‘எய்தவர் யார்’

‘எய்தவர் யார்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

‘புது உலகம் எமை நோக்கி பிரசுரம்’- ஆடி 99

லண்டன்-97.

ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள்

அவளின் செய்கை அவளது காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் தன்னை அளவுக்கு மீறி அலங்கரிப்பதாக அவனுக்குப் பட்டது.

பீட்டர் தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கடைக் கண்ணால் எடைபோட்டபடி ஜனட் தன்வேலையைத் தொடர்ந்தாள்.அவளுக்கு இப்போது வயது இருபது. பதினெட்டுவயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள்.. இருந்தாலும் பதினெட்டு வயதில் அவளுக்கிருந்த அழகை விட இப்போது பார்த்தவர்கள் வாயுறும்படி படுகவர்ச்சியுடனிருக்கிறாள்.

‘பக்கத்து ரோட்டிலுள்ள பட்டேலின் கடையில் ஜனட் ஏன் அடிக்கடி தென்படுகிறாள்?’ பீட்டரின் சினேகிதன் டாரன் என்பவன் சூயிங்கத்தைச் சப்பியபடி ஒரு மாலை நேரம் பீட்டரைக்கேட்டான்.

அது பீட்டருக்குத் தெரியாத இரகசியமில்லை. ஓரு சில வருடங்களுக்கு முன் பீட்டரில் உயிரையே வைத்திருந்த ஜனட் இப்போது அவனை எடுத்தெறிந்து பேசுகிறாள்,ஏனோ தானோ என்று நடத்துகிறாள்.

பட்டேலின் கடையிலுள்ள ஒரு இளைஞன் நல்ல வாட்டசாட்டமானவன்.வாடிக்கையாளர்களுடன் சுமுகமாகப் பழகும் சாட்டில் வாயூறக்கதைப்பான்.

‘ ஹலோ டார்லிங் எப்படி உனது சுகம்?’ என்று இளித்தபடி அங்கு வரும் எல்லாப் பெண்களையும் -முக்கியமாக இளம் பெண்களைக் கேட்பான்.

பீட்டர் ஒரு நாள்,ஜனட்டுன் பட்டேலின் கடைக்குப் போனபோது, அந்தக் கடைக்கார இளைஞன் ஜனட்டை ‘ஹலோ டார்லிங் என்று கூப்பிட்டதைக் கேட்டுக் கோபப் பட்டான்.

‘ஏய் பாக்கி, கடைக்கு வருகிற பெண்களெல்லாம் உனக்கு டார்லிங்கா?’ என்று பீட்டர் ஆத்திரத்தில் கடைக்கார இளைஞனைக்கேட்டான்.

‘ஐயாம் சாரி சேர், இந்த மேடத்தின் பெயர் எனக்குத் தெரியாது’கடைக்காரன் குத்தலாகச் சொன்னாhன்.

‘இந்தக் கோபக்காரனின் வார்த்தைகளைச் சட்டை செய்யாதே’ ஜனட்,ஒய்யாரமாகத் தன் தலையைக்கோதிக் கொண்டு கடைக்காரனிடத் பீட்டரைப் பற்றி நக்கலாகச் சொன்னாள். அவள் இப்படி அவனைத் தூக்கியெறிந்து ஒரு அன்னியனுக்கு முன்- பீட்டரால் வெறுக்கப்படும் ஒரு ஆசிய நாட்டுக்காரனுக்கு முன்னாற் சொன்னதை அவனாற் பொறுக்க முடியவில்லை.

பீட்டருக்கு இன்னும் ஆத்திரம் கூடிக்கொண்டு அவன் மனத்தை நெருப்பிற் தள்ளியது.

அவனுக்கு இருபத்திரண்டு வயது.உழைப்பில்லை. ஜனட்டுக்கும் அவள் குழந்தைக்கும் அரசாங்கம் கொடுக்கும் சோசியல் சேர்விஸ் உதவிப் பணத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டும்,மேக-; அப்போட்டுக்கொண்டும் அவள் உல்லாசம் காண்பாள்.

காசு பற்றி இருவருக்கும் சண்டை வந்தால், ‘உதவாத என்னிடம் என்னத்தைக் கண்டேன்?ஒரு பிள்ளையைத் தந்தாய்,எந்த முட்டாளும் பிள்ளை தரலாம்.ஆனால் உருப்படியான தகப்பனாக இருக்கக் கொஞ்சம் அறிவு தேவை,அறிவைப் பாவித்து வாழும்,உழைக்கும் வாழ்க்கை தேவை’ ஜனட் பிரசங்கம் செய்யத் தொடங்கி விடுவாள்.

புpட்டர் அவள்,தன்னை அலட்சியம் செய்துகொண்டு அலங்கரித்தைச்சகிக்காமற் தெருவில் இறங்கினான்.

அவனிருப்பது எட்டாம் மாடிவீடு. லிப்ட்டுக்குக் காத்திராமல் இறங்கி நடந்தான். எப்படித் தெருவில் இறங்கினான் என்ற சிந்தனையும் அவன் மனதில் பதியாமல் மனம்போனபடி நடந்து கொண்டிருந்தான்.

……………………………………….

டொக்டர் கதிர்காமரின் மனைவி ராதிகாவுக்கு சொஞ்ச நாட்களாகத் தன் கணவனிற் சரியான கோபம்.’உழைக்கத் தெரியாத மனிதன் என்று பேசிக்கொண்டிருக்கிறாள்.

டொக்கடர் கதிர்காமர் லண்டனில் ஒரு குடும்ப வைத்தியர் (புP ) காலை ஏழமணிக்கு வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் பின்னேரம் எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

லண்டனில் பல தரப்பட்ட நோயாளிகள். பல நாட்டைச்சேர்ந்தவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள், அதிகம் படித்தவர்கள், படிக்காதவர்கள்.போதை மருநு;தெடுத்து தன்வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாழாக்குபவர்கள், கண்டபாட்டுக்குக் குடித்து அதனால்வரும் பல பிரச்சினைகளால் அவதிப்படுவோர். கண் மண் தெரியாமல்த் தின்று தொலைத்து விட்டு நடக்க முடியாமல் அவஸ்தைப்பட்டும்,உடம்பு பெருத்ததுமட்டமல்லாமல் அத்தடன் பலநோய்களை பெருக்கிக்கொண்டும் வந்து நிற்கும் பலர்.

அத்துடன் சாதாரண மனிதர்களுக்கு வரும் இருமல் தடிமல்,காய்ச்சல். மூட்டுளைவுகள், என்று வருபர்களைப் பார்த்து ,அவர்களுக்கு மருந்தெழுதிக் கொடுத்து ,அதன்பின் வேலைக்குறிப்புக்கள்,அரசு கேட்கும் றிப்போர்ட்டுகள் எல்லாம் எழுதிவிட்டு வீடு வந்தால் அவர் மனைவி அவரின் குறைகள் பற்றி ஒரு லிஸ்ட் வைத்திருப்பாள்.

அவரைப்போல பல டொக்டர்கள் ‘லோக்கம்’ செய்து (ஏஜென்சி மூலம் மேலதிகமான உழைப்பு),கைநிறைய உழைப்பதாக முறையிடுவாள். அவளின் மைத்துனர் அப்படி உழைத்து கொழும்பில் இரண்டு பிளாட் வாங்கிப் போட்டிருக்கிறாராம்.

ஓன்றைவிட்ட தம்பி ,லண்டனில் மூன்றாவது வீட்டை வாங்கப்போகிறாராம். ராதிகாவின் பட்டியல் இப்படி நீண்டு கொண்டுபோகும்.

டொக்டர் கதிர்காமருக்கு அப்படியெல்லாம் ஓயாமல் வேலை செய்து கஷ்டப்பட அவர் உடல் நிலை சரியில்லை.இளம் வயதிலிருந்தே மிகக் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். யாழ்ப்பாணத்தில் தோட்டம் செய்து வாழ்ந்த ஒரு உழைப்பாளியின் கெட்டிக்கார மகன். காலையில் எழுந்து தகப்பனுக்கு உதவியாகத் தோட்டத்திற்கு நீர் இறைத்த நிகழ்வுகள் அவர் மனத்தில் பசுமையானவை.

அவருக்கு இப்போது இரண்டு மகள்மார் இருக்கிறார்கள். பதினான்கும் பன்னிரண்டு வயதிலும் இரு பெண்குழந்தைகள். பரத நாட்டியம் பழகுகிறார்கள்.வீணை பழகுகிறார்கள். லண்டனில் மத்திய தரத் தமிழ்க்குடும்பத்துப் பெண்களை அவர்களின் குடும்பங்கள் செய்யப் பணணும் ‘கலைகள்’ அத்தனையையும் படிக்கிறார்கள்.

‘இந்தப் பெண்களுக்கு நாட்டிய அரங்கேற்றம்செய்ய எத்தனையோ ஆயிரங்கள் தேவைப்படப்போகிறது.’ திருமதி ராதிகா கதிர்காமர் தனது கணவனுக்கு இந்த விடயமொன்றும் தெரியாத முட்டாள் என நினைத்துக் கொண்டு; பேசிக்கொள்வாள்.;

அவளின் தொண தொணப்புத் தாங்காமல்,தனக்குள்ள ஓய்வு நாட்களில்’லோக்கம் டொக்டராக வேலை செய்ய முடிவு கட்டினார்.’எத்தனை கோடி பணமிருந்தாலம் நிம்மதி வேண்டும் வீட்டிலே’ என்று பாடவேண்டும் போல் வந்தது அவருக்கு.

தனது இருமகள்களையும் இலட்சுமி, சரஸவதி மாதிரிப் பார்க்கிறார் கதிhகாமர்.அவர்களின் வாழ்க்கையை எப்படியும் திருப்தியாக்கத் தன்னால் முடிந்தததைச் செய்யவேண்டும் என்று அடிக்கடி நினைப்பார்.

அவர்களின் நடன் அரங்கேற்றம், அவர்களின் சொந்தக் காரப் பெண்களுக்கு நடந்தததைவிட மிகத் திறமையாக இருக்கவேண்டும் என்று அவரின் மனைவி உத்தரவு போட்டு விட்டாள்.அவர்கள் ஒரு பொறுப்பும் தெரியாமல், தாய் சொல்லும் கலைகளையெல்லாம் கஷ்டப்பட்டுப் பயின்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் வயதில,; அவர் வாழ்ந்த அழகிய கிராமத்திய சூழ்நிலையில் பரத நாட்டியமெல்லாம் எங்கேயோ மிக மிகப் பணக்காரர்கள் வீட்டில் நடக்கும் விடயங்களாகத்தான் கேள்விப்பட்டிருந்தார்.கலைக்கும் காசுக்கும் எவ்வளவு நெருக்கம் என்று லண்டனுக்கு வந்தபோதுதான் அவருக்கு விஸ்வரு+பமாகப் புரிந்தது. கலையின் தெய்வீகப் பரிமாணம்,காசு வைத்திருப்போரின் கற்பனையிற் சதுராட்டம் கண்டது.பரதத்தின் முத்திரைகள் பணத்தில் பரிணமிக்கின்றன.தாளமும் லயமும் லண்டன தமிழர்களுக்குப் பிடித்தபடி சதங்கை கட்டி வேலை செய்கின்றன.

டொக்டர் கதிர்காமர் பெருமூச்சுடன் நடந்தார்.

பின்னேரம் ஆறமணியாகப்போகிறது.

கடந்த இருநாட்களாக,இரவு நேரங்களில், ‘லோக்கம்’ வேலைசெய்து பல நுர்றுபவுண்களை உழைத்துவிட்டார். வீட்டிற்குப்போக நடுநிசியாகி விடுகிறது. ‘லோக்கம்;’ என்றால் முன்பின் தெரியாத இடங்களுக்கு, தொலை தூரங்களுக்கொல்லாம் போக வேண்டிவரும். அவருடைய வழக்கமான வேலையென்றால் அவருக்குத் தெரிந்த நோயாளிகளைத்தான் பார்ப்பார்.’லோக்கம்’செய்யும் வேலை என்றால், எங்கே போவது, யாரைப் பார்ப்பது என்பன ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னால் மட்டும்தான் தெரிய வரும்.

தன்னுடைய வேலை செய்த பின் கிடைத்த ஓய்வு நாட்களில் தொடர்ந்து வேலை செய்வதால் அவர் மிகவும் களைத்து விட்டார். அவருக்கு நாற்பத்தைந்து வயதிலலேயே டையாபெற்றிசும் பிளட் பிரஷரும் வந்து விட்டது.

அப்படியான நோய்களுடன் அவரிடம் வைத்தியத்துக்கு வருபவர்களுக்கு, ‘வாழ்க்கையைக் கவனமாகக் கொண்டு நடத்துங்கள். தேவையில்லாமல் டென்ஷனாகாதீர்கள்,அளவுக்கு மீறி வேலை செய்யாதீர்கள், அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொள்னுங்கள்’ என்றெல்லாம் அன்புடன் அட்வைஸ் பண்ணுவார்.

ஆனால் அவர் ஓயவெடுக்காமல் மாரடிக்கிறார். மற்றவர்களுடன் போட்டி போடும் வாழ்க்கையில் அவரின் உடம்பின் நிலை பணயம் வைக்கப் படுவது தெரிந்தும் அவரால் அதைத் தடுக்க வழி தெரியவில்லை.’ ஊருக்கு உபதேசம்,உனக்கல்ல’ என்ற தன்நிலையை நினைத்துச் சிலவேளை துக்கப்படுவார்.

வசந்தகாலம் முடியப் போகிறது. குளிர் காற்றடிக்கத் தொடங்கிவிட்டது.இலைகள் உதிர்ந்து,வீதிகளை அலங்காரம் செய்கின்றன. இலையுதிர்ந்த மொட்டை மரங்கள் நிர்லாணமாகப் போகின்றன.

காரில் ஏறிய கதிhகாமர்,கொஞ்ச நேரம் ஆறுதலாக மூச்செடுத்தார். நெஞ்சு கனத்தது.எப்போதோ பயின்ற யோகாசனத்தை ஞாபகப் படுத்தி தனது மூச்சை நிதானப் படுத்தினார்.இருந்தாலும்,நெஞ்சு பாரமாகவிருப்பதை அவரால் நிவர்த்திக்க முடியவில்லை.

லண்டனில் வாழும் கணிசமான ஆசிய நாட்டைச்சேர்ந்த மக்கள் இருதய வருத்தத்தால் பாதிக்கப் படுவது அவருக்குத் தெரியும்.அதிலும், ஆசிய நாட்டைச் சோர்ந்தவர்களுக்கு இளமையிலேயே-ஐம்பது வயதுக்கு முன்னரே இருதய நோய்கள் வருவதும் அவருக்குத் தெரியும்.

ஆனாலும்,’எனக்கென்ன நாற்பத்தைந்து வயதுதானே?’ என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே சமாதானம் செயது கொண்டார்.

ஐப்பது வயதுக் கிடையில் அவர் மனைவி சொல்வதுபொல் ‘கொழும்பில் அல்லது சென்னையில் ஒரு பிளாட்டை வாங்கிப் போடவேணும், பிள்ளைகள் ஹொலிடேயில போய் நிற்க வசதியாயிருக்கும்.பெண் குழந்தைகளின் அரங்கேற்றத்தையும் அமர்க்களமாக நடத்தவேணும்’ அவர் தனக்குள்ளேயே பல திடசங்கற்பங்களைச் செய்து கொண்டார்.

ஜனட்டுக்கு அவள் காதலன் பீட்டரின் செய்கை எரிச்சலைத் தந்தது.

‘எனக்காக என்ன செய்து விட்டான்?’ தனது தங்க நிறத் தலையைக் கோதிக்கொண்டு யோசித்தாள். அவனிடமுள்ள காதலில் அவளின் பதினாறு வயதிலேயே அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டாள்.

வேலைகளுக்குப் போகாமல், குழந்தைகளின் படிப்பிலோ முன்னேற்றத்திலோ அக்கறையில்லாத,அரச மானியத்திலும்,அரசு கொடுத்த வீடுகளிலும்,கிட்டதத்ட்ட வறுமைக்கோடடில் வாழும் ஆங்கிலேய குடும்பமொன்றில்ப் பிறந்தவள் ஜனட்.

அவள் தனது பதினாறு வயதில் தங்களிடமிருந்து பிரிந்து,பீட்டருடன் தனியாக விலகிப்போனது ஜனட்டின் வீட்டாருக்கு சந்தோசமே.

ஜனட்டின் தமயன் ஒருத்தன் போதைப் வஸ்துகளுக்கு அடிமையாகி அதனால் மிகவும் இளம் வயதில் இறந்து போனான். ஜனட்டின் தங்கையொரத்தி, கிளப், பார் என்று அவளின் பதினான்கு வயதிலியே சுற்றத் தொடங்கி விட்டாள்.

சின்ன வயதிலிருந்து ஜனட்டுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளையாசை.’நிறையப் பிள்ளைகள் பெறவேண்டும்’ என்று அவள் காதல் போதையில் அலட்டியதை நம்பி, அவள் காதலன் பீட்டர் அவளைத் தாயாக்கி விட்டான்.

பதினெட்டு வயதில் ஒரு பெண்குழந்தையைப் பெற்றுக்கொண்டு அவள் சிறைப் பறவையாகி விட்டாள். தன் வயதுடைய மற்றச் சினேகிதிகள் சுற்றித் திரிந்து சந்தோசம் அனுபவிக்கும்போது, குழந்தையுடன் மாரடிக்கும் தனது சிறைபோன்ற வாழ்க்கையை முற்றாக வெறுத்தாள்.அந்த விரக்தி, வேதனை, என்பன பீட்டரில் ஆத்திரமாகத் திரும்பியது.

பீட்டர் நல்ல ஒரு சம்பளத்தில் வேலை எடுத்தால், பிள்ளையை பார்க்க யாருக்கும் சம்பளம் கொடுத்துவிட்டுத் தான் ஏதும் வேலை செய்யலாம் அல்லது ஏதும் படிக்கலாம் என்று அவள் கற்பனை செய்வதுண்டு.

அவை ஒன்றும் நடக்கவில்லை.

இந்த வயதில் எனக்கேனிந்த சிறை வாழ்க்கை?’

தாய்மை என்பதைச் சுமையாய் நினைக்கும் அறியாமையை உணராமல்; ஜனட் பெருமூச்சு விடுவாள்.

தனது ஏக்கத்தை,விரக்தியைப் போக்க அடிக்கடி தன்னை அலங்காரம் செய்து கொள்வாள். பொழுது போகாமல்ப் பக்கத்துக் கடைக்கார இளைஞனுடன் கும்மாளம் போடுவாள்.

பீட்டருக்கு அவளின் அந்தப் போக்கு பிடிக்கவில்லை. அவன் ஓரளவு படித்த, பொருளாதார ரீதியில்,பரவாயில்லாத குடும்பத்திலிருந்து வந்தவன்.

ஏதோ நல்ல நிலையிலிருப்பான் என்று அவர்களின் குடும்பத்தால் எதிர்பார்க்கப் பட்டவன். இளமைத் துடிப்பின் அகோரத்தில்,அப்பாவித்தனமாக அப்பாவாகி விட்டது அவனுக்குத் துயர்தான்.

ஆனாலும் ஜனட் ஒரு அழகான பெண் எனபதிலும், அவனுமைய இரண்டு வயது மகள் மெலனி தாயையும் விட அழகாக ஒரு தங்கச் சிற்பம் போலிருப்பதிலும் அவனுக்குப் பெருமை. அது ஜனட்டுக்கும் தெரியும்.

ஜனட்,தனது எட்டாவது மாடி பிளாட்டிலிருந்து வெளியுலகத்தைப் பார்த்தாள். லண்டன் நகரம்,வசந்த கால முடிவில்த் தொடங்கும்; காற்றில் அடிபட்டுக் கொண்டிருந்தது. மாலை நேரமாகிவிட்டதால் லண்டனின பிரகாசமான வெளிச்சம் விண்ணிற் தெரியவேண்டிய நட்சத்திரங்களின் ஒளியை மங்கச் செய்தது.

இளம் ஆண்களும் பெண்களும், பின்னேர கேளிக்கைகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஜனட் பெருமூச்சு விட்டாள். தான் தனிமைப் பட்டிருப்பதுபொவும், உலகமே தன்னைப் பார்த்து நகைப்பதுபோலவும் பேதைத்தனமாக யோசித்தபோது,மகள் மெலனியின் அழுகை அவளை உலுக்கியது.

குழந்தை மெலனி,சிணுங்கியபடி, தத்தித் தத்தி நடந்து தாயிடம் வந்தாள்.ஜனட் குழந்தையை வாரியணைத்ததும் பதறிப்போனதள்.

குழந்தையின் உடல் தணலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் பதட்டத்துடன் கத்தினாள,

;’பீட்டர் நீ எங்கோ தொலைந்து விட்டாய்?’.அவனுக்குப் போன் பண்ண டையல் பண்ணியதும் , பீட்டரின் மோபைல் மேசையிலிருந்து முணுமுணுத்தது. டெலிபோனைக் கையிலெடுக்காமற் போனவன் கெதியிற் திரும்பி வருவான் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

நேரம் இரவு ஏழமணியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரம்,குடும்ப வைத்தியர்களின் நிலையங்களைப் பூட்டத் தொடங்கியிருப்பார்கள்.

வைத்தியசாலைக்குக் கொண்டுபோனால், வெறும் காய்ச்சல் என்ற படியால் ‘கசுவல்டியில்’மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தங்களுக்குள் என்ன பிரச்சினை என்றாலும் தன் குழந்தை மெலனிக்குத் தடிமல் வந்தாலும் பீட்டர் தாங்கமாட்டான். அவளுக்கு இப்போது பீட்டர் அந்த இடத்திலில்லை என்று பீட்டரில் அவளுக்கு ஆத்திரம் வந்தது.

குடும்ப டொக்டர்கள் ஓய்வெடுக்கும்போதும்,வேலை முடிந்து வீட்டுக்குப் போன பின்னும் அவர்களின் சேவையைத் தொடரும்,’லோக்கம்’ டொக்டர் சேவையினருக்குப் போன்பண்ணி தன் குழந்தையின் நிலையைச் சொன்னாள்.

பீட்டரின் சினேகிதன் டாரன்,அங்குமிங்கும் கவனமாகப் பார்த்தபடி,பீட்டரின் கையில் ஒரு போதைக் குளிசையை அமர்த்தினான்.பீட்டர் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டான். போதை வஸ்து எடுத்து தனது சகோதரனையிழந்த ஜனட், போதைப் பொருள் எடுப்பவர்களைக் கண்டால் விஷமாக வெறுப்பாள்.

‘என்ன,உன்னைப் பார்த்தால் உலகத்தைப் பறிகொடுத்தவன் மாதிரியிருக்கிறாய்?’ டாரன் தனது மொட்டைத்தலையைத் தடவிக் கொண்டு தன் சினேகிதனைக் கேட்டான். டாரன் லண்டனில் இறுமாப்பாகத் திரியும் இனவாதக் கூட்டமான பிரிட்டிஷ் நாஷனல் பார்ட்டியைச் சேர்ந்தவன். உயர்ந்து வளர்ந்த தடிமாடு மாதிரியிருப்பான்.

பீட்டரின் மென்மையான சுபாவத்திற்கும் டாரனின் முரட்டுத்தனத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருந்தன். இருவரும் ஒருகாலத்தில், சிறு பையன்களாக இருந்தபோது ஒன்றாகப் படித்தவர்கள்.

கொஞ்ச நாளைக்கு முதல் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டார்கள். அன்றும் இப்படித்தான்,ஜனட்டுடன் தர்க்கப்பட்டுக் கொண்டு வந்தவன் டாரனை வழியிற் சந்தித்தான். அவனின,; துயர் மறக்க டாரன் கொடுத்த போதைமருந்து உதவியது.

‘சொல்கிறேன் என்று கோபிக்காதே..’ டாரன் பீட்டரின் கண்களை உற்றுப் பார்த்தபடி பேசத் தொடங்கினான்.

‘உனது காதலி ஜனட் அந்த டேர்ட்டி பாகிஸ்தானியுடன் இளித்து இளித்துச் சரசமாடுகிறாள்’டாரன,பீட்டருக்குச்; சொன்னான்.

‘ஐ ஹேற் தற் டேர்ட்டி பாக்கி’ பீட்டர் டாரன் கொடுத்த போதை மாத்திரியை வாயிற் போட்டபடி கறுவினான்.

‘ஏன் எங்கள் இங்கிலிஸ் பெண்கள் இந்த டே;ர்ட்டி பாக்கிகளுக்குப் பின்னாற் போகிறார்கள்?’

போதை தலைக்கேறிய,புத்தி தறுமாறிய டாரன் ஒரு விரிவுரையாளரிடம் கேள்வி கேட்பதுபோல் பீட்டரைக்கோட்டான்.

பீட்டர் தனது பொன்னிறத்தலையைத் தடவிக் கொண்டான். பக்கத்தில் பல நாட்டாராலும்,மது குடிக்குமிடமான அந்த’பப்’ நிறைந்து தெரிந்தது.

பலர் தங்கள் துக்கங்களை,வேலைப் பழுக்களை,குடும்பப் பிரச்சினைகளை மறந்து குடித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்னும் சொஞ்ச நேரத்தில் ஒரு அரைநிர்வாண ஆட்டக்காரி இங்கு வந்து மேடையேறியாறி ஆடுவாள் என்று ‘பப்’ முதலாளி உற்சாகத்துடன் அறிவித்தான். அவள் ஆடத் தொடங்க,மது வெறியிலிருப்பவர்களைக் காம வெறிக்குத் திருப்பி விடுவாள்.

அப்போது வாட்டசாட்டமான, ஆசிய நாட்டைச் சேர்ந்த இரு இளைஞர்கள்- ‘பப்’புக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் கோட்டும் சூட்டும் போட்டிருந்தார்கள் வசதியானவர்கள் என்பது அவர்களின் உடுப்பிலும் நடையிலும் தெரிந்தது. டாரன் அவர்களைப் பொறாமையுடன் பார்த்தான.

‘இவர்கள் இங்கு இங்கிலிஸ் பெண்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்’ டாரன் எரிச்சலுடன் முணுமுணுத்தான் பீட்டர் பதில் பேசவில்லை. போதை மருந்து வேலை செய்யத் தொடங்கியதால்,அவன் உணர்வுகள் எங்கேயோ கற்பனையுலகுக்குப் போய்விட்டது.

‘எங்கள் இளவரசி டையானாவைப் பார்த்தாயா? அவளுக்கப் பிடித்த ஒரு இங்கிலிஸ்க்காரன் கிடைக்கவில்லையா, டேர்ட்டி பாக்கி டொக்டர் ஹசான் கானுடன் ஆடிவிட்டு இப்போது எஜி;ப்திய கடைக்கார பாஸ்ரட் டோடி அல் பாயட்டுடன் படுத்துக் கொண்டு திரிகிறாள்.போயும் போயும்,உலகப் பேரழியான எங்கள் இளவரசுக்குப் படுக்க முஸ்லிம்கள்தானா தேவைப்படுகிறது,’?

டாரன் ஆத்திரத்துடன் உறுமினான். தனது தங்கை ஒருத்தி தனக்கு விருப்பமில்லாமல் ஒரு முஸ்லீமுடன் ஓடிவிட்ட ஆத்திரம் அவன் குரலில் ஒலித்தது.

‘எங்ளை விடக் கூடப் பணம் அவர்களிடமிருக்கிறது,அதைப் பாவித்து எங்கள் பெண்கள் அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள்’ பீட்டர் போதையில் முனகினான்.

சில மாதங்களுக்கு முன்னர்,; இளவரசி டையானா டோடியுடன் உறவு கொள்ள முதல்,பாகிஸ்தானிய டொக்டர் ஹசானைத் தன் காரில் டிக்கியல் மறைத்து வைத்துக்கொண்டு தனது மாளிகைக்குள் கொண்டுபோனதாகப் பத்திரிகையில் வந்ததைச் சொல்ல வெட்கமோ அல்லது,அவர்களின் போதை வெறியில் மறந்து விட்டார்களோ என்னவோ, பொதுவாகப் ‘பாக்கி’களைப் பற்றித் திட்டிக்கொண்டார்கள்.

தாங்கள் அதி தீவிரமாக வெறுக்கும்’பாக்கி’ ஒருத்தனுடன் தங்கள் இளவரசி டையானா பாலுறவு வைத்திருப்பது,ஆங்கிலேயக் கலாச்சாரத்துக்கே அவமானம் என்று கருதும் பல்லாயிரக்காண ஆங்கிலேயர்களில் டாரனும் பீட்டரும் ஒரு சிலர்.

ஆசிய நாட்டார் அத்தனைபேரம் இவர்களைப் பொறுத்தவரையில் ‘பாக்கிகள்’ (பாகிஸ்தானியர்). ஜனட் சரசம் பண்ணிக் கதைக்கும் இளைஞன் வேலை செய்யும் கடை ஒரு இந்தியருடையது. ஓரு மூலையில்,இராமர்,சீpதை அனுமான் படம் மாட்டப்பட்டிருக்கிறது; அதை டாரன் காணவில்லை. கண்டால், குரங்கை வணங்கும் ‘பாக்கிகள்’ என்று கத்தியிருப்பான்.

அவனின் ஆத்திரம் இன்னும் கூடியிருக்கும்.

‘பாஸ்ரட்ஸ் பாக்கிகள்,அவர்கள் ஜனட்டையும் வளைக்கிறார்கள் என்று நினைக்கிறாயா?’

டாரன்,தடுமாறிய குரலில் பீட்டரைக்கெட்டான். பீட்டர் பதில் பேசவில்லை.

இளவரசி டையானா,ஆங்கிலேய சமுதாயத்தை அவமானப்படுத்துவதுபோல்,ஜனட் தனக்குத் துரோகம் செய்யமாட்டாள்; என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும்,இப்போது டாரன் இடைவிடாமல் ஜனட்டையும் ‘பாக்கிக்’ கடைக்கார இளைஞனையும் பற்றிப் பேசுவது அவன் மனதில் ஒரு நெருடலையுண்டாக்குகிறது..

டாரன்,இன்னொரு மாத்திரையை வாயிற் போட்டுக் கொண்டு, இன்னொன்றை பீட்டரின் கையிற் திணித்தான்.

‘எங்கள் நாட்டுக்குக் கூலிவேலை செய்ய மூன்றாம்தர நாய்கள்;,எங்கள் வேலைகளை எடுத்தார்கள், வீடுகளை எடுத்தார்கள், இப்போது இங்கள் பெண்களையும் படுக்கிறார்கள்’டாரன்,ஆங்கிலேயக் கலாச்சாரத்தின் பிரதிநிதிமாதிரிக் கத்தினான்.

பீட்டர் பதில் பேசவில்லை;. டாரன் , எப்போதாவது, ஏதும் வேலை செய்ததாகப் பீட்டருக்கு ஞாபகமில்லை. டாரன், சிறு சிறு கைப்பறித் திருட்டு வேலை செய்தும்,வீடுகளுக்குட்; புகுந்து களவாடியும் தனது போதைப் பொருள் பழக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்பவன். டாரன் யர்ருக்கும் தலைகுனிந்து வேலை செய்வான் என்பதைப் பீட்டராற் கற்பனை செய்ய முடியவில்லை.

ஆங்கு,அந்த ‘பப்’புக்கு வந்திரந்த ஆசிய இளைஞர்களில் டாரனின் பார்வை இன்னொருதரம் பதிந்தது. பொறாமையுடன் அவர்களைப் பார்த்தான்.

‘இவர்களுக்கெல்லாம் இப்படி ஆடம்பரமாக உடுக்கவும் வாழவும் எப்படிக் காசு கிடைக்கிறது;? இவர்கள் யாரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்?’ ஆசிய நாட்டு இளைஞர்களைப் பார்த்த டாரன் முழங்கினான். பட்டேல் தம்பதிகள் தங்கள் கடையில் இரவு பகலாகக் கடுமையாக உழைப்பது பீட்டருக்குத் தெரியும,அவர்கள் யாரையும் ஏமாற்றுவார்கள் என்று பீட்டர் எண்ணவில்லை. பீட்டர் மறுமொழி சொல்ல வில்லை.

”நாய்கள்,நாய்கள், எச்சிற் பொறுக்க வந்த நாய்கள்,இப்போ எங்களின் கடைகளைவாங்கி, வீடுகளை வாங்கி,எங்கட பெண்களையம் படுக்கிறார்கள்’ டாரனுக்குப் போதை ஏற ஏற வார்த்தைகள் கடுமையாக வெடித்துச்சிதறின.

பீட்டர் ஜனட்டை நினைத்துக் கொண்டான்.சொஞ்ச நாட்களாக இவனைத் தொடவே விடமாட்டேன் என்கிறாள். டாரன் சொல்வதுபோல் பட்டேல்க் கடைக்கார’ பாக்கி’ காரணமா?

அந்தப் ‘பாக்கி’; அவளை ‘டார்லிங்’ என்றும் கூப்பிடுகிறானே!

பீட்டரின் மனம் பல காரணங்களால் நிம்மதியின்ற அலைந்தது.

இன்னொரு பியர்க் கானை உடைத்துக்கொண்டான்.

தூரத்திலிருக்கும் ஆசிய இளைஞர்களில் ஆத்திரம் வந்தது.

டாரன் அந்த வட்டாரத்திலுளள,ஆங்கிலேய இனவாதக் கட்சியான, ‘பிரிட்டிஷ் நாஷனல் ப்ரண்ட்’ கட்சியுடன் தொடர்புள்ளவன்.அந்தக் கட்சி ,இங்கிலாந்திலுள்ள அன்னியரை,முக்கியமாகக் கறுப்பு,ஆசிய மக்களை நாட்டை விட்டுத்துரத்தவெண்டும் என்று சொல்கிறது.

‘நல்லதுதூனே?’ பீட்டர்; தூக்கத்திலிருந்து பேசுபவன்போற் பேசினான்.

‘என்ன நல்லது?’டாரன் கேட்டான்.

‘இந்தப் பாக்கிகளை இங்கிலாந்திலிருந்து கலைப்பது நல்லதுதூனே? இல்லையென்றால், எங்கள் வேலைகள், வீடுகள்,கடை கண்ணிகள், எங்கள் பெண்கள் எல்லாவற்றையம் தங்களுடையதாக்குவதுபோல் இந்த நாட்டையும் தங்களுடையதாக்கி விடுவார்கள்’

‘அப்படிச் சொல் பீட்டர்.இப்போதுதான் நீ உண்மையை உணரத் தொடங்கியிருக்கிறாய. ;இந்த நாய்களை என்னுடைய கைகளால அடித்து நொருக்குp,அவர்களின் தசையைப் பிழிந்து….’

டாரன் பேசிக் கொண்டிருக்கும்போது பீட்டரின் உதிரம் ‘பாக்கிகளில்’ உள்ள ஆத்திரத்தில் கொதித்தது.

பீட்டர் ஏதோ ஓ லெவலில் ஒன்றிரண்டு பாடங்கள் பாஸ்பண்ணியவன். இங்கிலிஸ்க்காரனுக்கு என்ன ஓ லெவலும் ஏ லெவலும்,நிறமும் மொழியுமிருக்கிறது; அந்தத் தகுதி போதாதா?. அப்படித்தான் அவன் ஆரம்பத்தில் நினைத்தான். வேலை தேடினான். ஓருவேலையும் கிடைக்கவில்லை.

அவனுக்கொரு வேலையிருந்தால்,அதோ இருக்கும் ஆசிய இளைஞர்கள்போல அவனும் ஆடம்பரமாக, ஜனட்டுடன் சந்தோசமாக இருப்பானே?

‘பீட்டர் நான் சொல்வதைக் கேள்,எங்கள் அரசாங்கம் உருப்படியில்லாதது. எங்கள் அரசாங்க மந்திரிகளைப்பார், அவர்களிற் பலர் ஹோமோசெக்சுவல்கள், பலர் லெஸ்பியன்கள், இவர்களுக்கு ஒழுக்கம் தெரியாது. யார் கண்டது?இவர்கள் பலரின் காதலர்களும் ‘பாக்கி’யாகவிருப்பார்கள்,நாட்டுப் பற்றிருந்தால் இப்படியெல்லாம் வாழ்வார்களா?’ டாரன் தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டு பிரிட்டிஸ்; சாம்ராச்சியத்திற்காக வாதாடினான்.

பீட்டருக்குத் தெரிந்த அளவில்,டாரனுக்கு அவன் தகப்பனின் பெயர் தெரியாது.தாயின் பெயரிற்தான் டாரனின் பெயருமிருக்கிறது;.ஆனாலும்,தகப்பன்பெயர் தெரியாத டாரன் உறவுகள்,ஓழுக்கங்கள்பற்றி கொஞ்சம் சூடாகத்தான் பேசுகிறான்!

தகப்பன் யாரென்று தெரியாமல் வாழ்பவன் குடும்ப தகுதி சமுதாய தகுதி பற்றிப் பேசுகிறான்! பீட்டர் தலை போதையிலும் டாரனின் பேச்சிலும் சுற்றியது;.

.’இன்னும் ஐம்பது வருடத்தில்,இங்கிலாந்தில் ஆங்கிலேயனுக்கு இருக்க இடமில்லாமற்போகப் போகிறது, இந்தப் பாக்கிகள் ஒன்றா இரண்டா? எத்தனை பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள?அவர்களை வளர்க்க நாங்கள்; எவ்வளவு செலவளிக்கிறோம் தெரியுமா?’ இப்போது டாரன் தன்னை’ அரசின்’ ஒரு அங்கமாக வைத்து ‘நாங்கள் செலவளிக்கிறோம்’ என்கிறான்!

பீட்டர் தன்னைச் சுற்றிப் பார்த்தான்.

‘பப்’பில் அரை நிhவாண ஆட்டம் தொடங்கி விட்டது. அந்தப் பெண் தன் மார்புகளைக் குலுக்கியாடி ஆண்களைச் சநதோசப் படுத்திக் கொண்டிருந்தாள்.

வந்திருந்த கூட்டத்தில் கணிசமானவர்கள் ஆங்கிலேயரற்றவர்கள். பீட்டருக்குக் கோபம் வந்தது. யாரிற் கோபம்?எதிற்கோபம் என்று அவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் எடுத்த போதை மருந்துகள் அவனின் சுய உணர்வை மங்க வைத்தது அவனுக்குத் தெரியாது.

‘நாங்கள் எங்கள் நாட்டையும்..எல்லாவற்றையும் மற்றவர்களிடம் தானம் கொடுக்குப்போகிறோம்’ பீட்டர் அழுதுவிடுவான்போலிருந்தது.

‘ எங்கள் நாட்டை இப்படியாக்கிய நாங்கள் முட்டாள்கள்,எங்களது அரசு முட்டாள்த்தனமானது’ டாரன் தள்ளாடியபடி எழுந்தான்.

இருவரும் வெளியே வந்தார்கள்.பீட்டருக்கத் தனது,இயலாதையிற் கோபம் வந்தது. இருபத்திரண்டு வயதில், தனது மனதுக்கினியவளை இழப்பதை விட யாரையும் அடித்து நொருக்கி விட்டு சிறைவாசத்தை எடுத்தாலும் பரவாயில்லை போலிருந்தது. ஜனட்டை இழப்பேனா என்ற உணர்வு அவனை நிலை குலையப் பண்ணியது. ஜனட் இல்லாமற் தனியாக வாழும் வாழக்கையை அவனாற் கற்பனை செய்ய முடியவில்லை.

கடநத ஐந்து வருடங்களாக ஒருத்தரில் ஒருத்தர் இணைந்து வாழ்ந்தவர்கள். வாழ்க்கையில் ஒன்றாய்ப் பிரயாணம் செய்து விட்டு முதுமையை அனுபவிக்கக் கற்பனை செய்தவர்கள்.

இப்போது,அவள் அவள் ஏனோ தானோ என்று வெறுக்கிறாள். பீட்டராற் தாங்க முடியவில்லை. உதிரம் கொதித்தது.

அவன் நடை வேகமாகியது. இன்று ஜனட்டிடம் ஒருகேள்வி கேட்க வேண்டும்.அந்தப்’பாக்கி’யுடன் உனக்கென்ன தொடுப்பு என்று வெட்டு ஒன்று துண்டு ஒன்றாகக் கேட்கவேண்டும்.

அவன் நடை துரிதமாகியது.

‘இந்தப் பாக்கிகளுக்கு; நாங்கள் சோணையர்கள் என்ற நினைப்பு. இவர்கள் நாட்டில் நாங்கள் போய் எவ்வளவு முன்னேற்றத்தைச் செயது கொடுத்தோம்.இப்போது,அவர்கள் எங்கட நாட்டுக்க வந்து எல்லாத்தையும் குப்பையாக்கி விட்டார்கள்’ இருவரும் ‘பாக்கி’களைத் திட்டிக் கொண்டு போனார்கள்

போகும் வழியில் டாரன் இன்னொரு ஆசியக் கடையைக் காட்டினான்.பல இளைஞர்கள் கடைக்கு முன்னால் கல கலவென்று பேசிக்கொண்டு நின்றார்கள். ‘இவர்களைக் காலிற் போட்டு மிதிக்க வெண்டும்’ டாரன் கறுவினான்.

டொக்டர் கதிhகாமர் எட்டாவது மாடியிலிருக்கும் மெலனி வில்லியம் என்ற இரண்டு வயதுக் குழந்தைக்குக் காய்ச்சல் என்ற குறிப்பு வந்திருந்ததால் அவளைப் பார்க்கக் காரால் இறங்கினார்.

தனக்கு முன்னால் நிமிர்ந்து,பிரமாண்டமாகவிருக்கம் கட்டிடத்தை ஏற இறங்கப் பார்த்தார் இந்த இடங்களில், மாடிகளுக்குப் போக லிப்ட்வெலை செய்யாவிட்டாற் பெரிய தொல்லைதான்.

இந்த இடங்களில் பல தரப் பட்ட மனிதர்களம் வசிக்கிறார்கள்.டொக்டர் என்று தெரிந்தால், அவரிடம் ஏதும் போதை மருந்துகள் இருக்கும் என்று டொக்டரைத் தாக்கவும் தயங்காதவர்கள் வாழுமிடமிது.

அவரின் நெஞ்சுக் கனம் குறையவில்லை. இப்போது,செஞ்சு சாடையாக நோகத் தொடங்கியிருந்தது.

கெதியில் ஒரு ‘எலக்ரொ கார்டியாக் கிராம்’ எடுத்துத் தனது இருதயத்தின் வேலைப்பாட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தக் கொண்டு நடந்தார்.அவரது அருமை மகள்களுக்கு, அவருக்குச் சுகமில்லையென்றால் தாங்க மாட்டார்கள் என்பதால் அவர் தனது பிரச்சினையை யாருக்கும் சொல்லவில்லை. டையாபெற்றிசுக்கு மாத்திரை எடுப்பதும் அவர்களுக்குத் தெரியாது.

‘இந்தக் கண்டறியாத ‘லோக்கம’ வேலையைச் செய்து கண்டபாட்டுக்குக் கண்ட இடங்களிற் கொள்ளிவாய்ப் பேய்மாதிரித் திரிந்து அதனால் வரும் டெனசனால் படும் பாடு போதும் எப்படியும் இந்த எக்ஸ்ரா வேலையைக் கெதியில் நிற்பாட்ட வேணும்’ டொக்டர் கதிhகாமர் தனக்குள்ச் சொல்லிக் கொண்டார்.

அவர் மனைவி தலை கீழாக நின்றாலும் அவர் மசியப் போவதில்லை. இன்று தான் அவர் ‘எமேர்ஜென்சி டொக்டரிங்’ செய்து உழைக்கும்; கடைசி நாள். இப்படி நினைத்து முடிவெடுத்ததும்,ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

நேரம் சரியான இருட்டென்ற படியால்,அவர் கையிலிருந்த விலாசத்தைத் தெரு வெளிச்சத்தில் கவனமாகப் பார்த்தார்.

அப்போது அங்கு பீட்டருடன் வந்து கொண்டிருந்த டாரன்’ ஏய் டேர்ட்டி பாக்கி’ என்று கத்திக் கொண்டு, டொக்டர் கதிர்காமரைப் பார்த்துத் துப்பினான்.

அவர் இதை எதிர் பார்க்கவில்லை.

ஏமெர்ஜென்சி டொக்டராகப் போய்ப் பல டொக்டர்கள், பல இனவாதக் கூட்டததை எதிர் கொண்டதை அவர் கேள்விப் பட்டிருக்கிறார். ஆனால்,தனக்கு இன்று இப்படி நடக்கு மென்று அவர் எதிர்பார்க்கவில்லை.

‘என்னடா பாக்கி, இந்தப் பக்கம் பெண்பிடிக்க வந்தாயா பொறுக்கி?’ டொக்டர் வாய் திறந்து பதில் சொல்ல முதல் அவர் கன்னத்தில் தன் வலிமையெல்லாம் சோர்த்து ஒரு குத்து விட்டான் டாரன் அவர் நிலை தடுமாறி விழுந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த பீட்டருக்கு ‘பாக்கி’களில் உள்ள ஆத்திரம் அத்தனையும் மடை திறந்தது.ஆங்கிலேயர்களக்கு வேலையில்லை என்பதற்குக் கதிர்காமருக்க ஒரு உதை, ஆங்கிலேய இளவரசி டையானாவுடன்,முஸ்லிம்இளைஞன் டோடி படுப்பதற்கு இன்னும் பல உதைகள்.

போதை வஸ்துக்களால் புத்தி தடுமாறிய இரு ஆங்கிலேய இளைஞர்கள், அவர்களின் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வந்த தமிழ் டொக்டரைக் கண்டபாட்டுக்கத் தாக்கினார்கள். இருபத்திரண்டு வயது இளைஞர்களின் அதர்ம அடியில் நாற்பத்தைந்து வயது உதை, அடிபட்டு உயிருக்குத் துடித்தது.

அந்த நேரம்,டாரனின் மோபைல் கிணுகிணத்தது.

டொக்டருக்கு,அடிப்பதை நிறுத்தி விட்டு,’ஹலோ’ சொன்னான் டாரன். இந்த நேரததில் போதை வஸ்து பரிமாறுபவர்கள் போன் பண்ணுவதுண்டு,அதைத் தவற விட டாரன் தயாராகவில்லை.

‘எங்கே உனது சோம்பேறிச் சினேகிதன்’ ஜனட்டின் குரல் அடுத்த பக்கத்தில் இடியாய் முழங்கியது;.

போனை பீட்டரிடம் கொடுத்து விட்டு, மயங்கிக் கிடக்கும் டொக்டரின் பெட்டியில் திருடுவதற்கு ஏதும் இருக்கிறதா என்று,டாரன் டொகடரின் பெட்டியைத் திறந்தான்.

‘எங்கே தொலைந்து விட்டாய், மெலனிக்குக் காய்ச்சல் நூற்றிண்டுக்க மேல்ப்போய்விட்டது.டொக்டர் உடனடியாக வருவதாகச் சொன்னார்,இன்னும் வரவில்லை; மெலனியைப் பார்க்கப் பயமாகவிருக்கிறது,அவளுக்குக் காய்ச்சலால் வலி வரும் போலிருக்கிறது, உடனடியாக வா’ஜனட் கதறியழுதாள்.

டாக்டரின் பெட்டியைத் திறந்த டாரன் பேயடித்துப்போய் நின்றான். பெட்டியில், ஒரு பேப்பரில் , பெரிய எழுத்துக்களில், மெலனி வில்லியம் என்ற குழந்தையின் பெயரும் விலாசமும்’ வெரி ஏர்ஜென்ட்’ என்ற குறிப்பும் அவனைப் பார்த்து நகைத்தன.

அதைக்கண்ட, பீட்டர்,அவசரமாக, இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த டாக்டரைத் திருப்பினான். அவரின் மூச்சு மிகவும் பலவீனமாகவிருந்தது. அவரைப் பார்க்க மிக மிக அவசரமாக ஒரு டொக்டர் தேவை இப்போது! மேலனியின் கெதி?

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s