ஜெயகாந்தன்—-யதார்த்த தமிழ் இலக்கியத்தின் முன்னோடி

scan0033இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.லண்டன் 09.04.15

எங்களைப்போல் பலருக்கு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிய மிக மிகப் புகழ் படைத்த தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் நேற்ற இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தபோது,எனது தொண்டை அடைத்துக்கொண்டது.நீர் பெருகின. நேற்றுக்காலையில், எனது கணனிப் பகுதிக்குப் போட எனது பழைய காலத்துக் கதையொன்றை அச்சடித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதையின் கதாநாயகன் ஒரு ஜெயகாந்தன் அபிமானி, ஜெயகாந்தனின் எழுத்தின் உந்துதலால் தமிழ் நாவல் இலக்கியங்களைக்; காதலிக்கத் தொடங்கிய கதாநாயகன் அவன்.

இன்று அதிகாலையில் கணனியைத் திறந்ததும் ஜெயகாந்தனின் மறைவு எனது அடிவயிற்றில் பிரளயத்தையுண்டாக்கி.நெஞ்கில் ஒரு பாரத்தைத் திணித்தது,அதிகாலை, ஆறுமணிக்கு, லண்டனில் இன்னும் சூரியன் தரிசனம் தராத நேரத்தில்,ஜெயகாந்தன் இறந்த செய்தி கேட்ட துயரில் உலகம் ‘சோகத்துடன்’ எழுப்புவதாக எனக்குப் படுகிறது.

எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருத்தரான இராஜம் கிரஷ்ணனை இழந்த சில மாதங்களில் எனது கவுரத்துக்கும் மதிப்புக்குமுரியவரான உரியவரான எழுத்தாழன் ஜெயகாந்தனும் இறந்து விட்டார் என்ற செய்தி நெஞ்கில் ஒரு சுண்டிப்பையுண்டாக்கியது. இருவரின் எழுத்துக்களும் என்னை மிகவும் மாற்றியமைத்தவை. இருவரும் எனது மதிப்புக்குரியவர்கள். இருவரையும் நேரில் சந்தித்துப் பல மணித்தியாலங்களைச் செலவழித்திருக்கிறேன். தர்க்கங்கள் செய்திருக்கிறேன். மதிப்பிட முடியாத,இனிமையான நினைவுகள் அவை

1960ம் ஆண்டுகளில்,இளம் வயதில்,தமிழ் எழுத்தில் எனக்கொரு ஆழமான பந்தத்தையுண்டாக்கிய தமிழ் எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முன்னிலை வரிசையில் என்றுமிருப்பார். எனது தந்தையார் ஒரு தமிழ் ஆர்வலன். இந்தியாவிலிருந்து வெளிவரும் பல தரப்பட்ட வாரப் பத்திhகைகளான, கல்கி, கலைமகள்,ஆனந்தவிகடன் போன்றவையுடன், ஈ.வெ.ரா தொடக்கம் அண்ணாதுரை,கருணாநிதி,வரதராசன்,லஷ்மி.தமிழவாணன் போன்ற,அன்றைய காலத்துப் ‘பிரபல’ தமிழ் எழுத்தாளர்களின் பல தரப்பட்ட புத்தகங்கள் எங்கள் வீட்டை அலங்கரித்த காலமது.

‘இவ்வளவு காசை இந்தப் புத்தகங்களுக்குச் செலவளிக்காமல்,பெட்டைகளுக்கு நகை வாங்கலாமே’ என்று எனது தாய் அப்பாவுடன் முணுமுணுப்பார். அவ்வளவு தூரம் எங்கள் வீடு பத்தகக்காடாகவிருக்கும். பாடசாலை முடியவிட்டு,வீடு வந்ததும், அன்று வாங்கப் பட்டிரக்கும் பத்திரிகைகளை யார் முதலில் படிப்பது என்று சகோதரிகளுக்குள் பெரிய சண்டைபோடுவோம்.

தமிழ்க்கதைகள் படிப்பதற்கப்பால்,’யாதார்த்தமான தமிழ் இலக்கியம்’என்ற பரிமாணத்தின் கருவை எங்கள் சிந்தனையிற் புகுத்தியவர் ஜெயகாந்தன. ;ஜெயகாந்தன.அவர்; எங்கள் பலரின் அபிமான எழுத்தாளர். ஓரு மனித சிந்தனையின் முற்று முழதான ‘சமுக’அறிவு விதைகளை பலரின் அடிமனத்தில் விதைத்தவர் அவர். அவரின் நாவல்கள் படிக்கும் காலத்தில் எங்கள் பாடசாலைக்கு ஒரு ஆசிரியா வந்திருந்தார். அவர் பெயர் அரசரத்தினம். அறிவின் அத்திவாரத்தில் அரசியற் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாமல், இளைஞர்களை வெறும் கோஷங்களால் உணர்ச்சியூட்டித் தமிழரசுக் கட்சி தங்களின் சுயநல அரசியல் செய்கிறது என்று அவர் சொன்னபடியால் அவரை, ‘கம்யுனிஸ்ட் வாத்தியார் என்று பிற்போக்குவாதிகள் அழைத்தார்கள். அவர் கிராமத்துப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு (முக்கியமாகப் பெண்களின் படிப்புக்கு) முன்னின்று பாடுபட்டதால் ஒருத்தரும் அவருக்குப் ‘பெட்டிசன’; போட்டு ஊரைவிட்டுக் கலைக்கவில்லை..
அந்தக் கம்யுனிஸ்ட் வாத்தியாரின் விடாமுயற்சியால் வந்த கல்வியின் பலனால் இன்று லண்டனில் இருப்பவள் நான். ஆவரின் தாரக் மந்திரங்களில் ஒன்று, ‘நல்லதைத்தேடிப் படி’என்தாகும். ஏஙகள் வகுப்பலிருந்த ஒட்டுமொத்தமான மாணவர்கள் வாசிப்பதில் அக்கறை காட்டினர். இந்திய வார இதழ்கள் ஊர் லைப்பரியில் இருக்கும்.

அதே கால கட்டத்தில்,எங்கள் ஊரில் உள்ள, தமிழ் எழுத்துக்கள் வாசிக்கும் இளைய தலைமுறையினரிடம் தனது எழுத்தின்மூலம் ஒரு இலக்கிய புரட்சியை ஜெயகாந்தன் தன்னையறியாமல் செய்து கொண்டிருந்தார்.அதன் பிரதி பலிப்புக்களில் ஒன்றுதான் ‘பெண்களுக்கு மேற்படிப்பு’ என்ற தாரக மந்திரமும் என்றால் மிகையாகாது. படிப்பைத் தொடர்ந்ததுமட்டுமன்றி பாடசாலைப் பத்திரிகையைத் தொடங்கவேண்டும்,அதில் மாணவர்கள் தங்களுக்குப்பிடித்த விடயங்களை எழுத வெண்டும் என்ற எழுத்து உந்துதல் எங்களின் பல தரப்பட்ட வாசிப்பு ஆர்வத்தால் பிறந்தது.

கிராமத்துப்படிப்பு முடிய,நான் எனது ட்ரெயினிங் காரணமாக யாழ்ப்பாணம் வந்ததும், நான் ஜெயகாந்தனைப் படிப்பதைக்கண்ட எனது சொந்தக்காரர் ஒருத்தர்.’அவர் ஒரு கொம்யுனிஸ்ட்காரன்’ என்று சொன்னாhர். எனக்குக் கல்வியில் ஆர்வம் வரப்பண்ணியவரும் ஒரு கொம்யுனிஸ்ட் வாத்தியார் என்ற ஞாபகம் அப்போது எனது சிந்தனையில் உதித்தது.ஜெயகாந்தன் ஒடுக்கப் பட்ட மனிதர்கள் பற்றியும்,முக்கியமாக பெண்கள் பற்றியும் எழுதுவது எனக்குப் பிடிக்கும் என்று நான் சொன்னதை அவர் இளக்காரமாக் காது கொடுத்துக் கேட்டார்.

அந்த வருடம் எனது சிறுகதை ஒன்று,’சித்திரத்தில் பெண்ணெழுதி ‘ என்ற தலைப்பில் செ. யோகநாதன ஆசிரியராகவிருந்து நடத்திய ‘வவசந்தம்’ பத்திரிகையில் வந்தது.அது பெரியசாதிக்காரரின் பாலியற் சேட்டைக்காளாகித் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட ஒரு யாழ்ப்பாண ஏழைப் பெண்ணைப் பற்றியது. அதைப்படித்த எனது சொந்தக்காரர் என்னை, ‘கம்யுனிஸ்ட்’ என்ற சந்தேகக் கண்ணுடன் பார்த்தார் எனக்கு அப்போது கம்யுனிசம் என்றால் என்னவென்று பெரிதாகத் தெரியாது நான் பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு தமிழரசுக் கட்சி மேடைகளில் உணர்ச்சிப் பாடல்களை விளாசித்தள்ளிய கூட்டத்தைச் சொர்ந்த அனுபவமுள்ளவள்.யாழ்ப்பாணத்தில் அப்போது, டானியல்,செ.யோகநாதன்,செ. கணெசலிங்கம்,அகஸ்தியர்,நீர்வை பொன்னையன்,பெனடிக்ட் பாலன் போன்றோர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல முற்போக்கு நாவல்களை எழுதிக்கொண்டிருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து’எழில் நந்தி’ என்ற புனைப் பெயரில்,டொமினிக் ஜீவாவின் மல்லிகை பத்திகையில் ஒரு கதை எழுதினேன் அது ஒரு சாதித்திமிர் படித்த பணக்காரனுக்கு இரத்தம் கொடுக்கச் சொந்தக்காரர்கள் இல்லாததால், மலவண்டி தள்ளும் ஒரு தொழிலாளி இரத்தம் கொடுத்து அவரை உயிர்ப்பித்த கதை!
எனது கதைகள் வித்தியாசமாக, அடிமட்ட மக்களின் ஆத்மாவைத் தொட்ட கதைகளாய் இருந்ததால் பல பாராட்டுக்கள் வந்தன. ஐம்பது வருடங்களுக்குப் பின் திரும்பிப் பார்த்தால், ஒடுக்கப் பட்ட மக்களை இலக்கியத்தின் மூலம் பொதுமேடைக்குக் கொண்டு வரக்கூடிய முன் உந்துதல்களை எனக்குத் தந்த எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும் ஒருத்தர் என்று நினைக்கிறேன். அவரின் இலக்கியத்தில் ஆர்வம் வந்து அவரின் எழுத்துக்களைத் தேடிப் பிடித்தகாலத்தில் அவர் ஒரு கொம்யுனிஸ்ட்காரர் என்பதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. சாதாரண மக்களைப் பற்றிய, ஏழைகளின் உலகத்தை அவர் காட்டிய,நேர்மையான, யதார்த்தமான எழுத்துவன்மை எனக்குப் பிடித்திருந்தது.

யாழ்ப்பாணம் தாதிமார்பயிற்சிப் பாடசாலையில்,மாணவிகள் சார்பில் ஒரு பத்திகையைத் தொடங்கியதும்,எனது எழுத்தின் ஆர்வத்தால், புதிய விடயங்களை, மாற்றுக் கருத்துக்களைத் தைரியத்துடன் எழுதுவதால் அதில் என்னை ஆசிரியையாக்கினார்கள்.பாரதியார் கண்ட பெண்கள் மாதிரித் துணிவாக, உலுக்கப்பட்ட சமுக ஒடுக்குமுறைகளுகளுக்கு எதிர்த்துக் குரல் கொடுக்க அந்தக் காலத்தில் நடந்த பல அரசியல் மாற்றங்களும், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களும் காரணிகளாக இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அறுபதாம் ஆண்டின் நடுப் பகுதியில், அமெரிக்கப் போர்வெறியால் வியட்நாம் மக்கள் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு எதிராக உலகெங்கும், இலங்கையுட்பட பல்லாயிரக்கனக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். ‘போர்வேண்டாம்,காதல் செய்யுங்கள்’ என்று பிரித்தானியாவின் புதிய தலைமுறைப் பாடகர்களான பீடடில்ஸ் குறுப்பினர் மக்களை ஒரு புதிய சிந்தனைக்குள் உள்ளடக்கினர். உலக அரசியல் மாற்றங்களின் பிரதிபலிப்பு இலங்கையில்,முக்கியமாக யாழ்ப்பாண்த்தில் பிரதி பலித்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் நுழையக்கூடாது என்று பெரியசாதியினர் தடுத்ததால் அதனால் பல இடங்களில் சாதிக்கலவரம் வெடித்தது. தமிழ்த்தேசியவாதிகள் போலிசார் பக்கம் சார்ந்திருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பல கொடுமைகள் நடக்கக் காரணமாகவிருந்தார்கள்.முற்போக்குவாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடினார்கள்.

அப்போதுதான் எனக்கு, எப்போதோ எனது ஆசிரியர் அரசரெத்தினம் தமிழத் தேசியம் பற்றிச் சொன்னவை ஞாபகம் வந்தது. தமிழ்த் தேசியவாதிகள்,தமிழ் மொழியைத் தங்கள் தேவைக்குப் பாவிப்பவர்கள்!.பல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அக்கால கட்டத்தில் தமிழின் வலிமையைத் தங்கள் எழுத்தில் வடித்து,சமுதாயத்தில் நடந்துகொண்டிருந்த பல தரப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடினார்கள். அதில் ஜெயகாந்தனும் ஒருத்தர்.

அதன்பின் சில வருடங்களின் பின் லண்டன் வந்ததும், முற்போக்கு சிந்தனையுள்ள சிலர் சேர்ந்த ஒரு இலக்கிய வட்டம் ஒண்டாக்கி மாதம் தோறும் ,இலக்கிய விவாதங்கள் வைத்தோம் அந்த விவாதங்களில் முக்கிய இடம் பெற்ற எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முன்னிலையில் இருந்தார். 50-60ம் ஆண்டுகால கட்டத்தில், உலகம் முழுதும் முற்போக்கு சிந்தனைக் கருத்துக்கள் கிளைவிட்ட பெரிய மரமாக வளர்ந்து கொண்டிருந்தது.அதில், பல கலைஞர்களின் பங்கும் உள்ளடங்கியிருக்கிறது. இந்தியாவில், முக்கியமாக, தமிழகத்தில் ஒரு முற்போக்கு இலக்கியப் பரம்பரையைத் தோற்றுவித்த பலரில் ஜெயகதந்தன் முன்னிலையிலுள்ளார். அவர் தேவையற்ற வர்ணனைகளுக்கப்பால்,அவர் சாதாரண வார்த்தைகளில், மக்களையும், சம்பவங்களையும் வாசகனுடன் இணைப்பது இலக்கியத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.

‘சிலவேளைகளிற் சில மனிதர்கள்’ படித்த எந்தப் பெணணும்; தன்மனத்தில் ஒரு ஆத்திரம் வரவில்லை என்று சொன்னால் அது முழுப் பொய்யாகத்தானிருக்கும்.
1987.ஆகஸ்ட்மாதம் ஜெயகாந்தனை நேர்காணல் செய்ய அவரைச் சந்தித்தேன் அதற்கு முதல் சென்னையிற் பல எழுத்தாளர்களைச் சந்தித்தால்,அவர்கள் இலங்கை,இந்தியத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்று ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன்.
ஜெயகாந்தனைச் சந்தித்ததும்,அவர் ஒரு முற்போக்க எழுத்தாளர் என்பதற்கப்பால் அவர் ஒரு சராசரி, ‘ஆண்’என்பதைக் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. என்னை ஒரு ‘பெண்’ணாகத்தான் பார்த்து விவாதத்தை; தொடங்கினார். லண்டனில் பல மேடைகளில் இப்படியான தர்க்கங்களில் ஈடுபட்டதால் அவரின் விவாதங்கள் ஒன்றும் பெரிதாகவிருக்கவில்லை. நீண்ட நேரம் பல தர்க்கங்களைச் செய்துகொண்டோம். ‘மேற்கத்தியரிடம் கலாச்சாரம் கிடையாது’ என்று அவர் சொன்னதும் எங்கள் விவாதம் மிகவும் சூடுபிடித்தது.

‘இந்தியாவின் கலாச்சாரம் மிக மிகப் பழமை வாய்ந்;ததாகவிருக்கலாம்,ஆனால் பல தரப்பட்ட தத்துவக்கருத்தளைத் தரும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், பல்லாயிரம் வருடங்கள் கண்டு பிடிக்கமுடியாத விஞ்ஞான அற்புதங்களைக் கண்டு பிடித்த மேற்கத்திய விஞ்ஞானிகள், சமத்துவம், ஜனநாயகத்தை மதிக்கும் மேற்கத்திய அரசமுறைகள் என்பன நாகரீகமற்றவர்களின் செயற்பாடா’ என்று பதிலுக்கு நான் விவாதித்தேன்.

அதற்கு அவர்,மேற்கத்திய நாகரீகத்தின் பரிமாணங்களில்,காலனித்துவம்,முதலாளித்துவம், பற்றி ஒரு பெரிய பிரசங்கம் செய்தார்.அது எனக்கு மிக சந்தோசமாகவிருந்தது.
அந்தச் சந்திப்பின்பின்,இந்தியாவுக்குப் போயிருந்த காலகட்டத்தில்,இரண்டொரு கூட்டங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன். எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாத குணம் கொண்ட நேர்மையான மனிதன் அவர். தனக்குச் சரியெனப்பட்டதை ஆணித்தரமாக,ஆளுமையுடன் சொல்பவர் அவர். அவர்; வாழ்ந்தகாலத்தில் வாழ்ந்து,அவரின் எழுத்தைப்படித்து,அவழைரச் சந்தித்து உறவாடி, தர்க்கம் செய்து அதனால் பல விடயங்களைச் சிந்திக்கவும் செயலாற்றவும் முடிந்தது என்னைப்போல மிகச் சிறிய எழுத்தாளர்களின் அதிர்ஷ்டமாகும்.அவரின் இழப்பு இலக்கிய உலகில் ஈடுசெய்யமுடியாதது. அவரைப்போல ஒரு’துணிவான, யதார்த்தமான, ஆளமையுள்ள எழுத்தாரகை;காண இன்னும் பல்லாண்டுகள் காத்திருக்குவேண்டும்.அவரைப் பிரிந்து துயருறும் அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s