இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-18.07.16
கடந்த மாதம் 23ம்திகதி பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய பிரியவேண்டும் என்று வாக்களித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை,பிரித்தானியாவில் நடக்கும் மாற்றங்கள் எந்த அரசியல்வாதியோ அல்லது பத்திரிகையாளர்களோ அல்லது சாதாரண பிரித்தானிய மக்களோ எதிர்பார்க்காதவையாகும்.
மிகவும் வசதியும், மிகவும் வல்லமையும் செல்வாக்கும் பெற்ற பின்னணியிலிருந்து வந்த பிரதமர் டேவிட் கமரன், அவரின் நெருங்கிய சினேகிதரும் சான்சிலருமான ஜோர்ஜ் ஒஸ்போர்ன் என்ற பெரிய தலைகளைப் பிரித்தானியா மக்கள் தங்கள் வாக்குகளால் உதிரப் பண்ணிவிட்டார்கள். அந்த இடத்திற்குப் பிரித்தானியாவின் ஐம்பத்து நான்காவுது பிரதமராக-இரண்டாவது பெண்பிரதமராக-எலிசபெத் மகாராணி காலத்தில் பதவியேற்கும் பதின்மூன்றாவது பிரதமராகக் கடந்த பதின்மூன்றாம் திகதி திருமதி திரேசா மேய் பதவி ஏற்றிருக்கிறார்.இங்கிலாந்து அரசியலில் மிக முக்கிய பதவிகள் வகித்த மார்க்கிரட் தச்சர்(பிரதமர்),மார்க்கிரட் பெக்கட்(வெளிநாட்டமைச்சர்) ஜக்கியுஸ் ஸ்மித்(உள்நாட்டமைச்சர்) வரிசையில் இவர் நான்காவது இடம் பெறுகிறார்.
இவரின் பின்னணி என்ன? இவரின் அரசியல் எப்படியானது. பிரித்தானியாவின் எதிர்காலம் இவர் தலைமையில் எப்படி அமையப் போகிறது என்று பத்திரிகைகளும் அரசியல் ஆய்வாளர்களும் எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.
மேரி-பிராஷிர் தம்பதிகளுக்கு மகளாகத் திரேசா 01.10.1956ம் ஆண்டில் பிறந்தார்.தகப்பனார் ஒரு கிறிஸ்தவ போதகர்;. அதனால் திரேசாவும் கிறிஸ்தவ சமயக் கருத்துக்களில் மிகவும் ஈடுபாடுடையவராம். எல்லா மனிதர்களையம் சமமாக நடத்தவேண்டும் என்ற பண்புள்ளவராம். சாதாரண பாடசாலையில் கல்வியை ஆரம்பித்த இவர் தனது பதின்மூன்றாவது வயதில் ஸ்காலர்ஷிப் மூலம் பிரைவேட் பெண்கள் கல்விக் கூடத்தையடைந்தார். மிகவும் கெட்டிக்காரியான இவர் ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் படிக்கும்போத அவரின் எதிர்காலக் கணவரான பிலிப் மேய் என்பவரைச் சந்தித்துக்காதல் கொண்டார். 1980; ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஒக்ஸ்போhட்டில் படிக்கும்போது, பெனசியா பூட்டோவுடன்(பாகிஸ்தான் பிரதமராகவிருந்தவர்) சினேகிதியாயிருந்தாh.;
திரேசா- மேய் தம்பதிகளுக்குக்; குழந்தைகள் கிடையாது. 1997ல் பாராளுமன்றப் பிரதிநிதியானார். இதுவரையும் பல மேம்பட்ட பதவிகளைவகித்திருக்கிறார் அதில் முக்கியமானது. நீpண்டகாலமாகப் பிரித்தானிய உள்நாட்டமைச்சராகப் பதவி வகித்ததாகும். பழமைசார்ந்ததும் மிகப் பெரிய பணக்காரர்களின் கட்சியுமான கொன்சர்வேட்டிவ் கட்சியல் இவரை ஒரு’இடதுசாரி’க்குணம் கொண்டவர் என்று வர்ணிப்பதாகவும் தகவல்கள் உண்டு. தங்கள் கட்சி, பொது மக்களால் ஒரு ‘நாஸ்;டி’ கட்சியாக வர்ணிக்கப் படுவதை இவர் எடுத்துரைத்து, அந்தக்கட்சி மக்களின் அபிமானக் கட்சியாக வரவேண்டும் என்பதை 2002ம் ஆண்டு கன்சர்வெட்டிவ் கட்சி மகாநாட்டில் வலியுறுத்தினார்.; தங்கள் கட்சி பணம் படைத்தவர்கள் சிலருக்காக மட்டும் வேலைசெய்யும் ஒரு அமைப்பாக இருக்கக்; கூடாது என்று ஆணித்தரமாகக்கூறினார். பொது மக்களின் நலனில் மிக அக்கறை கொண்டவர் என்று பலராலும் வர்ணிக்கப்படுகிறார்.சமுதாய மாற்றங்களை மிகவும் கூர்மையாகக் கவனிக்கிறார். அரசியல் மாற்றங்களைக் கட்சிசார் பார்வைக்கப்பால் அவதானிக்கிறார்.ஓரினத் திருமணத்திற்கு மிகவும் முன்னின்று பாடுபட்டார்.
இங்கிலாந்துப் போலிஸ் அதிகாரத்தில்;, இனவாதம்,பாலியல்வாதம்,ஊழல் போன்ற பல பாரதூரமான விடயங்கள் ஊறிக்கிடப்பதைக் கண்டித்த இவர்,2010ம் ஆண்டு நடந்த போலிஸ் பெடரேஷன் மகாநாட்டில்,’ நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் நாங்கள் அதை மாற்ற வேண்டிவரும்’என்று எச்சரிக்கையை விடுத்தார். பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரத்தை இதுவரையும் எந்த அமைச்சரும் இப்படிக் கண்டித்தது சரித்திரத்தில் இல்லை.
உள்நாட்டுப் பாதுகாப்பில் இவர் எடுத்த நடவடிக்கைகளால் குற்றங்களின் எண்ணிக்கை 10 விகிதமாகக் குறைந்தது.
இப்படிப் பல திருத்தங்களைச் செய்த இவர் ஆட்சியிலிருந்த மிகப் பலம் வாய்ந்த சக்திகளான டேவிட் கமரன் அணியுடன் அதிக நெருக்கமாயிருக்கவில்லை என்று கருதப்பட்டது. இவர்,ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவராக இருந்தாலும்,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகும் கொள்கைகளை முன்னெடுக்கும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலானவர்களின் அபிமானத்தால் மட்டுமல்லாது கட்சியின் பலரின்;; ஆதரவாலும்;,கட்சித் தலைவராக மிக வெற்றிபெற்று இன்று பிரதமராக வந்திருக்கிறார்.
இங்கிலாந்துக்குள் வரும் ஐரேப்பிய ஒன்றிணைய நாடுகளைச் சோர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி இங்கிலாந்தை,’எங்கள் நாடு’ என்ற பழம்பெருமையுடன் வளர்ப்பேன் என்று கூறியிருக்கிறார். மிகவும் செல்வாக்கான பாரம்பரியமுள்ளவர்களால் ஆதிக்கம் பெற்றிருந்த பெரும்பாலான பதவிகளைச் சாதராண படிப்பு, பாரம்பரியம், சமுகவரலாறு உள்ளவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
ஜேர்மன் நாட்டு அதிபர் ஆங்கலா மேக்கலின் திறமையுடன் திரேசாவின் திறமையையும் ஆளுமையையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இங்கிலாந்தின் எதிர்கால அபிவிருத்திக்கு இவரின் பணிகள் ஏராளமாக எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்கொட்லாந்து இங்கிலாந்திலிருந்து பிரிவதைத் தடுப்பது இவரின் மிகப் பிரமாண்டமான முயற்சியாகவிருக்கும்.அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதால் உண்டாகும் பல தரப்பட்ட மாற்றங்களை-முக்கியமாகப் பொருளாதார விருத்தியை எப்படிக் கையாளப் போகிறார் என்ற கேள்விகள் பலமாகக் கேட்கப்படுகிறது.
இன்று,இங்கிலாந்தில் எதிர்க்கட்சியாகவிருக்கும் தொழிற்கட்சியில் பல பிளவுகள் இருப்பதால்,கொன்சர்வேட்டிவ் கட்சியினர், தாங்கள் நினைத்ததை அமுல் படுத்துவது மிகவும் சாத்தியப் பாடாகவிருக்கும். அதே நேரத்தில்,கமரன் போன்றோரின் மேலாண்மையை எதிர்த்த மக்கள் தனது ஆட்சியையும் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்வார்கள் என்பதையும் திரேசா மறக்கமாட்டார்.
இன்று உலகம் பல்வேறு பிரச்சினைகளால் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப் பட்டிருக்கிறது. அமெரிக்காவில் றொலான்ட் ட்றம்ப் அதிபதியாக வந்தால்,அவரின் இனவாதம்பிடித்த வெளிநாட்டுக்கொள்கைகளால் பிரச்சினைகள் வேறுவடிவத்தில் உருவெடுக்கும்.எப்போதும், அமெரிக்காவின்,’விசேட உறவு’ வைத்திருக்கும் பிரித்தானியாவின் பிரதமர் திரேசா அவர்கள் அவற்றை எப்படி முகம் கொடுப்பார் என்பது பலரின் கேளிவியாகும்.
Like this:
Like Loading...
Related