இன்று உலகம் பரந்த அளவில் மிகக்கொடுமையான பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகின்றன.இதில் சாதி.மத,வர்க்க,வயது வித்தியாசம் கிடையாது. காமுகர்களின் வெறிவேட்கை பெண் என்ற உருவத்தைக் கண்டதும் பீறியெழுகிறது. இரு வயதுக் குழந்தைகளும் காமவெறிக்காளகிக் கொலை செய்யப்பட்டுத் தூக்கியெறியப் படுகிறார்கள். ஆண்வர்க்கத்தின் ஒருபகுதியினர் மிருகமாக நடக்கிறார்கள்
‘;; இந்தியாவிற் பெண்களாகப் பிறப்பவர்கள் மிகப் பெரிய பாவங்கள் செய்பவர்கள ‘ என்று என்னிடம் எனது இந்தியச் சினேகிதிகள் சிலர் பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார்கள்.
அதிலும் ‘சாதி’ அடிப்படையில் தொடரும் பெண்களுக்கான பாலியற் கொடுமைகள். மனிதத்தை மதிக்கும் மக்களைத் தலைகுனியப் பண்ணுகிறது.
உலகில் உள்ள பலர் தங்கள் தாயகத்தைத் தாயாக வழிபடுபவர்கள்,இந்தியாவும் அந்நாடுகளில் ஒன்று. தங்கள் தாயகத்தைத் தாயாக மதிக்கும் நாடுகளில் பெண்களுக்கான சமத்துவ நிலை,பாதுகாப்பு என்பன இருக்கின்றனவா என்றால் அது பல கேள்விகளை எழுப்பும் விடயமாகும்.;
அதிலும், இன்று இந்தியாவில் தொடர்ந்து பெருகும் பெண்களுக்கான வன்முறைகள், மனித உரிமைவாதிகளைக் கோபத்தில் கொதிக்கப் பண்ணுகின்றன.முக்கியமாக,சாதி, மத அடிப்படையில் பெண்கள் மனிதத்தன்மையற்று நடத்தப்படுவது எல்லை கடந்து போகின்றன.
இந்தக் கொடுமைகளுக்குச் சட்டத்தின் பாதுகாவர்களே.பெண்களுக்கெதிரான பாலியற் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல்,அவர்களின் கண்களை மூடிக்கொள்வதும்,குற்றம் புரிந்தவர்களுக்குச் சார்பாக நடப்பதும் ஒரு ஜனநாயக நாட்டின் சட்ட நிர்வாகத்திற்கு அவமானமாகும்.
கடந்த,20.12.16ல் காணாமற்போன தமிழகப் பெண்ணான நந்தினி 11 நாட்களுக்குப் பின் பாழடைந்த கிணற்றிலிருந்து.அழுகியபிணமாகக் கண்டெடுக்கப்பட்டாள். ஆவளை அவளின் காதலனான மணிவண்ணன் என்பவன் தனது சினேகிதர்களுடன் செர்ந்ர் கூட்ட வன்முறைக் கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.ஆவளுக்கு நடந்த கொடுமையை எதிர்த்துப் பல குரல்கள் எழுந்தன
.4.2.17இபி.பி.சி. தமிழ் சேவையின் தகவலின்படி, தனது மகளின் கொலைபற்றி முறைப்பாடு சென்ற நந்தினியின் தாயார்,’கொலை பற்றித் தெரிவிக்க வேண்டாம்,நந்தினி காணாமற் போனதாக’ முறைப்பாடு செய்யச் சொல்லி நிர்ப்ந்திக்கப் பட்டதாகச் சொல்லப் பட்டது. இலங்கையிலும் இந்தியாவிலும் வசதி படைத்தவர்களுக்குச் சட்டம் துணைபோவது சாதாரணமான நிகழ்ச்சியாகும்.
இந்தியப் பெண்களின் நிலைபற்றி ஆராயும் கட்டுரைகளின்படி. ‘ஓவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் ஒரு இந்தியப்பெண் ஆண்களால் வன்முறைக்காளகிறாள். ஓவ்வொரு 29 நிமிடங்களுக்கொருதரம் ஒரு இந்தியப்பெண் பாலியல் கொடுமைக்காளதகிறாள். படித்தபெண். பெரியவர்க்கம்,படியாதபெண், அல்லது ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்ற பாகுபாடன்றி 70 விகிதமான இந்தியப்பெண்கள் வீட்டில் நடக்கும் வன்முறைக்காளாகிறார்கள். ஆனால் 60விகிதமான சம்பவங்கள் ஒருநாளும் பதிவுசெய்யப்படுவதில்லை என்று சொல்லப் படுகிறது. ஆதிலும் ‘தலித்’ பெண்களின் பாலியற் கொடுமை பற்றிய முறைப்பாடுகளில் 5 விகிதம்தான் வழக்குக்குச் செல்கின்றன.
ஓட்டுமொத்தமாகப், பெரும்பாலான இந்தியப் பெண்கள் பல்வித தொல்லைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.அதிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை மிக மிகக் கொடுமையானது.
பொருளாதார விருத்தியும்,பண விருத்தியும் பலமடங்காக வளர்ந்து கொண்டுவரும் இந்தியாவில்,சாதி வெறியும் மதவெறியும் மிருகத்தனமாகத் தலைவிரித்தாடுகிறது.
பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட பெண்களின் தொகை எண்ணிக்கையற்றது.அதிகரித்துவரும் மதவெறியால், மதவாத மூர்க்கர்கள் தலித் பெண்களைப் பாலியல் கொடுமை செய்யும் தகவல்கள் மனித இனத்தைத் தலைகுனியப் பண்ணுபவை.
தமிழ் நாட்டுத் தலைநகரிலும் மற்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்காக, பல்லாயிரம் மாணவர்கள் களம் இறங்கி, அகில உலகத்தையே அதிரப் பண்ணிய காலகட்டத்தில், தமிழ்நாட்டில்,அரியலுர் மாவட்டத்தில்,செந்துறைவட்டம் என்ற இடத்திலுள்ள சிறுகடம்பூர் என்ற இடத்தில் தலித் பெண்ணான நந்தினி என்ற பதினாறுவயதுப் பெண் படுகேவலமானமுறையில் கொலை செய்யப் பட்டிருக்கிறாள்.அவளைத் திருமணம் செய்வேன் என்று அவளுடன் பழகி அவளைக் கர்ப்பமாக்கிய பாதகன், இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளன் மணிகண்டனும்;,அவனின் சினேகிதர்கள் திருமுருகன்,வெற்றிச்செல்வன
அவளின் பெண்ணுறப்பைக்கிழித்து,அவளின் ஆறமாதச் சிசுவை வெளியெடுத்து,நந்தினியின் சுடிதாhரிற் சுற்றி எரித்திருக்கிறார்கள். நந்தினியின் தாய் இராசக்கிளி பதினேழுநாட்களாகத் தனது மகளைத் தேடியபோது,ஆளும் சக்திகளுடன் கைகோர்க்கும் காவற்துறையால் அவளுக்குக் கிடைத்த உதவிகள் மிக அற்பமானவை. ஆப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணித்தலைவன் இராமகோபாலனால் என்ன கிடைத்திருக்கும் என்பதை எழுதித் தெரியத்தேவையில்லை.
2012ல் டெல்லியில் ஒரு மாணவி ஒரு காமுகர் கூட்டத்தால் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப் பட்டது உலகமறிந்த செய்தியானது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இந்தியத் தலைநகர் டெல்லி,’பாலியல் வன்முறைக்கான தலைநகர்’ என்று பலராலும் கண்டிக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி, பாலியற் கொடுமைசெய்து கொலை செய்யப்பட்ட ‘நிர்பயா’வுக்காகப் போராடினார்கள்.
ஆனால்,நந்தினிபோன்ற தலித் இளம் சிறுமிகளை அழிக்கும்,மதசார்பானகொடுமைகளுக்குக் குரல் கொடுக்க தமிழ் நாட்டிலுள்ள ஏன் முற்போக்குக் கொள்கைகள் உள்ளவர்கள் பெரும் கூட்டமாக முன்வருவதில்லை?
சட்டத்தால் தடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் திரண்டெழுந்து வந்த இளைஞர்கள்,தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சாதி மதவெறிக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கககூடாது?
தற்காலத்து மாணவர்கள், மிகவும் பரந்த அறிவுள்ளவர்கள். வுpஞ்ஞான ரீதியாக உலகை ஆய்வு செய்யும் அறிவு படைத்தவர்கள். வர்ண சாஸ்திரம் என்ற அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்திருக்கும் சாதியமைப்பு முட்டாளத்தனமானது,மனித இனத்துக்கு எதிரானது, என்று ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை?
குரங்கிலிருந்துதான் உலகிலுள்ள அத்தனை மனித இனமும்; உருவானார்கள். உஷ்ணவலயத்தில் வாழ்பவர்கள் அதிகப்படியான சூரியகதிர்களின் தாக்கத்தால் கறுப்பாகவும், குளிர்பிரதேசத்தில் வாழ்பவர்கள் சூரியக் கதிர்களின் தாக்கமின்மையால் கறுப்புநிறமற்றவர்களாகவுமிருக்கிருக்கிறார்கள். அதைத் தவிர்த்து,வெள்ளைத்தோல் உள்ளவர்களைத் ‘தேவர்களாகவும், கறுப்புத் தோல் உள்ளவர்கள் அசுரர்களாகவும் சொல்லும் பொய்மையை ஏன் இந்த நவநாகரிக காலத்திலும் ஏற்றுக் கொள்கிறார்கள்?
ஓரு மனிதன் வாழும் பொருளாதார சூழ்நிலையும்,வசதியும் அவர்களின் படிப்புக்கும் மென்மையான வளர்ச்சிக்கும் அத்திவாரமானவை என்பதை இவர்கள் அறியாதவர்களா?
தன்னை உயர்சாதி என்று சொல்லும்,பார்ப்பனியனுக்கும், அவர்களால் தாழ்த்தப் பட்டவர்களாக நடத்தப்படும் மக்களுக்கும் இயற்கை கொடுத்த உடலமைப்பில் எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோருக்கும் அவர்களின் இருதயம் இடது பக்கத்திற்தானிருக்கிறத. எலும்புகள் ஒரே எண்ணிக்கையிலிருக்கினறன. நுழைவுக்கும் கழிவுக்குமான ஒன்பது துவாரங்களில் ஒரேமாதிரியாகவேயிருக்கின்றன.மனித இனத்தின் நாடித்துடிப்பிலோ.,மூச்சிலோ ஒரு வித்தியாசமும் கிடையாது.நூற்றுக்கணக்கான வித்தியாசமான உடற் கலங்களில்,’உயர்ந்த’ வர்க்கமென சொல்லிக் கொள்பவர்களுக்கு ஒரு கலமும் வித்தியாசமாவில்லை.
தங்களின் உழைப்புக்கும் பிழைப்புக்கும் மக்களைச் சாதிரீதியாகப் பிரித்துவைத்திருக்கும் மூடசக்திகளை ஓரம் கட்டாதவரைக்கும் ஒரு சமுகமும் முன்னேறாது.
காலனித்தவவாதிகள், தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ள, தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் உள்ள மக்களிடையே பல பிரிவுகளையுண்டாக்கித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டார்கள்.இந்தியாவிலும் அதையே செய்தார்கள். அவர்கள் இந்தியாவை விட்டுப் போவதற்கான நிலை வந்ததும் இந்தியாவை மதரீதியாகக் கூறுசெய்துவிட்டுச் சென்றார்கள்.இன்று ஆதிக்கத்திலிருக்கும் கேவலமான சக்திகள், சாதி, மத, இன, பிராந்திய வேறுபாடுகளைமுன்வைத்து மக்கள் ஒன்றுதிரளாமற் பார்த்துக்கொள்கிறார்கள்.
இதில் இன்று தலையாய இருப்புது. மத அடிப்டையில் அமைந்த சாதிவெறி. அதற்குப் பலியாகும் உயிர்கள் அளவிடமுடியாதவை. இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்தியக் குடிமக்கள் அனைவரும்; சமமாக நடத்தப்படவேண்டும் என்ற யாப்பு வந்தது. ஆனால் நடைமுறையிலோ, மதவெறி, சாதிவெறி,இந்தியக் குடியரசின் யாப்பைக் கண்டுகொள்ளாமல்,மதிப்புக்கொடுக்காமல்,தனது கோர விளையாட்டால் வறுமையான மக்களை மிருகவெறியுடன் ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நந்தினி போன்ற பெண்களுக்கு நடந்த கொடுமையைக் கேள்விப் பட்ட மனிதாமானமுள்ள அத்தனைபேரும் முக்கியமாகத் தமிழகம் தலைகுனியவேண்டும். சாதி,மத, இன,ஆண்.பெண் பேதமின்றி மாட்டுக்காகப் போராட வந்தகூட்டம் தமிழ்நாட்டின் மனிதத்துக்காகப்போராடவேண்டும்.
மனுதர்ம சாஸ்திரத்தை அஸ்திரமாக்கி,மனிதத்தை வதைக்கும் கருத்துக்களைத் தூக்கியெறியவேண்டும்.இந்தியா என்பது ஆத்மீகத்தின் தாயகம் என்று மார்புதட்டும் காவிகளின் போலிகள் துரத்தப்படவேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடப்பதற்கு முன் ஒரு பெரிய எழுத்தாளர் குறிப்பிட்டார்,’ தமிழக இளைஞர்களுக்குப் போராடத்தெரியாது’ (அவர்களுக்குத் தைரியம் இல்லை என்பதை அவர் மறைமுகமாகச் சொன்னார்).
அவர் சொல்லிச் சில தினங்களில,சிறுதுளி பெருவெள்ளமாகத் திரண்ட தமிழ் இளைஞர்களைக் கண்டு உலகமே சிலிர்த்தது.அவர்கள் எந்த வித பேதமுமின்றி ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக ஒன்று திரண்டவிதம்,சத்தியத்தின் குரலாக முழக்கமிட்டார்கள். இந்தியப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில்,’ஆயிரம் பிரிவுகள் கொண்ட இந்தியர் ஒன்றாகச் சேரமாட்டார்கள்அவர்கள் ஆரம்பிக்கும் போராட்டம் சரிவராது’ என்று ஆங்கில ஆதிக்கம் நையாண்டி செய்ததாக ஒருகதையுண்டு.
அதேமாதிரி, சாதி, மதபோதத்தைக்காட்டி. மனித பலி எடுக்கும் சக்திகளுக்கும் எதிராக ஒரு பெரிய போராட்டம் ஒரு நாளும் இந்தியாவில், முக்கியமாகத் தமிழ் நாட்டில் தலையெடுக்காது என்று ஆதிக்கவாதிகள் நினைக்கிறார்கள்.
தன்மானமுள்ள தமிழர்களே, அறிவாற்றல கொண்ட இளைஞர்களே ஒரு கேடுகெட்ட சமுதாயத்தை நல்வழிப்படுத்த உங்களால் முடியும்.. சாதி சார்ந்த சமயக் கோட்பாடுகள்; என்பன ஒரு குறிப்பிட்டவர்கள் பிழைப்பதற்காகவும் நன்மைபெறவும் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளாகும்;. அதை உதறி எறிந்து விட்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த விருத்திக்கும் வளர்ச்சிக்கும் போராடாவிட்டால், நாங்கள் எங்கள் சமுதாயக் கடமையிலிருந்து தவறியவர்களாகிறோம்.
நந்தினியின் விடயத்தில், காவற்துறை அக்கறை காட்டவில்லை. அவளைச் சீரழித்துக்கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைப்பது மனிதத்தில் அக்கறையுள்ள .உங்கள் கைகளிலிருக்கிறது. தமிழ்நாடு காவற்துறை பிழைவிட்டால் மத்திய அரசுமூலம் இந்தக் குற்றம் பிழையானது என்று தட்டிக்கேட்கப் போராடுங்கள். இவர்களும் அக்கறை காட்டாவிட்டால் அகில உலகத்துக்கும் இந்தியாவில் நடக்கும். சுhதி, மத வெறிசார்ந்த மனித பலிகளை அம்பலப்படுத்துங்கள். அகில உலக. மனித உரிமை ஸ்தாபனங்களின் கவனத்தைத் திருப்பி நீதி கேளுங்கள்.
இப்படி எத்தனையோ செய்யலாம். அபலைப் பெண்களுக்காகப் போராடிய அனுபத்தின் அடிப்படையில் இதை இங்கு வரைகிறேன். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமிருந்தால் அதன் அடிப்படையில் நந்தினிக்கான போராட்டத்தில் வெற்றி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதுமட்டுமல்லாமல், சாதி மதவெறியர்களுக்குப் பாடம் படிப்பிப்பதாக உங்கள் போராட்டம் சரித்திரம் படைக்கும்.
Like this:
Like Loading...
Related