.
இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலத்தை உலகுக்குச் சொல்ல’ இலங்கைத் தமிழ்ச் சமுகத்தால்; ஒரு முற்போக்குப் பெண்மணியாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரும் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டவருமான ‘நிர்மலாவை விடுதலை செய் என்ற கோஷத்ததை அடி;படையாக வைத்து தமிழ் மக்களின் சமத்துவத்திற்காக ‘தமிழ் மகளிர்’ அமைப்பின் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
அந்த போராட்டக்குரல்; உலகம் பரந்த முற்போக்குவாத பெண்கள் ஆணகளால் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானியாவின் பிரமாண்டமான அரசியல்வாதிகளான ரோனி பென், திருமதி ஷேர்லி வில்லியம் என்போரும், ஜெரமி கோர்பின்,பேர்னி கிராண்ட, கிறிஸ் ஸ்மித் போன்றோர் எங்கள் போராட்டத்தைப் பிரிட்டிஷ் பொது மக்களிடம் கொண்டுசெல்ல உதவினர்.அதனால் நான் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையினரால் பட்டபாடு மிகப் பெரிது.
என்னால் உருவாக்கப்பட்ட லண்டன் தமிழ் மகளிர் அமைப்பினரின் போராட்டத்தால், திரு ரோனி பென்,திரு ஜெரமி கோர்பின் போன்ற பல முற்போக்கு பாராளுமன்றவாதிகளால்;; 29.5.1985ம் ஆண்டு பிரித்தானியாவின் அகதிகளின் நன்மைக்கான சட்டம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையிற் தொடரும் அவலத்தால் பல தமிழ் அகதிகள் லண்டனில் குவிந்தார்கள்.அவர்களுக்கு லேபர் பார்ட்டி மூலம் பல உதவிகளைந் செய்து கொண்டிருந்தேன். அவர்களுக்காக ஒரு ஸ்தாபனம் அமைக்கவும் அதற்கு நான் தலைவியாக இருக்கவேண்டும் என்று என்னை ஒட்டு மொத்தமான தமிழ் அகதிகளுக்கான வேலைக்குள் இழுத்து விட்டதில் லண்டன் இபி. ஆர். ஏல் எவ் குழவினருக்கும் முக்கிய பங்குண்டு.
இலங்கையில் இந்தியப் படை வந்ததும் அதைத் தொடர்ந்து இபி.ஆh.எல.;எவ் கட்சி ஆட்சியமைத்ததும் மனிதாபிமானக் கொள்கைகளுடன் இணைந்த சமத்துவ சிந்தனைக்குக்; கிடைத்த வெற்றி என்றுதான் லண்டன்வாழ் முற்போக்குவாதிகள்; அப்போது நினைத்தோம்;. ஆனால். சுயநலத்தால், மூர்க்கமான வர்க்க,சாதிய மேம்பாட்டுக் கோட்பாடுகளில் பின்னிப் பிணைந்து விட்ட யாழ் மையவாத அரசியல் தங்களை அடிமை கொள்ள நினைத்த சிங்கள பௌத்த பிறபோக்கு அரசியற் சக்திகளுடன் சேர்ந்து.இபி, ஆர் எல் எல் கட்சியின் ஆளுமையை அழித்தொழ்தார்கள். இன்று இலங்கைத் தமிழ்த் தலைமையின் பிடியில் தமிழ் மக்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகள் பின் தள்ளிப் போய்விட்டிருக்கிறது.
ஓருகாலத்தில் சாதி,மத, பிராந்திய வேடுபாடற்றுத் தமிழ் மக்களிடையே ஆதரவு பெற்றிருந்த இபி.ஆர்.எல் எவ் கட்சியின் அமைப்பு இன்று சரியான வேலைப்பாடுகளை முன்னெடுக்க முடியாமற் கலைந்து சிதைந்து கிடக்கிறது. முற்போக்குத் தமிழர்களின் சமத்துவக் கொள்கை ஓரம் கட்டப் பட்டிருக்கிறது. வக்கிரமான தமிழ்த்தேசியத்தைத் தாண்டி இவர்களின் செயற்பாடுகள் முன்னடைவது சிரமமாகவிருக்கிறது.
சுகு சிறிதரன் போன்றோரின் மனிதாபிமானத்தை முன்னெடுக்கும் தார்மீகக்குரல்கள் பயங்கரமான தமிழத்தேசியக் கோட்பாட்டுக்கள் அடங்கிக் கிடக்கிறது.
சுகுவைச் சிலவேளைகளில் இலங்கைக்குப் போய்ச் சந்தித்து, அல்லது டெலிபோனிற் பேசும் போது, அரசியல் தெளிவற்றர்களால் சீர் குலைக்கப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய அவர் துயர் தாங்கமுடியாததாகவிருப்புது தெளிவாகத் தெரியும்.
ஆனாலும், நான் இவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன வென்றால், இன்று தமிழ் அரசியலில் பிற்போக்குத் தனமான தமிழ்த் தேசிய சக்திகள் முன்னிலை எடுப்பதைத் தடுக்க, இலங்கையிலுள்ள முற்போக்க சக்திகள் ஒன்று பட்ட வேலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான்;.
இன்று, இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம்,கல்வி முன்னேற்றம் என்பது போன்ற பன்முகப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு திட்டவட்டமற்ற போக்கின்றிக்; காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. காலம் காலமாக, ஒவ்வொருநாளும் சொல்ல முடியாத துயர் அனுபவித்துக்கொண்டிருந்த தமிழ் மக்களுக்காக தமிழ்த்தலைமை.எதையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
இன்று, தமிழ்ப் பகுதிகளில் உள்ள தேவைகளிற் தலையானவை என்று பலர் நினைப்பவை பல.
-.வட பகுதியின் மக்களில் 40 விகிதமானவர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள்.அவர்களின் தேவைகள்.( தமிழர்களுக்காகப் போராடுகிறோம் என்று தம்பட்டமடிக்கும் தமிழத் தேசியத்தின் கண்களில் படாமலிருக்கிறது.)
– போரினால் மிகவும் துயர்களுக்காளான விதவைகளின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றிய வேலைப்பாடுகள்,
-அனாதைக் குழந்தைகளுக்கான கல்வி, சம்பந்தப்பட்ட அவசர ஏற்பாடுகள்,
முன்னாள்ப் போராளிகளின் வாழ்வாதாரம் பற்றிய புதிய தொழில் வசதி பற்றிய திட்டங்கள்,
-இந்திய மீனவர்களால் தங்கள் வாழ்வாதாரங்களையிழக்கும் வடபகுதி மீனவர்களின் பிரச்சினை,
-வடபகுதியை வரண்ட பிரதேசமாக்கிக்கொண்டிருக்கும் நீர்ப்பிரச்சினையை அகற்றும் திட்டங்கள்,
-வடபகுதியில் தங்கள் நிலங்களை பாதுகாப்பு வலயங்களிடமிருந்து மீட்கப் போராடும் மக்களின் தேவைகள்
இப்படிப் பல அரசியல். சமுக மேம்பாட்டு வேலைப்பாடுகளுக்கு இபி;ஆர்.எல்எவ். இலங்கை மக்களுடனும் புலம் பெயர்ந்த மக்களுடனும் இணைந்து போராடுதல் மிகவும் முக்கியம்.
சுகு போன்றவர்களுக்கு இலங்கையிலில்லாத வசதிகள், புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிறைய இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்றைய முற்போக்குத் தமிழ்ச் சமூகநலவாதிகள்; இலங்கைவாழ் தமிழ் மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்குமான ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது இன்றியமையாத விடயங்களாகும்