பெண்கள் முன்னேறிவிட்டார்களா? அகில உலக மாதர் தினத்தன்று நினைக்க வேண்டிய சில விடயங்கள்

029

1911.03.08ல்; பெண்களால் முதலாவதுஅகில உலகமாதர் தின விழா கொண்டாடப்பட்;து. 1977ல் ஐக்கியநாடுகள் சபை அகில உலக மாதர் தின விழாவை அங்கிகாரம் செய்தது. இன்று இரஷ்யா, சீனா, வியட்னாம், பலகேரியா போன்ற நாடுகளில் அகில உலக மாதர் தினத்திற்கு அரசவிடுமுறைவிடுகிறார்கள்.

இன்று உலகம் பரந்த வித்தில் பெண்கள் தின விழாக்களை நடத்திப் பெண்களுக்கான விடயங்களை அரசுகிறார்கள் ஆராய்கிறார்கள். பல தரப்பட்ட விடயங்களும் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன. புல தரப்பட்ட கலைவிழாக்களும் நடக்கின்றன.

இங்கிலாந்தில் இதுவரை கிடைத்த செய்திகளின்படி கிட்டத்தட்ட பலநுர்றூ நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றனவாம். இந்த விழா நிகழ்ச்சிகளில் பெண்கள் அடைந்த பொருளாதார, அரசியல், கல்வி முன்னேற்றங்கள் பற்றிப் பேசப் படும்.

1857ம் ஆண்டு நியுயோர்க் நகர்த் துணிச்சாலைகளில மிகக் குறைந்த ஊழியத்தில் வேலை செய்த பெண்கள் தங்கள் சம்பளத்தை உயர்தச்சொல்லிப் போராடினார்கள் அந்தப் போராட்டம் நியுயோர்க நகர் காணாத மாபெரும் ஊர்வலமாக மாறியது. அன்று பெண்கள் தொடர்ந்த போராட்டமும் அதைத் தொடர்ந்து பல பெண்ணியவாதிகளால் எடுக்கப் பட விளிப்புணர்ச்சி வேலைகளும் 1911ம் ஆண்டு முதலாவது அகில உலக மாதர் தின விழாவை ஏற்படுத்தியது.

ஆனாலும் சமயம், கலாச்சாரம், பண்பாடு, சாதிமுறைகள் என்ற அடி;படையில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் இன்னும் கூடிக்கொண்டே போகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியற் போராட்டங்களாலும் பெண்கள் பல தரப்பட்ட வன்முறைகளுக்கும் முகம் கொடுக்கிறார்கள். பல நாடுகளில் நடக்கும் பல தரப்பட்ட போர் அவலங்களில்; இறப்பவர்களில் 75 விகிதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாவா.;

உலகம் பலவித்திலும் நவினத்துவம்பெற்று வரும் இக்காலகட்டத்தில் பெண்களை ஆண்கள் சமத்துவத்துடன் நடத்துவது அருமையாகும். பெண்கயைப் பாதுகாப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் சட்டஙகளும்; அவற்றைப் பிரகடனப் படுத்தும் அரச இயந்திரமும் ஆண்களின் கையிலிருக்கின்றன. இதனால் பெண்களின் பாதுகாப்பும் சுதந்திரமான வாழ்க்கையும் ஆண்களின் பிடியிலேயே இருக்கின்றன. இதை மாற்றியமைக்கும் வலிமையுடைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் என்ற முறையில் பெண்களின் தொகை மிகவும் குறைந்த நிலையில் இருப்பதால் பல மாற்றங்களை முன்னெடுப்பத முடியாத காரியமாகும். இன்றைய உலகின் சனத்தொகையில் 1.4. பில்லியன் பெண்கள் வறுமைக் கோட்டுக்குள் வாழ்கிறார்கள. உலக சனத் தொகையில்; சமுதாயத்தை மாற்றும் வலிமை படைத்த அரசியல் சக்திகள் என்ற தரத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சிலரே.அகில உலகில் பாராளுமன்றம் செல்லும் பெண்கள் விகிதம் 20 விகிதம் மட்டுமே. உலக அபிப்பிராயத்தையும் விழிப்புணர்ச்சிகளையும் உண்டாக்கும் ஊடகத் துறையில் வேலை செய்யும் பெண்கள் கிட்டத்தட்ட 24 விகிதமாகும். உலக நாடுகளின் தலைமையை வைத்திருப்பவர்கள் 15 பெண்கள் மட்டுமே.
இந்து சமயத்தில் பிரபஞ்ச சக்தி என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்த (அர்த்நாரிஸ்வர) மகா சக்தி என்று வணங்கப் பட்டது. உலகின் வளர்ச்சிக்கு மனித சந்ததியைக்கொடுக்கும் ஆதிசக்தியாக பெண் போற்றப்பட்டாள். ஆதிகாலத்தில் பெண்கள் குடும்பத்தின் பெரும் தூண்களாகக் கணிக்கப் பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த சமதாயத்தின் தலைவிகளாகப் பொறுப்பேற்றுத் தங்கள் குழுக்களை வழி நடத்தினார்கள். பெண்களின் பெயர்கள் நதிகளுக்கும் (கங்கா, யமுனா) கண்டங்களுக்கும் (ஆசியா) நகர்களுக்கும் (பாரிஸ்) சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டன. ஒருகாலத்தில் பெண்களைப் பெரும் சக்திகளாகப் போற்றிய சமுதாயம்,இன்று பெண்களைப் பெரும்பாலும் ஒரு நுகர் பொருளாகவும் அரைகறையடிமைகளாகவும்; கணிப்பது பரவலாக நடக்கிறது.

கல்வியும் பெண்களும்:

சமுதாய முன்னேற்றத்திற்கு ஆண்கள்தான் ஆணிவேராக இருப்பார்கள்-இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை பல தரப்பட்ட சமுதாயத்திலும் ஊறியிருப்பதால் பெண்களுக்கான கல்விவசதிகள் பொருளாதார வசதிகள் மேம்படுதல் தடை செய்யப் படுகின்றன.

ஆங்கில நாட்டில் 19ம் நூற்றாண்டில் பெண்கள் கல்வியில் ஏற்பட்ட மயற்றம் ஆங்கிலேயர்களின் ஆளுமையிலிருந்த பல காலனித்துவ நாடுகளிலும் பரவியது. இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணிகாலத்தில் ஆங்கிலேயரின் ஆளுமை உலகெங்கும் விரிந்தது. அக்காலத்தில் பெண்களின் படிப்பு முக்கியமாகக்கருதப்படவில்லை. பெண்கள் அவர்களின் தகப்பனின் அல்லது கணவரின் சொத்தாக மதிக்கப் பட்டார்கள்.
பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் 1833ல்ஆரம்பிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பெண்களின் கல்வி விரிவடையத்தொடங்கியது. ஆண்களின் ஆளுமையிலிருந்த விஞ்ஞான கல்வியிலும் பெண்கள் திறமைகாட்டினார்கள். 1903ல் மடம் கியுறி அமமையார் இராசாயன (கெமிஸ்ட்ரி) சம்பந்தமான ஆராய்ச்சியில் நோபல் பரிசைப்பெற்றார். அதேவருடம் பெண்களின் வாக்குரிமைக்காக இங்கிலாந்தில் எமிலின் பாங்கேஸ்ட் என்ற பெண்மணியும் அவரின் மகள்களான கிறிஸ்டபெல்லும் சில்வியாவும் சேர்ந்து ஒரு சோசலிஸ்ட் அமைப்பைத் தொடங்கினார்கள். இவர்களின் போராட்டத்தால் பெண்களுக்கு வாக்குரிமை 1918ல் கிடைத்தது.

இன்று பல நாடுகளில் பெண்களுக்கான கல்வி பற்றிய விடயம் முக்கியமாக்கப் பட்டிருக்கிறு. பல பெண்கள் பெரிய பதவிகளை வகிக்கிறார்கள். இதுவரை அமெரிக்காவின் வெளிநாட்டுக் காரியதரிசிகளாக மூன்று பெண்கள் பதவியேற்றிருக்கிறார்கள்( மடலின் ஆல்பிறைட், கொண்டலீசா றைஸ், கிலரி கிலின்டன் றொட்ஹாம் கிலின்டன்). பெணகள் ஆண்களுக்குச் சமமாகப் பல் துறைகளிலம் முன்னேறுகிறார்கள். விஞ்ஞானிகளாக, வைத்திய நிபுணர்களாக, விமானிகளாக,ஆராய்ச்சியாளர்களாகவென்று பல துறைகளையும்; படிக்கிறார்கள். பிரதமர்களாவும் ஜனாதிபதிகளாகவும் பதவி பெறுகிறார்கள். இப்படி முன்னேறுபவர்களிற் பலர் ஆண்களின் உதவியுடன் சமுதாயத்திலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுபவர்கள்
ஆனால் பொருளாதார ரீதியில் வளரும் நாடுகளிலும், சமயத்தால், சாதியால் சமுதாயக் கோட்டுப்பாட்டு விழுமியங்களால்; கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் உண்டாகியிருக்கிறா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

உதாரணமாக,நவின உலகின் முதற் பெண்பிரதமராக இலங்கைய மக்களால் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவு செய்யப்பட்டார் (1960). அவர் ஒரு பெண் என்ற தகமையில் பரதமராக வரவில்லை. அவரின் கணவரின் கொலையைத் தொடர்ந்து வந்த அனுதாப அலையால் ஆண் அரசியல் வாதிகளின் உதவியுடன்; பிரதமர் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அவர் பிரதமர் வந்ததாலோ அல்லது அதன் பின்னா ஜனாதிபதியாக வந்த அவரின் மகள் சந்திரிகாவாலோ (2005) பெண்களின் பொருளாதார நிலை இலங்கையில் மாறியதா என்றால் இதற்கான மறுமொழியை இலகுவிற் சொல்லமுடியாத அளவு சிக்கல்கள் இருக்கின்றன.

மக்களின் வாழ்க்கைநிலை பொருளாதார ரீதியில் மிகவும் மோசமானதால் இலங்கையில் முதலாவது ‘இளைஞர்கள் புரட்சி’ (1971)இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டதும் அதை, அன்று இந்தியாவில் பிரதமர் பதவியிலிருந்த திருமதி இந்திரா காந்தியின் இராணுவ உதவியுடன் சிறிமாவோ தோற்கடித்தார் ஆயிரக்கணக்கான சிங்களப்பெண்கள் பல தரப்பட்ட வன்முறைகளுக்கும் முகம் கொடுத்தார்கள். சந்திரிகா பதவியிலிருந்தபோது ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் பல தரப்பட்ட வன்முறைகளுக்கும் முகம் கொடுத்தார்கள் எனவே , பெண்கள் உயர் பதவிகளுக்கு வந்தால் பெண்களின் பிரச்சினை தீர்க்கப் படும் என்பதும் பெரிதாக நடப்பதில்லை.
இஸ்ரேல்நாட்டின் பெண்பிரதமாரான கோல்டா மேயரால் கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்களால் பாலஸ்தீனியர்கள் பல கொடுமைகள் தொடர்கின்றன. கொண்டலீசா றைஸ் அமெரிக்க ஜனாதிபதியின் வெளிநாட்டுக் காரியதரிசியபயிருந்துபோது ஈராக்கில் தொடரும் போரில் 740.000 மேற்பட்ட பெண்கள் விதவையானதைதத் தடுக்கமுடியவில்லை.

ஆனாலும் இன்றைய உலகில் பெண்களின் படிப்பும் சமத்துவத்துக்கான போராட்டங்களாலும் பல நல்ல மாற்றங்களும்; நடந்திருக்கின்றன. இன்று பல நாடுகளில் பெண்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். ஜேர்மனியில் ஆங்கெலா மேக்கல் இருந்து பல சாதுர்யமான அரசியல் நகர்வுகளைக் கையாளுகிறார்.;
இதே நேரம், அரசியலில் ஆண்களின்இருந்தாலும் ஆளுமைக்கு எதிராகப்போராடிய பர்மாநாட்டின் தலைவி ஆன்சான்சுகி பலவருடங்களாகச் சிறையிலிருந்ததும், முன்னாள்ப் பாகிஸ்தானியப் பிரதமர் பெனசியாபூட்டோ கொலை செய்யப்பட்டதும் எங்களுக்கு முன்நடக்கும் வன்முறைகளின் பிரதிபலிப்புக்களாகும்..

இன்றைய உலகின் சனத்தொகையில் (ஏறத்தாள 6.6 பில்லியன்) கிட்டத்தட்ட ஒரு பில்லியன் தொகை மக்களுக்குப் படிப்பறிவு கிடையாது. இதில் மூன்றில் இருபங்கினர் பெண்கள். 100 மில்லியன் குழந்தைகளுக்குப் படிப்பு வசதி கிடையாது. இதில் 70 விகிமானோர் பெண்கள்.

வறுமைப்பட்ட மக்களிலும் மிகவும் துன்பப்புடுபவர்கள் பெண்களும்;,குழந்தைகளுமாவர் .முன் குறிப்பிட்டதுபோல இன்று பல நாடுகளில் நடக்கும் பல தரப்பட்ட போர்கள், இடமாற்றங்கள், கலாச்சாரக்கோட்பாடுகள், சாதியமைப்பு முறை, மாற்றமடையும் சுற்றாடல் சூழ்நிலைகள் அத்துடன் குடும்ப வன்முறைகள் என்பன பெண்களைத்தான் கூடப்பாதிக்கிறது.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் ;

பெண்களுக்கெதிரான வன்முறைகள் மனிதனின் ‘நாகரீக’ சரித்திரம் தொடங்கிய நாளிலிருந்து தொடர்கிறது. மனித நாகரீகத்தின் தாய் என்று சொல்லப்படும் கிரேக்க தேசத்தில் பெண்குழந்தைகளையும் அங்கவீனமாகப் பிறந்தவர்களையும் கொலை செய்வது( கி;மு.200ம் நூற்றாண்டுக்கால கட்டம்) சதாரணமாகவிருந்ததாக சரித்திச்சான்றுகள் சொல்கின்றன.

ஆண்களும் பெண்களும் சமமாக வாழ்ந்த சமுதாயத்தில் நிலவுடைமை நிலை வந்ததும் பெண்கள், ஆண்கள் சொத்தாக, பண்டமாற்றப்பொருளாக மாற்றப்பட்டவிட்டாள். நிலமுடையவன் அதிகாரம் உள்ளவனாகவும் அந்த நிலத்தில் வேலைசெய்யும் ஏழைகள் அவனின் உடமையாகவும் கணிக்கப்பட்டார்கள். இன்று நவினத்துவ முறையில் வாழ்க்கையின் நவினத்துவப் பார்வைகள் மாறுவதாக இருந்தாலும் அடிப்படையில் ஆழ்ந்து பார்த்தால் பெண்களுக்கான வன்முறைகளும் அவர்களை உபயோகிக்கும் விதமும் இன்னும் மிருகத்தனமாகவிருக்கின்றன என்பது தெரியவரும்.

பெண்;களுக்கான வன்முறைகள் அவளை வைத்துப் பாதுகாக்கவேண்டிய குடும்ப அமைப்பிலிருநதே ஆரம்பிக்கிறது. உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் பலதரப்பட்டவை. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் வளராத நாடுகள் என்ற பேதமின்றிக்கொடுமைகள் நடக்கின்றன. கனடா, அவுஸ்திரேலியா,தென்னாபிரிக்காஅமெரிக்கா,போன்ற நாடுகளில் 40–70 விகிதமான பெண்களின் கொலைகள் குடும்பத்தில் நடக்கும் வன்முறைகளால் நடக்கின்றன என்று சொல்லப்படுகின்றது. இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு இரு கொலைகள் என்ற வித்தில் குடும்ப வன்முறைக்குப் பெண்களின் காதலர், கணவரால் பெண்கள் பலியாகிறார்கள்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் அவர்கள் தங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பித்து விடுகிறது.இந்தியாவிலும் சீனாவிலும் பெண்சிசுவைக் கருப்பையிலேயே சமாதி வைக்கும் படலம் தொடர்கிறது.

இந்தியாவிலிருக்கும் பல தரப்பட்ட கலாச்சார விழுமியங்களும் சீனாவிலிருக்கும் ஒரு தம்பதியருக்கு ஒரு பிள்ளைமட்டும் என்ற சட்டமும் பெண்குழந்தைகளைப் புதைகுழிக்குள் தள்ளிவிடுகின்றன.
இந்தியாவில,சிசுக்கொலைகள் அதிகம் நடக்கும் ஒரு கிராமத்தில் எடுத்த கணிப்பின்படி 343 ஆண்களுக்கு 54 பெண்கள் மட்டும் இருந்தார்கள். வைத்திய ரீதியில், மும்பாய் போன்ற இடங்களில் தாயின் வயிற்றில் இருக்கும் பிள்ளை ஆணா பெண்ணா என்று பார்க்கும் ‘அம்னியோசென்தீசஸ்’; பரிசோதனையின்பின் வயிற்றில் இருகப்பது பெண்குழந்தையானால் அதைக்கொலை செய்வது சர்வசாதரணமாக நடக்கிறது என்று சொல்லப் படுகிறது. பெண்சிசுக்கொலையில் தமிழ்நாடும் பின்நிற்கவில்லை. (பாரதிராஜாவின் ‘கறுத்தம்மர் படம் பார்த்தவர்களுக்கு இதுநன்றாகத் தெரியும்).

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டின் சில இடங்களுக்குச் சென்று இதுபற்றி விசாரித்தேன். அப்போது ஒரு மூதாட்டி எனக்குச் சொன்னார், ‘ வேண்டாத இடத்திற் பிறந்தோ அல்லது வாழ்க்கைப் பட்டோ வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுவதைவிட, அவமானப்படுவதை விட, பட்டினியால் வாடுவதை விட, பாலியல்கொடுமையால் வதை படுவதை விட இந்தப பெண்;குழந்தைகளுக்கு இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து விடுதலை கொடுப்பதைப் பலர் (சிசுக்கொலை செய்வதை)புண்ணியமாக (பெண்கள்) நினைக்கிறார்கள்’ என்றார்.

இந்தியாவில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு பெண் ஏதோ ஒரு வகையில் வன்முறைக்காளாக்கப்படுகிறாள் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதொ ஒரு மூலையில் 50 பெண்கள் சீதனக்கொடுமையால் வதை; படுகிறார்கள். ஓவ்வொரு 77 நிமிடத்துக்கும் ஒரு இந்தியப்பெண் சீதனக்கொடுமையால் கொலை செய்யப் படுகிறாள்.ஒவ்வொரு 9நிமிடத்தும் ஒரு குழந்தை கருவில் அழிக்கப்படுகிறது, ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள்..(நச்சுரல் கிரைம் றெக்கோர்ட் பீரோ-2006). 16.12.2012.டெல்லியில்,ஓடும் பஸ்ஸில்வைத்து பாலியல் கொடும்பாவிகளால் சீர்குலைக்கப்பட்டிறந்த’நிர்பயா’வின் கதைமாதிரி;யான வன்முறைகள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கெதிரான சீதனக்கொடுமை வதைகள் இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், பங்களதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலும் இருக்கிறது என்று ஆதாரங்கள் சொல்கின்றன.

சீpனாவில், சனப்பெருக்கத்தைக்குறைக்கக்கொண்டுவந்த சட்டத்தால் ஒரேயொரு பிள்ளை மட்டும் பெற்றுக்கொள்ளவேண்டும். அது ஆணாகவிருக்கவேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவார்கள். பெண்குழந்தை பெற்றால் அதன் கதி பரிதாபமே. சீனா நாட்டில் இப்படித்’தொலைந்து’ போன பெண்களின் தொகை 50கோடியாகும் (1997).

சீனாவில் உண்டாகும் கர்ப்பங்களில் 12 விகிதம் கர்ப்பக் கலைப்பில் முடிகிறது. 110 மில்லியன் சீனாவின்ஆண்களுக்குத் திருமணம் செய்யப் பெண்கள் இல்லாததால் எல்லை கடந்து வந்து,வியட்னாம் போன்ற நாடுகளுக்கு வந்து பெண்களைக்கடத்துவதும் திருடுவதும் நடக்கிறாம்.
பெண்களின் விருப்பமின்றி அவர்களைத் திருமணம் செய்து கொடுப்புது பல நாடுகளில் நடைமுறைகளிலிருக்கின்றன.
இன்று உலகில்,15 கோடிப் பெண்கள் கட்டாய கல்யாணத்துக்ள் தள்ளப் படுகிறார்கள்.சிலருக்கு 8 வயதாக இருப்பதும் சில நாடுகளில் நடைமுறையாகவிருக்கிறது.
தங்களுக்குப் பிடித்த பெண்ணைக் பெண்களின் விருப்பமின்றிக் கடத்திக் கொண்டோ அல்லது திருடிக்கொண்டோ போகும் வன்முறை நிகழ்ச்சிகள் பல நாடுகளில், உதாரணமாக, இப்படியான பழைய சோவியத் யுனியனின் நாடுகளான கஜகிஸ்தான்போன்ற பகுதிகளில் நடக்கினறன.

போதைக் கடத்தல், கொலை கொள்ளைக்காரக்கும்பல்களுக்குள் வரும் பிரச்சினைகளால் பல பெண்கள் பலிக்காடாகாகிறார்கள்.. குவாத்தமாலா நாட்டில் அண்மைக்காலங்களில் இப்படியான கூட்டங்களின் பழிவாங்கல் உத்திகளால் 2.500 பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். இப்படியானவை மெக்சிக்கோ,எல்சலடவடோர், ஹொண்டுரஸ் போன்ற நாடுகளிலும் நடக்கினறன.
உலகத்தில்,பல இடங்களில் 1.2 கோடிக் குழந்தைகள் நடத்தப் பட்டு அடிமைத் தொழிலுக்கும் பாலியற் தொழலுக்கும் தள்ளப் படுகிறார்கள்.இவர்களில் 80 விகிதமானவர் பெண்களாகும்.

போர் நடக்கும் இடங்களில் போர் புரியும் இருபகுதிகளாலும் பல தரப்பட்ட வன்முறைகளுக்குமள்ளாகுபவர்குளம் பெண்களே. 1989-1997 வரை 67 நாடுகளில் 103 போராட்டங்கள் நடந்தன. பல்லாயிரம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்காளானார்கள.பல்லாயிரமபோர் கொலை செய்யப்பட்டார்கள். கொசாவோ,றுவாண்டா, கொங்கோ, சூடான் போன்ற நாடுகளில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் மனித இனம் வெட்கப்படவேண்டிய விடயங்கள்.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகேட்டுத் தொடர்ந்த போரில் (1977-2009) 100.000 மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்தார்;கள் 89.000 பெண்கள் விதவைகளானார்கள். பலர் கிரிஷாந்தி,தர்ஷிணி மாதிரிப் பாலியல் கொடுமைகளுக்காளிக் கொலை செய்யப்பட்டார்கள்.; இன்னும் பலர் எங்கே போனார்கள் என்ற தெரியாமல் ‘மறைந்துபோனார்கள்'(?).

தங்களுக்கு எதிரான கருத்தைக்கொண்டிருந்ததால்,பல்கலைக்கழக மாணவி செல்வி, பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜனி திராணகம, ஊடகவாதி றேலங்கி செல்வராஜா, யாழ் நகர மாதா சறோஜினி யோகேஸ்வரன், இயக்க ஊழியை பவளராணி, மனித உரிமைவாதி மகேஸ்வரி வேலாயுதம், இடியப்பம் விற்றுப் பிழைத்த லீலாவதி (விபச்சாரக் குற்றச் சாட்டு) போன்ற எத்தனையோ தமிழ்ப்பெண்கள் புலிகளால் பயங்கரமாகக்; கொலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் மட்டுமல்லாது வேறு பல சமுதாயங்களிலும் ஆண்கள் நியமித்த ஒழுக்க வரம்பை மீறுபவர்கள் என்று கருதப்படும் பெண்களும் கொலை செய்யப்படுகிறார்கள. இதைக் ‘கௌரவத்தைக் காப்பாற்றும் கொலைகள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன. இவை நடக்கும் நாடுகள்,இந்தியா, பாகிஸ்தான்,துருக்கி,சிரியா,எஜிப்து,லெபனான்,யேமன்,மொறாக்கோ,ஈராக்,ஈரான் போன்ற பல நாடுகளாகும். இதை எழுதிக் கொண்டிருக்கும்போது,(07.03.15),இந்தியா,சிவகங்கையில் தமிழ்ச் செல்வி என்ற பெண்ணை அவள், தகப்பன் கழுத்தை நெரித்துக் ‘கவுரவக் கொலை செய்தார் என்ற செய்தி வந்திருக்கிறது.

சமுதாயக் கோட்பாட்டின்படி சிறுவயதில்; பெண்ணுறுப்பை வெட்டித் தைத்து விடுதல் பல நாடுகளில் நடக்கினறன் வடக்கு ஆபிக்க நாடுகளான சூடான், மொறாக்கோ, அலஜீரியா போன்ற பல நாடுகளில் இந்தக் கொடுமை தொடர்;கிறது.இந்தக் கொடுமையால் 130 கோடிப் பெண்கள் வதை படுகிறார்கள்.

இன்று பெண்களுக்கான வன்முறைக்கு நவின கணணி விஞ்ஞானத்தைப் (சைபர் கிரைம்ஸ்) பல ஆண்கள் (ஊடகவாதிகள் என்ற பெயரிலும்) பயன் படுத்துகிறார்கள் ஆளுமையுள்ள பெண்களின் வலிமையை அடக்கப் பெண்களைப்பற்றிக் கண்டபாட்டுக்கு எழுதிப் பழிவாங்குகிறார்கள். பெண்களின்; புகைப் படத்தை ஆபாசமாகச்சித்தரித்து, வெட்டி ஒட்டிக் கணணியில் உலாவவிட்டுக் களிப்படைகிறார்கள். மோபைலில் ஆபாச ரெக்ஸ்ட் அனுப்பி வதைக்கிறார்கள். மறைமுகப் பெயர்களில் கணணிகளில் தங்களுக்குப் பிடிக்காத பெண்கள் பற்றிய அபத்த செய்திகளை செய்திகளை அனுப்பிப் பல குடும்பங்களைக் குலைக்கிறார்கள். சிடி. டி.விடியில்போட்டு விற்பனை செய்து பிழைக்கிறார்கள். கணணியில் உறவுகளை வளர்த்து இளம் பெண்களைத் தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள் (சட் லைன்ஸ்).காதலர்களாக நடித்து ஏமாற்றுகிறார்கள.

இன்று நடக்கும் பொருளாதாரத் தேக்கம், சனத்தொகை அதிகரிப்பு போன்ற பல காரணிகளால் பல்வேறு நாட்டு இளம் பெண்கள் மேலை நாட்டுப பணக்காரக் குடும்பங்களுக்கு வேலைக்காரிகளாக விற்கப் படுகிறார்கள் நேபாளத்தில் மட்டும் 20.000 மேற்பட்ட சிறு பெண்கள் இப்படி விற்கப்பட்டிருபதாக அறிக்கைகள் சொல்கின்றன.
அத்துடன் இன்று விலைப்படும் மிகப் பெரிய பொருளாகப் பாவிக்கப் படுவது பெண்ணுடலாகும் இந்த விற்பனைக்குப் பலநாடுகளிலிருந்து பல பயங்கரக் கூட்டங்கள் பெண்களைக் கடத்தி இவர்களை விபச்சார வியாபாரத்திற்கும் வீட்டு வேலைசெய்யும் அடிமைகளாவும் பாவிக்கிறார்கள்;.

கிழக்கு ஜரோப்பிய நாட்டுப்பெண்கள் மேற்கு ஜரோப்பாவுக்கும், ஆபிரிக்கப் பெண்கள் ஜரோப்பியாவின் பல பகுதிpகளுக்கும், தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் ஜரோப்பிய நாடுகளுக்கம் கடத்திவரப்படுகிறார்கள். அல்லது பல பொய்களைச் சொல்லி அழைத்த வரப்பட்டு பல வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையைத் தொடர்வதில்,பொருளாதாரத்தில் விருத்தி பெற்ற நாடுகளில் வாழும் கேவலமான ஆண்வர்க்கக்குழுக்களும்; பெரிதாக ஈடுபடுகின்றன.
இங்கிலாந்தில் 100.000 மேற்பட்ட பெண்கள் உலகின் பல பகுதிகளிலுமிருந்து இப்படிக் கடத்தப் பட்டுக் கொண்டு வரப்பட்டவர்கள் என்ற கணிக்கப் படுகிறது. இதில் கணிசமானவர்கள் 16 வயதுக்ட்பட்ட இளம் வயதினர். இதில் ஆண்களும் அடங்குவர் ஆனால் பெரும்பாலானர்வர்கள் இளம் பெண்களாகும்.
இந்தியா, சீனாபோன்ற நாடுகள் மட்டுமல்லாது உலகின் பெரிய நகர்கள் எல்லாம் இந்த விடயத்தில் உள்ளடங்குகின்றன. இந்தியாவில் பல இடங்களிலிருந்து கடத்தி வரப்படும் பெண்கள் மும்பாய், கலகத்தா போன்ற இடங்களிலுள்ள விப்ச்சார விடுதிகளில் அடைக்கப்படுகிறார்கள் கணிசமான தொகையினர் பருவம் வராத இளம் வயதிரனாகும்.

இன்றைய உலகில் பெண்களுக்கெதிராக பல தரப்பட்ட ஒடுக்கு முறைகளும் வன்முறைகளும் ஆண்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பெண்கள் அவற்றிற்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண்களுக்குச் சார்பான பல சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியிருக்கின்றன. பல ஸ்தாபனங்களும் அரச சார்பற்ற ஸ்தாபனங்களும் பல நாடுகளில் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுகின்றன.

பல அரசுகளும் பெண்களை முன்னேற்றும் பல திட்டங்களை முன்னெடுக்கிறன. போரால் நலிந்து கிடக்கும் இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் முகம் கொடுக்கும் துன்பங்கள் அளப்பரியன. அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு சிலராவது இலங்கையில் துன்பப்படும் ஏழைப் பெண்களுக்கு உதவுவது எங்கள் தார்மீகக் கடமையாகும்.
வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலானர்வர்கள் இலங்கைத் தமிழரின் துயர் சொல்லி வாழவந்தவர்கள். ஓரு சில நல்ல மனிதர்கள் இலங்கையில் அல்லற்படும் விதவைகள், அனாதைகளுக்குத் தங்களாலான உதவிகளைச் செய்கிறார்கள். வெளிநாடுகளிலுள்ள ஓரு சில கோயில்களும் இந்த நல்ல விடயத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

மனித நேயத்தின் முதற்படி ஏழைக்கு ஒரு நேர உணவு கொடுப்பதாகும். இலங்கையிலுள்ளு பல அனாதைகள் இல்லங்களுக்குப போனபோது அங்கிருக்கும் பல குழந்தைகளிற் பெரும்பாலானேர் பெண் குழந்தைகள். அனாதைகளாக்கப்பட்ட ஓரு சிறு தொகையான ஆண்குழந்தைகள் ஏதோ வேலை செய்து பிழைக்க சமுதாயத்தில் நுழைந்து விட்டார்கள். ஆனால் பெரும்பாலான இளவயதுப்பெண்கள் பாதுகாப்புக்கும் ஒருவேளை உணவுக்கும் அவ்வப்போது தர்மமாகக் கிடைக்கும் உடுப்புக்கும் இந்த அனாதை இல்லங்களிற் அடைக்கலமாகியிருக்கிறார்கள். இவர்கள் எங்களுக்காகப் போராடி இறந்தவர்களின் குழந்தைகள் என்று தெரிந்தது.

கிழக்கிலங்கையில் வெள்ளம் பெருகிக் கொண்டிருக்கும்போது (தைமாத நடுப்பகுதி-2011) ஒரு அனாதை இல்லத்தில் நின்றிருந்தேன். அன்று இங்கிலாந்திலுள்ள ஒருத்தர் தனது குழந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டுக் கொஞசப் பண உதவியை அந்த அனாதை இல்லத்திற்குச் செயதிருந்தார் அதை வைத்து அந்தக் குழந்தைகளுக்கு உடுப்பு வாங்கிக் கொடுப்பதாக அந்த நிர்வாகி அறிவித்தபோது அந்த அனாதைகள் ‘நன்றி நன்றி’ என்று தங்களுக்குத் தெரியாத தர்மவானுக்கு மனமுருகி நன்றி சொன்னாhர்கள. கண்ணீர் வரும் காட்சியது.
பெரும்பாலான அந்த அனாதைகள் எங்களுக்கான போராட்டத்தில்; தங்கள் தந்தையைத் தாயை இழந்தவர்கள். ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதிலும் கொடிது இளமையில் வறுமை இன்னும் கொடிது’.
அந்த வறுமையின் கொடுமையை அவர்கள் அன்றாடம் அனுபவித்துத் தங்கள் இயலாமையை எண்ணி ஏங்குpகிறார்கள்.
இன்று இதை வாசிக்கும் புண்ணியவான்கள் தயவு செய்து ஒரு நிமிடம் இலங்கையில் நல்ல உடுப்பில்லாத, ஓரு நேர உணவில்லாத ஒரு குழந்தையைக் கற்பனை செய்யங்கள். இவர்கள் நாளைய விருட்சங்கள். வாடவிடாதீர்கள்.
இவர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பது உண்ண உணவும் உடுக்கத் துணியும் படிப்புக்கு உதவும் சில புத்தகங்களுமே. பெண்கள் முன்னேற,பெற்றோர்கள் மட்டுமல்ல, சமுதாயமும் சோர்ந்து பணியாற்றாவிட்டால், உண்மையான முன்னேற்றம் கிடைக்காது.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s