பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

MA(medical anthropology),BA(Hons)Film&Vedio,Cert in health Ed, RGN,RSCN

(அண்மையில் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய இராமநாதன் மகளீர் கல்லுரியின் நூற்றாண்டு விழா மலரில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது)

மக்களின் கல்வியறிவு,உலகத்தில் நடக்கும் எந்த மாற்றத்திற்கும் அடித்தளமாகிறது. அது சமயத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம் அல்லது விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம்,அவைகளின் வளர்ச்சிக்கம் மாற்றங்களுக்கும் ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் கல்வி அமைப்பு இன்றயமையாததது. அதிலும் பெண்களின் கல்வி ஒரு காத்திரமான அறிவுத்தளத்தில் சமுதாயம் வளர உதவுகிறது. சமுதாயத்தின் மூலமான ஒரு குடும்பம் நல்லமாதிரியமைய அந்தக்குடும்பத்தைக் கொண்டு நடத்தும் பெண்ணின் அறிவு உதவி செய்கிறது. இன்றைய கால கட்டத்தில் பெண்களின் படிப்பு பல வித்திலும் வளர்ச்சியடைந்திருக்கிறது. வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் விண்வெளிப் பிரயாணம் செய்ய அவர்களின் கல்வி துணைசெய்கிறது. குடும்பத்தின் பொருளாதாரம் சீர் சிறப்பாகவிருந்து நிம்மதியான வாழ்க்கைவாழ, பெண்கள் படிப்பதும் வேலைக்குப்போவதும் தவிர்க்கமுடியாத அம்சமாக இன்று கருதப்படுகிறது.

கடந்த இருநாறு வருடங்களாகத் தொடரப்படும் பெண்கள் கல்வியால் இலங்கை பல விதத்திலும் மற்றைய தென்னாசிய நாடுகளை விட முன்னேறியிருக்கிறது. உதாரணமாக,குழந்தைகள் ஆரோக்கியமாக வளரப் பெண்களின் படிப்பும் அதனால் அவர்கள் பெறும் பல்விதமான அறிவும் மிகவும் இன்றியமையாதது என்பதற்கு, இலங்கையில் பெண்களின் படிப்பு நிலை உயர, தாய்சேய் நலமும் உயர்ந்திருக்கிறது என்று சுகாதரா திணைக்கள அறிக்கைகள் சொல்கின்றன.

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக்கண்கள் தங்களுக்கும், தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கும் வளம் கொடுக்கும் நல்ல பல பாதைகளை அவர்கள் பெறும் கல்வி மூலம் கண்டு தெரிந்து கொள்கிறார்கள். செல்வத்தில் பெரும் செல்வம் கல்விச் செல்வம் என்பதை உணர்ந்து கொண்ட எங்கள் மூதாதiயோர் தங்களால் முடிந்தவரை அந்தச் செல்வத்தைப் பெண்களுக்கும் கொடுக்க நினைத்துப் பல கல்வி நிலையங்கைப் பெண்களுக்காக அமைத்தார்கள். அவற்றில் இராமநாதன் பெண்கள் கல்லூரியும் ஒன்றாகும். இலங்கையின் தமிழ்ப் பெண்களின் கல்விக்கு அத்திவாரமிட்ட பல பழைய ஸ்தாபனங்களில் ஒன்றான, இராமநாதன் பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் அத்தனைபேருக்கும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிக்கொண்டு, பெண்களின் கல்வியால் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல அவர்கள் வாழும் சமுதாயமும்,எப்படிப் பயன்பெறுகிறது என்பதையிட்டு இச்சிறு கட்டுரையை படைக்கிறேன்.

பெண்களுக்கான கலை, கலாச்சார, சமய அறிவு பற்றிய கல்வியின் முக்கியத்துவத்தை,மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே உரோமா ஆதிக்கவர்க்கம் உணர்ந்;திருந்தது. உரோம ஆடசியில் மேன்மட்ட வர்க்கத்துப் பெண்களுக்கு பல தரப்பட்ட கல்விகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்துக்கு (முன்னரே கி;மு.5ம் நூற்றாண்டு) கால கட்டத்தில் இந்தியாவில் பெண்களுக்காக, ரக்ஸில்(இன்றைய பாகிஸ்தான்),நாலந்தா போன்ற இடங்களில் சமயம், கலைகள்பற்றிய விபரங்கள் படிப்பக்கப்பட்டன என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆண்களுக்கான கல்வி குருகுல முறையில் இருந்தபோது பெண்களுக்காகத் தனியாகக் கல்வி நிலையங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன.

கி;மு., இரண்டாம் நூற்றாண்டில் மனுதர்மசாஸ்திரம் குடும்பத்துப்பெண்கள் எப்படி வாழவேண்டும் என்ற விதிமுறைகளை முன்னேடுத்தது.’ வயதுக்கு வந்த பெண்களோ அல்லது வயது போன பெணகள் என்றாலும் எக்காரணம் கொண்டும் ஆண்துணையற்று வெளியே போகக்கூடாது எனபதை வலியுறுத்தியது.
‘பெண்கள்,சிறுவயதில், தகப்பனின் கட்டுப்பாட்டிலும், மணம்முடித்ததும் கணவனின் கட்டுப்பாட்டிலும்,; விதவையானால் மகனின் கட்டுப்பாட்டிலும் வாழவேண்டும் என்று வலியுறுத்தியது. அதனால் பல இந்துப்பெண்கள் வெளியே சென்று படிக்க அனுமதிக்கப் படவில்லை. ஆனாலும் பெண்களின் படிப்பு ரக்ஸரிலிலும்,நாலந்தாவிலும் 13ம் நூற்றாண்டுவரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இடங்கள் புத்த மதத்துடன் சம்பந்தப் பட்டதால் அங்கு புத்த மதம், கலை கலாச்சாரம் பற்றிய கல்விகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆதி காலத்திலேயே, மனுதர்மசாஸ்திரம் பெண்களின் கட்டுப்பாட்டை வலியுறுத்தினாலும், தமிழ்நாட்டில் பல பெண்கள் கல்வியறிவுடனிந்ததற்கான பல சான்றுகள் உள்ளன.தமிழச்சங்க காலத்தில் பல படித்தபெண்கள் வாழ்ந்திக்கிறார்கள் என்பதற்கு அவ்வையார் போன்ற பெண்கள் சான்று பகர்கிறார்கள். பெண்கள் பல நாடுகளலும் பல தரப்பட்ட சமயவேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்னேர் உதாரணமாகவிருக்கிறார்கள்.அதேபோல், இஸ்லாம் பரவுவதற்கு நபிகள்நாயத்தின் துணைவியார் கதிஜா அம்மையார் பெரும் பணி செய்திருக்கிறார் என்று ஆய்வகள் சொல்கின்றன.  கிறிஸ்தவ சமயத்தின் ஆரம்பத்தில் மேரி மக்டலினின் பணியும் முக்கியமானது.

வட இந்தியா மொலாயர் ஆட்சியிலிருந்தபோது,பதினோராம் நூற்றாண்டில் பலதரப்பட்ட கல்விகளுக்கும் முன்னிடம் கொடுக்கப்பட்டது.டெல்கி, லக்னோ,அலகபாத் போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன..

பிரித்தானியராட்சியிலிருந்த நாடுகளுக்குப் கிறிஸ்தவ சமயத்தை, பரப்புவதற்குக் கல்வியை மிகவும் முக்கியமான விடயமாகப் பாவித்தார்கள்.
பிரித்தானியர் ஆடசி செய்த இடங்களில் ஆங்கில்கல்வியுடன் மதமும் பரப்பப்பட்டது. முக்கியமாக, இந்தியாவில், கிழக்கிந்தியக் கொம்பனி அடியெடுத்தகாலத்தில் அவர்கள்pற் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் தேவைக்கு மட்டுமல்லாது, தங்களுக்கு வேலை செய்பவர்களுக்கு ஆங்கில அறிவும் தேவை என்பதால் பல கல்வி நிலையங்களை ஆரம்பித்தார்கள். பெண்கள் கல்விக்கூடங்கள் பலவற்றையும் ஆரம்பித்தார்கள்.

1857ல் பம்பாய(முமு;பாய்);,கல்கத்தா, மட்ராஸ்(சென்னை); போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தார்கள். இவற்றில்,கிறிஸ்தவ, பார்ஸி சமயப்பெண்கள் கணிசமான வித்திலும் இந்துப்பெண்கள் மிகக்குறைந்த விகிதத்திலும் சோர்ந்து படித்தார்கள். 1885ல் இந்திய காங்கிரஸ ;கட்சியின் பெண்கள் அமைப்பு உருவானது. சரோஜினி நாயிடு, அன்னிபெஸன்ட் அம்மையார் போன்றோர் பெண்களின் கல்வியின் முக்கியம் பற்றிப் பல பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இப்படி, இந்தியாவில் பெண்கள் கல்வி வளரத் தொடங்கியது.1882ம் ஆண்டு இந்தியாவில் படித்த பெண்களின் தொகை 2 விகிதமாகவும் இந்தியா சுதந்திரம் பெற்றபோது 6 விகிதமாகவுமிருந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், மேல்மட்டத்தைச்சேர்ந்த குடும்பத்துப் பெண்களாகும்

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கான பாடசாலை அமெரிக்க மிஸனரியால் 1813ல் தொடங்கப் பட்டது. பெண்களுக்காக தென் ஆசிய நாடுகளில் உண்டாக்கப்பட்ட முதலாவது பாடசாலையிதுவாகும். 1834ல் வேம்படி மகளீர் பாடசாலை தொடங்கப்பட்டது.1896ல் சுண்டிக்குளிப் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது..
பல பாடசாலைகளில் கிறிஸ்தவ சமயப்படிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதால், இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு,சைவசமயத்தையும் அதனையொட்டிய கலா கலாச்சாரங்களையும்  படிப்பிக்க இராமநாதன் பெண்கள் கல்லூரி சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் 1913ல்அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சமய, கலா கலாச்சாரத்தின வளர்ந்த கல்லூரியில் நாளடைவில் பல தரப்பட்ட உயர் கல்விகளும் போதிக்கப்பட்டு, வடமாணத்தில் பெண்களின் படிப்புக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் அடித்தளம்போட்ட கல்வி நிலையங்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது இராமநாதன் பெண்கள் கல்லூரி.

ஓரு சமுதாயம் எப்படி வளர்கிறது என்பதை அவதானிக்க அந்நாட்டில் பெண்களின் கல்வியும் அந்தக்கல்வி மூலம் பெண்கள் சமுதாயத்துக்குச் செய்யும் பல தரப்பட்ட பணிகளையும் வைத்து அளவிடலாம்.
கடந்த இருநாறு வருடங்களாகப் பெண்களின் உயர்கல்வியின் நிலை படிப்படியாக உயர்ந்து, இன்று பல நாடுகளில் ஆண்களைவிடப் பெண்கள் நல்ல விதத்தில் சித்தியடைவதும் பரவிக்கொண்டு வருகிறது.
1981(அல்லது82) ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்விஅமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தென்னாசியாவில் உயர்கல்வியை நாடும் பெண்களின் தொகையில் இலங்கை முன்னிடம் வகித்தது. அதிலும் வடபகுதிப் பெண்கள் பலர் இலங்கையின் தென்பகுதிப் பெண்களைவிட (விகிதாசாரப்படி), கூடிய கல்வித்தரத்தில் இருந்தார்கள் என இவ்வறிக்கை சொன்னது.

அண்மைக்காலத்தில் எடுத்த கணிப்பின்படி, இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையும் 21.283.913 என்றும் அதில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிககையை விடக் கூடுதலாக இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது..அதில்,பெண்களின் சனத்தொகை,10.864.073,ஆண்களின் சனத்தொகை,10.419.840 ஆகும். இலங்கையில் பெண்களின் கல்வி தென்னாசிய நாடுகளை விட மிகவும் உயர் நிலையிலுள்ளது. இலங்கையின் செலவாணியில் 5.4 விகிதம் கல்விக்காகச் செலவிடப்படுகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் திரு கன்னங்கரா அவர்களாற் கொண்டவரப் பட்ட கல்வித்திட்டத்தால்,1931ல் இலங்கையிலுள்ள அத்தனை மக்களுக்கும் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று இலங்கையில்,9830 பாடசாலைகளில் 4.030.000 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியை எடுத்துக்கொண்டால் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 92 விகிதமானவர்கள் உயர்கல்வியை நாடுகிறார்கள். ஆண்கள்,பெண்கள் என்று பிரித்துப் பார்த்தால் மேற்படிப்பு படிக்கும் ஒட்டுமொத்த ஆண்கள் 95.8 என்றும், பெண்களின் தொகை 93 விகிதம் என்றும் இலங்கைக் கல்வி மந்திரியின் செயலகம் அறிவிக்கும்போது, இந்த உயர்வு இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சமமாக இல்லை என்றும் தெரிகிறது.கடந்த முப்பது வருடங்களாக நடந்த போhரின் பல காரணத்தாலும் வேறு பல காரணங்களாலும் இலங்கையிற் சில பகுதிகளில் கல்வி நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக,மட்டக்களப்பில் மேற் படிப்பு படிக்கும் பெண்களின்  81.3 விகிதம்,அம்பாரைப்பகுதியில் 87.2 விகிதம், நுவரெலியாப் பகுதியில் 80.1 விகிதம் மட்டுமே.

2010ம்ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்குப் போனவர்களில் 58விகிதம் பெண்களாகும் இது பல காரணங்களால் நடந்திருக்கலாம், உதாரணமாக, இலங்கையில் தொடர்ந்து நடந்தபோரால் பல இளவயது ஆண்கள் இறந்தார்கள்.சிலர் மேற்படிப்பற்றுப் படையிற் சேர்ந்தார்கள் வசதியான குடும்பத்து ஆண்கள் மேற் படிப்புக்காக வெளிநாடு சென்றார்கள்.
மேற்படிப்பைத் தொடரும் பெண்களில் கூடுதலானவர்கள்(78.80 விகிதம்) விஞ்ஞான பாடங்களற்ற துறைகளை(ஆர்ட்ஸ், கொமேர்ஸ்) நாடுவதால்,பல்கலைக்கழகப்படிப்பு முடிந்தததம் பெண் பட்டதாரிகளுக்குள் வேலையில்லாத்தட்டுப்பாடு நிறைந்திருக்கிறது.

சைவசமயத்தைச் சேர்ந்த பெண்களுக்காகத் தொடங்கப் இராமநாதன் பெண்கள் கல்லூரியில் ஆதிகாலத்தில் சமயம், கலை, கலாச்சாரம் போன்ற படிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நாளடைவில் அங்கு விஞ்ஞான பாடங்களும் போதிக்கப்பட்டன.
ஆதிகாலம் தொடக்கம்,காலத்துக் காலம் பெண்களின் படிப்பு பல திருப்பு முனைகளைக்கண்டிருக்கிறது. படித்த பெண்கள் அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் சமய வளர்ச்சிக்கும், கலை கலா வளர்ச்சிகளுக்கும் உதவியிருக்கிறார்கள். எங்கள் தமிழ்ச்சமுதாயம் முப்பது வருடப்போரால் துயருற்று வாடியது. எங்களின் கல்வி,கலை கலா வளர்ச்சிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.இன்று அமைதியான சூழ்நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்திக்கொள்ளவும், தங்கள் குழந்தைகளுக்குத் தங்களால் முடிந்த அளவு உயர் கல்வியைக் கொடுக்கவும் பாடுபடுகிறார்கள். இந்தக்கால கட்டத்தில் பழம் பெருமைவாய்ந்த இராமநாதன் கல்லூரியின் கடமைபல. அவற்றில் படிக்கும் மாணவிகள் எதிர்நோக்கும் சவால்கள் பல. பெண்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் பல தடைகiயும் தாண்டித் தன்னையும் தான்வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்தையும் மேன்படுத்துபவர்கள் தமிழ்ப்பெண்கள். அந்த அடிப்படையில் இராமநாதன் கல்லூரி மாணவிகளும் தங்களின் வளர்ச்சிக்கும் தமிழ்ச்சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கம் உதவி செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s