‘காமவெறிக் கொடியவர்களால்; சீர்குலைக்கப்படும்; இளம் தலைமுறைகள்’-

‘புதுச்சேரி பாலியல் வழக்கில் போலிஸார் 6 பேர் தலைமறைவு’ த ஹிந்து,இந்தியா,03.03.15

‘இளம் குழந்தைகளைக்கெதிரான பாலியல் வன்முறை இந்நாட்டின் பாதுகாப்பு விடயத்துடன் சம்பந்தப் பட்டது. குழந்தைகளுக்கெதிரான பாலியற் கொடுமைசெய்யும் காமுகர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றத் தவறும் உத்தியோகத்தர்கள் சிறைத் தண்டனையை எதிhநோக்கவேண்டி வரும,; பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனின் கடுமையான எச்சரிக்கை’ (கார்டியன்,லண்டன்.)03.03.15

‘பழைய பாராளுமன்றவாதியின் வீடு பாலியல் குற்றப் பிரிவினரால் சோதனையிடப்பட்டது.’05.03.15

‘ பாலியல் குற்றவாளி கலைஞர் றோல்வ் ஹரிக்கு எலிசபெத் மகாராணி கொடுத்த கௌரவப்பட்டம் திருப்பி எடுக்கப்பட்டது’
(இக்கட்டுரையில் வரும் செய்திகள், லண்டன் கார்டியன்,டெலிகிறாவ்ற்,பி.பி.சி,த ஹிந்து செய்திகளிருந்து தொகுக்கப்பட்டவையாகும்)

கடந்த சில நாட்களாகப் பல பத்திரிகைகளைப் பார்த்தபோது மேற்கண்ட தலையங்கங்கள் கண்களையுறுத்தின.

பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நிமிடமும்,உலகத்தில் ஏதோ ஒரு பாகத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

புதுச்சேரியில் கொடியவர்களால்,பாலியற் தொழிலுக்குத் தள்ளப் பட்ட சிறுமிகளை விடுவித்த போலிஸார் அவர்களைப் பாலியற் பலாத்காரம் செய்ததாக விசாரணைகளிற் தெரிய வந்திருக்கிறது.அதை விசாரிக்க நியமிக்கப்பட்ட பெரிய உத்தியோகத்தர் பாலியல் கொடுமை செய்த போலிசாரின்; பெயர்களையும் புகைப் படங்களையும் பத்திரிரிகைகளுக்கு வெளியிட்டு, அந்தப் உத்தியோகத்தர் அந்தப் தலைமறைவான போலிசாரைப் பாலியல் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறார்.

பிரித்தானியாவில், ஒரு நாளைக்குக்கிட்டத்தட்ட, ஒருகோடி குழந்தைகள் ஏதோ ஒருவித்தில் பாலியல் கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள் என்று பி.பி.சி தனது மாலைச் செய்தியில்(03.03.15) தெரிவித்தது.

சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாது,,பாராளுமன்றவாதிகளும்,பொது மக்களால் கவுரவிக்கப் பட்ட பல கலைஞர்களும்,கல்லூரி ஆசிரியர்களும், மதத் தலைவர்களும் பிரித்தானிய பாலியில் குற்றத் தடுப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாகக் குழந்தைகளைப் பாலியல் சீpரழித்து மகிழ்வு கண்ட ஜிம்மி சவோல்,(சில வருடங்களுக்கு முன் இறநதவன்),என்ற ஒரு டி.வி. பேர்சனாலிட்டியின் கொடுமையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இவன் பிரித்தானிய மகாராணி மட்டுமல்லாது,பிரித்தானிய பிரதமராகவிருந்த மார்க்கிரட் தச்சரினதும் பல பிரமுகர்களினதும், ஊடகங்களினதும் அபிமானத்துக்குரியவனாக வாழ்ந்தவன். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் செய்து பிரபலமானவன்.அதனால்,நோயால் வாடும் குழந்தைகளுக்கு ஆறுதல் கொடுக்க பல வைத்தியசாலைகளுக்குள் ‘எந்த நேரமும் ; செல்ல அனுமதி பெற்றவன். அதைப்பாவித்து நூற்றுக்கு மேற்பட்ட இளம் வயதினரைக் கெடுத்திருக்கிறான். இவனைப் பற்றித் தப்பாகச் சொன்னால் இவனின் செல்வாக்குக்கு முன் தங்கள் குரல்கள் எடுபடாது என்ற அவமானத்தால் பலர் பல காலம் மவுனமாகவிருந்தார்கள். இவன் இறந்தபின்தான் இவன் செய்த சேட்டைகள் வெளிவரத் தொடங்கின.

பிரித்தானிய மகாராணியின் உயர்ந்த கவுரப் பட்டத்தைப் பெற்ற றோல்வ் ஹரிஸ் என்ற பிரபல கலைஞர் பாலியல் குற்றத்திறகாகத் தண்டனை பெற்றதுடன்,அவரின் பட்டத்தையும் இழந்து விட்டிருக்கிறார்.இவரும் குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போன்ற டி.வி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.தனது மகளின் சினேகிதியை,அவளின் மிக மிக இளவயதில் மகளின் படுக்கையறையில் வைத்துக்கொடுமை செய்தவன்

மிகப் பிரபலம் பெற்ற பாடகரான கிலிவ்; றிச்சார்ட்டின் வீடு, பாலியற் தடுப்புப்போலிசாரானின் தேடலுக்கு உட்பட்டிருக்கிறது.பதினாறு வயதுப் பையனைப் பாலியல் பலாத்காரம் செய்ததென்று வதந்திகள் அடிபடுகின்றன.

அதேமாதிரி,பாடகர் ஹரி கில்ட்டர் பாலியல்க் குற்றத்துக்காகக் கடந்தவாரம் சிறையில்த் தள்ளப் பட்டார்.இங்கிலாந்தில் மட்டுமல்லாது, வியட்நாம் போன்ற இடங்களிலிலும் சிறுவயதுப் பெண்களைப் பாலியற் கொடுமை செய்ததாகச் சிறையிலடைக்கப்பட்டிருந்தவா.

05.03.15ல்,பழைய பாராளுமன்றவாதி ஹார்வி பரொக்டர் என்பவரின் வீடு பாலியல் குற்றங்களுகளுக்கான ஆதாரங்களைத் தேடும் வேட்டைக்குள்ச் சிக்கியிருக்கிறது.இவரும் இவருடன் சேர்ந்திருந்த பல மேல்மட்டப் பிரமுகர்கள் சிறு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்ற குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.அவரைப் பற்றிய தகவல் கொடுத்தவர் ,’சிறு வயது ஆண்குழந்தைகள் இந்த மேலாதிக்கவாதிகளால் பயங்கர பாலியல் வதைகளுக்கு ஆளாகியது மட்டுமல்லாது மூன்று இளம் குருத்துக்களை இவர்கள் கொலையும் செய்தார்கள்’ என்று பி.பி.சி. நிகழ்ச்சியொன்றிற் சொன்னார்.

கடந்தவாரம், பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற கில்வோர்ட் சங்கீதக் கல்லூரி ஆசிரியர் ஒருவர்,இளவயது மாணவியில் மேற்கொண்ட பாலியல் குற்றத்திற்காகச் சிறைக்குளத் தள்ளப் பட்டார்.

பெரிய பிரமுகர்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து ஊடகங்கள்மூலம் பிரசித்தி பெற்ற மார்க்ஸ் கில்வோர்ட் என்றவனும் பாலியல வழக்கில் குற்றவாளியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறைக்குள் இருக்கிறார்.
பிரித்தானியாவின் பல நகரங்களிலிருந்தும் கடந்த சில வருடங்களாகக், குழந்தைகளுக்கெதிரான (பதினாறு வயதுக்கட்பட்டவர்கள்) பாலியற் கொடுமைகள் நடப்பதாகப் பல விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

முக்கியமாக, 1997-2013ம் ஆண்டுவரைக்கும,1.400 மேற்பட்ட இளம் குழந்தைகள் சொல்லவொண்ணா பாலியற் கொடுமைகளை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் அனுபவித்தார்கள் என்ற செய்தி பிரித்தானிய பத்திரிகைகளில் பெரிய எழுத்துக்களில் வெளிவந்து கொண்டிருந்தன.அவர்களில் 12 வயதான இளம் சிறார்களும் அடங்குவார்கள்
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளில், குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டிய சோசியல் பணியாளர்களோ,போலிஸாரோ,குழந்தைகளைக் காப்பாற்றப் பெரிதாக எந்த அக்கறையும் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

அதற்குக் காரணம், பாலியல் கொடுமைகளுக்காளான பெரும்பாலான பெண்கள்,பொருளாதார நிலையில் மிகவும் கீழ் மட்டத்திலிருப்பவர்கள் என்றும், அவர்கள் பொருளாதார வசதிக்காகத் தாங்களாகவே பாலியற் தொழிலுக்குப் போயிருப்பார்கள் என்ற பாவனையில்,அந்த உத்தியோகத்தர்கள் ஏனோ தானோ என்று பாராமுகமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.அத்துடன், பாலியற் கொடுமைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட் பாகிஸ்தானியர்களுககெதிராக நடவடிக்கை எடுத்தால், தங்களை அவர்கள்’இனவாதிகள்’ என்று குற்றும் சாட்டலாம் என்பதாலும் அவர்கள் தயங்கினார்கள் என்றம் விசாரணைகளிற் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து,நடந்த பல விசாரணைகளுக்குப் பின், ஐந்து பாகிஸ்தானியர் சிறைக்குச் சென்றார்கள்.

03.03.15ல் வந்த செய்தியின்படி, உலகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் தாய்மண் என்று பிரசித்திபெற்ற ஒக்ஸ்போர்ட் பகுதியில் 400 மேற்பட்ட இளம் பெண்கள்,பாகிஸ்தானிய,வடஆபிரிக்க இனத்தைச்சேர்ந்த ஆண்களால் பல பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இதனால் 7 பேர் சிறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருக்கிறார்கள் அந்த,பாலியல் கொடுமைபற்றிய முழு விசாரணையின் அறிக்கையும் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த விசாரணைகளில், காமுகர்களின் கையிற் சிக்கிய இளம் குழந்தைகளை அவர்கள் ‘அன்பளிப்புகள்’ கொடுத்தும், ஆசைவார்த்தைகள் சொல்லியும் தங்கள் வலைகளுக்குள் வீழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.அதன்பின் ,அந்தச் சிறார்களுக்குப்,போதை மருந்துகளான ஹெரோயின் போன்றவற்றைக் கொடுத்து, வார்த்தைகளால் விபரிக்க முடியாத பல பாலியற் கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். பாலியல் கொடுமை செய்தவர்கள்,இளம் சிறார்களின் வயதை விடப் பல மடங்கு வயது கூடியவர்கள்.
இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பி ஓடினால், தேடிப்படித்துக்கொண்டு வந்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். இந்தச் சிறார்களை வேறு இடங்களுக்குப் பாலியற் தொழிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பிரித்தானிய பிரதமர்,டேவிட் கமரன்,தனது அறிக்கையில்,குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பான, ஆசிரியர்கள்,வைத்தியர்கள், போலிஸார், சோசியல் உத்தியோகத்தர்கள், பிராந்திய ஆட்சியாளர்கள் போன்ற பல தரப்பட்ட உத்தியோகத்தர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.’குழந்தைகளைப் பாதுகாப்பது தேசியத்தின் பாதுகாப்பு’ என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

1400,இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளான, றொதர்ஹாம் என்ற மாநில நிர்வாகத்தை, மத்திய அரசு தனது கையில் எடுத்துவிட்டது.அப்படிப் பல உள்நாட்டரசு நிர்வாகங்கள், இளம் சிறார்களுக்கான பாலியற் கொடுமைகளைத் தடுக்காவிட்டால்,மத்திய அரசின் கடுமையான கண்காண்புக்குள் வரவிருக்கிறது.

லண்டனில் தனது வாஸஸ்தலமான பத்தாம் நம்பர் டவுனிங் ;ஸரீட்டில்,’குழந்தைகளுக்கெதிராகத் தொடரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க நடைபெறும் சம்மேளம’; ஒன்றில்,’குழந்தைகளக்கெதிரான பாலியல் வன்முறைகளும் அதைத்தடுக்கும் திட்டங்களும்’ என்ற விடயத்தை,03.03.15.; பேசிய பிரித்தானிய பிரதமர், தனது கடுமையான எச்சரிக்கையை,பல துறைகளிலும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் மட்டுமல்ல பல நாடுகளிலும் வேலியே பயிரை மேயும் கதைகள் நடந்திருக்கின்றன.
அமெரிக்கா தொடக்கம் அவுஸ்திரேலியா வரைக்கும் கிறஸ்தவ பாதிரிகள் இளம் சிறார்களுகுச் செய்யும் கொடுமையான பாலியற் கொடுமைகள் பல தடவைகள் ஊடகங்களில் பிரசுரமாகின.அந்த விடயங்கள் பாப்பாண்டவர் வரைக்கும் போனதுமுண்டு.

இலங்கையில்,அதிரடிப்படைகள் தமிழ்ப் பெண்களுக்குச் செய்த பாலியற் கொடுமைகள் எழுத்தில் வடிக்கமுடியாத கோரங்களைக் காட்டுபவை.அரசியற் கோராட்டத்தின் ‘பெண்மை’ ஒரு ஆயதமாகப் பாவிக்கப்படுவது உலகெங்கும் நடக்கிறது. இன்று,ஈராக்,சிரியாப் பகுதிகளில் ‘ஐஸ்’;என்ற பயங்கரவாதிகள்,தங்கள் மதமற்ற மாற்று மதப் பெண்களுக்குச் செய்யும் கொடுமைகள் சரித்திரம் காணாத காட்டுமிராண்டித்தனமானவை. ஆபிரிக்காவின் பல பகுதிகளில் நடக்கும் அரசியற் போராட்டங்களில் பலியிடப்படும் பெண்மையின் எண்ணிக்கைகள் யாரும் அளவிடமுடியாதவை.

இலங்கைத் தமிழரின் பாதுகாப்புக்கு 1987ல் இலங்கை வந்த இந்தியப் படை,ஏழுவயது தொடக்கம் எழுபது வயது வரையிலுமான தமிழ்ப்பெண்களின் பெண்மையைச் சிதறப்பண்ணித் தங்கள் வெறியைத் தணித்துக் கொண்டார்கள்.
இளம் தலைமுறைக்கு எதிரான பாலியற் குற்றங்கள் இன்னும் இலங்கையிற் தொடர்கின்றன. குற்றவாளிகள் பெரும்பாலும்,குடும்ப அங்கத்தவர்கள் அல்லது சினேகிதர்கள்,ஆசிரியர்கள் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தியாவில் வேலியே பயிரை மேய்ந்த கதை தொடர்கிறது.சமயவாதிகள் மடங்களில் செய்யும் பாலியல் லீலைகள் பத்திரிகைகளில் பரபரப்பாக வந்து அடங்கமுதல் இன்னொரு மடத்திலிருந்து இன்னொரு கொடுமை நடப்பது வெளிவருவது சாதாரண விடயமாகிவிட்டது.
இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல்க் கொடுமைகளக்காளாகிறாள். அங்கு ஓருவருடத்திற்குப் பல்லாயிக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்காளாகிறார்கள்.பெரும்பாலான குற்றங்கள் போலிசாருக்கு அறிவிகப் படாமல் மறைக்கப் படுகின்றன. அறிவிக்கப் பட்டாலும் அதற்குரிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.பாலியற் குற்றங்கள் செய்தவர்கள் பாராளுமன்றவாதிகளாக இருக்கிறார்கள் என்று ஒருத்தர் என்.டி.டி.வியிற் சொன்னார்.

04.03.15 இரவு ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படம் பி.பி.சி 4 சனலிற் காட்டப்பட்டது. மேற்கு நாடுகளில் ஒரு பாலியல்குற்றவாளியை ஊடகங்களில் நேர்காணுவது கனவிலும் நடக்கமுடியாத விடயம்.ஆனால்,லெஸ்லி யுட்வின் என்ற இஸ்ரேலியப் பெண் படத்தயாரிபாளரால் எடுக்கப்பட்ட இந்த
ஆவணப்படத்தில்,16.12.12 அன்று இந்தியத் தலைநகரான டெல்லியில பாலியல் கொடுமைக்காள் இறந்த ‘நிர்பயா'(பயமற்றவள்) (உண்மையான பெயர் ஜோதி சிங்) என்ற இருபத்தி மூன்றுவயது பிசியோதரப்பி படிப்பு படிக்கும் இளம் பெண்ணைப் பாலியற் கொடுமை செய்து,குற்றவாளியாகக் கண்டு தூக்குத்தண்டனைபெற்றிருக்கும் முகேஷ்சிங் என்ற விஷப்பாம்பைக் கதாநாயகன் மாதிரிக் காட்டியிருக்கிறது.

அவனது கேவலமான வசனங்களால், அந்த ஆறுமிருகங்களும் என்னமாதிரியான கொடுமைகளை,அந்தப் பெண்ணுக்குச்; செய்தார்கள் என்று விபரிக்கிறான். தானும் தனது குழுவும் ஒரு பெண்ணின் மானத்தைப்பறித்து அவளின் உயிரையும் காவு கொண்டதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.
‘வெளியில் இரவிற் தெரியும் பெண்கள் நல்லவர்களல்ல. இரவில் துணிவாக வெளியில் வரும் பெண்களுக்கு இதுதான் நடக்கும்’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறான். அவனுக்காக வாதாடும் வழக்கறிஞரும் இப்படியான வாதங்களையே வைக்கிறான். ‘பெண்கள் புனிதமான மலர்கள். பூஜைக்கு வைக்கப்பட வேண்டியவர்கள். அந்தப் புனிதம் தெருவக்கு வந்தால் சாக்கடையிற்தான் தள்ளப்படும்’; என்கிறான் அந்தத் தரம் கெட்ட வழக்கறிஞன்.

‘அந்தப் பெண் ஆண்கள் அவளுடன் உடலுறவு கொள்ளும்போது வாயைப் பொத்திக்கொண்டிருந்தால் அவள் இறந்திருக்கமாட்டாள். அவள் தேவையில்லாமற் சண்டைபோட்டுத் தன்முடிவைத் தேடிக்கொண்டாள்’ என்கிறான் முகெஷ்சிங் என்ற அந்தப் பாவி.
நிர்பயாவின் அழிவுக்குக் காரணமான ஆறுபேரில் ஒரு அக்கிரமக்காரனுக்குப் பதினேழுவயதுதானாகிறது.
அந்த வயதில் அவன் ஒரு பெண்ணுக்குச் செய்த கொடுமைகளைக் கேள்விபட்ட தாய்க்குலம் அவமானத்தால் தலைகுனிகிறது.
அவர்கள் வாயாற் செய்யமுடியாத கொடுமைகளை அந்தப்பெண்ணுக்குச் செய்து அவள் குடலையே அவளின் பெணணுறுப்புவழியால் உருவியெடுத்துத் தெருவில் எறிந்திருக்கிறார்கள்.

பெரிய தொன்மையான கலாச்சாரம்,பண்பாடு;, ஆயிரக்கணக்கான கடவுள்கள்,ஆணையும் பெண்ணையும் ஒருமுகப்படுத்தும் அர்தநாரிஸவரத் தெய்வீகம் என்றெல்லாம் புழுகித்தள்ளும் இந்தியா,நிர்பயா என்ற பெண்ணுக்கு,இந்திய ஆண்கள் என்ற மிருகங்கள் செய்த கொடுமையால் உலகுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்பது ஆச்சரியமல்ல.

நிர்பயாவின் அழிவுக்குக் காரணமான ஆறுஆண்களும் இந்தியாவின் பெரும்பாலான ஆண்களின் மனநிலையை உணர்த்துவதாக இருக்கிறது.சாதி மதபேதமற்ற(பெரும்பாலும) ஒற்றுமையாக வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் இந்தவிதமான காட்டுமிராண்டித்தனமான கருத்துக்கள் வருவது வெட்கத்துக்குரிய விடயமாகும்.
இந்த ஆவணப் படத்தில் கருத்தும் சொல்லும் ஒரு சமுக ஆய்வாளர் கூறும்போது,@இந்தியாவில் 50 வீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குள் வாழ்பவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். சேரிகளல் வாழ்பவர்கள். பெண்களைக ;கேவலமாக நடத்தும் வாழ்க்கை முறையுடன் வளர்பவர்கள். பெண்களுக்குச் செய்யும் கொடுமைகளுக்குப் பெண்களே காரணமானவர்கள் என்ற கருத்தை ஊற்றி வளர்க்கப் பட்டவர்கள்.இவர்களிடமிருந்து மனிதத்தின் மேலான உணர்வுகளை எதிர்பார்க்கமுடியாயது’ என்கிறார்.

இந்த ஆவணப் படத்தை இந்தியாவில் வெளியிட,இந்திய அரசு தடைவிதித்துவிட்டது.ஆனாலும் மேற்குலகில்,கனடா போன்ற நாடுகளில் இப்படம் காட்டப் படும் என்று ஊடகங்கள் சொல்கின்றன.
இந்த ஆவணப்படத்தைத் தொடர்ந்து பல கருத்துக்களும், வாதங்களும் இந்திய ஊடகங்களை நிறைக்கின்றன.

பெண்களுக்கெதிரான பாலியல்க் குற்றங்களைத் தடுக்க இந்திய அரசு ஆனமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று பெரும்பாலான பொது மக்கள் மட்டுமல்லாது, மனித உரிமை வாதிகளும் குரல் கொடுக்கிறார்கள்.இதன் எதிரொலி, 5.3.15ல் நாகலாந்து என்ற இடத்தில், பாலியல்க் குற்றவாளியைப் பொதுமக்கள்,ஜெயிலுக்குள் புகுந்து,அவனை வெளியே இழுத்து வந்து அடித்துக்கொலை செய்ததில் பிரதிபலிக்கிறது.
பொருளாதாரத்தை முன்னெடுத்து வளர்ந்துகொண்டுவரும் நவின உலகில், அது இந்தியாவாகிருக்கட்டும் இலங்கையாகவிருக்கட்டும் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப் படாவிட்டால் அந்தச் சமுதாயம் ஒரு நாளும் மனிதத்தை மதிக்கம் சமுதாயமாக உருவொடுக்காது.

பிரித்தானிய பிரதமரும் இந்தியச் சட்டங்களும் எத்தனையோ புதிய சட்ட திட்டங்களையும் கொண்டுவரலாம்.ஆனால், சமுதாயத்தின் ஒர அங்கமான ஆண்கள் , பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்ற பண்பாட்டைக் கடைபிடிக்காவிட்டால் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s