இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –மார்கழி 2014
அண்மையில்,(17.12.14),அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா விடுத்த அறிக்கையின்படி,கடந்த அரைநூற்றாண்டுகாலமாகப் பரமவிரோதியாகவிருந்த இரு நாடுகள் புதிய நட்புறவைப் பேணப் போவதாக அறிவித்தார். அரசியல சதுராட்டத்தில் நிரந்தர நண்பர்களம் கிடையாது. நிரந்தர விரோதியும் கிடையாது என்பது பலரறிந்த விடயம்.அதிலும் அமெரிக்கா யாருடன் எப்போது உறவு கொள்ளும் எப்போது தங்கள் உறவை அவர்களிடமிருந்து உடைத்துக் கொள்ளும் என்பதும் பலரால் ஊகிக் முடியாதது.
1776ல் ஆவணிமாதம் நான்காம் திகதி, அமெரிக்கா, தங்களையாண்டுகொண்டிருந்த பிரித்தானியருக்கெதிராகப் புரட்சி செய்து விடுதலையைப் பிரகடனம் செய்தார்கள்;. இந்தச் சுதந்திரப் போருக்கு பிரித்தானியரின் பரம வைரியான பிரான்ஸ் அமரிக்க விடுதலை வீரர்களுக்கு உதவி செய்தது.
அமெரிக்காவில் வாழ்ந்த,பிரித்தானியருக்கு விசுவாசமாகவிருந்த நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரிக்காவை விட்டு வெளியேறினார்கள்.(அவர்களிற் பலர், பிரித்தானிய காலனி நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, கல்வி, கிறிஸ்தவ சமயத்தை வளர்க்கும் பணியில் இணைந்தார்கள்.கல்லூரிகள், பல கிறிஸ்தவ ஆலயங்கள் அமரிக்க மிஸனரியால்த் தொடங்கப் பட்டன)
அமெரிக்கரின்; சுதந்திரப் பிரகடனத்தில,;’உலகத்தில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே’,என்ற பென்ஞமின் பிராங்கிளின் எழுதிய வார்த்தை அமெரிக்காவை ஒரு நீதி தவறாத தேவையாக உலகுக்கு வரையறை செய்துகாட்டியது. ஆனால், அவர்களால் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ‘அடிமைகளாகக்’ கொண்டு செல்லப் பட்ட கோடிக்கணக்கான கறுப்பு இன மக்கள் ஒரு விதமான உரிமையுமற்ற ‘விலங்குகளாய்’ நடத்தப்பட்டார்கள். பெருந்தோட்டங்களை ஆளுமையில் வைத்துக் கொண்டிருந்த தெற்குப் பகுதியைச் சேர்ந்த பல தனவந்தர்களால் அடிமை முறை மிக மோசமாக நடைமுறைப்படுத்தப் பட்டது. அடிமை முறைக்கு எதிரான வடக்குப் பிராந்திய அரசியலவாதிகளுக்கு எதிராப் போர் தொடுத்தார்கள் (1861-65). பிரித்தானியா வழக்கம்போல், தெற்குப் பகுதியினரை ஆதரித்தார்கள்.
அன்றைய ஜனாதிபதி,ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் நடந்த போரில்தெற்குப் பகுதி வீரர் தோல்வியடைந்தார்கள்.அமரிக்காவின் முழுப்பகுதியும் ஓரிணைந்த அரசியலமைப்பில் ஒற்றுமையாகின.அதன்பின் தங்களை ஒரு பிரமாண்டான ஆதிக்க சக்தியாக வளர்த்துக் கொண்டார்கள்.
அமெரிக்காவை மற்ற சக்திகளிடமிருந்து பாதுகாக்கப் பிரமாண்டமான இராணுவ படை பலம் உருவாகியது.அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் பிரித்தானியா,அடிமைகளைக்கேவலமாக நடத்திய தெற்குப் பகுதியுடன்சேர்ந்து பிரித்தானியா,தங்களுக்குத் தொல்லை கொடுத்ததை அவர்கள் மறக்கவில்லை.
அதனால், அவர்கள், ஐரோப்பாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்களில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. முதலாம் உலக யுத்தம் பிர்pத்தானியவுக்கும் ஜேர்மனிக்குமிடையில் மூண்டபோது,அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய அரசியலில் மிகப் பிரபலமாகவிருந்தவரும் அமெரிக்கத் தாயின் மகனுமான வின்ஸ்ரன் சேர்ச்சில்,’பிரித்தானியாவின் மூத்த மகன்’ என்று மறைமுகமாக வர்ணிக்கப் படும் அமெரிக்காவை முதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானியாவுக்கு உதவி செய்ய அழைத்தார். அமெரிக்க உதவியுடன் பிரித்தானியா ஜேர்மனியை வெற்றி கொண்டது. அமெரிக்காவின் உதவியுடன் பிரி;த்தானிய பல நாடுகளைப் பிர்pத்தது. பல வருடங்களாக மத்திய தரைக்கடல் நாடுகளைத் தன்வசம் வைத்துக் கொண்டிருந்த,’ஒட்டமான்’ஏகாதிபத்தியம் (துருக்கிய),பிரித்தானியரால(அமெரிக்க உதவியுடன்?); துண்டு துண்டாக உடைக்கப் பட்டது.
தனது வல்லமை உலகத்துக்கு இன்றியமையாதது என்று தெளிவாகத் தெரிந்து கொண்டது
அமெரிக்கா. பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் ஒரு புதிய ‘விசேட உறவு பரிணமித்தது. கடந்ந நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலிருந்து, உலகத்தைப் பாதுகாக்கவந்த காவலனாக எண்ணிக் கொண்டு பல தரப் பட்ட அடாவடித்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறது.
அவர்களின் மூக்கு நுழையாத நாடுகள் எதுவுமில்லை என்பதை விளக்க,கியுபா உட்பட (முஸ்லிம்களை அடைத்து வைத்திருக்கும் குவாண்டனாமா வளைகுடா இராணுவ முகாம்) றூற்றுமுப்பதுக்கு மேலான நாடுகளில் தங்களின் பெரிய படைகளை வைத்துக்கொண்டு அச்சம் கொடுக்கிறார்கள்.துருக்கியில் மட்டும் ஏழு பிரமாண்டமான படைத்தளங்கள் உள்ளன.
ஆனால் அவர்களுக்கு அஞ்சாத ஒரு குறும்பு பூனைக் குட்டிபோல் அவர்களின் அண்டை நாடான கியுபா கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக அமரிக்க ஆதிக்க சக்தியைக் கண்டு பயப்படாத நாடாகத் தன்னை நிர்வகிக்கிறது.
யூதர்களின் பழைய கதையொன்றில,எந்த வீரர்களாலும் வெல்ல முடியாத பிரமாண்டமான பலம் படைத்த, ஒன்பதடி உயரமுள்ள பிலஸ்ரைன் நாட்டைச் சேர்ந்த மிகபலம் படைத்த அரக்கன்போன்ற கோலையா என்பவனை, யூத இளவீரனான டேவிட் கல்லாலடித்துக் கொன்று,யூதமக்களைக் காப்பாற்றியதாகக் கதையொன்றுண்டு.
இன்று,தற்கால அரசியலை ஆராய்பவர்கள், அமெரிக்காவுக்கு அஞ்சாத,கியுபாவை, பிலஸ்ரைன் பலசாலி கோலையாவுக்குப் பயப்படாத, யூத வீரன் டேவிட்டாக வர்ணிப்பார்கள்.
கியுபா,1959ல் பிடல் காஸ்ட்ரோவின்(13.08.1926—) தலைமையில் அரசியலை மாற்றியது.அன்றைய புரட்சி மூலம், கியுபா ஒரு கொம்யனிச நாடாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டது. காஸ்ட்ரோவுக்குப் பக்கபலமாகவிருந்தவர் ஆர்ஜன்ரினியன் டொக்டரான சேகுவாரா.சாதாரண கியுபா மக்களுக்கு நன்மை தரும் பல சட்ட திட்டங்கள் காஸ்ட்ரோவால் முன்னெடுக்கப் பட்டது.
அமெரிக்கரின் கேளிக்கைத் தலமாகவிருந்த கியபுh ஒரு கொம்யுனிச நாடாக மாறியதை விரும்பாத கியுபா நாட்டுப் பிற்போக்கு வாதிகள் காஸ்ட்ரோவின் தலைமையைத் தூக்கியெறியவும் அவரைக் கொலை செய்யவும்; பல சூழ்ச்சிகளைத் தொடர்ந்தார்கள்.
காஸ்ட்ரோவைக் கொலை செய்ய,அமெரிக்க,சி.ஐ,ஏ.638(அறுநூற்றி முப்பத்தி எடடு முறைகள்!), தடவைகள் முயன்றன. கியுபாநாட்டுப் பிற்போக்குவாதிகள், மார்பியா, விலைமாதர்கள் இந்த முயற்சிக்குப் பாவிக்கப் பட்டார்கள்.
அமெரிக்காவின் உதவியுடன் கியுபா மக்களை,கஸ்ட்ரோவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யப்பல முயற்சிகள் எடுக்கப் பட்டன. 1960ம் ஆண்டிலிருந்து,கியுபாவின் பொருளாதாரத்தை உடைக்கும் முயற்சியில்,ஏற்றுமதி, இறக்குமதிகளுக்குப் பல தடைகள் போடப் பட்டன.கியுபாவின் பெரிய ஏற்றுமதியான சீனி, மதுவகைகள், எனபனவற்றின் ஏற்றுமதி தடை செய்யப் படடது.போக்குவரத்து உபகரணங்கள், விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்கள், மக்களுக்குத் தேவையான முக்கிய மருந்து வகைகளின் இறக்குமதிகள் தடைசெய்யப் பட்டன.
1961ம் ஆண்டு. அமெரிக்காவில் வாழும் காஸ்ட்ரோ எதிர்பாளர்களுடன்,கியுபாவின்;,’பன்றிகளின் வளைகுடா’என்ற இடத்தில் சி.ஐ.ஏ ஒரு படையை, கியுபாவின் முன்னாளைய வாசியான.பீலிக்ஸ் றொட்றிகஸ் என்பனின் தலைமையில் இறக்கியது. கியுபா மக்களின் உதவியுடன் காஸ்ட்ரோ அதைத்தோற்கடித்தாh.
பொருளாதார காரணமாகவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைப் பெறவும் கியுபா.தனது அரசியல,பொருளாதார உறவை இரஷ்யாவுடன 1962ல் ஏற்படுத்தியது. இரஷ்யா தனது அணுகுண்டுகளை கியுபாத் தளத்தில இறக்கியது. இதனால்,மூன்றாம் உலக யுத்தம் வருமா, அணு ஆயத யுத்தம் வருமா என்று உலகெங்கும் ஏற்பட்ட பரபரப்பால் பதின்மூன்று நாட்கள் உலகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பல பேச்சுவார்த்தைகளின் பின்,கியுபாவில .அமெரிக்காவிற்கு எதிராகப் பாவிக்கப் பட்டிருந்த இரஷ்ய அணுகுண்டுகளும், துருக்கியில் இரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவால் வைக்கப்பட்டிருந்த அணுகுண்டுகளும் வாபஸ் வாங்கப் பட்டன.
1967ல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான சேகுவாராவை பொலிவியாவில் வைத்துக் கொலை செய்தார்கள,இதிலும் பீலிக்ஸ் றொட்றிகஸ் ஈடுபட்டிருந்தான்.;ஆனாலும் அமெரிகாவில் காஸ்ட்ரோவைக் கொல்ல முன்னெடுக்கப் பட்ட பல சதிகள் தொடர்ந்தன.
பல விதமான முறைகளை அமெரிக்க சி.ஐ.ஏ பரிட்சித்தது.அவற்றிற் சில:
-1960ல்,கஸ்ட்ரோவுக்குப் பிடித்த சுருட்டில் சிறு குண்டைப் புதை;து வைத்தார்கள்.
-இன்னொருதரம்,அவர் பேசப்போகும் கூட்டத்திற்கு முன்னராக அவர் புகைக்கப்போகும் சுருட்டில் பி.ஷட்,என்ற கெமிக்கலைத்தடவிட்டு,அவரின் சிந்தனையைக் குழப்பி அவரின்பேச்சைக்கேட்டு மக்கள் சிரிக்கத் திட்டம் போட்டும் பலிக்கவில்லை.
-காஸ்ட்ரோவின்,உணவில், குடிபானத்தில் விஷம் கலப்பது,
-கடலில் அவர் நீந்தப்போகும் போது பாவிக்கும் உள் உடுப்பில்; விஷத்தைத் தடவுவது.
– காஸ்ட்ரோவுடன் நெருங்கிப் பழக ஒரு பெண்ணைப் பயன் படுத்தினார்கள் அந்தப் பெண்,அவளின் முகத்தை அழகு படுத்தும் தனது அழகுக் கிறிமில் விஷத்தை மறைத்து வைத்திருந்தாள். அதைஅறிந்த காஸ்ட்ரோ’ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறாய்,இதோ எனது துப்பாக்கி,அதைப் பாவித்து என்னைக் கொலை செய்து விடு’ என்றார்.அந்தப் பெண்ணால் அவரைக் கொலை செய்ய முடியவில்லை.
-காஸ்ட்ரோவைக் கொல்லப் பலவிதமான பக்டீரியாக்களை அவரின தேனிர்,காப்பி, உணவுவகைகளில் சேர்த்துப் பல முறை முயன்றார்கள்.
-‘தலியம்’ என்ற விஷத்தை அவரின் காலணியிற் தடவி அவரைக் கொலை செய்த முயற்சித்தார்கள்.
-கஸ்ட்ரொ 2000ம் ஆண்டு பொலிவியாக்குப் போனபோது அவர் பேசப்போகும் மேடையில் 200 இறத்தல் நிறையள்ள குண்டை மறைத்து வைத்து முயற்சித்தார்கள்.
-பல தடவைகளில்,அவரை,விசேட ரகமான துப்பாக்கிகளாற் சுட முயனறும் வெற்றி கிடைக்கவில்லை.
-காஸ்ட்ரோவின் அந்தியந்த நண்பரின் மூலம் அவரைத் தீர்த்துக் கட்டப் பார்த்தார்கள்.
இப்படிப் பல சதிகளால்,கடந்த அறுபது வருடங்களாகக் கியுபா மக்கள் பல இன்னல்களை அனுபவத்து வருகிறார்கள். மருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப பட்டதால் கியுபா மக்களின் சுகாதார நிலை பெரிதாகப் பாதிக்கப் பட்டது. சத்திர சிகச்சைக்குப் பாவிக்கப் படும் மயக்க மருந்துகள்,குழந்தைகளுக்கான விசேட மருந்துகள் இன்றி மிகத் துயர் பட்டார்கள். தாங்களே ஒரு திறமையான மருத்துவ முறையை உருவாக்கி மக்களைப் பாதுகாக்கத் தொடங்கினார்கள். ஆடம்பரமான பொருட்கள் எதுவுமற்ற நாடாக கியுபா அறுபது வருடம் பின் தங்கியிருக்கிறது;. 50ம் ஆண்டுகளில் வாங்கிய கார்களையே இன்னும் பாவிக்கிறார்கள்.
ஆனாலும் கியுபா மக்கள் காஸ்ட்ரோவுக்கு எதிராகச் சதி செய்து அவரைப் பதவியிலிருந்து நீக்காது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டு விட்டது போற் தெரிகிறது.
கியுபா,அதன் அமெரிக்கா நாடுகள் பலவற்றில் பொதுவுடமை அரசியலமைப்பு மலர உதவி செய்தது. புல நாடுகளின் விடுதலைப் போர்களுக்கு உதவியது.
அமெரிக்க வல்லரசின் கொடுமைகளைப் பலநாடுகள் உணர்ந்து கொள்ளத் தொடங்கியபோது அமெரிக்காவுக்கு எதிரான சிறிய நாடான கியபுhவுக்கும் அதன் தலைவர் காஸ்ட்ரோவுக்கும் ; பல நாட்டுத் தலைவர்களும் மதிப்புச் செலுத்துகிறார்கள்.
ஏன் திடிரென்ற அமெரிக்கா,கியபாவுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயல்கிறது என்பதற்கு, கனடாவும் போபாண்டவரும் இந்த சமாதான உடன் படிக்கைக்கு உதவி செய்ததாகக் கூறப் படுகிறது.
பழைய பாப்பாண்டவர் கியுபாவுக்குச் சென்றவர் தற்போதைய பாப்பாண்டவர்,இதுவரை துயர் பட்ட கியுபன் மக்களுக்க உதவி செய்ய வந்தது வரவேற்கப்படவேண்டிய விடயம். உலகம் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கும்போது, அமெரிக்காவுக்குப் பிடிக்காத நாடு என்பதால் கியுபா துயர்படுவதைக் கனடாவும் விரும்பாமலிருக்கலாம். கியுபன் அரசியல் வாதிகளும் இனியும் முரண்பாட்டு அரசியல் வேண்டாம் என்று இணக்க அரசியல் முன்னெடுப்புக்கு வந்திருக்கலாம்.
அத்துடன்,இன்றோ நாளையோ இறக்கப்போகும் காஸ்ட்ரோவைப் பற்றிய ஆத்திரம் அமெரிக்காவுக்குக் குறைந்திருக்கலாம். அல்லது. அரைநுர்ற்றாண்டுத் தடைகளுக்கு அசையாத கியுபா இனியும் அசையாது என்று புரிந்திருக்கலாம.;
அல்லது, மத்திய தரைக்கடல் நாடுகளில் போர் நர்த்தனம் செய்து களைத்துப்போன அமெரிக்கா,காஸ்ட்ரோ இறந்ததும் தங்கள் பழைய கைவரிசையைக் காட்ட,சினேகித பாவனையில் கியுபாவுக்குள் நுழையும் திட்டமிருக்கலாம். என்னவாயிருந்தாலும் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை உணர்ந்து கொண்டாற்போதும்.
ஆனாலும் சாதாரண கியுபன் பொது மக்கள் இந்தப் பிரமாண்டமான அரசியற்; திருப்பத்தால் ஒரு புதிய பாதைக்குள் காலடி எடுத்துவைத்துத் தங்கள் வாழ்க்கையை ‘உலகமயமாக்குதல்’ மூலம் தெரிந்து கொளவார்கள் என்று எதிர்பார்க்கலாம.