ஜேர்மனியில் வந்து குவியும் சிரிய நாட்டகதிகள்–

scan0001
80ம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள்,இலங்கை அரசின் கொடுமையிலிருந்து தப்பித் தங்களுக்கு தஞ்சம் தேடி உலகமெங்கும் ஓடியபோது,அவர்களுக்கு ஆதரவளித்த நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும்.அந்தக் கால கட்டத்தில் கிட்டத்தட்ட, 60.000 தமிழர்களுக்கு ஜேர்மனி தஞ்சம் கொடுத்ததாக அறிக்கைகள் சொல்கின்றன. 85-87ம் ஆண்டுகளில், லண்டன் தமிழ் அகதிகள் ஸ்தானத் தலைவியாக இருந்தகாலகட்டத்தில்,தமிழ் அகதிகளின் நிலையைக் கண்டறிய ஐரோப்பிய நபடுகள் பலவற்றுக்கும் சென்று அவர்களின் நிலைமைகளை ஆராய்ந்து,அவர்கள் நல்வாழ்வுக்கு உதவுவது எனது கடமையாக இருந்தது. அந்தக்கால கட்டத்தில் ஜேர்மனி இங்கு வந்த தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தபோது தெரியப் பட்ட சில தர்மசங்கடமான நிலை இன்று,சிரிய நாட்டு அகதிகளுக்கும்; தொடர்வதைச் சில பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
அன்று தமிழர்களுக்கு உதவிக்கரம் கொடுத்ததுபோல் இன்று ஜேர்மனி சிரியா நாட்டு மக்களுக்கும் ஆதரவு கொடுக்கிறது
சிரியா நாட்டில் அந்நாட்டு அசருக்கு எதிராகத் தொடரும்,பல்வேறு குழுக்களின் ஆயதப் போராட்ட வன்முறைகளால், அங்கு வாழ்ந்த பலகோடி மக்கள் அகதிகளாகிகொண்டு வருகிறார்கள். பல நாடுகளில் தஞ்சம் தேடியலைகிறார்கள்.அவர்களுக்கு ஆதரவாக ஜேர்மன் நாடு தனது அன்புக்கரங்களை நீட்டியது.
சென்ற மாதம், 80.000 தொகையான சிரிய மக்களுக்குத் தனது நாட்டில் தஞ்சம் கொடுப்பதாக ஜேர்மன் அதிபர் ஆங்கிலா மேக்கள் அறிவித்ததிலிருந்து பல்லாயிரம் சிரியா மக்கள் ஜேர்மனி நோக்கிப் படையெடுக்கிறார்கள். பெரும்பாலான சிரியா நாட்டு அகதிகள் இளைஞர்களாக இருப்பதால், வளர்ந்துகொண்டுவரும் தங்களது பொருளாதார விருத்திக்கு இந்த அகதிகள் உதவுவார்கள் என்பதால் அகதிகளின் வருகையை ஜேர்மனி ஊக்குவித்தது.. ஆனால் இன்று அங்கு படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான,பல நாடுகளைச் சேர்ந்த பல இனங்களைச் சேர்ந்த,பல அரசியற் பின்னணியைக் கொண்ட அகதிகளின் தேவைகளை எப்படிச் சமாளிப்பது என்ற ஜேர்மனி திண்டாடுகிறது.
 இலங்கையிலிருந்து பல தமிழப்பகுதிகளிலுமிருந்தும் அன்று ஜேர்மனிக்கு வந்த தமிழர்கள் ஒட்டுமொத்தமாக, பழைய முகாம்களிலும்,பழைய இராணுவ முகாம்களிலும் வைக்கப் பட்டிருந்ததுபோல், இன்று சிரியா மக்களும் அமர்த்தப் படுகிறார்கள்.பலதரப்பட்ட மக்கள் ஒரு அவசரகாரணத்துக்காக ஒரேயடியான குழமமாகச் சேர்த்து வைக்கும்போது வரும் அசாதாரணமான சூழ்நிலைகள் உண்டாகுவது தவிர்க்கமுடியாத விடயமாகும்.
தற்போது அந்த முகாம்களிற் தலையெடுக்கும்;,பாலியல்,சமுக,இன,மொழி,கலாச்சாராப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஜேர்மனி அவதிப்படுகிறது. 80ம் ஆண்டின் மத்திய பகுதிகளில்,அகதியாக வந்த இலங்கைத் தமிழர்கள்,ஜேர்மனியின் பல பிராந்தியங்களிலும் அமர்த்தப் பட்டார்கள்.முன்பின் தெரியாத நாட்டில், மொழிதெரியாத நிலையில் அன்று வந்த தமிழர்கள் மிகவும் கஷ்டப்; பட்டார்கள்.; இலங்கையிலிருந்து உயிர் தப்பி ஓடுமளவுக்குச் சிங்கள இனவாத அரசு எடுக்கும் ஒடுக்குமுறைகள் பற்றிப் பேச என்னை அங்கு கூட்டத்திற்கு அழைத்தவர்களிடம், ஒரு அகதி முகாமுக்குச் சென்று தமிழ் அகதிகளைச் சந்திக்கவேண்டும் என்ற எனது கோரிக்கையை வைத்தபோது அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடப் பண்ணியது. தமிழ் அகதிகள் ஊரக்குத் தொலைவிலுள்ள ஒரு பழைய முகாமில் வைக்கப் பட்டிருந்தார்கள். அவர்களுக்கு வெளியில் செல்லும் அனுமதி தாராளமாகக் கொடுக்கப் படவில்லை.
 எனக்கு ஆத்திரமும் அதிர்ச்சியும் வந்தது. ‘என்ன எங்கள் தமிழரை, பழைய காலத்து யூத மக்களை மாதிரி அடைத்து வைத்திருக்கிறீர்களா, அவர்கள் உங்கள் நாட்டுக்கத் தஞ்சம் கேட்டு வந்தவர்கள். உங்கள் நாட்டைத் தட்டிப் பறித்துக் கொண்டுபோக வரவில்லை’ என்று எனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினேன்., அதன்பின், ஜேர்மனிய மனித உரிமைவாதிகளின் முயற்சியால் தமிழர்களை நடத்தும் நிலையில் பெரிய மாற்றங்கள் நடந்தன.
இன்று ஒரு நாளைக்கு 5000 சிரிய அகதிகள் ஜேர்மனி நோக்கச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு,ஆரம்பத்தில் ஜேர்மனியர் காட்டிய வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருகிறது. வந்து குவியும் அகதிகளுக்கு வீடுகள் கொடுத்து வரவேற்க முடியாததால் பல அகதிகள் பல இடங்களிலும், அதாவது பழைய கால இராணுவ முகாம்களிலும்,யூதர்கள், ஜேர்மன் நாஷிகளுக்கு எதிரானோருக்காக அமைக்கப்பட்; டாஹோ போன்ற முகாம்களிலும் தங்க வைக்கப் படுகிறார்கள்.
ஜேர்மன் அதிபர் இவ்வளவு தாராளமாகச் சிரிய அகதிகளை ஜேர்மனிக்கு அழைப்பதற்கு அங்குள்ள பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும்,ஒரு நாட்டுக்குத் தேவையான குழந்தைகள் பெற்று ஒரு நாட்டின் சனத்தொகையைச் சம நிலையில் வைத்துப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற எதிர்காலத்தில் பாரிய பிரச்சினை வருவதைத் தடுக்கச் சிரிய அகதிகள் ஜேர்மனிக்கு வர ஜேர்மன் அரசால் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.

ஜேர்மனியில் சனத்தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. சுpல வருடங்களுக்கு முன்,; 82.கோடிக்கு மேலாக இருந்து மக்கள் தொகை,இவ்வருடம் ஜனவரி மாதம் 80 கோடியைவிடக் குறைவாகி விட்டது இன்றைய காலகட்டத்தில் ஜேர்மனியில் ஒரு மணித்தியாலத்துக்கு கிட்டத்தட்;ட 75.குழந்தைகள் பிறக்கிறார்கள் மரணத்தொகை 99ஆகவும், அங்கு செல்லும் அகதிகள் எண்ணிக்கை 4–5 ஆகவுமிருக்கிறது.

2060ம் ஆண்டில்; ஜேர்மனியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 59விகிதமானோர் 60 வயதைத் தொடுபவர்களாக இருப்பதால் உழைக்கும் இளம் தலைமுறையின் விருத்தியைப் பெருக்கும் அவசரநிலைக்கு ஜேர்மன் நாடு தள்ளப் பட்டிருக்கிறது.

சிரிய அகதிகள் என்று வருபவர்களில் 30 விகிதமானோர் ஆபகானிஸ்தான், பாகிஸ்தான், பங்களதேஷ், லிபியா போன்ற நாடுகளிலிருந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 4கோடி சிரிய மக்கள் துருக்கி, லெபனான் உட்படப் பலநாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்களில் கிட்டத்தட்ட 1.5கோடியினர் ஜேர்மனியை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மிகக்கூடிய தொகையில்,முஸ்லிம் மக்களை ஜேர்மனி வரவேற்பது ஆச்சரியமான விடயமல்ல. ஏற்கனவே கிட்டத்தட்ட 3 கோடி துருக்கிய மக்கள் ஜேர்மனியில் வாழ்கிறார்கள்.இவர்களையும், தங்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை உயர்த்தும் தொழிலாளர்களாக 60-70ம் ஆண்டுகளில் ஜேர்மனி வரவேற்றது. ஆனால் அவர்களின் வாழக்கை நிலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என்று அறிக்கைகள் சொல்கின்றன. ஜேர்மனியில் வாழும்,80 விகிதமான துருக்கிய மக்கள் அரசியல் மானியத்தில் வாழ்பவர்களாக இருப்பதாக அறிக்கைகள் சொல்கின்றன.ஜேர்மனியில் ஐம்பது வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைத் துருக்கி மக்கள் கொண்டிருந்தாலும் அவர்களின் இரண்டாம் தலைமுறையினரும் பெரிய உயர்கல்வியைப் பெற்று முன்னேறவில்லை. 70விகிதமான துருக்கியச் சிறார்களுக்கு ஓ’லெவல் படிப்புக்கூட கிடையாதாம்.. பலகாலமாக அங்கு வாழும் துருக்கியர்கள், ஜேர்மன் கலாச்சாரத்தோடு ஒண்றிணையாமல் துருக்கியர்களாக வாழ்கிறார்களா என்ற கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். அதாவது ஒருகாலத்தில் ஜேர்மனிக்குத் தொழிலாளிகளாக வந்த துருக்கியர்களில் இன்னும் ஜேர்மனியப் பிரஜைகளல்லாமல் துருக்கிய பாஸ்போர்ட்டையே வைத்திருக்கிறார்கள்.
ஆகவே, இன்ற வரவேற்கப் படும் சிரியப் பிரஜைகள் காலக்கிரமத்தில் ஜேர்மனியப் பிரஜைகளாக அங்கிகரிக்கப்படுவார்களா அல்லது சிரிய அகதிகளாகப் பலகாலம் துரக்கிய மக்கள் மாதிரி இரண்டும் கெட்டான் வாழ்க்கை நடத்துவார்களா என்பதும் கேள்விக் குறியாகவிருக்கிறத.
அகதிகளுக்கு உகவுவதால், ஜெர்மனியப் பிரதமர் ஆங்கிலா மேக்கல் இவ்வருட நோர்பல் பரிசுக்குரியவராகப் பரிந்துரைக்கப் படலாம் என்ற தகவல்களும் வெளிவருகின்றன. ஹங்கேரி போன்ற ஐரொப்பிய நாடுகள். சிரிய அகதிகளை அங்கிகரிக்காதபோது திருமதி மேக்கல் மனிதாபத்துடன் சிரிய அகதிகளை வரவேற்றதற்கு, ஜேர்மனியின் சனத்தொகை பற்றாக் குறை ஒரு முக்கிய காரணமாகவிருந்தாலும்,அதே நேரத்தில். ஜேர்மனி ஒருகாலத்திலு; யூத மக்களைத் தங்கள் நாட்டை விட்டுத் துரத்தியதற்குப் பரிகாரமாகச் சிரிய அகதிகளை ஆதரிக்கிறார் என்ற கருத்தை வெளியிடுவோருமுண்டு.
நாஷிகள் பதவிக்கு வந்தபோது ஜேர்மனியில் 1933ம் ஆண்டில் 523.000 யூத மக்கள் வாழ்ந்தார்கள். யூதர்களுக்கு எதிராக,ஹிட்லரின் கொடுமை தொடங்கியதும்,பணக்கார-வசதி படைத்த யூதமக்கள் அவசர அவசரமாக ஜேர்மனியை விட்டுப் பல நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். ஜேர்மனியிலும். ஹிட்லரால் ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலுமிருந்த கோடிக்கான யூதமக்கள் கோடிக்கணக்காகக் கொல்லப் பட்டார்கள். அவர்களை அநியாயமாக அடைத்து வைத்திருந் டாஹோ அகதி முகாமில் இன்று சிரிய அகதிகள் அன்புடன் வரவேற்று ஆதரிக்கப் படுகிறார்கள். ஜேர்மனியின் மனிதாபிமானத்தை உலகம் வெகுவாகப் பாராட்டுகிறது.
ஆனால், அகதிகளாக வந்தவர்களால் உண்டாகும் பிரச்சினைகளம், அவர்களுக்கெதிரான இனவாதத் தாக்குதல் நடவடிக்கைகளும் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வெளிவந்த கொண்டிருக்கின்றன்.
 80ம் ஆண்டுகளில் ஜேர்மனிக்கு வந்திருந்த ஒரு முகாமுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த தமிழர்கள்,சாதி ரீதியாக இருபிரிவாகப் பிரிந்திருந்தார்கள்.அவர்களின் தேவைகளைக் கவனிக்க இருவிதமாகச் செயல் படவேண்டியிருந்தது என்று அங்கு உதவியாளராக இருந்த தமிழர் ஒருத்தர் துக்கத்துடன் சொன்னார்.
அதேமாதிரி, இன்று சிரியாவிலிருந்தும் வேறுபல நாடுகளிலிருந்தும் அகதிகளாக வருபவர்கள் மொழி, சமய,பிராந்திய,கலாச்சார வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து அவர்கள் வாழும் முகாம்களில் எக்கச் சக்கமான பிரச்சினைகளைக் கொடுப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.
அத்துடன், வேறுபட்ட, கல்வி, கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஜேர்மன் பண்பாட்டைத் தெரியாதவர்களாக இருப்பதால் சாதாரண வேலைப்பாடுகள்கூட அசாதாரண சூழ்நிலையை உருவாக்குககிறது. உதாரணமாக,வைத்தியரிடம் செல்வதற்கு, அரச உதவி பெறுவதற்கு என்ற ஒழுங்கு செய்யப்பட்டபோது ஒரு ஒழுங்க முறையில் இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் இடித்துத் தள்ளிக்கொண்டு போவதால் பாரிய வன்முறைகள் தலையெடுக்கின்றன.
பல நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரு முகாமில் இருப்பதால் ஏகப்பட்ட பிரச்சினைகள் அங்கு தலையெடுக்கின்றன. அத்துடன் அகதிமுகாம்களில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதகமான பாலியல் கொடுமைகள் அதிகரிக்கின்றன் அந்தக் கொடுமைகளைச் செய்பவர்கள் ஒரே முகாமில் அடைபட்டக் கிடக்கும் அகதிகள் மட்டுமல்ல அங்கு காவலிருக்கும், காவலர் சிலரும், உதவி செய்ய வருபவர்களிற் சிலருமாகுமென்ற ஜோஹான் வில்லியம் றோரிங் என்ற அரச அதிகாரி சொல்கிறார்.
ஜேர்மன் இனவாதிகளால் சிரியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கின்றன் ஜேர்மனிக்கு வருபவர்கள் அகதிகள் என்ற பெயரில் வரும்; முஸ்லி;ம ஆக்கிரமிப்பாளர்கள்.அவர்களை உடனே நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமென்று இனவாதிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். கடந்த சில நாட்களாகக் கிழக்கு ஜேர்மனியில் பல இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 07.10.15ல் 31 போலிசார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தார்கள்.
ஓவ்வொரு நாளும் ஆயிரக் கணக்காகப் படையெடுக்கம் அகதிகளுக்கு ஆதரவு கொடுத்த ஜேர்மன் பிரதமர் ஆங்கிலா மேக்கல் பதவி துறக்கவேண்டும் என்று இனவாததிகள் கூப்பாடு போடுகிறார்கள்.உலக அரங்கில் ஜேர்மனி ஒரு தார்மீகமான நாடு என்று நிருபிக்க ஆங்கிலா மேக்கல் எடுத்த நடவடிக்கைகள் ஜேர்மனியின் அரசியல் திருப்பத்திற்கு அத்திவாரம் போடப்போவதாக அவதானிகள் சொல்கிறார்கள்.
அன்று வந்த தமிழ் அகதிகளில் பலர் இன்று இங்கிலாந்துக்கும் ஆங்கிம் பேசும் வேறுபல நாடுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். ஜேர்மனிக்கு வரும் சிரியா நாட்டு அகதிகளின் ஆர்வமும் அதுவாக இருக்கலாம் என்று தெரிந்து கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டுக்கு அவர்கள் நுழையாதபடி பல சட்டங்களைப் போட்டுக்கொண்டு வருகின்றன..
இன்ற உலகில் நடக்கும் மனித அவலங்கள் அத்தனைக்கும் காரணம் வல்லரசுகளின் ஆயுதப் போட்டிகளும்,ஆதிக்க சதிகளும் என்பது சுயசிந்தனையுள்ள மனிதர்களுக்குத் தெரியம்.இவர்களின் பேராசை உலகத்தில் எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும்.  மகா அலக்ஸாண்டர்,அசோக சக்கரவர்த்தி,யூலியஸ் ஸீஸர் தொடக்கம் ஆங்கிலேய ஏகாதிபத்தியம்,இன்றைய அமரிக்க ஆயதபலம் என்பன மனித அவலங்களின் அத்திவாரத்தில் தங்கள் ஆளுமையை நடைமுறைப் படுத்துபவர்கள்.
80ம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை இந்திய அரசியல் தமிழ் இளைஞர்களுக்கும்,மேற்கு நாடுகள் அன்றிருந்த ஐக்கியதேசியக் கட்சிக்குக்கொடுத்த ஆயத உதவியும் பயிற்சி என்பவற்றின் பின்னணியில் சிதிலமடைந்தது. இலங்கைத் தமிழர்களில் 1.3 கோடியினர் உலகெங்கும் அகதிகளாகத் தஞ்சமடைந்தார்கள்.;
1979ல் இரஷ்யா ஆபகானிஸ்தானுக்கள் நுழைந்ததால்,அமரிக்கா முயாகடின் குழவினரை உண்டாக்க அதைத் தொடர்ந்து தலிபான் இயக்கம் உருவெடுத்தது.. அதைத்தொடர்ந்து அல்-கெய்டா இயக்கம் உருவானது.2003ல் ஈராக்,மேற்கத்திய உலகால் சின்னாபின்னமானது 2011ல் லிபியா என்ற நாடு சிதைக்கப் பட்டது.கடந்த நான்கு வருடங்களாகச் சிரியாவைச் சிதைக்கப் பலநாடுகள் ஊழித்தாண்டவமாடுகின்றன. அதனால் பலகோடி மக்கள் சுயமை இழந்து, நாடற்ற அனாதைகளாக அலைய மேற்க நாடுகள் அவர்களை ஆதரிக்கத் தயங்கும்போது ஆங்கிலா மேக்கல் என்ற ஒரு பெண்துணிவாக இந்த மக்களுக்கு ஆதரவு கொடுக்க முயல்வதை ஒருகாலத்தில்,உலகத்திலேயே மனிதத்துக்கு எதிரான
நாஷி அரசியல் சிந்தாந்தை வளர்த்த அவரின் நாட்டு சரித்திரததிரத்தைக் கொண்ட மக்கள்,அவரின் தர்ம சிந்தனைக்கு  எப்படி ஆதரவு n காடுப்பார்கள் என்று எதிர்காலம் பதில் சொல்லும்.
This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s