‘கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்’

 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.19.06.16.
இந்தியாவின் பிலபல இலக்கியவாதி, ஊடகவாதி மாலனின் முயற்சியால் வெளிவந்திருக்கும்’அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’
‘கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்’ என்ற இத்தொகுதியில் அ.முத்துலிங்கம்,ரெ.கார்த்திகேசு,நாகரத்தினம் கிருஷ்ணா,உமா வரதராஜன்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,பொ.கருணாகரமூர்த்தி,ஆ.சி கந்தராஜா,டாக்டர்.சண்முகசிவா,அ.யேசுராசா,கீதா பெனட்,லதா,சந்திரவதனா,ஆசிப் மீரான்,எம்.கேஇகுமார் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் இருக்கின்றன.
தமிழ் இலக்கிய உழில் பரிச்சயமுள்ளவர்களுக்கு மாலன் யார் என்று சொல்லத் தேவையில்லை. பார்மசித் துறையில் பட்டம் பெற்றாலும்,தமிழக இலக்கிய,ஊடகத்துறைகள் செய்த புண்ணியத்தால் இன்று மிகவும் பலம் வாய்ந்த ஒரு ஊடகவாதியாய், பொய்மையிலேயே ஊறி நாற்றமடிக்கும் அரசியலில் மக்களுக்குத் தேவையான உண்மைகளைத் தேடிச் சொல்லும்;  ஒரு அசாதாரண பிறவியாய்த் தமிழகத்தில் வலம் வருகிறார்.
அயலகத்;; தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் கூர்மையான சமுதாயப் பார்வையை,பன்முகத் தன்மையான தத்துவார்த்த எழுச்சிகளின் சீற்றலை, பெண்ணிய இலக்கியத்தின் கரைகடந்த ஆவேசக் குரல்களை,வெளிநாட்டுப் புத்திஜீத்துவத்தை உணர்ந்து, பழையவையைக் கட்டறுப்புச் செய்ய எகிறிப் பாயும் நவின சிந்தனையை, காலம் காலமாகக் கட்டிப் பாதுகாத்துவந்த ‘கலாச்சாரக்’கோட்பாடுகளுக்குள் மனிதத்தை வதைக்கும் பழைய பண்பாடுகளை உடைத்தெறிய வரும் சத்தியத்தின் குரல்களின் தார்ப்பரியத்தை உணர்ந்தவர் மாலன்.
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த காலகட்டத்திலிருந்து,இலங்கைத் தமிழர்கள் படுத் துயர் கண்டு,இந்தியா உதவிக்கரம் கொடுக்கவில்லை என்று தனது இளமைக்காலத்திலேயே கொதித்தெழுந்தவர் மாலன்;. இந்திய அரசியல்வாதிகள்;,’தமிழ்’ என்ற வார்த்தையை வைத்துப் பிழைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களின் துயர் கண்டு போலிக்கண்ணீர் வடிப்பதைக் கண்டு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சீறியெழுந்து எழுதியவர்..
1981ம் ஆண்டுக் காலகட்டத்தில், யாழ்ப்பாணம் லைப்ரரியிலுள்ள எண்ணிக்கையற்ற- மதிப்பிடமுடியாத பழைய சரித்திரங்களையடக்கிய இலட்சக்கணக்கான தமிழ்ப் புத்தகங்களைச் சிங்கள அரசியல்க் கேடிகள்; எரிந்தபோது ,ஒரு இலக்கியவாதியான அவருக்கு வந்த தனது தர்மாவேசத்தை இந்திய அரசியல்வாதிகளிடம்; காட்டக் கொதித்தெழுந்தவர்.’ இலங்கை பற்றியெரியும்போது,முழங்கையை உயர்த்திக் கோஷம் போடுவது மட்டும் மாத்திரம் இவர்களுக்குச் சாத்தியமாகிறது’ என்ற எழுதி தமிழை வைத்து அரசியலுக்கு வந்தவர்களை வைது கொட்டியவர். (கணையாழி 1981-ஒக்டோபர்)
இலக்கியம் என்பது அதைப் படைக்கும் படைப்பாளி எப்படி அவன் வாழும் சமுதாயத்தைக் காண்கிறான் என்பதைப் பிரதிபலிப்பாகும்.; அவன் சமுதாயத்தில்; வாழும், நீதி, அநீதிகள், பலவேறுகாணங்களால் மனித நேயத்தைக் கொன்றொழிக்கும் சக்திகளைக் கண்டெழுந்த ஆவேசக் குரலின் தெறிப்புகள்தான் அவன் படைப்பின் உள்ளடக்கம். மாலனின் அந்த சக்தியின் ஆக்ரோஷக்குரல் பல தடவைகள் இந்திய அரசியல்வரிகளின் பொய்மையை நிர்வாணமாக்கியது.
        இலங்கைதை; தமிழருக்கு உருப்படியாக ஒன்றும் செய்யாமல் வெற்று வார்த்தையால் வீரம் பேசுபவர்களை,’இந்தியத் தமிழர்களின்              வீரத்தைக்கண்டு இந்த உலகமே சிரிக்கிறது’ என்று நையாண்டி செய்தார்.
 இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழரின் துயரை வைத்து அரசியல் செய்வதைக் கண்ட இவர்,’ஹிப்போகிரஸி என்பது இந்தியர்களின் தேசிய குணம்’ என்ற தனது நாட்டின் நேர்மையைச் சாடினார்
தினமலர் ஆசிரியராகவிருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் பலரின் படைப்புக்களை வெளியிட்டார்.
அவர் சண் டிவி செய்தித்துறைப் பொறுப்பாளராகவிருந்த காலகட்டத்தில் பல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை,நேர்காணல் செய்து அவர்களை இந்தியப் பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இவரின் இந்த’கண்களுக்கு அப்பால் இதயத்துக்கு அருகில்’என்ற அக்கடெமித் தொகுதி, மாலன் எவ்வளவுதூரம், அயலகத் தமிழ் இலக்கியத்தை ஆய்வுசெய்கிறார், விளங்கிக் கொள்கிறார், மதிக்திறார், அவர்களைக் கவுரவிக்கவேண்டும் என்று துடிக்கிறார் என்பதை காட்டுகிறது.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியா,அன்னியனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மட்டுமல்லாது, தான் பிறந்த சமுகத்திலுள்ள சாதி வெறி, பெண்ணடிமைத்தனத்திற்குச் சாவு மணியடிக்கத் தனது கவிதை மூலம் மக்கள் சிந்தனையைத் தட்டியெழுப்பிய பாரதிபோல், இன்றைய இளம் தலைமுறையினர்,தமிழகத்தை நாசம் செய்யும் குறுகிய அரசியல் கண்ணோட்டங்களைத் தாண்டிய ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தைப் படைக்கத் தனது ஆணித்தரமான படைப்புகள், செயல்கள் மூலம் உந்துதல் கொடுக்கிறார் மாலன்.அதற்கு அவர் நடத்தும் புதிய தலைமுறை சாட்சி என்று பலர் என்னிடம் சொன்னார்கள். பல விருதுகளைப் பெற்ற அவரின் படைப்புக்கள் பல பல்கலைக்கழகங்களில் பல பட்டதாரி மாணவர்களால் ஆய்வு செய்யப் படுகிறது.
அதேபோல, இப்போது, தனது எல்லை தாண்டி வந்து அயலகத்; தமிழரில் தனக்குள்ள நேசத்தையும்,அவர்களின் இலக்கியப் படைப்புக்களில், அவருக்குள்ள மரியாதையையும்  இத்தொகுதி மூலம் காட்டுகிறார்.அவரின் முயற்சி எங்களால் பாராட்டப்படவேண்டியதாகும்.
இந்தியாவில்,முக்கியமாகத் தமிழகத்தில் எழுத்தாளர்களுக்குப் பெரிய மதிப்புக் கிடையாது. சினிமாவையும், நடிகர்களையும் மிகவும் மதிக்கும் அல்லது ஒரு வணக்கத்துக்குரிய துறையாகக் காணும் பெரும்பாலான இளம் தலைமுறையினர் ஒரு தரமான இலக்கியத்தைத் தேடிப் படிக்கும் ஆவலுடன்;  இருப்பதாக எனக்குத் தெரியாது. சென்னையில்,ஒவ்வொரு வருடமும் பெரிய திருவிழாவாகப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது.ஆனால்,தங்கள் வாழ்க்கையையே தமிழ் இலக்கியத்துக்காகச் செலவிட்ட பல முதிய எழுத்தாளர்கள் கவுரவிக்கப் படுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. சிலவேளை, சில எழுத்தாளர்கள், சினிமாத்துறை மூலமோ அல்லது தெரிந்த பத்திரிகைகளின் உதவியுடனோ பிரபலம் பெறுவதுண்டு. அதன்பின் அவர்களின் படைப்புக்களுக்குக் கிராக்கியிருக்கலாம்.ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் இலைமறைகாயாய் வாழ்ந்து விட்டு மறைந்து போகிறார்கள். எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுத்தை நம்பி வாழ்ந்த பெரும்பாலானவர்கள் ஏழைகளாய் வாழ்ந்து மடிகிறார்கள்.இந்நிலை மாறவேண்டும். தமிழை மதிப்பவர்கள், தமிழ் எழுத்தோடு பிணைந்தவர்களையும் மதிக்கவேண்டும்.
 இந்திய- இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகள் பலகாரணங்களால் ஒருத்தரை ஒருத்தர் மதிக்காமலும்,ஓரம் கட்டியும், காழ்ப்புணர்ச்சி வதந்திகள் பரப்பியும் திரிவதால்,எங்களுக்குள் வாழும் அற்புதமான எழுத்தாளர்களையோ அவர்களின் படைப்புக்களையோ ஒரு காத்திரமான முறையில் மதிக்காமலிருக்கிறோம். இலங்கை எழுத்தாளர்களில் பெரும்பாலோர், தங்கள் அரசியற் சித்தாங்களால் உந்தப்பட்டுப் படைப்பிலக்கியத்தைத் தங்கள் ஆயதமாக்கிச் சமுதாய முன்னேற்றத்திற்கானப் பல நல்ல சிந்தனைகளை வளர்த்தவர்கள். எங்கள் தலைமுறையினர், கணேசலிங்கத்தின்’நீண்ட பயணத்தின்’ கதைமூலம் சமுகமாற்றம், முன்னேற்றத்திற்கு எங்களது கடைமை என்பதை உணர்த்தியவர்கள்.
பெனடிக்ட பாலனின் சாதிய எதிர்ப்பு;படைப்புக்களுக்கப் பின்தான்,இந்தியாவில் தலித் இலக்கியம் பிறந்தது.

அது போல பல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள(முற்போக்கு)மனித நேயத்தைத் துவம்சம் செய்து பிரிவினைகளைத் தொடரும் சாதிமுறைக்குச் சாவுமணியடிக்கச் சிலிர்த்தெழந்து எழுதினார்கள்;. தாங்கள் வாழும் சமுகத்தின் கேடுகெட்ட கலாச்சாரமான சீதனக் கொடுமை,பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள்..

1960ம் ஆண்டுக்குப் பின் இலங்கை அரசு அவிழ்த்துவிட்ட இனவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பி எழுதினார்கள். .இலங்கை அரசு தனது அதர்ம சக்கரத்தைச் சுழட்டித் தமிழ் மக்களைச் சம்ஹாரம் செய்தபோது,அந்தக் கொடுமையின் அவலத்தைக் கதையாய், கவிதையாய் வடித்து எதிர்கால சந்ததிக்குச் சரித்திரம் படைத்தார்கள்.

பிறந்த நாட்டில் அனாதையானபோத, புகுந்தநாட்டில் அனுபவத்த வலிகளைத் தங்கள் வரிகளில்,கதையாகக் கவிதையாகப் படைத்nழுதினார்கள்;.புதிய சூழ்நிலை,மொழி,வாழ்வுமுறை,என்பனவற்றில் மோதி எழும்பியபோதும், தங்கள் ஆற்றாத் துயரைத் தங்கள் எழுத்தாணியால் இன்னுமொரு சந்ததிக்குச் விட்டுச் செல்பவர்கள்.இவர்கள் எங்கள் சமுதாயத்தின் சரித்திரப் படைப்பாளிகள். இவர்களின் முயற்சி கௌரவிக்கப் படவேண்டும். எங்களிடையே உலக தரத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலர்.
1980ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து வெளியேறியவர்களின் மிகவும் ஆற்றல் மிக்க படைப்புக்கள் புலம் பெயர் எழுத்தாக பெருவிருட்சமெடுத்தது. ஐரோப்பா முழுதும் பத்திரிகைகளைத் தொடங்கி எழுதிய பல இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் எதிர்கால சந்ததிக்குச் சேர்த்து வைக்கப் படவேண்டும்.ஒவ்வொரு சிறு பத்திரிகைகளும் பாது காக்கப்படவேண்டும். கனாடாவில் முத்துலிங்கமும், ஜேர்மனியிலலிருந்து கருணாகரமூர்த்;தியும் அவர்கள் போல பலரும் தொடர்ந்து எழுதி,அவர்களின் அனுபவங்களூடாக எங்கள் அழகிய தமிழை அச்சில் பதித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.இவர்கள் எழுதும் படைப்பு ஏதாவது என பார்வையிற் பட்டால், அதைப் படித்துவிட்டுத்தான் மறுவேலை செய்வேன். அவ்வளவுக்கு, யதார்த்தமாக எழுத மேற்குறிப்பிட்ட  ஒரு சிலராற்தான் முடியும்..
புலம் பெயர்ந்து வாழும் பல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமல்லாது,சிங்கப்பூர் போன்ற அயலகத் தளங்களில் வாழும் பதின்நான்கு எழுத்தாளர்களின் படைப்பை மாலன் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்திருக்கும் மரியாதைக்கு,நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு, படைப்புக்கள் எழுதியவர்களையும், அதைத் தொகுத்தவரையும் கௌரவிப்பது எங்கள் கடமை என நினைக்கிறேன்..
This entry was posted in photos, Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s